Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

Featured Replies

விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள கத்தி படத்துக்கு தன் அமோக ஆதரவைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சீமான். மேலும் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமா உலகில் இது பெரிய ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்பட வில்லை. ஆனால் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் இது பெருத்த அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/seeman-supports-kaththi-sings-lycca-s-next-208046.html
08-seeman54-600.jpg
கத்தி படத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள சீமான், அந்தப் பட நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், லைகா நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார். இந்தப் படத்தில் சிம்பு நடிக்கிறாராம். இது ஏற்கெனவே விஜய், ஜெயம் ரவி போன்றவர்கள் நடிப்பதாக இருந்த பகலவன் படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. லைகாவுக்காக படம் இயக்கும் வாய்ப்பை சீமானுக்குப் பெற்றுத் தந்தவர் ஏ ஆர் முருகதாஸ்தான் என்பது கூடுதல் தகவல்!

Read more at: http://tamil.oneindia.in/movies/news/seeman-supports-kaththi-sings-lycca-s-next-208046.html
  • Replies 177
  • Views 14.4k
  • Created
  • Last Reply

எங்கயோ தவறு நடக்கிறது.. சீமானும், நெடுமாறன் ஐயாவும் ஈழத்தமிழர் எனும் பெயரால்(லைகா-ஈழத்தமிழர்) பிழையாக வழி நடத்தப்படுகிறர்கள்.. இலங்கையின் ஊடுறுவல் தமிழ் நாட்டிற்குள் லைக்கா வழியால் ஊடுறுவியுள்ளது..சீமான் நெடுமாறன் ஐயா அவர்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுத்து தெளிவு படுத்தல் உரியவர்களின் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கயோ தவறு நடக்கிறது.. சீமானும், நெடுமாறன் ஐயாவும் ஈழத்தமிழர் எனும் பெயரால்(லைகா-ஈழத்தமிழர்) பிழையாக வழி நடத்தப்படுகிறர்கள்.. இலங்கையின் ஊடுறுவல் தமிழ் நாட்டிற்குள் லைக்கா வழியால் ஊடுறுவியுள்ளது..சீமான் நெடுமாறன் ஐயா அவர்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுத்து தெளிவு படுத்தல் உரியவர்களின் கடமை.

 

 

முகங்கள் தெரியும் காலமிது

வெளியில் வரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கயோ தவறு நடக்கிறது.. சீமானும், நெடுமாறன் ஐயாவும் ஈழத்தமிழர் எனும் பெயரால்(லைகா-ஈழத்தமிழர்) பிழையாக வழி நடத்தப்படுகிறர்கள்.. இலங்கையின் ஊடுறுவல் தமிழ் நாட்டிற்குள் லைக்கா வழியால் ஊடுறுவியுள்ளது..சீமான் நெடுமாறன் ஐயா அவர்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுத்து தெளிவு படுத்தல் உரியவர்களின் கடமை.

 

சீமான் என்ன மாதிரி என்று, தெரியவில்லை.

ஆனால்... நெடுமாறன் ஐயாவுக்கு, படத்தைப் பற்றி ஒன்று கூறி,

படத்தை இயக்கும் போது... வேறு விதத்தில், எடுத்திருக்கலாம்.

 

நெடுமாறன் ஐயா.. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர், என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

10534443_1460646017528169_61627871963886

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சவின் மகனுடன் நடைபயணம் சென்ற லைக்கா மொபைலின் நிர்வாக இயக்குனர் – ஆதாரங்கள் அம்பலம்.

 

 

இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் லைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பவர் கிரிஸ் ரூட்லி. இதற்கு முன்னதாக இந்த நிறுவனத்தின் இயக்குனராகக் கடமையாற்றிய மிலின்ட் கங்லே என்ற இந்தியர் இந்தப் பதவியிலிருந்தார். லைக்கா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இப்பதவிலிருந்த கங்லேயை கடாசிவிட்டு ரூட்லியைப் பதவியில் நியமித்திருப்பதெல்லாம் எமக்குத் தேவையற்ற விவகாரம். கங்லே பத்துவருடங்களின் பின்னர் பெப்ரவரி மாதம் 14ம் திகதி நிறுவனத்திலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது.

source: http://www.mobilenewscwp.co.uk/2014/04/11/lycamobile-appoints-chris-tooley-to-replace-milind-kangle-as-ceo/

இலங்கை மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டுவதற்காக இலங்கை அரசுடன் லைக்கா ஏற்படுத்திக்கொண்ட ஏமாற்று வியாபார வியாபார நிறுவனமான ஸ்கை நெற்வேர்க் நிறுவனத்தில் கூட கங்லே தான் நிர்வாக இயக்குனர். லைக்கா பரிவாரங்களுடன் சதா வலம்வந்த கங்லே காணாமல் போனதும் ரூட்லி-Chris Tooley- இன் ரூட் கிளியராகி அவர் அதி உச்ச நிலையை அடைந்துள்ளார்.

(Note: தமிழ் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் விஜய் ரீவி என்ற தமிழ் மற்றும் ஆங்கிலக் கொலைச் சாதனத்தைப் பார்த்து ஆட்கொள்ளப்பட்டதால் சோளனின் தமிழில் ஆங்கிலம் புகுந்து விளையாடுவதற்கு மன்னிக்கவும்.)

lyca-director-with-lyca-1-610x372.jpg

கிரிஸ் ரூட்லியும் பணம் சுருட்டுவதற்காக ராஜபக்ச குடும்பம் ஆரம்பித்த ஸ்கை நெற்வேர்க்கின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்து ‘பெருமைகள்’ பெற்றவர். நாமல் ராஜபக்ச என்ற கேவலமான ரவுடியுடன் இணைந்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு ஆங்கிலம் கூறும் நல்லுலகத்திற்குப் ‘பெருமைகள்’ சேர்த்தவரும் இந்த ரூட்லியே! லைக்காவின் இன்றைய பெரியவர் கிரிஸ் ரூட்லிக்கு லண்டனில் நடந்துதிரிய ஒதுக்குப் புறமான இடம் கிடக்காமல் இலங்கைக்குக் ரிக்கட் போட்டு நாமலுடன் நடைப்பயணம் போயிருக்கிறார். லைக்காவில் முக்கிய பதவி வகித்த் போது அந்த நிறுவனம் சார்பாகவே நடைபோட்டிருக்கிறார் ரூட்லி. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடந்த இந்த நடைப்ப்யணத்திற்கு பீபை பிக் வோக் என்று வேறு பேயர் சூட்டி சோளனுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டிவிட்டார்கள்.

lyca-director-with-lyca-4-597x400.jpg

டேவிட் கமரனின் கட்சிக்கு மில்லியன்களை வாரி இறைத்து வரிகொடாமல் வயிறுவளர்த்த லைக்கா, தனது பணத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டி ராஜபக்ச குடும்பத்தையே சுற்றிச் சுற்றி வரும் மர்மத்தை செல்லச் சன்னிதி முருகன் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

நாமல் ராஜபக்சவுடன் நடந்து வந்து அலுவலகத்தில் குந்திய ரூட்லிக்கு வழங்கப்பட்ட பதவி தான் தலைமை நிர்வாக இயக்குனர்.

சேவை செய்கிறோம் என்ற தலைப்பில் எலும்புத் துண்டுகளை அப்பாவி மக்களுக்கு எறிந்துவிட்டு முழு மாட்டையும் சுருட்டிக்கொள்ளும் பல்தேசிய நிறுவனங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு லைக்காவின் சேவையின் தேவையைப் பற்றியும் தெரிந்திருக்கும். மல்ட்டி நாஷனல் கோப்ரட் வியாபாரிகள் என்றால் இப்படித்தான் என்று அமைதியாக இருக்கலாம். இங்கு பிரச்சனை அதுவல்ல, சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் உள்ளே நுளைந்து ராஜபக்ச கிரிமினல் குடும்பத்தோடு இணைந்து குத்தாட்டம் போடக் கோருவதுதான்.

இந்த சிதைப்பின் அடுத்த கட்டம்தான் கத்திக்குத்து. ஏற்கனவே அழிந்து போயிருக்கும் தமிழர் பண்பாட்டின் முன்னேறிய பகுதிகளைக் கூட அழிக்கும் தென்னிந்திய சினிமா கையப்பிடித்து லைக்கா அழைத்து வருகிறது வியப்பிற்கு உரியதல்ல.

namal-rajapaksha-lyca-mobile-1-610x372.j

இதெல்லாம் என்னப்பா என்று கேட்டவர்களுக்கு லைக்காவின் சினிமா மாமாவான ஐங்கரன் நிறுவனத்தின் கருணாகரமூர்த்தி விளக்கம் வேறு அளித்துள்ளார்.லைக்கா குழுமம் இலங்கை விமானப்படை விமானத்தில் உலா வந்ததை மட்டும் ‘தெளிவுபடுத்தியுள்ளார்’. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் இலங்கை சென்று அவர் படித்த முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றோம் என்கிறார். அதுவும் படு பிஸியாகிவிட்டதால் இலங்கை அரச ஹெலிகொப்டரில் பிரயாணம் செய்தோம் என்கிறார். இலங்கை அரசாங்கத்துடன் வியாபாரம் செய்கிறோம் என்பதெல்லாம் வந்தந்தி என்கிறார். அக்கு வேறு, கறள் பிடித்த ஆணி வேறாக புட்டுப்புட்டு வைத்த பின்னரும் கருணாகர மூர்த்தி சென்னையில் இவ்வாறு கூறியுள்ளார்.

lyca-srilanka-llink.jpgகத்தி படம் வந்தால் கப்சிப் ஆகிவிடுங்கள் என்று பழ.நெடுமாறனையும், சீமானையும் கேட்பதற்காக இயக்குனர் முருகதாசும், ஐங்கரன் மாமாவும் மேலுள்ள தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளனர். நடந்த பேச்சுக்களில் நீங்கள் யாருக்கும் பயப்படத்தேவையில்லை என லைக்காவிற்குக் கூறப்பட்டுள்ளதாக ஐங்கரன் கருணாகரமூர்த்தி செவ்வாய் மலர்ந்தருளியுள்ளார்.

ஹெலிக்கொப்டரில் போய் இறங்கியது மட்டுமா பிரச்சனை? லைக்கா இலங்கை அரசாங்கத்துடன் எப்படியெல்லாம் குத்தாட்டம் போடுகிறது என்று பல தடவை கூறப்பட்டுள்ளது. ரூட்லி விவகாரம் ‘பில் இன் த பிளாங்ஸ்’ மட்டும் தான். இனக்கொலையாளி ராஜபக்ச பிரித்தானிய எஜமானர்களால் கொமல் வெல்த் தலைவராக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு லைக்கா பணம் வழங்கியதிலிருந்து தானே பிரச்சனையே தொடங்கியது.

ஈழப் போராட்டம் லைக்காவும் இன்னோரன்ன வியாபாரிகளும் வழங்கும் பணத்தில் வீறு நடை போடுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://tamizl.com/?p=83463

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விஜய் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய இராஜபக்சேவின் இனப்படுகொலை ‘கத்தி’ – தோழர் வன்னியரசு – முழுமையான விபரங்கள் இணைப்பு

 

 

 

நடிகர் விஜய் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய இராஜபக்சேவின் இனப்படுகொலை ‘கத்தி’

“எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் அச்சத்தைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். தங்களது கன்சர்வேட்டிவ் பார்ட்டிக்கு நிதியளிக்கும் முக்கிய நிறுவனமான லைக்கா (LYCA) மொபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் இராஜபக்சேவுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்து எனது அச்சத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இராஜபக்சேவை உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை நானும் எழுப்பியுள்ளேன்.

lyca-warning-by-uk-282x400.jpgதொலைத் தொடர்பு நிறுவனமான லைக்கா மொபைல் 2011ஆம் ஆண்டு தொடங்கி, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 426,292 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும், கடந்த ஜூன் 2012 ‘கார்டியன்’ (Guardian) பத்திரிகையில் கடந்த 3 ஆண்டுகளாக லைக்கா நிறுவனம் அரசுக்கு எந்த வரியும் செலுத்தவில்லை என்று அம்பலப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் இராஜபக்சே உறவினர் நிறுவனத்தில் அதிகப் பங்குகளை வைத்துள்ளது. இராஜபக்சேவின் மைத்துனர் தலைமை தாங்கும் இலங்கை அரசின் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் முன்னுரிமை அளிக்கப்பட்டுச் செயல்படும் நிறுவனமாக லைக்கா ஃப்ளை (LycaFly) உள்ளது.

காமன்வெல்த் உச்சி மாநாட்டையொட்டி நடைபெற்ற காமன்வெல்த் பிசினஸ் போரம்-2013 (Commonwealth Business Forum-2013) மாநாட்டிற்கு ‘கோல்டன் ஸ்பான்சராக’ (Gold Sponsor) லைக்கா நிறுவனம் செயல்பட்டுள்ளது. இராஜபக்சே அரசின் பின்னணியில் இயங்கும் லைக்கா நிறுவனத்திடமிருந்து கன்சர்வேட்டிவ் கட்சி நன்கொடைகளைப் பெற்றிருப்பதால்தான், பலத்த எதிர்ப்புகளையும் மீறி காமன்வெல்த் மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்வதாக அறிவித்திருப்பதில் சந்தேகம் எழுகிறது. இராஜபக்சே அரசுக்கும் லைக்கா மொபைல் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் தாங்கள் எதிர்காலத்தில் மனித உரிமை குறித்து முன்னெடுக்கும் எந்த முடிவுகளும் கேள்விக்குள்ளாக்கப்படும்” இங்கிலாந்து லேபர் பார்ட்டி நாடாளுமன்ற உறுப்பினர் டாம் பிளங்கின்சாப் கடந்த நவம்பர் 18, 2013 அன்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த செய்திதான் இது.

(Source: https://twitter.com/TomBlenkinsop/status/402520867365597184/photo/1)

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம் குறிப்பிட்டுள்ள லைக்கா நிறுவனத்தின் பின்னணி என்ன? அந்த நிறுவனத்தின் இயக்குநர் யார்?

யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர்தான் சுபாஷ்கரன். இவர்தான் இந்த லைக்கா நிறுவனத்தின் இயக்குநர். இவரது தந்தை அல்லிராஜா – தாய் ஞானாம்பிகை. சிங்கள ஒடுக்குமுறைக்கெதிராக விடுதலைப் புலிகளின் போர் வெடித்த பிறகு யாழ்ப்பாணத்தைவிட்டு அகதியாய் நாடுநாடாய்த் திரிந்தவர்தான் இந்த சுபாஷ்கரன். ஆரம்ப காலத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும்போல இவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது, அவர்களைத் தங்க வைப்பதற்கான இடங்களைப் பிடித்துக்கொடுப்பது போன்ற வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். 2003ஆம் ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியரான மிலிந்த் காங்லே உள்ளிட்ட 10 பேரோடு இணைந்து லைக்காடெல் எனும் நிறுவனத்தைத் தொடங்குகிறார். ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்துத் தரப்பு மக்களைக் குறிவைத்துத்தான் இந்த வியாபாரத்தைத் தொடங்குவதாக சுபாஷ்கரன் குறிப்பிடுகிறார்.

lyca-evidence-99-280x400.jpgபின்னர் 6 ஆண்டுகளில் லைக்கா நிறுவனம் 1500 நபர்கள் கொண்ட நிறுவனமாக வலிமைபெற்று, உலகெங்கும் 4000 பணியாளர்களைக் கொண்டு விரிவுபடுத்தப்படுகிறது. லைக்கா மொபைல் (LycaMobile), லைக்கா ஃப்ளை (LycaFly), லைக்கா மணி (LycaMoney), லைக்கா புரொடக்ஷன் (LycaProduction) என்று வகைப்படுத்தி ஐரோப்பிய நாடுகள் முழுக்க நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்குகிறார்கள். இந்நிறுவனத்தின் தலைவராக சுபாஷ்கரனும், துணைத் தலைவராக பிரேம் சிவசாமி என்பவரும், தலைமை செயல் அதிகாரியாக கிறிஸ் தூளி என்பவரும் அதிகாரப்பூர்வமாகச் செயல்பட்டு வருகின்றனர். மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டு ஆளும் கட்சிக்கு 426 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடையாகத் தரும் அளவுக்கு உயர்ந்தது.

இந்த இடத்தில்தான் லேபர் பார்ட்டியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாம், பிரதமர கேமரூனை நோக்கி எழுப்பிய கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கையில் கடந்த 2013 நவம்பரில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. கனடா உள்ளிட்ட பல நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிப்படையாக மறுத்ததோடு, ‘இனப்படுகொலை நடத்திய இலங்கையை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்க வேண்டும்’ என்று கண்டனக் குரல் கொடுத்தன. ஆனால், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன், நான் போரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் செல்கிறேன் என்று அறிவித்துவிட்டு, நேரடியாக போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். இதைத்தான் நாடகம் என்று கூறி டாம் கேள்விக்குள்ளாக்குகிறார்.

லைக்கா நிறுவனம் 426 மில்லியன் பவுண்ட்ஸ் நன்கொடை அளித்ததால்தான் கேமரூன் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டதாக டாம் குற்றம் சுமத்துகிறார்.

காமன்வெல்த் மாநாட்டிற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?

காமன்வெல்த் மாநாட்டுக்கான தேதி அறிவித்தபின் அம்மாநாட்டிற்கான கோல்டன் ஸ்பான்சரை (Gold Sponsor) லைக்கா நிறுவனம்தான் வழங்கியது. காமன்வெல்த் மாநாட்டிற்கு ஸ்பான்சர் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால் அரசியல் அறிவு இல்லாதவர்கள்கூட லைக்கா நிறுவனத்திற்கும் சிங்கள அரசுக்கும் உள்ள உறவைத் தெரிந்துகொள்ளலாம்.

Board of Investment Srilanka (Prince Sponsor), AirTel, Bank of Ceylon, Ceylon Sea Board, John Keells, Sri Lanka Port Authority, Standard Chartered Bank, LycaMobiles (Golden Sponsor), Silver Sponsors: Brandis, Commercial Bank, Hatton National Bank, Mas Holdings, Mack Woods, Lunch Sponsor : Al-Futtaim (AMW), ADB, BDBO Lanka, Central Bank of Srilanka, EY, ILYKA. (Source: http://www.cbcglobal.org/events/details/commonwealth-business-forum-2013#sponsors)

lyca-srilanka-300x175.jpgஇத்தகைய சிங்கள ஸ்பான்சர் நிறுவனங்களுக்கிடையில் கோல்டன் ஸ்பான்சர் வழங்கிய ஒரே நிறுவனம் லைக்கா மட்டுமே. அதுவும் தாமாக முன்வந்து வழங்கிய நிறுவனம் லைக்கா. இவற்றை வைத்துப் பார்க்கும்போது இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டாம் பிளெங்கின்சாப் அவர்களுக்கு மட்டுல்ல, அனைவருக்குமே லைக்கா நிறுவனத்தின் மீது சந்தேகம் எழத்தான் செய்யும்.

sponcer source: http://www.cbcglobal.org/events/details/commonwealth-business-forum-2013

இது மட்டுமல்ல, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நடத்திவரும் பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்-க்கு (British Asian Trust) 1 மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை லைக்கா நிறுவனம் ஸ்பான்சராக வழங்கியது. இந்த ஸ்பான்சரை இந்த டிரஸ்ட்டின் அதிகாரப்பூர்வத் தூதரும் இலங்கை கிரிக்கெட் வீரருமான முத்தையா முரளிதரன் மூலமாக வழங்குகிறார்கள்.

(Source:http://uk-lycamobile.blogspot.in/2012/07/lycamobile-presents-first-instalment-to.html)

murali-lyca-223x200.jpgசரி, லைக்கா நிறுவனத்தை நடத்தும் சுபாஷ்கரன் ஒரு யாழ்ப்பாணத் தமிழர். அவரை வைத்து இராஜபக்சே அரசு இவற்றை எல்லாம் செய்வதன் நோக்கம் என்ன?

காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு முன்பே இலங்கை அரசால் ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது. அக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் இலங்கையில் நடைபெற்ற போருக்குப் பின் பொருளாதாரரீதியாக இலங்கையை எப்படி உயர்த்துவது? பன்னாட்டு வணிகங்களின் முதலீட்டை எப்படி இலங்கைக்குக் கொண்டு வருவது? இலங்கைக்கு முதலீடு செய்வதில் ஏற்படும் அச்சத்தை எப்படிப் போக்குவது? என்கிற அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த 2013 நவம்பர் 12 முதல் 14 நாட்களில் காமன்வெல்த் பிசினஸ் கவுன்சில் (Commonwealth Business Council) கூட்டம் கூட்டப்பட்டது. பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் முக்கிய நிறுவனமாக லைக்காவும் கலந்துகொண்டது. இந்த வணிக மாநாட்டுக்குத்தான் கோல்டன் ஸ்பான்சரை லைக்கா நிறுவனம் வழங்கியது. லைக்கா நிறுவனம் உலகம் முழுக்க வேர் பரப்பியிருப்பதால் இந்நிறுவனத்தை இராஜபக்சே அரசு பயன்படுத்தத் திட்டமிட்டதன்விளைவுதான், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுபாஷ்கரன் நேரடியாக உதவக் களமிறக்கிவிடப்பட்டது.

காமன்வெல்த் பிசினஸ் போரம் 2013 தொடக்கவிழா (Commonwealth Business Forum) தனது தாய் ஞானாம்பிகையின் பேரில் தொடங்கப்பட்ட ஞானம் ஃபவுண்டேஷன் (Gnanam Foundation) மூலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், புத்தளம், திரிகோணமலை மற்றும் வவுனியா மாவட்டத்தில் எந்தத் தொண்டு நிறுவனத்தின் உதவியுமில்லாமல் ஞானம் ஃபவுண்டேஷனே நேரடியாக நலத்திட்ட உதவிகளைச் செய்தது. இதுவரை 2000 மதிவண்டிகள், 2000 தையல் எந்திரங்கள், 10000 மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், சீருடைகள், 5 இலட்சம் பேனா, 5 இலட்சம் பென்சில்கள், மாலை நேர வகுப்புகள், மருத்துவ முகாம்கள், 51 குடும்பங்களுக்கு நிதி உதவிகள், 3000 மில்லியன் பவுண்ட்ஸ் அளவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இத்துடன், தான் படித்த யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்யாலயா பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களுக்கான கல்விச் செலவையும் ஏற்றுள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்டதெல்லாம் இன்னும் கொடுத்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Source:http://www.gnanam-foundation.org/lycas-gnanam-foundations-second-phase-gets-underway-with-rs-3000-million/)

வடக்கு மாகாணத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சரவை, சுபாஷ்கரனை அணுகி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நலத்திட்ட உதவிகளைச் செய்யுமாறு வலியுறுத்தினர். ஆனால், சுபாஷ்கரன் அதற்கு உடன்பட மறுத்துவிட்டு, சிங்கள அரசு மூலமாகவே ஞானம் ஃபவுண்டேஷனின் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருவதால் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இன்றுவரை வடக்கு மாகாண அமைச்சரவை சுபாஷ்கரனோடு தொடர்புகொள்ள முயற்சிசெய்கிறது. ஆனால், அவரோ தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்து வருகிறார்.

lycaa-610x372.jpg

பாதிக்கப்பட்டப் பகுதிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள்கூட அனுமதிக்கப்படாத சூழலில், வடக்கு மாகாண அமைச்சர்களே குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அனுமதி மறுக்கப்படும் சூழலில், சுபாஷ்கரனும் அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் இலங்கை தேசம் முழுக்க சுதந்திரமாகப் போய்வர அனுமதிக்கப்படுவதன் பின்னணி என்ன என்கிற கேள்வி இயல்பாய் எழுகிறது.

வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்திய இராஜபக்சேவைத் தண்டிக்கும் வகையிலும் இலங்கையைத் தனிமைப்படுத்தும் வகையிலும் உலகம் முழுக்கப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் லைக்கா நிறுவனம் முலம் இலங்கையில் தொழில் வளங்களை உருவாக்கவும், தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைக்கவுமான தூதராக சுபாஷ்கரன் செயல்பட்டு வருவதாகவும், மேலும் போருக்குப்பின் யுத்தப்பகுதி உள்ளிட்ட இலங்கையைச் சுற்றிப்பார்க்க லைக்கா நிறுவனம் மூலம் டூரிசம் பேக்கேஜ்களை (Tourism Package) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் லைக்காஃப்ளை (Lycafly) வழங்கி வருகிறது.

(Source:http://www.lycaflyholidays.com/portfolio-view/tour-north-sri-lanka/ and http://www.lycaflyholidays.com/portfolio-view/culture-northeast-sri-lanka/)

lyca5-5-403x400.jpgஇச்செயல் இலங்கை அரசின் போர்க் குற்ற நடவடிக்கைகளை மூடி மறைக்கவும் மறந்து போகவுமான முயற்சியாகக் கருதப்படுகிறது. இத்தகைய இனப்படுகொலையாளியின் பங்காளியாகச் செயல்பட்டுவரும் லைக்கா குழுமத்தின் லைக்கா புரொடக்ஷன்ஸ்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘கத்தி’ திரைப்படத்தைத் தயாரிக்கிறது. தற்போது இத்திரைப்படத்தின் கதை குறித்தோ, அதில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்தோ விவாதமில்லை. மிகப்பெரிய இனப்படுகொலை நடத்தியவருக்குப் பின்னணியாக இருக்கும் சுபாஷ்கரன் இப்படத்தைத் தயாரிப்பது குறித்துத்தான் விவாதங்கள் எழுகின்றன. இதில் இருவேறு கருத்துக்கள் தேவையில்லை. லைக்கா நிறுவனம் முழுக்க முழுக்க இராஜபக்சே அரசின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும், ஐங்கரன் கருணாமூர்த்தியும் முழுப் பூசணிக்காயை அல்ல முழு மலையையே சோற்றில் மறைப்பதுபோல் லைக்கா நிறுவனத்தைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள். அல்லது இராஜபக்சேவின் இரத்தக் கறையைத் துடைக்க முயற்சிக்கிறார்கள். இதுவும் இராஜபக்சேவைக் காப்பாற்றும் ஒரு முயற்சிதான்.

தமிழகத்தில் ஈழ விடுதலைக்காகப் போராடும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளதாக இயக்குநர் முருகதாஸ் பேட்டியளிக்கிறார். இது முற்றிலும் ஏமாற்று வேலை. படுகொலை நடத்திய இரத்தம் தோய்ந்த கரங்களோடு தமிழகத்தில் வணிகம் செய்ய, இராஜபக்சே லைக்கா நிறுவனத்தின் துணையோடு விஜய் – முருகதாஸ் கூட்டணியோடு களம் இறங்கியுள்ளார்கள்.

நாம் என்ன செய்யப் போகிறோம் தமிழர்களே!

lyca4-4.jpg

 

http://tamizl.com/?p=83325

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழருக்காக,  ஒரு வளரும் கட்சியை..... உயர்ந்த நிலைக்கு கொண்டு வர, மிகுந்த பொருளாதாரம் வேண்டும்.
அதற்கு... சீமானிடம் வசதி இல்லாத... நிலையில்,  அவர் லைக்காவுடன் சேர்ந்து அடுத்த படத்தை.... இயக்குவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
இதனை நாம், ஏன் ஆரம்பத்திலேயே.... பெரிது படுத்தி, எமக்கு தமிழகத்திலிருந்து கிடைக்கும் ஆதரவு குரலையும்.... களங்கப் படுத்த வேண்டும்.
சீமானின் படம் வெளியில் வரும் மட்டும்.... பொறுமை காத்தால், நல்லது என நினைக்கின்றேன். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா செய்வது, வியாபாரம்.
அதனை... சீமான்  எமக்காகவும், தனது கட்சியை வளர்ப்பதற்காவும்,

எப்படி, பயன் படுத்துகிறார் என்பதில் தான்.. அவரது கெட்டித்தனம் உள்ளது.
அதில் தோற்றால்.... தனது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை.... சீமான் அறியாதவரல்ல.
 

  • கருத்துக்கள உறவுகள்

லைக்காவில் எனெக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது.

இப்போ பெரிய முதலைகளும் மாட்டுப்பட்டாகி விட்டது

சீமானில் ஈழ விடுதலை முழக்கங்களில் இப்போது எனெக்கு சிறிய சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது.

எங்களுக்காகப் போராடுவது மிகப்பெரிய தியாகம்
ஆனால் எங்களை ஏமாற்ற நினைப்பது படு முட்டாள்த்தனம்


லைக்கா செய்வது, வியாபாரம்.
அதனை... சீமான்  எமக்காகவும், தனது கட்சியை வளர்ப்பதற்காவும்,

எப்படி, பயன் படுத்துகிறார் என்பதில் தான்.. அவரது கெட்டித்தனம் உள்ளது.
அதில் தோற்றால்.... தனது அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை.... சீமான் அறியாதவரல்ல.
 

 

சிறி அண்ணை, 

கட்சியை  வளர்ப்பதற்கு இப்போது லைகாவை நாடுபவர்கள்  நாளை முதல்வராக வருவதற்கு என்னவெல்லாம் செய்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் லைக்காவின் படத்தை இயக்குவது என்பது இலங்கை அரசுக்குப்  
பணம் சமத்தித்துக் கொடுப்பது போன்றது .
சீமானின் இந்தச் செயல் கண்டிக்கப்படவேண்டியதே

  • கருத்துக்கள உறவுகள்

----

சிறி அண்ணை, 

கட்சியை  வளர்ப்பதற்கு இப்போது லைகாவை நாடுபவர்கள்  நாளை முதல்வராக வருவதற்கு என்னவெல்லாம் செய்வார்கள்

 

வாத்தியார்..... சுவர் இருந்தால் தான், சித்திரம் வரையலாம்.

 

அவர் முதலில் தனது கட்சியை.... தமிழகத்தில் பலப் படுத்தினால் தான், அவரது குரல், பலமாக ஒலிக்கும்.

தமிழகத்தில்.....  முதல்வராக ஒருவர், தமிழன் வருவார் என்று, நாம் இப்போது கணித்துக் கூற முடியாது.

 

விடுதலைப் புலிகள் கூட, முள்ளிவாய்க்கால் போர் இறுதிக்கட்டம் வரை...

சீமானுடன் தொடர்பில் இருந்தவர்கள்.அவர் எமக்கு, துரோகம் செய்ய மாட்டார் என நம்புவோம்.

 

நம்பிக்கை தானே.... வாழ்க்கை.

எல்லோரிலும்.... சந்தேகப் பட்டால், எமக்கு குரல் கொடுக்க, ஒருவருமே.... இருக்க மாட்டார்கள். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே ஆனால் எங்களுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறித் தங்கள்
பிழைப்பை நடத்தும் அரசியல்வாதிகளுக்குள் சீமான் வித்தியாசமானவர் என நினைத்தேன். எல்லாம் ஒரே மட்டைகளாகவே இருக்கின்றார்கள்

 



 

நம்பிக்கை தானே.... வாழ்க்கை.

எல்லோரிலும்.... சந்தேகப் பட்டால், எமக்கு குரல் கொடுக்க, ஒருவருமே.... இருக்க மாட்டார்கள். :)

 

 

விடுதலைப் புலிகள் கூட, முள்ளிவாய்க்கால் போர் இறுதிக்கட்டம் வரை...

சீமானுடன் தொடர்பில் இருந்தவர்கள்.அவர் எமக்கு, துரோகம் செய்ய மாட்டார் என நம்புவோம்.

 

 

தலைவருடன் சேர்ந்து நின்று ஒரு படம் எடுத்ததால் அவர் முள்ளிவாய்க்கால் வரைக்கும் (புலிகளுடன்) தொடர்பில் இருந்தார் என்று அர்த்தமா தமிழ்சிறி?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருடன் சேர்ந்து நின்று ஒரு படம் எடுத்ததால் அவர் முள்ளிவாய்க்கால் வரைக்கும் (புலிகளுடன்) தொடர்பில் இருந்தார் என்று அர்த்தமா தமிழ்சிறி?

 

தலைவருடன் நின்று எடுத்த படத்தை, நான் நினைத்து சொல்லவில்லை நிழலி.

தொலை பேசி உரையாடல்களில் இருந்தவர்களைப் பற்றித்தான்.... குறிப்பிட்டேன்.

(கடற்புலிகளின் தலைவர் சூசை அவர்களது, தொலைபேசி உரையாடல் என எண்ணுகின்றேன்)

 

அந்த உரையாடல் இணைப்பு, யாழ்களத்திலும் இணைக்கப் பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், அந்நேரத்திலும் சீமானை, நம்பிக்கையுடன் திரும்பிப் பார்த்தார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருடன் சேர்ந்து நின்று ஒரு படம் எடுத்ததால் அவர் முள்ளிவாய்க்கால் வரைக்கும் (புலிகளுடன்) தொடர்பில் இருந்தார் என்று அர்த்தமா தமிழ்சிறி?

என்ன நக்கலா நிழலி,இறுதி சண்டையின் போது தலைவர் என்ர மண்ணையே உன்னை நம்பித்தான் விட்டிட்டுப்போறன் . என்று சீமானிட்ட சொன்னவராம் ...நீங்க நக்கல் விடுறியல்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான்.. வைகோ.. நெடுமாறன் எல்லாருமே இப்போது எம்மவர்களால்.. சந்தேகிக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டார்கள். :rolleyes::lol:

 

சீமான்.. இப்போதும் புலம்பெயர் ஊடகங்களோடு தொடர்பில் உள்ள ஒருவர். அவரை தொடர்பு கொண்டு.. ஊடகங்கள் சரியான விளக்கத்தை மக்களுக்கு வழங்க வேண்டுமே தவிர.. இச்செய்திகளில் வேறு நோக்கங்களும் இருக்கலாம்.

 

லைகாவின் மகிந்தவுக்கு முண்டுகொடுக்கும்.. செயற்பாடுகள்.. ஊரறிந்த விடயம். அதில் பிரச்சனை இல்லை.

 

ஆனால்.. தமிழக தமிழீழ ஆதரவு சக்திகள் தொடர்பாக.. தமிழ் மக்களிடையே சந்தேகங்களை விதைத்து.. மக்களைப் பிளவு படுத்தி.. ஒற்றுமையைக் குலைத்து.. இன்னும் துருவமாக்கும் நோக்கங்களும் இதில் அடங்கி இருக்கலாம். எனவே இவை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தரும் வரை மக்கள் நிலைமையை உன்னிப்பாக அறிவுபூர்வமாக கவனித்து வருதல் அவசியம்.. :icon_idea:

எங்களுக்கு எப்பவோ தெரிந்தது  சிலருக்கு இப்ப சாடையாக வெளிக்குது  பலருக்கு இன்னமும் விளங்கவில்லை  :icon_mrgreen: .

சதிதிட்டங்கள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படுகின்றன..

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு, நனையுதென்று..... ஓநாய்கள் கண்ணீர் விட்டு அழுதனவாம். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதைத்தான் பலர் சொல்கினம் பொருழாதரப் பலம் தான் எம்மவரை திரும்பி பாக்க வைக்கும் என்று.இப்படியே அவன் இவனை குறை கூறுவதும் துரோகியாக்குவதையும் கொஞ்சம் நிப்பாட்டிப் போட்டு எங்கடை சனத்தின்ரை பொருழாதரத்தை மேம்படுதுர வளியைப் பார்க்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

 

எதற்கும் தீர விசாரித்துவிட்டுப் படத்தை ஆரம்பிக்கச்  சொல்லுங்கள் .

நாங்களும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுதான் இருப்போம் :D

 

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் தீர விசாரித்துவிட்டுப் படத்தை ஆரம்பிக்கச் சொல்லுங்கள் .

நாங்களும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுதான் இருப்போம் :D

சீமானுக்கு நல்லா அல்வா கொடுத்துவிட்டார்கள் என்பதையே நானும் நம்புகிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு நல்லா அல்வா கொடுத்துவிட்டார்கள் என்பதையே நானும் நம்புகிறேன். :D

 

சீமான் (னுக்கு) அல்வா கொடுத்து விட்டார் (கள்)

 

என்ன செய்வது புற்றுக்குள் பல பாம்புகள்

வெளிவந்து கடித்த பின்னரே நாம் உணர்கின்றோம்

கட்சி வளர்க்கப் பணம் வேறு வழியில் திரட்டமுடியாதா ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.