Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னதான் இருந்தாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்...(இது, கதையல்ல. எடுத்துக்கொள்ளலாம் )

Featured Replies

         இப்படித்தானுங்கோ சின்னனில எனக்கு  உந்த வெள்ளயளை அறிமுகப்படுத்தினவை. அப்பேக்க எனக்கு ஒரு ஆறோ ஏழு வயசெண்டுதான் நினைக்கிறேன். ஆங்கில புத்தகத்தை எடுத்தா முதல் பக்கத்திலேயே போட்டு இருந்தாங்கள். எதோ என்னவோ என்று  பிரமிச்சுபோய் பார்த்தேன். நம்மள மாதிரித்தான் இருந்தாங்களா அப்படியே விட்டுட்டன். பிறகு கொஞ்ச காலத்தில காந்தி உந்த வெள்ளையனே வெளியேறு என்று சொன்னார் எண்டும் படிப்பிச்சாங்கள். என்னடா இவங்கள் நல்லவங்கள் தானே உந்த மனுஷன் எதுக்கு இப்படி செய்கிறார் என்றும் யோசித்தேன். அந்தள் கொண்டு திரிஞ்ச  கம்பை பார்த்த பயத்தில ஒன்றும் கேட்கவும் இல்லை யாரிடமும் சொல்லவும் இல்லை.

    அப்படியே கொஞ்சகாலம் போச்சா... எங்காவது நேரம் தவறி போனால் காணும்  வெள்ளைக்காரன் மாதிரி நேரத்தை மதிக்கணும் என்றாங்கள். ஏதாவது விசேசத்துக்கு கொஞ்சம் ஊத்தையாக போனாலோ அல்லது தலையை கிளயை இழுக்காமல் போனாலோ,அல்லது ஏதும் அவசரத்தில யாரையாச்சு கவனிக்காமல் இருந்தாலோ  உடனே, வெள்ளைக்காரனின் பழக்க வழக்கங்களை பாருங்கள் என்று உதாரணம் வேற..சொன்னாங்களா ..அதோட விட்டாங்களா என்ன சாப்பிடேக்கை, குளிக்கேக்கை  ஏன் மூ ..... பெய்யேக்கை கூட வெள்ளைக்காரனைப்பாருங்கள் வெள்ளைக்காரனைப் பாருங்கள் என்றுதான் சொன்னாங்கள்.

article-2367612-1ADB0528000005DC-290_964

என்னத்த எடுத்தாலும் வெள்ளைக்காரனைப் பாரு, வெள்ளைக்காரனை மாதிரி இருக்கோணும்... என்று ஒரே கதையா இருந்திச்சா எனக்கும் வெள்ளைக்காரன் என்றால் எதோ நிலவில குளிச்சு, செவ்வாயில தூங்கி சூரியனில நடந்து வந்த வங்களோ என்ற மாதிரி ஒரு விம்பம். வயது வர வர வெள்ளைக்காரங்கள் பற்றிய நினைப்பும் வளர... அந்தநேரம் பார்த்து வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த ஒரு சிலரும், அங்கை என்ன மரியாதை, என்ன மதிப்பு, என்ன ஒரு வாழ்க்கை முறை..ஆ..  ஊ.. என்றாங்களா... எப்படியாவது ஒரு வெள்ளைக்காரனையாவது ஒருமுறை பார்க்கணும் என்ற பெரிய ஆசை வந்திடுத்து...தேடித்திரிஞ்சனா ஒருபக்கம் வெள்ளைக்காரனை பார்க்கணும்  எண்ட கனவும் வளர மறுபக்கம் L M G யில் இருந்து R B G என்று மாறி  9 M இல வந்து நிக்க, காலம் என்னையும்  தூக்கி எறிந்தது வெள்ளைக்காரகளின் நாட்டில்.

மிகப்பெரிய சந்தோசமா இருந்திச்சு.  நானும் வெள்ளைக்காரங்களை போல வாழலாம்.. வெள்ளைக்காரங்களோடு பழகலாம் என்ற நினைப்பே ஒரு பெரிய இன்பமாக இருந்துதா... அப்படியே நினைச்சுக்குக்கொண்டு திரும்பினா முன்னால ஒரு வெள்ளை.. மணம் என்றால் தாங்க முடியாத மணம். வந்த இடத்தில மூக்கை பொத்துவது நாகரீகம் இல்லை என்றபடியால் சகிச்சு கொண்டு தாண்டிய போது வச்சிருந்த கனவு கொஞ்சம் தளம்பித்தான் போச்சு..இருந்தாலும் எங்கோயோ ஒன்று இரண்டு தப்பிப்போகும் தானே என்று கடந்து வந்து கொஞ்சநாள் கழியத்தான் இங்கை எல்லோரும் மூக்கை போத்திக்கொண்டு தான் வாழுகினம் என்று புரிந்தது.

article-2367612-1ADCFD1E000005DC-626_964

ஒரு இடத்தில பதியனும் என்று விடியக்காத்தல குளிருக்கை கொண்டுபோய் விட்டாங்களா நீளமா ஒரு இருநூறு சனம் பல நூறு நாட்டுக்காரங்கள். என்னடா மனிதுரிமையை மதிக்கிற நாட்டிலும் லைனிலா நிக்கணும் என்று பார்த்தா ஒரு ஆபிசர்  வந்து நெஞ்சை பிடிச்சு தள்ளுது எனக்கு பத்தில நின்றவரை. எனக்கெண்டா எங்கட ஊரில ஒரு  ஆபிசர் இப்படி ஆளில் கை வைக்க முடியுமோ என்ன..தவறியும் ஒரு இடத்தில சந்தேகம் கேட்டா எதோ தன்ர மடியில கையை வச்சிட்டான் என்ற மாதிரி பாக்கிறதும் கத்துறதும்... சா சா மடியில கையை வைச்சா ஒன்றும் சொல்லமாட்டங்கள். மறந்து போனேன். உதுக்கு வேற பழமொழி தான் சொல்லணும்.

எல்லா கனவும் உடைஞ்சு போக சரி வந்தனாங்கள் வாழத்தானே வேணும் என்ற நினைப்பில ஒரு சாப்பாட்டுக்கடையில் வேலைக்கு சேர்ந்தமா ... சா சா சாப்பாட்டுக்கடை என்றால் நம்ம ஆக்கள் கோவிப்பினம் ரெஸ்ரோறன்ட் என்று கௌரவமா சொல்லணும். இரண்டாயிரம் மூயிரம் கண்டு போயிலைக்கு ஒருநாளில் கெட்டு உடைச்சவனை ஒரு இடத்தில நிண்டு கழுவு என்று சொன்னால் கேக்கவா வேணும். அப்படி அடிச்சு பிடிச்சு கழுவுற நாளில் தான் முன்னுக்கு நின்ற சாப்பாடு  கொண்டுபோய் கொடுக்கிற வெள்ளை குப்பையிக்க கிடந்த ஒரு சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டுது....எட கண்றாவி இவனார்ரா என யோசிக்கைக்கைதான் சாப்பாடே வெறுத்துப்போனது.

சரி போகட்டும் சாப்பாடுதானே பசிக்குத்தானே என்று விட்டனா மற்றப்பக்கத்தால இவங்களின் இன்னொரு பசி... அதையெப்படி இங்கை சொல்லுவது எப்படியெல்லாம் சொல்லமுடியாதோ அப்படியெல்லாம் அந்த பசி தீர்ப்பு ஆங்காங்கே நடக்க ஐம்புலனும் அடக்கி ஒரு முனிவரா, சித்தரா வேலைக்கு போனமா வந்தமா என்று காலத்தை தள்ள வேண்டியதா போச்சு. ஒருக்கா இடக்கு முடக்கா ஒரு வெள்ளை இருந்த வீட்டிக்கு போக வேண்டிய சூழல். அப்படி இப்படி என்று நினைத்துக்கொண்டு அங்கை போனால், பூனை ஒருபக்கம் நாய் ஒருபக்கம் எலி ஒருபக்கம் உதுக்கெல்லாம் நடுவில அவன் ஒருபக்கம்... சா சா வெள்ளைக்காரன் அப்படியெல்லாம் இருக்கமாட்டான். தபாக நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பில்லை ஆமா...எனக்கு நானே சொல்லிக்கொண்டு அலுவலை முடிச்சு வெளியேறியபோது றோட்டு காத்து முகத்தில படேக்கதான் இன்னும் பூமியில் இருக்கிறன் என்ற நினைப்பே வந்தது.யாரும் நரகம் போன ஆக்கள் இருந்தால் வாங்கோ ஒப்பீடு செய்யலாம்.

அம்மா அப்பவும் சொன்னா 'டேய் போகாதயிடா நாலு ஆடும் ஐஞ்சு மாடும் வேண்டி வளக்கலாம் என்று"..இப்பதான் யோசிக்கிறேன் இங்கை வந்த காசையும் போட்டு ஒரு பத்து எருமையும் கூட வேண்டி வளத்திருக்கலாம்.. அதுகளுக்கு என்றாலும் சொன்னது விளங்கும். இந்த வெள்ளையளுக்கு....

என்னவோ போங்கோ நடக்கிறது நடக்கட்டும் என்ற நினைப்பில பிழைப்பில் கவனமாக இருக்க, வருடக் கடைசி என்று உந்த வெள்ளையள் எல்லாம் பையை தூக்கிக்கொண்டு சுற்றுலா வெளிக்கிட்டினம். சரி சரி கொஞ்சமாவது பரவாயில்லை என்று பார்த்தா.. ஒரு பதினைச்சு நாள் கழிய வந்து... பானும் கேக்கும் கடனா கேக்குதுகள்.

எட எங்கட பாரதேசிப்பயலுகளே, எத்தன கதையை சொல்லி வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் என்று குளறினியல். ஒரு பேப்பரை வச்சு இவங்கள் செய்கிற வேலையை சொன்னன் எண்டா நாறிப்போகும் பாத்துக்கோங்கோ...

வெள்ளைக்காரன் நாட்டில வாழலாம் என்ற எங்கட ஆக்களிந்த கதையை நம்பி கெட்ட நாளுபெரிலநானும் ஒருத்தன் பாருங்க இதில ஒளிக்க ஒன்றும் இல்லை.சரி சரி எல்லோரும் ஏறின குதிரைதானே இந்த வாழ்க்கை என்று நானும் ஏறி இப்ப இறங்கமட்டாமல் .. குதிரையின்ற போக்கில விட்டுட்டன். கிடைக்கிடை திரும்பி பார்க்க்கினான் எவ்வளவுதூரம் ஓடியிருக்கிறன் என்று..அதெங்கை ஓடினால்தானே நின்ற இடத்திலேயே குதிரை நிக்க சுற்றி இருக்கிற எல்லாமேல்லோ ஓடுது...

ஓடுற காலத்துக்கு கையை காட்ட யாரெல்லாம் வரப்போரியள்....

படக்குறிப்பு.

படம் 01.. பாரிசின் தொடரூந்து தடத்தை கடக்கும் சிறுவர்கள் (நல்ல வளர்ப்பு )

படம் 02... பாரிசின் நிரந்தர இலகுவான உழைப்பு (தமிழில் கெட்ட வார்த்தையால களவு என்றும் சொல்லுவினம் )

தாசன் நீங்கள் ஐரோப்பா/அமெரிக்க நாடுகளை விட்டு வேறு எங்காவது குடியேறலாமே....வெள்ளையா உங்களை தடுத்தான்?

13ஆம் நூற்றாண்டுடன் சோழ சாம்ராஜ்ஜம் சிதறுண்டு, தமிழன் அடிமையானான்… அந்த அடிமைத்தனத்தால் தனது காலில் நிற்பதைத் தவிர்த்து மற்ற இனம் சார்ந்து நின்று, அது செய்வதே சொல்வதே சரி என்னும்போக்கில் தன்னினம் தாழ்த்தி வாழப்பழகிக் கொண்டான்… அதனால் அவனது வாழ்வின் பெரும்பகுதி ஈ அடிச்சான் கொப்பிதான். இவை மாற வேண்டுமாயின்.. முதலில் அடிமைத்தளை அகல வேண்டும்..!! அகலுமா..??!!  :D  :o

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழு தாசன் நல்ல வெள்ளைக்காரரை சந்திக்காதது துரதிஸ்டம் தான்.எம்மை போல தான் நல்லவர்களும் கூடாதவர்களும் அவர்களிலும் உண்டு.

அண்ணை போக வேண்டிய இடம் வெகு தூரம்.

தாசன் நீங்கள் பாரீசை வைத்து ஒப்பிட்டு உள்ளீர்கள், பாரிஸுக்கு வெளியில் சென்றுபாருங்கள். இங்கு ஜெர்மனியர்கள் நல் ஒழுக்கத்துடன் நல்ல திட்டமுடலுடன் வாழ்கின்றனர். நான் இருப்பது சிறியநகரம் ஒன்றில் அவர்களுடன் நெருங்கி பழகியதால் சொல்கின்றேன்.

நெற்கொழு தாசன் நல்ல வெள்ளைக்காரரை சந்திக்காதது துரதிஸ்டம் தான்.எம்மை போல தான் நல்லவர்களும் கூடாதவர்களும் அவர்களிலும் உண்டு.

சிலவேளை தாசன் அதை தான் சொல்ல வருகிறாரோ தெரியாது...ஆனா ரொம்ப கஸ்டபடுறார் போல இருக்கு

பொழுது போகவில்லை என்றால் ஏதோ எழுதுவது போல இருகிறது. அதில் எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும்

அண்ணா, 4 பேரை பார்த்து விட்டு அவர்கள் தான் வெள்ளைக்காரர் என்று கணக்குப்போடாதீர்கள். :) பொதுவில் தமிழர்கள் வெள்ளைக்காரர் என்று சொல்வது வெள்ளை நிறத்தில் இருக்கும் அனைவரையும் அல்ல. பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், அமெரிக்கா, ஜெர்மன்... etc.. போன்ற நாடுகளிலுள்ள அந்நாட்டை origin ஆக கொண்டவர்களை. :rolleyes:

பாரிஸில் வெள்ளைக்காரரை விட வேற்று நாட்டவர்கள் தான் அதிகம். (வெள்ளை நிறத்தில் இருந்தாலும்). ஆனால் கேட்டால் பலர் பிரான்ஸ் citizen ஆக இருப்பார்கள். origin வேறு. எனவே பரிசை வைத்து கணக்கு போடாதீர்கள். :rolleyes:

வாகனம் ஓட்டுவதை பொறுத்தவரை ஏனைய நாட்டவர்கள் போல் பிரான்ஸ் நாட்டவர்கள் இல்லை. அதிலும் பாரிஸில் சில பிரான்ஸ் நாட்டவர்களும் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவதை பார்த்துள்ளேன். பிரான்சின் ஏனைய பகுதிகளிலும் அவ்வாறு உள்ளதா என தெரியவில்லை. :unsure: ஆனால் ஒரு சிலரை வைத்துக்கொண்டு அனைவரும் அவ்வாறே என கூற முடியாது. :rolleyes:

பெரும்பாலான வெள்ளைக்காரர் உண்மையில் மிக நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்பவர்கள். அவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியும். அதேபோல் சொன்னால் சொன்ன நேரத்துக்கு அவ்விடத்தில் நிற்பார்கள். வீட்டில் நாய் பூனை வளர்த்தாலும் அதனை துப்பரவாக வளர்ப்பார்கள். :)

Edited by துளசி

ஒரு இடத்தில பதியனும் என்று விடியக்காத்தல குளிருக்கை கொண்டுபோய் விட்டாங்களா நீளமா ஒரு இருநூறு சனம் பல நூறு நாட்டுக்காரங்கள். என்னடா மனிதுரிமையை மதிக்கிற நாட்டிலும் லைனிலா நிக்கணும் என்று பார்த்தா ஒரு ஆபிசர்  வந்து நெஞ்சை பிடிச்சு தள்ளுது எனக்கு பத்தில நின்றவரை. எனக்கெண்டா எங்கட ஊரில ஒரு  ஆபிசர் இப்படி ஆளில் கை வைக்க முடியுமோ என்ன..தவறியும் ஒரு இடத்தில சந்தேகம் கேட்டா எதோ தன்ர மடியில கையை வச்சிட்டான் என்ற மாதிரி பாக்கிறதும் கத்துறதும்... சா சா மடியில கையை வைச்சா ஒன்றும் சொல்லமாட்டங்கள். மறந்து போனேன். உதுக்கு வேற பழமொழி தான் சொல்லணும்.

Bobigny préfecture இல் தான் இந்த நிலைமை. :D காரணம் அகதிகளாக வருபவர்கள் எண்ணிக்கை இங்கு அதிகம். 93 Département ஐ சேர்ந்தவர்கள் அனைவரும் இங்கு தான் ஆரம்பத்தில் பதிய வேண்டும். இது தான் main prefecture. பின்னர் விசா accept பண்ணினால் அவரவர் இருக்கும் இடங்களுக்கேற்ப அவர்களுக்குரிய sous préfecture க்கு மாற்றி விடுவார்கள். அங்கு எல்லாம் நிலைமை இவ்வாறு இல்லை.

ஆனால் நீங்கள் bobigny prefecture க்குரிய பகுதியிலேயே இருந்தால் உங்களுக்கான préfecture பின்னரும் அதுவாக இருக்கும். விசா accept பண்ணினாலும் Carte de Séjour பெறும்வரை அங்கேயே தொடர்ந்து செல்ல வேண்டும். passport க்கு apply பண்ணுவது, விசா renew பண்ணுவது போன்றவற்றுக்கு நீங்கள் அங்கேயே செல்ல வேண்டும்.

வேறு department ஐ சேர்ந்த prefecture இல் நிலை இவ்வாறு இல்லை. (அதாவது கஷ்டப்பட வேண்டியதில்லை.)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமானவர்கள்

அவரது முதல் பந்தியை  வாசிக்கவில்லை

அல்லது கிரகிக்கவில்லை  என்று நினைக்கின்றேன்

கற்பனைக்கும்

நேரில்  காணும் நியத்துமான கதையே  இது.

அந்தவகையில் இதைப்போல் பலவற்றை  கண்டவன்

வெட்கப்பட்டவன் என்றரீதியில்

வாழ்த்துக்கள்   நெற்கொழுதாசன்...

பார்க்கப்படவேண்டிய  பக்கம்.......

  • கருத்துக்கள உறவுகள்

article-2367612-1ADCFD1E000005DC-626_964

அந்தப் பெண்ணுக்கு இடுப்பு தெரியுது என்று காட்ட நினைத்துள்ளார்கள்..  :unsure: ஆனால் வட்டத்தை சரியாகப் போடவில்லை.. :blink:

அநேகமானவர்கள்

அவரது முதல் பந்தியை  வாசிக்கவில்லை

அல்லது கிரகிக்கவில்லை  என்று நினைக்கின்றேன்

கற்பனைக்கும்

நேரில்  காணும் நியத்துமான கதையே  இது.

அந்தவகையில் இதைப்போல் பலவற்றை  கண்டவன்

வெட்கப்பட்டவன் என்றரீதியில்

வாழ்த்துக்கள்   நெற்கொழுதாசன்...

பார்க்கப்படவேண்டிய  பக்கம்.......

நான் வாசித்தேன். :D ஆனால் தனியே பிரான்ஸ் அதுவும் பரிசை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த வெள்ளைக்காரரையும் கருதி விட முடியாது. பாரிஸில் கூட எவ்வளவோ நல்ல பிரான்ஸ் காரர் உள்ளார்கள். ஆனால் வேற்றின மக்களின் அதிகரிப்பு காரணமாக பிரான்ஸ் நாட்டவர்களில் ஒருபகுதியினரும் அவர்கள் பழக்கவழக்கங்களை பழகி சரியான வளர்ப்பு இல்லாமல் வளரலாம்.

நேற்கொழு அண்ணா அவதானித்தவர்களில் எவ்வளவு பேர் origin பிரான்ஸ் என்பது தெரியவில்லை. அரபு நாட்டவர்கள் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் களவுகளுக்கு, பிச்சை எடுப்பதற்கு பேர் போனவர்கள். எமது பார்வையில் அவர்களை வெள்ளைக்காரர் என்று கூறுவதில்லை.

இந்த நாட்டில் நாம் அலைவதற்கு முக்கிய காரணம் தமது மொழியை தான் மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும் என பிரெஞ்சு அரசாங்கம் நினைப்பதால். அதனால் தான் security social போன்ற இடங்களில் ஆங்கிலம் தெரிந்தாலும் கதைக்க மாட்டார்கள். பிரெஞ்சில் கதைப்பார்கள். ஏனைய பொது இடங்களிலும் அவ்வாறான நிலை இருந்தாலும் அவசரத்துக்கு ஆங்கிலம் தெரிந்தால் கதைப்பார்கள்.

சாதாரண பிரான்ஸ் குடிமக்கள் பலருடன் பழகினால் அவர்கள் பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும். கதைத்தால் நன்றாக பழக கூடியவர்கள். சிலர் இனத்துவேசம் கொண்டவர்கள் தான். ஆனால் இளைய தலைமுறையினரிடம் இனத்துவேசம் குறைவு.

எனக்கு நேரடியாக யாரையும் அதிகளவில் பழக்கமில்லாவிட்டாலும் பிரான்ஸ், சுவிஸ், ஜெர்மன் நாட்டவர்கள் சிலருடன் கதைத்துள்ளேன். அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். (இவர்கள் வேறு நாட்டிலுள்ள எனது உறவினருக்கு தெரிந்தவர்கள்.) நேரம் தவறாதவர்கள். தாம் குறிப்பிட்ட நேரத்திற்கே அவற்றை செய்பவர்கள். நன்றாக பழகியவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் கடன் கொடுப்பதாக இருந்தாலும் எழுத்து மூலமாகவே வழங்குவார்கள். சிலவேளை நன்றாக பழகியவர்களிடமும் அவ் முறையை பின்பற்றுவார்கள். நாய், பூனை மேல் இரக்கம் கொண்டவர்கள். வீட்டில் வளர்ப்பதாக இருந்தால் தமது பிள்ளைகள் போல் வளர்ப்பார்கள். ஆனால் தமிழர்கள் வீட்டில் நாய், பூனை வளர்த்தால் வரும் மணம் இவர்கள் வீட்டில் இருக்காது.  :D இப்படி பல... :rolleyes:

நேற்கொழு அண்ணாவுக்கும் அவ்வாறானவர்களின் பழக்கம் கிடைக்க வேண்டும். :)

நான் அவரது முதல் பந்தியை வாசித்தே கருத்து வைத்தேன். வெள்ளைக்காரர்களில் பெரும்பாலானவர்கள் நேர்மையானவர்கள் என்பதைவிட நேர அட்டவணைப்படி வாழ்பவர்களென்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம். நாங்கள் உணர்ச்சிக்கு அடிமையாகி, அதன் போக்கில் வாழ்க்கையைக் கொண்டு நடாத்துபவர்கள் எனலாம்./ அவர்கள் உணர்வுகளுக்குக் கடிவாளமிட்டு வாழ்பவர்கள் எனலாம்.

எனக்கென்னவோ அவர்களுடையது ஒரு வெறுமையான வாழ்வு என்பதாகப்படுவதுமுண்டு. பெற்றோரைப் பிரிந்து தனி அறையில் உறங்கும் குழந்தை பெரியவனானதும், அவர்களை தனியாக விடுவதைப் பார்க்கும்போது…. எமது வாழ்க்கை முறை மேலானது என்பதே எனது கருத்து.  :D

சுருக்கமான  பதில்

நெற்கொழுதாசன்

வெள்ளைத்தோல்கள்  பற்றி

தான் ஊரில் கேள்விப்பட்டு  வளர்த்துக்கொண்ட கற்பனை  வடிவத்துக்கும்

நியமான தான் தற்பொழுது கண்டவெள்ளைகளுக்குமான  வித்தியாசத்தை பதிகிறார்

பிரெஞ்சுக்காறரோ அல்லது ஐரோப்பியர்கள் பற்றியோ அல்ல....

நன்றி  சோழியான்

நான் பிரெஞ்சுக்காறரிடம் எடுத்துக்கொண்டது

நேரம் தவறாமை

மற்றவர் விடயங்களில் தலையிடாமை

எவருக்கும் முடிந்தவரை  இடைஞ்சல் செய்யாதிருத்தல்...........

ஆனால்

எடுக்காதவை  பல...............

புதுக்கார் வாங்கியவுடன் நான் சில பிரெஞ்சுக்காற வாடிக்கையாளர்களை  இழக்கவேண்டி  வந்தது.

இது தான் நியம்..............

சுருக்கமான  பதில்

நெற்கொழுதாசன்

வெள்ளைத்தோல்கள்  பற்றி

தான் ஊரில் கேள்விப்பட்டு  வளர்த்துக்கொண்ட கற்பனை  வடிவத்துக்கும்

நியமான தான் தற்பொழுது கண்டவெள்ளைகளுக்குமான  வித்தியாசத்தை பதிகிறார்

பிரெஞ்சுக்காறரோ அல்லது ஐரோப்பியர்கள் பற்றியோ அல்ல....

ஊரிலுள்ளவர்கள் வெள்ளைக்காரர் என குறிப்பிடுவது முக்கியமாக ஆங்கிலேயர்களை, அமெரிக்க நாட்டவர்களை.

ஊரில் இருப்பவர்களுக்கு அரபு நாட்டவர்களை எல்லாம் தெரியாது. அரபு நாட்டவர்களை வெள்ளை என்று சொல்லவும் மாட்டார்கள். :D  வெள்ளையாக இருப்பவர்கள் அனைவரையும் வெள்ளைக்காரர் என குறிப்பிடுவதானால் சீனா காரனும் வெள்ளை தான். இன்னும் பல நாட்டவர்களை குறிப்பிடலாம்.

ஊரிலுள்ளவர்கள் யாரை வெள்ளை என குறிப்பிட்டார்களோ அவர்கள் பற்றி தான் நானும் எழுதியுள்ளேன். :)

எனது பார்வை இப்படி உள்ளது. எனவே எனது கருத்தை எழுதியுள்ளேன். :D உங்கள் பார்வையில் வெள்ளை தோல் கொண்ட அனைவரும் வெள்ளைக்காரர் என்றால் அது உங்கள் கருத்து. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.