Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடியப் பாடசாலையில் புலிகொடிக்குத் தடை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கனேடியப் பாடசாலையில் புலிகொடிக்குத் தடை! 
[sunday, 2014-05-04 09:43:33]
kumar-040514-150.jpg
கனேடிய பாடசாலையொன்று புலிக்கொடியை தடை செய்துள்ளது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் உள்ள இந்த உயர்தரப் பாடசாலை, வளாகத்திற்குள் மாணவர் புலிக்கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 இல் கல்வி கற்கும் குமார் மார்க்கண்டு என்ற மாணவர் இரண்டு தடவைகள் பாடசாலையில் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது புலிக்கொடியை ஏந்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை நடைபெற்ற ஆண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இதேவேளை, குறித்த கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு கிடையாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொடி ஒன்றைக் கூட பாடசாலைக்கு கொண்டு செல்ல முடியாவிட்டால் எவ்வாறு எனது கலாச்சாரத்தை பிரதிபலிப்பது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த கொடியை ஏந்துவது சக மாணவர்களுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா போன்ற பல் கலாச்சார நாட்டில் தமது கலாச்சாரத்தை பிரதிபலிக்க கிட்டாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கொடி தடை செய்யப்படவில்லை.

இங்கு தெருக்களில் பறக்கவிட்டு விற்பனை செய்கிறார்கள்.

பிரின்சிபல் ஒரு அரைகுறை அரசியல்வாதி.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் புலிக்காச்சலை பரப்ப பல வல்லவர்கள் இருக்கிறார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலையில் அரசியல் பேசும் அநாகரீக கலாச்சாரத்தை கனடா போயும் விடவில்லையே மார்க்கண்டு அண்ணை. லூசுத்தனமா கனடா பள்ளிக்கூட விழாவில படம் காட்டுறத விட்டுட்டு மகனை 2009 க்கு முன்னம் ஊருக்கு அனுப்பி இருக்க வேண்டியது தானே?

பாடசாலை அதிபர்க்கு ஒரு சபாஸ்.

அண்ணோய், உங்கட கொட்டகேன அறிவரி பற்றி தெரியாது ஆனால் இங்கு அரசியல் பாடசாலையில் ஒரு பாடம்.

1972 ஆம் ஆண்டு கொண்டுவந்த பட்டகத்தி சிங்கள கொடியை ஆட்டினால் அரசியல் இல்லையா?

பாடசாலையில் அரசியல் பேசும் அநாகரீக கலாச்சாரத்தை கனடா போயும் விடவில்லையே மார்க்கண்டு அண்ணை. லூசுத்தனமா கனடா பள்ளிக்கூட விழாவில படம் காட்டுறத விட்டுட்டு மகனை 2009 க்கு முன்னம் ஊருக்கு அனுப்பி இருக்க வேண்டியது தானே?

பாடசாலை அதிபர்க்கு ஒரு சபாஸ்.

தமிழனின் கொடி தடை செய்யப்ப்ட்டுல்ளது, அதை பார்த்து கவலைபடாமல் மகிழ்வதில் இருந்து தெரிகிறது இவர் ஒரு ரோ/சிங்கள்/முஸ்லீம் உளவாளி என்று

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலையில் அரசியல் பேசும் அநாகரீக கலாச்சாரத்தை கனடா போயும் விடவில்லையே மார்க்கண்டு அண்ணை. லூசுத்தனமா கனடா பள்ளிக்கூட விழாவில படம் காட்டுறத விட்டுட்டு மகனை 2009 க்கு முன்னம் ஊருக்கு அனுப்பி இருக்க வேண்டியது தானே?

பாடசாலை அதிபர்க்கு ஒரு சபாஸ்.

என்ன  செய்வது அவருக்கு புலிக்கொடி தூக்கும்வரை சுதந்திரம் வேண்டும் என்கிறார்

நீங்கள் பாண் தூக்கும்வரை சுதந்திரம் வேண்டும் என்கிறீர்கள்

உங்கள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது

அவரது போராட்டம் தொடர்கிறது

அவரவருடைய  சுதந்திரங்களை  மதிக்கப்பழகணும் முதலில்...

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலையில் அரசியல் பேசும் அநாகரீக கலாச்சாரத்தை கனடா போயும் விடவில்லையே மார்க்கண்டு அண்ணை. லூசுத்தனமா கனடா பள்ளிக்கூட விழாவில படம் காட்டுறத விட்டுட்டு மகனை 2009 க்கு முன்னம் ஊருக்கு அனுப்பி இருக்க வேண்டியது தானே?

பாடசாலை அதிபர்க்கு ஒரு சபாஸ்.

முதலில் யாழில் உலகின் பெயர் பெற்றவர்கள் மண்டேலா,தத்துவமேதைகள் ,சித்தாந்தவாதிகளின் படங்களை மாட்டிக்கொண்டு வந்து விஷகருத்துக்களை பரப்பும் உங்களைமாதிரி ஆட்களின் முகப்பு படத்தைதடை பன்னவேண்டும்.அப்படி வந்து மாற்றுகருத்து எழுதிறம் என்டு மொக்கேனபட்டு போட்டு கொண்டு வந்த படத்தை அவமதிப்பதற்க்கு சமம்.

goshan_che நீங்கள் கூறும் (வரித்துகொண்ட பெயரும் ஆளின் கருத்துக்கும் எட்டாப்பொருத்தம்) லூசுதனங்களை எல்லா சமூக அமைப்புகளும், நாடுகள், தத்தமது இன கலாச்சார அடையாளபடுத்தலின் அடையாளமாக திரும்ப திரும்ப நீங்கள் கூறும் லூசுதனங்களை செய்கிறார்கள் புலிக்கொடி தமிழர்களின் அடையாளம். ஜெயசிக்குறுவில் அடிவாங்கி சிங்களம் ஓடேக்கிலை காலிமுகத்தில் சிங்ககொடியாட்டிய சிங்களவனை பார்த்து வன்னியில் போய் நின்று ஆட்டு என்று சொல்ல சிங்கள இனத்தில்  goshan_che மாதிரி ஆட்கள் இல்லாதது சிங்கள இனத்துக்கு ஒரு குறையே. :D 

  • கருத்துக்கள உறவுகள்

கனேடியப் பாடசாலையில் புலிகொடிக்குத் தடை! 
[sunday, 2014-05-04 09:43:33]
kumar-040514-150.jpg
கனேடிய பாடசாலையொன்று புலிக்கொடியை தடை செய்துள்ளது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் உள்ள இந்த உயர்தரப் பாடசாலை, வளாகத்திற்குள் மாணவர் புலிக்கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 இல் கல்வி கற்கும் குமார் மார்க்கண்டு என்ற மாணவர் இரண்டு தடவைகள் பாடசாலையில் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது புலிக்கொடியை ஏந்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை நடைபெற்ற ஆண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இதேவேளை, குறித்த கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு கிடையாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொடி ஒன்றைக் கூட பாடசாலைக்கு கொண்டு செல்ல முடியாவிட்டால் எவ்வாறு எனது கலாச்சாரத்தை பிரதிபலிப்பது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த கொடியை ஏந்துவது சக மாணவர்களுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா போன்ற பல் கலாச்சார நாட்டில் தமது கலாச்சாரத்தை பிரதிபலிக்க கிட்டாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதில பாடசாலையில் தடை என்று எங்கு உள்ளது? அந்த விழாவிற்கு மட்டும் தானே கொண்டுவர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

புலிக்கொடிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் தொடர்பில்லை என்று சொன்னதை தான் நாம் கண்டிக்க வேண்டும். புலிக்கொடி தமிழர்களின் பாரம்பரிய கொடி. யாரும் தனிமனிதரோ அமைப்போ உரிமை கொண்டாட முடியாது. அந்த வகையில் புலிகள் அவர்களின் காலக்கட்டத்தில் அதனை தங்களுடைய அடையாளமாக ("தமிழீழ விடுதலைப்புலிகள்" என்ற சொல்லாடலுடன்) பயன்படுத்தினார்கள். 

இந்த விழாவின் விதிமுறைகளிற்கு எதிராக இவர் செயல்படவில்லை என்றால் இதனை சட்டரீதியாக அனுகுவது தான் புத்திசாலித்தனம் (இனி இப்படியான முடிவினை எடுக்கும் பாடசாலைகளிற்கும் இது முன்னுதாரணமாக அமையும்). கனடாவில் புலிக்கொடி தடைசெய்யப்படவில்லை என நினைக்கின்றேன் (தடைசெய்யப்பட்டிருந்தால் நான் எழுதியது பொருந்தாது).  

அதை விடுத்து தமிழ் கலாச்சாரைத்தை பிரதிபலிப்பதற்கு இன்னும் நிறைய வழிகள் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கொடி கொண்மு போவதில் சில சங்கடங்கள் உள்ளன. தங்களின் நாட்டுக் கொடியைக் கொண்டு வா எனும்போது தமிழர்கள் பொதுவாகச் சிங்களக் கொடியை ஏந்துவதில்லை. தமிழீழத் தேசியக் கொடியைக் கொண்டு செல்வார்கள். அது பற்றி அறியாதவர்கள், உலகவரைபடத்தைப் பார்த்துப் புரட்டி விட்டு, மறுப்புச் சொல்வார்கள். அவர்களுக்கு விளக்கம் கொடுத்த பின்னர், அனுமதித்த சம்பவங்கள் பல உண்டு. அது தான் தமிழீழத் தேசியக் கொடிக்கான சிறிய சிக்கல். ஆனால் இந்த மாணவர் கடந்த 2 வருடங்களாகக் கொண்டு சென்றார் என்பது எவ்வகையான பிரச்சனை எனப் புரியவில்லை...

பாடசாலையில் அரசியல் பேசும் அநாகரீக கலாச்சாரத்தை கனடா போயும் விடவில்லையே மார்க்கண்டு அண்ணை. லூசுத்தனமா கனடா பள்ளிக்கூட விழாவில படம் காட்டுறத விட்டுட்டு மகனை 2009 க்கு முன்னம் ஊருக்கு அனுப்பி இருக்க வேண்டியது தானே?

பாடசாலை அதிபர்க்கு ஒரு சபாஸ்.

உலகின் பல போராட்டங்களே... அரசாங்கங்கள் அரசியலை பாடசாலையில் செய்யபோனதால உருவானவை! அதில் இலங்கை எல்லாருக்குமே முன்னோடி.. மாணவர் தெரிவிலகூட இனம் பார்த்து மார்க் போட்டு காட்டுமிராண்டி வித்தை செய்ஞ்சாங்க .. அதுதான் தரப்படுத்தல்! 
 
அந்த மாணவர் யாருமே செய்ய துணியாத ஒரு விடயத்தை செய்திருக்கார், 
அவர் செய்தது அரசியல் அல்ல, எல்லாம் முடிந்து போச்சுன்னு எல்லாருமே அழுதாலும்,, இன்னும் எனது இனத்திற்காய் மான ரோசத்தோடு ஒரு சிலர் இருக்குறோம்னு அவர் செய்த விழிப்புணர்வு!
 
சனியனே...ஏண்டா இப்டி பண்ணினேன்னு மாமூல் பெற்றோர்போல திட்டாம .. இனத்துக்காய் மகன் செய்தது தப்பே இல்லை என்று வாதிட்ட..;.
அவர் பெற்றோருக்கு என் முதல் மரியாதை!
  • கருத்துக்கள உறவுகள்

பூசலார் கட்டிய கோயில் மாதிரிதான் உங்கட நாடும் கொடியும். நீங்களே தேசியக்கொடி என்று சொல்லிக் கொள்ளவேண்டியதுதான்.

பூசலார் கட்டிய கோயில் மாதிரிதான் உங்கட நாடும் கொடியும். நீங்களே தேசியக்கொடி என்று சொல்லிக் கொள்ளவேண்டியதுதான்.

தேசியக்கொடி என்று சொல்லுவோம் ...............அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை சகோ .கனடிய அரசுக்கு இல்லாத பிரச்சனை உங்களுக்கு ...........புரியுது ....... :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை சகோ. முன்பு ஊருக்கு போகமுன், புலம்பெயர்ஸ் இப்படி மக்களை திசைதிருப்பி மீண்டும் ஒரு ரத்த களரியை ஏர்படுத்திடிவீனமோ என்று பயப்பிடுறனான். ஆனா அண்மையில் ஊருக்கு போனா, சனத்துக்கு யாழ் களம் எண்டாலே என்ன்னெண்டு தெரியவில்லை. மற்ற புலகளங்களுக்கும் இதுதான் நிலை. சனம் KFC இதாலியன் பீசா, ஏசி பஸ் டிரையின், பூட் சிட்டி என்று ரொம்ப பிஸி. ஒரு சமயல் காரரை 1500 நாள் கூலிக்கு கீழ பிடிக்கஏலாது.

கொஞ்சம் வாசிக சாலை பக்கம் மட்டும் பெருசுகள் கூடிக் கூடி அரசியல் பேசுதுகள். அங்கேயும் கஜேந்த்ஹிர குமார் கூட்டத்துக்கு நோ ரெஸ்பான்ஸ்.

சனம் வலு கெட்டிக்காரர் சில விடயங்களை தலையை சுத்தி எறிஞ்சுபோட்டு தம்பாட்டை பார்க்குதுகள்.

ஆக இனி எனக்கொரு கவலையும் இல்லை. எனது மக்கள் எந்த புலம்பெயரின் குரூர ரத்த வெறிக்கும் இனிமேல் சோளப்பொறியாக மாட்டார்கள்.

இந்த கொடி பிடிகிற பிள்ளை நாளைக்கு "ஸ்ரீலங்கா" விற்கு போய் பிறகு காணாமல் போனாலும் என்ற நல்ல எண்ணத்திலும் அந்த பள்ளி முதல்வர் தடுத்திருக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து வாக்களியுங்கள்!!!http://www.torontosun.com/2014/05/02/student-banned-from-representing-tamils-at-multicultural-assembly

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாக்களித்துவிட்டேன் புலவர் அண்ணா...மற்ற உறவுகளும் அந்த இணைப்புக்கு சென்று YEs என்றதை அமத்தி உங்களின் வாக்கை போடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாக்களித்துவிட்டேன் புலவர்

அரைக்கரைவாசி  காட்டுகிறது

(49/51)

  • கருத்துக்கள உறவுகள்

Should he have been allowed to sport his flag?
  • 56%
  • Yes
  • 1835 votes
  •  

  • 43%
  • No
  • 1401 votes
  •  

  • கருத்துக்கள உறவுகள்

நான் காலையில் வாக்களித்தபோது

இருந்தநிலை மாறி

தற்பொழுது எம்மவர் பலரும் வாக்களிக்கின்றனர்

தொடரட்டும்

துளசியை நினைவுபடுத்துகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்த நிலவரம்.... sDW8M.jpg

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சில பள்ளி நிர்வாகங்கள் தங்களின் சுயகோட்பாடுகளின் படி செயற்படுவதுண்டு. அமெரிக்காவில்.. அறிவியலால் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாத.. "படைப்பியல் கொள்கையை" போதிக்கும் பள்ளிகளும் உள்ளன.

இது ஒரு சின்னப் பிரச்சனை. பள்ளி நிர்வாகத்திற்கு கொடியின் தார்ப்பரியத்தை விளக்குவதோடு.. உள்ளூர் அரசியல்வாதிகளைத் தொடர்பு கொண்டு ஒரு விளக்கம் அளிப்பதும் நல்லது.

தமிழீழத் தேசியக் கொடி என்பது.. எமது இனத்தின் அடையாளம்.

அதை இந்துத்துவ நந்திக் கொடியாலோ... ஆயுத அரசியல்.. ஒட்டுக்குழு ஈடிபிடியின்.. வீணையாலோ.. அல்லது எதிரிக்கு முண்டு கொடுக்கும் கூட்டணியின் உதய சூரியனாலோ... முஸ்லீம்களின் மதவாத அடையாளமான.. பிறையாலோ... சிங்கள பெளத்த அடையாளமான வாளேந்திய சிங்கத்தாலோ.. பூரணையாலோ.. ஈடுசெய்ய முடியாது.

நாம் தனித்துவமான விழுமியங்களை பாரம்பரிய வாழிடத்தைக் கொண்ட.. நாடு கொண்டு வாழ்ந்த இனம். எமக்கென்று ஒரு மொழி வரலாறு நிலம் உண்டு. எமக்கென்று.. இந்த நூற்றாண்டில்.. நிழல் அரசும்...படையும்..நிலமும் எல்லைகளும் இருந்துள்ளன. இன்று அது ஆக்கிரமிப்புக்குள் உள்ளது.

ரஷ்சியா ஒரு இரவுக்குள் ஒரு தேசத்தை உருவாக்க முடியும் என்றால்.. ஏன் எங்களால் முடியாது. ரஷ்சியன் உலகில் எவரும் அங்கீகரிக்கனுன்னு எதிர்பார்க்காமல்.. தன் சொந்த அங்கீகாரம்.. மட்டுமே கொண்டு எல்லாம் செய்கிறான். கொடியையும் வடிவமைச்சு கூட வைச்சிருக்கிறான்.

ஆனால்.. சொந்த மண்ணிற்கு சொந்த அங்கீகாரம் கூடக் கொடுக்கும் மன வலிமையற்ற பேடிகளாகத்தான் சில தமிழர்கள் உள்ளார்கள். அவர்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிஞ்சாலும் உண்மையில்... ஒரு வகை நாடோடிகள்.

யாழுக்கு வரும் சிலதுகளும் அந்த வகையே. அதுங்களே...... கே எவ் சி.. மக்டொலாட்.. விடுதலையின் சுதந்திரத்தின் அடையாளம் என்று காட்ட நினைக்கின்றன போலும். அவை.. பார்த்தீனியம் செடிகள் போன்ற ஆபத்தான ஊடுருவிகள்.. என்பதை சுட்டிக்காட்ட அவர்களுக்கு திராணியும் இல்லை.. அறிவும் இல்லை. நாடோடிகளுக்கு நாடு பற்றி ஏன் அக்கறை வரப் போகுது. அதுங்களுக்கு 3 வேளை உணவும்.. நித்திரைக்கு ஒரு இடமும் கிடைத்தால் போதும். வயிறு நிறைய உணவு கிடைக்கும் இடம் அதுங்களுக்கு சொர்க்கம். :lol:

யுத்த காலத்திலும்.. ஏன் விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்திலும்.. ஏன் மின்சாரத்தை சிறீலங்கா ஒரு போராயுதமாக்கி தடை செய்த போதும்.. கூல் பார்களும் கோட்டல்களும் இருந்தன. யாழ்ப்பாண மக்கள் 8 இலட்சம் பேரும் ஆயுதம் எடுத்துப் போராட்டல்ல. அப்பவும்.. சப்பாட்டிட்டார்கள்.. கலியாணம் கட்டினார்கள்.. குடும்பம் நடத்தினார்கள்.. வெளிநாட்டுக்கு பிள்ளை குட்டிகளை பத்திரமாக அனுப்பியும் தான் வைத்தார்கள்.

ஆனால் ஒரு வேறுபாடு.. அன்று கொலை இல்லை. கொள்ளை இல்லை. பாலியல் வன்புணர்வில்லை. ரெளடித்தனம் இல்லை. கஞ்சா இல்லை. கள்ளச் சாராயம் இல்லை. வெட்டுக் குத்து இல்லை. அரசியல் பழிவாங்கல் இல்லை. ஆனால் இன்று...???!

1990களில் 2000 களில்.. சமாதான காலங்களில் ஊருக்குப் போய் வந்த மக்கள் அறிவார்கள். அன்றும் இன்றும் உள்ள சுதந்திரக்காற்றின் பெறுமதியை.

ஒரு ஆக்கிரமிப்பாளன்.. வேற்றினத்தான் எம்மை ஆள்வதற்கும்.. எதிரிக்கு சோரம் போகாத.. எம்மவர்களே எம்மை ஆள்வதற்கும் இடையில் பலத்த வேறுபாடுள்ளது.

அதை சில ஜென்மங்களால் சாகும் வரை புரிந்து கொள்ளவே முடியாது. அப்படியான ஜென்மங்கள்.. யாழிற்கும் வந்து போவது.. சாதாரணம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.