Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாசாரத்தின் பெயரால் தமிழ்ச் சிறுமிகளின் சாமத்தியச்சடங்கு

Featured Replies

அடிமைகளுக்கு கலாச்சாரம் என்று எதுவும் கிடையாது. நாடும் கிடையாது. சுதந்திரமும் சுதந்திரமான வாழ்வும் கிடையாது. நம்மவர்கள் என்று சொல்வதற்கு ஐக்கியப்பட்ட ஒரு சமூகமும் கிடையாது. அவனவன் எதையோ செய்கின்றான். அதை நம்மவர்கள் என்று அணுகுவதும் தவறு நம்மவர் கலாச்சாரம் என்பதும் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஹெலியும் லிமோவும் தான் மற்றவர்களின் சடங்கைவிட அதிகமாக இருக்கிறது.
 
ஹெலிக்கு பெரியவருக்கு 250 யூரோவும் சிறுவருக்கு 200 யூரோ.
 
ஹெலிக்கும் லிமோவுக்கும் ஒரு 2000 யூரோ செலவளிச்சிருப்பார்.
ஒரு நாள் தானே.
 
அந்தாள் தன்ட காசத்தானே செலவளிக்குது. அதுவும் தன் மகளுக்கு.
 
நீங்கள் எல்லாம் ஏன் எரியிரீங்க ??
 
கனடாவில, லண்டனில‌ இருந்து தமிழ்ப் பெடியள் தாய்லாந்துக்கு விபச்சாரிகளுக்கு ஆயிரக்கணக்கான டொலர் செலவளித்து பிளேனில போய் வாறங்கள். இந்தக் கணக்கெல்லாம் யார் பார்ப்பது ?? 

 

 

ஹெலி.. லிமோ அல்ல பிரச்சனை. அதனை பயன்படுத்திய சந்தர்ப்பம் பற்றி தான் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஹெலி.. லிமோ.. சாமத்தியவீட்டு கலாசாரத்துக்குள்ள எப்ப இருந்து நுழைஞ்சது என்ற கேள்வியும் கூட ஒரு பக்கம் இருக்கட்டும்...???!  அந்தக் குடும்பம்.. சாதாரணமாக.. சுற்றுலாவை..ஹெலி.. லிமோவை பயன்படுத்திச் செய்யலாம். அதனை யாரும் விமர்ச்சிக்க மாட்டினம்.

 

ஆனால்.. கலாசாரம்.. சம்பிரதாயத்தை கட்டிக்காக்கிறம் என்ற போர்வையில்.. பவிசை.. பந்தாவை வெளிப்படுத்துவதும்.. அதற்கு சிறுமிகளை இரையாக்குவதும் தான் கண்டிக்கப்படுகிறது.

 

18 வயதை தாண்டிய ஒருவர் விபச்சாரியை தேடிப் போறதை தடை செய்ய சட்டத்தை தவிர வேறு எந்த சக மனிதனுக்கும் உரிமையில்லை. ஆனால்.. இப்படியான சம்பிரதாயம் என்ற போர்வையில் நடக்கும் சிறுமியரின் உரிமை.. துஸ்பிரயோகங்கள் தொடர்பில்.. கவனம் செலுத்துவது நல்லது தானே..! :icon_idea:

இங்கு ஜேர்மனியில் ஒரு திருமண வீடு பார்த்தேன்.

 

மணமகன் ஹெலியில் வந்து மண்டப வாசலில் இறங்கினார்.

'மணமகளை சிறை மீட்க ஹீரோ ஹெலியில் வந்து இறங்குகிறாராம்!'

 

ஒரு மாதம் கழிந்திருக்கும்!!!!

பிள்ளை கண்ணைக் கசக்கிக்கொண்டு பெற்றோரிடமே வந்துவிட்டது.

 

இப்ப கதாநாயகனுக்கு வில்லன் வேசம் போலை!!  :o  :lol:

ஹெலி.. லிமோ அல்ல பிரச்சனை. அதனை பயன்படுத்திய சந்தர்ப்பம் பற்றி தான் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஹெலி.. லிமோ.. சாமத்தியவீட்டு கலாசாரத்துக்குள்ள எப்ப இருந்து நுழைஞ்சது என்ற கேள்வியும் கூட ஒரு பக்கம் இருக்கட்டும்...???!  அந்தக் குடும்பம்.. சாதாரணமாக.. சுற்றுலாவை..ஹெலி.. லிமோவை பயன்படுத்திச் செய்யலாம். அதனை யாரும் விமர்ச்சிக்க மாட்டினம்.

 

ஆனால்.. கலாசாரம்.. சம்பிரதாயத்தை கட்டிக்காக்கிறம் என்ற போர்வையில்.. பவிசை.. பந்தாவை வெளிப்படுத்துவதும்.. அதற்கு சிறுமிகளை இரையாக்குவதும் தான் கண்டிக்கப்படுகிறது.

 

18 வயதை தாண்டிய ஒருவர் விபச்சாரியை தேடிப் போறதை தடை செய்ய சட்டத்தை தவிர வேறு எந்த சக மனிதனுக்கும் உரிமையில்லை. ஆனால்.. இப்படியான சம்பிரதாயம் என்ற போர்வையில் நடக்கும் சிறுமியரின் உரிமை.. துஸ்பிரயோகங்கள் தொடர்பில்.. கவனம் செலுத்துவது நல்லது தானே..! :icon_idea:

 

 

அந்தக் காலத்திலேயே அன்னரதம் என்றெல்லாம் இருந்தது. என் அம்மம்மாவின் கடைசித் தங்கைக்கு இப்படி ஒரு சடங்கு செய்ததாக அம்மம்மா சொல்லுவா. ஏனென்றால் அவ மிக அழகானவவாம்.  :D
 
இப்ப லிமோ.. ஹெலி... அவ்வளவே.
 
சிறுமிக்கு என்ன !! அவள் தான் ஹிரோயினி.  சந்தோசம் தானே.  :)
 
உலகம் எங்கேயோ போகிறது. தமிழ் மரபு என்று சொல்லி பரீஸில் பிள்ளையை மாட்டு வண்டிலில் ஏத்தலாமோ ? ( மாட்டு வண்டிலும் ஒரு அழகு தான். வித்தியாசமாக இருக்கும் )
 
தமிழ்ச்சடங்கை ஹெலி வரை கொண்டு சென்ற அந்த அண்ணலுக்கு ஒரு சல்யூட். 
  • கருத்துக்கள உறவுகள்

 

அந்தக் காலத்திலேயே அன்னரதம் என்றெல்லாம் இருந்தது. என் அம்மம்மாவின் கடைசித் தங்கைக்கு இப்படி ஒரு சடங்கு செய்ததாக அம்மம்மா சொல்லுவா. ஏனென்றால் அவ மிக அழகானவவாம்.  :D
 
இப்ப லிமோ.. ஹெலி... அவ்வளவே.
 
சிறுமிக்கு என்ன !! அவள் தான் ஹிரோயினி.  சந்தோசம் தானே.  :)
 
உலகம் எங்கேயோ போகிறது. தமிழ் மரபு என்று சொல்லி பரீஸில் பிள்ளையை மாட்டு வண்டிலில் ஏத்தலாமோ ? ( மாட்டு வண்டிலும் ஒரு அழகு தான். வித்தியாசமாக இருக்கும் )
 
தமிழ்ச்சடங்கை ஹெலி வரை கொண்டு சென்ற அந்த அண்ணலுக்கு ஒரு சல்யூட். 

 

 

F 16 இல ஏத்தி.. ஒரு பரசூட் குண்டோட கட்டி.. நடு வானத்தில இருந்து.. கழற்றி விட்டும் பார்க்கலாம் தானே. பரசூட்டில.. பிள்ளை.. எப்படி இறக்குது என்று. அதெல்லோ நவீனம். :lol::D

 

உந்தப் பிள்ளையை உளவியலாளர்கள் பரிசோதனை செய்தால் தெரியும்.. அது உண்மையில் தன் சந்தோசத்துக்கு இதைச் செய்ததா அல்லது பெற்றோரின் சந்தோசத்திற்காக கட்டாயப்படுத்தப்பட நிலையில் வரவழைக்கப்பட்ட சந்தோசத்தில் இதை செய்ததா என்று.

 

அது மட்டுமன்றி.. இந்தக் குடும்பங்களின் ஆடம்பர நடவடிக்கைகளுக்கான பண வருவாய் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

 

அண்மையில்.. லண்டனில்.. ஒரு குடும்பம் அரச பணத்தில் இருந்து கொண்டு ஆடம்பர சாமத்திய வீடு.. அயலவர்களோ.. உறவினர்களோ.. எரிச்சலில் கவுன்சிலுக்கு பெட்டிசன் போட.. விசயம்.. பிடிபட்டு.. இப்போ.. பல ஆயிரம் பவுன்ஸ்களை அரசுக்கு மீளச் செலுத்தக் கேட்கப்பட்டுள்ளனர். இப்படியும் நடக்குது. பிரான்ஸில இதுக்கு இன்னும் வழி தெரியாது போல.  :):icon_idea:

 

Edited by nedukkalapoovan

மலேசிய நன்பர் ஒருவர்.. உணவகம் ஒன்று வைத்திருக்கிறார்.
 
ஒருமுறை சொன்னார். " என்னங்க உங்க ஆளுங்க வந்து எள்ளுறுண்டை இருக்கா  ? என்று கேக்கிறாங்க..!!! " :wub:  :wub:  :D  
 
 
உலகம் முன்னேறிக்கொண்டு போகுது.
 
நாங்க எங்களுக்க நிண்டு கொண்டு மற்றவைய பார்த்து "கெக்கே.. கொக்கே.." என்டு கொன்டும் ஆளுக்கு ஆள் மாறி மாறி முதுகு சொறிஞ்சு கொண்டும் நிக்கிறோம்.  :wub:
 
 
அவரின் பண வருவாய் பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவரின் கெட்டித்தனம். கடன் எடுத்து செலவளிக்காதவரை அவரின் கெட்டித்தனமே!
 
பிரான்ஸ் கேணல் கடாபியின் பில்லியன்களை "கெட்டித்தன்மாகத்" தானே எடுத்தது.
 
 
ஒரு கொண்டாட்டம் சிறிது ஆடம்பரமாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது. இதில் கவலைப் படவேண்டியவன் கொண்டாட்டத்திற்கு செலவு செய்தவன் மட்டுமே!
  • கருத்துக்கள உறவுகள்

இதில் அந்த நபரோ.. மனைவியோ சம்பந்தப்பட்டிருந்தால் பறுவாயில்லை. தங்களுக்கு சாமத்திய வீடு செய்யலாம். ஆனால்.. ஒரு சிறுமி சம்பந்தப்பட்டுள்ளாள். அவளின் விருப்பு வெறுப்பு என்பதை உளவியல் அதிகாரிகள் தெரிந்து கொண்டு தான் இதனை அனுமதிக்க முடியும். பெற்றோரின் அடம்பரத்துக்காக.. தற்பெருமைக்காக பிள்ளைகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அது மிகப் பெரிய குற்றமாகும்..! அதைத்தான் இங்கு நோக்க வேண்டும். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் சொல்வதும் நியாயம்தான். அவரது காசு.. அவர் செலவழிக்கிறார். நெடுக்கின் உளவியல் வாதம் வீக்காக இருக்கு. :D

 

ஆனாலும், பொதுத்தளத்தில் இக்காணொளி பகிரப்பட்டுள்ளதால் பலரும் தமக்குத் தோன்றிய கருத்துக்களை வைக்கிறார்கள். அச்செயலிலும் பிழை காண முடியாது.  :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிமைகளுக்கு கலாச்சாரம் என்று எதுவும் கிடையாது. நாடும் கிடையாது. சுதந்திரமும் சுதந்திரமான வாழ்வும் கிடையாது. நம்மவர்கள் என்று சொல்வதற்கு ஐக்கியப்பட்ட ஒரு சமூகமும் கிடையாது. அவனவன் எதையோ செய்கின்றான். அதை நம்மவர்கள் என்று அணுகுவதும் தவறு நம்மவர் கலாச்சாரம் என்பதும் தவறு.

 

ஈழத்தமிழன் சிக்கோயினார் மாதிரி மாறிக்கொண்டு வாறான் எண்டுறியள்????  :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அந்த நபரோ.. மனைவியோ சம்பந்தப்பட்டிருந்தால் பறுவாயில்லை. தங்களுக்கு சாமத்திய வீடு செய்யலாம். ஆனால்.. ஒரு சிறுமி சம்பந்தப்பட்டுள்ளாள். அவளின் விருப்பு வெறுப்பு என்பதை உளவியல் அதிகாரிகள் தெரிந்து கொண்டு தான் இதனை அனுமதிக்க முடியும். பெற்றோரின் அடம்பரத்துக்காக.. தற்பெருமைக்காக பிள்ளைகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அது மிகப் பெரிய குற்றமாகும்..! அதைத்தான் இங்கு நோக்க வேண்டும். :icon_idea::)

 

கணவர் எது சொன்னாலும் அடங்கிறார் இல்லயே,சொல்வளி  கேக்கிறார் இல்லயே என்ற அம்மாக்களின் உளவியல் பிரச்சனைகளுக்கும்,இவ்வாறன விழாக்களை கொண்டாட வைப்பதில் வெற்றி காண்கிறார்கள்..எப்ப,எப்ப என்று எதிர் பார்த்து இருப்பவர்களும் இன்றும் இருக்கிறார்கள்.

காரணம் மகள் பெரியவள் ஆகிட்டாள் என்றால் தந்தைக்கு சொல்லி அடக்குவாள் என்று எதிர் பார்ப்பு வேறு....

 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியைப் பார்த்தேன். வழமையான சாறிப்பார்ட்டியாகத்தானே உள்ளது. இந்த இலகு ரக ஹெலிக்கு அதிகம் செலவு வந்திருக்காது! விழா நடக்கும் மண்டபமும் தெரிந்ததாகவே இருக்கின்றது!!

இலண்டனில் எனக்குத் தெரிந்த வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் சாமத்தியவீடு சிறப்பாகத்தான் நடந்திருக்கின்றது. இனியும் நடக்க இருக்கின்றது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதம் எல்லாம் கிடையாது. வசதி உள்ளவர்களும் இல்லாதவர்களும் தமது பெண்பிள்ளைகளுக்கு இந்த விழாவைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டுச் செய்கின்றார்கள். வழமை போன்றே போட்டி போட்டுப் புதினமாகச் செய்யவேண்டும் என்று ஹெலி, குதிரைவண்டி, பல்லக்கு, கடிலாக் லிமோசின் என்று ஆடம்பரமாகச் செலவழிக்கின்றார்கள். இதையெல்லாம் இனி மாற்றமுடியாது என்றுதான் சொல்லவேண்டும்.

எனவே சாறிப்பார்ட்டிகளுக்குப் போய் உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதும் மகிழ்வாக இருப்பதும் புலம்பெயர் நாடுகளில் தொடரத்தான் போகின்றது. நானும் சாமத்திய வீடுகளைத் தவிர்ப்பதில்லை என்று எப்போதோ முடிவு எடுத்துவிட்டேன்.

http://www.youtube.com/watch?v=DunKaaqePd8

Edited by கிருபன்

கவனித்துப் பார்த்தீர்களானால் இவர்கள் கிறிஸ்தவர்கள். எனக்குத் தெரிந்த கிறிஸ்தவர்கள் சாமத்திய வீடு செய்வதில்லை. படம் காட்டுவது தவிர இதனைக் கலாச்சாரத்திற்காக இவர் செய்ததுபோல் தோன்றவில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில் இருந்திருந்தால் காவோலை எடுத்து கிடுகு பின்னியிருப்பார்கள். :huh: இந்தப் போர் ஒன்று வந்ததால் ஹெலியில் பறந்து அலைக்கழிகிறார்கள்.. :(:D

 

கலியாணவீட்டுக்கு நீர்வேலியிலையிருந்து குலையோடை வாழை இறக்கின தமிழனுக்கு பச்சைத்தென்னோலை எடுப்பிக்கிறது பெரிய விசயமில்லை. :D
 

என்ன ஒண்டு இப்பிடியான சம்பிரதாயபூர்மமான விசயங்களை செய்யிறவைக்கு அதின்ரை  அடிப்படை தார்ப்பரியங்கள் தெரியாது sign0186.gif  .........இனி அடுத்த சாமத்தியவீடு நீர்மூழ்கி கப்பலிலை...............   tongue4fj_zps3812ed91.gif   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இவர்கள் தமது சொந்தப் பணத்தில் தமது வீட்டு வைபவத்தினைச் செய்கிறார்கள்.அது அவர்களின் விருப்பம், அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தவறைச் சுட்டிக் காட்டலாம் (அது தான் சரியான முறை) , அதைவிடுத்து அவர்களின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி விமர்சிப்பதென்பது  எனது பார்வையில் சரியெனப்படவில்லை. ஆகக்குறந்தது அவர்களது முகங்களையென்றாலும் மறைத்திருக்கலாம்,  இங்கு விருந்த்தினர்களாக வந்திருப்பவர்கள் உட்பட அணைவரும் தெளிவாகத் தெரிகிறார்கள். 
 
இங்கே புலம் பெயர் தேசங்களில்  மக்களிடம் மில்லியன் கணக்கில் மக்களிடம் பணத்தினச் சேர்த்து கோயில்களக் கட்டி ஆன்மிகம் எனும் பெயரில் மிகப் பெருந்த்தொகைப் பணத்தினை வீண‌டிக்கிறார்கள் ,  வாருங்கள் அவற்றில் உள்ள தவறுகளை விவாதிப்போம். ஏனெனில் இங்கே பொது மக்களின் பணம் வீணடிக்கப்ப்டுகிறது.

 

ஆதவன், இங்கு வீடியோவை யாரும் தனிநபர்கள் தரவேற்றி மகிழவில்லை. அந்த வீடியோவை எடுத்த வீடியோ நீறுவனமே தரவேற்றி உலாவவிட்டுள்ளது. இது அக்குடும்பத்தினதோ அல்லது விருந்தினர்களினதோ அனுமதி இல்லாது போடப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

படிப்பறிவில்லாதவனால்தான் இவ்வளவு பணம் சேர்க்க முடியும் என்கிறீர்களா?!  :D

 

என்னைப் பொருத்தளவில்...

'அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்!'

 

இதற்கான பதில் யாயினியின் கருத்திலும் வாத்தியாரின் கருத்திலும் உள்ளது.   நான் "படித்தவன்" என்று குறிப்பிடவில்லை.  "படிப்பறிவில்லாதவன்" என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.  ஏனெனில் படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகள் அல்ல.  யாயினி குறிப்பிட்டதுபோல, உழைத்துப் பெற்ற பணத்தை இப்படி ஒரு நாளில் வீணடிக்க மனம் வராது.   கொண்டாட்டங்கள் செய்வது என்பது வேறு.  ஆனால், இப்படி படம் காட்டி செய்வது என்பது வேறு.  இது படம் காட்ட வேண்டுமென்பதற்காக மட்டுமே செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

 

ஒருசிலர், தாங்கள் கொடுத்ததை வசூலிப்பதற்காகவும் இதனைச் செய்வதுண்டு.    :icon_idea:

பழைய காலங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிடுவதில்லை, பெண் பிள்ளை சாமத்தியப்பட்டவுடன் பெற்றோர் தங்கள் பிள்ளை கல்யாணத்துக்குத் தயார் என்று உற்றார், உறவினர், நண்பர்களுக்குக் காட்டுவதற்காகக் கொண்டாப்பட்டது. (பெண்பார்ப்பதற்கு வசதியாக). இப்ப  dating, living together ...... என்றெல்லாம் போகேக்கை ........

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிடுவதில்லை, பெண் பிள்ளை சாமத்தியப்பட்டவுடன் பெற்றோர் தங்கள் பிள்ளை கல்யாணத்துக்குத் தயார் என்று உற்றார், உறவினர், நண்பர்களுக்குக் காட்டுவதற்காகக் கொண்டாப்பட்டது. (பெண்பார்ப்பதற்கு வசதியாக). இப்ப  dating, living together ...... என்றெல்லாம் போகேக்கை ........

 

 

யாருக்குமே தெரியாமல் சில விடையங்களை பெண் பிள்ளைகள் செய்ய முயற்சிக்கும் போது, பெற்றோர்  தாங்கள் முன் நின்று பல லட்சம் கொட்டி செய்யும் இந்த மாதிரியான விழாக்கள் பறவா இல்ல என்று சொல்ல வாறிங்களா அலையக்கா...ம்ம்ம்..

அலையக்காவுக்கு தான் என்ன சொல்ல வந்தவா என்டது மற‌ந்து போச்சாம். ஒரு "பெக்" அடிச்சிட்டு வந்து விலாவாரியாச் சொல்லுவா.. கொஞ்சம் பொறுங்கோ பிள்ள...   :D

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளிக்கிடுவதில்லை, பெண் பிள்ளை சாமத்தியப்பட்டவுடன் பெற்றோர் தங்கள் பிள்ளை கல்யாணத்துக்குத் தயார் என்று உற்றார், உறவினர், நண்பர்களுக்குக் காட்டுவதற்காகக் கொண்டாப்பட்டது. (பெண்பார்ப்பதற்கு வசதியாக). இப்ப  dating, living together ...... என்றெல்லாம் போகேக்கை ........

 

'என்றெல்லாம் போகேக்கை ........  சாமத்திய வீடெல்லாம் தேவையில்லை'

 

இப்படி சொல்ல வந்தா எண்டு நினைக்கிறன். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'என்றெல்லாம் போகேக்கை ........  சாமத்திய வீடெல்லாம் தேவையில்லை'

 

இப்படி சொல்ல வந்தா எண்டு நினைக்கிறன். :D

இதுக்குத்தான் சொல்றது இடையிடை இசையரசன் வரவேணுமெண்டு. :D

'என்றெல்லாம் போகேக்கை ........  சாமத்திய வீடெல்லாம் தேவையில்லை'

 

இப்படி சொல்ல வந்தா எண்டு நினைக்கிறன். :D

 

 

நன்றி இசை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடியான பாரம்பரியங்களுக்கு  outdoor song எல்லாம் வைக்கினமாமே!!!! உண்மையா????

இப்பிடியான பாரம்பரியங்களுக்கு  outdoor song எல்லாம் வைக்கினமாமே!!!! உண்மையா????

 

 

கு.சா. Youtube பக்கம் போறேல்லைப் போல கிடக்கு.  கிடைத்தற்கரிய படங்களைப் போடும் கு.சா.வுக்கு இவை கண்ணுக்கு அகப்படேல்லையோ   :lol:  :lol:  :lol:

ஏபா எசை...
 
சையிக்கிள் கப்பில கடா வெட்றதல எக்ஸ்பேர்ட் ஆய்ட்டாப்பல....  :wub:  :D
  • கருத்துக்கள உறவுகள்

"பிள்ளை ஆசைப்படுகிறா அதனால செய்யிறம்" என்று இன்னும் எத்தனை நாளைக்கு ஊரை ஏமாத்தப்போகினம்? பிள்ளை ஆசைப்படுகிற எல்லாத்தையும் செய்து கொடுப்பினமா? 16வயது பிள்ளை ஒருத்தனோட வந்து நின்றாலும் இதே பதில் வருமா?  :icon_idea:

 

இது அவரின் தனிப்பட்ட பிரச்சனையல்ல. இது ஒரு சமூகப்பிரச்சனை. இவர்கள் செய்வதை பார்த்து நாளை வெறோருவர் தொடங்குவார். அவரிற்கு அறிவில்லையா என்று கேட்கின்றீர்கள்? ஆம் அவர்களிற்கு அறிவு இல்லை! அனைவருக்கும் ஒரே அறிவும் ஒரே மனமும் இருந்தால் இந்த உலகில் எந்தப்பிரச்சனையும் இல்லை. பலசாலியும் பலவீனமானவர்களும் வாழும் உலகமிது. பலவீனமானவர்களை பலமானவர்கள் தூக்கிவிட வேண்டும். இந்த நிகழ்ச்சி செய்பவர்கள் பணத்தில் பலமானவர்கள. ஆனால் புத்தியில் பலவீனமானவர்கள். முட்டாள்கள் எப்படி இவ்வளவு பணம் சம்மாதிக்க முயும் என்று கேட்கின்றீர்களா? பணம் சம்மாதிப்பதற்கு அறிவு முக்கிய தேவையல்ல. லாட்டரி சீட்டில் பணம் விழுந்தால் அதற்கும் அறிவு காரணமாக முடியாது தானே. 

 

செய்கின்ற எந்த காரியத்திற்கும் ஒரு குறிக்கோள் வேண்டும். இந்த ஆடம்பரத்தில் என்ன குறிக்கோள் என்று செய்பவர்களை கேட்டால் அவர்களிடம் பதில் வராது. காரணம் தங்களின் பண பலத்தை சொந்தங்களிற்கும் ஊரவர்களிற்கும் காட்டுவதே இவர்களின் நோக்கம். இதனை நேரடியாக வெளியில் சொல்ல மாட்டார்கள். இதை தவிர இந்த விழாக்களில் என்ன பலன் அந்த பிள்ளைக்கும் பெற்றோர்களிற்கும் வந்துவிட முடியும்? 

 

மாறாக மொய் எழுதிகின்றேன் என்ற பெயரில் பலர் ஆயிரக்கணக்கான (இப்பொழுதெல்லாம் நூற்றுக்கணக்காக எழுதுவிதில்லை) பணத்தினை கடனாக விழா நடாத்துபவர்களின் தலையில் கட்டிவிட்டு செல்கின்றனர். பணம் வரும் போது கொண்டாட்டம். அதனை திரும்ப கொடுக்கும் போது வரும் திண்டாட்டம் பற்றி இவர்கள் சிந்திக்கவா போகின்றார்கள். 

 

மொத்தத்தில் விழா நடத்தியவர் தூர நோக்கு பார்வையில் ஒரு பெரும் கடனை சுமக்க வேண்டியுள்ளது. விழாக்கு வருபவர்கள் யாராவது மனதாரா வாழ்த்திச்செல்கின்றார்களா என்று கவனியுங்கள்? சாப்பிட்டு முடிக்க முன்னரே மேடையில் ஏறி வரிசையில் நிற்கின்றார்கள். விழா நடத்துபவர்களும் வந்தவர்கள் நேரத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் 4-5 ஆடைகள் மாற்றுவதில் குறியாக நிற்பார்கள் வந்தவர்களை பற்றி இவர்கள் ஏன் சிந்திக்க வேண்டும். ஒரு வகையில் வந்தவர்கள் இவர்களிடம் கடன் வாங்கிய அடிமைகள் அல்லது கடன் கொடுக்க வந்த வியாபாரிகள். யாராக இருந்தாலும் எவ்வளவு நேரம் ஆனாலும் நின்று பணத்தை கொடுத்துவிட்டு தானே செல்ல வேண்டும். 

 

மே 19ஆம் திகதி திருமண விழா செய்தவர்களையும் நவம்பர் 27ஆம் திகதி பிறந்தநாள் விழா செய்தவர்களையும் நான் அறிவேன். ஊரே செத்த வீடாக இருக்கும் போது இவர்கள் மட்டும் விழா கொண்டாடுகிறார்கள் என்றால் இவர்களிடம் போய் எதனை விளங்கவைப்பது? இந்த விழா கொண்டாடியவர்களையும் நான் அப்படி தான் பார்க்கின்றேன்.

 

இப்படியான வெட்டிச்செலவுகளை மிச்சம் பிடித்து இவர்கள் வறுமையில் வாழும் தமிழர்களிற்கு எதுவும் செய்யப்போவதில்லை. ஆனால் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேர்த்துவைக்கலாம். அதுவே அந்த பிள்ளைக்கு செய்யும் தொலைநோக்கு நன்மை. 

 

இவ்வளவு பேசுறியே நீ என்ன பெரிய திறமோ என்று மனதிற்குள் கேட்பது விளங்குது. :D

 

நான் கொண்டாட்டங்களிற்கு போவது குறைவு. நேரம் கிடைத்தால் செல்வதுண்டு. நான் மொய்பணம் வாங்கவில்லை என்பதால் வருகின்ற அனைத்து அழைப்பிதழ்களிற்கும் செல்லவேண்டிய கட்டாயம் இல்லை (மொய்பணம் வாங்கவில்லைல என்பதாலோ என்னவோ எனது திருமணத்தில் பாதி மண்டபம் காலியாகவே இருந்தது). நண்பர்களின் கொண்டாட்டம் என்றால் செல்வதுண்டு. நான் வைக்கின்ற சிறிய மொய்க்கு அதிகமாகவே ஆறுதலாக இருந்து அனைத்த வகையான சாப்பாடுகளையும் சுவைத்துவிட்டு தான் வருவேன். இதை மொய் என்று சொல்வதைவிட நான் சாப்பிட்டதற்கான பில் என்றே சொல்லலாம்.  :lol:

மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் மகிழ்ச்சியாக பொழுதை செலவிடுவது இன்னொரு காரணம். 

 

நான் திருமணம் செய்யும் போது (யாழ்கள கன்னிகளே சோகம் வேண்டாம் :wub: ) எனது அறியாமையால் சில தவறுகள் செய்ததுண்டு. அதற்கு காரணம் எனது முன்னோர்களே. தமிழ் கலாச்சாரம் என்று நான் நினைத்த பலவிடயங்கள் தமிழ் கலாச்சாரமே அல்ல என்பதை பல வருடங்கள் சென்ற பின்னரே அறியமுடிந்தது. எமக்கு முன்னர் விழா செய்தவர்கள் அப்படி செய்யதனால் வந்த வினை இது. பெற்றோர்களும் எமது விருப்பமே என்று விட்டது இன்னொரு காரணம். 

இன்னொரு முறை திருமணம் செய்தால் தவறை திருத்திக்கொள்கின்றேன் :D

 

இப்படியானவர்கள் புதிது புதிதாக சிலவற்றை செய்யும் போது அது காலப்போக்கில் அடுத்த சந்ததிக்கு கைமாறி ஒரு 100வருடங்களில் அதுவே எமது கலாச்சாரம் என்று வந்துவிடும் என்பதே கவலைக்குரிய விடயம். நாம் வாழுகின்ற நாடுகளிற்கேற்றாற்போலும் காலநிலைக்கு ஏற்றாற்போலும் சில விடயங்களை மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இவை இரண்டிற்கும் பொருந்தாத விடயங்களை மாற்றுவதில் தான் பிரச்சனை. 

 

இப்ப புதிசா ஒரு சம்பிரதாயம் வந்திருக்கு. ஒரு பாடலுக்கு  ஆட்டம் போட்டு அதனை வீடியோ எடுத்து விழா மண்டபத்தில் போட்டுக்காட்டுவது. சரி அவர்கள் பணம் அவர்கள் செய்கிறார்கள். ஆனால் சில வேளைகளில் அவர்களை பார்ப்பதற்கே சகிக்கமுடியாமல் இருக்கும். சற்று குண்டான ஒருவர் சற்றும் பொருத்தமில்லாத ஆடைகளை போட்டிருப்பார். கேட்டால் அது விலையுயர்ந்த ஆடையாம். இந்த வீடியோக்களை பார்த்து சிரித்தது தான் அதிகம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு :rolleyes:

 

இந்த வீடியோக்கள் என்றைக்கு சமூக வலைத்தளங்களில் வருகின்றதோ அன்றே இது பொதுவிடயமாகி விடுகின்றது என்பதை இனி என்றாலும் விளங்கிக்கொள்ளுங்கள். 

 

Edited by ஊர்க்காவலன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.