Jump to content

'தூர் வாரப் படாத கிணறு'

Recommended Posts

'வேப்பம் பூ மிதக்கும்

எங்கள் வீட்டு கிணற்றில்

தூர் வாரும் உற்சவம்

வருடத்துக்கு ஒருமுறை

விசேஷமாக நடக்கும்

ஆழ நீரினுள்

அப்பா மூழ்க மூழ்க

அதிசியங்கள் மேலே வரும்

கொட்டாங்குச்சி,கோலி, கரண்டி

துருபிடித்த கட்டையோடு உள்விழுந்த

ராட்டினம்,

வேலைக்காரி திருடியதாய்

சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்'

சேற்றுக்குள் கிளறி

எடுப்போம் நிறையவே,

'சேறுடா சேறுடா' வென

அம்மா அதட்டுவாள்

என்றாலும்

சந்தோசம் கலைக்க

யாருக்கு மனம் வரும்?

"படை வென்ற வீரனாய்

தலைநீர் சொட்டச் சொட்ட

அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மாவும்

கதவுக்கு பின்னாலிருந்துதான்

அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்

மறந்தேபோனார்

மனசுக்குள் தூர் எடுக்க"...

#விகடனில் பிரசுரமான கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கருவை கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள்...எல்லோராலும் இப்படி சிந்திக்க முடியாது. விகடனில் பிரசுரமான கவிதை என்று போட்டுள்ளீர்கள் எழுதியது நீங்களா? பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையா கிணறு கலக்கி இறைக்கிறது என்று சொல்லுறது. தூர் வாருதல், நல்ல கரு. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதைத் தொட்டுச் செல்கிறது, உங்கள் கவிதையின் கரு!

இணைப்புக்கு நன்றிகள், ராஜன் விஷ்வா!

வாழ்த்துக்கள் கவிதையை எழுதியவர்க்கு உரித்தாகட்டும், நான் இணைத்தவன் மட்டுமேயக்கோ... கருத்திற்க்கு நன்றிகள்...

என்ட கவிதையென்றால் யாழில் தானே முந்திக்கொண்டு வந்து போடுவேன்... :)

Link to comment
Share on other sites

இதையா கிணறு கலக்கி இறைக்கிறது என்று சொல்லுறது. தூர் வாருதல், நல்ல கரு. வாழ்த்துக்கள்

ஆம், கிணறு இறைத்தல் இது தான், கிணற்றை துப்புரவு செய்வார்கள் முன்பு இப்படித்தான். தொழில் முறையாக கிணறு, கன்மாய், குளம் என்று இறைப்பவர்கள் இருப்பார்கள். ஆபத்தான வேலை, கிணற்றில் தவறி விழுபவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்களின் உடலை எடுத்துவருவதும் இவர்கள் தான்.

இந்த கவிதை விகடனில் வெளிவந்தது, எழுத்தாளர் சுஜாதா ஒரு கல்லூரி விழாவில் வாசிப்பதாக இருந்தது. இந்த கவிதையை எழுதியவரும் அதே இடத்தில் தான் இருந்திருக்கிறார். மேடைக்கு அழைத்து சுஜாதா அவரைப் பாராட்டியுள்ளார். கவிதையை பிரசுரித்த இலக்கிய இதழின் பெயர் கணையாழி.

மனதைத் தொட்டுச் செல்கிறது, உங்கள் கவிதையின் கரு!

இணைப்புக்கு நன்றிகள், ராஜன் விஷ்வா!

தலைப்பு மட்டுந்தான் தம்பியோடது,

மத்ததெல்லாம் சுட்டது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட பாவி மக்கா .. :o பயபுள்ளை எம்புட்டு கருத்தா எழுதியிருக்கு என்று பாஞ்சு விழுத்து கருத்தெழுதலாம் என்று வந்தால் சுட்டது னு போட்டிட்டானே :wub:  எது எப்படியோ இணைப்புக்கு நன்றிப்பா.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், கிணறு இறைத்தல் இது தான், கிணற்றை துப்புரவு செய்வார்கள் முன்பு இப்படித்தான். தொழில் முறையாக கிணறு, கன்மாய், குளம் என்று இறைப்பவர்கள் இருப்பார்கள். ஆபத்தான வேலை, கிணற்றில் தவறி விழுபவர்கள், தற்கொலை செய்து கொள்பவர்களின் உடலை எடுத்துவருவதும் இவர்கள் தான்.

என் கிராமத்தில் உள்ள எங்க வீட்டின் கிணத்தின் ஆழம் 32 அடி. ஊரில் நின்ற காலத்தில் நான்தான் கலக்கி இறைப்பேன். அப்போ இளம் வயது பயம் அறியாதது. இப்ப எட்டியும் பார்க்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

என் கிராமத்தில் உள்ள எங்க வீட்டின் கிணத்தின் ஆழம் 32 அடி. ஊரில் நின்ற காலத்தில் நான்தான் கலக்கி இறைப்பேன். அப்போ இளம் வயது பயம் அறியாதது. இப்ப எட்டியும் பார்க்க மாட்டேன்.

ஆமாம், ஆரம்பத்தில் இருந்து அப்போ அப்போ என்று சொல்கிறீர்களே..,! இப்ப என்ன ஒரு அறுபது வயது இருக்குமா அண்ணனுக்கு :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பானத்தில்  கிணறு  தூர்வாருதல் என்றால் பொடியள் எல்லாம் கப்பியிலும் கைவாளியிலும் இழுத்தே இறைத்து விடுவோம். சில பெரிய கிணறுகளுக்கு மட்டும் மிசின் பிடித்து இறைப்போம். கன கிணறுகள் அயல் லட்டை சேர்ந்து  முழுகினாலே நீர் வற்றிவிடும்...!

இணைப்புக்கு நண்றி ராஜன் விஷ்வா...! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.