Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிபதாதி விளம்புவீரே !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சலசலத்து ஒடுமிது

இடையிழந்தால் இரவிலிருப்பான் விண்ணிலிருப்பான்

முதல் இழந்து இது நடந்தால் காற்றில் கடலில் போகலாம்

இன்னும் யாரும் விடை தரவில்லை

  • Replies 1.6k
  • Views 132k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பதாதை 

முன்னிழப்பில் தேடினால் அவருடையதன்றி எவருடைய சொல்லும் மந்திரமில்லை -->  தாதை 

நடுவில் தூக்கினால் துடி --> பதை 

சரியான பதில் இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத மாதிரி அல்லது தெரிந்தமாதிரி நடித்தலை இப்படியும் சொல்லலாம்

அழிவது மத்தி அறிக. பாத்திரம் கதையிலா என்று கேட்டால் தோல்வி உங்களுக்கு நிச்சயம்

முன்னதை மறைத்து முயன்று உன்னை அறி உருவாக்கு.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத மாதிரி அல்லது தெரிந்தமாதிரி நடித்தலை இப்படியும் சொல்லலாம்

அழிவது மத்தி அறிக. பாத்திரம் கதையிலா என்று கேட்டால் தோல்வி உங்களுக்கு நிச்சயம்

முன்னதை மறைத்து முயன்று உன்னை அறி உருவாக்கு.

பாவனை :D

(இதுக்கு விடை எழுதக் கூடாது என்றுதான் இருந்தேன். சகாரா அக்காவுடன் கோபம்கொள்ள முடியாமல் இருக்கு! :D :D )

  • கருத்துக்கள உறவுகள்

சலசலத்து ஒடுமிது

இடையிழந்தால் இரவிலிருப்பான் விண்ணிலிருப்பான்

முதல் இழந்து இது நடந்தால் காற்றில் கடலில் போகலாம்

இன்னும் யாரும் விடை தரவில்லை

காவிரி

காரி (சனி)

விரி

இதுவும் எனக்கு சரியாக் கடுப்பாகிது. "இது நடந்தால் காற்றில் கடலில் போகலாம்" என்கிறீர்கள். இதன்" விடை பாய் விரி". இனி இவ்வாறான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படமாட்டாது!

  • கருத்துக்கள உறவுகள்

பாவனை :D

(இதுக்கு விடை எழுதக் கூடாது என்றுதான் இருந்தேன். சகாரா அக்காவுடன் கோபம்கொள்ள முடியாமல் இருக்கு! :D :D )

சரியான பதிலைச் சொல்லி பச்சைக்கிளியைத் தள்ளிச் சென்ற வாலிக்கு வாழ்த்துக்கள்.....

(இதுக்கு விடை எழுதக் கூடாது என்றுதான் இருந்தேன். சகாரா அக்காவுடன் கோபம்கொள்ள முடியாமல் இருக்கு!  :D  :D )

உண்மையா இருக்குமோ அல்லது தம்பிச் செல்லம் பாவனை செய்யிறானோ :unsure: ??????? புரிஞ்சுக்கவே முடியலையே.. :blink:  :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

காவிரி

காரி (சனி)

விரி

இதுவும் எனக்கு சரியாக் கடுப்பாகிது. "இது நடந்தால் காற்றில் கடலில் போகலாம்" என்கிறீர்கள். இதன்" விடை பாய் விரி". இனி இவ்வாறான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படமாட்டாது!

-கெட்டிக்காரன்தான் என்று நிரூபித்துவிட்டீர்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வல்லோன் இங்கிருப்பான்

முன் துறந்து பின்னதன் துணைகொண்டு பெண்ணெடுத்தான்

இடை நழுவி இவன் தளர இதுகொண்டான் இடம்பெயர

  • தொடங்கியவர்

முடிச்சுகளை அவிழ்ப்பதில் வாலியார் வல்லவர்தான்...!!
 
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வல்லோன் இங்கிருப்பான்

முன் துறந்து பின்னதன் துணைகொண்டு பெண்ணெடுத்தான்

இடை நழுவி இவன் தளர இதுகொண்டான் இடம்பெயர

கோவில்

முன் துறக்க 'வில்"

இடை நழுவ 'கோல்' :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்

முன் துறக்க 'வில்"

இடை நழுவ 'கோல்' :lol:

கொஞ்சம் பொறுங்க புங்கையர்

கோயில்

கோவில்

எது சரி.............???

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்க புங்கையர்

கோயில்

கோவில்

எது சரி.............???

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு60
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
பொருளடக்கம்   [மறை

எது மிகச் சரியானது?[தொகு]

கோவில், கோயில் - இவ்விரண்டில் எது மிகச் சரியானது? சில இதழ்கள் “கோவில்” என்றும், சில இதழ்கள் “கோயில்” என்றும் பயன்படுத்துகின்றன. விக்கிப்பீடியாவில் அதிகமாக “கோயில்” என்ற சொல்லே என்பது பயன்படுத்தப்படுகிறது. விவரம் அறிந்தவர்கள் விளக்கமளிக்க வேண்டுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:34, 31 சூலை 2011 (UTC)

  • இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் இரண்டில் கோயில் என்ற சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர், தனது கம்பராமாயணத்தில் இரண்டு சொற்களையுமேப் பயன்படுத்தியுள்ளார்.

எடுத்துக் காட்டாக;-
  1. மிடைந்திட, முனியொடும் வேந்தன் கோயில் புக்கு, (கோயில்- அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது)
  2. அறம் கொள் நாள் மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்பப்
  3. அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார்.
  1. கோவில்; நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான். (மிகக் குறைவாகக் கையாளப்பட்டுள்ளது.)

அதிக மக்கள், கோயில் என்றே பயன்படுத்துகின்றனர். ஆலயம் என்ற மற்றொரு சொல்லையும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கற்றவரை, ஆலயம் என்ற சொல்லைக் கம்பர் கையாளவில்லை. எனது நோக்கில், இங்கு கோயில் என்று பயன்படுத்துவதே சரி.01:35, 1 ஆகத்து 2011 (UTC)♥உழவன்+உரை..

கோவில்-சரியான இலக்கணப் பயன்பாடு; கோயில்-ஏற்கத்தக்க பிழை[தொகு]

கோவிலா, கோயிலா என்னும் கேள்வியைப் பலர் கேட்பது வழக்கம். அதற்கான இலக்கண அடிப்படையிலான பதிலைத் தேடிப் பார்த்தேன். கூகிள் தேடுதலும் நடத்தினேன். அப்போது 2010ஆம் ஆண்டு, திசம்பர் 12ஆம் நாள் வெளியான தினமணிக் கதிரில் அப்பதிலைக் கண்டு மகிழ்ந்தேன். அது நிறைவான விளக்கமாக உள்ளது. சுருங்கக் கூறின், "கோவில்" என்பது சரியான இலக்கணப் பயன்பாடு; ஆனால் "கோயில்" என்னும் சொல்லும் நெடுங்காலம் இலக்கியத்திலும் மக்கள் பயன்பாட்டிலும் வந்துவிட்டதால் அது "ஏற்கத்தக்க பிழை" எனலாம்.

சென்னைப் பேரகர முதலி (Tamil Lexicon, Madras) தரும் தகவல்படி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் "கோவில்", "கோயில்" என்னும் இரு பயன்பாடுகளும் உள்ளன.

ஆயினும், ஊர்ப்பெயர்களில் மக்கள் வழக்கத்தில் "கோவில்" என்று வரும்போது அதை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதே முறை. எடுத்துக்காட்டுகள்: நாகர்கோவில் (நாகர்கோயில் அல்ல); கோவில்பட்டி (கோயில்பட்டி அல்ல).

மொழிப்பயிற்சி - 18: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம் என்னும் தலைப்பிட்ட தினமணிக் கதிர் பதிகை இதோ:கோவிலா? கோயிலா?

இதோ மேற்கோள்:

கோவிலா? கோயிலா? தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் ய், வ் என்றிரண்டு. கோ (க்+ஓ) இல் (இ). கோ என்பதில் ஓ எனும் உயிரும், இல்லில் இ எனும் உயிரும் இணையுமிடத்தில் வ் எனும் மெய்யெழுத்து தோன்றும். ஆதலின் கோ+வ்+இல் = கோவில் என்பதே சரியானது. கோயில் என்னும்போது கோ+ய்+இல் = கோயில் என்று ய் உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால், இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்.கோவில் ஓகாரம் இருப்பதால் வ் உடன்படு மெய்தான் வர வேண்டும். ஆயினும் மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது. இது ஏற்கத்தக்க பிழையே. --பவுல்-Paul 04:02, 1 ஆகத்து 2011 (UTC)

கற்றேன்,விரிவான தங்கள் விளக்கத்திற்கு நன்றி. இது பற்றி எழுதத் துவங்கும் போதே, தங்களை நினைத்தேன். விக்கி விடுமுறையில் நீங்கள் இருப்பதாக நினைத்தேன். வணக்கம்.00:49, 2 ஆகத்து 2011 (UTC)♥உழவன்+உரை..
  • ஆம், தகவலுழவனே, சில மாதங்களாக விக்சனரியில் என் பங்களிப்பு குறைவுதான். மாறாக, விக்கியில் தொடர்ந்து எழுதுகிறேன். "கோவில்" பற்றிய விளக்கத்தை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரிடமிருந்து கற்றதாக நினைவு! வாழ்த்துகள்!--பவுல்-Paul 03:49, 2 ஆகத்து 2011 (UTC)
பொதுவாக இரண்டும் சரி என்றே நினத்திருந்தேன். சரியான வழியில் விளக்கமளித்தமைக்கு நன்றி, பவுல் அவர்களே! --சிவகோசரன் 11:38, 2 ஆகத்து 2011 (UTC) இந்த உரையாடலை பேச்சு:கோயில் பக்கத்தில் தொடரவும்.--Kanags \உரையாடுக 09:00, 15 சனவரி 2014 (UTC)

கோவில், கோயில் இரண்டுமே சரியான சொல்லாக தமிழ் அறிஞர்களால் இந்தியாவில் எடுக்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் புங்கையூரன். சரியான விடை.பச்சை முடிந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் இருக்குமிடம் இருக்கும்

முன்னறுத்து விநாயகரின் கீழிருப்பார் இங்கிருப்பர்

இடையறுக்க இங்கிதமாய் அணிந்திடலாம்

தவளை

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை தமிழினி. நாளை பச்சை போட்டுவிடுகிறேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிப்படை அமாவாசையை இரசித்தவர்களுக்கு இந்தச் சொல் மறக்காது

நடுவை கழற்றி மொழியைத் தேடும் ஆவல் அதிகமா உங்களுக்கு? தேடல் இருந்தால்தானே கண்டுபிடிக்கும்போது மகிழ்வை ஆவல் பொங்க அனுபவிக்கலாம்

குருட்டுப்பூனைக்கு இருட்டு எப்படி இருக்கும்? சொல்ல மறக்கேல்லை கடை அகற்றி பாருங்கோ

அல்வா :D

அவா

அல்  (இரவு)

இந்தத் தொல்லை தாங்க முடியலையே!

அல்வா

நான் பதிலை தேடிக்கொண்டிருந்தேன் திரியை புதுபிச்சு பாக்கல :( வாழ்த்துக்கள் வாலி அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

இடரின்றி இதைக்கொண்டிரு!
முதலின்றி ரகம் பலவிதம்!
இடையின்றிச் செலுத்து! :D

  • கருத்துக்கள உறவுகள்

அல்வா :D

அவா

அல்  (இரவு)

இந்தத் தொல்லை தாங்க முடியலையே!

சரியான  பதில் தத்தையை கூட்டிக் கொண்டுபோங்கள் வாலி....

  • கருத்துக்கள உறவுகள்

சரியான  பதில் தத்தையை கூட்டிக் கொண்டுபோங்கள் வாலி....

எங்கை கூட்டிக்கொண்டு போக? :D

  • தொடங்கியவர்

இடரின்றி இதைக்கொண்டிரு!

முதலின்றி ரகம் பலவிதம்!

இடையின்றிச் செலுத்து! :D

Smiley_Thinking.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அக்காலக் கற்கோட்டை.. :D

இடைநீங்க அவசரம் நீங்கி

கடையிரு கழியும்

முதல் மூழ்க இசை பரவும்.. :huh:

அது என்ன? :D

பி.கு.: இதுக்கு சரி பிழை சொல்லமாட்டேன்.. :lol:

இதுக்கு யாரும் பதில் சொன்னமாதிரி தெரியவில்லையே? :rolleyes:

சின்ன உதவிக்குறிப்பு..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135852&hl=

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.