Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியொரு விபத்தைப் பார்த்திருப்பீர்களோ தெரியாது?? (வீடியோ)

Featured Replies

Hwy-pileup.jpg

 

மேற்கத்தேய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் விபத்துக்களுக்கு குறைவே இருக்காது.

சாரதிகள் எவ்வளவு கவனமாக வாகனங்களைச் செலுத்தினாலும், அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒருவாகனம் விபத்திற்குள்ளானால் தொடர்ச்சியாக பின்னால் வரும் வாகனங்களும் விபத்திற்குள்ளாகிவிடும்.

இவ்வாறான நேரடி காட்சிப் பதிவுகள் சிலவற்றை நாம் ஏராளமாக பார்த்திருப்போம்.

ஐந்து நிமிடங்களில் 41 முதல் 45 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவமொன்று கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த போக்குவரத்து ஆணையத்திற்கு சொந்தமான கமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கட்டுக்கடங்காமல் போன இந்த விபத்துக்களினால் முன்னதாக விபத்திற்குள்ளான வாகன ஓட்டுநர்கள் அவசர அவசரமாக இறங்கி வீதி ஓரங்களில் ஒதுங்கிக்கொண்டனர்.

இந்த விசித்திரமான விபத்தின் நேரடி ஒளிப்பதிவுகளை இங்கே காணலாம்!

http://tamilworldtoday.com/?p=48308

  • கருத்துக்கள உறவுகள்

வீதியில்... பனி கண்ணாடி போல் படிந்து விட்டால்.. எந்த திறமான ரயர் போட்டிருந்தாலும், எவ்வளவு திறமான சாரதியாலும்... வாகனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது.
 

இதற்காக... பனி பொழியும் நேரங்களிலும், முன்னிரவு மழை பெய்த பின்... அதிகாலையில் கால நிலை மைனஸ் பாகைக்கு வந்த நிலையிலும்... வாகனத்தில் செல்வதை... கூடிய வரை தவிர்க்க வேண்டும்.
 

முக்கியமாக... அதிகாலையில் வாகனத்தில் பயணிக்க முன்பு... உள்ளூர் காலநிலையை, இணையத்திலோ, வானொலியிலோ... கேட்டு விட்டு போவது... உங்களுக்கும், உங்களை நம்பி இருக்கும் குடும்பத்தினருக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் முன்னால் போகும் வாகனத்துக்கு நல்ல இடைவெளி கொடுக்க வேண்டும்.. காலநிலை சரியில்லாவிட்டால் வேலைக்கு போகக்கூடாது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விரைவாக ஸ்னோ விழுந்துள்ள போது போகிறார்கள் எனில் வாகன ஓட்டிகளை என்ன செய்வது

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் relative speed இல்தானே தங்கியுள்ளது?? நிறுத்தப்பட்ட அல்லது மெதுவாக நகர்கினற வாகனதாரிகள் எச்சரிக்கை விளக்குகளை எரியவிட வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று  முன் தினம்

எனது சொந்தக்காரர்கள்

5 பேர் (கணவன், மனைவி,  மனைவியின் தாயார்  மற்றும் இரு குழந்தைகள்)

யேர்மனியிலிருந்து பிரான்சுக்கு வந்து கொண்டிருந்தபோது

நடந்த விபத்தில் மாமியாரும்  மருமகனும் அதே இடத்தில் பலியாக விட்டனர்.

(இறந்த இருவரும் ஒருவர்  சாரதி, மாமியார் சாரதியின் பின் பக்கம் இருந்துள்ளனர்)

6 வயசுக்குழந்தை கோமாநிலையிலும்

துணைவியார் சில  காயங்களுடனும்

கடைசிக்குழந்தை எதுவித காயமுமில்லாமலும்  உள்ளனர்.

என்ன  நடந்தது என்று இதுவரை தெரியவில்லை

ஆனால் துணைவியார்  சொல்கின்றார்

பாட்டுக்கேட்டபடி கதைத்துக்கொண்டுதான் வந்தோம்.

திடீரென  என்ன  நடந்தது என்று தெரியவில்லை

முழித்தப்பார்த்தபோது

வைத்தியசாலையில் உள்ளேன் என்று.

சினோவுமில்லை

மழையுமில்லை......

வாகனம் அதிக  வேகத்திலுமில்லை

பாரிசுக்கு வருவதற்கு 125 கிலோமீற்றர் என்பது நல்ல வீதியைக்கொண்ட அகலபாதை. :(:(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஒ........................சற்....! உறவுகளுக்காக இறைவனை பிரார்த்திக்கின்றேன் அனைவரும் இனிதே இல்லம் திரும்பனும். இழப்புக்களை எப்போதுமே ஈடுசெய்ய முடியாது  :(

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சோகமான செய்தி விசுகு அண்ணா.. காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும்.. அகால மரணம் அடைந்த இருவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..!

வீதியில்... பனி கண்ணாடி போல் படிந்து விட்டால்.. எந்த திறமான ரயர் போட்டிருந்தாலும், எவ்வளவு திறமான சாரதியாலும்... வாகனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது.

 

சுவிஸ் போன்ற நாடுகளில் கொட்டுமளவு ஸ்நோ பிரான்சில் கொட்டுவதில்லை என்பதால் இங்கு கார் ஓடுபவர்கள் winter நேரத்துக்கு winter டயர் மாற்றுவதில்லை. :rolleyes: winter டயர் இருப்பதாவது பலருக்கு தெரிந்திருக்குமோ தெரியாது. :D பெரியளவில் snow கொட்டிச்சோ விபத்து தான். :rolleyes:

 

ஆனால் இது ஜெர்மனில் இடம்பெற்றுள்ளது.

 

சாதாரணமாக தமக்கு முன்னே செல்லும் காரிலிருந்து விடும் இடைவெளியை விட மழை நேரம், ஸ்நோ கொட்டும் நேரங்களில் கூடிய இடைவெளி விட்டு ஓட வேண்டும். அதே போல் வேகத்தையும் குறைத்து ஓட வேண்டும். பலர் அதை கடைப்பிடித்து ஓடும்போது இடையில் சிலர் அவ்விதிகளை மீறி வந்து மோதுகிறார்கள். :rolleyes:

அத்துடன் நீங்கள் கூறியது போல் எந்த டயர் போட்டாலும் ஸ்நோ நேரம் வழுக்கத்தான் பார்க்கும். :rolleyes:

 

யேர்மனியிலிருந்து பிரான்சுக்கு வந்து கொண்டிருந்தபோது

நடந்த விபத்தில் மாமியாரும்  மருமகனும் அதே இடத்தில் பலியாக விட்டனர்.

(இறந்த இருவரும் ஒருவர்  சாரதி, மாமியார் சாரதியின் பின் பக்கம் இருந்துள்ளனர்)

6 வயசுக்குழந்தை கோமாநிலையிலும்

துணைவியார் சில  காயங்களுடனும்

கடைசிக்குழந்தை எதுவித காயமுமில்லாமலும்  உள்ளனர்.

 

சினோவுமில்லை

மழையுமில்லை......

வாகனம் அதிக  வேகத்திலுமில்லை

பாரிசுக்கு வருவதற்கு 125 கிலோமீற்றர் என்பது நல்ல வீதியைக்கொண்ட அகலபாதை. :(:(  :(

 

கவலை தரும் செய்தி.

 

பிரான்சில் பலர் விதிமுறைகளை பின்பற்றி ஓடுவதில்லை. அதுவே இவர்கள் விபத்துக்கும் காரணமாக இருக்கலாம். ஒன்றில் இவர்கள் பிழை விட்டிருக்கலாம். அல்லது இவர்கள் மேல் மோதியவர்கள் பிழை விட்டிருக்கலாம்.

 

சாரதியே வீதியை கவனித்து ஓடுவார், மற்றவர்கள் கவனம் வேறெங்காவது இருக்கும் என்பதால் சாரதி உயிருடன் இருந்திருந்தால் என்ன நடந்தது என தெரிந்திருக்கும். ஆனால் அவர் உயிருடன் இல்லை எனும் போது இவர்களுக்கும் என்ன நடந்தது என தெரியாத பட்சத்தில் போலீசார் ஏதும் தகவல் தந்தால் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மரணமடைந்தவர்களுக்கு  ஆழ்ந்த இரங்கல்கள்!!

 

சிலசமயம் தன்னிலை மறந்து தூங்கியிருக்கலாம். தூக்கம் ஒரு பொல்லாத விடயம்  அதுதான்  நிறைய  விபத்துக்களுக்கு காரணம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகுவின் துக்கத்தில் நானும் பங்கெடுக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், உங்கள் துயரில் நானும் பங்கு பெறுகின்றேன்!

 

எங்களில் பலரிடம் உள்ள அதீத தன்னம்பிக்கை தான் இப்படியான விபத்துக்களுக்குக் காரணம் என நினைக்கின்றேன்!

 

நீண்ட பயணங்களின் போது, தரிப்பிடங்களில் போதிய ஓய்வெடுக்காமை! ( Stop, Revive & Survive)

 

கணவன்/ மனைவி/ வளர்ந்த பிள்ளைகள் போன்றவர்களைச் சாரதிப் பத்திரம் எடுக்க ஊக்குவிக்காமை!

 

அனேகமாக, சாரதி மட்டும் ஓடும்போது, மற்றவர்கள் உறங்குவதும் எங்களில் உள்ள ஒரு பழக்கம்!

 

நீண்ட நேரம் ஓடும்போது, உடல் ' மைக்றோ ஸ்லீப்'  (Micro Sleep)  என்னும் நிலைக்கு, நம்மையறியாமலே தள்ளப்படுகின்றது! அதுவே இப்படியான பல விபத்துக்களுக்குக் காரணமாக அமைவதாக ஆய்வாளர்கள்  குறிப்பிடுகின்றார்கள்! 

 

 

ஆழ்ந்த இரங்கல்கள்.. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் போன்ற நாடுகளில் கொட்டுமளவு ஸ்நோ பிரான்சில் கொட்டுவதில்லை என்பதால் இங்கு கார் ஓடுபவர்கள் winter நேரத்துக்கு winter டயர் மாற்றுவதில்லை. :rolleyes: winter டயர் இருப்பதாவது பலருக்கு தெரிந்திருக்குமோ தெரியாது. :D பெரியளவில் snow கொட்டிச்சோ விபத்து தான். :rolleyes:

 

ஆனால் இது ஜெர்மனில் இடம்பெற்றுள்ளது.

 

சாதாரணமாக தமக்கு முன்னே செல்லும் காரிலிருந்து விடும் இடைவெளியை விட மழை நேரம், ஸ்நோ கொட்டும் நேரங்களில் கூடிய இடைவெளி விட்டு ஓட வேண்டும். அதே போல் வேகத்தையும் குறைத்து ஓட வேண்டும். பலர் அதை கடைப்பிடித்து ஓடும்போது இடையில் சிலர் அவ்விதிகளை மீறி வந்து மோதுகிறார்கள். :rolleyes:

அத்துடன் நீங்கள் கூறியது போல் எந்த டயர் போட்டாலும் ஸ்நோ நேரம் வழுக்கத்தான் பார்க்கும். :rolleyes:

 

 

துளசி, இங்குள்ள சட்டத்தின் படி... ஸ்நோ கொட்டுதோ... இல்லையோ....

கலன்டரில் குளிர்காலம் ஆரம்பித்தவுடன்... வாகனத்துக்கு வின்ரர் ரயர் மாற்றியே ஆகவேண்டும்.

அந்நேரம் வழமையான போக்குவரத்து காவல்துறையின் சோதனையில்... கண்டு பிடித்தால், 2 புள்ளிகளை இழக்க வேண்டும்.

அத்துடன் வீதியில் எம்மீது... பிழை இல்லாது, மற்றைய வாகனம் மோதி எமது வாகனத்துக்கு இழப்பு ஏற்பட்டால்...

எம்மில் பிழையாகக் கருதி, எமக்கு இழப்பீட்டு தொகை கிடைக்காது.

 

விசுகின் கவலையில்... நானும் பங்கு கொள்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.