Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசில் ராஜபக்சவை சந்திக்க மறுத்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் - மத்திய அரசின் மீது கடும் அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CVV1.jpg

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துப் பேசுவதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளதாக, யாழ்ப்பாண ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது. 

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், பசில் ராஜபக்­ச விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள இடைவெளி குறித்துப் பேசுவதற்கே இந்தச் சந்திப்புக்கு, பசில் ராஜபக்ச தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஆனால், சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சு மூலம், எந்தப் பயனும் ஏற்படாத நிலையில், இந்தச் சந்திப்பு அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக் கொள்ளவில்லை கூறப்படுகிறது. 

வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும், வடக்கு மாகாண தலைமைச் செயலர் விஜயலக்சுமி ரமேஸ் ஆகியோரை உடனடியாக மாற்றம் செய்யுமாறு சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போது, வடக்கு மாகாண முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். 

அதற்கு சிறிலங்கா அதிபர் இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. 

இந்தச் சூழலிலேயே, பசில் ராஜபக்சவின் சந்திக்க அவர் மறுப்புத் தெரிவித்து விட்டதாகவும், சிறிலங்கா அரசாங்கம் நேர்மையாகச் செயற்படுவதை செயலில் காட்டாத வரையில், இத்தகைய சந்திப்புக்களால் பயன் ஏதும் இல்லை என்று முதலமைச்சர் கருதுவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி யாழ்ப்பாண ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20140408110289

  • கருத்துக்கள உறவுகள்

மௌனமான எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலமும், காரியங்களை... சாதிக்கலாம்.
முதல்வர் விக்னேஸ்வரன் செய்தது... நல்ல முடிவு.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்தான் உண்மைத் தமிழன்.  இவரைப் போன்று பலர் உருவாகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு.

மிக நல்ல முடிவு .

இவரையும் திட்ட சிலர் இருக்கினம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவோ.. சாணக்கியமோ என்பதை இப்ப சொல்ல ஏலாது. பசிலின் சிங்களக் குடியேற்றம் என்ன வேகத்தில் நடக்குது என்றதைப் பார்த்துத் தான் சொல்லலாம். மேற்குலக ஏதிலித் தமிழர்களைப் பொறுத்த வரை தாங்கள் சுகமாக வாழ்ந்தால் போது. தாய் நிலம் எப்படிப் போனாலும் அவர்களுக்கு அது செய்தி அல்லது நகைப்பு. அல்லது பொப் கான்.. பியர் கான் அடிச்சிட்டு பொழுதுபோக்க கதைக்கிற அரசியல். அவ்வளவே. :icon_idea:

நல்ல முடிவோ.. சாணக்கியமோ என்பதை இப்ப சொல்ல ஏலாது. பசிலின் சிங்களக் குடியேற்றம் என்ன வேகத்தில் நடக்குது என்றதைப் பார்த்துத் தான் சொல்லலாம். மேற்குலக ஏதிலித் தமிழர்களைப் பொறுத்த வரை தாங்கள் சுகமாக வாழ்ந்தால் போது. தாய் நிலம் எப்படிப் போனாலும் அவர்களுக்கு அது செய்தி அல்லது நகைப்பு. அல்லது பொப் கான்.. பியர் கான் அடிச்சிட்டு பொழுதுபோக்க கதைக்கிற அரசியல். அவ்வளவே. :icon_idea:

 

நீங்கள் படித்தவர் என்று நினைத்தால், தமிழருள் பிரிவைத் தக்க வைத்து ஒரு சாராரின்மீது காழ்ப்புணர்வைத் துப்புவதை குறிக்கோளாகவே கொண்டிருக்கிறீர்கள். அதை இந்த யாழ் களமும் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. சிலவேளை நிர்வாகத்தில் உள்ளவர்களும் ஏதிலி இல்லாத நாடுள்ள தமிழர்களாக இருக்கலாம்.

 

இந்த இடத்தில் நான் என்னைப் பற்றிக் கூற வேண்டும். மேற்குலகைப் பொறுத்தளவில் நான் அரசியல் அகதித் தமிழன். புத்திஜீவி என்று கருதுகின்றவர்களைப் பொறுத்தளவில் ஏதிலித் தமிழனாக இருக்கலாம். மற்றும்படி, எனக்கும் தாயகத்தில் வீடு, நிலம், காணி என்று சொத்துகள் உண்டு. அவற்றுக்கும் பரம்பரைத் தடங்களூம் கதைகளும் எனது கடந்த காலங்களூம் உண்டு. அதனால் என்னதான் வசதிகள் இருந்தாலும் அவை எப்படி போனாலும் அது எனக்கு செய்தியாகவோ அல்லது நகைப்பாகவோ இருக்காது. இப்படியான எனது நிலையிலேயே பலர் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

 

ஆகவே.. நீங்கள் உங்களது மேதாவித்தனத்துடன், "மேற்குலக ஏதிலித் தமிழர்களைப் பொறுத்த வரை தாங்கள் சுகமாக வாழ்ந்தால் போது. தாய் நிலம் எப்படிப் போனாலும் அவர்களுக்கு அது செய்தி அல்லது நகைப்பு. அல்லது பொப் கான்.. பியர் கான் அடிச்சிட்டு பொழுதுபோக்க கதைக்கிற அரசியல். அவ்வளவே." போன்ற வெறும் துவேசமும் காழ்ப்பும், குரோதமும் கொண்ட கருத்தைத் துப்பி என்னைப் போன்றவர்களின் மனங்களை கஸ்டப்படுத்த வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவோ.. சாணக்கியமோ என்பதை இப்ப சொல்ல ஏலாது. பசிலின் சிங்களக் குடியேற்றம் என்ன வேகத்தில் நடக்குது என்றதைப் பார்த்துத் தான் சொல்லலாம்.

பசிலுடன் பேசி குடியேற்றத்தை தடுத்து நிறுத்தலாம் என்றா சொல்கிறீர்கள்?

 

 

மேற்குலக ஏதிலித் தமிழர்களைப் பொறுத்த வரை தாங்கள் சுகமாக வாழ்ந்தால் போது. தாய் நிலம் எப்படிப் போனாலும் அவர்களுக்கு அது செய்தி அல்லது நகைப்பு. அல்லது பொப் கான்.. பியர் கான் அடிச்சிட்டு பொழுதுபோக்க கதைக்கிற அரசியல். அவ்வளவே. :icon_idea:

மற்றவர்களையும் உங்களை போல என்று எப்பொழுதும் கருதக்கூடாது. இந்த விடயங்களில் மற்றவர்கள் உங்களை விட மாறுபட்டவர்கள். சிலர் உங்களை போல இருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக ஏதிலித் தமிழர்களைப் பொறுத்த வரை தாங்கள் சுகமாக வாழ்ந்தால் போது.

தாய் நிலம் எப்படிப் போனாலும் அவர்களுக்கு அது செய்தி அல்லது நகைப்பு.

அல்லது பொப் கான்.. பியர் கான் அடிச்சிட்டு பொழுதுபோக்க கதைக்கிற அரசியல். அவ்வளவே. :icon_idea:

 

இவ்வாறு  எல்லோரையும் ஒரு கூடைக்குள் போடுவதில் உடன்பாடில்லை  நெடுக்கு

இன்றைய சர்வதேச  அசைவுகளுக்கு இந்த ஏதிலிகளின் பங்கும்  உள்ளது.

 

ஆனால் அநேகமானவர்கள்

நீங்கள் சொல்வது   போலுள்ளனர்  என்பது வருத்தந்தரும் உண்மை

தேசியத்தலைவர் தலைமையில்

நாம் ஒற்றுமைப்பாட்டிருந்தால்

நிச்சயம் வென்றிருப்போம் என்பது   இன்றும் என்னை  வருத்தும் ஒரு விடயம்..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தர் சட்டத்தரணி ஐயா விக்கினேஸ்வரன் நியாயவாதி
மக்களை ஏமாற்றுவதில் ரெண்டுபேரும் போடும் நாடகம் இருக்கே சொல்லிமாளாது.

அதுக்கை ஆர் கூட ஏமாத்துறது எண்டு போட்டிவேறை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.