Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தி எழிலன் – ஒரு பரிசோதனை எலி?

Featured Replies

வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன.
இவர் கூறிய விடயங்கள் செய்திகளாக வெளிவருகின்ற அதேவேளை இவர் கூறாத விடயங்களும் செய்திகள் ஆக்கப்படுகின்றன. மறுபுறம், சிங்களப் பேரினவாதத்தைக் கக்கும் ஊடகங்களோ ‘அனந்தி சிரித்தால் குற்றம், கதைத்தால் குற்றம், நடந்தாலும் குற்றம்” என்ற பாணியில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த வரிசையில் அனந்தி அவர்களின் அண்மைக்காலச் செயற்பாடுகளைக் கருத்தில் எடுத்து, விடுதலைப் புலிகளின் முன்னைநாள் போராளிகளைப் போன்று, அவர் தடுத்து வைக்கப்பட்டுப் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்தன.
அரச சேவையில் 30 வருடங்களாகப் பணியாற்றி தேர்தலில் போட்டியிடுவதற்காக சேவையில் இருந்து கடந்த வருடம் விடுப்புப் பெற்ற அனந்தி ஒருபோதும் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராகவோ அல்லது தொண்டராகவோ இருந்ததாக எந்தவொரு பதிவும் இல்லாத நிலையில் அரச படையினரிடம் கையளிக்கப்பட்டு காணமாற் போன தனது கணவர் எழிலனையும் அவரைப் போன்ற வேறு ஆயிரக்கணக்கான தமிழர்களையும் கண்டறிவதில் மேற்கொள்ளும் முயற்சிகளே பேரினவாதிகள் இத்துணை தூரம் அவர் மீது எரிச்சல் கொள்ளக் காரணமாக அமைந்துள்ளது என்பது ஊகிக்கக் கூடியதே.
தோற்றுப்போன தமிழன் வாய்மூடி மௌனியாக, தருவதைப் பெற்றுக் கொண்டு இருக்க வேண்டும் என நினைக்கும் சிங்களப் பேரினவாதத்தின் செருக்கிற்கு அனந்தி அவர்களின் செயற்பாடுகள் சவால் விடுவதாக அமைந்து வருகின்றன. கணவனைத் தொலைத்து விட்டுத் தேடிக் கொண்டிருக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான அவர் ‘அனைத்தையும் மறந்துவிட்டு அடுப்படியில் முடங்கிக் கிடக்க வேண்டும்” என்றே சிங்களம் விரும்புகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாத நடுப்பகுதியில் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்ற வேளையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரித்தானிய தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் அவர்களைச் சந்தித்து அறிக்கை தருவதற்கு, பல்வேறு தடைகளையும் மீறி, அனந்தி சென்ற விதம் காணொளிகளில் பதிவாகி வெளிவந்த போது சிங்களம் அவமானத்தில் நெளிந்தது.
தொடர்ந்து வந்த ஒருசில நாட்களில் யேர்மனிக்குச் சென்ற அவர் சிறிலங்காவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முன்னர் தோன்றி சாட்சியமளித்தார். போரின் இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், சர்வதேச போர்விதிகளுக்கு மாறாக பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள், இன அழிப்பு நடவடிக்கைகள் என்பவற்றில் அரச படைகளுக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்தும் வகையிலான இந்த பன்னாட்டு மன்றத்தில் அனந்தி நேரில் தோன்றி சாட்சியம் அளித்தமை சிங்களப் பேரினவாதிகளை மேலும் சீற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.
மாகாணசபை உறுப்பினராகப் பதவியேற்றதும் முதன்முதலாக அனந்தி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தில், சிறிலங்காவிற்கு எதிராக பன்னாட்டு விசாரணைகளைக் கோரி ஐ.நா. மனித உரிமைச்சபையில் தீர்மானம் நிறைவேற்றும் முனைப்பில் உள்ள, அமெரிக்காவிற்குச் சென்றதும், வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்ததும் கூட சிங்களப் பேரினவாதிகளுக்கு உவப்பானதாக இருக்கவில்லை.
அனந்தியை அச்சுறுத்திப் பணிய வைப்பதற்கு தேர்தல்கள் நடைபெற்ற காலப்பகுதியிலேயே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தனது ஆதரவாளர்களின் உதவியோடும், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுகளின் உதவியோடும் அவர் அவற்றிலிருந்து தப்பித்துக் கொண்டார்.
தமிழ் மக்கள் மத்தியில் இருந்து ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதற்குப் பெண்கள் அதிகமாக முன்வராத ஒரு சூழ்நிலையில் அதற்கு முன்வந்த அனந்தியின் துணிவு பாராட்டத்தக்கது. ஓர்மத்துடன் கூடிய அவருடைய அரசியல் பணி தொடர வேண்டும். ஈழத்திலே பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக அவர் விளங்க வேண்டும் என்பது எம் போன்றோரின் விருப்பம்.
ஆனால், அவரின் ஒருசில நடவடிக்கைகள் அவரை வேறு யாராவது பின்னணியில் இருந்து தவறாக வழிநடத்துகின்றார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கமாக உள்ள இலங்கைத் தமிழசுக் கட்சியின் சார்பிலேயே அவர் தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்தார். அந்நிலையில், அந்தக் கட்சிகளின் கொள்கைகளுக்கு அமைவாகவே அவர் நடந்து கொள்வதுடன், அந்தக் கட்சிகளின் கொள்கைகளுக்கு முரணாகவோ, கட்சிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் முகமாகவோ நடந்து கொள்வதை அவர் தவிர்த்துக் கொள்ளவும் வேண்டுரம்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அவர். அனந்தி ஒர் பெண் என்பதற்காகவோ, விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட முன்னைநாள் அரசியல்துறைப் பொறுப்பளரின் மனைவி என்பதற்காகவோ மாத்திரமன்றி, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் என்பதற்காகவுமே அளிக்கப்பட்ட வாக்குகள் அவை. இதனை வேறு விதத்தில் சொல்வதானால், அனந்தி சுயேட்சையாகவோ அன்றி வேறு கட்சி சார்பிலோ போட்டியிட்டிருந்தால் இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்க முடியாது என்பதே யதார்த்தம்.
எனவே, அவ்வாறு வெற்றி பெற்ற அவர் தனது மக்கள் பணிக்குச் சமாந்தரமாக கட்சியில் ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் அவர் பெற்ற 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் என்பது ஒரு பொதுத்தேர்தலைப் பொறுத்தவரை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாவதற்குத் தேவைக்கும் அதிகமானது ஆகும்.
ஒரு மாகாணசபை உறுப்பினர் என்பதைத் தவிரவும், அவர் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவரின் மனைவி, யுத்தத்தை பிறர் வாயிலாக அறிந்து கொள்ளாமல் நேரடியாகத் தரிசித்தவர்களுள் ஒருவர், யுத்தத்தின் முடிவில் தனது கணவரைப் படையினரின் கைகளில் ஒப்படைத்து விட்டு நான்கு வருடங்களாக அவர் எங்காவது ஒரு இடத்தில் உயிரோடு இருக்க மாட்டாரா எனத் தினமும் தேடிக் கொண்டிருக்கும் ஒருவர், இதற்கெல்லாம் அப்பால் ஈழத் தமிழ்ப் பெண்களின் ஒற்றைக் குரலாகவும் அவரே விளங்கி வருகின்றார்.
எனவே, அவர் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அவரது சேவை தமிழ் மக்களுக்கு நீண்டகாலத்திற்குத் தேவை என்ற உணர்வுடன் அவரின் செயற்பாடுகள் அனைத்தும் இருக்க வேண்டும். பொம்மலாட்டத்தில் மறைவில் இருந்து இயக்கப்படுவதைப் போன்று அவரின் செயற்பாடுகள் தென்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

வரலாறு அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அந்த வாய்ப்பை அவர் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி அவற்றுக்குப் பதிலிறுப்பதில் தனது பொன்னான நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிராமல், தேர்தல் காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். அதேவேளை, வெளியில் இருந்து தனது சென்னெறியைத் தீர்மானிக்க நினைப்பவர்களை விலத்தி வைக்க வேண்டியதும் அவர் பொறுப்பே.

- சண் தவராஜா
- See more at: http://www.canadamirror.com

Edited by Gari

தலைப்பிற்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.

எப்படி அனந்தி பரிசோதனை எலியானார்?

யாருடைய பரிசோதனை கூடம்? யாரந்த விஞ்ஞானி ? இந்த பரிசோதனையின் நோக்கம் என்ன?

கட்டுரையில் சான்ட்விச் மெதட் பாவிக்கப்பட்டிருக்கிறது. கனடிய முகாமையாளர்கள் தமது வேலையாட்களை குறை கூறி அடக்கி வழி நடத்த முதலில் நல்ல வேலை ஒன்றை சுட்டி காட்டி பின் குறை கூறி கடைசியில் நல்லா புகழ்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா அக்காவின் கதையும் இப்ப இப்படித்தான் போகுது போலை...

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம்.. அவதானித்த ஒன்று.. குழப்பி அடிக்கிறது. வைத்தியசாலைக்கு வருவினம்.. காய்ச்சலுக்கு அப்பெயிண்ட்மெண்ட் வைச்சு. வந்த பிறகு.. டாக்டர்.. எனக்கு அதுக்க குத்துது.. இதுக்க குத்துது.. என்று தொடங்கி.. 20 வருசத்துக்கு முதல் விழுந்தனான் டாக்டர் என்று.. ஒரு வரலாறே சொல்ல வெளிக்கிட்டிடுங்கள்.

 

எம்மவர்கள்.. சின்னப் பிரச்சனையை.. இடியப்பச் சிக்கலாக்கி காட்டுவதில் வல்லவர்கள்.

 

அனந்தி அக்கா.. ராதிகா அக்கா.. எல்லாம்.. இன்று அந்த வலைக்குள் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால்.. அங்க ஒன்றுமில்ல. எல்லாம் நேராத்தான் போய்க்கிட்டு இருக்குது. இடையில.. அரசியல் செய்ய வெளிக்கிடுறவை தான்.. உந்த இடியப்பச்சிக்கல்களுக்குப் பின்னால் இருக்கினம். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
ஆனந்தி அவர்களை யார் திரை மறைவில் இருந்து இயக்குகிறார்கள் என சண் தவராஜா சொல்லுவாரா?
 
இவரே  வதந்தியை கிளப்பி விடுகிறார்  போல உள்ளது.

தமிழர்களிடம்.. அவதானித்த ஒன்று.. குழப்பி அடிக்கிறது. வைத்தியசாலைக்கு வருவினம்.. காய்ச்சலுக்கு அப்பெயிண்ட்மெண்ட் வைச்சு. வந்த பிறகு.. டாக்டர்.. எனக்கு அதுக்க குத்துது.. இதுக்க குத்துது.. என்று தொடங்கி.. 20 வருசத்துக்கு முதல் விழுந்தனான் டாக்டர் என்று.. ஒரு வரலாறே சொல்ல வெளிக்கிட்டிடுங்கள்.

எம்மவர்கள்.. சின்னப் பிரச்சனையை.. இடியப்பச் சிக்கலாக்கி காட்டுவதில் வல்லவர்கள்.

அனந்தி அக்கா.. ராதிகா அக்கா.. எல்லாம்.. இன்று அந்த வலைக்குள் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால்.. அங்க ஒன்றுமில்ல. எல்லாம் நேராத்தான் போய்க்கிட்டு இருக்குது. இடையில.. அரசியல் செய்ய வெளிக்கிடுறவை தான்.. உந்த இடியப்பச்சிக்கல்களுக்குப் பின்னால் இருக்கினம். :):icon_idea:

சிலருக்கு இடியப்ப சிக்கலை பிழிந்து, அதை வைத்து கட்டுரை அவித்தால் தான் கடை ஓடும்.

ஆனந்தி அவர்களை யார் திரை மறைவில் இருந்து இயக்குகிறார்கள் என சண் தவராஜா சொல்லுவாரா?

இவரே வதந்தியை கிளப்பி விடுகிறார் போல உள்ளது.

தலைப்பில் சம்பந்தம் இல்லாமல் எலி என்று அனந்தி மீது தனி நபர் தாக்குதல் நடத்துவது போல் உள்ளது.

மற்றும் சிலருக்கு தமிழச்சிகள் முன்னேறி சாதித்தாலும் பிடிக்காது. காலை வாருவதில் ஒலிம்பிக்ஸ் வைத்தால் எங்களுக்கு தான் தங்கம் என்றும், எப்போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

சன் தவராஜாவே ஒரு எலி :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சன் தவராஜாவே ஒரு எலி :D

சண் தவராசா யார் என்று தெரிந்துதான் கருத்தை எழுதினீர்களா ?

2000ம் ஆண்டில் கிழக்கில் ஏற்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீழ்ச்சியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட TNA யின் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்.ஆகவே TNA யை உடைப்பதற்கு /பலவீனப்படுத்த முயலும் எவருக்கெதிராகவும் விமர்சனம் வைப்பதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது .

  • தொடங்கியவர்

தலைப்பிற்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.

எப்படி அனந்தி பரிசோதனை எலியானார்?

யாருடைய பரிசோதனை கூடம்? யாரந்த விஞ்ஞானி ? இந்த பரிசோதனையின் நோக்கம் என்ன?

கட்டுரையில் சான்ட்விச் மெதட் பாவிக்கப்பட்டிருக்கிறது. கனடிய முகாமையாளர்கள் தமது வேலையாட்களை குறை கூறி அடக்கி வழி நடத்த முதலில் நல்ல வேலை ஒன்றை சுட்டி காட்டி பின் குறை கூறி கடைசியில் நல்லா புகழ்வார்கள்.

பொதுவாக விஞ்ஞானிகள் எலிகளில் பரிசோதனை நடாத்துவார்கள் ,இதில் பரிசோதனைக் கூடம் தாயகம் ,விஞ்ஞானிகள் புலம்பெயர்ந்த சில தமிழர்கள் ,பரிசோதனையின் நோக்கம் TNA யில் குழப்பத்தை ஏற்படுத்தி TNA யை தடைசெய்ய :icon_idea:

பொதுவாக விஞ்ஞானிகள் எலிகளில் பரிசோதனை நடாத்துவார்கள் ,இதில் பரிசோதனைக் கூடம் தாயகம் ,விஞ்ஞானிகள் புலம்பெயர்ந்த சில தமிழர்கள் ,பரிசோதனையின் நோக்கம் TNA யில் குழப்பத்தை ஏற்படுத்தி TNA யை தடைசெய்ய :icon_idea:

 

சாத்திரம் சொல்லுறீங்களா.. 

தலைப்பு வைத்து எழுத்தத் தெரிந்தவருக்கு அதை பாமரருக்கும் விளங்குமாறு தெளிவாக எழுதத் தெரியாதா?!

  • தொடங்கியவர்

சாத்திரம் சொல்லுறீங்களா.. 

தலைப்பு வைத்து எழுத்தத் தெரிந்தவருக்கு அதை பாமரருக்கும் விளங்குமாறு தெளிவாக எழுதத் தெரியாதா?!

சாத்திரியிடம் தான் நீங்கள் சாத்திரம் கேட்கவேண்டும் .சிலர் விளங்கினாலும் விளாங்காத மாதிரி நடித்தால் எவர் தான் என்ன செய்யமுடியும் :D  :icon_idea:

ஒருவர் எழுதிய கவிதையில் தலைப்புக்கு கருத்து விளங்காமல் இருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது.

 

அவர் இயற்றமிழில் எழுதிய விடயத்திற்கு நீங்கள் அர்த்தம் கூறுகிறீர்கள் என்றால்.. ஒன்றில் அவரது தமிழில் பிழை.. அல்லது அவரில் பிழை.

 

பொதுவாக கிளிச்சாத்திரக்காரர் கூறுவதும் விளங்குவதில்லை. ஏனெனில் அதையும் பாடல்மாதிரிப் படிப்பார்கள்.  :icon_idea:

பொதுவாக விஞ்ஞானிகள் எலிகளில் பரிசோதனை நடாத்துவார்கள் ,இதில் பரிசோதனைக் கூடம் தாயகம் ,விஞ்ஞானிகள் புலம்பெயர்ந்த சில தமிழர்கள் ,பரிசோதனையின் நோக்கம் TNA யில் குழப்பத்தை ஏற்படுத்தி TNA யை தடைசெய்ய :icon_idea:

விளக்கத்திற்கு நன்றி. இவர் TNA க்கு சோறு தீத்தி வளர்த்தவர் என்றாலும் இவருக்கு எலி என்று அனந்தியை தலைப்பில் போட்டு விளிக்க உரிமையில்லை.

வேண்டுமென்றால் யாழ் சென்று நேரில் அனந்திக்கு விளக்கி அவர் வளர்த்த விருட்சத்தை காப்பாற்றலாம்.

புளொக்கில், விளம்பர பேப்பருகளில் எமது டிப்லோமசி தங்கி இருப்பது கவலைக்கிடமாக இருக்கிறது.

சாத்திரம் சொல்லுறீங்களா..

தலைப்பு வைத்து எழுத்தத் தெரிந்தவருக்கு அதை பாமரருக்கும் விளங்குமாறு தெளிவாக எழுதத் தெரியாதா?!

அண்ணா,

படித்தவருக்கும் இந்த கட்டுரை விளங்காது. இங்கு பல்கலையில் ஒரு பெரிய கோழி முட்டை தான் குடுத்திருப்பார்கள்.

எழுத்தாளர் துணிந்து உண்மையை ஆதாரத்துடன் எழுதி இருந்தால், கொசிப்பு கட்டுரைக்கு விளக்க கோலம் போட்டு தேற்றவேண்டிய தேவை வந்திருக்காது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவரை விட புத்திசாலியான அனந்திக்கு இவர அட்வைஸ் சொன்னதுதான். வேட்பாளராக அறிவ்விக்கப்பட்டதை தவிர அவருக்கு மேலதிக முக்கியத்துவம் வழங்கப்படாதபோதும் மிக மிக ஆரவாரத்துடன் பலத்த முன்னுரிமை கொடுத்து பிரச்சாரப்படுத்தப்பட்ட கெளரவ முதல்வர் விக்கிக்கு அடுத்தபடியான பெருவாரி வாக்குகள் திருமதி அனந்தியின் கொள்கை உறுதிக்கு கிடைத்தவை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.