Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்லடியில் நடிகர் அஜித்துக்கு பால் ஊற்றிய ரசிகர்கள்

Featured Replies

தாங்கள் இன்னமும் சினிமா என்ற மோகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் என்பதையும் மட்டக்களப்பில் உள்ள சில மாக்கள் இன்று நீரூபித்து காட்டினர்.

இன்று 10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சாந்தி திரையரங்கில் சி மாக்கள் அவருடைய கட் அவுட்டிற்கு பால் அபிசேகம் செய்து தேங்காய் உடைத்து மலர்தூவி பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.ajith-600x449.jpg ajith1-600x449.jpg

 

 

ஊரில சனம் திரிந்திவிட்டது போல கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

புல்லரிக்க வைத்துவிட்டார்கள்.. :D தமிழ்நாட்டில்கூட இவ்வளவு கூச்சல் கிடைக்குமா என்பது சந்தேகமே.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இந்தியாவை  பின் பற்றுகின்றோம் என்பதை வேறு எப்படி நம்பவைப்பது............?

அரசியல்வாதிகளுக்கு நல்ல சாட்சி

எடுத்துச்செல்லுங்கள் இந்தியாவின் கண்களுக்கு............. :(

  • கருத்துக்கள உறவுகள்

ajith-600x449.jpg

 

கல்லடியில், ஒரு தொப்பி போட்ட முஸ்லிம்களும் இல்லைப் போலுள்ளது.
எல்லாம்... தமிழ் தலைகளாக தெரிகின்றது.

எனது உச்சியில்... பால் வார்த்த மாதிரி இருக்கு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண பொடியல் இதைவிட திறமா செய்வாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கல்லடியில் நடிகர் அஜித்துக்கு பால் ஊற்றிய ரசிகர்கள் அசித்து செத்துட்டார யாருப்பா செய்தி மூலம் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்காய் உழைச்சுச் சாப்பிடுறவன் இந்த வேலை பார்க்கமாட்டான் தண்டச்சோறுகள்தான் இந்த வேலை பார்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

Rajamoulis%2Bbahubali%2Btamanna%2Bbhatia

 

தமன்னாவுக்குப் பால் ஊத்தாமல் அஜித்துக்கு பால் ஊத்திய ரசிகர்களும் ஒரு ரசிகர்களா? 

நினைக்க நினைக்கக் கடுப்பாகிது  :wub:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
அவா எப்போதும் பாலில் நனைந்து கொண்டேதானே இருக்கிறா?
(இவளவு வெள்ளையா இருக்கா?)
அந்த பெடியன் சும்மா காயுது என்று ஒரு நல்ல எண்ணமாக இருக்கும்.
 
அவங்க ஊத்தாவிட்டால் என்ன ?
கேட்டால் தமிழ் சிறி அண்ணா  போட்டவை இணைத்துவிடுவார். நீங்கள் ஒரு ஊற்று ஊற்றிவிடுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

ம்........ பால் விநியோகம் கொடிகட்டி பறக்குது போல இருக்கு

Edited by கறுப்பி

தியேட்டர்காரன்களே ஒரு விளம்பரத்துக்காக இப்படிப்பட்டவர்களை ஊக்குவிப்பார்கள், இவர்களெல்லாம் எடுப்பார் கைபிள்ளைகள், மகிந்தவுக்கு ஊத்தென்றாலும் பாலும் ஊற்றுவார்கள் காலையும் கழுவுவார்கள்

தியேட்டர்காரன்களே ஒரு விளம்பரத்துக்காக இப்படிப்பட்டவர்களை ஊக்குவிப்பார்கள், இவர்களெல்லாம் எடுப்பார் கைபிள்ளைகள், மகிந்தவுக்கு ஊத்தென்றாலும் பாலும் ஊற்றுவார்கள் காலையும் கழுவுவார்கள்

கமல் தன் மீதே வழக்கு போட்டு இலவச விளம்பரம் தேடுவது போல்.

இதுதான் மட்டக்களப்பின் வறுமை!

 

 

 

 

 

 

 

உலகில் பலர் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மட்டக்களப்பு மண்ணின் தமிழ் குடிகள் குடிசைகளுக்கே வழியின்றி தவிக்கும் அவலநிலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

 

இதைத்தான் நாங்கள் மட்டக்களப்பின் வறுமை என்று அடையாளப்படுத்த முடியும் இலங்கையில் குறிப்பாக வடகிழக்கு மண்ணில் இவ்வாறானதொரு வாழ்க்கையை நடாத்தும் ஒரே ஒரு இனம் என்றால் அது தமிழ் இனமாகத்தான் இருக்கமுடியும்.

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் இருக்கும் கித்துள்வேவ பகுதியில் உள்ள குளிர்ந்தசோலை என்னும் இடத்தில் வசிக்கும் இவர்கள் மட்டக்களப்பின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.

காலத்திற்கு காலம் தங்களது வசிப்பிடங்களை மாற்றிக்கொண்டு வாழும் இக்குடும்பங்களின் வாழ்வாதாரம் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கின்றது.

இளவயது திருமணம், பாடசாலை செல்லாத மாணவர்கள், பாதுகாப்பற்ற வசிப்பிடம் பதிவு, செய்யப்படாத குழந்தைப் பிறப்புகள் என ஒரு சமூகத்திற்கு தேவையான அனைத்து உரிமைகளையும் இழந்து ஒதுக்கப்பட்ட மக்களைப்போல் வாழ்ந்துவரும் இவர்கள் தேன் எடுத்தல், வேட்டையாடுதல் கூலி போன்ற தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஐந்து குடும்பங்களிலும் உள்ள சுமார் 06இற்கு மேற்பட்ட குழந்தைகள் பாடசாலை செல்லாமல் உள்ளதுடன் இந்த குழந்தைகள் வாழும் வசிப்பிடம் பாதுகாப்பற்றதாகவும் உள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் திருப்பம் வரவேண்டும் என்றால் இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்குமான அடிப்படை உரிமைகள் பற்றிய வழிகாட்டளையும் மேற்கொண்டால் இவர்களும் ஏனைய குடும்பங்களைப் போல் இயல்பான வாழ்க்கை நடாத்த கூடியதாக இருக்கும்.

இது தான் இன்றுள்ள மட்டக்களப்பின் வறுமை இந்த நிலை தொடருமாக இருந்தால் மட்டக்களப்பு மண் தொடர்ந்தும் வறுமையில் முதலிடத்தில் தான் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

மட்டக்களப்பின் வறுமை பற்றி பேசும் தலைவர்களும் சமூகவியலாளர்களும் அரசியல் வாதிகளும் தங்களது உதவிகளை இங்கிருந்து ஆரம்பிப்பார்கள் என்றால் மட்டக்களப்பை எதிர்காலத்திலாவது மீட்டெடுக்க முடியும்.

h1.jpg

h2.jpg

h3.jpg

h4.jpg

h5.jpg

h6.jpg

h7.jpg

h8.jpg

h9.jpg

h10.jpg

h11.jpg

h12.jpg

 

 

 

http://www.battinews.com/2014/01/blog-post_13.html#_

 

 

நெஞ்சு பதறுகிறது.

நவீன அறிவியல் உலகத்தில் விவசாயி தான் முட்டாள், ஏழை!

மனித உடலின் மெக்கானிக்கிற்கு டாக்டர் பட்டம்,

அறையில் பெட்டிகளுக்குள் இருந்து வேலை செய்ய படிப்பிப்பவருக்கு புரபசர் பட்டம்,

20% வாக்கு வாங்கி வந்த அரசியல் வாதிக்கு அமைச்சர் பட்டம்.

காசுக்கு குற்றவாளியை நல்லவர் ஆக்குபவருக்கு வக்கீல் பட்டம்.

ஆனால் எம்மை உருவாக்கிய பூமி தாய்க்கு பட்டம் கொடுக்க ஒருத்தரும் இல்லை.

அவளின் 70% குழந்தைகளுக்கு உணவு தரும் விவசாயிக்கு பெசண்ட் (peasant ) தான் பட்டம்.

எனக்கு பச்சையம்மா இந்த ஏழை விவசாயிகளை தூக்கி நிறுத்தாவிட்டால் என்ன நடக்கும் என்று காட்டினாள். Trust me it's not pretty!

நேரம் வந்துவிட்டது.

இந்த விவசாயிகளுக்கு உதவ நான் தயார்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்க  பாருங்கள் எல்லாரும் 30 க்கு உட்பட்ட பொடியள் .  அந்த வயசு அப்படித்தான் , 40 வர உதெல்லாம் முட்டாள்தனமாய்த் தெரியும் அவங்களுக்கு, இப்ப எங்களுக்குத் தோன்றுகிற மாதிரி...! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில பால் சரியான விலை போல இருக்கு ஒண்டு ரெண்டு போத்திலோட நிப்பாட்டிடாங்கள் உது செல்லாது செல்லாது.

யாழில் விஜயின் – ஜில்லாவும் அஜித்தின் – வீரமும்! தடம் புரளும் இளைஞர் பட்டாளம்

 

இன்று உலகில் வாழுகின்ற மக்களின் பிரதான பொழுது போக்கு ஊடகமாக சினிமா மாறிவிட்டது. இந்த சினிமா சின்னத்திரை என்றும் வெள்ளித்திரை என்றும் பரினமித்துச் சென்றாலும் இந்த தாக்கம் இன்றும் மக்கள் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

மாலை ஆறுமணி ஆகிவிட்டால் “ சின்னமருமகள் தொடக்கம் சொல்லதெல்லாம் உண்மை வரை பெண்களும், தலையா தளபதியா என்று சந்திகளில் இன்று திரைச் சங்கதிகள் பேசும் நிலைதான்.

ஆரம்ப காலத்தில் இந்தியாவில் இந்த இரண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் தற்போது இதன் தாக்கம் இலங்கையிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் காணக்கூடியதாக இருக்கிறது.

“ தேத்தண்ணியைப் போடப்பா” என்று உரத்த குரலில் பேசிக்கொண்டு வேலையால் வருகின்ற கணவனிடம் “ சின்ன மருமகள் முடியட்டும் பொறுங்கோ” என்று சொல்லும் சீரியல் மோகம் இன்று யாழப்பாணப் பெண்களிடம் தலைக்கேறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறான நிலமைகள் குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதிப்பதாக அமைகின்றது. அண்மையில் யாழில் உள்ள எனது நண்பனின் வீட்டுக்குச் சென்ற போது சின்னப்பிள்ளைகளால் கலகலக்கும் அந்த வீடு அமைதியாக இருப்பது என்னால் உணர முடிந்தது இதன் காரணத்தை ஆராய்ந்த போது சீரியல் தொடங்கிவிட்டால் பிள்ளைகள் அனைவரையும் வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு படிக்குமாறு வீட்டில் உள்ளவர்கள் சீரியல் பார்ப்பதை அவதானிக்க கூடியவாறு இருந்து.

இதில் ஒரு தவறைப் பெற்றோர்கள் செய்கிறார்கள் ஒரு தடையைப் போடும் போது அதனைப் பார்க்க வேண்டும் என்ற என்ன மனதில் தோன்றும் அதேபோன்றே வீட்டுக்குள் பூட்டிவிட்டு படிக்கும் பிள்ளைகளின் மனநிலை முழுதும் இந்த சீரியலில் தான் இருக்கும் இதனால் பிள்ளையின் கல்வி முற்றுமுழுதாக பாதிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

சரி இனி விடயத்திற்கு வருவோம்

யாழில் அண்மைக்காலமாக சினிமா நடிகர்களுக்காக மன்றம் அமைத்து கொடி கட்டி கோசம் போடும் புதிய கலாச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தென்னிந்தியாவைப்போன்ற நிலை இங்கு உருவாகிவருவது எம் இளைஞர்களின் வரமா அல்லது சாபமா என்று எண்ணத்தோன்றுகின்றது. தென்னிந்தியாவில் நடிகர்களுக்கு நற்பணி மன்றம் வைப்பது, கொடிபிடிப்பது, பால் ஊற்றுவது, கோயில் கட்டுவது என்று தொடங்கி ஏன் அண்மையில் தீக்குழிப்பது வரை அரங்கேறியிருப்பது இது எல்லாம் தென்னிந்தியாவில் ஏதோ ஒரு அரசியல் நோக்கித்திற்காக மேற்கொள்ளப்படுபவவை ஆனால் இங்கு அதுவும் யாழில் இவ்வாறான செயற்பாடுகள் ஏன் எதற்காக இதனால் எமக்கு என்ன நன்மை என்று நாங்கள் ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யாழில் தற்போது விஜய் நடித்த ஜில்லாவும் அஜித் நடித்த வீரமும் தியைரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களையும் பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர் கூட்டம் களை கட்டிக்கொண்டிருக்கிறது படம் தொடங்க சிறிய நேரம் ஆகிவிட்டாலோ அல்லது மின்சாரத்தடை ஏற்பட்டாலோ திரையரங்கு ரசிகர்களில் கூச்சல் கும்மாளத்தால் அதிரத்தொடங்கும் திரைப்படம் பார்ப்பதற்கு வந்திருக்கும் பெண்கள் அனைவரும் காதுகளை பொத்தக் கூடிய வாறு வார்த்தைப் பிரயோகங்கள் அலைவீசும் இந்த நேரத்தில் இவர்கள் ரசிகர்களா? வெறியர்களா? என்ற எண்ணம் தோண்றும்.

இம்முறை யாழில் ஒரு வித்தியாசமான ஒரு அணுகுமுறையை திரைப்பட ரசிகர்கள் மத்தியில் காணக் கூடியாதாக இருந்து தங்கள் சொந்தச் செலவில் திரையரங்குகளில் பெனர்கள் அடித்து அதில் தங்கள் படங்கையும் இனைத்து ரசிகர்கள் மன்றம் என்று போட்டுள்ளதுடன் இதில் பஞ்சு டயலக் வேறு.

திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு ஊடகம் என்பதை நான் ஆரம்பித்தில் சொல்லியிருக்கின்றேன் இந்த ஊடகம் என்மை வழிகாட்டுவதாக அமைய வேண்டுமே தவிர எம்மை வழிதவறிச் செல்ல வழி நடத்துவதாக அமைந்து விடக்கூடாது. துங்கள் பிழைப்புக்காக நடிப்பவர்களுக்காக நாங்கள் திரையரங்கில் எழுந்து நின்று தலைவா, ஜீ, தல, என்றெல்லாம் கூச்சலிடும் நாங்கள் ஏன் இதனைச் செய்கின்றோம் என்று என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா? ஆண்மையில் யாழில் கைது செய்யப்பட்டுள்ள ஆவா குறுப்பென்ற அணி கூட தென்னிந்தியா சினிமாப் பாணியில் தான் தனது கைங்கரியங்களை யாழில் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றார்கள்.

நடிகர்களுக்காக குரல்கொடுப்பது கோயில் கட்டுவது கொடிபிடிப்பது,பால் ஊற்றுவது என்பதெல்லாம் தென்னிந்தியாவில் சாத்தியப்பாடானது. ஆனால் அது எமக்கும் எங்கள் மண்ணின் பெருமைக்கும் ஏற்றதல்ல என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு நடிகனுடைய ரசிகனாக இருப்பது தப்பில்லை நாங்கள் அந்த நடிகனின் வெறியனாக மாறும் போது தான் வன்முறையாக அது மாறி எங்கள் எதிர்காலத்தை பாழாக்குவதாக அமைகின்றது. அன்பான இளைய சமுதாயமே நாட்டில் நடைபெற்ற 30 வருட யுத்தத்தால் ஏதோ ஒரு வழியில் நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் அது நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகப்பாதிப்பு எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வன்னிமைந்தன்

http://www.jvpnews.com/srilanka/58168.html

Jaffna_Vji.jpgJaffna_Vji1.jpgJaffna_Vji2.jpgJaffna_Vji3.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.