Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாண மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்து விட்டனர்! – முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் கூறுகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்து விட்டனர்! – முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் கூறுகிறார். 

[Monday, 2014-03-17 07:49:19]
Pillayan-170314-150.jpg

கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்தவர்கள் என்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ” வடக்கு மக்கள் அரசியல் ரீதியாக வெற்றி அடைந்திருக்கின்ற போதும், கிழக்கு வாழ் மக்கள் அரசியல் பலத்தை இழந்திருக்கின்றனர். இன்னும் பின்தங்கிய நிலையிலேயே கிழக்கு மக்கள் வாழ வேண்டிய நிலைமை காணப்படுகிறது.தந்தை செல்வாவின் கொள்கைகளை பின்பற்றுவதாக தெரிவித்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, தற்போது மாகாண சபைகள் குறித்து பேசுகின்றது.

  

கடந்த காலங்களிலேயே மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால், இந்த அளவு தமிழ் மக்கள் எதனையும் இழந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. ஜெனிவா உள்ளிட்ட சர்வதேச மட்டத்தில் வடமாகாண மக்கள் குறித்து பேசப்படுவதைப் போல, கிழக்கு மாகாண மக்கள் குறித்தும் பேசப்பட வேண்டும். இதற்கான பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பே கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105843&category=TamilNews&language=tamil

உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பாவித்து கட்டிஎழுப்பியிருக்கலாமே?

உங்களையே ஏசுவது சரியல்ல.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தினை அநேகமாக கைவிட்ட அரசியலையே செய்கின்றது. கிழக்கு இல்லாமல் தமிழ் பேசும் மக்களின் அரசியல் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை. கிழக்கு மண் தான் எம் இதய பூமி. சந்திரகாந்தன் போன்றோர் இனிமேலாவது இதனை உணர்ந்து, வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்பினை மட்டும் உரிமைக் குரல் எழுப்பக் கூடிய கட்சி என்று என்ணாமல் தாமும் குரல் கொடுக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் உதயத்துக்கு என்னாச்சு ....... ? 

 

எல்லாப்புகழும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும்.  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண மக்கள் அரசியல் ரீதியாக தோல்வி அடைந்து விட்டனர்! – முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் கூறுகிறார்.

 

காரணமே  உங்கள் போன்றவர்களின் நடவடிக்கைகள் தானே  பாவிகளா......... :(  :(  :(

 

இப்பவாவது 

ஒற்றுமையாக என்ன  செய்யலாம் என்று சொல்லலாமே

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிட்டதாகக் கொள்ள முடியாது. அங்கு கடந்த 30 ஆண்டுகளில் சிங்களம் இனப்பரம்பலை மாற்றியமைத்துள்ளது. இதில் முஸ்லீம்களும் தங்களால் இயன்றதை சிங்களத்துக்கு சமாந்தரமாகச் செய்து வந்துள்ள நிலையில்.. வடக்கும் அந்த ஒரு நிலைக்குள் போகாமல் இருக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசியக் கட்சிகள் கூடிய கவனத்தை வடக்கில் செலுத்தினாலும் கூட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு என்று வருகையில்... நிச்சயம் கிழக்கு இன்னும் முக்கியத்துவம் பெறும். அதேவேளை கிழக்கின் அபிவிருத்தி என்பது வெறுமனவே தமிழ் மக்கள் சார்ந்ததல்ல. சிங்கள முஸ்லீம்களின் அபிவிருத்தியோடு அது செய்யப்படுகிறது. தமிழர்கள் பகுதிகள் அங்கு அபிவிருத்தியை காணாதவிடத்தும்.. மற்றைய இனங்களின் பகுதிகளில் காண்பிக்கப்படும் அபிவிருத்தி என்பது.. தமிழ் மக்களின் கோரிக்கைகளை சர்வதேசம் உதாசீனப்படுத்தப் பாவிக்கப்படுகிறது.

 

இதில் விடுதலைப்புலிகள் பேச்சுக்குப் போன போது கூட.. இரண்டு முக்கிய விடயங்களை முன் வைத்தார்கள்.

 

1. கிழக்குடனான வடக்கின் தொடர்பு. தங்களின் தடையற்ற போக்குவரத்து.

 

2. உயர்பாதுகாப்பு வலயங்கள்

 

பேச்சுக்கள் முறிவடையவும் இவையே காரணமாக அமைந்திருந்தன.

 

கூட்டமைப்பு வடக்கை முன்னிலைப்படுத்தி.. சர்வதேச தலையீடுகளை கொண்டு வந்த பின்னர்தான் கிழக்கை பற்றி அதிகம் சர்வதேசத்திடம் பிரஸ்தாபிக்க முடியும். அந்த வகையில்.. வடக்கின் நிலை மாற்றம் நிச்சம் கிழக்கு தமிழ் மக்களிற்கும் ஒரு சாதகமான நிலையையே உருவாக்கும். இதில் உள்ள நுட்ப அரசியலை.. அணுகுமுறையை அவதானமாகக் கையாளாவிட்டால்.. சிங்களவர்கள் முஸ்லீம்களோடு சேர்ந்து கிழக்கை கபளீகரம் செய்ய கிஞ்சிதமும் தயங்கமாட்டார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தேர்தல் பிரச்சாரங்களிலை கூட்டமைப்பை அவங்கள்,இவங்கள் தரக்குறைவாக பேசுறது. கிழக்குமாகாணத்தை நாங்களே கவனிப்பம் எண்டுறது....இப்ப?????
 
அண்டைக்கே வடமாகாணம் எண்டு போராடியிருந்தால் இண்டைக்கு  நிலமை வேறை.
  • கருத்துக்கள உறவுகள்

ஜீ 
உங்களிடமும் ஓவர் கொடுத்தாங்க தானே 
கிடைச்ச பந்துகள் எல்லாவற்றையும் NO Ball ஆகத்தானே போட்டீங்கோ

நீங்க எங்களுக்கு கிடைத்தது  வரம் இல்ல சாபம்  

இன்னும் உங்களைமாதிரி கேடு கேட்டவனெல்லாம் அரசியல் பேசினால் 
எங்களுக்கு தோல்வி மட்டும் இல்லை அரசியலே மிஞ்சாது  

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் நல்ல தமிழ் தலைவர்கள் உருவாக எதிரிகள் விட மாட்டார்கள். இது அவர்களின் நிகழ்ச்சி திட்டத்தில் ஒன்று. இது இன்று நேற்றல்ல எதிர் காலத்திலும் நடக்கும். ஒரு நல்ல ஜனநாயக தமிழ் அரசு கிழக்கில் வந்தாலும், அதை பாதுகாக்க வடக்கில் ஸ்திரமான ஆட்சி நடக்க வேண்டும் (விடுதலை புலிகள் பலமாக இருந்த மாதிரி). எப்படி விடுதலை புலிகளை காட்டி கொடுத்து அரசாசனம் ஏறி இப்ப ஒன்றும் இல்லாமல் நிற்கிறார்களோ, இதை விட மோசமான நிலைக்கு கிழக்கு தள்ளப்படும். வடக்கில் கூட்டமைப்பிற்கு எதிரான கருத்துகளும், நடவடிக்கைகளும் - இதன் விளைவாக ஆட்சிக்கு ஏற்படும் பங்கமும் கிழக்கை மிகவும் பாதிக்கும். எதிரி வெல்லுவதக்கான சந்தர்பங்களை நாம் உருவாக்காமல், எம்மினம் வாழ நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம். கிழக்கு எம் உயிர் நாடி, இதில் மாற்று கருத்து இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மெல்ல மெல்ல முஸ்லீம்களிடமும் சிங்களவர்களிடமும் பறிபோய்க்கொண்டிருக்கிறது. தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக இடங்களில் முஸ்லீம்கள் குடியேற்றம் அதுபோல கிடைத்த வீட்டுத்திட்டங்கள் உட்பட பொதுவான வசதிகளும் முஸ்லீம்களுக்கே கிடைத்திருக்கிறது. தமிழ் அரசியல்வாதிகள் இவ்விடயங்களில் அக்கறையெடுத்து செயற்பட வேணும். 

 

மட்டக்களப்பின் அழகை தற்போது இணையத்தில் ஒளிப்படங்களாக பரப்புகிறார்கள் பலர். அன்னியச்செலவணியும் சுற்றுலாப்பயணிகளின் வரவையும் கிழக்கில் அதிகரித்து தமிழர்களிடமிருந்து நிரந்தரமாக கிழக்கை பறிக்க தீட்டப்படும் திட்டங்களுக்கு தமிழர்களே ஆதரவாக இருப்பது வேதனையான உண்மை.

கடந்த தேர்தல் சொன்ன செய்தி என்னவென்று புரியாவிட்டால் எதுவும் செய்யமுடியாது .இப்பவும் அடித்து பிடிப்பம் அல்லது கிழக்கு முழுக்க பாரம்பரியமாக எங்கள் நிலம் என்று கத்தி ஆகப்போவது ஒன்றுமில்லை ,

கடைசி இருப்பதை தக்க வைக்க முடிந்ததை செய்யவேண்டும் .

கிழக்கில் இருப்பவர்கள் தான் அதற்கான அரசியலை செய்ய வேண்டும் .அதற்கு கூட்டமைப்பு ஒற்றுமையாக செயற்படவேண்டும் ஆனால் கடந்த தேர்தலில் அது நடைபெறவில்லை .கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகளின் சீட் பங்கீட்டிற்குத்தான் முன்னிரிமை கொடுக்கப்பட்டது .இந்த நிலை தொடர்ந்தால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு கிழக்கு நிரந்தரமாக எம்மை விட்டு போய்விடும்

 

புலிகளில் ஏன் எனக்கு இந்த கடுப்பு என்று காலம் சொல்லாமல் போகாது ,

அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு தமிழனை நடுவீதியில்  விட்டு விட்டு அவர்கள் போய் சேர்ந்து விட்டார்கள் ,அதனால்  உத்தரிப்பது நாட்டில் உள்ள தமிழர்கள் தான் .(இலங்கை -இந்திய ஒப்பந்தத்தில்  கிழக்கு பற்றி பார்த்தால் தெரியும் )

 

நாங்கள் விரும்புவது தான் நாட்டில் நடக்கவேண்டும் என்று புலம் பெயர்ந்த  பலர் இன்னமும் கனவு காணுகின்றார்கள் .அவர்களால் மரபு உரிமை திங்கள் போல விடயங்கள் மட்டுமே சாத்தியம் .

  • கருத்துக்கள உறவுகள்

 

புலிகளில் ஏன் எனக்கு இந்த கடுப்பு என்று காலம் சொல்லாமல் போகாது ,

அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டு தமிழனை நடுவீதியில்  விட்டு விட்டு அவர்கள் போய் சேர்ந்து விட்டார்கள் ,அதனால்  உத்தரிப்பது நாட்டில் உள்ள தமிழர்கள் தான் .(இலங்கை -இந்திய ஒப்பந்தத்தில்  கிழக்கு பற்றி பார்த்தால் தெரியும் )

 

நாங்கள் விரும்புவது தான் நாட்டில் நடக்கவேண்டும் என்று புலம் பெயர்ந்த  பலர் இன்னமும் கனவு காணுகின்றார்கள் .அவர்களால் மரபு உரிமை திங்கள் போல விடயங்கள் மட்டுமே சாத்தியம் .

 

உங்களுக்கு

பதில் எழுதுவது நேரத்தை சாவடிக்கும் வேலை  என்பதால் எழுதாமல் இருந்தேன்

ஆனால்

ஏதோ முள்ளிவாய்க்கால் வரை புலிகளுக்கு எல்லாவித உதவிகளையும் செய்தது மாதிரியும்

முள்ளிவாய்க்காலுக்கப்பின் அவர்களை  தூற்றுவதாகவும் இருக்கு  உங்கள் கருத்து

வாழ்க்கையில் புலிகள் செய்த

ஏதாவது ஒருவிடயத்தை  ஆதரித்த இங்கு எழுதியதைக்காட்டமுடியுமா??

இங்கு எழுதுபவர்கள் எல்லோரையும் ஐடங்கள் என்று நினைத்து எழுதுகின்றீர்களா???

 

புலிகளை  நான்தூற்றினால் அதில் ஒரு நியாயம் இருக்கமுடியும்

நீங்கள்............???

தோல்வியை  கொடுத்தவர்களே  நீங்கள் தானே............ :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.