Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாமத்திய சடங்கின் அபத்தங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை ஒரு பெண் பருவமடைந்தால் அதை விழாவாக் கொண்டாடுவதில் விருப்பமில்லை.ஆனால் ஒரு பெண்ணுக்கோ,அவரை பெற்றவருக்கோ இதை விழாவாக செய்ய விருப்பம் என்டால் அதைத் தடுக்க மற்றவர்க்கு உரிமை இல்லை.எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அநேகமாக பெட்டையளே தங்கள் பெற்றோரிடம் தங்களுக்கும் சடங்கு செய்து வைக்க சொல்லி கேட்கிறார்கள் அல்லது பெற்றோர் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் சம்மதிக்கிறார்கள்.இது அவரவர் விருப்பம்.அநேகமாக இங்கிருக்கும் பெற்றோர் தங்கட பிள்ளைகள் வளர்ந்தவுடன் யாரைக் கல்யாணம் முடிப்பார்களோ அல்லது அவர்களது கல்யாணம் எங்கட முறைப்படி ஊர் கூடி நடக்குமோ தெரியாது என்ட படியால் அட்லீஸ்ட் இதையாவது ஊரைக் கூட்டி தங்கட முறைப்படி செய்யலாம் என நினைக்கிறார்கள்.அதில் தப்பு இல்லை.

இந்தக் காணொளியில் அந்தப் பெண் சொன்ன சில விடயங்கள் ஏற்கக் கூடியது அதாவது சாமர்த்தியப்பட்டு ஒரு,இரு வருடம் கழித்து செய்வது மற்றது மற்றவர்களோடு போட்டி போட்டு கடன் பட்டு செய்வது போன்ற விடயத்தில் இவ சொல்வது சரி ஆனால் இதை இவ தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட சொல்கிறார் என்டால் அதை தமிழிலே சொல்லி இருக்கலாம் தானே!.இங்கே பிறந்தாலும் நெடுக்கர் போன்றவர்களை விட நன்றாகத் தமிழ் கதைக்கிறா :D :icon_.இவ வேண்டும் என்றே தன்னை பிரபல்யப்படுத்த எமது இனத்தை தாழ்த்த தான் ஆங்கிலத்தில் கதைக்கிறார்.

நெடுக்கர் வெள்ளை இனக் கலாச்சாராத்தில் பெரும்பான்மையான பெற்றோர் தங்கட பெண் பிள்ளைகள் 8,9 வயசிலேயே போய் பிரண்ட் வைச்சிருக்கவும்,அவனோட சுத்தவும்,படுக்கவும் அனுமதி உண்டு அல்லது இல்லையோ ஆனால் அவர்கள் செய்கிறார்கள் நீங்களோ அல்லது நிழலியோ உங்கட பிள்ளை இதற்கு அனுமதிப்பீர்களா? எதற்கெடுத்தாலும் மற்றவோரோடு ஒப்பிட்டு உங்கட இனத்தை தாழ்த்துகின்றதை நிறுத்துங்கள்.நிழலி எப்படி உப்பவே நெடுக்கர் சொல்வதை சரி என்று ஏற்பார்? அவரது மகள் வளர்ந்து தனக்கு சடங்கு செய்யச் சொல்லிக் கேட்டால் அது தேவையில்லாத சடங்கு என்று சொல்லி மகளது உரிமையை மறுப்பாரோ அல்லது இப்ப இருந்தே இப்படியான விழாக்களுக்கு கூட்டிக் கொண்டு போகாமல் தான் இருப்பாரா?

இப்ப எல்லாம் கொஞ்சப் பேர் கிளம்பிருக்கிறார்கள் mrgreen:கடவுள் இல்லை[நம்பிக்கை இல்லை என சொல்வது வேறு],எங்கட சடங்குகள்,ச்ம்பிரதாயங்கள்,விழாக்கள் பொய். இன்னும் கொஞ்ச நாளில் தமிழே வேண்டாம் என்று சொல்வார்கள்.இவர்களே இப்படி இருந்தால் இவர்களால் வளர்க்கப்படும் எமது எதிர் கால சமுதாயம் எப்படி இருக்கும்?

எனக்கு தனிப்பட்ட ரீதியில் இந்த சாமத்திய சடங்கு செய்வதில் விருப்பமில்லை.ஆனால் என்ட குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இதை செய்ய விருப்பம் என்டால் அதைத் தடுக்கப் போறதுமில்லை.

Edited by ரதி

  • Replies 66
  • Views 10.6k
  • Created
  • Last Reply

சுற்றமும் சந்தோசமும் தேவை என்பதைக் காட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. எத்தனையோ ஒன்றுகூடுவதற்கான வசதிகளும் உள்ளன. "என் பெண் பிள்ளை பிள்ளைப் பெற தயாராவிட்டாள்  வாங்கோ வந்து பாருங்கோ" என்று ஊர் முழுக்க பெண்ணை கேவலப்படுத்தி விளம்பரப்படுத்தித் தான் இவற்றை நிரூபிக்கத் தேவையில்லை.

 

இஸ்லாம் நாடுகளில் முன்னர் ஒரு வழக்கம் இருந்தது. தம் பெண் பிள்ளைகள் பருவம் எய்தி விட்டால் வீட்டின் முன் சிறு கொடியை கட்டி விட்டு இவ் வீட்டில் மணமுடிக்கும் வயதுடைய பெண் இருக்கின்றாள் என்று ஏனையவர்களுக்கு உணர்த்துவதற்கு. இன்று சவூதியின் பின் தங்கிய பகுதிகளிலும் சில அடிப்படைவாத இஸ்லாமிய பகுதிகளிலும் தான் இப் பழக்கம் மிச்சம் இருக்கின்றது. ஆனால் எம் மத்தியில்...............?

இது தொடர்பாக என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. மருத்துவ ரீதியிலான காரணங்களால் மாதவிடாய் வரவே வராத பெண்கள் உள்ளனர். இவர்களை பருவம் எய்திய பெண்கள் என்று அழைக்க முடியாதா? இவர்களுக்கு பெண்ணுக்குரிய வாழ்க்கையே இல்லாமல் போய்விடுமா?

 

 

 

இயற்கை செய்யும் வினைகளுக்கு மனிதர்கள் நாம் என்ன செய்ய முடியும் நிழலி ?
 
பார்வையற்றவர் மேல் இரங்கி தொலைக்காட்சி பார்க்காமல் விடுகின்றோமா ?
 
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
பூப்படைதல் பெண்ணின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு. இது ஒரு கேவலமான நிகழ்வல்ல. என் பிள்ளை பிள்ளை பெறத் தயாராகிவிட்டாள் என்று பறை தட்டுவதல்ல இதன் நோக்கம்.
 
வாழ்க்கைப் பயணத்தில் சுற்றம் நாங்கள் உனக்கு துணையிருப்போம் என்பதை கொண்டாடுகின்றோம். மகிழ்ச்சியான நிகழ்வாகக் கொண்டாடுகின்றோம். பூப்படையும் போது பெண்ணிற்கு உளவியல் மாற்றம் ஏற்படுகின்றது. இந்த மாற்றம் சுற்றம் தரும் பலத்தால் நல்ல திசையில் போகின்றது. எதிர் காலம் பற்றிய அவள் பயம் நீங்குகின்றது.
 
இதைக் கொண்டாடுவதால் பெண் எப்படிக் கேவலப் பட முடியும் ? பூப்படைதல் கேவலம்  என்றால் பெண் என்பதே ஒரு கேவலம் என்றல்லாவா ஆகிவிடுகின்றது ?
 
சாமத்தியச் சடங்கு ஏன் என்ற கேள்வி வாழ்க்கையில் கொண்டாட்டங்கள் ஏன் என்ற அடிப்படைக் கேள்வியோடு தொடர்பானது.
 
பெண்ணின் வாழ்வில் நிகழும் முக்கிய நிகழ்வைக் கூடிக் கொண்டாடுகின்றோம்.
 
அவள் பிறப்பில் கூடுகின்றோம்
அவள் பூப்படைதலில் கூடுகின்றோம்
அவள் திருமணத்தில் கூடுகின்றோம்
அவள் இறப்பில் கூடுகின்றோம்
 
மனிதர்கள் நாம் கூடுவது சமூக விலங்குகளாக இருப்பதால்.
 
நாம் தனித்து இருப்பதில்லை.
 
நிழலி சொல்வது போல் கூடாமலேயே சுற்றமும் சந்தோசமும் வரலாம். ஆகவே சடங்கு தேவையில்லை எனலாம் !
 
ஆனால் சடங்கால், கூடும் சுற்றத்தால் வரும் சந்தோசம் அதிகமே !!
நாம் சந்தோசமாய் இருப்போமே !
 
வாழ்க்கையில் வெற்றி என்பது எம்முடைய சமூக வாழ்க்கையின் அளவினாலேயே அளவிடப்படுகின்றது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இந்த விடயத்தில் நூறு வீதம் நெடுக்கரின் கட்சிதான் .

 

இந்த பிள்ளை ஊரிலை இருந்தா இப்படி பேசுமா ? என்று கேட்கினம் .

 

இது என்ன கேள்வி .முன்னேற விடமாட்டார்கள் போலிருக்கு .

 

யாழில் பலர் இப்பவும் வடலிக்க தான் போகினம் போல . :icon_mrgreen:

 

தமிழன் முன்னேறுறதுக்கு சாமத்தியவீடு தடையாய் இருக்கெண்டது எனக்கு இண்டைக்குத்தான் தெரியும். :icon_mrgreen:
 
சாமத்திய வீடு செய்யிறது அசிங்கம் எண்டு நினைக்கிற பிள்ளைக்கு தான் தமிழச்சியாயிருந்தும்  நாக்கை உருட்டிபிரட்டி இங்கிலிசிலை விண்ணாண விளக்கம் குடுக்கிறது அசிங்கமாய் தெரியேல்லையாக்கும்......இல்லாட்டி வெள்ளைக்காரியளுக்கு விளக்கம் குடுத்தாவோ தெரியாது? :icon_mrgreen:
 
வடலி......வடலியெண்டால் அவ்வளவு நக்கலாய்த்தெரியுதோ.....உவ்வளவு பிரச்சனையள் வந்தும் இண்டுவரைக்கும் பஞ்சம் வறுமை இல்லாத பூமி.....சனத்துக்கு எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உந்த வடலியும் பனையளும்தான் கை கொடுக்கின்றது எண்டதையும் கொஞ்சம் நினைவிலை வைச்சுக்கொள்ளுங்கோ....விளங்காட்டி இன்னும் கொஞ்ச நேரத்தாலை விளக்கமாய் எழுதுறன். :D

பெண் பிள்ளைகளை பெறாதவர்களுக்கு சுற்றமும் சந்தோசமும் இல்லையோ ?

எழுத முதல் கொஞ்சம் யோசியுங்கள் .

 

 

 

பெண் பிள்ளைக்கு சாமத்தியச் சடங்கு வேண்டாம் என்பவர்களுக்குச் சொன்னது.
 
மற்றவர்களுக்கு அல்ல.
 
வழுக்கைத்தலையனுக்கு சீப்பு ஏன் ?

நிழலி எப்படி உப்பவே நெடுக்கர் சொல்வதை சரி என்று ஏற்பார்? அவரது மகள் வளர்ந்து தனக்கு சடங்கு செய்யச் சொல்லிக் கேட்டால் அது தேவையில்லாத சடங்கு என்று சொல்லி மகளது உரிமையை மறுப்பாரோ அல்லது இப்ப இருந்தே இப்படியான விழாக்களுக்கு கூட்டிக் கொண்டு போகாமல் தான் இருப்பாரா?

 

 

முதலில் எது உரிமை, எது சடங்கு என்பதில் தெளிவாக இருங்கள். இது ஒரு உரிமை சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. எனவே கண்டிப்பாக மறுப்பேன்.  என் மகளுக்கான கல்வி வாய்ப்பு, ஆரோக்கியம், 18 இன் பின் தனக்கான முடிவை தானே தீர்மானித்தல், தன் தொழில், தன் நட்பு  போன்றவை தான் அவளது உரிமைகள். ஒரு சடங்கு செய்வது அல்ல.

 

நாங்கள் (என் குடும்பம்) எந்தவொரு சாமத்தியச் சடங்கிற்கும் போவதில்லை. இனியும் போகப் போவதும் இல்லை. இதனை யாழில் நிழலி என்ற முகமூடிக்குள் நின்று சொல்லவில்லை. என் சொந்தப் பெயரில் இருக்கும் முகநூலிலும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருபவன் (இங்குள்ள பல கள உறவுகள் அங்கும் இருக்கின்றனர் ).

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எது உரிமை, எது சடங்கு என்பதில் தெளிவாக இருங்கள். இது ஒரு உரிமை சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. எனவே கண்டிப்பாக மறுப்பேன்.  என் மகளுக்கான கல்வி வாய்ப்பு, ஆரோக்கியம், 18 இன் பின் தனக்கான முடிவை தானே தீர்மானித்தல், தன் தொழில், தன் நட்பு  போன்றவை தான் அவளது உரிமைகள். ஒரு சடங்கு செய்வது அல்ல.

நாங்கள் (என் குடும்பம்) எந்தவொரு சாமத்தியச் சடங்கிற்கும் போவதில்லை. இனியும் போகப் போவதும் இல்லை. இதனை யாழில் நிழலி என்ற முகமூடிக்குள் நின்று சொல்லவில்லை. என் சொந்தப் பெயரில் இருக்கும் முகநூலிலும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருபவன் (இங்குள்ள பல கள உறவுகள் அங்கும் இருக்கின்றனர் ).

நிழலி,உங்களுக்கு உங்கட மகளுக்கு சடங்கு செய்ய விருப்பமில்லை அதை தடுக்க உரிமை இருக்குது என்டால் செய்பவர்களை பார்த்து செய்யாதே எனச் சொல்லவும் உங்களுக்கு உரிமை இல்லை.உங்கட மகளுக்கு இதில் விருப்பம் ஏற்பட்டு நீங்கள் இதை மறுப்பதும் ஒரு வித அடக்கு முறை தான்.மேலே நெடுக்கர் எழுதினதை ந்ல்லாய் வாசித்துத் தான் பச்சை குத்தி இருப்பீங்கள் என நினைக்கிறேன்.அவர் எழுதியிருந்த படி பிள்ளைக்கு விருப்பமில்லை என்டால் செய்யக் கூடாது.அது அடக்கு முறை என்று எழுதி இருந்தார் உண்மை தான்.அதே மாதிரி பிள்ளைக்கு செய்ய விருப்பம் இருந்தும் பெற்றோர் செய்ய மறுப்பதும் அடக்கு முறை தான்

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்கள் தங்கட விருப்பத்தை குழந்தைகளில் ஏதோ ஒரு விதத்தில் திணிப்பதும் கண்டிக்கப்பட வேண்டியது.இரு பக்கத்தை சுட்டிக் காட்டி அதில் ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்க் சொல்ல வேண்டும்.அது நியாயம்.அதை விடுத்து ஒரு பக்கத்தை மட்டும் கடைப்பிடி என குழ்ந்தைகளுக்கோ அல்லது மற்றவருக்கோ சொல்லிக் கொடுப்பது சுத்த அயோக்கியத்தனம் என்று நான் நினைக்கிறேன்.மகளை சடங்கு விழாக்களுக்கு ஏன் கூட்டிக் கொண்டு போவதில்லை?...போனால் ஆசைப்பட்டு விட்டு விடுவார் என்று தானே!...நீங்கள் சடங்கு விழாக்களுக்கு கூட்டிக் கொண்டு போய் அதைப் பார்த்த பிற்கும் மகள் தனக்கு சடங்கு செய்ய வேண்டாம் என்டால் அதில் நியாயம் இருக்கு? அதை விடுத்து நீங்கள் இப்படித் தான் இருப்பேன் என ஒரு பாதையைப் போட்டு அதையே உங்கள் பிள்ளைகளை தொடர சொல்வது ரொம்ப அநியாயம் என்பது என் கருத்து.அது கல்வியாக இருந்தாலும் சரி,சடங்காக இருந்தாலும் சரி

நிழலி,உங்களுக்கு உங்கட மகளுக்கு சடங்கு செய்ய விருப்பமில்லை அதை தடுக்க உரிமை இருக்குது என்டால் செய்பவர்களை பார்த்து செய்யாதே எனச் சொல்லவும் உங்களுக்கு உரிமை இல்லை.உங்கட மகளுக்கு இதில் விருப்பம் ஏற்பட்டு நீங்கள் இதை மறுப்பதும் ஒரு வித அடக்கு முறை தான்.மேலே நெடுக்கர் எழுதினதை ந்ல்லாய் வாசித்துத் தான் பச்சை குத்தி இருப்பீங்கள் என நினைக்கிறேன்.அவர் எழுதியிருந்த படி பிள்ளைக்கு விருப்பமில்லை என்டால் செய்யக் கூடாது.அது அடக்கு முறை என்று எழுதி இருந்தார் உண்மை தான்.அதே மாதிரி பிள்ளைக்கு செய்ய விருப்பம் இருந்தும் பெற்றோர் செய்ய மறுப்பதும் அடக்கு முறை தான்

எவராவது சாமத்தியச் சடங்கு செய்யும் போது, செய்யாதே என்று உத்தரவிட முடியாது. ஆனால் ஏன் செய்யக் கூடாது என்று சொல்வதற்கு சுதந்திரம் இருக்கின்றது. அதனைத் தான் நான்(ம்) செய்கின்றோம்.

 

மற்றது, பிள்ளைகளின் எல்லா ஆசைகளையும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதனை மறுக்கவும் முடியும். மறுப்பதற்கான நியாயமான காரணங்களை பிள்ளைகளின் முன் வைக்கும் போது பிள்ளைகள் ஏற்றுக் கொள்வதை நீங்களே நேரிடையாகக் கண்டு இருப்பீர்கள். எம் கொள்கைகளுடன் அவர்கள் ஒத்துப் போகாவிடினும் கூட எம் முடிவின் நியாயங்களை புரிந்து கொள்வார்கள்.

.மகளை சடங்கு விழாக்களுக்கு ஏன் கூட்டிக் கொண்டு போவதில்லை?...போனால் ஆசைப்பட்டு விட்டு விடுவார் என்று தானே!...நீங்கள் சடங்கு விழாக்களுக்கு கூட்டிக் கொண்டு போய் அதைப் பார்த்த பிற்கும் மகள் தனக்கு சடங்கு செய்ய வேண்டாம் என்டால் அதில் நியாயம் இருக்கு?

 

எனக்கு மகள் பிறந்து 4 வருடங்கள் தான் ஆகின்றது. ஆனால் சாமத்தியச் சடங்குக்கு போகாமல் விட்டு 20 வருடங்களுக்கு மேலாகின்றது. என் மனைவியும் செல்வதில்லை. யாரும் அழைப்பு விடுத்தால், அவரே ஏன் போகக் கூடாது என்று வகுப்பெடுக்கத் தொடங்கி விடுவார்.

 

எனக்கு கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. ஆனால் மகளும் மகனும் திருநீறு பூசிக் கொள்வதில் இருந்து கோயில்களுக்கு போவது வரைக்கும் விரும்பிச் செய்வினம். இது நம்பிக்கை பாற்பட்டது. ஆனால் சாமத்தியச் சடங்கு நம்பிக்கைபாற்பட்டது அல்ல. பெண் உடலை கேவலப்படுத்தும் ஒரு சடங்கு. இதன் பின் தான் தீட்டு போன்ற நம்பிக்கைகளும், மாதவிடாய் காலங்களில் சாமி கும்பிடாதே போன்ற பிற்போக்குத் தனங்களும் கட்டியமைக்கப்படுகின்றன. பிள்ளைகளுக்கு தெளிவான சிந்தனை முறைமையும், சுதந்திரமான உணர்வுகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும் என்று வலிமையாக எண்ணும் நாம்  கண்டிப்பாக இவற்றை பிள்ளைகளுக்கு ஒரு போதும் அறிமுகப்படுத்தி பரீட்சை செய்ய மாட்டோம்.

 

Edited by நிழலி
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

சில குடும்பங்களில் பார்த்தீர்கள் என்றால் தொடர்ந்து இரண்டு,மூன்று பெண் பிள்ளைகள் இருப்பார்கள்.அத்தனை பிள்ளைகளுக்கு செய்வதும் கஸ்ரம் தானே.தற்போது எல்லாம் இவ்வாறான விழாக்கள் செய்வதைத் தான் பிள்ளைகள் விரும்புகிறார்கள்.நாங்கள் அப்பாவிப் பிள்ளைகள் என்று நினைப்போம். அப்பாவிகள் ஒரு கட்டத்தின் மேல் ஸ்மார்ட்டாக ஒவ்வொரு விடையத்தையும் நகர்த்தி செல்வார்கள்..என்னைக் கேட்டால் சொல்வேன்..
இவற்றுக்காக செலவிடும் பணத்தை ஒவ்வொரு பிள்ளைக்கும் பகிர்ந்து ஒரு வங்கியிலோ இல்லை ஏதோ ஒரு விடையத்திற்காக முதலிடலாம். அவர்கள் எதிர்கால படிப்பு செலவுக்கோ இல்லை திருமண வயதை அடையும் போது அவற்றுக்கோ எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும்..இவ்வாறன விடையங்களை அந்தப் பிள்ளைகளுக்கு யாரும் எடுத்து சொல்வதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

தீட்டுடன் கோயிலுக்குப் போகக் கூடாது,சாமி கும்பிடக் கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லைத் தான்.ஆனால் யோசித்துப் பார்க்கும் போது ஒரு பெண் தீட்டாக இருக்கும் போது,கணவரோடு உடலுறவு கொள்வாரா இல்லைத் தானே![சரியாத் தெரியவில்லை]...அப்படி இருக்கும் போது எப்படி படி சாமியை கும்பிடலாம்?...கணவன்,மனைவி தாம்பத்தியம் புனிதம் என்டால் அதை விடப் புனிதமானவர் கடவுள் இல்லையா?...அதை விட 3 நாளாவது பெண்கள் நிம்மதியாக இருக்கட்டும் என்று முன்னோர்கள் நினைத்திருக்கலாம்....தீட்டூடன் கோயிலுக்குப் போகக் கூடாது,சாமி கும்பிடக் கூடாது என்று சொல்வது எல்லாம் முட்டாள்தனம் என்று நினைக்கும் எந்தப் பெண்ணாவது அதை மீறி இருக்கிறார்களா?

ஏதோ ஒரு காரணத்திற்காக பருவமடையாமல் இருக்கும் பெண்,பெண் இல்லையா என்று கேட்டால் மிகவும் கசக்கதக்க உண்மை முழுமையான பெண் இல்லை என்பதாகும்.ஒரு பெண் பருவமடையாட்டில் யார் அவரைக் கட்டப் போறார்கள்?...இந்த சடங்குகள் எல்லாம் குப்பை என்று சொல்பவர்கள் கூட இப்படியான பெண்களை கட்ட மாட்டார்கள் என்பதே உண்மை

Edited by ரதி

படி சாமியை கும்பிடலாம்?...கணவன்,மனைவி தாம்பத்தியம் புனிதம் என்டால் அதை விடப் புனிதமானவர் கடவுள் இல்லையா?...அதை விட 3 நாளாவது பெண்கள் நிம்மதியாக இருக்கட்டும் என்று முன்னோர்கள் நினைத்திருக்கலாம்....தீட்டூடன் கோயிலுக்குப் போகக் கூடாது,சாமி கும்பிடக் கூடாது என்று சொல்வது எல்லாம் முட்டாள்தனம் என்று நினைக்கும் எந்தப் பெண்ணாவது அதை மீறி இருக்கிறார்களா? ஏதோ ஒரு காரணத்திற்காக பருவமடையாமல் இருக்கும் பெண்,பெண் இல்லையா என்று கேட்டால் மிகவும் கசக்கதக்க உண்மை முழுமையான பெண் இல்லை என்பதாகும்.ஒரு பெண் பருவமடையாட்டில் யார் அவரைக் கட்டப் போறார்கள்?...இந்த சடங்குகள் எல்லாம் குப்பை என்று சொல்பவர்கள் கூட இப்படியான பெண்களை கட்ட மாட்டார்கள் என்பதே உண்மை

 

உங்கள் உலகம் மிகவும் குறுகியதாக இருக்கின்றது ரதி. என் நண்பரும் மனைவியும் ஒன்றாக படித்து காதலித்து திருமணம் ஆனவர்கள். இருவருமே எனது நண்பர்கள். இதில் நண்பரது மனைவி நான் கூறிய மாதிரி மருத்துவ காரணங்களால் மாதவிடாய் வரவே இல்லை.  அது ஒரு மருத்துவ ரீதியிலான பிரச்சனை. இருவரும் கலியாணம் கட்டி 2 பிள்ளைகளை தத்தெடுத்து ஒற்றுமையாக வாழ்கின்றார்கள். கனடாவில் ஓரளவுக்கு பிரபலமானவர்களாகவும் இருக்கின்றனர்.

 

மாதவிடாய்க் காலங்களில் சாமி அறைக்குள் போகக் கூடாது, சாமி கும்பிடக்கூடாது என்று உத்தரவுகளை மீறி 'நான் ஒரு பெண்'. 'என் உடலும், மனித பிறப்பையே தீர்மானிக்கும் மாதவிடாயும் தீண்டத் தகாதன அல்ல' என்று தீர்மானித்த பல பெண்களை நான் கண்டுள்ளேன்.

 

மாதவிடாய் தீட்டு என்றால் பெண் வயிற்றில் இருந்து பிரசவமாகும் அனைத்து சீவ ராசிகளும், மனிதர்களும் தீக்குளித்து புனிதர்களாக தம்மை பிரகடனப்படுத்தட்டும்.

 

நன்றி

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்தில் தீட்டுடன் கோயிலுக்கு மட்டுமல்ல.. வீட்டிற்குள் பல பகுதிகளுக்கும் போக விடமாட்டார்கள். ஏனெனில் அந்தக் காலத்தில் விஸ்பர், ஆல்வேய்ஸ் எல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை. :rolleyes: சாரத்தை கிழித்துப் பாவிப்பது துணிமணிகளின் விலை குறைந்தாற்பிறகு வந்திருக்கக்கூடிய நடைமுறை.  :huh:

 

ஆகவே, அதற்கு முற்பட்ட காலங்களில் மாதவிடாய் காலங்களில் பெண்களை ஒரு ஒதுக்குப் புறமாக இருக்க வைத்திருக்கலாம். இதற்குமேல் விளக்கமாக எழுத விரும்பவில்லை. :rolleyes:

 

இந்தக் காலத்தில் நீச்சல் குளத்துக்கே போகிறார்கள். அவ்வளவு பாதுகாப்பு வசதிகள் உள்ளனவாம்..  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதின மாதிரியும் பருவமடையா பெண்களை திருமணம் செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள் நிழலி இல்லை என சொல்லவில்லை.ஆனால் எத்தனை பேர் லட்சத்தில் ஒருவராக இருப்பர்.இப்படி கட்டின ஆணும்,பெண்ணும் மெத்த படித்தவராக இருப்பார்கள் அத்தோடு நீங்களே சொல்லி விட்டீர்கள் இது காதல் திருமணம்.உதை எழுதும் நீங்களோ உங்களுக்கு ஆதரவு தெரிவித்த யாழில் உள்ளோரோ தங்கட மகனுக்கு இப்படி ஒரு பெண்ணை கட்டிக் கொடுப்பார்களா?...யாழில் நான் கண்ட பெரும்பாலானோர் தாங்கள் எழுதுறத்திற்கும்,நிஜ வாழ்க்கையில் நடந்து கொள்கிறதிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.நீங்கள் விதி விலக்காய் இருப்பீர்கள் என நான் நம்புகிறேன். மற்றப்படி கனடாவைப் பற்றி தெரியவில்லை ஆனால் லண்டனில் பெரும்பான்மையானோரிடம் சாமியறை என்று இல்லை.தீட்டோ,இல்லையோ அறை பாவிக்க வேண்டும் என்டால் ஒன்றும் செய்யேலாது.பாவிச்சு தானே ஆக வேண்டும்!...மறறப் படி எனக்கு தோணிச்சென்டால் நான் மாதவிடாயுடனும் சாமி கும்பிட்டு இருக்கிறன். பல மொரிசியஸ் நாட்டவர்கள் கோயிலுக்கு தீட்டுடன் வருவார்கள்.அவர்கள் கலாச்சாராப்படி தீட்டுடன் கோயிலுக்குப் போகலாம்,சாமி கும்பிடலாமாம்

நீங்கள் எழுதின மாதிரியும் பருவமடையா பெண்களை திருமணம் செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள் நிழலி இல்லை என சொல்லவில்லை.ஆனால் எத்தனை பேர் லட்சத்தில் ஒருவராக இருப்பர்.இப்படி கட்டின ஆணும்,பெண்ணும் மெத்த படித்தவராக இருப்பார்கள் அத்தோடு நீங்களே சொல்லி விட்டீர்கள் இது காதல் திருமணம்.உதை எழுதும் நீங்களோ உங்களுக்கு ஆதரவு தெரிவித்த யாழில் உள்ளோரோ தங்கட மகனுக்கு இப்படி ஒரு பெண்ணை கட்டிக் கொடுப்பார்களா?...யாழில் நான் கண்ட பெரும்பாலானோர் தாங்கள் எழுதுறத்திற்கும்,நிஜ வாழ்க்கையில் நடந்து கொள்கிறதிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.நீங்கள் விதி விலக்காய் இருப்பீர்கள் என நான் நம்புகிறேன். மற்றப்படி கனடாவைப் பற்றி தெரியவில்லை ஆனால் லண்டனில் பெரும்பான்மையானோரிடம் சாமியறை என்று இல்லை.தீட்டோ,இல்லையோ அறை பாவிக்க வேண்டும் என்டால் ஒன்றும் செய்யேலாது.பாவிச்சு தானே ஆக வேண்டும்!...மறறப் படி எனக்கு தோணிச்சென்டால் நான் மாதவிடாயுடனும் சாமி கும்பிட்டு இருக்கிறன். பல மொரிசியஸ் நாட்டவர்கள் கோயிலுக்கு தீட்டுடன் வருவார்கள்.அவர்கள் கலாச்சாராப்படி தீட்டுடன் கோயிலுக்குப் போகலாம்,சாமி கும்பிடலாமாம்

 

கனடாக் காரர்களின் சாமியறை ஒரு closet தான். ஒரு Closet இற்குள் சாமிப் படங்களை வைத்து கும்புடுவது தான் எங்கள் ஃபஷன் இப்ப.

 

மாதவிடாய் காலங்களில் சாமி கும்பிடாமல் விடுவது, சாமியறைக்குள் போகாமல் இருப்பது போன்றவை அபத்தமான விடயங்கள் என்று எனக்கு என் அப்பா விளங்கப்படுத்திய விடயங்கள். அவர் ஒரு போதுமே இது போன்ற விடயங்களா வரவேற்றதும் இல்லை. அவரைப் போல நானும் தொடர்கின்றேன்.

 

என் மகனுக்கு அப்படி ஒரு பெண் கிடைத்தால் கட்டி வைப்பேனா இல்லையா என்ற கேள்விக்கு இடம் வராது. ஏனென்றால் என்னிடம் அனுமதி வாங்கி கட்டும் நிலையில் அவன் வளர மாட்டான். ஆகக் குறைந்தது கலியாணத்துக்கு கூப்பிட்டாலே பெரிய புண்ணியம் :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவன்.. தன்ர சொந்தக் கருத்தைச் சும்மா எழுதேல்ல. மேற்குலக சுகாதார.. சமூக அமைப்புக்களில் உள்ள நடைமுறைகளை சரியாக விளங்கிக் கொண்டே எழுதுகிறேன். நீ விடுவியோ.. நான் விடுவனோ என்பதல்ல.. பிரச்சனை. அடுத்தவரின் உரிமையை சரியான நேரத்தில் அவர் தன் விருப்புக்கு.. அனுபவிக்க விடுங்கள் என்பது தான் இன்று மனித சமூகம் வேண்டி நிற்கும் முக்கிய அம்சம். ஒருவர் சட்டத்தை சமூகப் பொது நீதியை ஒழுங்கை.. ஒழுக்கதை மீறாத வகையில் தனது உரிமையை பெற்று இந்தப் பூமியில் வாழ முடியும். இது மனிதர்களுக்கு. மற்ற உயிரினங்களுக்கு இது இன்னும் பரந்தது.

 

கலாசாரம்.. பண்பாடு.. என்ற போர்வைகளால் மனித சுதந்திரத்தை.. சுயமான சிந்தனையை செயற்பாட்டை முடக்கிப் போட எனி முடியாது. அதுக்கான காலம் கடந்தேறி விட்டது. இன்னும் அந்தக் காலத்தில் இருப்பவர்கள் வெளியே வர முனையுங்கள். இன்றேல் காலம் உங்களை முந்திச் சென்றுவிடும். பின்னர் அங்கலாய்க்காதீர்கள். :):icon_idea:

 

மற்றும்படி.. இது விடயத்தில் விதண்டாவாதம் செய்யும் நோக்கம் எங்களுக்கு இல்லை. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் பேசாமல் என்னிடம் எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை என்று எழுதியிருக்கலாம்.அல்லது கடைசியாக வந்து உந்த கருத்தை எழுதாமல் விட்டு இருக்கலாம்:D

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

நாங்க பிறந்த நாளும் கொண்டாடுவதில்லை. திருமணம்.. சாமத்திய வீடு போன்ற நிகழ்வுகளுக்குப் போறதும் இல்லை. அப்படி போக வேண்டும் கொண்டாட வேண்டும் என்று ஒவ்வொரு உயிரினமும் இந்தப் பூமிப் பந்தில் நினைத்தால்.. பூமி ஒரு கொண்டாட்ட பூமியாத்தான் இருக்கும்.

 

மனிதர்கள் தங்கள் சுய தம்பட்டத்துக்கு செய்து கொள்வதை எல்லாம் வாழ்க்கை என்று சொல்ல முடியாது. வாழ்க்கை என்பது தனக்கும் பிறருக்கும் பூமிக்கும் பயனுள்ளதாக வாழ்ந்தலில் உள்ளதே அன்றி.. இந்தக் கொண்டாட்டங்களால் இல்லை..! வாழ்க்கை நிரந்தரமில்லை. அதற்குள் பலவற்றையும் வாழ்ந்து பார்க்க வேண்டுமே தவிர.. ஒரே சுழற்றியில் சிக்கிக் கொண்டு சுற்றுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. :lol::icon_idea:

 

நெடுக்கர் பேசாமல் என்னிடம் எழுதுவதற்கு ஒன்றுமே இல்லை என்று எழுதியிருக்கலாம்.அல்லது கடைசியாக வந்து உந்த கருத்தை எழுதாமல் விட்டு இருக்கலாம் :D

 

இரத்தம் துடக்கு.. கலம் தீட்டு என்ற கூட்டத்தோடு நாங்க கதைக்க வெளிக்கிட்டால்.. இரத்தம் இழையம்.. கலம் உயிரின அடிப்படைக் கட்டமைப்பு என்ற அடிப்படை உயிரியலுக்கு எதிராக எல்லா நாங்கள் பேச வேண்டி இருக்கும். அப்புறம்.. எல்லாரும் இரத்தத்தை வெளில பாய்ச்சிட்டு.. கலமற்ற உடலின்றி ஆவியாகத்தான் கோவில் கும்பிட வேண்டி இருக்கும்.

 

அந்தளவுக்கு பெற்ற கல்வி ஒன்றும் எங்களை முட்டாளாக்கி விடவில்லை. அந்த வகையில்.. உங்களின் விதண்டாவாதத்தை கருத்தில் எடுக்கும் நோக்கம் எதுவும் இல்லை. என்ன சொன்னாலும்.. இதுதான் உங்களுக்குப் பதில். விளங்கிக் கொண்டு மூட நம்பிக்கையில் இருந்து வெளியே வாருங்கள். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பார்ட்டிக்குப் போறேல்லையா அல்லது ஒருத்தரும் உங்களை கூப்பிடுறேல்லையாlol..உங்கள மாதிரி மெத்தப் படித்தவர்கள் நிஜத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தெரிந்தது தானே!...எல்லாம் ஒரு கல்யாணத்தை கட்டி மனிசியோட விழாக்களுக்கு போக தொடங்கினால் எல்லாம் சரி வரும்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பார்ட்டிக்குப் போறேல்லையா அல்லது ஒருத்தரும் உங்களை கூப்பிடுறேல்லையாlol..உங்கள மாதிரி மெத்தப் படித்தவர்கள் நிஜத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தெரிந்தது தானே!...எல்லாம் ஒரு கல்யாணத்தை கட்டி மனிசியோட விழாக்களுக்கு போக தொடங்கினால் எல்லாம் சரி வரும்

 

நான் பார்ட்டிக்கு போனாலும்.. எனது சந்தோசத்திற்காகத்தான் போவன். அடுத்தவன் தாலி கட்டிறதை.. பார்த்து ரசிச்சு.. றூமுக்க தள்ளி விடுற கொண்டாட்டங்களுக்கு போகமாட்டன். :D

 

மெத்தப் படிச்சவன்.. படிச்ச மாதிரிக்குத்தான் நடந்து கொள்வான். அதனை மற்றவர்கள் விளங்கிக் கொள்வது கடினம். நமக்கு முடியாததை முடியாட்டி விட்டிடனும் அக்கோய். அதையே  மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருப்பதிலும் பயனில்லை. :)

 

கல்யாணம் என்பது ஒரு மாயை. மனிதர்களின் சுய ஆற்றலை சிதைக்கும்.. ஒன்று. :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்ட்டிக்கு போனாலும்.. எனது சந்தோசத்திற்காகத்தான் போவன். அடுத்தவன் தாலி கட்டிறதை.. பார்த்து ரசிச்சு.. றூமுக்க தள்ளி விடுற கொண்டாட்டங்களுக்கு போகமாட்டன். :D

மெத்தப் படிச்சவன்.. படிச்ச மாதிரிக்குத்தான் நடந்து கொள்வான். அதனை மற்றவர்கள் விளங்கிக் கொள்வது கடினம். நமக்கு முடியாததை முடியாட்டி விட்டிடனும் அக்கோய். அதையே  மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருப்பதிலும் பயனில்லை. :)

கல்யாணம் என்பது ஒரு மாயை. மனிதர்களின் சுய ஆற்றலை சிதைக்கும்.. ஒன்று. :icon_idea::lol:

ஆமாம் நான் எதை முயற்சி செய்து முடியாமல் விட்டேன்? எனக்கு படிப்பு கம்மியா அதனால் நீங்கள் எழுதியதை விளங்கிக் கொள்வது கஸ்டமாக உள்ளது.ம்ற்றப்படி கல்யாணத்தை பற்றின உங்கள் கருத்தானாது "ஆடத் தெரியாதவன் மேடை ச்ரியில்லை" என்ட மாதிரி இருக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பெண் பிள்ளைக்கு சாமத்தியச் சடங்கு வேண்டாம் என்பவர்களுக்குச் சொன்னது.
 
மற்றவர்களுக்கு அல்ல.
 
வழுக்கைத்தலையனுக்கு சீப்பு ஏன் ?

 

 

 நூற்றாண்டு காலத்துக்கும் எழும்பேலாத அளவுக்கு ஒரு நெத்தியடி... :)

இப்பொழுது உள்ள சமூகச் சூழலில் சாமத்திய சடங்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும். ஆனால் ஜட்டம் டான்சையும், அழகு போட்டிகளையும் அங்கீகரிக்கும் இந்தச் சமூகத்தில் சாமத்திய சடங்கு ஒன்றும் கேவலம் இல்லையே !!
 
விக்டோரியா காலத்திற்கு பின்பு கற்பு பற்றியும்  பாலியல் விடயங்களிலும் மக்கள் கொண்டிருந்த கருத்துக்களில் உலகளவில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அதனால் பாலியல் உறுப்புகளின் பெயர்களையே உச்சரிக்க  கூச்சப்படும் சமூகமாக மாறிப்போனோம் நாம்!!
 
1940 களில் ஒன்றுபட்ட இந்தியாவில்(இலங்கையும் உள்பட) மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் 29 வயது தான். அதற்க்கு முன்பு யோசித்துப் பாருங்கள் போர், இயற்கைப் பேரழிவு, பல தோற்று நோய்கள் என மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் 29 வயதை விட குறைவாகத்தான் இருந்திருக்கும். அப்படி இருந்த சூழலில் இனப்பெருக்கத்திற்கு முக்கிய நிகழ்வாக கருதப்பட்ட பூப்படைதல் தொழப்பட்டது விழாவாக கொண்டாடப்பட்டது. சமூகத்தில் அவள் முக்கியமாக கொண்டாடப்பட்டாள்... அறுவடைக்கு தயாராகும் பயிர்களையே தொழும் இந்த வேளாண்மைச்  சமூகத்தில் புது உயிரை ஈன்றெடுக்க தயாராகும் பெண்ணை வாழ்த்த விழா எடுப்பதில் தவறில்லையே...!! 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பெண் பூப்படைவது என்பது பெண் பிள்ளைகளின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. இந்த மகிழ்வான செய்தியை நெருங்கிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவதில்  தவறு இல்லை. சிறுமியாக ஓடியாடித் திரிந்தவள் இன்று குமரியான நிகழ்வு சிறுவிழாவாக பதியப்படுவது பாதகமில்லை.    தகவல் தொழில்நுட்ப காலத்திற்கு முன் சிறுமி தனக்குள்  ஏற்பட்ட மாற்றத்தை பற்றி  அறிந்திருக்கமாட்டாள். அத்தருணத்தில் தாயும் உறவினர்களும்  சிறுமியை அன்புடன் கவனித்து, பரிசுகள் கொடுத்து , நல்ல அறிவுரைகளை கூறி சிறுமிக்குத் தேவையாக எச்சரிக்கை உணர்வுகளையும் வழிகாட்டல்களையும் கொடுக்கிறார்கள்.    

இன்று தகவல் தொழில்நுட்பம் இளைய தலைமுறையின் கைகளில் இருப்பதால் அவர்கள்  அப்பா அம்மாவிடம் கேட்டு அறிவதை விட  கோகுலிடம் (Google)  கேட்டு அறிந்து கொள்கிறார்கள். தயாராக இருக்கிறார்கள்.

தாயகத்தில் ஒவ்வொரு ஊரிலும் பிராந்தியத்திலும் விழாக்களை  குடும்பத்தில் வயதில் மூத்த ஒருவர் நின்று வழிநடத்துவார். சில பல சடங்கு சம்பிரதாயங்களுக்கு விளக்கமும் கொடுப்பார்கள்.

ஆனால் புலம்பெயர் தேசத்தில் விழாக்களில் சடங்கு சம்பிரதாயங்களில் வீடியோ, போட்டோ எடுப்பர்கள் தான் நெறிப்படுத்துகிறார்கள்.    வீடியோ, போட்டோ எடுப்பவர்கள் தங்கள் திறமையை காட்ட பெண் பிள்ளை குளிக்கும் காட்சி, தென்னிந்திய சினிமாப் பாடலுக்கு ஒரு வெளிப்புறப் படப்பிடிப்பு....., பிள்ளையை வெளிக்கிடுத்தி அங்கம் அங்கமாக படம் பிடித்து அதனை வர்ணித்து  ஒரு பின்னனிப் பாடல் (அதனை தமது விளம்பரத்துக்காக  யூரியுப்பில் youyube போட்டு விடுவார்கள்  ) என குடும்ப விழாவினை கேலிக்கூத்தாக மாற்றிவிட்டார்கள். அடுத்தவனை விட நாம் வசதியாக இருக்கிறோம் என்று வீம்பு காட்ட
விழாவினை விரிவாக்கும் பெற்றோரும் இவ் அருமையான குடும்ப விழாவினை ஒரு இழிவான விழாவாக மாற்றிவிட்டனர்

 நூற்றாண்டு காலத்துக்கும் எழும்பேலாத அளவுக்கு ஒரு நெத்தியடி... :)

கருத்தை வாசிக்காமல் ஆளை பார்த்து பச்சை குத்தும் யாழ் -------கூட்டத்திற்கு நல்ல உதாரணம் .

 

அவர் காணோலியே பார்க்கவில்லையாம் . :icon_mrgreen:

நானும் இந்த விடயத்தில் நூறு வீதம் நெடுக்கரின் கட்சிதான் .

 

இந்த பிள்ளை ஊரிலை இருந்தா இப்படி பேசுமா ? என்று கேட்கினம் .

 

இது என்ன கேள்வி .முன்னேற விடமாட்டார்கள் போலிருக்கு .

 

யாழில் பலர் இப்பவும் வடலிக்க தான் போகினம் போல . :icon_mrgreen:

 

கலாச்சாரம் என்ற பெயரில் பழமைவாதத்திற்குள் புதைந்து கிடக்கும் சமுதாயத்திடன் இவ்வாறான காணொளிகள் கடும் கோபத்தை உருவாக்கும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும். அதேவேளை இளம் சமுதாயத்தின் புதிய சி்ந்தனைகளை வரவேற்கவேண்டும். எதிர்காலம் அவர்களுடையது. கலாச்சாரம் என்ற பெயரில் 10 ம் 15 ம் நூற்றாண்டு பழக்கவழக்கங்களை அப்படியே மாற்றமின்றி ஏற்று கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு  இல்லை. துரதிஷ்ரவசமாக பழமையை கேள்வி கேட்காமல் கைக்கொள்ளவேண்டும் என்ற வர்க்கத்தினர் தமிழ் மக்களிடம் அதிகம் பேர் உள்ளனர். அதனாலேயே இந்த நிலமை.

 

மேற் கண்ட பெண் பிள்ளைகள் போல் புதிய சிந்தனை இளையவர்களிடம் வளர காலப்போக்கில் நிலமை மாறும் என எதிர்பார்க்கலாம்.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.