Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரண மானிடர்.

Featured Replies

நான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு

 

நான் கடவுள் இல்லை அப்புறம் எதற்கு மாலை போடுகிறீர்கள்.

எனக்கு குளிரவில்லை அப்புறம் எதற்கு சால்வை போற்றுகிறீர்கள்.
எனக்கு பசியில்லை அப்புறம் எதற்கு பழங்கள் கொண்டுவருகிறீர்கள்.
இப்படி இந்த நாட்டில் இன்றைய தினம் ஒருவரால் "தில்'லாக பேசமுடியும் என்றால் அது முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சந்துரு ஓருவரால்தான் முடியும்.
அவரை பேட்டிக்காக சந்திக்க சென்றபோது அசந்துவிட்டேன், காரணம் பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும், ஆனால் அவரது வீடே நூலகத்திற்குள்தான் இருந்தது, அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தபட்ட புத்தகங்களே.
எத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள் ஆனால் இப்படி ஒரு நீதிபதி ஓய்வு பெறப்போகிறாரே என்ற ஆத்மார்த்தமான கவலையுடன் ஒருவரது ஓய்வு நாளை ஊடகங்கள் பெரிதாக படம்பிடித்தன என்றால் அது இவர் ஒருவரது ஓய்வு நாளாகத்தான் இருக்கும்.
ஓய்வு பெறும் நாளன்றும் வேலை பார்த்தார், வழியனுப்பு விழா என்ற சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அரசாங்கம் தனக்கு வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரயிலேறி வீட்டிற்கு வந்தவர். முன்கூட்டியே தனது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.
எளிமையும், நேர்மையும் பலரிடம் இருக்கும் இத்துடன் திறமையும் இவர் ஒருவரிடம்தான் கொட்டிக்கிடக்கிறது, அத்துடன் யாரிடமும், எதையும் எதிர்பார்க்காத தன்மை கொண்டவர்.
இவர் வழங்கிய தீர்ப்புகள்தான் இனி வருங்காலத்தின் சட்ட மேற்கோளாக காட்டப்பட இருக்கின்றது, அந்த அளவு ஆழமான சட்ட அறிவுடனும், சமூக சிந்தனையுடனும், அற்புதமான மேற்கோள்களுடனும் கூறப்பட்டவையாகும்.
பெண் கடவுளாக இருக்கும்போது ஒரு பெண் பூசாரியாக இருக்கக்கூடாதா? எந்த ஆகம விதிகளிலும், புத்தகத்திலும் அப்படி பெண் பூசாரி கூடாது என்று கூறப்படவில்லை என்பதை ஆதாரமாக பூர்வமாக சொல்லி பெண் பூசாரிகள் நியமனத்திற்கு வழிகண்டவர்.
தலித் பெண் சமைத்து சாப்பிடுவதா என்று அவரை வேலையைவிட்டு ஒரு பள்ளி நிர்வாகம் தூக்கியது. சம்பந்தபட்ட பெண்ணின் வழக்கு இவரிடம் வந்தது. பல்வேறு உதாரணங்களுடன் இவருக்கு வேலை வழங்கவேண்டும் என்று இவர் வழங்கிய தீர்ப்பு காரணமாக அவசர அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இவரால் தமிழகத்தில் இன்று 22 ஆயிரம் தலித் பெண்கள் சமையல் வேலை பார்த்து வருகின்றனர்.
கதர் உடை அணிந்து வந்ததற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட விமானநிலைய பெண் அதிகாரியின் வழக்கில் இவர் சொன்ன தீர்ப்பு காரணமாக இழந்த வேலை கிடைத்ததுடன் கதர் குறித்த பார்வையே மாற்றி அமைத்தது.
தனி சுடுகாடு வேண்டும் என்று கேட்டு வந்த வழக்கில் இவர் தீர்ப்பு அளிக்கும்போது சொன்ன மேற்கொள்களால் தமிழக சுடுகாடுகளில் இப்போது சமரசம் உலாவுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கப்பட்ட ஒருவருக்கான வழக்கில் தீர்ப்பு சொல்லும் பொறுப்பில் இருந்தபோது அவர் மனநலம் சரியாக இருக்கிறது என்பதை அழகாக நிரூபித்தது மட்டுமின்றி அரசாங்க வேலை பார்ப்போருக்கு உரிய பணிப் பாதுகாப்பு குறித்தும் ஒரு வரையறை செய்தவர்.
எதைப்பற்றி பேசினாலும் அதற்கான ஆதாரத்தை எடுத்துகாட்டுகிறார். நான் போனபோது அவருக்கு என்று எந்த உதவியாளரும் இல்லை, அவரே ஒவ்வொரு அறையாக போய் அதற்கான புத்தகங்கள், கோப்புகளை எடுத்துவந்து புள்ளிவிவரங்களை தந்தார். இடையிடையே பிளாஸ்கில் கொண்டு வந்திருக்கும் காபி மற்றும் சுண்டல் போன்றவைகளை சாப்பிடுகிறார் மறக்காமல் நமக்கும் கொடுக்கிறார்.
சட்டத்தின்படியான ஆட்சி நடக்கும் நம்நாட்டில் சட்ட அறிவு என்பது மக்களிடம் குறைவாக இருப்பது வருத்தத்தை தருகிறது, ஒன்று தெரியுமா எனக்கு சட்டம் தெரியாது என்று சொல்லி எந்த குற்றத்தில் இருந்தும் தப்பமுடியாது, சட்டத்தில் இருந்து விலக்கும் பெறமுடியாது என்கிறார்.
ஆயுள் தண்டனை பற்றிய கேள்விக்கு அது பதினான்கு ஆண்டுகளுக்கான தண்டனை என்று இங்கும், மேற்குவங்கத்தில் அது இருபது ஆண்டுகள் என்றும் வைத்திருக்கிறார்கள் உண்மையில் ஆயுள் தண்டனை என்றால் அது ஆயுளுக்குமான தண்டனைதான். கைதியின் நன்னடத்தை அரசாங்க விதி, சலுகை, கொள்கை என்று சொல்லி முன்கூட்டியே விடுவிப்பது வேறுவிஷயம்.
பொதுவாக வழக்குகள் தாமதப்படுகிறது என்ற கேள்விக்கு அழுத பிள்ளைக்குதான் பால் என்ற கதை கோர்ட்களிலும் இருப்பது வேதனைதான் வரக்கூடிய நெருக்கடிகளின் அடிப்படையில்தான் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன இந்த நிலைமாறிட வேண்டும்தான் என்றார்.
இப்போது சினிமா பார்த்துவிட்டு என்கவுன்டரில் குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்துகிறார்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் மூலமாகவே தண்டிக்கப்பட வேண்டும்.
ஹெல்மெட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது, சில ஊர்களில் குற்றம் என்கிறார்கள் சில ஊர்களில் குற்றம் இல்லை என்கிறார்கள் என்ற கேள்விக்கு அது குற்றமா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் உங்கள் மனதின் பக்கத்தில் நின்று அது பாதுகாப்பானாதா இல்லையா என்று பதில் தேடுங்கள் விடைகிடைக்கும் என்கிறார்.
இப்படி பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் குறித்து ஆழஅகலத்துடன் விவரித்து எந்த கேள்விக்கும் சட்டத்தின் வாயிலாக அவர் சொன்னவிதம் பல நாட்களுக்கு மனதில் நிற்கும். இங்கே சுருக்கமாக சொல்லியிருக்கிறோம் மற்றபடி ஒவ்வொரு தீர்ப்பு மற்றும் அதன் பின்னணியை வைத்து ஒரு புத்தகமே போடலாம்.
விடைபெறும்போது வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்த விதம் அவரது உயரத்தை இன்னும் கூட்டியது.


gallerye_080538194_818564.jpg

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=818564

 

 

Edited by Athavan CH

  • Replies 106
  • Views 37.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மனிதரில் தெய்வம் உண்டு... நாகராஜ் என்ற பெயர் கொண்டு...

 

Tamil_News_large_962003.jpg
 
வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பக்கத்தில் உள்ளது ஹோட்டல் ஏலகரி. காலை ஏழு மணியில் இருந்து வயதானவர்கள், பெண்கள், மனநிலை சரியில்லாதவர்கள் என்று ஒரு பாவப்பட்ட கூட்டமே வந்து தங்களுக்கு பிடித்த இட்லி, பூரி, தோசை, புரோட்டா போன்றவைகளை வாங்கி உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு பின், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் கடை உரிமையாளர் நாகராஜிடம் 'காசுக்கு' பதிலாக வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு செல்கின்றனர்.
இது போக நகரசுத்தி தொழிலாளர்கள், கை வண்டி இழுப்பவர்கள் போன்ற எளிய தொழிலாளிகள் மற்றும் மாணவர்களுக்கு உணவு பண்டங்கள் பாதி விலைதான்.
மேலும் நாள் முழுவதும் கைக்குழந்தையுடன் பால் கேட்டு வருபவர்கள் கையில் காசு இருந்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் பாலை மட்டும் வாங்கிக் கொண்டு செல்லலாம்.
இந்த ஆச்சர்யத்தை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர் நாகராஜ். இதுதான் வாழ்க்கை என்று வாழும் இவரைப்பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்.
ஏலகிரியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான நாகராஜுக்கு ஏழாம் வகுப்பிற்கு மேல் படிப்பு வரவில்லை, குடும்பத்திற்கு பாரமாக இருக்கவேண்டாமே என்று எண்ணி ஓட்டல் தொழிலாளியாகப் போனார்.
நீண்ட காலம் ஓட்டல் தொழிலாளியாக இருந்ததினால் இந்த தொழில் அத்துப்படியாக, தனியாக ஓட்டல் துவங்கினார்.
ஹோட்டல் ஏலகிரியில் இட்லி, தோசை, பூரி, புரோட்டா, குஸ்கா என்ற எல்லாமும் ருசியாக கிடைக்கும். நாகராஜ் தானே கடைக்கு தேவையான தரமான உணவு பொருளை தேடி வாங்குவதாலும், அதனை தரமான முறையில் தயாரிப்பதாலும், நியாயமான விலையில் விற்பதாலும் நல்ல வியாபாரம் நடக்கும்.
வருடத்தில் 365 நாளும் இவரது கடை திறந்திருக்கும், இரவில் ஐந்து மணி நேரம் துாங்கும் நேரம் போக மீதம் இருக்கும் நேரம் முழுவதையும் கடையில்தான் செலவழிப்பார்.
இப்படியான சூழ்நிலையில்தான் ஒரு சம்பவம் இவரது கடைமுன் நடைபெற்றது.
ரயில் பயணிகள் ஜன்னல் வழியாக காலி குடிநீர் பாட்டிலை துாக்கி எறிவதை போல ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அவ்வப்போது சிலரை துாக்கி எறியாத குறையாக ரயில்களில் இருந்து இறக்கிவிட்டு செல்வர்.
இப்படி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும், அந்த பெண்களில் பெரும்பாலோனார் மனநிலை சரியில்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களை இப்படி கல்நெஞ்சத்துடன் இங்கே இறக்கிவிட்டவர்கள் ஊருக்கு போனதும் காணாமல் போனாதாக உறவுகளிடம் சொல்லி பொய்யாக தேடிக்கொண்டே இருப்பார்கள்.
இப்படி இறக்கிவிடப்படும் மன நோயாளிகளின் கதி என்ன?
மன நோயாளிகள் ஒரு பாங்கையோ, நகைக்கடையையோ, ஜவுளிக்கடையையோ தாண்டி போகும்போது அவர்களிடம் எந்தவித சலனமும் ஏற்படாது, அதே நேரம் உணவு பண்டங்கள் விற்கும் ஓட்டலையோ அல்லது டீகடையையோ தாண்டிப்போகும்போது உடலும் உள்ளமும் பசி என்ற சலனத்தை ஏற்படுத்த கண்ணில் ஓர் ஏக்கத்துடன் அங்கேயே நின்றுவிடுவார்கள்.
என்னதான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும் பசி உணர்வு இருக்கத்தான் செய்யும், ஆனால் பசிக்குது என்று கேட்கத்தெரியாது.இப்படிப்பட்ட ஜீவன்கள் தனது கடையை ஏக்கத்துடன் பார்ப்பதை அறிந்ததும் பதறிப்போன நாகராஜ், அவர்களை அன்புடன் அழைத்து விருப்பப்பட்டதை சாப்பிடக் கொடுத்தார்.
நாகராஜ் கையால் நன்றாக சாப்பிட்டுவிட்டு கிடைத்த இடத்தில் துாங்கியவர்கள் மறுநாள் காலையிலும் வந்தனர். இந்த முறை வந்த போது தங்களுடன் மேலும் சிலரை கூட்டிக்கொண்டு வந்தனர். சந்தோஷத்துடன் எதிர்கொண்ட நாகராஜ் அனைவருக்கும் அன்புடன் உணவு வழங்கினார்.
இவர்களைப் பார்த்து சில முதியோர்களும் உடல் ஊனமுற்றவர்களும் கடைக்கு வர இப்படியாக கிட்டத்தட்ட தினமும் நுாறு நுாற்றைம்பது பேர் காலை உணவு சாப்பிட வாடிக்கையாக ஹோட்டல் ஏலகிரிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
அவர்கள் பாட்டிற்கு வருவார்கள் குட்மார்னிங் போல நாகராஜ்க்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு திரும்ப போகும்போது ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு போய்விடுவார்கள்.
இதே போல துப்புரவு தொழிலாளர்கள் போன்ற ஏழைத்தொழிலாளர்கள் மற்றும் சீருடையுடன் வரும் ஏழை மாணவர்களுக்கு பாதி விலையில் உணவு இதனால் இரண்டு இட்லி சாப்பிடுபவர்கள் நாலு இட்லி சாப்பிட்டு இன்னும் தெம்பாக, ஆரோக்யமாக இருப்பார்கள் என்பது நாகராஜின் நம்பிக்கை.
எப்படி இதெல்லாம் முடிகிறது என்ற போது எனக்கு பசியோட அருமை தெரியும் ஆகவே என்னால முடிந்த அளவு இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உணவு வழங்குகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக எனது இந்த காரியத்திற்கு பெரிதும் துணையாக இருப்பவர் என் துணைவியார் சுஜாதாதான் என்கிறார் பெருமையாக.
அன்றாடம் எங்கள் வீட்டு அடிப்படை செலவிற்கு தேவைப்படும் பணத்தை தவிர மற்ற பணம் அனைத்தையும் இதற்கே செலவழித்து விடுகிறார். விசேஷ நாளில் வியாபாரம் நன்கு நடந்து கூடுதலாக லாபம் கிடைத்தால் அந்த லாப பணத்தில் பேனா, பென்சில் என்று வாங்கிக்கொண்டு போய் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிட்டு வந்துவிடுவார்.
பணத்திற்காக வாழக்கூடாது என்ற கொள்கையில் இருவரும் உறுதியாக இருக்கிறோம், இன்னும் வருமானம் கூடுதலாக கிடைத்தால் மதிய உணவும், இரவு உணவும் கூட வழங்க எணணியுள்ளோம், கடையும், குடியிருக்கும் வீடும் வாடகைதான், பாங்க் இருப்பு எதுவும் கிடையாது, கால்பவுன் தோடும் மூன்று பிள்ளைகளும்தான் எங்கள் சொத்து. எங்கள் பிள்ளைகளையும் மற்றவர்களுக்கு உதவும் வாழ்க்கைதான் வாழவேண்டும், ஒருக்காலத்திலும் பணத்தின் மீது ஆசை வைக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம்.
சுஜாதா ஒரு வேலைக்கு தயராகிக்கொண்டு இருக்கிறார், வேலை கிடைத்ததும் அந்த சம்பளத்தில் நமது குடும்பத்தை நடத்திக்கொள்வோம், கடை வருமானம் முழுவதையும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவதிலேயே செலவழிப்போம் என்றும் சொல்லியுள்ளார்.
நாங்கள் செய்யும் இந்த காரியத்தை சேவை தொண்டு என்றெல்லாம் சொல்லி எங்களை பெருமைப்படுத்தி கொள்ள விரும்பவில்லை, பசிக்கும் சக மனிதர்களுக்கு செய்யும் சிறு உதவி அவ்வளவுதான் என்கின்றனர்.
கடையில் வேலை பார்ப்பவர்கள் பசியோடு வருபவர்களை அலட்சியப்படுத்தி விடக்கூடாது, அவமானம் ஏற்படும்படி பேசிவிடக்கூடாது என்பதற்காக எங்கு இருந்தாலும் காலையில் நாகராஜ் கடைக்கு வந்துவிடுவார். தானே அவர்களை வரவேற்று உணவு வழங்குவார். இதற்காக இவர் வெளியூருக்கும் தற்போது போவது கிடையாது, உறவு விசேஷம் என்பதைக்கூட இந்த நேரம் தாண்டிதான் வைத்துக்கொள்கிறார்.
உங்களோடு சேர்ந்து நாங்களும் சேவை செய்கிறோம் என்றும், ட்ரஸ்ட் ஆரம்பித்து முறைப்படுத்தி செய்யுங்கள் என்றும், எவ்வளவு பணம் வேண்டும் உங்களுக்கு மாதாமாதம் அனுப்புகிறோம் என்றும், நிறைய பேர் சொல்லி வருகிறார்கள் அதை அன்போடு மறுத்து விடுகிறோம். காரணம் நாங்கள் எங்கள் போக்கில் எங்கள் மனதிருப்திற்கு ஏதோ செய்கிறோம், பாராட்டு கிடைக்கும், பணம் கிடைக்கும்,உதவி கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து செய்யவில்லை. ஆகவே எங்களுக்கு நல்ல ஆரோாக்கியமும், இதே போல நியாயமான வருமானமும் வந்தால் போதும் அதை தாண்டி மக்களோட ஆசீர்வாதம் மட்டும் போதும் என்று சொல்லும் இந்த நாகராஜ்- சுஜாதா தம்பதிகளை வாழ்த்த விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9944565814.
- எல்.முருகராஜ்
 
gallerye_172507285_962003.jpggallerye_172513514_962003.jpg
 
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு சிலர் இருப்பதால்தான் உலகம் இன்னும் மனித தன்மையுடன் இருக்கிறது

  • தொடங்கியவர்

பணம் தேவையில்லை; மனம் தான் தேவை!

 

ஈரநெஞ்சம் மகேந்திரன்.

 

 

eeranenjam06.jpg?w=274&h=274

 

 

முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு மூதாட்டியுடன் ஈரநெஞ்சம் மகேந்திரன்.

மதுரையைச் சேர்ந்தவர் முத்துகுமார் (28). வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்துகொண்டிருந்தார்…
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (80); ரயிலில் பழவியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்…
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்…
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை.  இது ஒரு பொதுவான மனநிலை.
eeranenjam08.jpg?w=294&h=220
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.
.
அதுமட்டுமல்ல, கோவையிலுள்ள 15 ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது சென்று அங்குள்ள ஆதரவற்றோருடன் கனிவுடன் உரையாடி, நகம் வெட்டி, உணவு வழங்கி, தோழமை காட்டுவதும் இவரது பணி.
.
இவருடன் ஒரு இளைஞர் பட்டாளமே பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கும் கூடுதல் தகவல்.அவ்வாறு நட்புடன் பழகி, அவர்கள் அளிக்கும் தகவல்களை முகநூலிலும் வலைப்பூக்களிலும் படத்துடன் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பலரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்துவைத்திருக்கிறார்கள். முத்துகுமார், ராஜம்மாள், அசோகன், நிர்மலா ஆகியோர், அவ்வாறு பிரிந்த குடும்பத்தில் சேர்த்து வைக்கப்பட்டவர்கள் தான்.
 
eeranenjam07.jpg?w=294&h=294
கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘ஈரநெஞ்சம் மகி’ என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. சுமார் ஐந்தாண்டுகளாக இந்த சேவைப்பணியில் மகேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இதற்கென, ஒத்த கருத்துள்ள பரிமளா வாகீசன், சுரேஷ் கணபதி, தபசுராஜ், குமார் கணேஷ் ஆகியோருடன் இணைந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் துவக்கி இருக்கிறார். ‘ஈகை விலக்கேல்’ என்பது இவர்களது அமைப்பின் முத்திரை வாக்கியம்.
இவர்களது சேவையால் இதுவரை கோவை தெருக்களில் திரிந்த நூற்றுக்கு மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; காப்பகங்களில் இருந்து 25க்கு மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணையவும் ஈரநெஞ்சம் உதவி இருக்கிறது. அதுமட்டுமல்ல, தெருக்களில் திரியும் நோயாளிகளை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதும், அநாதையாக இறப்போரின் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதும் இவர்களின் அற்புதமான பணிகளில் சில.
eeranenjam09.jpg?w=294&h=244
இத்தனைக்கும் மகேந்திரன் (35) வசதியானவர் அல்ல; ஆட்டோ உதிரி பாகங்களைத் தயாரிக்கும் குறுந்தொழிலதிபர் மட்டுமே. மனைவி, மகள் என்று சிறு குடும்பம். வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேவைக்கெனவே ஒதுக்கிவிடுகிறார். குடும்பமும் அவருக்கு ஒத்துழைக்கிறது. அவரது தொழில் தொடர்புள்ள நிறுவனங்களும் மனமுவந்து ஆதரவளிக்கின்றன. நல்லது செய்ய முன்வருவோருக்கு உதவ நல்ல உள்ளங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இவ்வாறு சேவை செய்யும் ஆர்வம் எப்படி வந்தது? சொந்தக் குழந்தை மலஜலம் கழித்தால் கூட மனைவியைக் கூப்பிடும் கணவர்கள் மிகுந்த உலகத்தில், முகமறியாத பலருக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி சேவை செய்யும் மனம் எங்கிருந்து வந்தது?
eeranenjam05.jpg?w=265&h=236
இதோ மகேந்திரனே பேசுகிறார்…
நானும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். மனநிலை பாதிப்பின் கொடுமை எனக்கு அனுபவப்பூர்வமாகவே தெரியும். எனது சகோதரியின் மனநிலைப் பிறழ்வால் அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அப்போதே, இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.
தெருவில் திரியும் பைத்தியகாரர்களைக் கண்டு நாம் பொதுவாக மிரள்கிறோம். ஆனால், அவர்கள் தான் நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள். தெருக்களில் பலவாறாக அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் துயரக் கதைகளைக் கேட்டால் நெஞ்சம் வெடித்துவிடும்.
மனநிலைப் பிறழ்வுக்கு காரணங்கள் பல இருக்கலாம். அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பி வந்தவர்களல்ல. அவர்களின் விதி அப்படி ஆக்கியிருக்கிறது. நம்மால் முடிந்தால் அந்த விதியில் சிறிது மாற்றம் செய்ய முடியும்.
காப்பகங்களில் எங்கோ வெறித்தபடி வாழ்க்கையே சுமையாக இருக்கும் மனிதர்களுக்கு நம்மாலான சிறு உதவி ஆறுதலான பணிவிடைகள் தான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை; மனம் தான் தேவை. எங்களைப் பொருத்த வரை, நாங்கள் ஆதரவற்றோருக்கு உதவ முற்படும்போது, சம்பந்தமில்லாத பலர் எங்களுடன் கைகோர்த்துப் பணிபுரிவதைக் கண்டிருக்கிறேன். சமுதாயத்தில் ஈரநெஞ்சம் இல்லாமல் போய்விடவில்லை.
நமது குழந்தை அழுதுகொண்டிருக்கும்போது நம்மால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் இறைவனின் குழந்தைகள். இவர்களுக்கு நாங்கள் செய்வது சேவையல்ல; கடமை. ஓர் உயிரை, ஒரு மனிதரின் வாழ்க்கையைக் காப்பதைவிட திருப்தி அளிக்கும் பணி வேறென்ன?
இந்த வேலையில் இறங்குவதால் சுயதொழிலில் சாதனை படைக்க முடியாமல் போகலாம். இன்று எங்களுக்குக் கிடைப்பது குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு கிடைக்கும் மனநிம்மதி அளவற்றது…
- சொல்லிக்கொண்டே போகிறார் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
eeranenjam03.jpg?w=294&h=246
வீட்டைவிட்டு வெளியேறி பைத்தியமான நிர்மலா யாரிடமும் பேசாமல் இருந்தவர், மகேந்திரனின் முயற்சியால் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டபோது கண்ட உருக்கமான காட்சி மகத்தானது. 4 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த நிர்மலா குடும்பத்தாருடன் சேர்ந்த ஆனந்த அதிர்ச்சியில் பேசத் துவங்கிவிட்டார்; இப்போது நலமாக இருக்கிறார்.
ஒரு நிர்மலா காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் பல நிர்மலமான ஜீவன்கள் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உங்களிடமும் இருக்கிறதா இந்த ஈரநெஞ்சமும் துடிப்பும்?
 
 
 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்...

 

Tamil_News_large_809104.jpg

 

திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லூரியின் அரங்கம் மாணவ, மாணவியரால் நிரம்பியிருந்தது. அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் ஒரு அற்புதமான பெண்மணியின் பேச்சைக் கேட்கப் போகும் ஆர்வத்துடனும், அமைதியுடனும் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்த பெண் பேச்சாளரும் மேடைக்கு வந்தார். பதினைந்து நிமிடம் பேச நினைத்து வந்தவர் மாணவர்களின் ஆர்வத்தையும்,அமைதியையும் பார்த்துவிட்டு 45 நிமிடங்கள் பேசினார்.
 
எதுகை, மோனையுடனோ, இலக்கிய இலக்கணத்துடனோ, சவால் விடும் சரித்திர சான்றுகளுடனோ அவர் பேசவில்லை. சாதாரணமாக , ஆணித்தரமாக, மென்மையாக ஆனால் அழுத்தமாக சகோதர, சகோதரிகளிடம் பேசுவது போல பரிவுடன், பாசத்துடன் பேசினார்.
 
அவர் பேசினார் என்பதை விட கொஞ்சம், கொஞ்சமாய் கேட்பவர் மனதில் தன்னம்பிக்கை எனும் விதையை ஆழமாக விதைத்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவர் பேசப்பேச யார் இவர்? என்றறியும் ஆர்வம் இப்போது அரங்கில் இருந்த ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது.
 
யார் இவர்?
 
காம்கேர் கே.புவனேஸ்வரி, எந்தவித பெரிய பின்னணியும் இல்லாமல் சுயம்புவாக முளைத்தவர், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உரமாக்கி வளர்ந்தவர், தான் சார்ந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எப்போதும் எண்ணுபவர், இந்த எண்ணத்தினால் தனித்துவம் பெற்றவர்.
சென்னையில் உள்ள காம்கேர் சாப்ட் வேர் நிறுவனத்தின் சிஇஒ மற்றும் நிர்வாக இயக்குனர்.
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்தியா தொடர்பான திட்டங்களை மட்டுமே தன் நிறுவனத்தின் வாயிலாக தயாரித்து வெளியிட்டு வருபவர்.
சாப்ட்வேர் துறை வல்லுநர், கல்வியாளர், தொழில் ஆலோசகர், கிரியேடிவ் டைரக்டர், டாக்குமெண்டரி பிலிம் தயாரிப்பாளர், பதிப்பாளர், எழுத்தாளர் என்று இவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இருபதிலேயே அறுபதின் சாதனையை தொட்டவர்.
தன் நிறுவனத்தின் மூலமாகவும், தனது வாடிக்கையாள நிறுவனங்களின் மூலமாகவும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியவர்.
 
நம் நாட்டில் கம்ப்யூட்டர் பிரபலமாவதற்கு முன்பே தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான புத்தகங்கள் எழுதியவர். தமிழ் ஆர்வாலரான இவர் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக கம்ப்யூட்டர் தொடர்பான பல புத்தகங்களை எழுதியவர், எழுதிக்கொண்டிருப்பவர்.
இவர் எழுதிய பல புத்தகங்கள் பல பல்கலைகழகங்களில் பாடபுத்தகங்களாக உள்ளன. கம்ப்யூட்டர் தொடர்பாக எழுபதற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இது தவிர பக்தி, இலக்கியம், சமூகம், கல்வி, குழந்தை இலக்கியம் ஆகிய தலைப்புகளிலும் எழுதி வருபவர்.
 
இவரது நிறுவனத்தின் மல்டி மீடியா தயாரிப்புகள் மற்றும் ஆவணபடங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் இவரே. அனிமேஷனில் உருவாக்கிய கந்தர் சஷ்டியும், அனைத்து பதிகங்களையும் கொண்ட திருவாசக மல்டி மீடியா சி.டி.,யும் மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டவையாகும்.
தனது பெற்றோர் பெயரிலான பத்ம கிருஷ் அறக்கட்டளை மூலமாக தொண்டு செய்து வருபவர். , தனது கொண்டாட்டங்கள் அனைத்தையும் ஆதரவில்லாத குழந்தைகளுடனும், மாற்றுத் திறனாளிகளுடனும் பகிர்ந்து கொள்பவர். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் போதாது என்று இருக்கக் கூடியவர், வளரும் சமுதாயம் இனிதாக மாறவேண்டும் என்ற அக்கறையுடன் கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று பேசிவருபவர்.
 
இவரைப்பற்றிய அறிமுகம்தான் இதுதான். அன்று அவர் பேசியதில் இருந்து சுருக்கமாய் சில குறிப்புகள். இந்த குறிப்புகள் அவர் மீது இன்னும் நேசம் கொள்ளச் செய்யும்.
திறமை என்பது பாட்டுப் பாடுவதும், படம் வரைவதும் மட்டுமல்ல எப்பொழுதும் சிரித்த முகத்தைக் கொண்டிருப்பது, தைரியமாக வாழ்வது, கடமை தவறாமல் இருப்பது , நட்பாய் பழகுவது, எந்த வேலையையும் நேசித்து செய்வது... இவை எல்லாம் கூட திறமைகள்தான். திறமை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் கிடையாது, நம்மிடம் உள்ள திறமைகளை நம் அனுபவத்தில் வெளிக்கொண்டு வருவதில்தான் வெற்றி இருக்கிறது. படிப்பு என்பது வேலைக்காகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே என்கின்ற எண்ணத்தை மாற்றுங்கள், பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதை முதலீடாக நினைக்காதீர்கள், ஐடி பீல்டு மட்டுமே வாழ்க்கையில்லை.
 
உங்கள் திறமையால் இந்த உலகை ஆள ஆயிரம் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன, உங்கள் கோபம், சிடுசிடுப்பு,ஆவேசம், படபடப்பு போன்ற குணங்களை தூக்கிஎறிந்து பாருங்கள் பெரிய மாற்றம் ஏற்படும். டி.வி.,சீரியல்களில் பொழுதைக் கழிக்காமல் உண்மையான உலகத்தைக் காணவும், அனுபவம் பெறவும் வீட்டைத் தாண்டி வெளியே வாருங்கள். வெறும் படிப்பு மட்டும் போதாது உங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உலகம் வசப்படும். கனவு, கற்பனை, உழைப்போடு உங்கள் தொழிலை, வேலையை, படிப்பை நேசித்து செய்யுங்கள் வெற்றி நிச்சயம் இது என் ஆசிமட்டுமல்ல அனுபவ பூர்வமான உண்மையும் கூட. மேற்கண்டவாறு காம்கேர் கே.புவனேஸ்வரி பேசி முடித்த போது மீண்டும் அரங்கம் நிறைந்தது- இந்த முறை கைதட்டலால்.
காம்கேர் கே.புவனேஸ்வரியுடன் தொடர்பு கொள்ள எண்: 98842 80265.
 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்
தினசரி 400 ஏழைகளுக்கு 3 வேளை உணவளிக்கும் நாராயணன் கிருஷ்ணன்

 

 

 

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் , வாடினேன்" என்று பாடினார் வள்ளலார். பயிர்கள் வாடுவதையே தாங்கமுடியாத மனம்..உயிர்கள் வாடுவதை தாங்கமுடியுமா ? இப்படிப்பட்ட மனம் நடைமுறையில் சாத்தியமா? இதற்கு விடை தெரிந்துக்கொள்ள கீழே படிக்கவும்....

 

இந்தகாலத்திலும் வள்ளலார் மனம் கொண்ட ஒருவர் நம்மிடையே இருக்கிறார்.
அவர் மதுரை N.கிருஷ்ணன். CNN-IBN மற்றும் Reliance நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமூகத்தில் 'நிஜ கதாநாயகர்களை' அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக இந்த வருடம் பெற்று இருக்கிறார் திரு.கிருஷ்ணன்.

05extor2.jpg

அப்படி என்ன செய்கிறார் கிருஷ்ணன்?
”நான் பிச்சைக்காரர்களுக்கு உண்வு கொடுப்பதில்லை. அவர்களை அவர்களே கவனித்துக்குக் கொள்வார்கள்.மனநிலை குன்றியவர்கள் தான் யாரிடமும் உணவோ, காசோ கேட்க தெரியாது. அவர்களுக்கு உதவுகிறேன்” என்கிறார் கிருஷ்ணன்.

யார் இந்த கிருஷ்ணன்?

மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365 நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு வருடங்களாக, அக்‌ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து வருகிறார்.

பெங்களூருவின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், சமையலை தொழிலாக(
செஃபாக) செய்து வந்த அனுபவம் கைகொடுத்து இருக்க வேண்டும். சுத்ததிலும், பாத்திரங்கள் பளபளவென்று அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நேர்த்தியிலும , அரிசி பருப்பு, காய் கறி, மசாலா சாமான்களின் தரத்திலும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் சமையலறையை ஒத்திருக்கிறது கிருஷ்ணனின் சமையலறை.
05extor1.jpg
”தினமும் மெனுவை மாற்றி விடுவேன்.ஒரெ உணவை சாப்பிட்டால் அவஙகளுக்கு சலித்து போயிடுமில்ல?” உற்சாகமான அவருடைய புன்னகை நம்மை எளிதில் தொற்றிக்கொள்கிறது.

இரண்டு சமையல்காரர்களின் உதவியோடு, தினமும் மூன்று வேளையும் சமைத்து, தன் வளர்ப்பு மக்களை தேடி தெருத்தெருவாக தானே எடுத்து செல்கிறார்.மனநிலை குன்றியவர்கள அடிக்கடி இடம் பெயர்வதில்லையாம், தினமும் அதே இடத்தில் தான் சந்திக்கிறாராம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர் சாதமும், சிறியது ஒன்றில் ஊறுகாயுமாக, ஒரு மாருதி வேனில் கிளம்புகிறார். வேன்? மதுரையின் ஒரு தயாளர் தானமாக கொடுத்தது. பத்து நிமிட பயணம். வேன், ஒரு சுவரின் அருகில் படுத்து இருக்கும் மனிதரின் அருகில் நிற்கிறது,கிருஷ்ணன் தயிர்சாதத்தை அவர் அருகில் வைக்க, அவர் அதை சீண்டக்கூட இல்லை. தண்ணீர் பாட்டிலை வாங்கி மட மட என்று குடிக்கிறார்.”பாவம் ரொம்ப தாகம். கொஞ்சம் கழித்து சாப்பிடுவார்” இது கிருஷ்ணன் சொன்னது.

வேனின் அடுத்த நிறுத்தம். தானே இலையில் சாதம் போட்டு, கொஞ்சம் எடுத்து ஒரு மனிதருக்கு ஊட்டியும் விடுகிறார். இரண்டு கவளத்துக்கு பிறகு அவர் தன்னாலேயே சாப்பிட ஆரம்பிக்கவும், கிளம்பி, அடுத்து ஒரு ட்ராஃபிக் சிக்னல். அழுக்கும், கிழிசலும், தாடியுமாக அந்த கூட்டத்தில் தனியாக தெரிந்த நாலு பேர், வேனை நோக்கி வருகிறார்கள். அவர்களிடம் எந்த் பரபரப்பும் இல்லை, “இந்த வேன் வந்தால் சாப்பாடு, கிருஷ்ணன் அவர்களுக்கு காத்திருப்பார்” என்பதை அவர்களுடைய மனது அறிந்தே இருக்கிறது.
”அவர்களுக்கு தனக்கு தானே தண்ணீர் கூட எடுத்துக் கொள்ள தெரியாது” ஒரு மரத்தடியில் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி, தண்ணீரும் தந்து கொண்டே சொல்கிறார்.

அக்‌ஷய பாத்திரம் காலி ஆகும் வரை நகர்வலம் வருகிறது கிருஷ்ணனின் மாருதி வேன். மீண்டும் இரவு உணவுக்கு பாத்திரம் நிறையும். பயணம் துவங்கும்.

இத்தனைக்கும் சாப்பிட்ட ஒருவர் கூட கிருஷ்ணனுக்கு நன்றி சொல்வதில்லை. நன்றி என்ன நன்றி? ஒரு புன்னகை? ஒரு தலையசைப்பு? ஒன்றும் கிடையாது. அவரவர் வேலைகளை செய்வதற்கே நாமெல்லாம் நன்றியை எதிர்பார்க்கும் இந்த காலத்தில்,கிருஷ்ணன் பாட்டுக்கு அவர் பணியை தொடர்கிறார்.

ஒரு நாளைக்கு 12000 ரூபாய் செலவு ஆகிறதாம். “மாதத்தில் 22 நாட்களுக்கு ”Donars” இருக்கிறார்கள். மீதி நாட்களை நானே சமாளிக்கிறேன்” அயராமல் சொல்வதோடு, “மீதி நாட்களுக்கும் கூடிய விரைவில் கிடைத்து விடுவார்கள்” என்னும் குரலில் ஏராளமான நம்பிக்கை.அக்கவுண்டுகளை வெகு சிரத்தையாக கையாள்கிறாராம். அக்‌ஷயா ஆரம்பித்த பிறகு, முதன்முதலாக,பலசரக்கு வாங்கிய ரசீதை செண்டிமெண்டாக வைத்து இருக்கிறார்.பொருளாதார வீழ்ச்சி இவரையும் விட்டு வைக்க வில்லை, 25 ஆக இருந்த Donars, 22 ஆக குறைந்து போய் இருக்கிறார்க்ள்.

இன்ஃபோஸிஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் இவருடைய சேவைக்காக 3 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்க, அதில் ஒரு காப்பகம் அமைக்க திட்டம் இட்டு, முதலில் 80 பேர் தங்கும் அளவில் ஒரு பெண்கள் பகுதிக்கு அடித்தளம் மாத்திரம் கட்டிய நிலையில், நிதி தட்டுப்பாட்டினால், அப்படியே கிடப்பில் இருக்கிறது.

கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.

05extor4.jpg
நம் தேசபிதா காந்தியை கதராடை கட்டவைத்து 'மகாத்மா' ஆக காரணமாக இருந்த மதுரையே இவரது மாற்றத்திற்கும் காரணம். இப்படி இப்பட்செய்ய தூண்டியது ? என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு நினைவு கூர்கிறார் "பெங்களூருவில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த நான், வெளிநாடு செல்வதற்கு முன் சொந்த ஊர் மதுரைக்கு வந்தேன். டாக்ஸியில் ஏர்போர்ட் செல்லும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் தன் மலத்தை தானே உண்ணும் அவலத்தை பார்த்து பதறி அடித்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு ஓடி, அவருக்கு பத்து இட்லி வாங்கி கொடுத்தேன். அரக்க பரக்க சாப்பிட்டு முடித்த அவர் என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பு தான் என்னை மீண்டும் மீண்டும் செய்ய தூண்டியது, அதன்பின், இத்தகையவர்களுக்கு உணவிடுவதே தன் தொழில் என முடிவு செய்துவிட்டேன்".

இவ்ருக்கு இன்னும் திருமணமாக வில்லை. "நாள் முழுக்க மற்றவர்களுக்கு சமைத்து கொண்டு இருக்கும் என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?" என்று கேட்கிறார்.தன்னை திருமணம் செய்து கொள்பவர்,அவருடைய இந்த வாழ்க்கை முறைக்கு ஒத்து வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.ஆரம்பத்தில் அதிர்ச்சியான இவருடைய பெற்றோர்கள் கூட இப்போது இவருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.


ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு, மனனலம் குன்றியவர்களுக்கு சமையலும், அனாதை பிணங்களுக்கு காரியமும் செய்கிறீர்க்ளே? என்று ஆதங்கப்படுபவர்களுக்கு இவரது பதில், “எனக்கு இது பிடித்து இருக்கிறது”.

இவர் மதுரையில் நடத்திவரும் அக்க்ஷயா ட்ரஸ்ட்சேவைமையத்திற்கு ஏழு வயதாகிறது.

தன் வயிறுபசித்தால் பாலுக்குகூட அழதெரியாத மனநலம் குன்றிய 
குழந்தைகளுக்கு தேடிபோய், தானே சமைத்து உணவிடும்
'தாயுமான' கிருஷ்ணனுக்கு, உதவி செய்துவரும் பல கரங்களோடு, 
இந்த நன்னாளில் நம் கரங்களையும் இணைப்போம்.
எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.


நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஓருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை - ஔவையார்



தகவல்/படங்கள் உதவி:
http://news.rediff.com/slide-show/2009/aug/12/slide-show-1-he-gave-up-a-5-star-job-to-feed-the-mentally-ill.htm
http://www.akshayatrust.org/

பிகு: இந்த கட்டுரையை எழுத தூண்டிய குரு பிரசாத்துக்கும், இதை தமிழில் எழுத உதவிய இரண்டு நண்பர்களுக்கும் என் நன்றி.

 
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

இவரைப் போல் நாமும் செய்யலாமே...

 

இளங்கோவன் அரவணைப்பில் 5917 குழந்தைகள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136216

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்
எழுத என்று ஏதும் இல்லை.
கண்ணாடியில் தெரியும் எனது விம்பத்தையே நான் இந்த உலகில் அதிகம் வெறுக்கிறேன்.
நல்லதொரு திரி .... தொடர்ந்து இணையுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான மனித தெய்வங்கள் சில உலகின் எல்லாப்பகுதியிலும், வாழ்ந்து கொண்டேயிருக்கின்றன!

 

அரசுகள் செய்ய வேண்டிய வேலையை, இவர்கள் தங்கள் தலை மேல் சுமந்து செய்வது, மிகவும் பாராட்டுதலுக்குரியது!

 

தொடர்ந்து பகிருங்கள்! நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய...  நல்லதொரு, அருமையான.... பதிவு.
சுயநலமாக வாழும் மனிதர், மத்தியில்... இப்படியானவர்களும் இருக்கின்றார்கள் என்பதை, 
வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள், ஆத‌வ‌ன்.
 

நல்லதொரு பதிவு. மனிதம் இன்னும் வாழ்வதற்கு இது சான்று. தொடர்ந்து இணையுங்கள். நன்றி!

  • தொடங்கியவர்

வரிசையில் நிற்காமல் ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவி: இளைஞர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு.

 

ஐதராபாத்: ஆந்திராவில், ஓட்டுச் சாவடியில் வரிசையில் நிற்காமல், ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவியை, இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

 
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்; மத்திய சுற்றுலா அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். ஆந்திராவில், தெலுங்கானாவுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடந்தது.
 
'பைபாஸ்' செய்தார்:
 
இதையொட்டி, ஐதராபாத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில், நடிகர் சிரஞ்சீவி, தன் மனைவி, மகள், நடிகரும், மகனுமான ராம்சரண் தேஜா ஆகியோருடன் வந்தார். அப்போது, ஓட்டுச் சாவடி யில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். சிரஞ்சீவியும், அவரின் குடும்பத்தினரும், வரிசையில் நிற்காமல், நேராக ஓட்டுச் சாவடிக்குள் சென்று, ஓட்டளிக்க முயற்சித்தனர். அப்போது, வரிசையில் நின்றிருந்த, ராஜா கார்த்திக் என்ற இளைஞர், சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தினார். ''நீங்கள், எவ்வளவு பெரிய வி.ஐ.பி.,யாக வேண்டுமானாலும் இருக்கலாம்; மத்திய அமைச்சராக கூட இருக்கலாம். ஆனால், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீங்கள், மூத்த குடிமகனோ, மாற்றுத் திறனாளியோ இல்லை. எனவே, வரிசையில் நின்று, ஓட்டளியுங்கள்,'' என்றார். இதனால், சிரஞ்சீவி, கடும் அதிருப்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து, வரிசையில் நின்றிருந்த மற்ற வாக்காளர்களும், சிரஞ்சீவிக்கு எதிராக, கோஷமிட்டனர். வேறு வழியில்லாமல், சிரஞ்சீவி, வரிசையில் நின்று, ஓட்டளித்தார்.
 
'அனுமதிக்க முடியாது':
 
சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தி, தைரியமாக கேள்வி கேட்ட இளைஞரை, அங்கு நின்றிருந்த வாக்காளர்கள், கை கொடுத்து, பாராட்டினர். இளைஞர் ராஜா கார்த்திக் கூறுகையில், ''நான், லண்டனில் வசிக்கும் இந்தியன். ஓட்டு போடுவதற்காக, ஐதராபாத்துக்கு வந்துள்ளேன். சிரஞ்சீவியை நான் மதிக்கிறேன். ஆனால், அவர், விதிமுறைகளை மீறுவதை, அனுமதிக்க முடியாது,'' என்றார்.
 
 
no_queue.jpg
 
1538801_764259716937867_1170091588877006
 
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருந்து வந்திருப்பதால் தைரியமாகப் பேசிவிட்டார்.. இல்லாவிட்டால் சிரஞ்சீவி குடுத்திருக்கும் பளாரில் :o ஒட்டுமொத்த சனமும் கலங்கிப் போயிருக்கும்.. slap1.gif

  • தொடங்கியவர்

'வேகத்தடை'யை வெற்றிப்படியாக்கிய இளம் விவசாயி!

 

564xNxyouth_1873871g.jpg.pagespeed.ic.aI

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் விவசாய நிலங்களுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரம் மூலம் மிக்ஸியை இயக்கி பழச்சாறு தயாரிப்பு பணியில் ஈடுபடும் இளம் விவசாயி ராஜகோபால். | படம்: கி.பார்த்திபன்
 

நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் செய்தி சேகரிப்புக்காக சென்றுகொண்டிருந்தேன். தகிக்கும் கோடை வெயிலை சமாளிக்க சாலையோரத்தில் ஆங்காங்கே கரும்புச்சாறு கடை, பழரசக் கடை, தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சு விற்பனை மற்றும் மோர், கம்பங் கூல் என குறிப்பிட்ட இடைவெளியில் சாலையோரத்தில் உள்ள புளியன் மரத்தடியில் (பெரும்பாலான இடங்களில் சாலை அகலப்படுத்தும் நோக்கில் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. யார் செய்த புண்ணியமோ இன்றளவும் நாமக்கல் - திருச்செங்கோடு மாநில நெடுஞ்சாலையில் சாலையோர மரங்கள் உள்ளன.) சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அவற்றை சாப்பிட மனதில் விருப்பமில்லை. பயணம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் எனும் இடத்தில் புளியன் மரத்தடியில் இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் முலாம்பழம் பழச்சாறு போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். முந்தைய பத்தியில் குறிப்பிட்டிருந்த கடைகள் அனைத்தும் குடியிருப்புகள் அருகிலும் ஜனநடமாட்டம் உள்ள பகுதியிலும் இருந்தது. ஆனால், இளவயது நபர் வைத்திருந்த தள்ளுவண்டி கடை அருகே குடியிருப்புகள் உள்ளிட்ட எதுவும் இல்லை.

இதை யோசனை செய்தபடியே கடை அருகே எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, முலாம்பழச்சாறு சாப்பிடும் நோக்கில், அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். "குடியிருப்புகள் இல்லை கண்ணுக்கு எட்டின தூரம் வரை வணிக கடைகளும் இல்லை. அப்படியிருக்க, இங்கு பழச்சாறு கடை வைத்திருக்கிறீர்கள். வியாபாரம் நடக்கிறதா?" என்றேன். அதற்கு, "நன்றாக நடக்கிறது" என பேசியபடியே அவர் கூறியது:

"ராசிபுரம் அருகே வையப்பமலை எனது சொந்த ஊர். எனது பெயர் ராஜகோபால். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விவசாயம் செய்கிறேன். பகல் வேளையில் கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்க முடிவு செய்து, பழச்சாறு கடை வைத்துள்ளேன். தள்ளுவண்டி கடை வைத்துள்ள இடத்தில் இருந்து சில அடி துாரத்தில் சாலையின் நடுவே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வருவோர் வேகத்தடையை கடக்க வாகனங்களை மெதுவாக ஓட்டுவர். அப்போது எனது கடை கண்ணில் படும். கோடை வெயிலும் அதிகமாக இருப்பதால் வாகனங்களை நிறுத்தி பழரசம் சாப்பிடுகின்றனர்.

நாளொன்றுக்கு ஆயிரம் முலாம்பழ பழரசம் விற்பனை செய்கிறேன். கடைகளில் விற்பனை செய்யும் அதே நேரத்தில், ரூ.15 என்ற மலிவு விலையில் விற்பனை செய்கிறேன். முலாம்பழ பழரசம் மிக்ஸி மூலம் தயார் செய்யப்படுகிறது. அதற்கான மின்சாரத்திற்கு பேட்டரி பயன்படுத்தவில்லை. காரணம், அதிக செலவு பிடிக்கும். அதேவேளையில் விவசாய நிலத்திற்கு மருந்து அடிக்க பயன்படும் இயந்திரத்தின் மோட்டாரை எடுத்து கிரைண்டர் பெட்டியில் பொருத்தியுள்ளேன். இவற்றை இயக்க பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. ரூ. 150-க்கு பெட்ரோல் நிரப்பினால் ஆயிரம் பழரசம் தயார் செய்ய முடியும்" என்று அவர் கூறியதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

படித்து பட்டம் பெற்ற பலர் சரியான வேலை கிடைக்கவில்லை. சுய தொழில் ஆரம்பித்து நஷ்டம் என புலம்புவோர் மத்தியில் தனது சமயோகித அறிவால், ஆள் அரவமற்ற இடத்தில் பழச்சாறு கடை அமைத்து லாபம் ஈட்டும் ராஜகோபால் பாராட்டுகுரியவர் என்றால் மாற்றுக் கருத்தில்லை.

 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/article5969867.ece?homepage=true

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

குடியிருப்புகள் இல்லாத பகுதியில்... வீதியின் வேகத்தடை அருகே கடை வைத்த,
ராஜகோபாலின்... யோசனை அருமையானது

  • கருத்துக்கள உறவுகள்

முலாம்பழம் என்டால் என்ன?

முலாம்பழம் என்டால் என்ன?

 

முலாம் பழம் என்றால் மெலோன் பழம்

 

https://www.google.ca/search?q=melon&newwindow=1&client=firefox-a&hs=sue&rls=org.mozilla:en-US:official&channel=sb&source=lnms&tbm=isch&sa=X&ei=5uhjU8eYCIKgyASZtYDABQ&ved=0CAgQ_AUoAQ&biw=1600&bih=738

  • தொடங்கியவர்

குப்பையில்லா பேரூராட்சி!

 

Tamil_News_large_966710.jpg

 

குப்பையை உரமாக மாற்றியதால், சாலைகள் குப்பையின்றி அழகாக காட்சியளிப்பதுடன், நோய்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக கூறும், வெங்கடேசன்: நான், தஞ்சாவூர் அருகில் உள்ள, வல்லம் பேரூராட்சியில், சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றுகிறேன். எங்கள் பேரூராட்சியில் நிறைய கல்லுாரிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளதால், அதிக அளவில் குப்பை சேர்ந்தபடி இருக்கும்.இது எங்களுடைய சுகாதாரத்திற்கு, பெரும் தலைவலியாக இருந்தது. மேலும், இக்குப்பையை சேகரித்து வேறு இடங்களில் கொட்டினாலும், அது மக்காமல், கொசுக்கள் உருவாவதற்கு புகலிடமாக மாறியது.கொசுவும், குப்பையும் பல நோய்களுக்கு மூலக்காரணம் என்பதால், எங்கள் பேரூராட்சியின் ஒவ்வொரு இடத்திலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என, இரண்டு குப்பை தொட்டிகளை வைக்க ஆரம்பித்தோம்.இத்திட்டத்திற்கு பொதுமக்களும் ஒத்துழைத்து, குப்பையை இரண்டாக பிரித்து கொட்ட ஆரம்பித்தனர். இனி, குப்பையை ஏதேனும் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்த முடியுமா என, சிந்தித்தோம். அப்படி தான், இந்த மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கு கட்டினோம்.பேரூராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பையை, மண்புழு தயாரிக்கும் கிடங்கில் கொட்டி, தண்ணீர் மற்றும் சாணத்தை தெளித்து, மொழுகிவிட்டு, அதில் கொஞ்சம் மண்புழுவையும் விடுவோம். அவை ஒரு மாதத்தில் பல்கிப் பெருகி, அந்த குப்பையை மக்கச் செய்து, தரமான உரமாக மாற்றியது. இவ்வாறு உற்பத்தி செய்த உரத்தை வைத்து, எங்கள் பேரூராட்சியில் தரிசாக கிடந்த இடங்களில், காய்கறிகளை விளைவித்தோம். மீதமுள்ள, 500 கிலோ உரத்தை, பொதுமக்களுக்கு விற்பனை செய்வதால், வல்லம் பேரூராட்சிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.மக்காத பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து, அவற்றை இயந்திரம் மூலம் துாளாக்கி, பிளாஸ்டிக் சாலைகள் அமைத்தோம். இதனால், பேரூராட்சியால் அமைக்கப்படும் சாலைகள், தரமாக இருப்பதுடன் சுற்றுச்சூழல் மாசுபாடுவதும் தவிர்க்கப்படுகிறது.இவ்வாறு குப்பையை பிரித்து, பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்வதால், எங்கள் பேரூராட்சி முழுவதும் சுகாதாரமாக மாறி, சாலைகள் குப்பைகளின்றி அழகாக காட்சியளிப்பதுடன், நோய்களும் பெருமளவில் குறைந்துள்ளன.தற்போது, பேரூராட்சி முழுவதும் உள்ள நீர்நிலைகளை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். முதல்கட்டமாக, பழங்காலத்து குளங்களை துார்வார ஆரம்பித்துள்ளோம். எங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கு தமிழக அரசும், எங்கள் பேரூராட்சியில் உள்ள கல்லுாரிகளும், முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை  வாசித்தபோது

உண்மையில் வெட்கமாக இருந்தது  

 

ஆனாலும் சிலருடன் சேர்ந்து ஏதோ என்னால் முடிந்ததுக்கும் மேலாக செய்கின்றேன்

தொடர்ந்து செய்வேன்

மற்றவர்களும் இதை ஒரு உதாரணமாக எடுத்து

அதை செயலிலும் காட்டணும்

  • தொடங்கியவர்
"பரமசிவம்' பார்த்துக்கொள்வார்..."
Tamil_News_large_920070.jpg
 
கோவை டவுன்ஹால் வீதியில் உள்ள அந்த சின்னஞ்சிறு வீட்டின் முன் விதவைகளும், வயதானவர்களும், எளிய தொழிலாளர்களுமாக ஒரு சிறு கூட்டம் அவர் எப்போது வருவார் என்று கண்களில் கடைசி நம்பிக்கையை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.
 
வரப்போவது யார் மருத்துவரா, கவுன்சிலரா, அதிகாரியா என்றால் அப்படி எல்லாம் கிடையாது. அவர் சாதாரண பேருந்து ஒட்டுனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தில மனைவி, குழந்தைகளுடன் வாழும் சராசரி எளிய இந்தியன்.
 
ஆனால் அந்த இந்தியனுக்குள் அடுத்தவருக்கு உதவுவது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று எரியும் ஜோதிதான் அவரைப்பற்றிய இந்த கட்டுரை.
 
பெயர் பரமசிவம், வயது 47 ஆகிறது. கோவையில் ஏஜேகே கல்லூரியின் பேருந்து ஒட்டுனராக உள்ளார்.
 
பத்து வருடங்களுக்கு முன் சில ஆவணங்கள் வாங்குவதற்காக அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கவேண்டிய நிலை .அப்போது அவருக்கு ஏற்பட்ட அலைச்சலும், மன உளைச்சலும்தான் அவரை புதிய பாதைக்கு திருப்பியது.
 
நம்மைப் போலவே அன்றாடம் இதே வேலையாக அலையும் பலருக்கு நமது அனுபவத்தை வைத்து உதவினால் என்ன என்று சிந்தித்தார்.அதன்படி விதவைகள் பென்ஷன், வயதானவர்கள் ஒய்வூதியம் போன்றவைகளை வாங்கிக் கொடுத்தார். வாங்கியவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பார்த்தார் அதன்பிறகு இதுவே தனது வாழ்க்கை என்பதாகக் கொண்டுவிட்டார்.
 
உதவியதை எல்லாம் நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை பதினைந்தாயிரம் பேர்களுக்கு உதவியிருப்பேன்.
 
கல்லூரியில் வாகனம் ஒட்டும் வேலை காலை 8 மணியில் இருந்து 10 மணிவரையிலும்,மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரையிலும்தான்.இந்த நேரம் போக இடைப்பட்ட நேரங்களில் மக்களுக்கு உதவுவது என்று முடிவு செய்தார். இந்த முடிவை கல்லூரி நிர்வாகத்திடமும் சொல்லி அனுமதியும், ஆசியும் வாங்கிக் கொண்டார்.
 
பத்து மணிக்கு தனது வீட்டிற்கு வந்ததும் காத்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். மனுதாரர்கள் பேச்சிலும், தரும் தகவல்களிலும்,வழங்கப்படும் சான்றுகளிலும் பொய்யோ, வில்லங்கமோ இல்லாத மனுக்களை மட்டும் எடுத்துக் கொள்கிறார். அவர்களது பிரச்னைகளை அறிந்து கொள்கிறார்அ வர்களுக்கான மனுக்களை தயார் செய்கிறார். பிறகு அது தொடர்பான அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை பார்த்து அவர்களுக்கான காரியங்களை செய்து கொடுக்கிறார்.
 
இதற்காக பத்து பைசா கூட வாங்கியதும் கிடையாது, வாழ்நாள் முழுவதும் வாங்கப்போவதும் கிடையாது. மனிதனாகப் பிறந்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். எனக்கு இப்படி ஏழை எளியவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகவே கருதுகிறேன். இதனால் என் மனசு நிறைந்து இருக்கிறது. திருப்தியும் சந்தோஷமும் உண்டாகிறது. இன்னும், இன்னும் இவர்களுக்காக உழைக்கத் தோன்றுகிறது.
 
என்னோட நேர்மை மற்றும் அணுகுமுறை பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதாலும், நான் நியாயமான காரியமாகத்தான் வருவேன் என்பதாலும் அதிகாரிகளும் எனக்கு உதவுகிறார்கள்.
 
தன் பிள்ளைகளுக்கு கடந்த 12 வருடமாக சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் அலைந்த ஒருவருக்கு ஒரே நாளில் சாதி சான்றிதழ் வாங்கிக் கொடுத்தபோது " என் பிள்ளைகள் வாழ வழி காட்டியதற்கு எப்படி நன்றி சொல்வேன்' என்று கைகூப்பி சொன்ன ஒரு பெரியவரின் வாழ்த்தையும், ஆட்டோ ஓட்டிய பிள்ளை இறந்த துக்கத்தில் இருந்த ஒரு குடும்பத்திற்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொடுத்ததும் " இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றிவைத்த நீ நாங்க பெறாத புள்ளைப்பா நல்லாயிரு' என்று சொல்லப்பட்ட வார்த்தைகளையும் விட பெரிய வாழ்த்தும், வாழ்க்கையும் வேறு என்ன இருக்கப்போகிறது என்று சொல்லும் பரமசிவம் இப்போது இந்த அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.
 
மக்களுக்கான அரசின் சலுகைகள் நிறையவே இருக்கிறது, அதே போல அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திடமும் நிறைய திட்டங்கள் இருக்கிறது கொஞ்சம் முயற்சித்தால் நியாயமான எதையும் பெற முடியும். நீங்கள் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் பரமசிவம் , விதவை பென்ஷன் கேட்டு விண்ணப்பம் எழுத வந்த ஒரு பெண்ணிடம் ஒண்ணும் கவலைப்படாதம்மா ,நிச்சயம் கிடைச்சுடும் என்று ஆறுதலாகவும், அன்பாகவும் நம்பிக்கை வார்த்தைகளை விதைக்கிறார்.
 
சுயநலமே பிரதானமாக போய்விட்ட இன்றைய உலகில் பொதுநலமே தனது வாழ்க்கையின் பிரதானம் என்று வாழும் பரமசிவம் நீடுழி வாழ வாழ்த்துவோம். இவரை நமக்கு அறிமுகம் செய்துவைத்த ஈரநெஞ்சம் மகேந்தினுக்கு நன்றிகள் பல.
 
பரமசிவத்துடன் தொடர்பு கொள்ள: 9629105471.
 
  • தொடங்கியவர்

மெரீனாவில், 50 பைசா வருமானத்தில், தள்ளுவண்டி கடை நடத்தி, இன்றுபல, 'ரெஸ்டாரன்ட்'டுகளை நடத்தி வரும், பெட்ரிஷியா நாராயணன்.

Tamil_News_large_971130.jpg

இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!

மெரீனாவில், 50 பைசா வருமானத்தில், தள்ளுவண்டி கடை நடத்தி, இன்றுபல, 'ரெஸ்டாரன்ட்'டுகளை நடத்தி வரும், பெட்ரிஷியா நாராயணன்: நான், சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன். 17 வயதில் திருமணம் நடந்தது. கணவன் குடிகாரன் என்பதால், என் திருமண வாழ்க்கை தோற்றுப் போனது. இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற பின் தான், எதற்கு இனி கலங்க வேண்டும் என்ற மனநிலையோடு, என்னுடைய வாழ்க்கையை, அம்மா வீட்டில் ஆரம்பித்தேன்.ஆனாலும், நம்மையும், நம் குழந்தைகளையும் நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தை விடவில்லை. அதனால், வீட்டில் இருந்தபடியே ஜாம், ஸ்குவாஷ், ஊறுகாய் போன்றவற்றை தயாரித்து, அக்கம்பக்கத்தில் விற்க ஆரம்பித்து, சிறிது பணம் சேர்த்தேன்.நான், மெரீனா பீச்சுக்கு அருகில் வசித்தவள் என்பதால், 'ஸ்லம் போர்ட்'டில் முறைப்படி அனுமதி பெற்று, அண்ணா சதுக்கத்தின் அருகில் தள்ளுவண்டி மூலம் கட்லெட், சமோசா, காபி, டீ, ஜூஸ் போன்றவற்றை விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.முதல் நாள், என்னுடைய கடையின் வருமானம், வெறும், 50௦ பைசா தான். ஒரே ஒரு டீ மட்டுமே விற்பனை ஆனதால், மிகவும் நொறுங்கி போனேன். அன்று இரவு, என் அம்மாவின் மடியில் படுத்து, ஓவென்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன்.'ஒன்றுமே விற்காமல் போனால் தான் கவலைப்பட வேண்டும். ஒரே ஒரு டீ விற்றது கூட, 'பாசிடிவ்'வான விஷயம் தானே...' என, அம்மா கேட்டார். எனக்கும் சரி என, தோன்றியது.அம்மாவின் உற்சாக வார்த்தையால், மறுநாள் நம்பிக்கையோடு வியாபாரத்திற்கு சென்றேன். அன்று மட்டுமே, 600 ரூபாய்க்கு வியாபாரம் ஆனது. அந்த நிகழ்வு தான், என் வாழ்க்கையை மாற்றி போட்டது. தொடர்ந்து, 20 ஆண்டுகள் மெரீனா பீச்சிலேயே தள்ளுவண்டி கடை நடத்தினேன். எனக்கு நன்கு தெரிந்த சமையல் தொழிலை கையில் எடுத்து, உண்மையாக உழைத்தேன். இப்படி நிறைய வாய்ப்புகளை தேடிப் பிடித்ததால், 'கான்ட்ராக்ட்' மூலம், கேன்டின்களில் உணவு சமைக்கும் வாய்ப்புகள் பல கிடைத்தன.இந்த அனுபவத்தால், சென்னையில் ஒரேயொரு இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட, 'சந்தீபா ரெஸ்டாரன்ட்ஸ்' இன்று, 'சந்தீபா செயின் ஆப் ரெஸ்டாரன்ட்ஸ்' ஆக, சென்னையின் பல இடங்களில் இயங்கி வருகின்றன.வெறும், .50 பைசா வருமானத்தில், தள்ளுவண்டியில் ஆரம்பிக்கப்பட்ட என் உணவு தொழில், இன்று, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 2 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். 2010ல், சிறந்த பெண் தொழிலதிபருக்கான விருதை, 'இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ்'சிலிருந்து பெற்றேன்.

 

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

 

தாயுமானவன்!
ஞா.சுதாகர், படங்கள்: தி.விஜய்
 

மெரிக்காவின் புகழ்பெற்ற 'டைம்ஸ்’ இதழ், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 மனிதர்களை ஒவ்வொரு வருடமும் பட்டியலிடும். அந்த வகையில், இந்த வருடம் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 மனிதர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் நான்கு பேர் இந்தியர்கள். மோடி, கெஜ்ரிவால், அருந்ததி ராய்க்கு அடுத்தபடியாக வருபவர் ஒரு தமிழர். பெயர் முருகானந்தம். இந்தியாவில், பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் பயன்பாட்டில் வெளியே தெரியாத பெரும் புரட்சி செய்திருப்பவர். ஏற்கெனவே விகடன் வாசகர்களுக்கு அறிமுகமானவரைப் பற்றி ரீ - இன்ட்ரோ இங்கே...

 

வறுமையில் வாடும் முருகானந்தத்தின் மனைவி, நாப்கின்களுக்குப் பதிலாகக் கந்தல் துணியைப் பயன்படுத்துகிறார். நாப்கினின் விலை, எளிய மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் முருகானந்தம், எளிமையான, விலை குறைவான நாப்கின்களை உருவாக்க முயற்சி எடுக்கிறார். விலை குறைவான நாப்கின்கள் தயாரிக்க இவர் தந்த விலை அதிகம். ஒவ்வொரு முறையும் நாப்கின்கள் பற்றியே பேசிக்கொண்டிருப்பதால் வீட்டில் பல பிரச்னைகள் உருவெடுக்கின்றன. தான் தயாரிக்கும் நாப்கின்களை மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் கொடுத்து பரிசோதிக்கிறார்.

 

p36a.jpg

 

ஒரு கட்டத்தில் இவரது மனைவியே இவரைவிட்டுப் பிரிந்து செல்கிறார். சோதனைக்காகப் பெண்கள் பயன்படுத்திய நாப்கின்களை முருகானந்தம் வீட்டுக்கு எடுத்துவர, பெண் பித்தன், பைத்தியக்காரன் என்று சுற்றுப்புறம் பட்டம் கொடுத்துக் கட்டம் கட்டுகிறது. அத்தனையையும் இழந்து இறுதியில் விலை மலிவான நாப்கின்களை வடிவமைக்கும் அந்த இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார். அதன் மூலம் பல பெண்களைத் தொழில்முனைவோ ராகவும் மாற்றியிருக்கிறார். இந்த நிலையில் அவரின் அத்தனை வலிகளுக்கும் ஒத்தடம் கொடுப்பது போல் 'சுகாதாரப் போராளி’ என்று வர்ணித்து, இந்த வருட பட்டியலில் இடம் கொடுத்திருக்கிறது 'டைம்ஸ்’ பத்திரிகை. அமெரிக்காவில் ஒபாமா, பில்கேட்ஸ் முன்னிலையில் கருத்தரங்கத்தில் பேசிவிட்டு வந்திருக்கும் முருகானந்தத்திடம் பேசினோம்.

 

 

''ரொம்ப ரொம்பச் சந்தோஷம்ங்க. பல வருஷமாப் போராடி 2004-ம் வருஷம்தான் மலிவு விலை நாப்கினை டிசைன் பண்ணினேன். முதன்முதலாக, பயப்படாமல் என் நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி அதைப் பயன்படுத்த முன் வந்தார். 'ரொம்ப நல்ல முயற்சி. கம்ஃபோர்ட்டா இருக்குண்ணே... உங்க முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்’னு சொன்னாங்க. அதுதான் நான் பெற்ற முதல் விருது... அங்கீகாரம். அந்தச் சகோதரிக்கு நன்றி!''

 

 

''உலக அளவுல ஃபேமஸ் ஆகிட்டீங்க. நிறையப் பேர் பிசினஸ் பேசியிருப்பாங்களே?''

 

'' 'நாங்க இத்தனை புரஃபஷனல்கள், இயந்திரங்கள், டெக்னாலஜி வைச்சு பண்றதை, அதே குவாலிட்டியில் எப்படிக் கம்மியான விலையில் தயார் பண்றீங்க?’னு கேட்டாங்க. நான் அவங்ககிட்ட, 'உங்களுக்கு இது பிசினஸ்; எனக்கு லட்சியம்’னு பதில் சொன்னேன். பிசினஸ்னு யோசிக்க ஆரம்பிச்சா, கொசு மாதிரி மாறி யார் ரத்தத்தை உறிஞ்சலாம்னு அலைஞ்சுகிட்டு இருப்போம். லட்சியம்னு இருந்ததால பட்டாம் பூச்சி மாதிரி மாறி, மகரந்த சேர்க்கைக்குப் பயன்படுகிறேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழுற விளைநிலங்களை அழிச்சு, தொழிற்சாலைகளைக் கட்டி அங்கே சில நூறு பேருக்கு வேலை தர்றதுக்குப் பேர்தான் பிசினஸ். எனக்கு அது பிடிக்காது. என் கண்டுபிடிப்பு, மக்களுக்காக இருக்கணும்; மக்களோடு இருக்கணும்.. அவ்வளவுதான்!''

 

''உங்கள் கண்டுபிடிப்பு இவ்வளவு தூரம் பேசப்படும்னு நினைச்சீங்களா?''

 

''இல்லைங்க. முதல்ல என் மனைவி, தங்கைனு என் சொந்தங்களின் வலியைப் போக்கத்தான் நினைச்சேன். அப்புறம்தான் இந்தியாவில் 95 சதவிகித பெண்கள், நாப்கின் பயன்படுத்தறதே இல்லைனு தெரிஞ்சுகிட்டேன். வங்க தேசத்தில் வறுமையில் வாடும் பெண்கள், மாதவிடாய் காலத்தில் காய்ந்த இலை, மரத்தூள், காகிதம், சாம்பலைப் பயன்படுத்துறாங்கனு தெரிஞ்சப்ப, அதிர்ச்சி ஆகிட்டேன். அப்போதுதான் எந்தப் பிரச்னை வந்தாலும் இதை நிறுத்தவே கூடாதுனு முடிவு செஞ்சேன்.

 

இந்த புராஜெக்ட் பத்தி முதன்முதலில் ஐ.ஐ.டி கல்லூரியில் பேசினப்ப, என்னைப் பார்த்துச் சிரிச்சாங்க. 'இந்தச் சின்ன மெஷின் என்ன செஞ்சிடப்போகுது?’னு அலட்சியமா கேட்டாங்க. அந்த ஓர் இயந்திரம் இன்னைக்கு 1,300 இயந்திரமா பெருகியிருக்கு. பல பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் ஆரோக்கியத்தையும் கொடுத்திருக்கு. இன்னைக்கு இந்த இயந்திரம் 11 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆப்பிரிக்கா போன்ற பின்தங்கிய நாடுகளில் இதன் தேவைகளைப் பற்றியும், வளர்ந்த நாடுகளில் இதன் சிறப்பம்சம் பற்றியும் விளக்கியும் பெண்களுக்கு விழிப்பு உணர்வு கொடுக்கணும். குளிர் நாடுகளில்கூடப் பல பெண்கள் இந்தப் பிரச்னைக்கு ஆளாகி இருக்காங்க. அவங்க பிரச்னையைத் தீர்க்க முயற்சி எடுத்துட்டு இருக்கேன். ஒண்ணே ஒண்ணுதான். நல்லது நினைச்சா நல்லதே நடக்கும்!''

 

p36.jpg

 

''எதிர்கால லட்சியம் என்ன?''

இந்தியாவை ஆரோக்கியமான நாடாக மாத்தணும். இது ஒரு விதைதான். முழுத் தீர்வுக்கு இன்னும் நிறையப் பயணிக்கணும். அதுக்காக இளைஞர்களின் பங்களிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கேன். இந்தியாவில் மட்டுமே 10 லட்சம் பெண்களைத் தொழில்முனைவராக மாத்தணும். அவங்க மூலமா உலகம் முழுக்க இருக்குற சகோதரிகள் முகத்தில் சிரிப்பை வரவைக்கணும்!''

 

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=94765

  • தொடங்கியவர்

வறுமையை வென்று சாதித்துக்காட்டிய மாணவன்

 

 
weilding_1886926h.jpg
வெல்டிங் பட்டறையில் பணிபுரியும் ஈ.மணிமாறன். (படம்: ஆர்.அசோக்.)
 
8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி வேலைக்குச் சென்ற மாணவன் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி சென்று பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்திருக்கிறார்.
 
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி வசப்படும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஏழை மாணவன் மணிமாறன். குடும்ப வறுமையினால் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வெல்டிங் பட்டறையில் வேலைக்குச் சென்ற மணிமாறன், 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி சென்று படித்து பிளஸ் 2 தேர்வில் 1129 மதிப்பெண் எடுத்து, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்- 184, ஆங்கிலம்- 172, கணிதம்- 193, இயற்பியல்- 188, வேதியியல்- 197, கணினி அறிவியல்- 195.
 
இது எப்படி சாத்தியமாயிற்று என்பதை மணிமாறனே விளக்குகிறார்.
 
‘தந்தை இசக்கிமுத்து ஊர் ஊராய் மிட்டாய் விற்பனை செய்கிறார். மேல அனுப்பானடியில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். தந்தையின் வருமானம் வாடகைக்கும், சாப்பாட்டுச் செலவுக்குமே சரியாக இருக்கும். வறுமை நிலவியதால், 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்பினர்.
 
பள்ளிக்குத்தான் செல்வேன் என அடம்பிடித்தேன். ஆனால் பெற்றோர், சாப்பாட்டுக்கே வழியில்லை. அதனால் வேலைக்கு செல்’ என்றனர். வேறு வழியின்றி வெல்டிங் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆர்க் வெல்டிங் கற்றுக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தேன். எப்படியாவது படித்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற வெறி எனக்குள் ஏற்பட்டது. பிளஸ் 1 சேர்வதற்காக மதுரையிலுள்ள பல தனியார் பள்ளிகளுக்குச் சென்றோம். ஆனால் 3 ஆண்டு இடை நின்றல் இருந்ததாலும், தனி தேர்வராக 10ம் வகுப்பு படித்ததாலும் ஒரு பள்ளியில்கூட என்னை சேர்க்கவில்லை. கடைசியாக பாரதிதாசனார் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றோம்.
 
அங்கு எந்த மறுப்பும் கூறாமல் என்னை சேர்த்துக் கொண்டனர். 2 ஆண்டுகளாக வாரத்தின் 5 நாள் பள்ளியிலும், 2 நாள் வெல்டிங் பட்டறையிலும் என காலத்தை கழித்தேன். ஆனாலும் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர்.
 
பி.இ கம்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என ஆசை. வார விடுமுறை நாளில் வெல்டிங் தொழில் மூலம் நாளொன்றுக்கு ரூ.300 சம்பாதித்து, அதைக்கொண்டு தொடர்ந்து படித்துவிடுவேன். குடும்பத்தின் வறுமையை ஒழித்து குடும்பத்தினர் மகிழும் வகையில் வாழ வேண்டும் என்பதே என் ஆசை..’ என்கிறார்.
 

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/article5996006.ece?homepage=true

 

Edited by Athavan CH

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

5 ரூபாயிலிருந்து ஆரம்பித்து 5 லட்சத்திற்கு வளர்ந்த சேவை- வியக்கவைக்கும் விவேகானந்தா டிரஸ்ட் இளைஞர்கள்

 

periya_1905871h.jpg
பெரியசாமி
 
“ஓராயிரம் வெற்று வார்த்தைகளை விட ஒரு துளி அளவுள்ள செயல் சிறந்தது’’ என்று சொன்னார் விவேகானந்தர். அவரது பெயரில் சேவை அமைப்பு நடத்தும் பெரியசாமியும் அவரது நண்பர்களும் இதை மெய்யென நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியசாமி ஒரு பத்திரிகை முகவர். 7 வருடங்களுக்கு முன்பு இவரும் இவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ‘விவேகானந்தர் சேவா டிரஸ்ட்’டை தொடங்கினார்கள். இப்போது இதில் மெக்கானிக், கொத்தனார் என 30 பேர் உறுப்பினர்கள். 5 ரூபாய்க்கு மரக் கன்றுகளை வாங்கி நடுவதில் தொடங்கிய இவர்களின் சேவை இப்போது 5 லட்சம் ரூபாய் பங்களிப்பில் பொதுக்குளத்தை தூர்வாரும் பணியில் வந்து நிற்கிறது. இந்த இலக்கை எப்படி எட்டிப் பிடித்தார்கள் இந்த இளைஞர்கள்?
 
அதுகுறித்து பெரியசாமி பேசுகிறார். “பழனியில் பொது சேவை எதுவாக இருந்தாலும் அதில் எங்களையும் வலியப் போய் இணைத்துக் கொள்வோம். 30 பேரும் மாதம் 100 ரூபாய் சந்தா சேர்ப்போம். அத்துடன், நல்லவர்களிடம் இன்னும் கொஞ்சம் நிதி திரட்டி பள்ளிக் கூட பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம். பழனியில் திரியும் பரதேசிகளுக்கு எப்படியாவது உணவு கிடைத்துவிடும். ஆனால், மனநிலை சரியில்லாமல் ரோட்டோரம் முடங்கிக் கிடக்கும் ஜீவன்களுக்கு அது சாத்தியமில்லை. தினமும் அவர்களில் பத்துப் பேருக்கு எங்கள் டிரஸ்ட் மூலமாக ஒருவேளை சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறோம். எங்களிடம் உள்ள இருப்புக்கு இவ்வளவுதான் செய்யமுடியும்.
 
கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் சுற்றுப்புறச் சூழல் கெடுவதைப் பற்றி கவலைப்படாமல், பாலித்தீன் பொருட்களையும் காலி மதுபாட்டில்களையும் கொடைக் கானல் மலைச் சாலையில் கண்டபடி வீசிவிட்டுப் போகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா சீசன் முடிந்ததும் என்.சி.சி. மாணவர்கள் துணையோடு அந்த நச்சுக் கழிவுகளை எல்லாம் சேகரித்து நகராட்சி குப்பைக் கிடங்கில் சேர்ப்பது எங்கள் வேலை. 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பணியை மேற்கொள்வோம்.
 
மலர் கண்காட்சி சமயத்தில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி அவர்கள் எடுத்துச் செல்லும் பாலித்தீன் பைகளை வாங்கிக் கொண்டு துணிப் பைகளை கொடுப்போம். அத்துடன் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாமல் இருப்பது எப்படி என விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் கொடுப்போம்.பழனி அரசு மருத்துவமனையில் உள்ள ஆண்கள் வார்டை ரெண்டு வருஷமா நாங்கள் தத்தெடுத்திருக்கிறோம். அந்த வார்டுக்கு வெள்ளையடித்து, மின் விசிறிகள் மாட்டி, ஜன்னல்களில் கொசு வலை அடித்து படுக்கை விரிப்புகள் வாங்கிக் கொடுத்து, பூந்தொட்டிகள் வைத்து சுகாதாரமான முறையில் பராமரித்து வருகிறோம். அடிக்கடி நாங்களே அங்கு சென்று பினாயில் தெளித்து சுத்தம் செய்கிறோம்.
 
அடுத்த கட்டமா பழனியில் உள்ள வையாபுரி குளத்தை தூர்வாரும் பணியில் பொதுநல அமைப்புகளுடன் கைகோத்து இறங்கி இருக்கிறோம். இதற்கு 10 லட்சம் தேவை. இதில் பாதித் தொகையை செலுத்திவிட்டால் நமக்கு நாமே திட்டத்தில் மீதித் தொகையை பெற்று பணிகளை முடித்துவிடலாம்.
 
இந்தத் திட்டத்துடன் இதுவரை ரெண்டரை லட்சம் நிதி திரட்டி இருக்கிறோம். எஞ்சிய தொகையையும் திரட்டி வையாபுரி குளத்தை அழகுறவைப்போம்’’ என்று நம்பிக்கை மிளிரச் சொன்னார் பெரியசாமி.
 
“நூறு இளைஞர்களை என்னிடத்தில் தாருங்கள்.. இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்’’ என்று தெரியாமலா சொன்னார் விவேகானந்தர்!
 

http://tamil.thehindu.com/opinion/reporter-page/5-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6030746.ece?homepage=true

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.