Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லைக்கா ,ஐங்கரன் குழுமம் இலங்கையில் .

Featured Replies

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமானப்படை விமானத்தில்

lycas-300x225.jpg

லைக்கா மொபைல் என்ற பல்தேசிய வியாபார நிறுவனத்திற்கும் இலங்கை அரசிற்கும் இடையேயான தொடர்பும், லைக்கா மொபைல் டேவிட் கமரன் கட்சிக்கு வழங்கிய நிதி தொடர்பான ஆதரங்களும் கடந்த சில வாரங்களக வெளியாகியிருந்தன. இனியொரு இணையம் இது குறித்த பல தகவல்களை வெளியிட்டிருந்தது. லைக்கா மொபல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைக்கா பிளை நிறுவனத்தின் இணைப்பாளரும் லைக்கா ஊடகப் பேச்சாளருமான திரு.சிவசாமி ஆகியோர் இலங்கை அரச விமானப்படை விமானத்தில் சென்று இறங்கும் காட்சி இன்று வெளியானது. இந்த் இருவரோடும் இலங்கை அரச அமைச்சராகவிருந்த கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய மற்றும் ஐங்கரன் நிறுவன உரிமையாளர் கருணாகரமூர்த்தி ஆகியோர் காணப்படுகின்றனர். ஐங்கரன் நிறுவனம் தென்னிந்தியாவிலிருந்து தமிழ்த் திரைப்படங்களைப் புலம் பெயர் நாடுகளுக்கு இறக்குமதி செய்து வினியோகித்துவரும் நிறுவனமாகும். தவிர, தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களைப் புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்துவரும் ஐங்கரன் அங்கு அவர்களுடனான நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறது.

தமிழ்ப் பேசும் மக்களை இனக்கொலை செய்த இரத்தம் தோய்ந்த விமானத்தில் பலபில்லியன் தமிழ் வியாபாரிகளின் பயணம் என்பட்து இனப்படுகொலையின் பின்புலத்தில் வியாபாரிகளின் செயற்பாடுகளுக்கு சிறந்த உதாரணம்.

lyca-300x225.jpglyca1-300x225.jpglyca2-300x225.jpglycas1-300x225.jpg

(இனியொரு இணையத்தில் இருந்து )

இனி ஐங்கரன் படங்களையும் புறக்கணிப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஐங்கரன் படங்களையும் புறக்கணிப்போம் .//அண்ணாசி உண்மையாவா சொல்லுறீக :rolleyes:

  • தொடங்கியவர்

வீட்டை வந்தா பார்க்க போறிங்க. :D

  • கருத்துக்கள உறவுகள்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

lyca.jpgபிரித்தானியாவில் தமிழர் ஒருவரால் நடத்தப்படும் பல மில்லியன் பெறுமானமுள்ள வியாபாரம் லைக்கா மோபைல் குழுமம். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாடின் முக்கிய பங்குதாரர்கள் லைக்கா மோபைல் என்ற தகவலை கோப்ரட் வாச் என்ற இணையம் வெளியிட்டுள்ளது.

டொரிக் கட்சி என்று அழைக்கப்படும் டேவிட் கமரனின் பழைமைவாதக் கட்சிக்குப் பெருந்தொகை நன்கொடை வழங்குபவர்களான லைக்கா மோபைல், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய வர்த்தக மன்றத்தின் முதல்தர பங்குதாரர்கள் என்ற தகவலை கோப்ரட் வாச் வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் மருமகன் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனமொன்றின் 95 வீதமான பங்குகளை லைக்கா குழுமத்தைச் சேர்ந்த Hastings Trading e Serviços Lda என்ற போத்துக்கல் நாட்டு நிறுவனமான வாங்கியது.

அதனைத் தொடர்ந்து இலங்கையில் 2007 ஆம் ஆண்டில் 2G வயர்லஸ் சேவைக்கான உரிமத்தை லைக்கா பெற்றுக்கொண்டதாக அந்த இணையம் குறிப்பிடுகிறது. அதனைத் தொடர்ந்து லைக்கா குழுமத்தால் நடத்தப்படும் லைக்கா பிளை என்ற விமான முகவர் நிலையத்தை சிறீலங்கன் ஏர்லைன்ஸ் தமது பிரதான பங்குதார்களாக அறிவித்தது. ராஜபக்சவின் மைத்துனரே சிறீலங்கன் ஏர்லைன்சின் தலைவர் என்பதையும் இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

போருக்குப் பின்னான காலத்தில் பிரபல வியாபாரமாக மாறிய உல்லாசப் பயணத்துறை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட லைக்கா குழுமம் இலங்கையில் உல்லாசப் விடுமுறையக் களிப்பதற்கான முகவர் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளது.

லைக்கா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களை கோப்ரட் வாச் தொடர்புகொண்டு தகவல்களை உறுதிப்படுத்துமாறு கேட்டபோது அவர்கள் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கோப்ரட்வாச் இணையம் வெளியிட்டுள்ள செய்தி ‘தேசியம்’ எவ்வாறு சுரண்டுவதற்கான கருவியாகப் பயன்படுகிறது என்பதை தெளிவாக உணர்த்தும் வகையிலுள்ளது.

அதிகாரத்திலிருப்பவர்கள் ஒருதடவை மூச்சுவிட்டாலே நுறுதடவை பெருமூச்சுவிடும் தமிழ் ‘தேசிய’ ஊடகங்கள் லைக்கா மொபைல் குறித்த செய்தியை இருட்டடிப்புச் செய்துள்ளன. பல இணையங்களில் லைக்காவின் விளம்பரங்கள் தொங்குவதைக் காணலாம்.

பிரபல பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மாணவர் ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு முன்னர் புலி ஆதரவு அமைப்புக்களாகச் செயற்பட்ட இந்த அமைபுக்களுக்கு லைக்கா குழுமம் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் பவுண்ஸ் வரையிலான பணத்தை வழங்குகின்றன. சில பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்களின் இணையங்களில் லைக்கவிற்கான இலவச விளம்பாங்களைக் காணலாம். http://www.su.nottingham.ac.uk/societies/society/tamil/

இது தவிர, பிரிடிஷ் ஏஷியன் ரஸ்ட் என்ற தன்னார்வ நிறுவனத்தின் முக்கிய நிதி வழங்குனர்கள் லைக்கா குழுமம். அதன் தலைவராக்விருப்பவர் இளவரசர் சார்ள்ஸ். பிரித்தானியாவில் வசிக்கும் ஆசியப் பணக்காரர்களால் தோற்றுவிக்கபட்ட பிரிட்டிஷ் ஏஷியன் ரஸ்ட் இந்த வருடம் பெப்ருவரி மாதம் 13 ஆம் திகதியன்று ஆசியப் பணக்காரர்களின் ஒன்று கூடல் ஒன்றை லண்டனில் பெருத்த செலவுடன் நடத்தியது. இந்த விருந்தியில் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அலிராஜா கலந்துகொண்டார். சுபாஸ்கரன் இளவரசர் சார்ள்சுடன் உரையாடும் புகைப்படத்தோடு தமிழ் தன்னார்வ நிறுவனமான ‘தமிழர் தகவல் மையம்’ பதிவு ஒன்றை வெளியிட்டது.

ராஜபக்ச குடும்பத்துடனான லைக்காவின் உறவு, பிரித்தானிய அரசின் உயர்மட்ட ஆதரவு, தமிழ் அமைப்புக்களுடனான தொடர்பு ஆகியன பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

கடந்த காலத்தில் அரசியல் வழிமுறைகள் குறித்த விவாதங்களுக்கு அப்பால் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான உறுதியான ஆதரவும் அதிகாரத்திற்கு எதிரான உணர்வும் காணப்பட்டது. இவற்றைப் பிழைப்புவாதிகள் தமது வியாபார நலன்களுக்காகப் பயன்படுத்திவந்தனர். தமிழ்ச் சமூகத்தைப் போதிய அளவு சுரண்டிக்கொண்ட பிழைப்புவாதத் தலைமையின் ஒருபகுதி தப்பியோடிவிட மறுபகுதி மக்களிலிருந்து அன்னியப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்படும் தலைமைக்கான வெற்றிடத்தின் ஒருபகுதியைத் தன்னார்வ நிறுவனங்களும் மறுபகுதியை இலங்கைஅரசு சார்பால லைக்கா குழுமமும் நிரப்புகிறதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

புலம் பெயர் தமிழ்ப் பிழைப்புவாதிகள் லைக்கா குறித்து மௌனம் சாதிப்பது அதனுடனான அவர்களின் உறவை வெளிப்படுத்துவது போன்றது. உண்மைகளை மறைத்து தமது ஆதரவாளர்களுடன் தெருவிலிறங்கிக் கூச்சலிடுவதை மக்கள் போராட்டம் என்று கூறுவது கேலிக்குரியது.

நன்றி : http://www.corporatewatch.org/?lid=5128

மேலதிக வாசிப்பிற்கு :

http://www.ticonline.org/newsdetails.php?id=9

http://www.britishasiantrust.org/

http://www.thesundayleader.lk/2009/11/29/slt%E2%80%99s-wimax-cross-connection/

http://www.lycaflyholidays.com/destinations/indian_sub_continent/srilanka.html

http://sri-lanka.theglobalmail.org/brothers-grip

http://searchthemoney.com/profile/657/2970

http://inioru.com/?p=37890

இந்த புறக்கணிப்பு தேவையற்ற வேலை என்பது எனது தாழ்மையான கருத்து அரஜுன். கடந்த காலங்களில் இவ்வகையான புறக்கணிப்பு வெற்றி பெறவில்லை. ஆகவே இவ்வாறான வினைத்திறன் அற்ற விடயங்களில் நேரத்தை செலவழிப்பது வீண் என்று நினைக்கிறேன். லைக்கா குழுமம் தமிழர் நிறுவனம் என்பதால் மாகாண சபைக்கு அவர்கள் மூலம் உதவிகளை பெறக்கூடியதாக இருந்தால் பெற்று அபிவிருத்திகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். ஶ்ரீலங்கா அரசில் தங்கி இருக்கும் நிலையை குறைக்கலாம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது திறமையை பயன்படுத்தி இதனை செய்யலாம் என்று நினைக்கிறேன். இதற்கான சாத்தியப்பாட்டில் சந்தேகம் இருந்தாலும் முயற்சி செய்யலாம். ஶ்ரீலங்கா சட்டங்கள் இதற்கு இடம் கொடுக்காவிடின் இம்முயற்சிகள் மூலம் சரவதேச அழுத்தங்களை ஶ்ரீலங்கா அரசு நோக்கி திருப்பி சட்ட மாற்றங்களை கொண்டு என்று நினைக்கிறேன. எனது இக் கருத்து தவறாக கூட இருக்கலாம். மனதில் பட்டதை எழுதினேன் அவ்வளவுதான்.

எங்களால ஜஸ்ட் ஒரு நெக்டோவையே புறக்கணிக்க முடியல...அதுக்கிடையில ஐங்கரனையும் லைக்காவையும் எப்படி புறக்கணிக்கிறதாம்...? அதுகும் பொங்கலுக்கு தல அஜித்தினதும், தளபதி விஜயினதும் படங்கள் எல்லாம் வரப் போகுது... :)

உல்லாசம் போவது சிறிலங்கா, வேண்டுவது இரட்டைக் குடியுரிமை, வாங்குவது இலங்கைப் பொருட்கள், ஏறுவது சிறிலங்கன் எயார், பிஸ்னஸ் செய்வது கோத்தாவுடன்...ஆனால் கோருவது மட்டும் தமிழீழம்! ..ஆங்

  • கருத்துக்கள உறவுகள்

என்னும் எத்தனை பேர் திரை மறைவில கை கோர்த்து நிற்க்கின்மோ யாருக்கு தெரியும்.  :(  

  • கருத்துக்கள உறவுகள்

இதில ஆச்சரியம் இல்லை. இவர்கள் எத்தினை நாளைக்குத்தான் வெள்ளைக்காரனை ஏய்க்க முடியும். ஒரு கட்டத்தில்.. உழைச்சதை கொண்டு போய் வைக்க ஒரு இடம் தேவைப்படும். அதுக்கு ஊழலும்.. பதுக்கலும்.. தனிப்பட்ட செல்வாக்குகளும்.. அரசியல் செல்வாக்குகளும்..  பணத்தில்.. வைப்பில்.. முதலீட்டில் செல்வாக்குச் செய்யத்தக்க.... சிறீலங்கா போன்ற இடங்களுக்குச் சென்று தான் இவர்கள் தஞ்சம் அடைய வேண்டும். அதையே தான் செய்கிறார்கள். அதற்கு இவ்வளவு காலமும்.. தமிழ் தேசியமும்.. தமிழீழக் கோரிக்கையும்.. புலிகளும் தடையாக இருந்தன. இன்று அவை இல்லை. ஆகவே.. இவர்கள் மட்டுமல்ல.. எம் தமிழர்கள் பலரும் இதையே செய்யப் போகிறார்கள். தமிழர்களில் அநேகர் உண்மையில்.. அரசியல் அகதிகள் கிடையாது. பொருளாதார அகதிகள் என்பது யதார்த்தம்..! அவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை..! போராட்டம் என்பது இவர்களின் பிழைப்புக்கு.. மேற்குலக வதிவிடத்துக்கான ஒரு திறவுகோல். அதனை அவர்கள் கச்சிதமாகப் பாவித்துவிட்டார்கள். எனி அவர்களுக்கு சிங்கள எஜமானர்களுக்கு முன்னாடி.. எவன் போய் முன்னுக்கு நிற்கிறது என்பதில் தான் போட்டி இருக்கும். அதன் ஆரம்பமே இது. :icon_idea:

Edited by nedukkalapoovan

தமிழர் வீரத்திலே புலி...வியாபாரத்தில் சிங்கன்கள் :lol:

உண்மை... 

ஆனால்.. 83இற்கு முன்னர் புறக்கோட்டை குறுக்குத் தெரு வியாபாரிகள் வறுகாததையா இவர்கள் வறுகப்போகிறார்கள்.. குடுக்காததையா குடுக்கப் போகிறார்கள்... எல்லாம் பசை உள்ளமட்டும்தான் சிங்கள ஏகாதிபத்தியத்தின் அளவளாவல்..!!  :D

ஆனால் ஒன்று.. ஈழத்து அகதிகளில் அரசியல் அகதிகளூக்கும் பொருளாதார அகதிகளுக்கும் என்ன வித்தியாசம்? பொருளாதார ரீதியான அகதிகள் என தங்களால் குறிப்பிடப்படுபவர்கள் ஈழத்தில் தொடர்ந்து வாழ்ந்திருந்தால், அவர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்களா.. அப்போது அவர்கள் எவ்வகையான அகதிகள்?!

மேலும், படித்தலின் பொருட்டு மேற்குலகிற்கு இடம்பெயர்ந்தவர்கள் அகதிகள் இல்லையா... அப்படியாயின் அவர்களுக்கு சிங்கள ஏகாதிபத்தியத்தால் பாதிப்பு இல்லையா.. ஆக அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அகதிகள் இல்லை.. ஆகவே படித்த தமிழர்களுக்கு தங்களின் கருத்துப்படி சிங்கள ஏகாதிபத்தியத்தால் பாதிப்பு இல்லாததால்... இந்த படித்தவர்கள்தான் லைக்கா ஐங்கரன் போன்று மறைமுகமாக சிங்கள ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்திருக்கிறார்கள் என்ற முடிபுக்கு ஏன் வரக்கூடாது?!!  :o  :D

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால ஜஸ்ட் ஒரு நெக்டோவையே புறக்கணிக்க முடியல...அதுக்கிடையில ஐங்கரனையும் லைக்காவையும் எப்படி புறக்கணிக்கிறதாம்...? அதுகும் பொங்கலுக்கு தல அஜித்தினதும், தளபதி விஜயினதும் படங்கள் எல்லாம் வரப் போகுது... :)

உல்லாசம் போவது சிறிலங்கா, வேண்டுவது இரட்டைக் குடியுரிமை, வாங்குவது இலங்கைப் பொருட்கள், ஏறுவது சிறிலங்கன் எயார், பிஸ்னஸ் செய்வது கோத்தாவுடன்...ஆனால் கோருவது மட்டும் தமிழீழம்! ..ஆங்

இந்த கேட்டுக்குள் புலிகள் தமிழ் ஈழம் பெறவில்லை என்று குறை வேற.
அதை கூட பொறுக்கலாம்.
 
புலிகளுக்கு சர்வதேச அரசியல் தெரியவில்லையாம் அதுதான் தோற்றுபோனார்கள்.
என்று ஒரு கூட்டம் கிளம்பி இருக்கு அதைதான் பொறுக்க  முடியவில்லை.
 
இந்த கேடு கேட்ட தமிழனை வைத்து கொண்டு 30 வருடம் எப்படி போராடினார்கள்? என்று ஆறு அறிவுள்ளவர்கள் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.
  • தொடங்கியவர்

30 வருடங்கள் போராடினார்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
மன்னிக்கவேணும் அவசரத்தில் தவறுதலாக எழுதிவிட்டேன்.
30 வருடம் சின்னத்திரை நாடகம் பார்த்து கொண்டிருந்தார்கள்.
 
(காது மட்டும்தான் பிரச்சனை என்று நினைத்திருந்தேன் ...........)

Edited by Maruthankerny

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.