Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28 நினைவு தினம்

Featured Replies

அன்று தடைக்கற்களை அகற்றுவது என்ற நடவடிக்கைள் அனைத்தும் பின்னர் பயங்கரவாதம் என முடிவுசெய்யப்பட்டு போராட்டம் பயங்கரவாதமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதம் என முடிவம் செய்யப்பட்டது கேள்வியின்றி என்னும் நிலுவையில் இருக்கின்றது. அவை நியாயப்படுத்தலுக்கு அப்பாற்பட்டது.

அன்று சரியென ஏற்றுக்கொள்ளப்பட்டவைகள் இன்று பிழையாகின்றது.

தடைக்கல்லோ தடையில்லாத கல்லோ அறிவுக்கு புறம்பாக உணர்ச்சியால் கையாளப்பட்டுள்ளது என்பது பேரிழப்பு நிகழ்ந்த பின்னரே புரியவருகின்றது.

பல நூறு சிங்களப்படைகள் சாகக் காரணமாக இருந்த கருணாவை அவர்போன்ற பலரை சிங்களவன் எவ்வாறு பயன்படுத்தினான்? தடைக்கல்லை மட்டுமல்ல எந்தக் கல்லையும் எடுத்து வீடுகட்டத்தெரிந்தவன் சிங்களவன். ஏனெனில் அவன் அறிவைப் பயன்படுத்துபவன். தமிழர்களைப்போல் உணர்ச்சிவசத்திற்கு முன்னுரிமை கொடுப்பவன் அல்ல. ஒரு இனத்தின் நாகரீகம் என்பது அவ்வினம் தனது அறிவை எப்படி பயன்படுத்துகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது. தமிழர்கள் பன்நெடுங்காலமாக நாகரீகமடையாத காட்டுமிராண்டிக்குணத்தை தமது பிரதான இயக்க சக்தியாக வைத்திருப்பதால் ரத்தத்துக்கு ரத்தம் பழிக்குப் பழி அற்ப விசயத்துக்கும் துரோகி என்னும் நிலையில் இன்னும் உள்ளனர். தமிழர்கள் எவ்வளவு படித்தாலும் பல துறைசார்ந்து நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பல நாடுகளில் பல கலாச்சராங்களுடன் வாழ்ந்தாலும் காட்டுமிராண்டிக்குணம் என்ற அடிப்படையில் மாற்றம் வராது என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. பேரளிவுகளில் இருந்தும் சரி உலக அனுபவங்களில் இருந்தும் சரி அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் சமூகமாக மாற்றம் பெறமாட்டாதது.

  • Replies 51
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் காட்டுமிராண்டி தனம் என்பதற்கான வரவிலக்கணம் பிழையாக உள்ளது. பல நாடுகளில் வல்லரசுகள் உட்பட செய்யும் செயல்கள் காட்டுமிராண்டி தனமானது என்பது சரியானது. இன்றும் புல் முளைக்காத ஹிரோசிமா மீது அணு குண்டு வீசியவர்கள் வல்லரசு என்பதால் யாரும் அவர்களை விமர்சிக்கவில்லை. காட்டுமிராண்டிகள் என சொல்லவில்லை. மாறாக  நட்புறவு கொண்டாடுகிறார்கள் யப்பானியர்கள்.அதே வல்லரசு பயங்கரவாதிகள் பட்டியலையும் இடுகிறது. மக்களை கொல்கிறார்கள் என சொல்ல பார்த்து விட்டு இன்று ஐ.நா தீர்மானம் எடுக்கிறார்கள். எத்தகைய உலகில் வாழ்கிறோம் என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பன்நெடுங்காலமாக நாகரீகமடையாத காட்டுமிராண்டிக்குணத்தை தமது பிரதான இயக்க சக்தியாக வைத்திருப்பதால் ரத்தத்துக்கு ரத்தம் பழிக்குப் பழி அற்ப விசயத்துக்கும் துரோகி என்னும் நிலையில் இன்னும் உள்ளனர். தமிழர்கள் எவ்வளவு படித்தாலும் பல துறைசார்ந்து நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் பல நாடுகளில் பல கலாச்சராங்களுடன் வாழ்ந்தாலும் காட்டுமிராண்டிக்குணம் என்ற அடிப்படையில் மாற்றம் வராது என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. பேரளிவுகளில் இருந்தும் சரி உலக அனுபவங்களில் இருந்தும் சரி அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் சமூகமாக மாற்றம் பெறமாட்டாதது.

மிகக் கடுமையான கருத்துக்கள் சண்டமருதன். இதற்கு என்னதான் தீர்வு?

நேற்றய மோசமான பகையாளிகளான ஜப்பானும் அமரிக்காவும் இன்றய வர்த்தக நண்பர்கள். நேற்று கப்பல்களில் அடிமைகளாக அமரிக்காவுக்கு ஏற்றிவரப்பட்ட ஆபிரிக்கர்களின் ஒருவனை அமரிக்காவின் ஜனதிபதியாக அமரிக்கர்கள் ஏற்றுகொண்டுள்ளனர். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இஸ்லாத்துக்கு எதிராக போர்நடத்தும் அமரிக்கா சவுதி குவைத்தின் நண்பன். சிங்கள அரசுக்கு எதிராக போராடிய கருணா பிள்ளையான் கேபி என பலர் இன்று சிங்களவர்களின் நண்பர்கள். இங்கே எல்லாம் சந்தர்ப்பம் சூழல் தேவைக்கேற்ப அறிவு வேலைசெய்கின்றது. முடிகள் அறிவு சார்ந்து எடுக்கப்படுகின்றது தவிர உணர்வு சார்ந்து இல்லை.

ஒரு மாவீரர் தினத்தை நாலாக பிரித்துக் கொண்டாடினால் அது ஒற்றுமைக்குப் பங்கம் என்பது அறிவுக்கு தெரிந்தும் அதை நிராகரித்து உணர்ச்சிக்கே முன்னுரிமை கொடுப்பதாகட்டும்

சாதி என்பது சமூக நல்லுறவுக்குக்கும் ஐக்கியப்பபாட்டுக்கும் சத்துரு என்பது அறிவுக்கு நன்கு தெரிந்தும் அதை தக்கவைப்பதாகட்டும் புலம்பெயர்ந்த நிலையில் அதை காவித்தரிவதாகட்டும்.

இதேபோல் பிரதேசவாதமாகட்டும் மதவாதமாகட்டும்

முப்பதக்கும் மேற்பட்ட இயக்கமாகட்டும் அவைகளுக்குள் துப்பாக்கிகளை நீட்டியதாகட்டும் அவைகளால் விரேத குரோதங்கள் வளர்ந்து இனம் சிதைந்து விடும் என்பது அறிவுக்கு தெளிவாகப் புரிந்தும் உணர்ச்சிக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

இவ்வாறு ஒவ்வொரு சிறு விசயத்தையும் கவனிக்கமுடியும்.

தேவை சார்ந்தும் நெருக்கடிகள் இடர்கள் பேரளிவுகள் சார்ந்தும் தூரநோக்கு சார்ந்தும் அறிவுக்கு தெரிந்த விசயங்களை கூட உணர்ச்சியே தீர்மானித்துள்ளது.

திருவள்ளுவர் ஆயிரம் வருசத்தக்கு முதல் அறத்தையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தி திருக்குறள் எழுதினார் என்றால் அதில் பெருமைப்படுவதை விட அறங்கெட்ட ஒழுங்கங்கெட்ட ஒரு சமூகத்திற்கு திருக்குள் அவசியப்பட்டுள்ளது என்ற அறிவார்ந்த சிந்தனையே அவசியம்.

ஐந்து பிரதேசம் பத்துச் சாதி முப்பது இயக்கம் அதனுள் நூறு பிளவுகள் என விரிவடைந்து இன்று எவனையும் எவனும் ஏற்க பின்பற்ற முடியாது என்ற நிலைக்கே இனம் சென்றுள்ளது. இந்தப்போக்கில் எந்த அறிவார்ந்த அணுகுமுறையும் கையாளப்படவில்லை. அறிவு சிந்தனை துறைசார் நிபுணத்துவம் எதுவும் சமூக ஐக்கியப்படு இனக்கட்டுமானம் குறித்து சல்லிக் காசுக்குப் பிரயோசனமின்றிபோயுள்ளது. எல்லாம் எமது இனத்துக்குள் நாமே இரைதேடுவதற்கப் பயன்படுகின்றது. இரை காலியாகிவிடும் சூழல் நெருங்கியுள்ளது. அதாவது இனம் சேடமிழுக்கின்றது.

தன்னித்துக்குள் இரைதேடும் நிலையானது அறிவுக்கு அப்பாற்பட்ட காண்டுமிராண்டிக்குணத்தாலே தான் சாத்தியப்படும். இக்கருத்துக்கள் என்னையும் உள்ளடக்கியது. இதில் ஆத்திரமோ சீண்டுதலோ இல்லை மாறாக ஒரு பரிதாபத்துக்குரிய எமது நிலை குறித்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

1...கிழக்கு தீமோரில் தன் இனத்தில் இரை தேடியோர் உண்டு

2...மாவோயிஸ்ட்கள் தன் இனத்தில் இரை தேடினார்கள்

3...லெனின் தன் இனத்தில் இரைதேடினார்

4...சதாம் தன் இனத்தில் இரை தேடினார்

5...பலஸ்தீன விடுதலை இயக்கங்கள் தம் இனத்திலே இரை தேடின

6...சிரியா தன் இனத்தில் இரை தேடிகொண்டிருக்கின்றன....

7...சிங்களவர்கள்....1971 ஆம் ஆண்டும்...1987 ஆம் ஆண்டும் தன் இனதில் இரை தேடினார்கள் தமிழன் மட்டும் இரை தேடினான் என்பது ஏற்புடையதல்ல.....

Edited by putthan

நாங்கள் தொடர்ந்து கலகக்காறர்களாக இருக்க

விமர்சிப்பவர்களாக  மட்டும்  நிற்க

எம்மை  நாமே  புத்தியூவிகளாக காட்டிக்கொள்ள 

...........................

............................. நீங்கள் எழுதியுள்ளவை வழிவிடுமா??? :(  :(

கஸ்டம்தான்.... :D

நையீரியாவில் இரு நூறு பெண்பிள்ளைகளை கடத்திபோட்டார்களாம் அப்ப நாங்களும் கடத்தலாம் .

முழு இரை தேடினவர்களும் சர்வாதிகாரிகள் .லெனினினையும் மாவோவையும் சதாமையும் அசாத்தையும் ஒரு தராசில் போட்டு நிறுக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஹம்பாந்தோட்டையில் மகிந்த நடத்தும் இளைஞர் மாநாடு என்ற நாடகத்தில் அப்பாவித்தனமாக பங்கேற்றுள்ள பன்னாட்டு இளைஞர்கள், கடத்தப்பட்டுள்ள நைஜீரிய யுவதிகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். அவர்களை அழைத்து விருந்து போடும் நபர்களாலேயே கடத்தப்பட்டு காணாமல் போன எத்தனையோ தமிழ் யுவதிகள் இந்த நாட்டிலேயே இருப்பது இவர்களுக்கு தெரியவில்லை.

Unsuspecting youths at the Hambantota world Youth Conference voicing their anger over the kidnapped Nigerian young girls. Alas, they probably do not know the fates of the abducted girls and boys by the hosts in the host country!  mano ganashan

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் முடிவடைந்து விட்டதாலும், இனி ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு சாத்தியமில்லை என்பதாலும் தமிழர்கள் எல்லாரும் தமது முன்னைய தவறுகளை உணர்ந்து, முரண்பாடுகளைக் களைந்து, ஓரணியில் திரண்டு உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதெல்லாம் நடக்கமுடியாத காரியம்.

ரெலோ இயக்கத்தின் பெயரில் இயங்குபவர்கள் அந்தப் பெயரை வைத்திருப்பதற்காகத்தன் அஞ்சலி செய்கின்றார்கள். இல்லாதுவிடின் அவர்கள் அடையாளம் கேலிக்குரியதாகிவிடும். ஆனால் ரெலோ, ஈபிஆர்எல்எவ் போன்ற இயக்கங்கள் இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் நடந்துகொண்ட முறைகள் அவர்களை மன்னிக்கக்கூடிய மன உணர்வுகளைத் தராது. எனவே அஞ்சலிகளை ஒப்புக்காகச் செய்யாமல் உணர்வுடன் செய்தால்தான் அஞ்சலிக்கும் ஒரு மரியாதை இருக்கும்.

உங்கள் கருத்தோடு  ஒத்துப்போகின்றேன்

நான் இதற்கு அஞ்சலி  செய்தது

அவர்களும் போராடப்புறப்பட்டவர்கள் என்பதனாலேயே..

கசப்பான  விடயங்களை  தோண்டிக்கொண்டிருப்பதால் தமிழருக்கு  தான் தீங்கு

அடுத்த கட்டம் ஏதாவது ஒன்று  உண்டெனில்

தமிழருக்கிடையான   இது  போன்ற விடயங்களை  மறத்தல் மன்னித்தல் முதலில் வேண்டும்

அநேகமான டெலோவினர்  தமிழ் மக்களின் தாயகம் சார்ந்து தெளிவாகவும்

மாவீரர்களுக்கு மதிப்பளிப்பதும் தெரிகிறது

(எனது பார்வையில்)

அந்த ஒரு பாதையை  செப்பனிட்டால்.....??

இதுவே எனது  தெரிவு மட்டுமே..

  • கருத்துக்கள உறவுகள்

மறத்தல் மன்னித்தல்தான் முன்னோக்கிப் போக வைக்கும் என்றால் சிங்களவர்கள் செய்த, செய்யும் அநியாயங்களையும் மறந்து மன்னித்து அவர்களுடன் கூடி வாழலாமே. அது சரிவராவிட்டால் குறைந்த பட்சம் முஸ்லிம்களுடன் இணைந்து உரிமைகளை அடைய முனையலாமே! எல்லாமே சொல்லளவில்தான்.

மனதில் வெறும் வன்மமும் பழிவாங்கும் உணர்வும் மற்றவர்களைச் சந்தேகிப்பதும் முன்னரைவிட அதிகமாகத்தான் பலரிடமும் உள்ளது.

1...கிழக்கு தீமோரில் தன் இனத்தில் இரை தேடியோர் உண்டு

2...மாவோயிஸ்ட்கள் தன் இனத்தில் இரை தேடினார்கள்

3...லெனின் தன் இனத்தில் இரைதேடினார்

4...சதாம் தன் இனத்தில் இரை தேடினார்

5...பலஸ்தீன விடுதலை இயக்கங்கள் தம் இனத்திலே இரை தேடின

6...சிரியா தன் இனத்தில் இரை தேடிகொண்டிருக்கின்றன....

7...சிங்களவர்கள்....1971 ஆம் ஆண்டும்...1987 ஆம் ஆண்டும் தன் இனதில் இரை தேடினார்கள் தமிழன் மட்டும் இரை தேடினான் என்பது ஏற்புடையதல்ல.....

எமக்குள் என்ன பிரச்சனை என்பதை ஏற்றுக்கொள்ளும் போதே அதற்கான தீர்வுகளை நோக்கி நகரமுடியும். நீங்களோ அங்கயும் அப்படி இருக்கு இங்கையும் அப்படி இருக்கு என்று நியாயப்படுத்தவும் பூசிமொழுகவுமே செய்கின்றீர்கள்.

சிங்களவர்கள் தம்மை தாம் ஒரு மேலான இனம் இலங்கைத் தீவு முழுவதும் தமக்கே செந்தம் தாமே ஆழுதலுக்கு உரியவர்கள் தமக்கு கீழேதான் ஏனையவர்கள் இருக்கவேணும் என்று நகர்கின்றார்கள். இதற்கு பலியாவது ஏனைய இனங்கள்.

தமிழர்கள் தமக்குள் சில அலகுகளை வைத்திருக்கின்றார்கள் அதற்குள் பிரதானமானது சாதி மதம் பிரதேசவாதம் போன்றன. அவைகளை முன்வைத்து தாமே மேலானவர்கள் தாமே ஆழுதலுக்கும் அதிகாத்துக்கும் உரியவர்கள் தேசீயத்துக்கும் உரித்துடையவர்கள் என்கின்றார்கள். இதற்கு முதல் பலியாவது தமது சொந்த இனமே.

இந்த இரண்டு போக்கிற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது.

சாதியம் பிரதேசவாதம் மதவாதம் என்பதற்கான முன்னுரிமை என்பது பற்றி அதிகம் கடுமையாக எழுதும் போது பலருக்குப் பிடிப்பதில்லை ஆனால் அது சிங்களப்பேரினவாதத்திற்கு நிகரானது என்ற அடிப்படைக் காரணத்தினாலேயே அவ்வாறு அணுகப்படுகின்றது. தமக்குள் அதிகாரத்தையும் மேலாண்மையையும் தேடும் போது அது ஒரு ஒடுக்குமுறையே. அதிலிருந்து மக்கள் நழுவுதல் என்பது அதற்கான எதிர்வினை. இதன்பால் இனம் தேசீயம் என்ற வட்டத்தில் இருந்து மக்கள் தம்மை விடுவித்துக்கொள்கின்றார்கள்.

அனைத்து இயக்கங்களினது தலமையும் யாழ்பாணம் என்ற பிரதேசத்திலேயே உருவாகியது.

மதவாதமாக இஸ்லாம் பிரிந்தது

பிரதேசவாதமாக இறுதியில் பிழவுகள் ஏற்பட்டது.

சாதி மத பிரதேசவாதங்கள் தனியே திருமணம் செய்வதற்கு மட்டும் பார்க்கப்படுவதில்லை. அவைகள் பொதுவான தனிமனித ஆழுமையை பாரம்பரியமாகக் கட்டியமைக்கின்றது. சிந்தனைக்குரிய எல்லையை வரையறுக்கின்றது. ஒரு மனிதனின் தனிமனித குணத்தை தீர்மானிக்கின்றது. இவை அறிவால் கூட கடந்து செல்ல முடியாத வலுவுடையது. இந்தக் குணம் அறிவை விட வலுவுடையது என்ற காரணத்தினால் தான் எல்லா இயக்கங்களுக்கும் தாம் பிழவு படுவதும் தமக்குள் குத்துப்படுவதும் இனத்துக்குள் துப்பாக்கிகளை நீட்டுவதும் சிங்களவனின் கனவுகளை நனவாக்கும் இனம் சிதையும் போராட்டம் சீரழியும் என்ற உண்மை அறிவுக்குத் தெரிந்தபோதும் அவைகளை கடந்து பாரம் பரிய இயல்பான குணமும் உணர்ச்சியுமே முன்நின்றது. இன்னும் அதே நிலையே தொடர்கின்றது.

எமது இனம் என்னுமொரு இனத்தின் சரிபிழைகளோடு ஒப்பிட்டு நியாயப்படுத்தவும் முடியாது சரிசெய்யவும் முடியாது. எந்த ஒரு நாட்டின் அனுபத்துடன் அல்லது இனத்துவக் கட்டுமனம் குறித்த அணுகுமுறைகள் இசங்கள் கொள்கைகள் கோட்பாடுகளால் சரிசெய்ய முடியாதது. ஏனெனில் எமது இனம் அறிவை முன்னகர்த்துவதில்லை. எவ்வாறு தேசீயம் இரண்டாம் நிலையிலும் சாதி மத பிரதேசவாதம் அது சார்ந்து உருவான பாரம்பரிய தனிமனித ஆழுமைகள் குணங்கள் முதலாம் நிலையில் இருக்கின்றதோ அவ்வாறே அறிவு இரண்டாம் நிலையிலும் உணர்ச்சி அதுசார்ந்த நடைமுறைகள் முதலாம் நிலையிலும் இருக்கின்றது.

வேண்டுமானால் மனச்சாந்திக்காக திருப்திக்காக கடவுள் இருக்கோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு கோயிலுக்குப் போய்வருவது போல் எமது இனம் அப்படியல்ல இப்படித்தான் என்று எமக்குள் நாமே திருப்திப்பட்டுக்கொள்ளலாம். அதைத்தான் அனேகர் விரும்புகின்றார்கள். அவ்வாறான விருப்பம் எனக்கில்லை.

மனிதர்கள் தம்முள் வேறு வேறு விதமாக சிந்திக்க கூடாது என்று சட்டம் போடும் காட்டு மிராண்டி அரேபிய மத தத்துவம் தமிழருக்குள் எடுபடப் போவதில்லை.ஒன்றாக சிந்தித்து, துரோகிகள் போடும் பாதையில் எல்லோரும் ஒன்றாக போய் விழ வேண்டும் என்றதை ஏற்காத திராவிட இனம்தான் தன்னுள் பல் வேறு திறைசார் அறிவுகளை கண்டுபிடித்து தொழில் துறை முறைகளை 7 ஆயிரம் வருடத்துக்குக்கு முன்னர் தமிழருக்கு அறி முகம் செய்தது. எந்த நேரத்திலும் அரேபிய சமையம் மாதிரி தமிழ் மக்களின் பன்முகத்தனையை தாக்குபவர்கள் தமிழ் மக்களால் துரத்தி அடிக்கப்படுவார்கள். இவர்கள் மத வேறியர்கள். ஒரே கடவுளுக்காக பல மதங்களை படைத்து ஒருவரை ஒருவர் குண்டு வைத்து கொல்லும் கொலைகாறர்கள்.  ஒரு கடவுளை ஏற்றுக்கொள் என்றி நிபந்திப்பவர்கள். இந்துக்கள் 33 கோடி கடவுள்களை கற்பனை செய்த்து வணங்கும் இயல்பாயிருந்தும் ஒரு மத்ததின் கீழ் இணையும் தன்மையும் பெற்றவர்கள்.  

இனி ஆயுத போராட்டம் ஒன்று வர போவத்தில்லை. ஆயுத போராட்டம் பன்முக தனமைக்களை தாங்கிகொள்ளும் இயல்பானதல்ல. இன்று ஜனநாயக போராட்டம் நடை பெறுகிறது. இதில் பலதடவைகள் பல இயகங்கள் தமது பாதைகளை தக்க அவைக்க விருப்பம் தெரிவித்துவிட்டன. தடுக்கப்பட்ட 16 இயக்கங்களும் பழைய நடை முறைகளுக்கு மேலாக புதிய தொடர்புகளை ஆரம்பித்து பல ஒற்றுமைகளை தொடக்கி முன்னெடுக்கிறார்கள். ஆனால் அணமையில்  அவர்கள் தங்கள் அடையாளங்களை கை விடும் உத்தேசத்தில் இல்லை.

கருணா கெட்ட துரோகி. கருணாவை யாரும் பயன் படுத்தட்டும். அந்த அரேபிய முறைகளை நாம் பின்பற்ற போவதில்லை. நமக்கு கலாச்சாரம், பணு இருக்கு. அதன் வழிதான் நாம் போவொம். நமது கலாசாரத்தை பாதுகாக்க தான் நமக்கு தனி நாடுவேண்டும். அரேபிய முறைகள் நமதானவை அல்ல. _____________

. கருணாவுக்கு கொடுக்கும் பணத்தை நாம் அகதிகளுக்குத்தான் கொடுப்போம் கருணாவை இனி நீ இயக்கத்தை கொள்ளை அடித்து வாழு என்று ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. கருணாவுக்கு கொடுக்க எம்மிடம் பெண்கள் இல்லை. நம் சகோதரிகள் விதைவைகளாக்கப்ப்ட்டு விட்டார்கள். கருணாவுக்கு அவர்களிள் ஆவர்ம் வராது. போர்குற்ற விசாரணை வரும் போது நீ முதலில் மாட்டுவாய்தானே என்று அரசர் கருணாவிடம் கேட்டார்.  ந்மது பாதை மேற்கு நாடு ethics க்கும் கீழைதேச அகிம்சையும் கலந்தது. இதற்குள் அரேபிய கோமாளித்தனமான கருணாவை கையாளும் முறைகள் சேர்க்கப்பட மாட்டா. 

-------------------------

நியானி: சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன

Edited by நியானி

ரெலோவினால் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு வங்சகமான முறையில் கொல்லப்பட்ட கப்டன் லிங்கம் அண்ணாவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமக்குள் சில அலகுகளை வைத்திருக்கின்றார்கள் அதற்குள் பிரதானமானது சாதி மதம் பிரதேசவாதம் போன்றன. அவைகளை முன்வைத்து தாமே மேலானவர்கள் தாமே ஆழுதலுக்கும் அதிகாத்துக்கும் உரியவர்கள் தேசீயத்துக்கும் உரித்துடையவர்கள் என்கின்றார்கள். இதற்கு முதல் பலியாவது தமது சொந்த இனமே.

அதாவது தேசிய உணர்வையும் சாதி மதம் ஆட்டிப்படைப்பதாக சண்டமாருதன் நம்புகிறார். அதில் தவறேதும் இல்லை. நம்பிக்கைதானே வாழ்க்கை?!! :D

எமக்குள் என்ன பிரச்சனை என்பதை ஏற்றுக்கொள்ளும் போதே அதற்கான தீர்வுகளை நோக்கி நகரமுடியும். நீங்களோ அங்கயும் அப்படி இருக்கு இங்கையும் அப்படி இருக்கு என்று நியாயப்படுத்தவும் பூசிமொழுகவுமே செய்கின்றீர்கள்.

நீங்கள் சொல்ல வருவது எமது பிரச்சனை அல்ல. அது உங்கள் பிரச்சனை.

சிங்களவர்கள் தம்மை தாம் ஒரு மேலான இனம் இலங்கைத் தீவு முழுவதும் தமக்கே செந்தம் தாமே ஆழுதலுக்கு உரியவர்கள் தமக்கு கீழேதான் ஏனையவர்கள் இருக்கவேணும் என்று நகர்கின்றார்கள். இதற்கு பலியாவது ஏனைய இனங்கள். இதற்கு காரணம் 1915 ஆண்டு தங்கள் மதம் உயர்ந்தது என்று ஆரம்பித்த  இனக்கலவரம். இதை ஆரம்பித்து சிங்கள் பாதாசாரிகள் மீது பள்ளிவாசலில் நின்று கல்லெறிந்தவர்கள் இன்று அதற்கான மன்னிப்பை சிங்களவரிடம் கேட்டால் சிங்களவர்களை அவர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பாக நடக்க வைக்க முடியும். கல்லெறிந்து இனக்கலவரங்களை ஆரம்பித்து வைத்தவர்கள் சிங்களவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு புதிய இன உறவு ஆண்டுகளை ஆரம்பிப்பார்களா? 

தமிழர்கள் தமக்குள் சில அலகுகளை வைத்திருக்கின்றார்கள் அதற்குள் பிரதானமானது சாதி மதம் பிரதேசவாதம் போன்றன. அவைகளை முன்வைத்து தாமே மேலானவர்கள் தாமே ஆழுதலுக்கும் அதிகாத்துக்கும் உரியவர்கள் தேசீயத்துக்கும் உரித்துடையவர்கள் என்கின்றார்கள். இதற்கு முதல் பலியாவது தமது சொந்த இனமே.

தமிழரிடம் எந்த அலகுகளும் இல்லை.அவர்கள் அலகு என்ற சொல்லை பாவிப்பதே இல்லை. அதைப் பாவிப்பவர்கள் தங்களை மோட்டாக்கு போட்டு மூடி வைத்து மறைந்திருந்து எழுதுபவர்கள் மட்டுமே. தமிழர்களிடம் மத பேதம் இல்லை. மதபேதம் காட்டாத தமிழரிடம் மதங்களால் திணிக்கப்படும் சாதி பேதம் இல்லை. இவை விடாபிடியாக அரேபிய முதலாளிகள் அரசிடம் பணம் கறப்பதற்காவும் அரசிடம் ஒட்டிக்கொள்ளவும் சொல்லும் சாக்கு போக்கு.  இதே தமிழர்தான் இந்தியாவில், முதல் தரமான பொருளாதார வளர்ச்சிகளை காணும் தமிழ் நாட்டிலிருக்கிறார்கள். அந்த தமிழரையும் அழிக்க அங்கேயும் இவர்கள் அரசுக்காக மத பேதம் ஏற்றுமதி செய்கிறார்கள்.  இதில் காட்டப்படும் எதுவும் தமிழரிடம் இல்லை. இதனால் தமிழர் பலியாகவும் இல்லை. "Ceylon Tamils" என்றால் சிங்கபூர், மலேசியா சம்பந்த மாக விக்கி பீடியா என்னத்தை சொல்கிறது என்றதை வாசித்து விட்டு மத பேத அரபிய கலாச்சாரத்தை தமிழருக்குக்குள் திணிக்க முன்வர வேண்டும். 

இந்த இரண்டு போக்கிற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது.

சாதியம் பிரதேசவாதம் மதவாதம் என்பதற்கான முன்னுரிமை என்பது பற்றி அதிகம் கடுமையாக எழுதும் போது பலருக்குப் பிடிப்பதில்லை ஆனால் அது சிங்களப்பேரினவாதத்திற்கு நிகரானது என்ற அடிப்படைக் காரணத்தினாலேயே அவ்வாறு அணுகப்படுகின்றது. தமக்குள் அதிகாரத்தையும் மேலாண்மையையும் தேடும் போது அது ஒரு ஒடுக்குமுறையே. அதிலிருந்து மக்கள் நழுவுதல் என்பது அதற்கான எதிர்வினை. இதன்பால் இனம் தேசீயம் என்ற வட்டத்தில் இருந்து மக்கள் தம்மை விடுவித்துக்கொள்கின்றார்கள்.

சாதியம் பற்றிய பற்றியது மட்டும் அல்ல மதம் பற்றியது, இனம் பற்றியது, கூட்டமைப்பு பற்றியது, இயக்கம் பற்றியது எல்லவற்றையும் பற்றி திரிக்கும் போது அதை மறுக்க முயல்வது பொத்திகொண்டுவதால்தான். பொய்யர்களைகாண பிடிக்காத்தால்தான். பொய்யர்கள் தங்கள் அவிப்பு எடுபடுகுதில்லையே என்ற கவலையால் எழுதும் தவிப்பு இது.

தேசியம் என்ற வட்டத்துக்குள் இருந்து தமிழர் தங்களை விடுவிக்கிறார்கள் என்றது அப்பட்டமான பொய். இதை சொல்ல வருபவர்கள் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறியாதவர்கள். முதலில் கூட்டமைப்பின் நீதியும் நேர்மையும் அதிலிருக்கும் முஸ்லீம் கட்சிகளால் மிகவும் பாராட்டப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பேட்டியை முஸ்லீம் இணையத்தளமான விடி வெள்ளி பிரசுரித்தது யாழிலும் பதியப்பட்டிருந்தது. இந்த கொள்கைகளிலிருந்து  கூட்டமைப்பு விலகப் போவதில்லை.  அரேபிய அடிவருடிகள் மாதிரி தமிழரிடம் எந்த மதவாத கட்சியும் இல்லை.  தமிழரின் கட்சிகள் பண்முகத்தன்மை கொண்டவை.  இலங்கையின் மதவாத கட்சிகள் மதத்தின் பேரால் அரசிடம் சேர்ந்து கொள்ளை மட்டும் அடிக்கும் ஒருமுகத்தன்மை கொண்டவை. அரசால் போன மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் தொடங்க முயற்சிக்க பட்ட சாதிக் கட்சிகள் எதும்  மேலே வரவில்லை. கிருபன் இன்னொரு திரியில் பதிந்த அருமையான் சாதிகள் பற்றி ஆராச்சி, மக்கள் உரிமை பிரச்சனை இருக்கும் வரை தம்முள் இருக்கும் பிழவுகளை இயற்கையாக கைவிடுகிறார்கள் என்றுதான் சொல்கிறது.  

அனைத்து இயக்கங்களினது தலமையும் யாழ்பாணம் என்ற பிரதேசத்திலேயே உருவாகியது.

மதவாதமாக இஸ்லாம் பிரிந்தது

பிரதேசவாதமாக இறுதியில் பிழவுகள் ஏற்பட்டது.

அனைத்து இயங்களின் ஆரம்ப உறுப்பினர்களும் யாழ்பாணத்தவர்களாக இருந்தார்கள். போராட்டமே அங்கேதான் உதித்தது. இயங்கங்களை பிரிய வைத்தது இந்தியா.  ஆயுத போராட்டத்தில் பாதுகாப்பு பிரச்சனையாக இருந்ததால் இந்தியாவின் பாதுக்காப்பை நம்பி பிரிவினை இலகுவாக நடை பெற்றது. இதை விளங்கிகொள்ளாததுமாதிரி நடிப்பது புரிகிறது. இஸ்லாம் மதவாதமாக பிரியவில்லை.  பல இஸ்லாமிய இளைஞர்கள் போராடினார்கள். அசிரப் அமிர்தலிங்கம்  தனி நாடு அமைக்க தவறினாலும் தான் அதை செய்வேன் என்று பேசியிருந்தார். சுயநல கும்பல்கள் அரசுக்கு விலை போனதால் ஆயுததாரிகள் தங்கள் உயிருக்கு அஞ்சி முஸ்லீம்களை விலத்தி வைத்தார்கள். உண்மை எப்போதும் மூடப் பட போவதில்லை.  ஜனநாயக போராட்டம் ஆரம்பித்த பின்னர் சிலர்  இதைஆராய்வது தொழில் இல்லாத்தன்னையால் அல்ல. அரசாங்க பணமும், பணத்துக்குக்காக கொடுக்கும் பிரம்படியும்தான். 

சாதி மத பிரதேசவாதங்கள் தனியே திருமணம் செய்வதற்கு மட்டும் பார்க்கப்படுவதில்லை. அவைகள் பொதுவான தனிமனித ஆழுமையை பாரம்பரியமாகக் கட்டியமைக்கின்றது. சிந்தனைக்குரிய எல்லையை வரையறுக்கின்றது. ஒரு மனிதனின் தனிமனித குணத்தை தீர்மானிக்கின்றது. இவை அறிவால் கூட கடந்து செல்ல முடியாத வலுவுடையது. இந்தக் குணம் அறிவை விட வலுவுடையது என்ற காரணத்தினால் தான் எல்லா இயக்கங்களுக்கும் தாம் பிழவு படுவதும் தமக்குள் குத்துப்படுவதும் இனத்துக்குள் துப்பாக்கிகளை நீட்டுவதும் சிங்களவனின் கனவுகளை நனவாக்கும் இனம் சிதையும் போராட்டம் சீரழியும் என்ற உண்மை அறிவுக்குத் தெரிந்தபோதும் அவைகளை கடந்து பாரம் பரிய இயல்பான குணமும் உணர்ச்சியுமே முன்நின்றது. இன்னும் அதே நிலையே தொடர்கின்றது.

அறிவை கட்டுப்படுத்துவது அரேபிய மதம் மட்டும். சிந்தனையை பறக்கவிடாவிடாமல் வலிந்து முரண்பட பயிற்சி பெற்ற மனங்கள் சிந்திக்க முடியாமல் தவிப்பதும், வெறித்தனமாக பலவற்றை எழுதுவதும் யாழில் பலதடவைகள் பார்த்தவை.  வெள்ளையரின் ஜனநாயக ஆட்சியில் இயற்கையான முன்னேற்றம் கண்டிருந்த ஒரே மாகாணம் வடமாகாணம். மேல்மாகணம் அவர்களால் முன்னேற்றப்பட்டது. இருந்தும் 1970 வரைக்கும் இலங்கையின் மிக குறைந்த குற்றங்கள் செய்யும் மாகாணமாக வட மாகாணம் அரச பரிசில்களை பெற்றும் வந்தது.  தமிழரை அறியாதவர்கள் வந்து தங்கள் அறியாமையை பலவழிகளில் கொட்டிக்காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.  இவர்கள் பௌத்தத்தில் சாதி இல்லை என்பததால் யாழ்ப்பாணம் பௌத்தமாக மாற வேண்டும் என்றவர்கள்.  இப்போது தங்களின் பின் வழத்தில் சூட்டுக்கோல் விழ தமிழரை ஏய்கலாம் என்று கருணா பாடம் எடுக்கிறகள்.  யாழ்ப்பாணத்தமிழரின் சாதி அமைப்பு தமிழக தமிழரின் போன்றதல்ல. அது இலங்கை சிங்களவரினது போனறது என்றதை பலர் எழுதியதை தன்னும் படிக்கவில்லை.  உணர்ச்சி முதலில் நிற்பது யாருக்கு என்பது யாழில் பதிந்த பதிவுகள்தான் சாட்சி. 

எமது இனம் என்னுமொரு இனத்தின் சரிபிழைகளோடு ஒப்பிட்டு நியாயப்படுத்தவும் முடியாது சரிசெய்யவும் முடியாது. எந்த ஒரு நாட்டின் அனுபத்துடன் அல்லது இனத்துவக் கட்டுமனம் குறித்த அணுகுமுறைகள் இசங்கள் கொள்கைகள் கோட்பாடுகளால் சரிசெய்ய முடியாதது. ஏனெனில் எமது இனம் அறிவை முன்னகர்த்துவதில்லை. எவ்வாறு தேசீயம் இரண்டாம் நிலையிலும் சாதி மத பிரதேசவாதம் அது சார்ந்து உருவான பாரம்பரிய தனிமனித ஆழுமைகள் குணங்கள் முதலாம் நிலையில் இருக்கின்றதோ அவ்வாறே அறிவு இரண்டாம் நிலையிலும் உணர்ச்சி அதுசார்ந்த நடைமுறைகள் முதலாம் நிலையிலும் இருக்கின்றது.

எமது இனம் இந்தியாவில் முதன்மையான பொருளாதார மானிலத்தை கொண்டிருக்கிறது. மலேசிய சிங்க பூரில் "Ceylon Tamils" தனித்துவமான இனமாக கணிக்கப்பட்டு ஆய்வுகள் வெளிவிடப்பட்டிருகிறது. இலங்கையில் வெள்ளையரின் ஆட்சி நேரம் இணயில்லாத முன்னேற்றங்களை காட்டியிருந்தது. பதியுதின் தமிழரின்கல்வியை சிதைக்க தனி முயற்சிகளில் இறங்க வேண்டியிருந்தது. சிந்தனை யை மடக்கி வைத்திருக்கும் மததில் இருப்போர் தம்மை மற்றவர்களாக நினத்து அழுவது நகைப்பாக இருக்கிறது. 

வேண்டுமானால் மனச்சாந்திக்காக திருப்திக்காக கடவுள் இருக்கோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு கோயிலுக்குப் போய்வருவது போல் எமது இனம் அப்படியல்ல இப்படித்தான் என்று எமக்குள் நாமே திருப்திப்பட்டுக்கொள்ளலாம். அதைத்தான் அனேகர் விரும்புகின்றார்கள். அவ்வாறான விருப்பம் எனக்கில்லை.

"நமது இனம் அப்படி இல்லையே " என்பது பதியுதின் பட்ட பொறாமை. மேற்கு நாட்டு மனோவியல் தத்துவங்களின்படி ஒரு இனத்தை அழிக்க முதல் செய்ய வேண்டியது அந்த இனத்தை இழிவு படுத்தி, தாழ்மைப் படுத்த வேண்டும் என்பதாகும். அப்போது அதன் அங்கத்தவர்கள் வழிக்கு வந்து தம்முள் பிரிவினைகள கனவு கண்டு அழிக்கத்தொடங்குவார்கள் என்பதாகும்.  அதை இலங்கை அரசின் அடிவருடிகள் தமிழருக்கு செய்ய நாம் இடம் கொடுக்க போவதில்லை.  அவர்களை மொட்டாகை நீக்கி முகத்திருப்பி அவர்களின் அலகைக் காட்ட வைப்பதுதான் எமது நோக்கம். ஏன் எனில் அலகுப்பக்கம் தான் ஒருவர் தெளிவாக அடையாளம் காணப்படுவது இலகு. இதனால் இலங்கையின் தேசிய அடையாள அட்டையிலும் அலகை குறிவது படம் எடுப்பார்கள். 

Edited by மல்லையூரன்

அதாவது தேசிய உணர்வையும் சாதி மதம் ஆட்டிப்படைப்பதாக சண்டமாருதன் நம்புகிறார். அதில் தவறேதும் இல்லை. நம்பிக்கைதானே வாழ்க்கை?!! :D

அப்படி எதுவும் நடக்கவில்லையே !

தேசீய உணர்வை இவைகள் எங்கும் பாதிக்கவில்லை. சிங்களவர்கள் தமிழர்கள் என்று அடிபோடத்தொடங்கிய பின்னர் தமிழர்கள் சாதி மதம் பிரதேங்களை எல்லாம் கடந்து வடக்கு கிழக்கு என்ற பிரச்சனைகள் இஸலாம் இந்து என்ற பிரச்சனைகள் எல்லாம் கடந்து உணர்ச்சிவசப்படாமல் அறிவைப் பயன்படுத்தி எல்லா இயக்கங்கள் பிரிவுகளும் ஒன்றுபட்டு மிக வலுவான இனமாக சிங்களத்தை எதிர்த்தது தெரியாதா? பின்னர் ஏதோ கஸ்டகாலம் அட்டமத்தில் சனியும் ஜென்மத்தில் குருவும் இருந்ததால் சிங்களவன் வென்றுவிட்டான். இந்தியாவும் அமரிக்காவும் சீனாவும் இலங்கைக்கு சப்போட் பண்ணாட்டி கடசிவரைக்கும் வென்றிருக்க முடியாது. சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் இப்ப தமிழர்கள் முன்பை விட வலுவாக நாட்டில் மட்டுமில்லை புலம்பெயர் தேசங்களிலும் ஒன்றுபட்டுவிட்டார்கள். சிங்களவனின் அழிவை கடவுளாலும் தடுக்க முடியாது.

சரியா புரிந்து கொண்டுடிருக்கீறிர்கள். இருந்தும் பணம் கண்ணை மறைத்தால் வேதாந்தம் எழுதி வந்தீர்கள். <_<  

சரியா புரிந்து கொண்டுடிருக்கீறிர்கள். இருந்தும் பணம் கண்ணை மறைத்தால் வேதாந்தம் எழுதி வந்தீர்கள். <_<

பணக்கட்டுகளை எடுத்து அங்கால் வைத்துவிட்டு உங்கள் அரேபியா பதியுதீன் வரலாறுகளை ஆழமாகப் படித்தபோதுதான் இந்த உண்மை புரிந்தது. உங்களுக்கு நன்றிகள்

பணக்கட்டுகளை எடுத்து அங்கால் வைத்துவிட்டு உங்கள் அரேபியா பதியுதீன் வரலாறுகளை ஆழமாகப் படித்தபோதுதான் இந்த உண்மை புரிந்தது. உங்களுக்கு நன்றிகள்

யூ வெல் கம். தேவை படும் போது வந்து கேட்டு வாங்க தயங்க வேண்டாம். <_<

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள் என்ன பிரச்சனை என்பதை ஏற்றுக்கொள்ளும் போதே அதற்கான தீர்வுகளை நோக்கி நகரமுடியும். நீங்களோ அங்கயும் அப்படி இருக்கு இங்கையும் அப்படி இருக்கு என்று நியாயப்படுத்தவும் பூசிமொழுகவுமே செய்கின்றீர்கள்.

சிங்களவர்கள் தம்மை தாம் ஒரு மேலான இனம் இலங்கைத் தீவு முழுவதும் தமக்கே செந்தம் தாமே ஆழுதலுக்கு உரியவர்கள் தமக்கு கீழேதான் ஏனையவர்கள் இருக்கவேணும் என்று நகர்கின்றார்கள். இதற்கு பலியாவது ஏனைய இனங்கள்.

தமிழர்கள் தமக்குள் சில அலகுகளை வைத்திருக்கின்றார்கள் அதற்குள் பிரதானமானது சாதி மதம் பிரதேசவாதம் போன்றன. அவைகளை முன்வைத்து தாமே மேலானவர்கள் தாமே ஆழுதலுக்கும் அதிகாத்துக்கும் உரியவர்கள் தேசீயத்துக்கும் உரித்துடையவர்கள் என்கின்றார்கள். இதற்கு முதல் பலியாவது தமது சொந்த இனமே.

இந்த இரண்டு போக்கிற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது.

சாதியம் பிரதேசவாதம் மதவாதம் என்பதற்கான முன்னுரிமை என்பது பற்றி அதிகம் கடுமையாக எழுதும் போது பலருக்குப் பிடிப்பதில்லை ஆனால் அது சிங்களப்பேரினவாதத்திற்கு நிகரானது என்ற அடிப்படைக் காரணத்தினாலேயே அவ்வாறு அணுகப்படுகின்றது. தமக்குள் அதிகாரத்தையும் மேலாண்மையையும் தேடும் போது அது ஒரு ஒடுக்குமுறையே. அதிலிருந்து மக்கள் நழுவுதல் என்பது அதற்கான எதிர்வினை. இதன்பால் இனம் தேசீயம் என்ற வட்டத்தில் இருந்து மக்கள் தம்மை விடுவித்துக்கொள்கின்றார்கள்.

அனைத்து இயக்கங்களினது தலமையும் யாழ்பாணம் என்ற பிரதேசத்திலேயே உருவாகியது.

மதவாதமாக இஸ்லாம் பிரிந்தது

பிரதேசவாதமாக இறுதியில் பிழவுகள் ஏற்பட்டது.

சாதி மத பிரதேசவாதங்கள் தனியே திருமணம் செய்வதற்கு மட்டும் பார்க்கப்படுவதில்லை. அவைகள் பொதுவான தனிமனித ஆழுமையை பாரம்பரியமாகக் கட்டியமைக்கின்றது. சிந்தனைக்குரிய எல்லையை வரையறுக்கின்றது. ஒரு மனிதனின் தனிமனித குணத்தை தீர்மானிக்கின்றது. இவை அறிவால் கூட கடந்து செல்ல முடியாத வலுவுடையது. இந்தக் குணம் அறிவை விட வலுவுடையது என்ற காரணத்தினால் தான் எல்லா இயக்கங்களுக்கும் தாம் பிழவு படுவதும் தமக்குள் குத்துப்படுவதும் இனத்துக்குள் துப்பாக்கிகளை நீட்டுவதும் சிங்களவனின் கனவுகளை நனவாக்கும் இனம் சிதையும் போராட்டம் சீரழியும் என்ற உண்மை அறிவுக்குத் தெரிந்தபோதும் அவைகளை கடந்து பாரம் பரிய இயல்பான குணமும் உணர்ச்சியுமே முன்நின்றது. இன்னும் அதே நிலையே தொடர்கின்றது.

எமது இனம் என்னுமொரு இனத்தின் சரிபிழைகளோடு ஒப்பிட்டு நியாயப்படுத்தவும் முடியாது சரிசெய்யவும் முடியாது. எந்த ஒரு நாட்டின் அனுபத்துடன் அல்லது இனத்துவக் கட்டுமனம் குறித்த அணுகுமுறைகள் இசங்கள் கொள்கைகள் கோட்பாடுகளால் சரிசெய்ய முடியாதது. ஏனெனில் எமது இனம் அறிவை முன்னகர்த்துவதில்லை. எவ்வாறு தேசீயம் இரண்டாம் நிலையிலும் சாதி மத பிரதேசவாதம் அது சார்ந்து உருவான பாரம்பரிய தனிமனித ஆழுமைகள் குணங்கள் முதலாம் நிலையில் இருக்கின்றதோ அவ்வாறே அறிவு இரண்டாம் நிலையிலும் உணர்ச்சி அதுசார்ந்த நடைமுறைகள் முதலாம் நிலையிலும் இருக்கின்றது.

வேண்டுமானால் மனச்சாந்திக்காக திருப்திக்காக கடவுள் இருக்கோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு கோயிலுக்குப் போய்வருவது போல் எமது இனம் அப்படியல்ல இப்படித்தான் என்று எமக்குள் நாமே திருப்திப்பட்டுக்கொள்ளலாம். அதைத்தான் அனேகர் விரும்புகின்றார்கள். அவ்வாறான விருப்பம் எனக்கில்லை.

ஐயா பூசி முழுகவில்லை .நீங்கள் தமிழர்கள்மட்டுமதான் உலகில் காட்டுமிராண்டிகள் என்று சொன்னபடியால் அப்படி இல்லை உலகில் ஆயுதம் தூக்கி போராடிய சகல போராளி குழுக்களும் ஒரேமாதிரியானவை என்று சொன்னேன்.....மேலும் உங்களுடைய தியரிபடி எந்த போராட்டமும் வென்றதாக சரித்திரமில்லை.......

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பைத்தியக்காரர்களால் தான் எம்மினம் அழிந்தது.

ஒற்றுமையாக நின்று போராட வேண்டிய களத்தில் வேற்றுமையை புகுத்திய இவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செய்வதே வீண்.

காக்கவன்னியனுக்கும்.. எட்டப்பனுக்கும் கண்ணீர் அஞ்சலி செய்பவர்களும் உலகில் உளர். :icon_idea:

எனியாவது ஒற்றுமையாக நிற்பார்கள் என்று நினைத்தால் மீண்டும்.. அதே வேற்றுமை உணர்வுகளை இன்னும் ஆழப்படுத்திக்கிட்டு இருக்கிறார்கள். சிலர் அதில் குளிர்காய்கிறார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் கொல்லபட்டது எவ்வளது தவறோ அதேயளவு தவறு இன்று அவருக்காக தனியாக நினைவு செலுத்துவதும்.

சிலவேளைகளில் புலிகளால் கொல்லபட்ட எல்லோருமே புனிதர்களாக இருக்கலாம், ஆனால் அது புலிகளாக கொல்லபட்ட 35 ஆயிரத்து மேற்பட்டோரையும், அவர்களோடு இணைந்து கொல்லபட்ட பொதுமக்களையும் பயங்கரவாதிகள் என அரசாங்கம் சொல்லும் கணக்குக்கு இன்னுமொரு ஆதாரமாக போய்விடும்.

அண்மையில் அமிர்தலிங்கத்திற்கு யாழில் சிலை கட்ட போகிறார்களாம் என்று வாசித்தேன்; நல்லது ஆனால், ஒன்று மட்டும் உண்மை, புலிகளையும் அவர்களோடு இணைத்த மக்களையும் நினைவு கூறத்தான் இலங்கையில் தடை. அவர்களை தவிர யாரையும் யாரும் நினைவு கூறலாம். வேறு ஏதும் சொல்ல தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எதுவும் நடக்கவில்லையே !

தேசீய உணர்வை இவைகள் எங்கும் பாதிக்கவில்லை. சிங்களவர்கள் தமிழர்கள் என்று அடிபோடத்தொடங்கிய பின்னர் தமிழர்கள் சாதி மதம் பிரதேங்களை எல்லாம் கடந்து வடக்கு கிழக்கு என்ற பிரச்சனைகள் இஸலாம் இந்து என்ற பிரச்சனைகள் எல்லாம் கடந்து உணர்ச்சிவசப்படாமல் அறிவைப் பயன்படுத்தி எல்லா இயக்கங்கள் பிரிவுகளும் ஒன்றுபட்டு மிக வலுவான இனமாக சிங்களத்தை எதிர்த்தது தெரியாதா? பின்னர் ஏதோ கஸ்டகாலம் அட்டமத்தில் சனியும் ஜென்மத்தில் குருவும் இருந்ததால் சிங்களவன் வென்றுவிட்டான். இந்தியாவும் அமரிக்காவும் சீனாவும் இலங்கைக்கு சப்போட் பண்ணாட்டி கடசிவரைக்கும் வென்றிருக்க முடியாது. சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் இப்ப தமிழர்கள் முன்பை விட வலுவாக நாட்டில் மட்டுமில்லை புலம்பெயர் தேசங்களிலும் ஒன்றுபட்டுவிட்டார்கள். சிங்களவனின் அழிவை கடவுளாலும் தடுக்க முடியாது.

டக்ளசும்  இப்படித்தான் மக்கள் போராட்டம் என்றெல்லாம் பசப்பு வார்த்தை கூறிவிட்டு இப்போ அரசுடன் கும்மி அடிக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.