Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒன்ராரியோ மாகாணசபைத் தேர்தல் - 2014

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராரியோ மாகாணசபைத் தேர்தல் - 2014

 

ஒன்ராரியோவின் சிறுபான்மை லிபரல் அரசாங்கம் தமது ஆட்சியைக் கைவிட்டு தேர்தலுக்கு முகம் கொடுப்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். முன்கூட்டிய வாக்குப் பதிவு நிலையங்களும் திறக்கப்பட்டு விட்டன. உங்களில் பலர் ஏற்கனவே வாக்களித்தும் இருக்கலாம். ஜூன் 12 அன்று தேர்தல் நாள்.

 

http://www.elections.on.ca/en-ca

 

தமிழகத்தைப் போன்று சுவரொட்டி, பதாகைகள், ஒலிபெருக்கிகள் என்று இல்லாமல் தேர்தல் நடப்பது மிகுந்த வருத்தமே. :D ஆனாலும் என்ன செய்வது. எமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டும் அல்லவா?!  :huh: இனிமேல் போட்டியில் இருக்கும் பிரதான கட்சிகளைப் பற்றிப் பார்ப்போம்.

 

முற்போக்கு பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party)

 

இக்கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுபவர் டிம் ஹூடாக். இந்த முறை இவர்களுக்கு ஆதரவு கூடியிருக்குமா என்பது தெரியவில்லை. ஆனாலும், இவரது முகபாவனைகள், கண் அசைவுகளைக் கவனித்தபோது இவர் ஒரு நேர்மையான, தடையற்ற சிந்தனையாளனாகத் தெரியவில்லை.  :blink:

 

tim-hudak-two1.jpg

 

எனது நண்பர்களில் சிலர் இந்தப் பழமைவாதக் கட்சிக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் நான் இதுவரையில் இவர்களுக்கு வாக்களித்ததில்லை.

 

ஒரு மில்லியன் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவேன் என்பது இவரது தேர்தல் வாக்குறுதி. ஆனால் ஒரு லட்சம் ஆசிரியர் இடங்களைக் குறைப்பேன் என்று இவர் சொன்னதை எதிர்க்கட்சிகள் பிடித்துக்கொண்டு ஆட்டம் காட்டுகிறார்கள்.

 

லிபரல் கட்சி (Liberal Party)

 

இக்கட்சியின் தலைவியாக காத்லின் வின் உள்ளார். இவர் சென்றமுறை முதல்வராக இருந்தவர். வரவு செலவு அறிக்கையை சட்டசபையில் நிறைவேற்ற முடியாமல் போய்விடும் நிலை வந்ததும், ஆட்சியை விட்டு இறங்கிக் கொண்டார்.

 

wynne.jpg.size.xxlarge.letterbox.jpg

 

உட்கட்டுமானங்களுக்கு 29 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்குவேன் என்பது இவரது தேர்தல் வாக்குறுதிகளில் பிரதானமானது. இது என்னைக் கவர்ந்துள்ளது.. :D ரொராண்டோ பெரும்பாகத்தில் உக்கிப் போன பாலங்களையும், தொடருந்து சேவையையும் வைத்துக்கொண்டு இவர்கள் படும் பாடு தாங்க முடியவில்லை. :huh: ஆனாலும், இதற்கெல்லாம் இந்தக் கட்சியும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். பல ஆண்டுகள் இவர்கள் ஆட்சியில் இருந்துள்ளார்கள்.

 

அதுமட்டுமல்லாமல் எரிவாயு மின் நிலையம் அமைத்து அதை பாதியில் கைவிட்ட வகையில் 675 மில்லியன்  டாலர்களை வீணடித்த அரசும் இந்த லிபரல் அரசுதான். அப்போது காத்லின் முதல்வராக இல்லாவிட்டாலும், லிபரல் கட்சி பொறுப்புக் கூறவேண்டிய நிலையில் உள்ளது. அதுபோல ஈ-ஹெல்த் என்கிற மருத்துவத்தை இலத்திரனியல் படுத்தும் திட்டமும் குழறுபடியானது. செம்மஞ்சள் உலங்கு வானூர்தி சேவையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

 

ஆக, லிபரல் என்றாலே குழறுபடிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. :huh:

 

புதிய ஜனநாயகக் கட்சி (NDP)

 

(மறைந்த) ஜாக் லேய்ட்டன் தலைவராக இருந்தபோது இந்தக் கட்சியில் எனக்கு நல்ல அபிமானம் இருந்தது, அவரது தலைமைத்துவத்திற்காக. நமது ராதிகா சிற்சபை ஈசன் அவர்களும் இந்தக் கட்சியின் உறுப்பினர்தான் என்பதை ஞாபகப் படுத்த விரும்புகிறேன். :D

 

sitsabaiesanr-web-squared.png

 

ஆனாலும், இக்கட்சியின் மாநிலத் தலைவராக ஆண்ட்ரியா ஹோர்வாத் உள்ளார். இவர் திடகாத்திரமாகப் பேசி அரசியல் செய்யக்கூடியவர். சென்ற சிறுபான்மை லிபரல் அரசு இவர்களின் ஆதரவில்தான் தங்கியிருந்தது. வரவு செலவுக் கணக்கு தாக்கல் செய்யப்படும்போது அதற்கு புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவு கிடைக்காது என்கிற காரணம்தான் இந்தப் புதிய தேர்தலுக்கு வித்திட்டது. ஆண்ட்ரியா முதல்வர் ஆகும் சந்தர்ப்பம் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் சென்ற தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை / இடங்களைப் பிடிப்பார்கள் என்பது என் எண்ணம்.

 

Andrea-Horwath.png

 

-ஆண்ட்ரியா ஹோர்வாத்

 

முற்கூட்டிய வாக்களிப்பு ஜூன் ஒன்றாம் திகதி ஆரம்பமாகிவிட்டது. ஆறாம் திகதி வரைக்கும் அது இருக்கும். உங்கள் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் வாக்களிப்பு நிலையத்தை மேற்குறிப்பிடப்பட்ட இணையத்தளத்தின் உதவியுடன் அறிந்து கொள்ளுங்கள். 

 

அத்துடன் உங்கள் எண்ணப்போக்கு என்ன என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். :D உங்கள் வாக்கு எந்தக் கட்சிக்காகவும் இருக்கட்டும். ஆனால் வாக்களிக்காமல் மட்டும் இருந்து விடாதீர்கள்.  :huh: வாக்களிப்பவர்களில் எந்த இனத்தில் எத்தனை விகிதம் என்றெல்லாம் புள்ளி விவரம் சேகரிக்கிறார்கள். இதை அவ்வப்போது வெளியிடவும் செய்கிறார்கள். தேர்தல் கட்சிகளின் கணக்கும் அவற்றைப் பொறுத்தே இருக்கும். தமிழர்கள் அதிக அளவில் வாக்களிக்கக் கூடியவர்கள் என்று புள்ளி விவரம் சொன்னால் அதனால் எமக்கு நன்மையே.

 

இன்று இரவு தொலைக்காட்சியில் கட்சிகளுக்கு இடையேயான விவாதம் இன்றிரவு 6:30 மணிக்கு நடைபெற உள்ளது. சிபிசி தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலிபரப்புகிறார்கள். காணத் தவறாதீர்கள்.

 

http://www.cbc.ca/news/canada/toronto/ontario-votes-2014/ontario-election-2014-debate-leaders-seek-to-drive-message-home-1.2661424

 

நன்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்

 

sitsabaiesanr-web-squared.png

 

 

 

 

சேரன்  அவுட்

எத்தனை வாக்கு என்றாலும் குத்துவார்... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

sitsabaiesanr-web-squared.png

 

 

கனடா ஒன்டாரியோ வாழ்மக்களே உங்கள் வாக்குகளை NDPக்கு அளியுங்கள்! :D

 

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு போடுவது உறுதி ஆனால் யாருக்கு போடுவது என்பது இன்னும் நிச்சயிக்க படாத ஒன்று...பிரதானமாக என் மனத்தில் எப்போதும் இருப்பது நானும் இந்த நாட்டில் இன்னும் பிரஜையாக இருந்து வருகிறேன் என்பதை நினைவுபடுத்தவே தவறாது வாக்களிப்பது வழமை...

என்னைப் பொறுத்த மட்டில் களத்தில் இறங்கி இருப்பவர் எவ்வாறன வேலைத் திட்டங்களை செய்ய உள்ளார்..அவரது பின்னணி என்ன .......அவர் எடுத்திருக்கும் விடையத்தினால் மக்களுக்கு என்ன பிரியோசனம் போன்றவற்றை ஓரளவுக்கேனும் அறிந்து விட்டுத் தான் வாக்களிப்பது வளமை.ஒருவர் போடுவதனாலோ,போடாமல் விடுவதனால் குறைந்தோ,கூடியோ விடப்போவது இல்லை..இன்னும் அலசி ஆராய நிறைய விடையங்கள் இருக்கிறது அவ்வப்போது வாறன்...

சேரன்  அவுட்

எத்தனை வாக்கு என்றாலும் குத்துவார்... :lol:  :D  :D

 

சேரன் மட்டுமா அவுட் விசுகு அண்ணை அம்மணியின் இடுப்பை லாவகமாக நளினமாக அசைத்து ஆடும் நடனத்தை கண்டவர்கள்  எல்லோருமே அவுட் தான். எந்த கட்சி எக்கேடு கெட்டு போனால் என்ன எனது வாக்கு ராதிகாவுக்கே  :D  :D  :lol:  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணே,
அந்த புள்ளையும் எடுக்கிற சம்பளத்துக்கு எதோ ஒண்ட நீட்டி முழக்கி பாராளுமன்றத்தில கதைக்கதானே வேணும் . நெடுகவும் போய் சிங்களவன் அடிக்கிறான், சிங்களவன் அடிக்கிறான் எண்டு சொன்னா நாங்கள் எதோ அடி வாங்கத்தான் லாயக்கு எண்டு கணக்கு போட்டுருவான்கள்.
"டிராகன் பெஸ்டிவல் "எங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் எண்டாலும் புள்ள நல்லாத்தான் "ப்ரசண்ட்" பண்ணுறா. உந்த "பொல்கா  டொட் " உடுப்புதான் கொஞ்சம் சறுக்குது. அடுத்த முறை புள்ளைய கண்டு கதைக்கும் பொது ஒரு சின்ன "(f) பீட்பாக்" கொடுத்தா போச்சு..    

மூன்று இலங்கை தமிழர்கள் இந்த தேர்தலில் பங்கு பங்குபற்றுகின்றார்கள் என்று நம்புகின்றேன் .

 

சான் தயாபரன் -வீடு விற்பனை முகவர் -கொன்சவேட்டிவ் பார்டி -மார்க்கம் யூனியன்வில் தொகுதி (எனது தொகுதி )

 

கென் கிருபா     - வீடு விற்பனை முகவர் -கொன்சவேடிவ் பார்ட்டி-ஸ்காபொறோ கில்வூட் தொகுதி 

 

நீதன் சான்         -school board trustee           -புதிய ஜனநாயக பார்ட்டி( NDP)-ஸ்கபோரோ ரூஜ் ரிவர் தொகுதி .

 

இந்த மூவரும் கடந்த தேர்தல்களில் மிக சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்தவர்கள் .இந்த முறையும் கடும் போட்டி  என்றுதான் நினைக்கின்றேன் காரணம் இவர்களை எதிர்த்து தேர்தல்களில் நிற்பவர்கள் தமிழர்களுக்குள்ளேயே மிக பிரபலமானவர்கள் .(இருவர் சீனர்கள் ,ஒருவர் கயனிஸ்)

 

இவர்களைவிட அஜாஜ் கிருஷ்ணன் என்று ஒருவரும் லிபரல் சார்பில் ஆஜக்ஸ் இல் போட்டியிடுகின்றார் .இவர் இலங்கையர் இல்லை என நினைக்கின்றேன் .

 

எம்மவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

இவ போடுற உடுப்புகளைப் பார்த்தால் இவ அரசியல்வாதி எஎண்டு ஒருத்தரும் நம்பமாட்டினம்.   இவ போடுற உடுப்புகளைப் பார்த்தால் இவ அரசியல்வாதி எஎண்டு ஒருத்தரும் நம்பமாட்டினம்.  கனடாவிலை அரசியல்வாதியா வந்தும் திருந்தாது எங்கட சனம்.  இதுக்குள்ள மற்றவையும் வெல்ல வேணுமாம்.  நல்லா உருப்படும் இந்த நாடு.

  • கருத்துக்கள உறவுகள்

1இவ போடுற உடுப்புகளைப் பார்த்தால் இவ அரசியல்வாதி எண்டு ஒருத்தரும் நம்பமாட்டினம்.  கனடாவிலை அரசியல்வாதியா வந்தும் 2திருந்தாது எங்கட சனம்.  இதுக்குள்ள மற்றவையும் வெல்ல வேணுமாம்.  நல்லா உருப்படும் இந்த நாடு.

 

1 ராதிகா மேடம் போடுற உடுப்புக்கள் நல்லாத்தானே ரசிக்கக்கூடியமாதிரி இருக்குது. :D

 

2 இது எண்டால் 100% உண்மை. எங்கபோனாலும் திருந்தாதுகள். :o

 

298143_627719507255693_99987781_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் இசைக்கலைஞன் அவர்கள் குதிக்கப்போவதாக யாழ்களத்தில் கிசுகிசு அடிபடுகிறது. 

 

உண்மையாகவா?  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் இசைக்கலைஞன் அவர்கள் குதிக்கப்போவதாக யாழ்களத்தில் கிசுகிசு அடிபடுகிறது. 

 

உண்மையாகவா?  :rolleyes:

 

மேலே இருக்கும் படத்தை  பார்த்தபின்

தங்களது கேள்வி  தாக்கங்களை  உண்டு பண்ணலாம் :icon_mrgreen:

அவரும் மனுசன் தானே.... :lol:  :D

இந்த தேர்தலில் இசைக்கலைஞன் அவர்கள் குதிக்கப்போவதாக யாழ்களத்தில் கிசுகிசு அடிபடுகிறது. 

 

உண்மையாகவா?  :rolleyes:

 

 

அடுத்த ஒன்றாரியோ மாகாணசபை முதல்வர் எங்கட இசைதான்.  வாழ்க இசை வெல்க இசை.     :lol:  :lol:  :lol:

போட்டியிடும் தமிழர்கள் வெல்வது கடினம் என்பதே எனது கணிப்பு.  பொறுத்திருந்து பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பக்கட்ட முன்னணி நிலவரங்கள்:

லிபரல் கட்சி: 58

பழமைவாதக் கட்சி: 28

புதிய ஜனநாயகக் கட்சி: 20

லிபரல் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் போல தெரிகிறது.

மூன்று தமிழரும் தோல்வி போல கிடக்கு . :unsure:

 

பொருத்தமானவர்கள் போட்டியிட்டால் வெல்வதில் அர்த்தமிருக்கிறது.  சுயநலவாதிகளும் பொம்மைகளும் வெல்லக் கூடாது.   இதற்குப் பின்னராவது அத்தமிழர்கள் அரசியலிலிருந்து விலக வேண்டும்.

Edited by தமிழச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியிட்டு வெற்றி பெறாத மூன்று தமிழர்களின் வாக்கு விபரங்கள் பின்வருமாறு:

 

1) மார்க்கம்-யூனியன்வில் தொகுதி

  • மைக்கேல் சான் - 21,517
  • சன் தயாபரன் - 14,24
  • நடீன் ஹாக்கின்ஸ் - 4,205

2) ஸ்கார்பரோ - கில்ட்வுட்

  • மிட்சி ஹன்ரர் - 17,498
  • கென் கிருபா - 9,688
  • சுஜா சையத் - 5,915

3) ஸ்கார்பரோ - றூஜ் றிவர்

  • பாஸ் பால்கிசூன் - 16,194
  • நீதன் ஷன் - 12,863
  • றேமண்ட் சோ - 11,491

சிவப்பு: லிபரல் கட்சி

நீலம்: முற்போக்கு பழமைவாதக் கட்சி

செம்மஞ்சள்: புதிய ஜனநாயகக் கட்சி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தொகுதி வாக்கு விவரங்களை அறிய..

 

http://www.theglobeandmail.com/news/politics/elections/ontario-election-live-riding-results/article19115522/

  • கருத்துக்கள உறவுகள்

கணிசமான வாக்ககளைப்பெற்றிருக்கிறார்கள்

தமிழர்களின் பலம் உடைந்ததால

ஆசனம் கிடைக்கவில்லை

ஆனாலும் வென்றவருக்கும் கனடிய  கட்சிகளுக்கு பலம் புரிந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவுக்கு இது சாத்தியப்படுமாக,இல்லையா என்பதை ஏற்கனவே  ஊகித்துக் கொள்ளவேண்டும்..தோற்றவர்கள் எதிர் வரும் காலத்திலயாவது புதியவர்களுக்கு வழி விட்டுக்கொடுப்பார்கள் என்று நம்புவோம்.ஒரு விதத்தில் ராதிகா சிற்சபையீசன் கெட்டிக்காறி என்று தான் சொல்ல வேண்டும்.

 

அசாதரணமாக ஒருவர் கேள்வி கேட்கும்போது விரிவாக விளக்கம் கொடுக்கும் தன்மையைக் கூட பெற்று இருக்க வேண்டும்.

இவ்வாறன விடையங்களில் கூட போதிய அனுபவம் சிலருக்கு இருக்கவில்லை என்பதும் உண்மை...அதை விடுத்து நான்கு தமிழ்  கூட்டத்திற்கு போய் விட்டு  நானும் கனேடிய மண்ணிலே ஒரு பிரதிநிதி என்றால் அது சரி வராது.தமிழ் மக்கள் இவர்கள் சொல்வதை பெரிமையாக எடுத்துக் கொள்வார்கள்..

 

வேற்று இனத்தவர்கள் மத்தியில் நாங்கள் சொல்வது எல்லாம் நடக்கும் என்று இல்லை.வெற்றி தோல்வி என்பது வெறும் எங்கள் மக்களோடையே நிற்கின்ற விடையமும் இல்லை..மற்ற சமுகமும் பொதுவாக அந்த மக்கள் எங்களோடு ஒத்துளைக்க வேண்டும்..அவை தவறும் பட்சத்தில் தான் ஒருவரது வெற்றியும்,தோல்வியும் ஊசலாடத் தொடங்கிறது..ஏன் அனேகமனா எங்கள் மக்களே வாக்களிக்க செல்லவில்லை என்பதும் உண்மை...பொதுவாக ஸ்காபிறோவில் பல் கலாச்சார ரபிக்ஜாம் ஏற்பட்டு இருக்கிறது  அதுவும் தேர்தலில் என்று பேசிக் கொண்ட வெள்ளையினத்தவர்களும் இருக்கிறார்கள்.ஒன்றன் பின் ஒன்றாக முண்டியடித்துக் கொண்டு நிக்கிறார்களே ஏன் என்ற பதில் இல்லா  கேள்வியும் அங்கே தொங்கி நின்றது.என் காதால் கேட்ட விடையம்...

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்க்கப்பட்ட ஒன்று  தமிழர் என்ற காரணத்திற்காக வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை. தமிழர்களின் வாக்குகளை வைத்து பெரிய வெற்றியைக்குவிக்கக்கூடியளவுக்கு நிலமையும் இல்லை அதே நேரம் கோட்டைவிட்ட தமிழர் தம்மின மக்களின் வாக்குகளை ஏன் இழக்கவேண்டி வந்தது என்பதை இத்தேர்தலில் போட்டியிட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். தேர்தல் களத்தில் அதி கூடிய பிரச்சார உத்திகளையும், பதாகைகளையும் பயன்படுத்தியதில் நம்மவர்கள் முன்னிலையில் இருந்தும் ஏன் அவர்களுக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.