Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாமத்திய சடங்கின் அபத்தங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சாரம் என்ற பெயரில் பழமைவாதத்திற்குள் புதைந்து கிடக்கும் சமுதாயத்திடன் இவ்வாறான காணொளிகள் கடும் கோபத்தை உருவாக்கும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேண்டும். அதேவேளை இளம் சமுதாயத்தின் புதிய சி்ந்தனைகளை வரவேற்கவேண்டும். எதிர்காலம் அவர்களுடையது. கலாச்சாரம் என்ற பெயரில் 10 ம் 15 ம் நூற்றாண்டு பழக்கவழக்கங்களை அப்படியே மாற்றமின்றி ஏற்று கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு  இல்லை. துரதிஷ்ரவசமாக பழமையை கேள்வி கேட்காமல் கைக்கொள்ளவேண்டும் என்ற வர்க்கத்தினர் தமிழ் மக்களிடம் அதிகம் பேர் உள்ளனர். அதனாலேயே இந்த நிலமை.

மேற் கண்ட பெண் பிள்ளைகள் போல் புதிய சிந்தனை இளையவர்களிடம் வளர காலப்போக்கில் நிலமை மாறும் என எதிர்பார்க்கலாம்.

இவர்களின் புதுமையான சிந்தனை, என்னை நாளும் பொழுதும் வியப்பில் ஆழ்த்துகின்றது!  :D

இதோ இந்த இளைய தலைமுறையின் நவீன சிந்தனையில், இன்று பூத்த இன்னுமொரு சமுதாயப் புரட்சிகரமான கருத்து! 

இவரது முகப்புத்தக வலைப்பூவிலிருந்து பிடுங்கியது...!  :D

10176052_292469597585263_523123991168625

  • Replies 66
  • Views 10.6k
  • Created
  • Last Reply

இவர்களின் புதுமையான சிந்தனை, என்னை நாளும் பொழுதும் வியப்பில் ஆழ்த்துகின்றது!  :D

இதோ இந்த இளைய தலைமுறையின் நவீன சிந்தனையில், இன்று பூத்த இன்னுமொரு சமுதாயப் புரட்சிகரமான கருத்து! 

இவரது முகப்புத்தக வலைப்பூவிலிருந்து பிடுங்கியது...!  :D

10176052_292469597585263_523123991168625

புங்கையூரான் இது சமுதாய கருத்து அல்ல. இளையவர்களின் ஒரு ஜோக் மட்டுமே. சிரி்த்து போகும் ஒரு விடயத்தை சீரியஸாக தூக்கி பிடிப்பது நல்லதல்ல. இது போன்ற பல ஜோக் இணையத்தில் பார்க்கலாம். பழைய காலத்தில் சந்தியிலும், மதகுகளிலும் ஏன் கோவில்களிலும் இளையவர்களினம் பரிமாறபட்ட ஜோக் களும் இந்த ரீதியானதே. இதை விட மோசமானதும் உண்டு.

சரி...சரி....இதுக்குப் போய் டென்சன் ஆகலாமா? :o

நானும் சிரித்துவிட்டுப் போகின்றேன்!  :icon_idea:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சரி. இவ்வளவு வேண்டாம். திருமணத்தின்போது ஆண்களுக்கு ஏன் பாலறுகு வைத்துக் குளிப்பாட்டுவார்கள் தெரியுமா? அது ஆண்களுக்கான சாமத்தியவீடு. ஆண்பிள்ளைகள் சின்ன வயதில் இப்படிச் செய்யச் சம்மதிக்கமாட்டார்கள் என்பதால் திருமணத்தின்போது, சேர்த்துச் செய்து வைப்பார்கள். எனவே ஆண்களுக்கும் சாமத்திய வீடு செய்வதைத் தடை செய்ய வேண்யப் போராடும்படி பகுத்தறிவாளர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

சமாத்தியவீடு செய்வது தப்பா, சரியா என்று எல்லாம் தெரியவில்லை. ஆனால் அது என் பெண்பிள்ளையை வந்து கலியாணம் கட்டிவிட்டுப் போங்கள் என்று சொல்வதற்காக இப்போது செய்வதில்லை. அல்லது, அது உணர்வினைத் தூண்டவும் செய்வதில்லை. சிலபேருக்கு மட்டும் அந்தக் குழந்தைகளைப் "பிகர்" என்று கண்ணுக்குள் தெரியலாம்....அவ்வளவே. ஒரு காலத்தில் பரதநாட்டியம் பாலியல் நடனமாகத் தெரிந்தது. இன்று கலாச்சார அடையாளமாக மாறிவிடவில்லையா? சமாத்தியவீடு இன்று பாலியல் நோக்கத்தில் பெற்றோர்கள் செய்விக்கின்றார்களா என்ன?

அசிங்கம் என்பது மனம் தான் என நினைக்கின்றேன். சாதாரணமாக ஆண்களின் உள்ளாடைகளைப் பற்றிக் கதைப்பதைச் சாதாரணமாக எடுப்பார்கள். கோவணம், யட்டி என்று யாழ்களத்தில் எத்தனை பேர் கருத்து எழுதியிருப்பார்கள். ஆனால் பெண்களின் உள்ளாடை என்று எழுதும்போது மனரீதியாகச் சங்கடமாக இருக்கலாம். அவ்வாறே சாத்தியவீடு என்பது தனித்துச் செய்யும்போது, அசிங்கமாக இருப்பதாக உணரக்கூடும். கனடாப் தமிழ்ப் பெண்களாகட்டும், யாராட்டும்.... ஏன் பெண்களுக்காக இப்போது, இப்போது வளைக்காப்புச் செய்கின்ற நாகரீகத்தை உள்வாங்கியுள்ளனர். நானறிந்து, ஊரில் இப்படிச் செய்வதாகத் தெரியவில்லை. ஆங்கிலேயர் "பேபி சவர்" செய்கின்றனர் என்றவுடன் இவர்களும் தொடங்கிவிட்டனர்.மேலே காணோளியில் உள்ள பெண்ணின் சகோதரிக்கும் வளைக்காப்பு சிலவருடங்களுக்கு முன்னர் செய்தார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் யூதர்களின் சிறுமிகளுக்கான சமாத்தியவீடு என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களுக்கானது..http://www.youtube.com/watch?v=cfpmE9kYOlM

ஆனால் இவர்களின் பண்டிகை, சிறுவர்களின் 13வது வயதை வைத்தே கணிக்கப்படுகின்றது

http://www.youtube.com/watch?v=Bx0IuIC_QiI

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ சிவசங்கரி எழுதிய பாலங்கள் நாவல் தான் ஞாபகம் வருகுது

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது உள்ள சமூகச் சூழலில் சாமத்திய சடங்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும். ஆனால் ஜட்டம் டான்சையும், அழகு போட்டிகளையும் அங்கீகரிக்கும் இந்தச் சமூகத்தில் சாமத்திய சடங்கு ஒன்றும் கேவலம் இல்லையே !!
 
விக்டோரியா காலத்திற்கு பின்பு கற்பு பற்றியும்  பாலியல் விடயங்களிலும் மக்கள் கொண்டிருந்த கருத்துக்களில் உலகளவில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அதனால் பாலியல் உறுப்புகளின் பெயர்களையே உச்சரிக்க  கூச்சப்படும் சமூகமாக மாறிப்போனோம் நாம்!!
 
1940 களில் ஒன்றுபட்ட இந்தியாவில்(இலங்கையும் உள்பட) மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் 29 வயது தான். அதற்க்கு முன்பு யோசித்துப் பாருங்கள் போர், இயற்கைப் பேரழிவு, பல தோற்று நோய்கள் என மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் 29 வயதை விட குறைவாகத்தான் இருந்திருக்கும். அப்படி இருந்த சூழலில் இனப்பெருக்கத்திற்கு முக்கிய நிகழ்வாக கருதப்பட்ட பூப்படைதல் தொழப்பட்டது விழாவாக கொண்டாடப்பட்டது. சமூகத்தில் அவள் முக்கியமாக கொண்டாடப்பட்டாள்... அறுவடைக்கு தயாராகும் பயிர்களையே தொழும் இந்த வேளாண்மைச்  சமூகத்தில் புது உயிரை ஈன்றெடுக்க தயாராகும் பெண்ணை வாழ்த்த விழா எடுப்பதில் தவறில்லையே...!! 

மனிதனுக்கு ஆயுள் 28ஆகா இருக்கு போது மனித வாழ்வு ஒரு வட்டத்திற்குள் இருந்தது.
இன்று மனிதனுக்கு உலகே ஒரு வட்டமாக இருக்கும்போது .............
இது தேவையா ?
என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டியது.
 
இன்று நடக்கும் தெரு கூத்திற்கு ஏதும் காரணம் இருக்கிறதா?
1420 ஆண்டில் சாமத்தியவீடு சரியா தவறா என்பது ......... பிறிதுபட்ட வாதம்.
இன்று தேவையா இல்லையா ...........
என்பது அங்கே என்ன நடக்கிறது ....?
ஏன் நடக்கிறது ?
என்பவற்றை ஆதராமாக கொண்டு விவாதிக்க பட வேண்டும்.

இன்னும் கொஞ்ச காலத்தால் குழந்தை பெற சோதனைக் குழாய்முறை இருக்கும்போது... உடலுறவு அவசியம்தானா என்றா கேள்வியும் எழலாம்!!  :D  :o

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச காலத்தால் குழந்தை பெற சோதனைக் குழாய்முறை இருக்கும்போது... உடலுறவு அவசியம்தானா என்றா கேள்வியும் எழலாம்!!  :D  :o

ஏன் ஊரில மாட்டு வைத்தியர் மாட்டுக்கு பெரிய ரியூப் விட்டு.. சினைப்படுத்த விடுவதில்லையோ. அப்படியும் செய்யலாம். :lol:

G2850031-Embryos_being_removed_from_a_su

slide08.jpg

எது திறம்..???! :lol:

------------------

அதுசரி.. குழந்தைகள்... பூப்படைகின்றனவோ. அது எப்ப இருந்து..! பூப்படைந்தால்.. அது குமரி. அதை குழந்தை என்று.. மொழிவதுண்டோ.. தமிழில்...???! :lol:

------------------

சிலர் பார்க்கிறது பிகர்.. அப்புறம்.. அது அட்ட பிகராம் என்ற உடன... குழந்தை என்று சொல்லி தங்களை தாங்களே சமாளிக்கிறது. :D:lol:

Edited by nedukkalapoovan

மனிதனுக்கு ஆயுள் 28ஆகா இருக்கு போது மனித வாழ்வு ஒரு வட்டத்திற்குள் இருந்தது.
இன்று மனிதனுக்கு உலகே ஒரு வட்டமாக இருக்கும்போது .............
இது தேவையா ?
என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டியது.
 
இன்று நடக்கும் தெரு கூத்திற்கு ஏதும் காரணம் இருக்கிறதா?
1420 ஆண்டில் சாமத்தியவீடு சரியா தவறா என்பது ......... பிறிதுபட்ட வாதம்.
இன்று தேவையா இல்லையா ...........
என்பது அங்கே என்ன நடக்கிறது ....?
ஏன் நடக்கிறது ?
என்பவற்றை ஆதராமாக கொண்டு விவாதிக்க பட வேண்டும்.

இப்போதைய சூழலில் இது தேவையா? தேவையற்றதா? என்பது விவாததிற்கு உட்பட்டது. அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் முந்தைய பழக்கவழக்கங்களை, அப்போதைய சூழலையும் மக்களில் வாழ்க்கை முறைகளையும் கருத்தில் கொள்ளது கண்மூடித்தனமாக இழிவுபடுத்துவதை முற்போக்கு வாதம் என்று ஏற்கலாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்  :icon_idea:

பீரியட் நேரத்தில சாமி கும்பிடுறதும் சாமி அறைக்குள்ள போறதுக்கும் புணிதம் இல்லை என்டா... ஏன் கடவுள் அந்த புணிதம் இல்லாதை விடயத்தை பெண்களுக்கு கொடுத்தவர்? 

சைவ மதத்தில் பெண் தெய்வங்களும் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

உன்னை இந்த மாதிரியெல்லாம் பேச சொல்லி யார்ரா சொல்லிக்குடுக்கிறா??? :D 

thse5thc.jpg

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களைப்போன்றவர்களுக்கு செயல்முறைகளும் வார்த்தைகளும் வரலாறுகளும் திருப்திப்படமாட்டா.....பட்டறிவதே தகும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்  :icon_idea:

பீரியட் நேரத்தில சாமி கும்பிடுறதும் சாமி அறைக்குள்ள போறதுக்கும் புணிதம் இல்லை என்டா... ஏன் கடவுள் அந்த புணிதம் இல்லாதை விடயத்தை பெண்களுக்கு கொடுத்தவர்? 

சைவ மதத்தில் பெண் தெய்வங்களும் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

உன்னை இந்த மாதிரியெல்லாம் பேச சொல்லி யார்ரா சொல்லிக்குடுக்கிறா??? :D 

thse5thc.jpg

கடவுள் உங்களையும், பெண்களையும் கோவிலுக்கு வரச் சொல்லி, எப்ப கேட்டவர்..? :D

மழித்தலும்,நீட்டலும் வேண்டா உலகம்,

பழித்தது ஒழித்து விடின்....! :icon_idea:

எனக்கொரு சந்தேகம்  :icon_idea:

பீரியட் நேரத்தில சாமி கும்பிடுறதும் சாமி அறைக்குள்ள போறதுக்கும் புணிதம் இல்லை என்டா... ஏன் கடவுள் அந்த புணிதம் இல்லாதை விடயத்தை பெண்களுக்கு கொடுத்தவர்? 

சைவ மதத்தில் பெண் தெய்வங்களும் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

உன்னை இந்த மாதிரியெல்லாம் பேச சொல்லி யார்ரா சொல்லிக்குடுக்கிறா??? :D 

thse5thc.jpg

மாதவிடாய் காலத்தின்போது பெண்கள் தூய சக்தியாக பார்க்கப்பட்டனர். அவர்களை மற்றவர்கள் பார்ப்பதும் தீண்டுவதும் தூய சக்தியை கறைப்படுத்திவிடும் என்ற நம்பிக்கை காரணமாக மற்றவர்கள் அருகில் செல்லாதபடி தனிமைப்படுத்தப்பட்டனர். எப்படி கோவில் கருவறைக்குள் மற்றவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்களோ அதே மாதிரிதான். பின்னாளில் வேளாண்மைச் சமூகத்தில் ஆண்கள் ஆதிக்கம் மேலோங்கி பெண்கள் நிலைமை மட்டுப்படுத்தபட்டவுடன் அது தீட்டாகவும் மற்றதாகவும் மாறிப் போனது.

மாதவிடாய் காலத்தில் இரத்தம் வடிந்த நிலையில் உள்ள பெண்ணை வழிபாடும் செய்யும் சிலையை இந்தியாவின் சில இடங்களில் காணலாம்.

yoni_puja1.jpg

எங்கட மூதாதையர் நிறைய விசயங்களை பல வடிவங்களிலை விட்டிட்டுத்தான் போயிருக்கினம்.  நாங்கள் தான் அதை விளங்கிக் கொள்ளாமல் இருந்திட்டம்.  கோயில் கோபுரங்கள்ள இருக்கிற சிற்பங்களுக்குப் பின்னாலை நிறைய மேசேஜ் சொல்லித்தான் இருக்கினம்.  இனிமேல் இந்தியாவிலை இருக்கிற பழைய கோயில்களுக்குப் போகேக்குள்ள எல்லாத்தையும் வடிவா உன்னிப்பாப் பார்க்க வேணும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.