Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையைப் காப்பாற்றுவதில் அவுஸ்ரேலியா உறுதி! – சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கையைப் காப்பாற்றுவதில் அவுஸ்ரேலியா உறுதி! – சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு. 
[Thursday, 2014-02-06 07:49:24]
julia-060214-150.jpg

இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா முன்வைக்க உள்ள இந்த தீர்மானத்துக்கு பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து மூன்றாது தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் எவ்வித உறுதியான பதிலையும் அளிக்கவில்லை. வெளிப்படையானதும், நம்பகமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப்; தெரிவித்துள்ளார்.யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கைப் படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசார சமரசிங்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்பினர் போலியான அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=103033&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில்........

அவுசு  நண்பர்கள் வெட்கப்படணும்........... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவிற்கு உண்மையில் ஈழத்தில் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத அல்லது தெரிந்தும் சிங்களவனுக்கு ஆதரவாக நிற்கின்றதா ? எதுவானாலும் அங்கிருக்கும் எமது உறவுகள் இதுபற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இந்த விடயத்தில்........

அவுசு  நண்பர்கள் வெட்கப்படணும்........... :(  :(  :(

வெட்கப்பட்டு ஜூலி பிஷப்புக்கு சீலை காட்டவேண்டுமோ?

அல்லது சாரத்தை கழட்டி முகத்தை மூடவேண்டுமா? 

லிபரல் கட்சியினுடைய கொள்கை அப்படி இருந்தால் அதுக்கு இங்குள்ள தமிழர்கள் என்ன செய்யமுடியும்? 

இந்த செய்தியில் கூட லிபரல் அரசாங்கம் இலங்கையை ஆதரிப்பதாக சொல்லவில்லையே? 

இங்குள்ள தமிழர்கள் இதுக்கெல்லாம் வெட்கப்பட்டால் அங்க ராசபக்ச செய்து முடிச்சதுக்கும் இப்ப சொல்லுவதுக்கும்  ஊரில சனம் நஞ்சு குடிச்சு சாகவேண்டும்.

Edited by Sooravali

இலங்கையைப் காப்பாற்றுவதில் அவுஸ்ரேலியா உறுதி! – சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு. 

[Thursday, 2014-02-06 07:49:24]
julia-060214-150.jpg

இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா முன்வைக்க உள்ள இந்த தீர்மானத்துக்கு பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து மூன்றாது தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் எவ்வித உறுதியான பதிலையும் அளிக்கவில்லை. வெளிப்படையானதும், நம்பகமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப்; தெரிவித்துள்ளார்.யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கைப் படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசார சமரசிங்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்பினர் போலியான அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=103033&category=TamilNews&language=tamil

இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் எவ்வித உறுதியான பதிலையும் அளிக்கவில்லை. வெளிப்படையானதும், நம்பகமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப்; தெரிவித்துள்ளார்.யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கைப் படையினருக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசார சமரசிங்க தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்பினர் போலியான அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  

 இதுதான் செய்தி 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இலங்கையைப் காப்பாற்றுவதில் அவுஸ்ரேலியா உறுதி! – சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு.

இப்படி அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் எங்கே சொன்னார்? இதை தான் ஊடக விபச்சாரம் என்று சொல்வதா?

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கப்பட்டு ஜூலி பிஷப்புக்கு சீலை காட்டவேண்டுமோ?

அல்லது சாரத்தை கழட்டி முகத்தை மூடவேண்டுமா? 

லிபரல் கட்சியினுடைய கொள்கை அப்படி இருந்தால் அதுக்கு இங்குள்ள தமிழர்கள் என்ன செய்யமுடியும்? 

இந்த செய்தியில் கூட லிபரல் அரசாங்கம் இலங்கையை ஆதரிப்பதாக சொல்லவில்லையே? 

இங்குள்ள தமிழர்கள் இதுக்கெல்லாம் வெட்கப்பட்டால் அங்க ராசபக்ச செய்து முடிச்சதுக்கும் இப்ப சொல்லுவதுக்கும்  ஊரில சனம் நஞ்சு குடிச்சு சாகவேண்டும்.

ரொம்ப  சூடாக இருக்கிறீர்கள் போலும்..........

இப்படி எழுதவும் ஒரு ஆள் தேவை  தானே........ :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பற்றி ஒருமுறை கந்தப்புவின் திரியிலும் சொல்லியிருந்தேன்., லிபரல் இலங்கை அரசுக்கு ஆதரவான கட்சி. டோனி கொமென்வெல்த் மகாநாட்டுக்கு போனது மட்டுமல்ல இலங்கை கடற்படைக்கு இரண்டு கப்பல்களை வேறு தருவதாக சொல்லிவிட்டு வந்தார். ATC, AFTA கிரீன்ஸ் ஐ மட்டுமே நம்பி இருப்பவர்கள். இவர்கள் எங்கட ஏதாவது நிகழ்வுக்கு வந்து வடை, வாழைப்பழங்களைச் சாப்பிட்டு கொடி ஏத்துவார்கள். அவ்வளவும் தான். அவர்களையும் குறை சொல்லமுடியாது. அவர்களே யாரோ ஒருத்தரில தங்கி இருப்பவர்கள்.  அவர்களிலும் லீ ரியாணன் போல பாராளுமன்றத்தில ஏதாவது ஒன்றைச் சொல்லும் ஒன்று ரெண்டு பேர் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் கிறீன்சும் நல்லாக வாங்கிக் கட்டினார்கள். இன்னும் இரண்டரை வருடத்துக்கு அவுசில ஆணியே புடுங்க முடியாது.

இலங்கைப் பற்றியும் தமிழர்கள் பற்றியும் அவுசுக்கு ஏன் அக்கறை வர வேண்டும்? நாட்டுக்குள்ளேயே Holden 4,000 பேரை நிற்பாட்டப் போவதாக கூறியிருக்கிறார்கள், Ford 2016 ஓட ஆட்டம் குளோஸ், அரசாங்கம் அரச வேலைகளில் இருந்து அதிகமாக பணிக் குறைப்பு செய்கிறார்கள். இப்படி ஊருப்பட்ட தலையிடிகள் இருக்கும் போது பிச்சைக்கார இலங்கை பற்றி இவர்களுக்கு ஏன் கவலை வர வேண்டும்? அவர்களது ஒரே பிரச்சனை அகதிகள். இந்த அகதிகள் பிரச்சனையால் இந்தோனேசியாவுடன் நன்றாக முறுகுப் பட்டுவிட்டார்கள் அதைவிட நவுரு, மனுஸ் தீவுகளுக்கு அனுப்புவதிலும் சில சிக்கல்கள். வந்த சில வள்ளங்களை திருப்பி அனுப்ப அவை தாண்டு விட்டன. வந்த அகதிகள் அரசாங்கத்திடம் இருந்து எவளவு கறக்க முடியுமோ அவளவு கறக்கிறார்கள்.

உதாரணத்திற்கு பேர்த்தில் ஒரு குடும்பம். முதலிலே புருஷன் வந்தார் களவாக, பின்னர் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வந்தார்கள் அதுவும் களவாக, சரி வரட்டுக்கும்..... எண்ணி ஒன்பது மாதத்தில் மனைவி பிள்ளைத்தாச்சி ..... வாவ் :wub: .... ஓகே மே பி எ மிஸ்டேக் :unsure: .... இன்னும் ஒரு வருஷம் ஓடுது மீண்டும் பிள்ளைத்தாச்சி :o ...... புருஷன் சூப்பர் மார்கெட்டில ற்றொலி தள்ளுற வேலை. எவளவு தள்ளினாலும் வருசத்துக்கு $35,000 தாண்டாது <_< , அதிலயும் கையில காசுவாங்குவதால வரி கட்டுவது இல்லை. அரசாங்கம் என்ன செய்யலாம் எண்டு சொல்லுறியள்?  :huh:  இப்பிடிக் கன பேர்.     

இதனால தான் ஆக்கள் இங்கு வர முதலேயே அதைத் தடுப்பதற்கும், வந்தவர்களை பிளேனிலே எத்தி திருப்பி அனுப்பும் போது அவர்களை ஏற்றுக் கொள்ளுவதட்கும் இலங்கை அரசாங்க ஆதரவு அவுசுக்கு தேவை. இதிலே லேபர் லிபரல் என்று பேதமில்லை.லேபர் கொஞ்சநாளைக்கு உழைக்க விட்டு அனுப்புவார்கள். லிபரல் உடனேயே அனுப்புவார்கள். எதிர்காலத்திலே அகதிகள் சம்பந்தமான சட்டங்கள் இன்னும் இறுக்கமாகப் போகின்றன.

இதனால தான் ஆக்கள் இங்கு வர முதலேயே அதைத் தடுப்பதற்கும், வந்தவர்களை பிளேனிலே எத்தி திருப்பி அனுப்பும் போது அவர்களை ஏற்றுக் கொள்ளுவதட்கும் இலங்கை அரசாங்க ஆதரவு அவுசுக்கு தேவை.

இது பற்றி முன்னரும் யாரோ எழுதியிருந்தார்கள். நீங்கள் எழுதியது தானோ தெரியவில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில்........

அவுசு  நண்பர்கள் வெட்கப்படணும்........... :(  :(  :(

இதில் வெட்கப்பட வேண்டியது 'ஜூலியா பிஷப்' தவிர நாங்களில்லை, விசுகர்!

அமெரிக்காவின், பிரித்தானியாவின் உதவியின்றி அவுஸ்திரேலியா சில மணித்தியாலங்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது!

சீனா, முதலாவது அணு ஆயுதத்தை ஏவும் போது, அது அமெரிக்காவை நோக்கி ஏவ மாட்டாது! அவுசில் உள்ள, அமெரிக்கக் 'கட்டுப்பாட்டு நிலையத்தை' நோக்கித் தான் ஏவும்!

அமெரிக்கா, பிரித்தானியா என்பன ஒன்றைச் சொன்னால், அவுஸ்திரேலியா ஒருநாளும் மறுக்க மாட்டாது! 

மனித உரிமை, போர்க்குற்றம் போன்ற விடயங்களில் எதிர்த்து வாக்களிக்கும் அளவுக்கு, அவுஸ்திரேலிய அரசியல் வாதிகள் மோசமானவர்களல்ல!

இப்போது, இலங்கை அரசுக்கு முந்தானை விரிக்கவேண்டிய நிலையில் அவுஸ்திரேலியா உள்ளது! 

அதனால் தான், ஜூலியா பிஷப் வார்த்தைகளை, ராஜ தந்திர ரீதியில்,உபயோகித்துள்ளார்!

சீமான் புரிந்து கொண்டுள்ளார்! :D

எங்கள் ஊடகங்கள் வழக்கம் போல, எங்களுக்கு 'நிலா' காட்டுகின்றன! :wub:

இதையே பிச்சைகார இந்தியா செய்தால்..எகிறி எகிறி குதிப்போம்....ஆனால் அவுஸ்திரேலியா, கனடா செய்தால் பம்முவோம் :)

அவர் அவர்களின் நலமே அந்த அந்த நாடுகளுக்கு முக்கியம்...

  • கருத்துக்கள உறவுகள்
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப்; தெரிவித்துள்ளார்.யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் சொன்னதில் தப்பில்லை...இருவரையும் விசாரிக்க வேண்டும்...ஆனால் இப்ப இருப்பது அரசு மட்டும்தானே......
  • கருத்துக்கள உறவுகள்

இதையே பிச்சைகார இந்தியா செய்தால்..எகிறி எகிறி குதிப்போம்....ஆனால் அவுஸ்திரேலியா, கனடா செய்தால் பம்முவோம் :)

அவர் அவர்களின் நலமே அந்த அந்த நாடுகளுக்கு முக்கியம்...

நாங்கள் குதிக்கிறோமோ, இல்லையோ, நீங்கள் தான் எகிறி, எகிறிக் குதிக்கின்றீர்கள் போல உள்ளது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில்........

அவுசு  நண்பர்கள் வெட்கப்படணும்........... :(  :(  :(

அப்ப நாஙகள் அவுஸ் உறவுகலை புரகனிப்போம் :lol:

நாங்கள் குதிக்கிறோமோ, இல்லையோ, நீங்கள் தான் எகிறி, எகிறிக் குதிக்கின்றீர்கள் போல உள்ளது! :icon_idea:

நான் எகிறி குதிக்கவில்லை...எங்களை நினைத்து சிரிகிறேன்... :)

எப்படி எப்படி எல்லாம்...நினைத்திருந்தோம்..கடைசியில் இப்படியாகிபோனோமே....

இதையே பிச்சைகார இந்தியா செய்தால்..எகிறி எகிறி குதிப்போம்....ஆனால் அவுஸ்திரேலியா, கனடா செய்தால் பம்முவோம் :)

அவர் அவர்களின் நலமே அந்த அந்த நாடுகளுக்கு முக்கியம்...

இந்தப்பிரச்சனையில் இந்தியா, அவுஸ்திரேலியா, மற்றும் கனடாவையும் ஒன்றாக பாக்குமலவுக்கு தான் உங்களின் அரசியல் பார்வை உள்ளதை என்னும்போது ஏமாற்றமாக உள்ளது. 

இந்த விடயத்தில்........

அவுசு நண்பர்கள் வெட்கப்படணும்........... :(:(:(

அண்ணா, அவுசு, கனடா எல்லாம் இராணியின் நாடுகள். மற்ற மேற்கு நாடுகள் பெட்டி அடிக்கும் போது அவுசு ஒரு இராசதந்திர விரிசல்.

சிறி லங்காவில் இருந்து வெளியேறும் கோடீசுவர மீன்களை பிடிக்க உதவும்.

இது கெட்ட செய்தி அல்ல. அரசியல் பெட்டி அடிக்கபட்ட நல்ல செய்தி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.