Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கத்தியை எதிர்க்க மாட்டேன்! தமிழகத்தில் லைக்கா இல்லை! லண்டனில் எதிர்ப்பைக் காட்டுங்கள் - சீமான் ஆவேசம்!

seeman_1.png'கத்தி' படத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார். இது குறித்து சீமான் கருத்து வெளியிட்ட போது, "'கத்தி' படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகளோ கருத்துகளோ இருந்தால் அதனை எதிர்க்கிற முதல் ஆளாக நான் தான் இருப்பேன். அந்தப் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் யாரோ கிளப்பும் சர்ச்சைகளுக்காக அந்தப் படத்தை எதிர்க்க நான் ஒன்றும் ஏதும் தெரியாத மூர்க்கன் அல்ல.

தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வெளியான மெட்ராஸ் கபே, இனம் உள்ளிட்ட படங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி எப்படிப் போராடியது என்பது எல்லோருக்குமே தெரியும். 'கத்தி' படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை படம் வெளியான பிறகுதான் அறிய முடியும். படத்தின் கதாநாயகனான தம்பி விஜய்யும் இயக்குநரான தம்பி முருகதாசும் நம்முடைய சொந்தத் தமிழ்ப் பிள்ளைகள்.

படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தைப் பற்றி ஏதேதோ சொல்லி, 'கத்தி' படத்தை சீமான் எதற்கு எதிர்க்கவில்லை எனக் கேட்பது முட்டாள்தனம். என்னை விரல் நீட்டிக் கேட்பவர்கள் எதற்காக எனக்காகக் காத்திருக்க வேண்டும். அவர்களே வீதியில் இறங்கிப் போராட வேண்டியதுதானே. 

எல்லோரும் உசுப்பிவிட்டு ரசிப்பதற்கு நான் என்ன கோயில் காளையா..? ஈழ அழிப்புப் போர் தீவிரமானபோது இலங்கை அரசுக்கான தகவல் தொடர்பு உதவிகளைப் பெரிய அளவில் ஏர்டெல் நிறுவனம் செய்தது. அதனைக் கண்டித்து அந்த நிறுவன சிம்கார்டுகளை நாங்கள் உடைத்தெரிந்தோம். 

ஆனால், அந்த நிறுவனத்தின் விளம்பரத்துக்காக தமிழகத் தொலைக்காட்சிகளும் இதர ஊடகங்களும் எத்தனை நிகழ்ச்சிகளில் ஏர்டெல் நிறுவனத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. இதைக் கண்டிக்க இணையதளப் புரட்சியாளர்கள் எவருக்கும் துணிவில்லையா?

என்னுடைய அடுத்த படத்தை லைக்கா மொபைல் தயாரிக்க இருப்பதாக செய்தி கிளப்பும் இணையதளப் புரட்சியாளர்கள் அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு திரைக்கதை எழுத வந்துவிடலாம். கற்பனைகளுக்கு என்று ஒரு அளவில்லையா? அடுத்த படத்துக்கு வாய்ப்பு கேட்டுத் துண்டு போட்டு வைக்கும் வழக்கம் திரைப்படத்துறைக்கு நான் அறிமுகமான காலத்திலேயே என்னிடத்தில் இருந்தது கிடையாது. 

இப்போதும் இரண்டு வருடங்களாக அண்ணன் கலைப்புலி தாணு என்னைப் படம் பண்ணச் சொல்லி வருகிறார். அப்படியிருக்க அடுத்த நிறுவனத்துக்கு நான் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? எதையாவது வம்படியாகக் கிளப்பிவிட்டால் சீமான் சிலிர்த்துக் கொண்டு கிளம்பிவிடுவார் என யாரும் கனவு காண வேண்டாம். எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது என்பது நானும் என் கட்சியும் முடிவு செய்ய வேண்டிய விசயம்.

'சீமான் எதற்கு ’கத்தி’ படத்தை எதிர்க்கவில்லை?' என பலரும் உசுப்பேற்றுவதற்காக நான் என் சொந்தத் தம்பிகள் மீது பாய முடியாது. லைக்கா மொபைல் நிறுவனம் தமிழகத்தில் இல்லை. அப்படியிருக்க அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்பவர்கள் அந்த நிறுவனம் வர்த்தகத்தை மேற்கொள்ளும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என ஆவேசமாகச் சொன்னார் சீமான்.

நன்றி: உதயன்

  • Replies 177
  • Views 14.4k
  • Created
  • Last Reply

சீமான் இன்னொரு ஜெகத்கஸ்பார் என்று சொல்லும்போது அங்கின நீ கேபி ஆளா என்று கேட்ட தம்பி பையனை மேடைக்கு அழைக்கிறேன் ..

எல்லோரயையும் நம்புவது தான் தமிழனின் முக்கிய பிரச்சினையே . :D  :D

எனக்கு விளங்காத விசயம் ஒண்டு இருக்கு  இங்கை  குரல் குடுக்கும்  உணர்வாளர்கள்  தெளிவுபடுத்தினால்  மகிழ்ச்சி... 

கேள்வி சீமானை பற்றி இல்லை...   சீமான் ஆதரவு குடுத்த லைக்காவை பற்றி... !! 

இத்தனை வருடமாக  ஆயுதங்களோடை தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்க படைகளோடை   நிண்டு படுகொலைகள் செய்த தமிழ் அமைப்புக்களை  எல்லாம் நாங்கள் சகோதர அமைப்புக்கள் எண்டு ஏற்கவேணும் எண்டும்,   கூட்டமைப்பிலை இணைந்து இருக்கிற அவர்களை எங்கட தலைமையாக ஏற்க வேணும் எண்டு  ஆசை படும் உங்களுக்கு  வியாபார ரீதியில்  அரசாங்கத்தோடை  இணைந்த லைக்காவும் ஒண்றாக தெரிகிறார்களா  இல்லை  அவர்களை விட கேவலமானவர்களா....?? 

கேள்வி விளங்கவில்லை எண்டால் இன்னும் ஒரு வளியிலை கேக்கிறன்....  !! 

அப்பிடி  அரசாங்கத்தோடை இனப்படுகொலையில் பங்கு வகித்த EPDP , PLOTE, போண்ற  அமைப்புக்கள் எல்லாம் சகோதர அமைப்புக்கள் எண்டால்  ஆயுதம் தாங்கி தமிழ் மக்களை வேட்டையாடாத லைக்கா யார்.... ??? 

அப்பிடி அரசாங்கத்தோடை நிண்ட  அமைப்புக்களை புலிகளை சுட்டது (சகோதரபடுகொலை)  தவறு எண்று சொன்ன  ஆக்கள் எல்லாம் இண்டைக்கு லைக்காவுக்கு எதிராக நிற்பது ஆச்சரியம்...!! 

பிரச்சினை இங்கை சீமானை பற்றியது இல்லை  சீமான் ஆதரவு குடுத்த லைக்கா நிறுவனம் தயாரித்த கத்தி படம் பற்றியது எண்டு நினைக்கிறேன்...  

Edited by தயா

மொக்கு கூட்டம் என்று திரும்ப திரும்ப நிரூபிக்க கூடாது .

புலிகள் சுட்டதால் அரசாங்கத்தோடு சேர்ந்ததோ அல்லது அரசாங்கத்தால் சேர்ந்ததால் புலிகள் சுட்டதோ என்றும் கூட தெரியவில்லை .

இலங்கை அரசுடன் புலிகளும் தேன்நிலவு கழித்த காலங்கள் இருக்கு அது ஏன் என்று விளங்கினால் அடுத்த கேள்வி வராது .

மாற்று இயக்கங்களில் வைத்த குற்றங்கள் அனைத்தையும் புலிகளும் காலம் நேரம் வரும்போது செய்யததுதான் உலகம் அவர்களுக்கு படிப்பித்த பாடம் ,

தனது கலியாணத்தின் போது கூட அதை விளங்காதவர் எதை விளங்கிகொள்ளபோகின்றார் .

  • தொடங்கியவர்

தல நீங்கள் இப்படிக்கா அப்படிக்கா கேட்ட கேள்வி விளங்கவேயில்லை....

இங்கு பிரச்னை லைக்கா பற்றி இல்லை....

பிரபாகரனை விட இரண்டு மடங்கு சவுண்டு குடுத்த/குடுக்கும் சீமான்....தமிழர்களை கொன்ற மகிந்த குடும்பம்/இலங்கை அரசோடு கூடி குலாவும் லைக்காவோடு ஏன் சீமான் குழைகிறார் என்பது தான் :) அது தான் தேசியவாதிகள் கேக்குறோமில்ல..இனி எப்படி சீமானை காட்டி நாங்களும் சவுண்டு விடுறது..தமிழ்நாட்டையே புரட்ட வந்த புயல்.....தமிழீழத்தின் முதல் ஜனாதிபதியாக வரவேண்டியவர் இப்படி லயிக்கவுக்கே கவுண்டா????? மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்...

அப்போ இவ்வளவு காலமும் சீமான் விட்ட சவுண்டுக்கு என்ன அர்த்தம் :)

  • தொடங்கியவர்

மொக்கு கூட்டம் என்று திரும்ப திரும்ப நிரூபிக்க கூடாது .

புலிகள் சுட்டதால் அரசாங்கத்தோடு சேர்ந்ததோ அல்லது அரசாங்கத்தால் சேர்ந்ததால் புலிகள் சுட்டதோ என்றும் கூட தெரியவில்லை ....முட்டையில் இருந்து கோழி வந்ததா...கோழியில் இருந்து முட்டை வந்ததா மாதிரி...அவங்க confuse ஆயிடுவாங்க....

இலங்கை அரசுடன் புலிகளும் தேன்நிலவு கழித்த காலங்கள் இருக்கு அது ஏன் என்று விளங்கினால் அடுத்த கேள்வி வராது ....இதெல்லாம் ராஜதந்திரம்.....ஹெலிகாப்டரிலே கோட்டு காத்தாட பறந்ததென்ன...hilton ஹோட்டலில் தான் நிற்போம் என்று அடம் பிடித்ததென்ன... :) :)

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கு கூட்டம் என்று திரும்ப திரும்ப நிரூபிக்க கூடாது .

புலிகள் சுட்டதால் அரசாங்கத்தோடு சேர்ந்ததோ அல்லது அரசாங்கத்தால் சேர்ந்ததால் புலிகள் சுட்டதோ என்றும் கூட தெரியவில்லை .

இலங்கை அரசுடன் புலிகளும் தேன்நிலவு கழித்த காலங்கள் இருக்கு அது ஏன் என்று விளங்கினால் அடுத்த கேள்வி வராது .

புளட், ஈ.பி.டி.பி என்பன ராஜதந்திர ரீதியாக   இலங்கை அரசுடன் சேர்ந்தன. மற்றது என்னவென்றால் லெபனான், லிபியா என பயிற்சிகள் எடுத்த புளட் போன்றவர்கள் இந்தியாவிலும் வடக்கு கிழக்கு பற்றைக்காடுகளிலும் பயிற்சி எடுத்த புலிகளை விரட்ட முடியவில்லையா. தேங்காய் மாங்காய்  களவெடுக்கவும்  மோட்டார்சைக்கிள் ஓடவுமோ லெபனானில் பயிற்சி எடுத்தவர்கள் .  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று இயக்கங்களில் வைத்த குற்றங்கள் அனைத்தையும் புலிகளும் காலம் நேரம் வரும்போது செய்யததுதான் உலகம் அவர்களுக்கு படிப்பித்த பாடம் ,

தனது கலியாணத்தின் போது கூட அதை விளங்காதவர் எதை விளங்கிகொள்ளபோகின்றார் .

காலத்துக்கு ஏற்றால் போல் விதிகளை மாற்றுவது அரசுகள் ,நாடுகள், நிறுவனங்கள் என்பன அடங்கும். ஆரம்பத்தில்  விடுதலை இயக்கத்தை கட்டுக்கோப்பாக வளர்க்க பல இறுக்கமான விதிகள் போடப்பட்டன. இயக்கம் ஓரளவு வளர்ச்சியை அடைந்த பின் போராளிகளும் குறிப்பிட்ட வயதை எட்டியதும் குறிப்பிட்ட காலத்தில் திருமணவிதியை விலக்கினார்கள். 5 வருடம் சேவை செய்தவர்கள் திருமணம் செய்யலாம்  என்றாக்கப்பட்டது. அதை விட்டு விட்டு உமா ஊர்மிளாவுடன் சேர்ந்து ஊடல், கூடலை செய்து விட்டு அதை மறுத்தது எப்படி நியாயமாகும்.? உங்களை தலைவராக்கினால் உமாவுடன் சேர்ந்து ஊடல் கொள்வீர்கள் போல? :icon_mrgreen: மேலும் புலிகளின் கட்டுக்கோப்பை பற்றி  உங்களை போன்றவர்கள் சொல்லி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் உமா போன்றவர்களுக்கு மிண்டு கொடுத்த ஒருவர் தானே நீங்கள். 

முட்டையில் இருந்து கோழி வந்ததா...கோழியில் இருந்து முட்டை வந்ததா மாதிரி...அவங்க confuse ஆயிடுவாங்க....

ராஜதந்திரம்.....ஹெலிகாப்டரிலே கோட்டு காத்தாட பறந்ததென்ன...hilton ஹோட்டலில் தான் நிற்போம் என்று அடம் பிடித்ததென்ன...  :)  :)

பிறேமதாசா மேலே போனதென்ன  :D

ஜெயவர்த்தனாவால் தந்திரமாக அழைக்கப்பட்ட இந்திய இராணுவம் பின்னர் எப்படி திருப்பி போனார்கள்.காலநிலை சரியில்லை என போனார்களாக்கும். :icon_mrgreen:  :icon_mrgreen:

ரொம்ப confuse ஆகி தான் கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமால் "மௌநித்தொமா"? என்ன செஞ்சு என்ன பயன்? அரை கிணறு தாண்டல் தானே....ஸ்ஸ்ஸ் அப்பா முடியல்ல... :)

தமிழீழம் கண்டு..அல்லது தமிழர்களின் பிரச்சனைகளை முடித்திருந்தால் மேலேயுள்ள விடயங்களுக்காக shirt collar ஐ தூக்கி விடலாம்....

பிரேமதாசாவின் காலில் நீங்கள் விழுந்தா ராஜதந்திரம்...மற்றவர்கள் செய்தால் ஏளனம் :)

ராஜீவ் பதவியில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்...இந்திய இராணுவம் இருந்த பொழுது..கடைசியில் சேடம் இழுக்க தொடங்கி விட்டது என்பது பிரேமதாசாவின் காலில் விழுந்த போதே எல்லாருக்கும் விளங்கி விட்டது.. :)

அடைக்கலம் தந்தவர்களுக்கே ஆப்பு வைப்பது தலைவர் style..இது விளங்கிதான் உமாமகேஸ்வரன் பிரிந்தாரோ யாருக்கு தெரியும்...

ஊர்மிலாக்காக தானே தலைவரும் அடிபட்டார்....உமா கட்டினார் என்று இவர் தூக்கி போய் கட்டினார்...

எஜமான் படத்தில் நெப்போலியன் செஞ்ச மாதிரி... :)

Edited by naanthaan

புளட், ஈ.பி.டி.பி என்பன ராஜதந்திர ரீதியாக   இலங்கை அரசுடன் சேர்ந்தன. மற்றது என்னவென்றால் லெபனான், லிபியா என பயிற்சிகள் எடுத்த புளட் போன்றவர்கள் இந்தியாவிலும் வடக்கு கிழக்கு பற்றைக்காடுகளிலும் பயிற்சி எடுத்த புலிகளை விரட்ட முடியவில்லையா. தேங்காய் மாங்காய்  களவெடுக்கவும்  மோட்டார்சைக்கிள் ஓடவுமோ லெபனானில் பயிற்சி எடுத்தவர்கள் .  :icon_mrgreen:  :icon_mrgreen:

எமது எதிரி சிங்கள அரசு என்று மட்டும்தான் என்று நாங்கள் விளங்கிக்கொண்டதன் விளைவுதான் அது..சொந்த சகோதரரகளையே துரோகியாய் பார்த்தவர்களுக்கு அது விளங்காது இன்று காலம் அதை விளக்கிவிட்டது .

புலிதான் எங்கள் எதிரி என்றால் அந்த நேரமே இந்திராநகரில் ஒரு கொலை விழுந்திருக்கும் .

ஓஒ நீங்கள் ஒரு கொலையும் செய்யாத களவெடுக்காத பெண்களை மானபங்கப்படுத்தாத மற்றும் காட்டிக்கொடுக்காத விரல் சூப்பிகள் என நம்புகிறோம். நன்றி வணக்கம். சுளிபுரத்தில் நடத்தப்பட்ட கொலை ஏலியனால் நடாத்தப்பட்டதாக பின்னர் அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்ப்பா.. எவன், எந்த படம் எடுத்தால் என்ன..?

உஙகளுக்கென மிகத தெளிவான பாதை, கொள்கை, அதை நோக்கிய ஒற்றுமையுடனான முனைப்பு இவ்வளவு இழப்புகளுக்குப் பின்னும் பாடம் கற்று, சுதாரிப்பு வரவே போவதில்லையா? :o

கத்தியோ... சித்தியோ..., தெளிவான பார்வை கொள்ள உங்களின் புத்தி எங்கேயப்பு? :icon_idea:

எதிலும் இப்படித்தான் அடித்துக்கொள்வீர்களா? உங்களிலும் பார்க்க, கேவலப்பட்ட தமிழ் நாட்டு தலீவர்கள் பரவாயில்லை போலிருக்கே? :wub:

ஓஒ நீங்கள் ஒரு கொலையும் செய்யாத களவெடுக்காத பெண்களை மானபங்கப்படுத்தாத மற்றும் காட்டிக்கொடுக்காத விரல் சூப்பிகள் என நம்புகிறோம். நன்றி வணக்கம். சுளிபுரத்தில் நடத்தப்பட்ட கொலை ஏலியனால் நடாத்தப்பட்டதாக பின்னர் அறிந்தேன்.

ஈராக்கில் பணியாற்றும் ஒரு அமெரிக்க அதிகாரிக்கு குண்டு வைப்பதற்கும் அமெரிக்க  ஜனாதிபதிக்கு குண்டு வைப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் விளங்காமல் அமெரிக்காவில் இருக்கின்றீர்கள் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

தல நீங்கள் இப்படிக்கா அப்படிக்கா கேட்ட கேள்வி விளங்கவேயில்லை....

இங்கு பிரச்னை லைக்கா பற்றி இல்லை....

பிரபாகரனை விட இரண்டு மடங்கு சவுண்டு குடுத்த/குடுக்கும் சீமான்....தமிழர்களை கொன்ற மகிந்த குடும்பம்/இலங்கை அரசோடு கூடி குலாவும் லைக்காவோடு ஏன் சீமான் குழைகிறார் என்பது தான் :) அது தான் தேசியவாதிகள் கேக்குறோமில்ல..இனி எப்படி சீமானை காட்டி நாங்களும் சவுண்டு விடுறது..தமிழ்நாட்டையே புரட்ட வந்த புயல்.....தமிழீழத்தின் முதல் ஜனாதிபதியாக வரவேண்டியவர் இப்படி லயிக்கவுக்கே கவுண்டா????? மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்...

அப்போ இவ்வளவு காலமும் சீமான் விட்ட சவுண்டுக்கு என்ன அர்த்தம் :)

இங்கை உங்கட பிரச்சினை என்ன...??    சீமான் லைக்காவை எதிர்க்காததா இல்லை காழ்ப்புணர்ச்சியா...?? 

சீமான் லைகாவை எதிர்க்கும் அளவுக்கு   PLOTE , EPDP  போண்ற அமைப்புகளை போல  கடத்தி தமிழ் மக்கள் மீது  லைக்கா  கொலைகளை செய்தனவா...??  அப்படி செய்யப்பட்டு இருந்தால்  பட்டியல் இடுங்கள்... 

ஒருதரப்பில் கொண்ட வெறியின் காரணமாக  அந்த தரப்போடு நேரடியாக மோத பயந்து கொண்டு அரசாங்க நிழலி  நிண்டு அரசாங்க நிகழ்ச்சி நிரலின் படி  புலிகளின் ஆதரவாளர்களை படுகொலை செய்த அமைப்புக்கும்  ஒரு வியாபார நிறுவனத்துக்கும்  நிறைய வித்தியாசம் இருக்கிறது... 

KP கூட  தமிழ் மக்களுக்கு தொண்டு செய்யவே அரசாங்கத்தோடை இணக்கமாக போவதாக காட்டிகொள்கிறார்...  ஆனால்  அதை  அரசாங்கத்தின் காலில் விழுந்து கிடந்து  லைக்கா செய்யுமாக இருந்தால்  கூட நான் வெளிப்படையாக லைக்காவை ஆதரிக்கிறேன்... 

ஒரு நிறுவனமாக லைக்கா  போகும் போது அரசாங்கம் அவர்களை பயன்படுத்துவது போல  உங்களாலை அவர்களை பயன் படுத்த முடியவில்லை என்பதே உண்மை... 

தமிழ் மக்களுக்காக எதையும் செய்யாமல் வெறும் சவடால் விடும் அர்சுண் அண்ணை போண்றவர்களை விட  லைக்கா  உயர்வானவர்கள்... 

எந்த பிரயோசனமும் அல்லாத இந்த தெருச் சண்டையில் இதுவரை பங்கேற்ற உறுப்பினரை ஓய்வெடுக்க அழைக்கிறேன். மீண்டும் Energy tanken செய்து கொண்டு அடுத்த திரியை தெருச்சண்டாக மாற்றுவதற்கு.

மொக்கு கூட்டம் என்று திரும்ப திரும்ப நிரூபிக்க கூடாது .

புலிகள் சுட்டதால் அரசாங்கத்தோடு சேர்ந்ததோ அல்லது அரசாங்கத்தால் சேர்ந்ததால் புலிகள் சுட்டதோ என்றும் கூட தெரியவில்லை .

இலங்கை அரசுடன் புலிகளும் தேன்நிலவு கழித்த காலங்கள் இருக்கு அது ஏன் என்று விளங்கினால் அடுத்த கேள்வி வராது .

வளமை  போல உங்கட அரை வேக்காட்டு தனம் தான் இங்கை  பளிச்சிடுகிறது.. 

புலிகளோடை சண்டை ...   உங்களை உங்களால் காப்பாத்தி கொள்ள முடியவிலை ஆகவே நான் இந்திய இலங்கை நிகழ்ச்சி நிரலுக்குள்  சேர்ந்து கொண்டேன் எண்று சொல்லும் உங்களின் கொள்கை தான் என்ன அண்ணை...  ??? 

உங்களை கூட உங்களால் காப்பாத்தாத போது  தமிழ் மக்களை உங்களாலை எப்படி அண்ணை காப்பாத்த முடியும், அப்படி காப்பாத்த முடியாத ஆயுதங்களை உங்களை புலிகள் கிழே போடச்சொன்னதில் என்ன பிழை.....  ??? 

அப்படி நீங்கள் அரசியலில் விற்பண்ணர்களாக இருந்தால் தமிழ் மக்களின் ஆதரவை எப்படி அண்ணை  நீங்கள் இளந்தீர்கள்...??  தமிழ் மக்களுக்காக நீங்கள் சாதிக்க முனைஞ்சது எது...?  இணக்க அரசியலா.??  இல்லை ஒட்டுண்ணி அரசியலா..??? 

இது எதுக்கும் நீங்கள் விளக்கம் சொல்லப்போவதில்லை...  ஆகவே நாங்களாக சிலதை புரிந்து கொள்ள வேண்டியதுதான்... 

நேரத்துக்கு நேரம் மாற்றி கொள்ளும் கொள்கை இல்லாமல்  ஆயுதத்தை கையில் வைச்சு இருந்த நீங்கள் ஆபத்தானவை...  

உங்கட சுய லாபத்துக்காக  எதையும் செய்வீர்கள் எண்டது கூட  உங்களின் கூற்று மூனம்  தெளிவாக விளக்கம் தருகிறது... 

உங்களை புலிகள் ஒட்டுண்ணிகள் எண்று அழைத்ததை கூட இப்ப சரியானது எண்டு ஏற்றுக்கொள்கிறீர்கள்....      

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

மேல நான் இணைத்த காணொளியில் வெளிப்படையாய் சொல்லி விட்டார் தான் லைக்காவுக்கு அடுத்த படம் இயக்க வில்லை என்று.....இப்ப தானே ஆளுக்கு ஒரு ஊடகம் வைத்து கற்பனையில் செய்தி எழுதுகிறார்கள்...இரண்டு மூன்று நாளாக ஆதாரம் அற்ற செய்திகள் பரப்பப் படுது....பொறுமை பொறுமை...........

24 மணித்தியாலங்கலாக குதூகலித்தவர்கள் எல்லம் கப் - சிப்

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி படத்தை எதிர்ப்பதற்காககச்' சொல்லப்படும் காரணம் லைக்கா நிறுவனம் சிறிலங்கா அரசுடன்' நெருங்கிச் செயல்படுகின்றது என்பதே.சரி புலம்பெயர்ந்த நாடுகளில் கத்தி படத்தை எதிர்க்க வேண்டும் சொல்பவர்கள் எத்தனைபேர் லைக்கா மோபலை பாவிக்காமல் இருக்கிறீர்கள்?உங்கள் நெங்சைத்தொட்டுச் சொல்லுங்கள்.சரி எல்லோரும் எதிர்க்கும் போது சீமான் மட்டும் எதிர்க்காமல் விட்டால் என்ன நட்டம் வந்து விடப்போகிறது??????சீமானின் அரசியலை முடக்க செய்யும் சதிவலையில் பல உண்மையான தமிழ்உணர்வாளர்கள் தங்களை அறியாமலே விழுந்து விட்டார்கள் போல் தெரிகிறது.இந்தப் பிரச்சினiயில் சீமான் ஒரு தெளிவான முடிவை எடுத்து போட்ட தடைக்கல்லைப் படிக்கல்லாக மாற்றி விட்டார் என்றே எண்ணுகிறேன்.எப்படி?விஜய் தமிழகத்தின் முன்னணியில் உள்ள தமிழ்நடிகர்.மிகப்பலமான சாதிமதபேதமற்ற இரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதுடன் அரசியலில் மனதளவில் நாட்டமுடையவர்.திமுகவுடன் நல்ல உறவில்லை.ஜெயலலிதாவுடனும் நல்ல உறவில்லை.ஆக விஜயை நாம் தமிழர் கட்சியில் இணைப்பதன் மூலம் நாம்தமிழர் கட்சியின் தொண்டர் பலத்தை அதிகரிக்கலாம்.முதலில் தேவை ஆள்பலம் அரசியல்அறிவைப் படிப்படியாக ஊட்டலாம்.எம்ஜியாரின் இரசிகர் மன்றங்களே இன்றைய அதிமுக.2009இல் பிழiயான முடிவை எடுத்ததன் மூலம் அடுத்துவரும் தேர்தல்களில் திமுகவும்.காங்கிரசும் மீண்டும் எழமுடியாத படுகுழியில் விழுந்து விட்டன.அவற்றை விழுத்துவதற்கு சீமானின் மேடைப்பேச்சும் முக்கிய காரணம்.அத்துடன் அவர் பலமான அதிமுகவை வைத்தே எதிர்க்கட்சிகளை அழித்திருக்கிறார்.இப்பொழுதுஜெயலலிதாவை எதிர்க்க வேண்டிய சூழல் 2016 தேர்தலில் வரப்போகிறது. வரப்போகிறது.(இதுவரை முள்ளிவாய்க்காவால் அவலம்,3 தமிழர் விடுதலை என்பவற்றில் நெடுமாறன்,வைகேர,சீமான் ஆகியோரின் உழைப்பை ஜெயலலிதாவே அறுவடை செய்திருக்கிறார்)வைகோ அரசியலலில் தனித்து நின்று சாதிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.ஜெயலலிதாவை நம்ப முடியாது.முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த பொழுதும் கூட நாம் அனைவரும் ஜெயலலிதாவின் வெற்றியை வரவேற்றோம்.காரணம் மற்றவர் அவரை விட மோசமானவர்களாய் இருந்தார்கள்.ஆகவே மக்கள் செல்வாக்குள்ள எம்ஜியாரைவைத்து சொல்வாக்குள்ள கலைஞர் வளர்ந்த மாதிரி மக்கள் செல்வாக்குள்ள விஜையை வைத்து சொல்வாக்குள்ள சீமான் வளரட்டும்.படத்தில் தமிழினவிரோதக் கருத்துக்கள் இல்லாதவரை படத்தை எதிர்பது முட்டாள்தனமானது மட்டுமல்ல இலட்சக்கணக்கான தமிழ்இரசிகர்களின் வெறுப்பையும் ஏன்சம்பாதிக்க வேண்டும்?ஏழாம் அறிவில் இயக்குநர்முருகதாசின் வசனங்களும் காட்சிகளும் தமிழினத்துக்குச் சார்பாகத்தானே இருந்தது.முன்பு இப்படித்தான் ஐங்கரன் ஆரம்பித்த எந்திரன் தமிழின வீரோத சண்குழுமத்துக்குக் கைமாறியது போல இதுவும் மாறவேண்டுமா?சீமான் ஒருவர்தான் வளைந்து கொடுக்காமல் எமக்ககக் குரல்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.அதைக் கெடுத்துவிடாதீர்கள்.

ஆனால் இவ்வளவு ஆழமாக சிந்திக்கும் ஆற்றல் எமது தமிழருக்கு இல்லை,கண்டவன் எல்லம் இணையத்தளம் நடத்தி திட்டமிட்டு திசை திருப்ப செய்தி வெளியிடுவான், அதை கண்ணை மூடிகொண்டு நம்ப வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் பையா.. :D தகுந்த நேரத்தில் சரியான பதிலைக் கொடுத்துவிட்டார் சீமான். சீமானே இல்லை என்று சொன்னபிறகும் விக்கிரமன் முன்னர் சொன்னதைப் போட்டுக் காட்டி தனது சின்னப் புத்தியைக் காட்டியுள்ளது Redpix. :huh: விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்பதுபோல.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கத்தி பட விவகாரத்தை வைத்து அண்ணன் சீமான் மீது விமர்சனம் வைப்போர் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய செவ்வி. கட்டாயம் கேளுங்கள்.............................

  • தொடங்கியவர்

இங்கை உங்கட பிரச்சினை என்ன...??    சீமான் லைக்காவை எதிர்க்காததா இல்லை காழ்ப்புணர்ச்சியா...?? 

சீமான் லைகாவை எதிர்க்கும் அளவுக்கு   PLOTE , EPDP  போண்ற அமைப்புகளை போல  கடத்தி தமிழ் மக்கள் மீது  லைக்கா  கொலைகளை செய்தனவா...??  அப்படி செய்யப்பட்டு இருந்தால்  பட்டியல் இடுங்கள்... 

ஒருதரப்பில் கொண்ட வெறியின் காரணமாக  அந்த தரப்போடு நேரடியாக மோத பயந்து கொண்டு அரசாங்க நிழலி  நிண்டு அரசாங்க நிகழ்ச்சி நிரலின் படி  புலிகளின் ஆதரவாளர்களை படுகொலை செய்த அமைப்புக்கும்  ஒரு வியாபார நிறுவனத்துக்கும்  நிறைய வித்தியாசம் இருக்கிறது... 

KP கூட  தமிழ் மக்களுக்கு தொண்டு செய்யவே அரசாங்கத்தோடை இணக்கமாக போவதாக காட்டிகொள்கிறார்...  ஆனால்  அதை  அரசாங்கத்தின் காலில் விழுந்து கிடந்து  லைக்கா செய்யுமாக இருந்தால்  கூட நான் வெளிப்படையாக லைக்காவை ஆதரிக்கிறேன்... 

ஒரு நிறுவனமாக லைக்கா  போகும் போது அரசாங்கம் அவர்களை பயன்படுத்துவது போல  உங்களாலை அவர்களை பயன் படுத்த முடியவில்லை என்பதே உண்மை... 

தமிழ் மக்களுக்காக எதையும் செய்யாமல் வெறும் சவடால் விடும் அர்சுண் அண்ணை போண்றவர்களை விட  லைக்கா  உயர்வானவர்கள்... 

இவ்வளவு நாளும் லைக்காவை எதிர்த்தவர்கள் யாரென்று உங்களுக்கு தெரியாதா? ... யாழில் நிறைய திரிகள் உள்ளன ..அவற்றை  பாருங்கள்....

லைக்கா முகவர்கள் கடைக்கு தொலைபேசி அட்டைகள் விக்க வந்த பொழுது கலைத்தவர்களை பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.