Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள்

Featured Replies

          யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள்

 

  1. ஸ்ரீ சாந்தநாயகி  அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்          டோட்முண்ட்

 Kiefer Str.24 , 42225 Dortmund(Hombruch)

 Tel.:0049 231 72515165, fax: 0049 231 72515166,

 E-mail:info@sivantempel-dortmund.de

www.sivantempel-dortmund.de

   2. ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்                                                                                   ஹம்

Siegenbeckstr.04, 59071 Hamm-Uentrop, 
http://www.amman-tempel-   

 hannover.de,   http://de.webnode.com

   18. ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம்                                                                                        கஸ்ரப்றக்சல்

Wartburg Str.30, 44579 Castrop – Rauxel

   19. ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்                                                                                              கற்றிங்கன்

Bredenschneider Str.119, 45527 Hattingen

02324 27061

   20. ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம்                                                                        முன்சன்கிளப்பாக்

Rudolfstr.5, 41068 Munchengladbach

Tel: 02166  22269

   21. ஸ்ரீ   சித்தி விநாயகர் ஆலயம்                                                                                                        நூறன்பேக்

Huboldstr.103, 90459 Nuernberg

   22. ஸ்ரீ   காமாரி  அம்மன் ஆலயம்                                                                                                                        சால்பாக்

Grubenstr.41,  66280 sulzbach – Altenwald

   23. ஸ்ரீ  சித்தி விநாயகர் ஆலயம்                                                                                                          ஸ்ருட்காட்

Lehmfeld str.18

Bad cannstatt   70178 Stuttgart

   24. விநாயகர் ஆலயம்                                                        ஸ்ருட்காட்

                                               Waiblinger Str. 30,   70372 Stuttgart

                                              Tel: 0711 4703047

   25. ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம்                                                                                                       பேர்லின்

Blaschkoallee. 48, 12347  Berlin

Tel:0306946900

   26. ஸ்ரீ கணேசா இந்து ஆலயம்                                                                                                             பேர்லின்

                                 Sri Ganesha Hindu Temple

                                  Hasenheide 106

                                  10967 Berlin                                                       

   27. ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்                                                                                                     பொன்

Rochusstr.243,53123 Bonn

Tel: 0228 66469

       28. ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் கோவில்                                                                                         கிர்ஸ்கைம் அன்டரெக்

                                      Alleen strasse  18 – 20

                                      73230 Kirchheim under teck

                   

      29. ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம்                                                               ப்றொஸ்கைம்

Sri Nagapoosany Amman Aalayam,

Turnstr. 8A, 75173 Pforzheim

  30.ஸ்ரீ மீனாட்சிஆலயம்                                                                                                                                ப்பாக்நங்

                    Sri Minakshi Tempel,

 Eberhardstr 08,   71522 Backnang

Edited by Sembagan

  • கருத்துக்கள உறவுகள்

அட.... ஜேர்மனில், 30 கோவில்கள் உள்ளதா?
உங்கள் தகவல் திரட்டுக்கு நன்றி செம்பகன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதிலை அரைவாசி கோயிலும் போட்டி பொறாமை கருத்து வேறுபாட்டாலை வந்தது.... :D

  • கருத்துக்கள உறவுகள்

உதிலை அரைவாசி கோயிலும் போட்டி பொறாமை கருத்து வேறுபாட்டாலை வந்தது.... :D

 

அதிலும்... சில நகரங்களில், இரண்டு அம்மன் கோயில், இரண்டு பிள்ளையார் கோயில் இருக்கும் போதே...

ஏன் ஒரே இடத்தில் ஒரே கடவுளை இரண்டு இடத்தில் வைத்திருக்கிறார்கள் என... சந்தேகித்தேன்.

இதுவா... சங்கதி. :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால சாந்தி ஊரில சனம் நிம்மதியாய் குந்த இடம் இல்லை உண்ண வளி இல்லை என்டுறா.இங்கை இப்படி. அரோகரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிலும்... சில நகரங்களில், இரண்டு அம்மன் கோயில், இரண்டு பிள்ளையார் கோயில் இருக்கும் போதே...

ஏன் ஒரே இடத்தில் ஒரே கடவுளை இரண்டு இடத்தில் வைத்திருக்கிறார்கள் என... சந்தேகித்தேன்.

இதுவா... சங்கதி. :rolleyes:  :D

 

இப்ப கொஞ்சம் திருந்திக்கொண்டு வாறாங்கள்.....ஒரே கடவுளை கொண்டுவராமல் வித்தியாசம் வித்தியாசமாய் கடவுளை கொண்டு வாறாங்கள்......எனக்கு தெரிஞ்ச இடத்திலை  அம்மனுக்கு எதிராய் பிள்ளையார் கிட்டடியிலை தனி வீட்டுக்கு வாறாராம்.... :D
 
வேறை ஒரு பகுதி கோல் தேடிக்கொண்டு திரியுதாம்.....ஆனால் என்ன கடவுளை கொண்டுவந்து இருத்துறதெண்டு என்னும் முடிவெடுக்கேல்லை போலை தெரியுது.... :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

 

இப்ப கொஞ்சம் திருந்திக்கொண்டு வாறாங்கள்.....ஒரே கடவுளை கொண்டுவராமல் வித்தியாசம் வித்தியாசமாய் கடவுளை கொண்டு வாறாங்கள்......எனக்கு தெரிஞ்ச இடத்திலை  அம்மனுக்கு எதிராய் பிள்ளையார் கிட்டடியிலை தனி வீட்டுக்கு வாறாராம்.... :D
 
வேறை ஒரு பகுதி கோல் தேடிக்கொண்டு திரியுதாம்.....ஆனால் என்ன கடவுளை கொண்டுவந்து இருத்துறதெண்டு என்னும் முடிவெடுக்கேல்லை போலை தெரியுது.... :D  :lol:

 

 

ஜேர்மனியில் பிள்ளையாருக்கும், அம்மனுக்கும் தான் அதிக கோயில்கள் உள்ளது.

 

ஆஞ்சநேயருக்கு (அனுமான்) கூட கோயில் கட்டியவர்கள், சிவன் கோவிலை மட்டும் ஏன் கட்டமால் இருக்கிறார்கள்.

 

இப்ப... புதுக் கோயில் கட்ட, ஹோல் தேடிக்கொண்டிருக்கிற பகுதியிடம்....

இந்த விஷயத்தை, லைட்டா.... காதிலை, போட்டு விடுங்கோ அண்ணை. :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த அகில உலக ஹிந்தி சீசீ ஹிந்து கலாச்சார மன்றம் எங்க இருக்கு? பட்டியல்ல காணவில்லையே.  :huh: ஏதாச்சும் சாமி குத்தமாகிட போகுது. பி கேர் புல் #மக்கழே!

 

2wtt2be6.jpg

உதெல்லாம் எந்த மூலைக்கு.. அல்லோலூயாவை கணக்கெடுத்தால் 300ஜ தாண்டும்.

  • தொடங்கியவர்

இப்பகுதியில் இணைந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

இப்போது 31 வது    கோவிலின் விபரத்தையும் இணைக்கிறேன். 

றைன் ஈச்வரம்

Rheine iechchuram

Dorfbauerschaft. 30

48493 Wettringen

Edited by Sembagan

  • கருத்துக்கள உறவுகள்

TY

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனில இப்படின்னா.. இங்கிலாந்தில.. லிஸ்ட் யாழில்..  ஒரு 100 பக்கத்துக்குப் போகும் போல.

 

அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட்ட "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பதை மட்டும் தமிழர்கள்.. கச்சிதமாகப் பின்பற்றி வருகிறார்கள்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பக்கம் ராஜராஜ சோழனின் தஞ்சைக் கோயிலைப் பற்றிய பதிவை வாசிச்சிட்டு இங்க வந்தால் குடோன் கோயில்கள் பற்றிய பதிவு. :blink: தகவல்களுக்கு நன்றி செம்பகன்.. :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் பிள்ளையாருக்கும், அம்மனுக்கும் தான் அதிக கோயில்கள் உள்ளது.

 

ஆஞ்சநேயருக்கு (அனுமான்) கூட கோயில் கட்டியவர்கள், சிவன் கோவிலை மட்டும் ஏன் கட்டமால் இருக்கிறார்கள்.

 

இப்ப... புதுக் கோயில் கட்ட, ஹோல் தேடிக்கொண்டிருக்கிற பகுதியிடம்....

இந்த விஷயத்தை, லைட்டா.... காதிலை, போட்டு விடுங்கோ அண்ணை. :D

 

முந்தநாள் கருவேப்பிலை வாங்க கடைக்கு போனனான்....அப்ப இது சம்பந்தமாய் ஓடியாடி முறிஞ்சு வேலை செய்யிற பெடியை கண்டன்....அவன்ரை காதிலை நைசாய் நீங்கள் சொன்ன விசயத்தை ஊதினன்....

அதுக்கு அவன் சொன்னான்....அண்ணை நீங்கள் சொல்லுறது சரிதான் ஆனால் எங்களுக்கு லேடீஸ்மாரை கவர்ந்து இழுக்குறமாதிரி ஒரு தெய்வம் இருந்தால் சொல்லுங்கோ எண்டான்..... :wub:

 

ஆனால் அனுமான் வேண்டாம் எண்டு அடிச்சே சொல்லீட்டான். :D

  • தொடங்கியவர்

எங்களுக்கு லேடீஸ்மாரை கவர்ந்து இழுக்குறமாதிரி ஒரு தெய்வம் இருந்தால் சொல்லுங்கோ எண்டான்..... :wub:

 

 

கிருஸ்ணரைச் சுற்றித்தான் கோபியர்கள். அதனால் கிருஸ்ணர் கோவில் கட்டிப்பாருங்கள். பலன் அளிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த அகில உலக ஹிந்தி சீசீ ஹிந்து கலாச்சார மன்றம் எங்க இருக்கு? பட்டியல்ல காணவில்லையே.  :huh: ஏதாச்சும் சாமி குத்தமாகிட போகுது. பி கேர் புல் #மக்கழே!

 

2wtt2be6.jpg

 

இது ஹம் அம்பாள் ஆலயத்தின் அருகே அம்மன் கோயில் நிர்வாகத்தினால்  நிர்மாணிக்கப்பட இருக்கின்ற ஒரு கலாச்சாரா மண்டபம்

நிதி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் .மக்களிடம் சேகரிக்கப்படும் நிதியில் கட்டப்பட்டாலும்   பின்னர் அதே மக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு இன்னொருமுறை நிதி வசூலித்து அந்தக் கலாச்சார மண்டபத்தின் செலவுகளை நிவர்த்தி செய்வார்களாம் :D

 

  • தொடங்கியவர்

இப்பக்கத்துக்கு வந்து  கருத்தெழுதிய  தமிழ்சிறி,   குமாரசாமி, சுவைப்பிரியன்,   ஊர்க்காவலன், டொங்கி,    நாதமுனி,   நெடுக்ஸ், இசைக்கலைஞன்,   வாத்தியார்  ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

இன்னுமொரு கோவில் ஆகனுக்கும், கோலண்ட்க்கும் இடையில் இருப்பதாகத் தகவல்.  இதனைத் தெரிந்தவர்கள் இதில் இணைத்துவிட்டால் உதவியாக இருக்கும். 

.மேலும் இக்கோவில்களைப் பார்க்கும்போது  சைவசமயம் ஐரோப்பாவை மட்டுமல்ல உலகத்தையே   தன் வளையத்துக்குள் வைத்துள்ளதைக் காணமுடிகிறது.  ஆரம்பகாலத்தில் ஆசிய நாடுகளுக்கு வந்த ஐரோப்பியர்கள் கட்டாய மதமாற்றம் செய்தார்கள். இந்துக்கோவில்களை இடித்து கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டினார்கள். இப்போது புலம்பெயர்ந்து   வந்தவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களை வேண்டி இந்துக் கோவில்களைக் கட்டுகிறார்கள். அதனால் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி  இந்துசமயம்  உலகத்தையே வளைத்துள்ளதைக் காணமுடிகிறது.

                            இந்துசமயம் (சைவம், வைணவம். சாக்கதம் )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மன்காரர் கூடுதலாய் நாய் வளர்க்கிறபடியாலை வைரவர் கோயில் ஒண்டு நான்  துவக்கலாமெண்டு பரவலாய் யோசிக்கிறன்....ஏனெண்டால் வெள்ளையளையும் சேர்த்து  உள்ளுக்கு இழுக்கலாமெண்டு பாக்கிறன்.... :D

 

51.jpg

 
ரக்த ஜுவாலா ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூல கபால பாச டமருகம்
லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் ஸூநவாஹனம்
த்ரிநயனம் ச அனந்தகோலாகலம்
வந்தே பூதபிசாச நாதவடுகம்
க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்...

 

 

 

 

 

ஜேர்மன்காரர் கூடுதலாய் நாய் வளர்க்கிறபடியாலை வைரவர் கோயில் ஒண்டு நான்  துவக்கலாமெண்டு பரவலாய் யோசிக்கிறன்....ஏனெண்டால் வெள்ளையளையும் சேர்த்து  உள்ளுக்கு இழுக்கலாமெண்டு பாக்கிறன்.... :D

 

51.jpg

 
ரக்த ஜுவாலா ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூல கபால பாச டமருகம்
லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் ஸூநவாஹனம்
த்ரிநயனம் ச அனந்தகோலாகலம்
வந்தே பூதபிசாச நாதவடுகம்
க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்...

 

 

 

அப்ப ஒவ்வொரு நாளும் வடைமாலைதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.