Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

எப்போது உறங்கினேன் என்று தெரியாது உறங்கிப்போனேன்

எதோ சத்தம் திடுக்கிட்டு எழுந்தேன்

நாமிருவரும் சேர்ந்து வாங்கிய பூனைக்குட்டி

நீ பரிசளித்த என் போட்டோ பதிந்த தேநீர் குவளையை

கீழே தள்ளிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் மடியில்

இந்த நெடிய இரவு ஏன் இத்தனை வலிகளை பரிசளிக்கின்றதுவோ?

இந்த ஒருநாள் விடியாமல் போக எனக்கு தெரிந்த எல்லா கடவுளர்களையும் வேண்டிக் கொள்கிறேன்

கருவிநின்ற கார்த்திகை மேகங்களை கிழித்துக்கொண்டு

கதிரவன் தன்வரவை அறிவித்துக் கொண்டிருக்கிறான்

இரவு முழுதும் தன் இணையை தேடியலைந்த

பறவையொன்று தன்கூட்டில் மெல்ல அஸ்தமனமாகிறது

துக்கத்தின் பின்பான குளியல் நீண்டதல்லவா.

ஆம், என் வாழ்நாளின் நீண்ட குளியலது.

என் சட்டையின் மேல் பொத்தானை நீ இழுத்து இழுத்து

மேற்பொத்தான் இல்லாத சட்டை ஒரு டசன் என்னிடம்

நீ பரிசளித்த இந்த சட்டையின் பொத்தானை மட்டும்

என்னை அறியாமல் தைத்து வைத்துள்ளேன்

உன் வீட்டைக் கடந்தவாறே பார்க்கிறேன் மேலே

எனை ஆரதழுவிக் கொள்ள அழைப்பதுபோல்

கையை நீட்டிக் கொண்டவாரு கர்த்தர்

கடவுளே! உனக்கே உயிர்த்தெழ மூன்று நாட்கள்

என்னை சிலுவையிலறைந்து அரைநாழிகை தானே ஆகிறது

இதோ தேனீர்கடையில் வாடிக்கையான நமது இருக்கையில்

இன்று ஒரு புத்தம் புதிய காதலர்கள்

பருவ மழையின் முதல்துளி என்நாவில்

இன்றைய விரதம் இத்துடன் நிறைவுறுகிறது

சுரங்கப் பாதையில் இறங்கி கொண்டிருக்க

செவிப்பறையில் சொருகிய ஒலிப்பான் ஒலமிடுகிறது

"ஒரங்க வேடம் இனிப் போதும் பெண்ணே

உயிர்ப் போகுமட்டும் உன் நினவே கண்ணே

உயிரேரேரேரே வா...."

இந்த சுரங்கப் பாதையினுள் தானே

பற்ற வைக்காத சிகரெட்டை பாய்ந்து பற்றி பிடுங்கி எனை அடிக்க துரத்தி ஒடி மகிழ்ந்திருந்தோம்

இந்த பாதை முழுவதும் உன் சிரிப்பொளி நீள்கிறதடி

கண்கள் கசிந்துருகி கன்னங்களில் தவழ்கிறது

தொடுவானை நோக்கிய நம் பயணங்களில் யாவும்

உடனிருப்பதாய் உறுதி அளித்துவிட்டு

தொடுவானை தொட்டுவிட்டதாய் நீ மட்டும் திரும்பிச் செல்வதேனடி?

"புற்றில் வாழ் அறவும் அஞ்சேன்

பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்

கற்றை வாற் சடையும் அண்ணல்

கன்னுதல் பாத நன்னி

மற்றுமொற் தெய்வம் தன்னை

கொண்டேன நினைதன் தெம்மா

அன்பிலா தவரைக் கண்டால்

அம்மணாம் அஞ்சும் ஆரே

அம்மணாம் அஞ்சும் வாரே"

சிம்பொனியில் இசையில் திருவாசகம்

உயிரை உறய செய்யுமாறு

பாடிக் கொண்டிருக்கிறார் இளையராஜா

மனமோ திருவாசகத்தில் ஒன்றவில்லை

நடை மெடையை அடைகிறேன்

முதன் முதலில் நான் உன்னை சந்தித்த தொடருந்து மெல்ல தன் இருப்பை என் கண்களில் இருந்து மறைந்து கொண்டிருந்தது......

11/12/13

  • Replies 60
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளைக் காணாத வரையும்.. காதலை திருமணத்தால் சந்திக்காத வரையும் தான் ரசிக்க முடியும் நம்ப முடியும். கடவுளை ஒருவேளை நாம் கண்டுவிட்டால்.. அட இதுதான் கடவுளா என்றாகிடும். அதேபோல் தான் திருமணம் ஆனால்... ஆகமுதல் பல எதிர்பார்ப்புக்களோடு.. இருக்கும் போது.. தித்திக்கும்.. காதலும் சலித்துவிடும்.

அந்த வகையில் நிஜமான காதல் என்றால் அது கடவுள் போல. காதலி என்பவள் காதலிக்கப்படும் போது எப்படி இருந்தாளோ அப்படித்தான் எமக்குள் இருப்பாள்.. அதாவது காணாத வரை கடவுள் மேல நாம் கொண்டுள்ள நம்பிக்கை போல.. கடவுளுக்கு அளித்துள்ள உருவம் போல. அவள் வேறு ஒருவரோடு..கலியாணம் ஆகிப் போய் சீரழிந்தாலும் சரி.... மிகச் சீர்பெற்றாலும் சரி.. அவளை காதலியாக மனசு ஏற்காது. அதுதான் காதல் கடவுள் போல என்று சொல்லி வைத்தார்கள் நவீன கவிஞர்கள். இதனை ஆற்றுகைக்காக அல்ல.. நிஜ யதார்த்தத்தோடே எழுதி வைக்கிறோம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விண்வரை வியாபித்த அன்பில்ஈடு இணையில்லாதவள்

வசந்தங்களால் வசப்படுத்த முடியா தென்றலவள்

தூரிகையால் தீட்ட முடியா தீண்டலவள்

ஏழுஸ்வரங்களில் இயற்ற முடியா இசையானவள்

தமிழின் இனிமையை தன்னகத்தே கொண்டவள்

தன்வேர்களை பூமியில் ஆழமாய் பதிந்தவள்

மனச்சிறையின் எல்லைகளை உடைத்து சிறகடித்து பறப்பவள்

காதலிலும் காதலுக்குள்ளும் உள்ளதையெல்லாம் கற்பிப்பவள்

சிறு பொழுதுகளில் நீராய் நிறைந்திருப்பவள்

பெரும் பொழுதுகளில் நினைவாய் மலர்ந்திருப்பவள்

விடைபெறாமல் விடைபெறும் கேள்விகளையே தொடுப்பவள்

பின்னிரவின் மென்தூக்கத்தில் என்பெயரை உளறுபவள்

தீ சூரியனிலும் நீர் சமுத்திரத்திலும் சங்கமிப்பது போல

என்றும் என் ஆன்மாவில் சங்கமிக்கும் என்னவள்அவள்....

10/11/2013

ராஜன் விஷ்வா பாராட்டுக்கள்.

தம்பி முருகனிடம் விண்ணப்பித்து நேர்த்திக்கடனை முடிக்கவும் இல்லது வரம் பிறகு....சொல்லீட்டன். :icon_idea:

சிங்கம் சிக்கீட்டுது உறவுகளே கவனியுங்கள். :lol: பாவம் யாரப்பா அந்த தேவதை ? சீ கடவுள் ? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் சிக்கீட்டுது உறவுகளே கவனியுங்கள். :lol: பாவம் யாரப்பா அந்த தேவதை ? சீ கடவுள் ? :icon_idea:

கனவு. சிங்கம் சிங்கிளா இருந்தால் தான் அழகு. கெளரவம். மதிப்பு. :lol::icon_idea:

அருமையான கவி பாராட்டுக்கள் .

அண்ணன் நெடுக்கிக்கு  அல்வா கிண்டி கொடுத்த அந்த பெண் யார் யார் ???

காதல் என்றாலே எரிமலை ஆகிடுறார் மனுஷன் :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மனசு முழுதும் வலி... ஏன் வாசித்தேன் என்று இருக்கிறது அண்ணா...  :(

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=TU7AJ86cZZQ

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவி பாராட்டுக்கள் .

அண்ணன் நெடுக்கிக்கு  அல்வா கிண்டி கொடுத்த அந்த பெண் யார் யார் ???

காதல் என்றாலே எரிமலை ஆகிடுறார் மனுஷன் :D:icon_idea:

நமக்கு அல்வா..???! சிரிப்பா இருக்குது. நமக்கு அல்வா தர நினைச்சா நாங்க கிட்கட்டில கொடுத்து அனுப்பி வைப்பம். இதெல்லாம் பசங்க.. பொண்ணுங்க ஏமாத்திற உலகத்தில ஏமாறக் கூடாது என்பதற்கான வானிலை அறிக்கை. வானிலை அறிக்கை வாசிக்கிறவன்.. மழைல நனைச்சுக்கிட்டு தான் மழை பெய்யும் என்று சொல்லுறானோ.. என்று சிந்திச்சா அதுக்கு நாங்க என்ன பண்ணுறது..?!  :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பத்தில் சிரிக்க வச்சு அப்புறம் சீரியஸா எழுதிட்டான் பயபுள்ள :unsure:

விடுப்பா .. எல்லாம் அடுத்த காதல் வரும் வரைக்கும் தான். :rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின் என்றாற் போகா- இருந்தேங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரந் தாநினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.

பொருந்தி வராதவைகளை எவ்வளவு பிரயாசைப்பட்டு வருந்தி அழைத்தாலும் வருவதில்லை;

பொருந்தி இருப்பவைகளைப் போ என்றாலும் போவதில்லை.

விரும்பும் இன்பம் வருவதுமில்லை; வேண்டாத துன்பம் போவதுமில்லை.

இதை நினைத்து நினைத்து ஏங்கி நெஞ்சம் புண்ணாகி வாழ்நாள் முழுவதும் சிந்தித்து மாய்வதே மனிதன் தொழிலாகிவிட்டது.

இவர் தான் நெடுக்ஸ் அண்ணா கூறிய பட்டினத்தாரா? விதி வலியது. அன்பிற்க்கு நன்றி நுணா அண்ணா.,

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேறும்  காதல்  பூரணத்துவம்  அடைகின்றது!

நிறைவேறாத காதல்  அமரத்துவம்  அடைகின்றது!! :unsure:

  • தொடங்கியவர்

கடவுளைக் காணாத வரையும்.. காதலை திருமணத்தால் சந்திக்காத வரையும் தான் ரசிக்க முடியும் நம்ப முடியும். கடவுளை ஒருவேளை நாம் கண்டுவிட்டால்.. அட இதுதான் கடவுளா என்றாகிடும். அதேபோல் தான் திருமணம் ஆனால்... ஆகமுதல் பல எதிர்பார்ப்புக்களோடு.. இருக்கும் போது.. தித்திக்கும்.. காதலும் சலித்துவிடும்.

அந்த வகையில் நிஜமான காதல் என்றால் அது கடவுள் போல. காதலி என்பவள் காதலிக்கப்படும் போது எப்படி இருந்தாளோ அப்படித்தான் எமக்குள் இருப்பாள்.. அதாவது காணாத வரை கடவுள் மேல நாம் கொண்டுள்ள நம்பிக்கை போல.. கடவுளுக்கு அளித்துள்ள உருவம் போல. அவள் வேறு ஒருவரோடு..கலியாணம் ஆகிப் போய் சீரழிந்தாலும் சரி.... மிகச் சீர்பெற்றாலும் சரி.. அவளை காதலியாக மனசு ஏற்காது. அதுதான் காதல் கடவுள் போல என்று சொல்லி வைத்தார்கள் நவீன கவிஞர்கள். இதனை ஆற்றுகைக்காக அல்ல.. நிஜ யதார்த்தத்தோடே எழுதி வைக்கிறோம். :icon_idea:

கண்பார்வை இல்லாதவர்க்கு கண்ணீரும் வாரது என்ற உயர்ந்த சிந்தனையை யாரோ உங்களுக்கு அடிமனதில் பதியுமாறு அடித்துக் கூறியுள்ளார் போலும்.... :icon_idea:
  • தொடங்கியவர்

ராஜன் விஷ்வா பாராட்டுக்கள்.

தம்பி முருகனிடம் விண்ணப்பித்து நேர்த்திக்கடனை முடிக்கவும் இல்லது வரம் பிறகு....சொல்லீட்டன். :icon_idea:

சிங்கம் சிக்கீட்டுது உறவுகளே கவனியுங்கள். :lol: பாவம் யாரப்பா அந்த தேவதை ? சீ கடவுள் ? :icon_idea:

உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்,

ஒஸ்லோ கடுங்குளிரில் வேண்டுதலை நிறைவேற்ற நான் ரெடி... அதற்கு அக்கா நீங்கள் ஒரு உதவி செய்தாக வேண்டும், வேல் குத்தமுன் நீங்கோ நூற்றியெட்டு தரம் அங்கப்பிரதர்சனம் செய்ய வேண்டுமென்றும் என்று சிறிய வேண்டுதல் உள்ளதே. மாட்டேன் என்று சொல்லக்கூடாது, பிறகு சொல்லீட்டன் :icon_idea: , நானும் இசையண்ணாவும் வாளி வாளியாக தண்ணீர் உற்றுவோம் உங்களுக்கு கதகதப்பாக இருக்க, ஒன்று ரெண்டு யாரை என்ன விடுவது கண்டிப்பான ஒருத்தரைத் தான் விடவேனும்,

உங்கள் உற்றத் தோழன் நெடுக்ஸ் அண்ணாவே அதற்க்குச் சரியானவர் :D

அருமையான கவி பாராட்டுக்கள் .

அண்ணன் நெடுக்கிக்கு அல்வா கிண்டி கொடுத்த அந்த பெண் யார் யார் ???

காதல் என்றாலே எரிமலை ஆகிடுறார் மனுஷன் :D:icon_idea:

நன்றியண்ணா...
  • தொடங்கியவர்

மனசு முழுதும் வலி... ஏன் வாசித்தேன் என்று இருக்கிறது அண்ணா... :(

மன்னித்துவிடுங்கோ... நிற்சயம் நான் உங்களுக்கு தம்பியாகத்தான் இருப்பேன் சுபேஸ் அண்ணா.... கீழே நீங்கள் இணைத்த பதிவில் உள்ளவற்றை காண முடியவில்லை எனது அலைபேசியில், இணையத்திற்க்கு போகின்ற போது பதிலுரைக்கிறேன், மன்னிக்கவும்...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வர்ணிப்பு...

  • தொடங்கியவர்

ஆரம்பத்தில் சிரிக்க வச்சு அப்புறம் சீரியஸா எழுதிட்டான் பயபுள்ள :unsure:

விடுப்பா .. எல்லாம் அடுத்த காதல் வரும் வரைக்கும் தான். :rolleyes::icon_idea:

ஒன்டுக்கே ஓவரா அடி வாங்கியாச்சு, இதுல அடுத்ததா. நம்ம உடம்பு தாங்காது சாமி...
  • தொடங்கியவர்

நிறைவேறும் காதல் பூரணத்துவம் அடைகின்றது!

நிறைவேறாத காதல் அமரத்துவம் அடைகின்றது!! :unsure:

உண்மைதான்.
  • தொடங்கியவர்

நிச்சயமா எங்களைப் பற்றியதா இருக்காது. ஏன்னா... எங்களைப் பற்றி எங்களுக்கு மட்டும் தான் சரியாத் தெரியும். இருந்தாலும் சொல்லுங்க கேப்பம்..??! (களவிதிக்கு உட்பட்டிருந்தால்.. சொல்லலாம். கோவிக்க எதுவும் ரகசியமா இல்லை எங்களிடம்.) :lol::)

சில மாதங்களுக்கு முன்,

சீக்கிரம் நீ நிச்சல் பழகு

ஏன்?

நல்லது தானே

உனக்கு தெரியுமா?

எனக்கும் தெரியாது

பிறகென்ன டா நான் மட்டும்

இல்லையடி,

யாழ் களத்தில் இன்றொரு புதினம்

என்ன?

ஊட்டிக்கு தேனிலவு சென்ற ஒரு தம்பதியரில் அந்த மாப்பிள்ளை அருவியில் விழுந்து இறந்திட்டான்

அச்சச்சோ, பாவம்

உன்னைப்போல் தான் எல்லோரும் பாவப்பட்டுக் கொண்டிருக்க ஒரு பெருசு மட்டும் அந்த பெட்டைக்கு நீச்சல் தெரிந்திருந்த அவள் அவனை காப்பாற்றியிருக்கலாம் அவளால் தான் இறந்தான் என்று கதைத்துக் கொண்டிருந்தார்,

(அவள் கோபமாக)

அந்த மடையன் சொன்னானென்டு என்ன நீச்சல் பழக இந்த வாத்து மடையன் சொல்லுறானா...

....

யாரு அது

நெடுக்ஸ்

என்ன

நெடுக்காலபோனவன்

என்ன பெரொ,

அந்தாளுக்கு கலியாணம் ஆயிட்டா?

அப்பிடித்தா நெனக்கிறன்

அப்போ அவரு மனசிய போய் கத்துக்க சொல்லு முதல்ல...

....

இந்தமாதிரி ஆக்களோட கதைக்க வேணாம் நீ...

சரிரிரி

# ச்சே இந்தா ஆள்னால நானும் வாத்து மடையன் ஆகிட்டேன்

பி.கு கள விதிக்களுக்குட்ப்பட்டு நீங்கள் கருத்துக்களத்தில் எழுதிய கருத்தின் அடிப்படையில் மேற்க்கூறிய உரையாடல் இடம்பெற்றதால் இது விதிமீறலாகாது என நம்புகிறேன்.

மேற்ப்படி அண்ணன் மேல் தனிப்பட்ட விரோதம் ஒன்றுமில்லை :D

Edited by ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்

நல்ல வர்ணிப்பு...

நன்றி வல்லையண்ணா...
  • கருத்துக்கள உறவுகள்

ராஜன் விஷ்வா ஒரு கலகலப்பான பையானகத்தான் அறிந்திருந்தேன். மனசுக்குள் காதல் துயரை வைத்து துயரோடு கழியும் பொழுதுகளோடு வாழும்  பிள்ளையென்றது கவிதைகளை முழுமையாக வாசித்த பிறகே அறிகிறேன்.

கவிதைக்கு பாராட்டுக்கள். ஆனால் காலம் காயங்களை ஆற்றி உங்களை வாழ்வோடு இணைக்க வாழ்த்துக்கள் மட்டுமே. காதலைவிடவும் வாழ்வில் சாதிக்க நிறைய இருக்கிறது தம்பி. நீங்கள் சாதனையாளனா ? வேதனையை மட்டுமே காவும் சாதாரணமானவனா ? சிந்தியுங்கள். சிந்தனையின் தெளிவு ஒளியைத் தரும் உங்கள் வழியில்.

ஆரம்பத்தில் சிரிக்க வச்சு அப்புறம் சீரியஸா எழுதிட்டான் பயபுள்ள :unsure:

விடுப்பா .. எல்லாம் அடுத்த காதல் வரும் வரைக்கும் தான். :rolleyes::icon_idea:

தம்பி இது அனுபவமா அல்லது அனுதாபமா ? எனக்கொரு உண்மை தெரிஞ்சாக வேணும். பிரியாவிடமிருந்து கிடைக்கும் அடிகளுக்கு நான் பொறுப்பல்ல. :lol:
 
  • தொடங்கியவர்

ராஜன் விஷ்வா ஒரு கலகலப்பான பையானகத்தான் அறிந்திருந்தேன். மனசுக்குள் காதல் துயரை வைத்து துயரோடு கழியும் பொழுதுகளோடு வாழும் பிள்ளையென்றது கவிதைகளை முழுமையாக வாசித்த பிறகே அறிகிறேன்.

கவிதைக்கு பாராட்டுக்கள். ஆனால் காலம் காயங்களை ஆற்றி உங்களை வாழ்வோடு இணைக்க வாழ்த்துக்கள் மட்டுமே. காதலைவிடவும் வாழ்வில் சாதிக்க நிறைய இருக்கிறது தம்பி. நீங்கள் சாதனையாளனா ? வேதனையை மட்டுமே காவும் சாதாரணமானவனா ? சிந்தியுங்கள். சிந்தனையின் தெளிவு ஒளியைத் தரும் உங்கள் வழியில்.

தம்பி இது அனுபவமா அல்லது அனுதாபமா ? எனக்கொரு உண்மை தெரிஞ்சாக வேணும். பிரியாவிடமிருந்து கிடைக்கும் அடிகளுக்கு நான் பொறுப்பல்ல. :lol:

கருத்துக்களுக்கு நன்றி சாந்தியக்கா,

தம்பீ அழ வைக்கலயே?

ஜீவா அண்ணை ப்ரியா இல்லாட்டி திவ்யா என்று எனக்கு தனிமடலில் சொல்லீட்டார்...:D

இதற்கும் சேர்த்து விழும் அடிகளுக்கு நானும் பொறுப்பில்லை :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கல்யாணம் கட்டாத கட்டை பிரம்மச்சாரி.. :wub: இந்தப் பேச்சு வாங்கிக் குடுத்திட்டீங்களே.. :(:D

  • தொடங்கியவர்

அப்போ எனக்கு தெரியாதே, பாவம் மனுசன் கலியாணம் கட்டிகிட்டு ஒவரா அடிவாங்கித்தான் இப்புடி பேசுராரெண்டல்லோ நான் நினைச்சிருந்தேன்...

சரி இவருயென் அண்ணா தனியா இருக்காரு இன்னும்?

கால காலத்தில ஒரு கலியாணம் பன்னி வச்சிருந்தா போனுக்கு உம்ம்மமா கொடுக்க வேண்டி வந்திருக்குமா :icon_idea:

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் கல்யாணம் கட்டாத கட்டை பிரம்மச்சாரி.. :wub: இந்தப் பேச்சு வாங்கிக் குடுத்திட்டீங்களே.. :(:D

உங்கள் அஞ்சர பொட்டியில் உள்ள பலான குப்பைகளை குப்பைத்தொட்டிக்கு அனுப்பினால் தான் நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடியுமென்டு நிர்வாகத்தில் ஒரு நம்பிக்கையான ஆள் சொல்லியுள்ளார்... :D

# ச்சீ அது பலான அல்ல பல...

  • கருத்துக்கள உறவுகள்

விண்வரை வியாபித்த அன்பில்ஈடு இணையில்லாதவள்

விண்ணைக்கடந்தவள்

வசந்தங்களால் வசப்படுத்த முடியா தென்றலவள்

வீழாத தென்றல்

தூரிகையால் தீட்ட முடியா தீண்டலவள்

அடங்காத ஆர்ப்பரிப்பு

ஏழுஸ்வரங்களில் இயற்ற முடியா இசையானவள்

மூழ்காத ஒலி

தமிழின் இனிமையை தன்னகத்தே கொண்டவள்

வல்லிடை மெல்லினள்

தன்வேர்களை பூமியில் ஆழமாய் பதிந்தவள்

வீரியவேர்

மனச்சிறையின் எல்லைகளை உடைத்து சிறகடித்து பறப்பவள்

சிறை நொறுக்கி

காதலிலும் காதலுக்குள்ளும் உள்ளதையெல்லாம் கற்பிப்பவள்

அன்பினி

சிறு பொழுதுகளில் நீராய் நிறைந்திருப்பவள்

தண்ணீர் தேசம்

பெரும் பொழுதுகளில் நினைவாய் மலர்ந்திருப்பவள்

கனவுப்புதையல்

விடைபெறாமல் விடைபெறும் கேள்விகளையே தொடுப்பவள்

கேள்விக் கொத்து

பின்னிரவின் மென்தூக்கத்தில் என்பெயரை உளறுபவள்

அரைத்தூக்க மாது

தீ சூரியனிலும் நீர் சமுத்திரத்திலும் சங்கமிப்பது போல

நீரும் நெருப்பும்

என்றும் என் ஆன்மாவில் சங்கமிக்கும் என்னவள்அவள்....

நீங்கா ஆன்மா

10/11/2013

விண்ணைக்கடந்தவள்

வீழாத தென்றல்

அடங்காத ஆர்ப்பரிப்பு

மூழ்காத ஒலி

வல்லிடை மெல்லினள்

வீரியவேர்

சிறை நொறுக்கி

அன்பினி

தண்ணீர் தேசம்

கனவுப்புதையல்

கேள்விக் கொத்து

அரைத்தூக்க மாது

நீரும் நெருப்பும்

நீங்கா ஆன்மா

தம்பி இப்படியெல்லாம் நாங்கள்  மொழி பெயர்ப்புச் செய்வோம். 

கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றன. அதென்ன "விடைபெறாமல் விடைபெறும் கேள்விகளையே தொடுப்பவள்"  இந்த இடந்தான் புரியேல்லை கவிஞரே அதற்கு ஏதேனும் அற்புத விளக்கங்கள் இருக்கிறதா? எனக்கு இந்த இடத்தை வாசிக்கும்போது அந்த என்னவள் தட்டின கேசா? என்று எண்ணத்தோன்றுகிறது. நாங்களும் கேள்வி கேட்பமெல்லே...... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.