Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்குற்ற ஆவணங்களை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சமர்ப்பிக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்குற்ற ஆவணங்களை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சமர்ப்பிக்கலாம்-எம்.எ.சுமந்திரன்

http://youtu.be/Lx1YUwXM84M?list=UUgnFSj7jQffD5V5m05j4dPw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.சபையின் சுயாதீன விசாரணைக் குழுவுக்கு வீடியோ, போட்டோ, ஒலிப்பதிவு என்ற வகையில் ஆதாரங்களை அனுப்பி வைக்க விரும்புபவர்கள் முதலில் மின்னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும். பின்னர் அதற்கான ஒழுங்குகளை அவர்கள் செய்து தருவார்கள். மின்னஞ்சல் மூலம் முறைப்பாடுகளை அனுப்ப : OISL_submissions@ohchr.org உம் அஞ்சல் மூலம் அனுப்ப OISL , UNOG-OHCHR , 8-14 Rue de la Paix , CH - 1211 Geneva 10 , Switzerland ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிடம் கொடுத்தால அவர்கள் அதனைச் சரியான முறையில் கையாளுவார்களா?எப்படியும் சம்பந்தர்,சுமத்திரன் அதை மேற்பார்வையிடுவார்கள்.அவர்கள் அரசாங்கத்துக்கும் நோகாமல் இந்தியாவுக்கும் நோகாமல் திருத்தங்களை மேற்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவார்கள்.எற்கெனவே இனப்படுகொலை என்று நிரூபிப்பது கடினம் என்று நழுவியசுமந்திரனை நினைவில் வையுங்கள்.ஒரு முக்கிய சாட்சியான அனந்தியை ஜெனிவாவில் கலந்து கொண்ட பொழுது பேசவிடாது தடை போட்டவர்கள்தானே.மக்களே நீங்கள் சுயமாகவே உங்கள் நம்பிக்கைக்குரியவர்களின் ஊடாக அனுப்பி வையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க உங்ககிட்ட குடுத்தா நீங்க அதை யார்கிட்ட குடுப்பீங்க,மிஸ்டர் பின்வாசல்

அட இப்டி ஒன்டு இருக்கா :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு ஆரம்பத்தில் ஜெனிவா செல்ல நொண்டிச்சாட்டு கூறியவர்கள். பின்னர்  தன்னையே கொல்ல வந்தவர்கள் புலிகள் என சிறிலங்கா அரசுக்கு  ஜால்ரா போட்டவர்கள். அனந்தியை பேச  விடாது தடுத்தவர்கள். தமிழீழ கொள்கைகையை கை விடுவதாக பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள்., ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை எடுக்க தற்போது ஏதாவது நடவடிக்கை எடுக்கிறார்களா கூட்டமைப்பினர் ? சுமந்திரனின் ஜெனிவாவில் ஒரு அறிக்கை, கனடாவில் ஒரு அறிக்கை. கொழும்பில் ஒரு அறிக்கை. யாழ்ப்பாணத்தில் ஒரு அறிக்கை என எப்படி ஒரு குழப்பகரமான அறிக்கைகளை விடும் நபரை கூட்டமைப்பு உள்வாங்கி உள்ளது ?

கூட்டமைப்பிடம் கொடுத்தால அவர்கள் அதனைச் சரியான முறையில் கையாளுவார்களா?எப்படியும் சம்பந்தர்,சுமத்திரன் அதை மேற்பார்வையிடுவார்கள்.அவர்கள் அரசாங்கத்துக்கும் நோகாமல் இந்தியாவுக்கும் நோகாமல் திருத்தங்களை மேற்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவார்கள்.எற்கெனவே இனப்படுகொலை என்று நிரூபிப்பது கடினம் என்று நழுவியசுமந்திரனை நினைவில் வையுங்கள்.ஒரு முக்கிய சாட்சியான அனந்தியை ஜெனிவாவில் கலந்து கொண்ட பொழுது பேசவிடாது தடை போட்டவர்கள்தானே.மக்களே நீங்கள் சுயமாகவே உங்கள் நம்பிக்கைக்குரியவர்களின் ஊடாக அனுப்பி வையுங்கள்

ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்கள் இப்படித்தான் முட்டையிலை ---பிடுங்கிக்கொன்டுதான் இருப்பார்கள் .சுமந்திரன் புலம்பெயந்து வசதியாக பொழுது போக்குபவர்களுக்கு சொல்லவில்லை .தாயகத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைபுக்கு வாக்களித்த மக்களுக்குத்தான் சொன்னவர் .

ஆனந்தி பால்குடி வவா தானே அவவை தடை போட

தமிழீழ கொள்கைகையை கை விடுவதாக பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள்., 

யாராவது எதிர்த்து சத்தியப்பிரமாணம் எடுக்காமலிருத்தால் சொல்லுங்கோவன் .

கூட்டமைப்பு ஆரம்பத்தில் ஜெனிவா செல்ல நொண்டிச்சாட்டு கூறியவர்கள். பின்னர்  தன்னையே கொல்ல வந்தவர்கள் புலிகள் என சுமந்திரனின் ஜெனிவாவில் ஒரு அறிக்கை, கனடாவில் ஒரு அறிக்கை. கொழும்பில் ஒரு அறிக்கை. யாழ்ப்பாணத்தில் ஒரு அறிக்கை என எப்படி ஒரு குழப்பகரமான அறிக்கைகளை விடும் நபரை கூட்டமைப்பு உள்வாங்கி உள்ளது ?

ஆதாரத்துடன் இணைத்தால் புதிய இணைய வருகையாளருக்கு பயன்தரும் .போலிகளை கட்டாயம் இனம் காட்டவேண்டும் :D

Edited by Gari

கூட்டமைப்பு ஆரம்பத்தில் ஜெனிவா செல்ல நொண்டிச்சாட்டு கூறியவர்கள். பின்னர்  தன்னையே கொல்ல வந்தவர்கள் புலிகள் என சிறிலங்கா அரசுக்கு  ஜால்ரா போட்டவர்கள்.

இதில ஜால்ரா போட்ட என்ன இருக்கு ,உண்மையத்தானே சொன்னார் .

Edited by Gari

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில ஜால்ரா போட்ட என்ன இருக்கு ,உண்மையத்தானே சொன்னார் .

சம்பந்தர் ஒரு ஹமாஸ் தலைவர். :icon_mrgreen: புலிகளால் சுட முடியாமல் போய் விட்டது. இதனை தான் ஜால்ரா  என்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாராவது எதிர்த்து சத்தியப்பிரமாணம் எடுக்காமலிருத்தால் சொல்லுங்கோவன் .

ஆதாரத்துடன் இணைத்தால் புதிய இணைய வருகையாளருக்கு பயன்தரும் .போலிகளை கட்டாயம் இனம் காட்டவேண்டும் :D

அரசியல் தீர்வில் அக்கறை கூட்டமைப்புக்கு இல்லை.

(கொழும்பு)

அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னுக்குப் பின் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர்கள் தமிழ்மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றவகையில் சுமூகமான அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் அக்கறையற்றவர்களாக உள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன கூட்டமைப்பு மீது கண்டனம் வெளியிட்டிருக்கிறார்.

13 ஆவது சட்டத்திருத்தம் அர்த்த மற்றது என்பதனால் நாம் அதனை நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியமை, அவர்களின் இரட்டைத் தன்மை நிலைப்பாட்டைக் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தம் அர்த்தமற்றது என்றும் அதனால் ஆரம்பம் முதலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நிராகரித்தது என்ற கருத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார். சுமந்திரனின் இந்தக் கருத்து ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

நாம் 13ஆவது திருத்தத்தை ஆரம்பம் முதலே அர;த்தமற்றதென்று நிராகரித்திருக்கிறோம் என்று சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ குணவர்தன, இது விடயத்தில் சுமந்திரன் இரட்டைத் தன்மை நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என்று தெரிவி த்துள்ளார்.

இது பற்றி சஜின்வாஸ் குணவர்தன, தாம் சுமந்திரனின் கருத்துக் குறித்து நாடாளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டை கடந்த 17 ஆம் திகதியன்று அறிவிக்கப் போவதாக கூறியிருந்தார். எனினும் நவம்பர் 17 ஆம் திகதியன்று சுமந்திரன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த போதிலும், அவர் நாடாளுமன்ற சபைக்குள் பிரவேசிக்காமல் சஜின்தவாஸ் குணவர்தனவை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டதாக அறிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்புடைய வகையில் ஐக்கியமாக சுமூக தீர்வொன்றைக் காண்பதில் அக்கறை கொண்டிருக்க வில்லை என்று கூறிய சஜின்வாஸ் குணவர்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலதரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார்.

சுமந்திரன் ஒரு கருத்தை கூறும் போது அவரது கட்சித்தலைவர் ஆர் . சம்பந்தன் இன்னுமொரு கருத்தை தெரிவிக்கிறார். தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஓர் உண்மையான ஐக்கியம் ஏற்படும் வரை வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் காண்பது கஷ்டமாக இருக்கு மென்றும் சஜின்வாஸ் குணவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.

ஒரு தடவை சுமந்திரன் 13 ஆவது திருத்தம் அர்த்தமற்றதாக இருப்பதனால் அதனை சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கிவிட வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார். 13 ஆவது சட்டத்திருத்தம் இலங்கையின் சட்டப் புத்தகத்தில் இணைத்திருப்பது அநாவசியமான செயல் என்று அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://emurasu.com/read.php?nid=1353386482#.U-bkwONdX_E

சிங்கள அரசின் அறிக்கையை வைத்து TNA உறுப்பினர்கள் மீது குற்றம் காண்பீர்களாக இருந்தால் உங்கள் அரசியல் அறிவை வியக்கின்றேன் .

அப்பிடியாக இருந்தால் மகிந்த அரசும் ,சர்வதேசமும் புலிகள் மீது முன் வைத்தஇதே குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொல்கிறீங்களா ?

முடிவாக என்ன சொல்லவாறீங்க ,அரசின் பேச்சை கேட்டு நடக்கவேண்டும் என்றீங்களா ?,

சம்பந்தர் ஒரு ஹமாஸ் தலைவர். :icon_mrgreen: புலிகளால் சுட முடியாமல் போய் விட்டது. இதனை தான் ஜால்ரா  என்றேன்.

சம்பந்தரை புலிகள் போட முடிவெடுத்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம் .அப்பிடியாக இருந்தால் ஏன் டக்கியை சுடமுடியாமல் போனது ?சம்பந்தருக்கு ஆயுள் கெட்டியாக இருக்கலாம் .

அப்படியானால் வட கிழக்கு மாகாணசபையில் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த கணேசலிங்கத்தை ஏன் சுட்டவர்கள் ?மற்றவர்களுக்கு மரண பயத்தை உண்டுபண்ண .இவருடைய மகனின் மனைவிதான் வட மாகாண பிரதம செயலாளர் .

ஆகவே சர்ச்சைக்குரிய விடயங்களை தவிருங்கள் .

கூட்டமைப்பிடம் கொடுத்தால அவர்கள் அதனைச் சரியான முறையில் கையாளுவார்களா?எப்படியும் சம்பந்தர்,சுமத்திரன் அதை மேற்பார்வையிடுவார்கள்.அவர்கள் அரசாங்கத்துக்கும் நோகாமல் இந்தியாவுக்கும் நோகாமல் திருத்தங்களை மேற்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவார்கள்.எற்கெனவே இனப்படுகொலை என்று நிரூபிப்பது கடினம் என்று நழுவியசுமந்திரனை நினைவில் வையுங்கள்.ஒரு முக்கிய சாட்சியான அனந்தியை ஜெனிவாவில் கலந்து கொண்ட பொழுது பேசவிடாது தடை போட்டவர்கள்தானே.மக்களே நீங்கள் சுயமாகவே உங்கள் நம்பிக்கைக்குரியவர்களின் ஊடாக அனுப்பி வையுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் அறிக்கையை வைத்து TNA உறுப்பினர்கள் மீது குற்றம் காண்பீர்களாக இருந்தால் உங்கள் அரசியல் அறிவை வியக்கின்றேன் .

அப்பிடியாக இருந்தால் மகிந்த அரசும் ,சர்வதேசமும் புலிகள் மீது முன் வைத்தஇதே குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொல்கிறீங்களா ?

முடிவாக என்ன சொல்லவாறீங்க ,அரசின் பேச்சை கேட்டு நடக்கவேண்டும் என்றீங்களா ?,

உண்மை கசக்கும் தான். யார் சொன்னாலும் உண்மை பொய்யாகாது. சாதாரண பொது மக்களே கதைக்கும் கதை தானே இது. ஆளாளுக்கு ஒரு அறிக்கை என்பது. இந்த பொது அறிவு எனக்கு நிறையவே உண்டு. நான் உங்களை போல் அரசியல் விற்பன்னர் இல்லை. இன்னும் கத்துக்குட்டி தான். மற்றும் படி உண்மையை எங்கிருந்தும் எடுத்துபோடுவேன். முடிந்தால் விவாதித்துப் பாருங்கள்.
 
சர்வதேசம் புலிகள் மீது வைத்த குற்றச்சாட்டு பிழையானது என்பதற்கு பல தடவை கருத்து கூறி  உலகின் இரட்டை வேடத்தை குறிப்பிட்டுள்ளேன். அதே நேரம் புலிகள் பிழை விட்டதையும் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் தான் கூட்டமைப்பு ஓரு தூய அமைப்பு , செய்வதெல்லாம் சரி என விடாக்கண்டனாக உள்ளீர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின்(சம்பந்தர்,சுமத்திரனின்) பேச்சாளர் ஹரி அவர்களேஅவர்கள் இணக்க அரசியல் செய்து இதுவரையில் தமிழ்மக்களுக்கு பெற்றுத் தந்த ஒரு நன்மையைக் குறிப்பிடுங்கள்.இணக்க அரசியல்தால்தான் ஏதாவது நன்மையைப் பெற்றுத்தரலாம் என்று கூறுவார்கள்.தேர்தல் நெருங்க அரசாங்கம் எங்களுக்கு எதுவுமே தரவில்லை என்பார்கள்.பியசேனவை வேட்பாளராக்கி மகிந்தவுக்கு ஒரு ஆசனத்ததை அதிகரித்ததுதான் சம்பந்தரின் அரசியல் சாணக்கியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இப்படியான சுமந்திரனின் துணிவான பேச்சுக்களுக்கும் தலை வணங்குகிறேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின்(சம்பந்தர்,சுமத்திரனின்) பேச்சாளர் ஹரி அவர்களேஅவர்கள் இணக்க அரசியல் செய்து இதுவரையில் தமிழ்மக்களுக்கு பெற்றுத் தந்த ஒரு நன்மையைக் குறிப்பிடுங்கள்.

இணக்க அரசியலை விட்டுவிட்டு உங்கள் எதிர்ப்பு அரசியல் இதுவரையில் தமிழ்மக்களுக்கு பெற்றுத் தந்த ஒரு நன்மையைக் குறிப்பிடுங்கள்.

தீமைகளை மற்றவர்கள் பட்டியல் போட்டு காட்டுவார்கள்.

Jude இங்கு இணக்க அரசியலா? எதிர்ப்பு அரசியலா? என்பதல்ல பிரச்சனை. இரண்டையுமே சமகாலத்தில் மாற மாறி திறமையாக பயன் படுத்துவதற்கு மூலமே இலக்கை அடையலாம். "இணக்க அரசியல்", என்று கூறிக்கொண்டு வாய் மூடி மேற்கொள்ளப்படும் அநீதிகளை எதிர்க்க துணிவின்றி அல்லது எதிர்க்க மனமின்றி காலில் வாழ்த்து வணங்கும் சுயநல அரசியல் செய்வதும் தவறு. எதிர்ப்பு அரசியல் என்று கூறி எல்லாவற்றையும் எதிர்த்து கடும்போக்குடன் செயற்பட்டு போராட்டத்தின் அரப்பணிப்புகளின் பலன்களை அடையாமல் போட்டுடைப்பதும் தவறு. துரதிஷ்டவசமாக இந்த இரண்டுமே தமிழர் போராட்டத்தில் நடைபெற்றது. அதனாலேயே இந்த இரண்டாலும் எந்த நன்மையையும் தமிழர் பெற முடியாமல் போனது.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்பு அரசியலே உலகத்துக்கு தமிழருக்க நடந்த கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.இணக்க அரசியல் அப்படி சர்வதேசம் தமிழ்மக்களுக்கு சார்பாக சிறிய அளவில் சார்பு நிலை எடுத்தால் கூட எங்கள் பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.நீங்கள் பொத்திக் கொண்டு இருங்கள் என்று அவர்கள் வாயை அடக்குவது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் அறிக்கையை வைத்து TNA உறுப்பினர்கள் மீது குற்றம் காண்பீர்களாக இருந்தால் உங்கள் அரசியல் அறிவை வியக்கின்றேன் .

அப்பிடியாக இருந்தால் மகிந்த அரசும் ,சர்வதேசமும் புலிகள் மீது முன் வைத்தஇதே குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொல்கிறீங்களா ?

முடிவாக என்ன சொல்லவாறீங்க ,அரசின் பேச்சை கேட்டு நடக்கவேண்டும் என்றீங்களா ?,

நீங்கள் மட்டும் கூத்தமைப்பு சிங்கள அரசிற்கு காவடி ஆடும்போது பாடின பாட்டைவைத்து புலிகள் மீது குற்றம் சுமத்தலாம். 
எல்லாத்தையும் நீங்கள் மட்டும்தான் செய்யலாம் சொல்லலாம் ...
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரை புலிகள் போட முடிவெடுத்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம் .அப்பிடியாக இருந்தால் ஏன் டக்கியை சுடமுடியாமல் போனது ?சம்பந்தருக்கு ஆயுள் கெட்டியாக இருக்கலாம் .

அப்படியானால் வட கிழக்கு மாகாணசபையில் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த கணேசலிங்கத்தை ஏன் சுட்டவர்கள் ?மற்றவர்களுக்கு மரண பயத்தை உண்டுபண்ண .இவருடைய மகனின் மனைவிதான் வட மாகாண பிரதம செயலாளர் .

ஆகவே சர்ச்சைக்குரிய விடயங்களை தவிருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கு மாகாணசபையில் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த கணேசலிங்கத்தை ஏன் சுட்டவர்கள் ?மற்றவர்களுக்கு மரண பயத்தை உண்டுபண்ண .இவருடைய மகனின் மனைவிதான் வட மாகாண பிரதம செயலாளர் .

தவறான தகவல்! கணேசலிங்கதரை சுட்டது EPRLF, இது அவரின் குடும்பத்துக்கும், ஊருக்கும் (திருமலை) தெரியும். மற்றும் அவரின் மருமகள் யாரும் வட மாகாண சபை செயலாளர் கிடையாது. நீங்கள் சம்பவங்களை தவறாக பதிவிடுகிரீர்.

உங்களுக்கு தெரியவில்லை என்றால் விஜயலட்சுமி ரமேசிடம் தொடர்பு கொண்டு கேளுங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.