Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஆயிரத்தில் ஒருவனை' வரவேற்ற எம்ஜிஆர் ரசிகர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'ஆயிரத்தில் ஒருவனை' வரவேற்ற எம்ஜிஆர் ரசிகர்கள்!

 

 

23779-10-1-2014-1-005.jpg

 

 

 

அரை நூற்றாண்டைக் கடந்தும் அழியாத புகழில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் திரைக்கு வந்திருப்பது எம்ஜிஆர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

1965ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி இப் படம் முதன்முதலாக வெளியானபோது என்ன உற்சாகம் இருந்திருக்குமோ அந்த உற்சாகத்துக்கு கொஞ்சமும் குறையாத வகையில் எம்ஜிஆர் ரசிகர்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டதைக் காண முடிந்தது.

 

எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் திரைப்படமான இதில், நாகேஷ், எம்.என்.நம்பியார், ஆர்.எஸ். மனோகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பி.ஆர். பந்துலு இயக்கத்தில், படத்தை அவரே தயாரித்தார். பந்துலு பண நெருக்கடியில் இருப்பதை அறிந்து இந்தப் படத்தை அவருக்கு அளித்தவர் எம்ஜிஆர் என்று போற்றப்படுகிறது.

 

இந்தத் திரைப்படத்தை திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் ஜி. சொக்கலிங்கம் இன்றைய நவீன தொழில்நுட்பத்துக்கு தகுந்தபடி மாற்றியமைத்து தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்பட 120-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட்டுள்ளார். டிடிஎஸ் 5.1 தொழில்நுட்பத்தில், ரெஸ்டோரஷேன், டிஐ, கலர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

 

திருநெல்வேலி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், தென்காசி திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி ராம் திரையரங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே ரசிகர்கள், எம்ஜிஆர் உருவப்படம் பொறித்த பேட்ஜ்களையும், டாலர்களையும், கொடிகளையும் உடலில் கட்டிய வண்ணம் குவியத் தொடங்கினர். திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த 80 அடி உயர எம்ஜிஆர், ஜெயலலிதா கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

 

எம்ஜிஆர் உருவப்படத்துக்கு தேங்காயில் சூடம் ஏற்றி தீபாராதனை செலுத்தி வழிபட்டனர்.

திரைப்படம் பார்க்க வந்த அனைவருக்கும் லட்டு வழங்கினர். சரவெடிகளும் வெடிக்கப்பட்டன.

 

திரைப்படத்தை காணவந்த திருநெல்வேலியைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளர் முருகன் (60) கூறுகையில், 15 பைசா, 25 பைசா கொடுத்து இந்தப் படத்தைப் பார்த்தோம். இப்போது ரூ.100 கொடுத்து பார்க்கிறோம். ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் எப்போது ரிலீஸானாலும் பார்க்கத் தயாராக உள்ளோம் என்றார். சிறப்புக் காட்சி டிக்கெட் ரூ.100-க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து ரூ.80, 60, ரூ.30 என டிக்கெட் விற்பனை நடைபெறும் என திரையரங்க உரிமையாளர் தெரிவித்தார்.

 

 

http://www.dinamani.com/tamilnadu/2014/03/14/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E/article2109441.ece

 

 

புதிய டிஜிட்டலைஸ்டு பேனர்

 

aayirathil-oruvan-41.jpg

 

 

டிஸ்கி:

 

நான் இந்த திரைப்படத்தை எழுபதுகளில்(1970s) பாடலுக்காகவே இருமுறை பார்த்தேன்.

 

அன்பர் 'சோழியன்' சுழிபுரத்திலிருந்து வள்ளத்தில் ராமேஸ்வரம் பயணம் செய்து, இப்படத்தை தன் இள வயதில் பார்த்திருப்பார் என நம்புகிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், வன்னியன்!

 

எமது காலத்திற்குச் சற்று முந்திய 'வாத்தியார்' படமெனினும், இரண்டாம், மூன்றாவது தடவைகள் திரையிடப்பட்ட போது, பின்வரும் பாடலுக்காகவே, மூன்று தடவைகள், (விடுதி மதில் பாய்ந்து தான்) பார்த்திருக்கிறேன்! :D 

 

http://youtu.be/FB_mHPsm6Bk

 

  • கருத்துக்கள உறவுகள்

 //திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த 80 அடி உயர எம்ஜிஆர், ஜெயலலிதா கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.//

 

கட் அவுட்டுக்கு... பால் ஊற்றும் போது, அதில் உள்ள வர்ணங்களுக்கு...
பூஞ்சணம், கரம்பன் போன்றவற்றால்....பாதிப்பு ஏற்படாதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 //திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த 80 அடி உயர எம்ஜிஆர், ஜெயலலிதா கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.//

 

கட் அவுட்டுக்கு... பால் ஊற்றும் போது, அதில் உள்ள வர்ணங்களுக்கு...

பூஞ்சணம், கரம்பன் போன்றவற்றால்....பாதிப்பு ஏற்படாதா?

 

பாலாபிஷேகத்திற்குப் பின் சந்தனம், திருநீறு, பன்னீர் அபிஷேகமெல்லாம் இருக்கே! அவை முழு பதாகையையும் கழுவிடுமல்லவா?

 

வேண்டுமெனில் இலையான் மொய்க்கலாம், எப்படி அவற்றை நீங்கள் கொல்கிறீர்களெனெ தமிழ்சிறி பாடமெடுத்தால் இக்கால எம்ஜிஆர் ரசிகர்கள் கவனத்தில் கொள்வார்கள்! :D

 

கீழேயுள்ள விளம்பரம், இலங்கையில் இப்படம் வெளியான போது இலங்கை ஊடகங்களில் வெளிவந்தது.

 

 

 

ayirathil_oruvan_52days.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவு மீட்டல்: (May be off the Topic!) :rolleyes:

 

அக்காலத்தில் மதுரையை சார்ந்த அனைவருக்கும் சினிமா என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது ஆசியாவிலேயே பெரிய திரையரங்கம் என பெயர் பெற்ற தங்கம் தியேட்டர் தான்.

 

 

MA15CITY-THEATRE_ST_754839g.jpg


மதுரை ரயில் நிலைய சந்திப்பிலிருந்து எதிர்புறம் வரும் டவுண் ஹால் சாலையின் இடது புறமாக திரும்பினால் வருவது மேலப் பெருமாள் மேஸ்திரி தெரு. அங்கே கம்பீரமாய் எழுந்திருந்தது இந்த தங்கம் தியேட்டர்.

 

சுமார் 2563 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படம் பார்க்ககூடிய மிகப்பெரிய இத்திரையரங்கின் பரப்பளவு 52000 சதுர அடிகள். 1952ல் 'பிச்சைமுத்து' என்பவரால் கட்டப்பெற்ற இத்திரையரங்கின் முதல் படம் பராசக்தி நூறு நாட்களுக்கும் மேலாக ஓடியது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் இங்கே படத்தை திரையிட தயங்குவார்கள், ஏனெனில் அக்காலத்தில் ஒரு படத்தின் வெற்றி, அது திரையரங்குகளில் ஓடும் நாட்களை வைத்தே கணிக்கப்பட்டது.

 

மிக அதிகப்படியான இருக்கைகளினால் இத்திரையங்கில் குறிப்பிட்ட படங்களே 100 நாட்களுக்கும் மேலாக ஓடியுள்ளது.

அவையாவன:

பராசக்தி
நாடோடி மன்னன்
ஆதி பராசக்தி (250 நாட்கள்)
பணமா பாசமா
யாதோங்கி பாரத்(இந்தி)
சின்னஞ்சிறு உலகம்
கரிமேடு கருவாயன்
எங்க மாமா
தூறல் நீன்னு போச்சு.

 

 

இப்பேர்ப்பட்ட மிகப்பெரிய திரையரங்கின் இன்றைய நிலை இதுதான்...  :o

 

 

MA15CITY-CINEMA_754838g.jpg

 

 

பட உதவி : 'தி இந்து'

  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்கமாய் கர்ஜிக்கும் மக்கள் திலகம்! புதுப்பொலிவுடன்!! 
 
               நிகழ்கால சினிமாவுக்கு சவால்விடும் அளவிற்கு புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் வரும் வெள்ளி அன்று (14.03.2014) வெளியாக உள்ளது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டை ஹீரோயிசம் அவருக்கு மட்டுமே பொருந்தி இருப்பதை இன்றைய இளைஞர்களும் உணர ஒரு வாய்ப்பாக இப்படம் உள்ளது. 
 
1965யில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் தற்போது இருக்கும் சினிமா ரசிகர்களையும் கவர்கிறது என்றால் சினிமாவில் பணிபுரிந்த முன்னோர்களின் உழைப்பே நம் கண்முன் தெரிகிறது. எம்.ஜி.ஆரின் வாள் சண்டை, நம்பியாரின் வில்லத்தனம், நாகேஷின் நகைச்சுவை, முதல் முறையாக எம்.ஜி.ஆரோடு ஜோடி சேரும் ஜெயலலிதா என அத்தனைபேரும் நேரம் போவது தெரியாமல் படத்தை ரசிக்க வைக்கிறார்கள். 
 
MGR%20in%20Ayirathil%20Oruvan.jpg
 
பாட்டு வந்தாலே வெளியே போகத்தூண்டும் இந்த கால படங்களுக்கு மத்தியில், அவ்வப்போது பாடல்கள் வந்தாலும் அத்தனைப் பாடல்களும் ரசிக்க வைக்கிறது. காரணம், எல்லாப் பாடல்களும் கதையோடு கலந்து இருப்பதே! ஏன்? ஏன்? ஏன்? என அடிமைகளாய் வேலைசெய்பவர்கள் கேள்வி கேட்க, ‘ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை’ என்று பாய்ந்து வந்து பாடுகிறாரே... ஹீரோன்னா இவருதம்பா என்று  இதயம் சொல்கிறது. 
 
‘அதோ அந்த பறவைபோல...’ ‘ஆடாமல் ஆடுகிறேன்...’ ‘உன்னை நான் சந்தித்தேன்...’ ‘ஓடும் மேகங்களே...’ ‘பருவம் எனது பாடல்...’ ‘நாணமோ இன்னும் நாணமோ...’ என்று ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூத்தியின் மயக்கும் இசையில், டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலாவின் அசரவைக்கும் குரலில், கண்ணதாசன், வாலி வரிகளில் அனைத்து பாடல்களும் மணி மணியாக ஒலிக்கிறது. பார்ப்பதற்கும் அத்தனை அழகு, திரையில் இருப்பது மக்கள் திலகம் அல்லவா!
 
‘நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்’ என்று மக்கள் திலகம் பாடும்போது கைத்தட்டல் அரங்கத்தை அதிரவைக்கிறது. ‘நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்’ என்று ஜெயலலிதவிடம் அவர் பாடும்போதும் சிலர் கைத்தட்டும் ஓசை கேட்கிறது! 
 
ஜெயலலிதவின் அறிமுகப் பாடல் முடிந்ததும் அவர் தந்தை வந்து ‘நீ அயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரியாகி ஆனந்தம் அடையவேண்டும்’ என்று ஆசீர்வதிக்கும் காட்சி இந்த கால இளைஞர்களுக்கு ஆச்சரியத்தையேக் கொடுக்கிறது. 
 
‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கேட்டதும் ‘சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்று சிங்கமாய் கர்ஜிக்கும் மக்கள் திலகத்தின் கம்பீரம், அவருக்கு நிகர் அவரே என்பதை உறுதிப்படுத்தும் காட்சி. ‘உன் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றென்றும் நிலைத்து நிற்க’ என்று அதிகாரம் படைத்தவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்பதும்,  ‘தோல்வியையே அறியதவன் நான்’ என்று நம்பியார் சொன்னதும் ‘தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழகியவன் நான்’ என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனங்கள் அனல் பறக்கிறது. 
 
கடல் சார்ந்த பயணம் அதில் நடக்கும் போராட்டங்கள் என்பதால் காடு, தீவு, கடல், கடற்கரை, கப்பல் என காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டம்! கடலில் தத்தளிக்கும் கப்பலில் சண்டைக் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பிரம்மாண்டமாக படமாக்கிய இயக்குனர் பி.ஆர்.பந்தலுவின் திறமை பிரம்மிக்க வைக்கிறது. 
 
டிஜிட்டல் வடிவத்தில் வெளியாகி இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை அந்த கால ரசிகர்கள் மட்டுமல்ல இந்த கால இளைஞர்களும் பார்த்து ரசிக்கலாம்!
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில் ஒருவன்  அருமையான படம் . எல்லோருமே அந்தப் படத்தில் மிக மிக அழகாய்த் தெரிவார்கள். நாகேசின்  "கெழுத்து மீன் வந்தால் வெளுத்துக் கட்டுங்கள் வசனம் மறக்க முடியுமா...! :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மதுரையில் தோல்வி

March 16, 2014

ao.jpg

பெரும் எதிர்பார்ப்புடன் மறு வெளியீடு செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மதுரையில் தோல்வி அடைந்துள்ளதாம். படத்தைத் திரையிட்ட தியேட்டர்களில் தற்போது அவற்றை எடுத்து வருகின்றனராம்.

தேர்தல் ஆணையத்தின் கடும் கெடுபிடிகளுக்கிடையே நேற்று முன்தினம் வெளியானது டிஜிட்டலில் புதுப்பிக்கப் பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம். இப்படத்தை ஒருமுறைப் பார்ப்பதென்பது பத்து பொதுக்கூட்டங்களைப் பார்ப்பதற்குச் சமம் என அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வந்தனர்.

வார இறுதியில் கூட்டம் குவியும் என எதிர்பார்த்த தியேட்டர் ஓனர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளதாம். காரணம் படம் ரிலீசான பெரும்பான்மையான தியேட்டர்கள் ஈயோடிக் கிடக்கின்றனவாம்.

டிஜிட்டலில்… 1965ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் புதுப்பித்து வெ்ளியிட்டுள்ளனர்.

ஆச்சர்யம்.. ஆனால் உண்மை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த இப்படம் மதுரையில் தோல்வி அடைந்துள்ளது.

இது திரையுலகினருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. மதுரை தான் களமே… காரணம், பாக்ஸ் ஆபீஸில் ஒரு படம் ஹிட்டாகுமா இல்லையா என்பதை நிர்ணயம் செய்யும் முக்கிய மார்க்கெட் தளமான மதுரையிலேயே, அதுவும் எம்.ஜிஆருக்கும், அதிமுகவுக்கும் பெரும் திரளான ரசிகர் பட்டாளம் உள்ள ஊரில் இப்படம் தோல்வி அடைந்திருப்பதால் தியேட்டர்காரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.

ஐந்து தியேட்டரில் ரிலீஸ்… மதுரையில் இந்தப் படம் ஐந்து தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் வந்ததோ விரல் விட்டு எண்ணும் அளவில்தானாம்.

இதில் ஒரு தியேட்டரில் படம் மறு வெளியீடு செய்யப்பட்ட அடுத்த நாளே ஒரு காட்சிக்கு போதிய அளவில் ஆட்கள் வராததால் அந்த ஷோவையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாம். பணத்தை திருப்பிக் கொடுத்து…. இதுகுறித்து தமிழ் ஜெயா தியேட்டரின் மேலாளர் பாண்டியன் கூறுகையில், நூன் ஷோவுக்கு வெறும் 3 பேர் வந்திருந்தனர்.

சரி, தொடர்ந்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் படத்தைப் போட்டோம். ஆனால் யாருமே வரவில்லை. இதனால் அரை மணிநேரத்திலேயே படத்தை நிறுத்தி விட்டு ஷோவைக் கேன்சல் செய்து 3 பேரிடமும் பணத்தைத் திரும்பக் கொடுத்து அனுப்பி விட்டோம்.

பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் உருவான படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இதில் சர்வாதிகார முதலாளியை எதிர்த்துப் போராடி கொத்தடிமைகளை மீட்கும் கதாபாத்திரத்தில் எம்.ஜிஆர். நடித்திருப்பார். நம்பியார்தான் வில்லன். முதல் படம்… இந்தப் படம்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமும் ஆகும். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் இது. மேலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஜோடி முதல் படத்திலேயே ஹிட் ஆனதும் இதில்தான்.

தமிழகம் முழுவதும் இந்தப் படம் 120 தியேட்டர்களில் போடப்பட்டுள்ளது. ஆனால் அதில் எத்தனை தியேட்டர்களில் தற்போது இது ஓடி வருகிறது என்பது தெரியவில்லை.

இந்தப் படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்ததும் நினைவிருக்கலாம்.

எனவே அதிமுகவினர் பெருமளவில் படத்தைப் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மதுரைக்காரர்கள் கைவிட்டு விட்டது திரையரங்குகளை அதிர வைத்துள்ளது.

மற்ற ஊர்களின் நிலவரம் தெரியவில்லை. ஆனால் நிலைமை சரியில்லை என்றே செய்திகள் வருகின்றன.

www.alaikal.com

 

 

'ஆயிரத்தில் ஒருவனை' வரவேற்ற எம்ஜிஆர் ரசிகர்கள்!

 

 

23779-10-1-2014-1-005.jpg

 

 

அன்பர் 'சோழியன்' சுழிபுரத்திலிருந்து வள்ளத்தில் ராமேஸ்வரம் பயணம் செய்து, இப்படத்தை தன் இள வயதில் பார்த்திருப்பார் என நம்புகிறேன். :)

 

இத் திரைப்படம் வெளியாகும்போது எனக்கு 5 வயது.

எனது அறிவுக்கு எட்டியவரையில் நான் முதன்முதல் பார்த்த எம்ஜிஆரின் படம் 'அடிமைப் பெண்'. 

அதில் எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டை போடுவதைப் பார்த்து அன்றிலிருந்து அவரது இரசிகனாகி, அதன் பின்னர் அவரது பழைய படங்களை எல்லாம் பார்த்தேன்.  :)


ஆயிரம் ஆயிரம் நவீன இசைகளை கொண்டு பாடல்களை உருவாக்கினாலும் இந்தப்பாடல்கள் ஆயிரத்தில் அல்ல இலட்சத்தில் ஒன்று என்று கூறினால் நிச்சயம் அது பொருந்தும்  :)

சில படங்கள் தான் எத்தனை தரமும் பார்க்கலாம் ,அதில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று.

முழு நீள விருந்து .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.