Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்திக்கு சீமான் ஆதரவு.. லைகாவுக்கு அடுத்த படம் இயக்குகிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் சொல்லுவதிலும் நியாயம் இருக்குத்தான் லைக்கா மொபைல் நிறுவனம் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றது என்றால் முதலில் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தான் லைக்கா மொபைல் நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டும்.லண்டனில் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் அனைவருமே லைக்கா மொபைல் Sim card. தான் பயன்படுத்துகின்றோம்.அதன் மூலமே கோடிக்கணக்கான வருமானத்தை நாங்களே லைக்கா மொபைலுக்கு வழங்குகின்றோம் என்பது தான் உண்மை முதலில் லண்டனில் வாழும் ஈழத்தமிழர்கள் லைக்கா மொபைல் நிறுவனத்தை புறக்கணியுங்கள்.......................fb

Edited by பையன்26

  • Replies 177
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கவில்லை.நீங்கள் ஏன் சீமான் கட்டாயம் எதிர்க்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.வைகோ,நெடுமாறன்ஐயா போன்ற யாரும் இதுவிடயத்தில் கருத்துச் சொல்லவில்லை.மாணவர்கள் பேராடட்டும்.அதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் எல்லாத்தையும் வெளிப்படையாய் சொல்லி விட்டார்.... துரோகிகளின் நோக்கம் அவர எப்படியாவது வீழ்த்த வேனும் என்று....பொய் ஒரு காலமும் வென்றது கிடையாது உண்மை ஒரு காலமும் தோத்ததும் கிடையாது..........

காலாகாலம் தமிழ்நாட்டில் பல அரசியல் வாதிகள் ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்து வந்தனர். பலர் உண்மையாக ஈழத்தமிழர் விடயத்தில் அக்கறைப்பட்டனர். எது எப்படியோ தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் பிரச்சனை பேசப்பட்டது. அது ஒருவகையில் ஈழத்தமிழருக்குச் சதகமானதாகவே இருந்தது. எதிர்காலங்களில் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் பிரச்சனையை தவிர்த்து விடுவதே அரசியல் செயற்பாட்டிற்கு நல்லது என்ற நிலையை தோற்றுவிக்கப்படுகின்றது. இது ஒருவகையில் இலங்கை பேரினவாத அரசுக்கு வெற்றிதான். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தாயகத்தில் உள்ள தமிழர்களுக்காக குரல் கொடுப்பது என்பது நடமுறைக்கு சாத்தியமற்றுப்போய் பலவருடங்கள் ஆகிவிட்டது. இனி அது புத்துணர்ச்சி பெற வாய்ப்பும் இல்லை. தமிழ்நாட்டிலும் இவ்றான நிலை தோன்றினால் சிங்களத்திற்கு தலையிடி என்று சொல்ல எதுவும் இல்லை.

புலம்பெயர்ந்தவர்கள் தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்ற வய்க்கல் பட்டறை நாய் போன்றவன். தானும் குரல் கொடுக்கமாட்டான் குரல் கொடுப்பவனையும் விடமாட்டன். எந்த தலமையையும் ஏற்கவும் அனுசரிக்கவும் மாட்டான். இது வரை புலம்பெயர்ந்தவனின் ஒவ்வொரு செயற்பாடும் சிங்களப்பேரினவாதத்திற்கு சார்பாகவே முடிந்துள்ளது அதுபோல்தான் இந்த அச்சுப் பிச்சில்லாத கத்தி படத்திற்கு கத்துவதும்.

எல்லோரும் அல்ல.. ஒரு சிலர்தான் முகநூலிலும், வலைப்பக்கங்களிலும் இந்த வேலையை செய்கிறவர்கள்.  :o வலைப்பக்கத்தின் மேல் வலது மூலையை "x" செய்தவுடன் அவர்களின் கடமைகளும் முடிந்துவிடும். :icon_idea:  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் பணியாற்றும் ஒரு அமெரிக்க அதிகாரிக்கு குண்டு வைப்பதற்கும் அமெரிக்க  ஜனாதிபதிக்கு குண்டு வைப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் விளங்காமல் அமெரிக்காவில் இருக்கின்றீர்கள் . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

ஏலியன் என்றால் என்ன என்று விளங்காமல் கனடாவில் இருக்குறீர்கள். உங்களை  போல் மொக்கு கூட்டத்தால் தான் அநியாயமாக புளட் என்ற இயக்கம் அழிந்தது.  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எப்பவோ தெரிந்தது  சிலருக்கு இப்ப சாடையாக வெளிக்குது  பலருக்கு இன்னமும் விளங்கவில்லை  :icon_mrgreen: .

10537108_687729451313869_126772275477610

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சீமான், போனமுறை வெளிறாடுகளுக்கு வந்தபோது சேர்த்தது போதாது போல.  அதாலை இப்ப சினிமா மூலம் சேர்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டார் போல.  பேசாமல் சினிமாவிலேயே அவர் இருந்திருக்கலாம்.  கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சியிருக்கும்.  அரசியல் என்று வெளிக்கிட்டு இரண்டும் இல்லாமல் இருக்கப் போகிறார்.  

உங்கள் போன்ற ஆட்க்கள் தானே அவருக்கு அள்ளி அள்ளி குடுத்தவை............இப்ப கானாது என்று பின் கதவால் போய் சம்பாதிக்கிறார்.....அவர் நினைத்தால் பல கோடிகள் அவருக்கு நின்ற இடத்திலே கிடைக்கும் அவர் என்டைக்கும் ஜந்து பத்துக்கு ஆசைப் பட்டது கிடையாது......இன்றும் கொண்ட கொள்கையில் அப்படியே இருக்கிறார்.......நீங்கள் எழுதுவது எல்லாம் ஆதாரம் இல்லாத கட்டுக் கதையல்................தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்...........

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநந்தன் ஈழத்தின் இளவரசன்

1 hr ·

கத்தி படம் பற்றி நிறைய பேர் உள்டப்பியில் வந்து எனது நிலைப்பாடு மற்றும் கருத்தை பகிர சொல்லியிருந்தார்கள்.......

அதன் சாராம்சமே இது.

கத்தி படமானது இன்று சகல தமிழர்களுக்கும் ஒரு பாரிய குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளது அல்லது தேவையற்ற தோற்றப்பாடுகளை ஏற்படுத்துகிறது...

இன்று லைக்காவின் உரிமையாளர்களால் மேட்கொள்ளப்படும் வன்னி மண்ணின் அபிவிருத்தி என்பது மிக முக்கியமானதொன்றாகும்

நாங்கள் வெளிநாட்டில் இருந்து அல்லது தமிழகத்தில் இருந்தோ செய்யமுடியாத உதவியை அரசாங்கத்தோடு இணங்கி செல்வதன் ஊடாகவே நமது மக்களுக்கு செய்யமுடியும்

இதற்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் லிபரா போன்றவை பாரிய உதவிகளை மக்களுக்கு செய்கிறது.....

இன்று பல நிறுவனங்கள் அரசாங்கத்தோடு இணைந்தே வன்னிமக்களுக்கான நலத்திட்டங்களை செய்யமுடியும்

இந்தியாவின் ஆர் எஸ் எஸ் இதேபோன்ற உதவிகளை (சிங்கள பிரதேசங்களில்)செய்வது குறிப்பிடத்தக்கது......

மற்றும் வாய் வார்த்தைகள் உணர்ச்சி கொந்தளிப்புகள் மூலம் இக்காலகட்டத்தில் எதையும் செய்துகொள்ள முடியாது....

நாங்கள் இன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டு நிராதவான நிலையில் உடமைகளை இழந்து வாழ்கிறோம் இக்கணத்தில் நமக்கு தேவை உடனடி தேவைகளே

மாறாக இங்கு உணர்ச்சி பொங்கும் அரசியல்வாதிகளின் வார்த்தை அல்ல....

கத்தி படத்தில் தமிழர்களுக்கு எதிரான ஏதும் என்றால் உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் அல்லது முடக்குங்கள்..

ஆனால் என்னைப்பொருத்தவரை முருகதாஸ் விஜய் போன்றோர் அவ்வளவு எதிராளிகள் அல்ல

ஒருநேரத்தில் அஜித் அர்ஜூன் கூட உண்ணாவிரதத்துக்கு வரமாட்டோம் என்று சொன்னதால் அஜித்தின் ஏகன் திரைப்படம் ஐரோப்பாவிலும் தமிழ்நாட்டிலும் பாரிய நட்டத்தை சந்தித்தது நினைவிருக்கட்டும்...

சரி இப்போது தமிழ்நாட்டின் சிலர் இதை தூக்கி பிடிப்பதற்கான காரணம் என்ன

ஆம் சீமான் இதில் எந்தப்பக்கம் என்பது திராவிட மற்றும் முக்கிய அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு

இப்போதைக்கு சீமானை துரோகியாக காட்டுவதன் ஊடாக பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களை உடைப்பது மற்றும் தமிழ்தேசியத்தை திராவிடர்களின் கைக்குள் வைத்துக்கொள்வது...

கடந்த சிலநாட்களாக சீமான் சொல்லியதாக பரப்பப்பட்ட கருத்துக்கள் இதுதான்...

இப்போது புத்தியுள்ள தமிழர்கள் தெளிவாக சிந்திக்கவேண்டிய இடத்தில் உள்ளோம்..

facebook

Edited by பையன்26

காசு வரும் வரைதான் மனிசன் காசு காசு எண்டு பறப்பான். காசு வந்தவுடன், அதுவும் லைக்கா மாதிரி காசு வந்தால், அடுத்த இலக்கு பவர். காசுக்கு பிறகு இது மனிதருக்கு மிக மிக முக்கியமானது. லைக்கா காரருக்கு இது ஐரோப்பாவில் கிடைக்காது, இலங்கையில் இது கிடைக்கும். தமிழ்நாட்டில் திகட்டத்திகட்ட கிடைக்கும்...

லைகாவிற்கு வாழ்த்துக்கள்.

பிகு.

யார் இந்த சீமான் கரக்டர்? இவரால் எமக்கு என்ன உபயோகம்? இவரும் வைகோ போல ஒரு வெத்துவேட்டா? தெரியாமல் கேக்கிறேன். ஆள் என்ன செய்திருக்கிறார் எண்டு எல்லாரும் தூக்கிப்புடித்துகொண்டு ஆடுறியல்...

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்ப்பா.. எவன், எந்த படம் எடுத்தால் என்ன..?

உஙகளுக்கென மிகத தெளிவான பாதை, கொள்கை, அதை நோக்கிய ஒற்றுமையுடனான முனைப்பு இவ்வளவு இழப்புகளுக்குப் பின்னும் பாடம் கற்று, சுதாரிப்பு வரவே போவதில்லையா? :o

கத்தியோ... சித்தியோ..., தெளிவான பார்வை கொள்ள உங்களின் புத்தி எங்கேயப்பு? :icon_idea:

எதிலும் இப்படித்தான் அடித்துக்கொள்வீர்களா? உங்களிலும் பார்க்க, கேவலப்பட்ட தமிழ் நாட்டு தலீவர்கள் பரவாயில்லை போலிருக்கே? :wub:

அண்ணை நீங்கள் வேறை.சனம் இஞ்சை அந்தக்காலத்து எம் ஜி ஆர் எதிர் சிவாஜி அணி பிரித்து விளையாடுகிறார்கள்.இதுக்கு போய் நீங்கள் ரென்சன் ஆகாதையுங்கோ.இந்த இரன்டு அணியாலையும் அங்கை உள்ள வறுமைப்பட்ட சனத்தின்ரை அடுப்பு எரியப் போகப்போவதில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை உங்கட பிரச்சினை என்ன...??    சீமான் லைக்காவை எதிர்க்காததா இல்லை காழ்ப்புணர்ச்சியா...?? 

சீமான் லைகாவை எதிர்க்கும் அளவுக்கு   PLOTE , EPDP  போண்ற அமைப்புகளை போல  கடத்தி தமிழ் மக்கள் மீது  லைக்கா  கொலைகளை செய்தனவா...??  அப்படி செய்யப்பட்டு இருந்தால்  பட்டியல் இடுங்கள்... 

ஒருதரப்பில் கொண்ட வெறியின் காரணமாக  அந்த தரப்போடு நேரடியாக மோத பயந்து கொண்டு அரசாங்க நிழலி  நிண்டு அரசாங்க நிகழ்ச்சி நிரலின் படி  புலிகளின் ஆதரவாளர்களை படுகொலை செய்த அமைப்புக்கும்  ஒரு வியாபார நிறுவனத்துக்கும்  நிறைய வித்தியாசம் இருக்கிறது... 

KP கூட  தமிழ் மக்களுக்கு தொண்டு செய்யவே அரசாங்கத்தோடை இணக்கமாக போவதாக காட்டிகொள்கிறார்...  ஆனால்  அதை  அரசாங்கத்தின் காலில் விழுந்து கிடந்து  லைக்கா செய்யுமாக இருந்தால்  கூட நான் வெளிப்படையாக லைக்காவை ஆதரிக்கிறேன்... 

ஒரு நிறுவனமாக லைக்கா  போகும் போது அரசாங்கம் அவர்களை பயன்படுத்துவது போல  உங்களாலை அவர்களை பயன் படுத்த முடியவில்லை என்பதே உண்மை... 

தமிழ் மக்களுக்காக எதையும் செய்யாமல் வெறும் சவடால் விடும் அர்சுண் அண்ணை போண்றவர்களை விட  லைக்கா  உயர்வானவர்கள்... 

தயா உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்காது.ஆனால் நீங்கள் சொல்வது சரி.ஆனால் ஒரு சின்ன திருத்தம்.அர்யுனுகு மட்டும் இல்லை அவரின் எதிர் கருத்தாளருக்கும் பொருந்தும்.

ஏலியன் என்றால் என்ன என்று விளங்காமல் கனடாவில் இருக்குறீர்கள். உங்களை  போல் மொக்கு கூட்டத்தால் தான் அநியாயமாக புளட் என்ற இயக்கம் அழிந்தது.  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

இதென்னமோ நூற்றுக்கு நூறு உண்மையான கருத்துத் தான்.... :icon_mrgreen:  :D  :icon_mrgreen:  :D  :icon_mrgreen:  :D  :icon_idea:

உங்கள் போன்ற ஆட்க்கள் தானே அவருக்கு அள்ளி அள்ளி குடுத்தவை............இப்ப கானாது என்று பின் கதவால் போய் சம்பாதிக்கிறார்.....அவர் நினைத்தால் பல கோடிகள் அவருக்கு நின்ற இடத்திலே கிடைக்கும் அவர் என்டைக்கும் ஜந்து பத்துக்கு ஆசைப் பட்டது கிடையாது......இன்றும் கொண்ட கொள்கையில் அப்படியே இருக்கிறார்.......நீங்கள் எழுதுவது எல்லாம் ஆதாரம் இல்லாத கட்டுக் கதையல்................தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்...........

 காலம் பதில் சொல்லும்போது உணர்ந்து கொள்ளுங்கள்.  ஐந்து வருடங்களில் உங்களுக்குப் பதில் தானாகக் கிடைத்து விடும்.  அப்போது இந்த யாழும் இருக்கும்.  அப்போது பேசிக் கொள்வோம்.  நன்றி. வணக்கம்.

ரகுநந்தன் ஈழத்தின் இளவரசன்

1 hr ·

கத்தி படம் பற்றி நிறைய பேர் உள்டப்பியில் வந்து எனது நிலைப்பாடு மற்றும் கருத்தை பகிர சொல்லியிருந்தார்கள்.......

அதன் சாராம்சமே இது.

கத்தி படமானது இன்று சகல தமிழர்களுக்கும் ஒரு பாரிய குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளது அல்லது தேவையற்ற தோற்றப்பாடுகளை ஏற்படுத்துகிறது...

இன்று லைக்காவின் உரிமையாளர்களால் மேட்கொள்ளப்படும் வன்னி மண்ணின் அபிவிருத்தி என்பது மிக முக்கியமானதொன்றாகும்

நாங்கள் வெளிநாட்டில் இருந்து அல்லது தமிழகத்தில் இருந்தோ செய்யமுடியாத உதவியை அரசாங்கத்தோடு இணங்கி செல்வதன் ஊடாகவே நமது மக்களுக்கு செய்யமுடியும்

இதற்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் லிபரா போன்றவை பாரிய உதவிகளை மக்களுக்கு செய்கிறது.....

இன்று பல நிறுவனங்கள் அரசாங்கத்தோடு இணைந்தே வன்னிமக்களுக்கான நலத்திட்டங்களை செய்யமுடியும்

இந்தியாவின் ஆர் எஸ் எஸ் இதேபோன்ற உதவிகளை (சிங்கள பிரதேசங்களில்)செய்வது குறிப்பிடத்தக்கது......

மற்றும் வாய் வார்த்தைகள் உணர்ச்சி கொந்தளிப்புகள் மூலம் இக்காலகட்டத்தில் எதையும் செய்துகொள்ள முடியாது....

நாங்கள் இன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டு நிராதவான நிலையில் உடமைகளை இழந்து வாழ்கிறோம் இக்கணத்தில் நமக்கு தேவை உடனடி தேவைகளே

மாறாக இங்கு உணர்ச்சி பொங்கும் அரசியல்வாதிகளின் வார்த்தை அல்ல....

கத்தி படத்தில் தமிழர்களுக்கு எதிரான ஏதும் என்றால் உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் அல்லது முடக்குங்கள்..

ஆனால் என்னைப்பொருத்தவரை முருகதாஸ் விஜய் போன்றோர் அவ்வளவு எதிராளிகள் அல்ல

ஒருநேரத்தில் அஜித் அர்ஜூன் கூட உண்ணாவிரதத்துக்கு வரமாட்டோம் என்று சொன்னதால் அஜித்தின் ஏகன் திரைப்படம் ஐரோப்பாவிலும் தமிழ்நாட்டிலும் பாரிய நட்டத்தை சந்தித்தது நினைவிருக்கட்டும்...

சரி இப்போது தமிழ்நாட்டின் சிலர் இதை தூக்கி பிடிப்பதற்கான காரணம் என்ன

ஆம் சீமான் இதில் எந்தப்பக்கம் என்பது திராவிட மற்றும் முக்கிய அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு

இப்போதைக்கு சீமானை துரோகியாக காட்டுவதன் ஊடாக பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களை உடைப்பது மற்றும் தமிழ்தேசியத்தை திராவிடர்களின் கைக்குள் வைத்துக்கொள்வது...

கடந்த சிலநாட்களாக சீமான் சொல்லியதாக பரப்பப்பட்ட கருத்துக்கள் இதுதான்...

இப்போது புத்தியுள்ள தமிழர்கள் தெளிவாக சிந்திக்கவேண்டிய இடத்தில் உள்ளோம்..

facebook

இதுதான் பையனின் அறிவுவா அந்த ரகுநந்தன் முதலில் ஒரு தமிழனே இல்லை அப்பு அவன் எது எழுதுறான் என்று இங்க கொண்டுவந்து போட்டு இருக்கு சிரிப்பு அடக்க முடில்ல ...

இவன் ஒரு மன்னார் முஸ்லீம் பெடியன் மலேசியாவில் அவுஸ்ரேலியா போக நின்றவன் கப்பலில் அப்பொழுது பல பேரை பழைய புதிய போராளிகளை  நன்கு அறிவான் வசந்தன் என்பவன் பாவித்த பேஸ்புக்கை அவன் இவனிடம் கொடுத்துட்டு போட்டான் கனடாக்கு அந்த ஐடியை வைத்து இவன் எழுதுறான் ..இவனின் முக்காவீத பதிவு இந்துவத்தை எதிர்ப்பது மட்டுமே இருக்கும் ...

மிகுதி நாம் தமிழரின் லைக்கை குறிவைத்து இருக்கும் இவனுக்கு வேணும் லைக் ஒழிய உள்ளதாம் தேவையில்லை இன்றைய நிலையில் என்ன எழுதினா லைக் விழும் என்பதும் அரைவாசி பதிவுகள் கொப்பி பண்ணி பெஸ்பன்னுவதுமே இவன்தான் எழுதுறான் என்றுதான் அங்கு பலர் நினைச்சு இருக்கினம் பையா முதல் ஒருவன் சுயமான ஆளா என்று பாருங்க அப்புறம் பேசலாம் அவர்களின் கருத்தில் பற்றி .

ரகுவின் பொழுது போக்கே தமிழரை கோர்த்து விட்டு விடுப்பு பார்ப்பதுதான் அவன் எங்காவது நாகரிகமா கருத்து எழுதி இருக்க்கிறான என்று ஒரு கருத்து இங்க கொண்டுவந்து போடுங்க பார்ப்பம் ..

எல்லாம் அவனே ..இவனே ..பு ..சு ..தான் .

Seenivasan Shan

"Lyca Mobile" ஐ எதிர்க்க வேண்டுமா??? அது வியாபாரம் செய்யும் லண்டன், ஐரோப்பா நாடுகளுக்கு சென்று எதிர்த்து போராட வேண்டும். - அண்ணன் சீமான்

##டவுட்### 

ஆமா அண்ணே, நேத்து சென்னை ல பீச் ஸ்டேஷன் ல எதுக்குண்ணே இஸ்ரேலை எதிர்த்தீங்க??? இஸ்ரேல்ல போய் இல்ல எதிர்த்து இருக்கவேணும்???

பேஸ்புக் .

ஒரு முன்னாள் போராளி எழுதியது 2009 ஆண்டே எவ்வளவு தூர நோக்கு ..

ஈழதமிழர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யவேண்டும் என்று இருந்தால் முதலில் உங்கள் சீமான் என்ற அடையாளத்தை கொண்டு செயற்படுங்கள்,தேசிய தலைமையின் அடையாளத்தை கூட கொண்டு திரிந்து உங்கள் அரசியலிற்கு இலாபம் தேடாதீர்கள்.தேசிய தலைமையை சந்தித்த காலகட்டத்தில் நீங்கள் இந்த புகைப்படங்களை வெளியிட்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாமே அதை விட்டு இன்று அந்த தலைமை மௌனத்தை கடைப்பிடிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை சாட்டாக வைத்துக்கொண்டு ஏன் இந்த ஏமாற்று தந்திரம்.

ஒன்றை மட்டும் எங்களால் புரிந்து கொள்ள முடியும்.,அதாவது நீங்கள் ஊறுவாக்க போகின்ற இந்த நாம் தமிழர் இயக்கம் ஏற்கனவே சாதிய அடையாளங்களை கொண்டு பிரிந்து நிற்கும் தமிழர்களை ஒருபோதும் ஒன்று சேர்க்க போவதில்லை.இது வெறும் உணர்வுள்ள உங்கள் பேச்சுக்கு நீங்களே தேடிக்கொண்ட ஒரு ரசிகர் வட்டமே ஒழிய உங்கள் அரசியல் முத்திரைக்கு கிடைத்த அங்கீகதரமாக இருக்கப்போவதில்லை.அப்படியே உங்களால் உருவாக்கப்பட்டாலும் உங்கள் இந்த அரசியல் முகம் நாளை உங்கள் ஆட்சிக்கும்,உங்கள் சுயநல தேவைகளுக்கும், முண்டுகொடுக்க நீங்களும் ஏதாவது ஒரு கட்சியின் சாக்கடை அரசியலுக்கு கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும்.

து.தயாளன் ..பேஸ்புக் 

31.10.2009

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா..

சுவிசில் நின்றபோது

யாழை  எட்டிப்பார்த்தேன்

இந்தத்திரி  எரிந்து கொண்டிருந்தது...

எவ்வளவு பேர் நேரத்தை வீணாக்ககின்றார்கள்

நல்லவேளை சீமான் தனது நேரத்தை இதற்குவீணாக்கி  பதிலளிக்கவில்லை  என  நினைத்தேன்

அதவும் தற்பொழுது எல்லை  கடந்து

அவரது நேரமும் வீணடிக்கப்பட்டுள்ளது

அவரது கேள்வி  சரியானதே

இப்போ  பிரச்சினை  என்ன?

கத்தியோ

லைக்காவோ  அல்ல

சீமானை  வீழ்த்துவது

வீணடிப்பது...... :(

அந்தவகையில்  வீணடிப்போருக்கும்

விதண்டாவாதம் செய்வோருக்கும்

வாழ்வில் பொதுக்காரியம் எதுவுமே செய்து அனுபவப்படாதோருக்கும்

இது பெரும் வெற்றியே...

அப்புறம் சீமான் அழிக்கப்பட்டதும்

நாங்க  தான் அப்பவே  சொன்னோமே

இப்படி ஆவார் என  எழுதி  பீற்றிக்கொள்ளலாம்

அவ்வளுவு தான்

இதில் தமிழருக்கான லாபம் என்பது சொறிந்து தள்ளுவது மட்டுமே...... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஏற்படுத்தப்படும் குழப்பங்கள் யாவும் மேலும் மேலும் சிங்கள அரசைப் பலப்படுத்தும் முயற்சியே அன்றி வேறு எதுவும் கிடையா....

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சீமான் அவர்கள் நாகரீகம் கற்றுக்கொள்வது முக்கியம்.

ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லையென்றால் அதனை நேரடியாகவே "இதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை" அல்லது "இதற்கு இப்பொழுது பதிலளிக்க முடியாது" என்று சொல்லிவிட்டு விலகலாம். 

அதைவிடுத்து நீ யார், எந்த பத்திரிகை என்றதெல்லாம் ஒரு கட்சியின் தலைவரின் பதவியில் இருப்பவரிற்கு நாகரீகமானதல்ல. கேள்விகளை சந்திக்க விரும்பாவிடின் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் தவிர்ப்பது நல்லது. இவரிற்கு சாதகமான கேள்விகளை மட்டும் தான் அவர்கள் கேட்க வேண்டுமா என்ன?? தன்னைத்தானே தாழ்த்தும் செயல் இது. 

Edited by ஊர்க்காவலன்

காங்கிரசு போன்ற பெரிய தேசியக்கட்சி தலைவர்களடமே நாங்கள் கூறிய நாகரீகம் இல்லை ஊர்க்காவலன். பல காங்கிரசு தலைவர்கள் இதை விட அநாகரீகமாக பத்திரிகையாளர்களிடம் பேசியதை பார்திருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா மொபைலுக்கு காசுகட்டி.. லாச்சப்பலில் இருந்து கடலை போடுற கூட்டம்.. போராட வக்கில்லாமல் இருக்க.. எங்கையோ கிடக்கிற சீமான்.. அவனுங்களுக்கு எதிரா போராடனும் என்று லாச்சப்பலில் இருந்து சவுண்டு வருகுதுன்னா.. அதின்ர நோக்கம் என்ன. குழப்பம் தான். வேற என்ன..!! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசு போன்ற பெரிய தேசியக்கட்சி தலைவர்களடமே நாங்கள் கூறிய நாகரீகம் இல்லை ஊர்க்காவலன். பல காங்கிரசு தலைவர்கள் இதை விட அநாகரீகமாக பத்திரிகையாளர்களிடம் பேசியதை பார்திருக்கின்றேன்.

உண்மை தான்! சீமானிற்கும் காங்கிரசு கட்சிக்கும் வேறுபாடு வேண்டாமா? அவர்கள் அப்படி தானே. அதனால் நானும் அப்படி  இருந்தால் தவறில்லை என்பதும் நாகரீகமற்றது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்! சீமானிற்கும் காங்கிரசு கட்சிக்கும் வேறுபாடு வேண்டாமா? அவர்கள் அப்படி தானே. அதனால் நானும் அப்படி  இருந்தால் தவறில்லை என்பதும் நாகரீகமற்றது தானே.

அண்ணா , அண்ணன் சீமானுக்கு நாகரிகம் நல்லாவே தெரியும் அன்றில் இருந்து இன்று வர அவர் அதையே தான் கடைப் பிடித்து வருக்கிறார்...அந்த ஊடக வியலார் கடுப்பேத்துர மாதிரி கேள்வி கேட்டால் யாருக்கு தான் கோவம் வராது.....விஜயகாந்த்  என்ற அரசியல் வாதிக்கு தான் நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாது.........................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா , அண்ணன் சீமானுக்கு நாகரிகம் நல்லாவே தெரியும் அன்றில் இருந்து இன்று வர அவர் அதையே தான் கடைப் பிடித்து வருக்கிறார்...அந்த ஊடக வியலார் கடுப்பேத்துர மாதிரி கேள்வி கேட்டால் யாருக்கு தான் கோவம் வராது.....விஜயகாந்த்  என்ற அரசியல் வாதிக்கு தான் நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாது.........................

இதற்கு நான் பதில் தருவது திரும்ப திரும்ப பேசுவது போல் ஆகிவிடும். வேறு யாராவது உறவுகள் பதில் தருவார்கள் என நம்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.