Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பார்வை இசை வெளியீடு விழாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு காசு குடுத்து பக்கத்தில நிண்டு படம் எடுத்தவன் எல்லாம் பாவம்இல்ல

http://pisaasukutty.blogspot.in/2014/08/1.html

Edited by sathiri

  • Replies 69
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான சரியாகத்தான் சிந்திக்கிறார்.. ஆனால் அட்டமத்து சனிதான் விடாது போல இருக்கு.. :lol:

சீமான் எந்த தீமையும் செய்யாது இருந்த போதே 3 வருடங்களுக்கு முன்பே இங்கே இதே களத்தில் எத்தனை விசத்தை கொட்டினார்கள்.
இப்படி விஷம் கொட்டுகிறீர்கள் என்று நான் கேட்டதற்கு அடக்கமாக பதில் தருவார்கள்.
 
"நீங்கள் பொறுத்து இருந்து பாருங்கள் சீமான் ஒருநாள் மாறுவார் என்று" 
இந்த விஷங்களை அவர் மாறிய பின்பு நீங்கள் பொறுத்து இருந்து கொட்ட முடியாதா? அப்படி என்று கேட்க தோன்றும் யாரிடமும் அப்படி கேட்டதில்லை. தமிழனின் குணம் நன்கு தெரிந்தவர்களுக்கு பதில் தெரிந்திருக்கும்.
 
1990 இல் யாழ்மாவட்டத்தில் இருந்த புலிகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 500- 600 க்குள்தான் இருந்திருக்கும். புலிகளின் தலைமை செயற்திட்டங்கள் அனைத்தும் முன்னெடுப்பது கடல் போக்குவரத்து 
முக்கிய மருத்துவ பிரிவு. சமையல் உடை சம்மந்த பொறுப்புகள். தொலைதொடர்பு. சமூக கட்டமைப்பு (ஏரியா பொறுப்பாளர்கள்). விடுதலை புலிகள் மக்கள் முன்னணி இவை அனைத்தையும் உள்ளடக்கி கொண்டிருந்த அதே நேரம்.
 
ஆனையிறவு 
பலாலி (வடபகுதி கூட்டுப்படை தலைமையகம்)
காங்கேசன்துறை 
யாழ் கோட்டை 
காரைநகர் கடற்படை முகாம் 
நயினாதீவு  கடற்படை. இவை அனைத்தையும் சுற்றி பாதுகாப்பு காவல் அரண்கள்.
 
இராணுவம் ஒரு சிறிய முன்னேற்றம் செய்தாலும். வன்னியில் இருந்துதான் ஒரு படையணி வரவேண்டும் மிக பெரிய படை அணி  என்பது 30 பேரை மட்டுமே கொண்டிருக்கலாம். அது வந்தால்தான் இராணுவத்தை தடுக்க முடியும். ஊர்கவத்துறையில் இராணுவம் பாரிய தரை இறக்கம் ஒன்றை செய்தது. 
யாரையும் எங்கும் ஆட்டமுடியாத இக்காட்டான நிலை. கிட்டதட்ட செஸ் விளையாட்டில் செக் நிலைமை என்று கொள்ளலாம்.
இப்போ மன்னாரில் இருந்து ஒரு படையணி வன்னியுடன் சேர்ந்து 60 பேர் வரலாம். மண்டைதீவு ஊடாக உள்ளே போகிறார்கள். வட பகுதியின் ஒட்டுமொத்த புலிகளால் அசைக்க கூடிய காய்களாக இருந்தது இந்த  60 மட்டுமே. இவர்கள் போகும்போதே நிலைமை தலை  கீழாக இருந்தது. இவர்கள் உள்ளே போன நோக்கம் இராணுவத்தை  விரட்டுவது அல்ல. தீவு பகுதி புலிகள் அனைவரும் இராணுவத்தின் சுற்றி வளைப்பில் இருந்தார்கள். (பாரிஸில் கொலை செய்யபட்ட பரிதி உட்பட) இவர்களை மீட்கத்தான் உள்ளே போனார்கள்.
2 வது நாள் அவர்களை மீட்டு யாழுக்கு அனுப்பினார்கள். ஆனால் அவர்களுடைய ஒரு படையணி இராணுவத்திற்கு  நடுவில் போய்விட்டது. இப்போது வெறும் 25 போராளிகள் இருந்திருந்தால் போதும் ஒரு தாக்குதலை  செய்து ஒரு உடைப்பை செய்திருக்கலாம். வட பகுதி புலிகளின் ஒட்டுமொத்த ஆட்பலம் அது மட்டுமே. முடிந்தவரை உள்ள சென்றவர்கள் போராடினார்கள். 2 வது நாள் யாரும் தம்மை மீட்க உள்ளே வரவேண்ட்டம்  நிலைமை மோசமாகிவிட்டது நம்மில் சிலர் குப்பி கடித்து விட்டார்கள் நாம் இறுதிவரை முடிந்தளவில்  ஆமியை சுடுவதற்கு முயற்சி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். இப்போ மற்றைய படையணிக்கும்  ஆமிக்கும் மண்டைதீவில் சண்டை தொடங்கி விட்டது. சென்ற 60 பேரில் முதல் நாள் கயபட்டவ்ர்கள்  யாழுக்கு வந்தார்கள். மிகுதி 49 பேர்கள் வீரமரணம் ஆனார்கள்.
புலிகளின் நிலைமயை இப்போது யோசித்து பாருங்கள் ???
இப்போ ஊர் ஊராக வருவார்கள் தமக்கு காவலரண் அமைக்க பங்கர் வெட்டி தரும்படி இளைஞர்களை கேட்பார்கள். அவர்களது வாகனம் வரும் சத்தம் கேட்டால் எல்லோரும் காடுகள் வீடுகளுக்குள் ஓடிவிடுவார்கள். 
அவ்வப்போது பலாலி முகாமில் இருந்து இராணுவம் வெளியேறும். இவர்கள் மரநிழல்களில் கூடி நின்று பேசுவார்கள்  "பெடியள் விடமாட்டாங்கள்". 
 
இப்போதான் சிங்களவன் மிக புத்திசாதுரியமாக சிந்தித்தான். சோனியின் புத்தியை நாடிபிடித்து அறிந்து  புலியின்  தலைமைக்கே ஆப்பு அடிக்க திட்டம் தீட்டினான். திட்டம் வெகு சீரும் சிறப்பும் பெற்று வெற்றி நடை  போட தொடங்கியது. சாவகச்சேரி சந்தை கடை காரர்கள் சிலர் எமக்கேன் தேவை இல்லாத வேலை என்று விட்டு போகமால்  புலிகளை அழைத்து இவர்களுடைய போக்கு சில நாளாக வித்தியாசமாக இருக்கிறது என்று  போட்டு கொடுக்கிறார்கள். அவர்கள் எதிர்பாராத நேரம் இவர்கள் போகிறார்கள். இருந்ததை பார்த்து   அதிர்ந்து  போகிறார்கள். அப்போது தலைவரும் சாவகச்சேரி பகுதியில் ஒரு வீட்டில்தான்  இருந்தார். அந்த ஒரே ஒரு காரணத்தால்  விடயம் முக்கியமான்வர்களால் கையாளபடுகிறது  அப்போதான் புத்துக்குள்   இருந்து  ஒரு பூதமே வெளிபடுகிறது. யாழ்ப்பாணத்தில் 10 வரையிலானவர்களை கைது செய்கிறார்கள். அன்று காலை  பள்ளியில் தொழுகை முடிய சிறுவர்களை அனுப்பிவிட்டு சீரும் சிறப்புமாக திட்டம் பற்றி விவாத்தித்து  இருக்கிறார்கள் மீண்டும் புலிகளுக்கு அதிர்சி வெடியாக இருந்து. அன்று இரவே  முடிவை  எடுக்கிறார்கள்  முஸ்லிம்களை வெளியேற்றுவது என்று. அப்போது யாழில் 25-30 வரையான குடும்பமே  இருந்தது. அவர்கள் இப்போதும் அகதி முகாமில்தான் இருக்கிறார்கள் சிங்கள விளம்பரத்திற்காக.
அவர்களை ஏற்றும்போது நான் அந்த இடத்தில்தான் நின்றேன் 5 லோரிகளில்தான் ஏற்றி அனுப்பினான்ர்கள்.
ஒட்டுமொத்த வடபகுயின் பாதுக்காப்பை அந்த ஒரு செயலால் மட்டுமே உறுதி படுத்த கூடியதாக இருந்தது.
இதை தவிர புலிகளால் வேறு எதையாவது செய்திருக்கலாமா??? என்று  நான் அடிக்கடி யோசிப்பது உண்டு  எனது  அறிவு மட்டமாக இருக்கலாம். சாத்தியமான ஒரே செயல் அதுதான் என்றுதான் எனக்கு தெரிகிரறது.
இன்றும் முஸ்லிம்களுக்கு தமது பிழை தெரியும் அதிகம் அலட்டுவதில்லை.
சும்மா திண்ணையில் கிடந்த தமிழன்தான் முஸ்லிம்கள் பற்றி கத்திக்கொண்டு திரிகிறான்.
அந்த செயல் சரியானது என்று யார் சொன்னார்?? செயும்போதே புலிகளுக்கும் தெரியும் இது பிழை என்று 
வரிபுலி சீருடைகள் அனைத்தும் தைத்து கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் ..... இந்திய இராணுவ காலத்தில் தமக்கு தேவையான  (பெரும்பகுதி )உடைகளை முஸ்லிம்களிடம் இருந்துதான் பெற்றார்கள்.
அந்த காலத்தில் அதை தவிர வேறு வழி அவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லை. வேறு வழிகள் இருந்து இருக்கவும் இல்லை. 
இதை திண்ணையில் கிடந்த சொறிகள் எழுதி தான் தமிழர்களுக்கோ புலிகளுக்கோ பிழை என்று தெரியவேண்டியதில்லை. 
 
சீமானை இன்று இதே கூட்டம் துகில் உரித்து வீதியில் விட இரவு பகலாக வாந்தி எடுத்து திரிகிறது. சீமானை எமக்கு  சாதகமாக மாற்றுவது ஈழதமிழனுக்கு இருக்கும் ஒரே துருப்பு. இந்திய பார்பானிய வெறி பிடித்த ரோ வை மீறி  கருணாநிதியால் கூட வை திறக்க முடியவில்லை. அதற்கு ஊடாகத்தான் சீமான் பயணிக்க வேண்டும். சீமானை துகில் உரிய பார்பான் தேவை இல்லை இவர்களே செவன செய்வார்கள் அதை.
 
மக்கள் மேல் அவளவு கரிசனை அவர்களுக்கு. மக்களுக்கு ஒன்று என்றால் தற்கொலை செய்து விடுவார்கள்.
வணக்கம் மருதங்கேணி அண்ணா உங்கள் பதிவை முகப்புத்தகத்தில் இணைக்கலாமா .........இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒரு பதிவு 
 
அனுமதியில்லாமல் இணைக்க விரும்பவில்லை ..............ஆனால் நீங்கள் சொல்வது போல செயல்பாட்டில் பூச்சியமாய் வாழ்ந்து கொண்டு எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கும் சந்தர்ப்பவாதிகளின் ஊளையிடும் காலம் இது ,,,,,,,,,,,வரலாறும் ,நிகழ்வும் உண்மையும் நேரடியாக பார்த்தவன் என்ற வகையில் .........
:icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

#90இல் யாழில் 25-30 முஸ்லீம் குடும்பங்கள்தான் இருந்தது# -அருமையான ஜோக். எனக்குதெரியவே சோனகர் தெருவில் மட்டும் என் குடும்ப நண்பர்களாக 20 குடும்பம் இருந்திருக்கும். ஒரு உயர் பள்ளி, ஒரு பெரிய பள்ளிவாசல், கிட்டத்தட்ட அரைக்கிராமசேவகர் பிரிவலவுக்கு முஸ்லீம்கள் யாழ் நகரில் மட்டும் இருந்தார்கள்.

கூடவே சாவகச்ச்சேரி, சுன்னாகம் என்றும் இருந்தனர்.

புலிகள் இருந்து 60 பேர் வரும்வரை யாழில் ஆளில்லாமல் அல்லாடினராம். அடுத்த ஜோக்.

கோட்டை வலிந்த தாக்குதலில் 90இல் மட்டும் 980 மட்டில் போராளிகள் மாண்டனர்.

91 ஆகாய கடல் வழிச்சமரில் மட்டும் 1100.

நயினையை சுற்றி எங்கப்பு காவல் இருந்தது? காரைநகரும் அப்படியே.

குறிக்கட்டுவானில் கிரெனைட்டுடன் ரெண்டுபேர், அவளவே.

ஆகா இப்பிடி ஒரு ஜோக்கரை இப்போதான் பார்க்கிறேன் ................ஆழமாய் யோசிக்காததேல்லாம் இஞ்ச வந்து .அவர் என்ன சொல்ல வாரார் என்று கூட தெரியாமல் நுனிப்புல் மேயும் புத்திசாலிகள் .வாழ்க வழமுடன் [நாமெல்லாம் மொக்குக்கூட்டம் ]
 
:D  :D  :D  :D
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி கருணாவை தானைத்தலைவனாக கொண்டாடி குப்பிற வீழ்ந்தீர்களோ,

எப்படி கே பி யை நம்பி மோசம் போனீர்களோ

அப்படி சீமானையும் நம்பிச் சீரழிகிறீர்கள்.

நாம் எப்போதோ இந்த கபடநாடக சினிமாமாக்காரனை கண்டுகொண்டோம்.

Those who don't learn from history are bound to repeat its mistakes.

ஆம் கருணா,கேபி இவர்கள் எமக்குள் உருவாக்கியவர்கள் எம்மோடு சங்கமித்தவர்கள் .இவர்களை நாம் நம்பினோம் ஆனால் சீமான் என்னும் தொப்பிழ் கொடியுடன் இவர்களை ஒப்பிடுவது முட்டாள்தனம் .ஏனனில் இந்தய அரசை அதன் நியத்தை எம் தேசியத்தலைவர் மிக நிதானமாக எடை போட்டே போராட்டத்தை நகர்த்தினார் ..அந்த இந்திய அரசை தங்கி வாழ் தொப்பிழ் கொடிகளின் பலம் பலவீனம் அனைத்தையும் தெரிந்தே எம் போராட்டம் இன்று வரை நகர்கிறது .........உண்மையை தெரிந்த ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் அந்த விடயம் நன்றாக தெரியும் . அந்த நிலையில் இன்றைய சூழலில் சீமான் ,மற்றும் கலை சார்ந்த ஒவ்வொரு விடயங்களையும் எம்மால் புரிந்து கொள்ள முடியும் .இவர்கள் எமக்கு பாதகமாய் செயல்படுவது துரோகம் ,அல்லது ஏமாற்றம் என்று நாம் எப்போது கருத்தில் எடுக்கப்படாது .............என்னில் இவர்களை நம்பி எம் தேசியம் போராடவில்லை எம் எதிர்கால போராட்டமும் இல்லை .இவர்களால் எங்களுக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டால் பெற்று கொள்வோம் .இல்லையேல் போய்க்கொண்டே இருப்போம் ................இதுதான் எமது சரித்திரம்  :)
 
  • கருத்துக்கள உறவுகள்

#90இல் யாழில் 25-30 முஸ்லீம் குடும்பங்கள்தான் இருந்தது# -அருமையான ஜோக். எனக்குதெரியவே சோனகர் தெருவில் மட்டும் என் குடும்ப நண்பர்களாக 20 குடும்பம் இருந்திருக்கும். ஒரு உயர் பள்ளி, ஒரு பெரிய பள்ளிவாசல், கிட்டத்தட்ட அரைக்கிராமசேவகர் பிரிவலவுக்கு முஸ்லீம்கள் யாழ் நகரில் மட்டும் இருந்தார்கள்.

கூடவே சாவகச்ச்சேரி, சுன்னாகம் என்றும் இருந்தனர்.

புலிகள் இருந்து 60 பேர் வரும்வரை யாழில் ஆளில்லாமல் அல்லாடினராம். அடுத்த ஜோக்.

கோட்டை வலிந்த தாக்குதலில் 90இல் மட்டும் 980 மட்டில் போராளிகள் மாண்டனர்.

91 ஆகாய கடல் வழிச்சமரில் மட்டும் 1100.

நயினையை சுற்றி எங்கப்பு காவல் இருந்தது? காரைநகரும் அப்படியே.

குறிக்கட்டுவானில் கிரெனைட்டுடன் ரெண்டுபேர், அவளவே.

இந்த அல்லக்கை தனமான கருத்துக்களுக்கு பதில் எழுதி நேரம் விரயம் செய்ய இனி இஸ்டமில்லை.
சாதரான ஒரு ஈழ தமிழனாக இருந்து நான் நேரில் பார்த்ததை மட்டுமே எழுதி கொள்கிறேன்.
 
நீங்கள் அதீத புத்திசாலிகள். உங்களுடன் மல்லுகட்டி வெல்ல முடியாது. அப்படி வென்றாலும் அதில் இருந்து பயில கூடியது இனத்தை விற்று எப்படி பிழைத்து கொள்ளலாம் என்பதைத்தான். துரதிஸ்டவசமாக அதிலும் எனக்கு இஸ்டமில்லை.
 
ஆகாய தரை கடல் சமரில் வீரமரணம் அடைந்த போராளிகள் 532. அதிகமான போராளிகள் இறந்துபோன ஈடு செய்யமுடியாத பேர் இழப்பு அது. இப்படி அதிகமான போராளிகள் இறந்து போனது இதுவே முதல் தடவை தமிழ் ஈழ விடுதலை போர் வரலாறு அதை பதிவு  செய்து வைத்திருக்கிறது. இதில் இறந்தவர்கள் 80 வீதமானவர்கள் 1990இல் புலிகளில் இணைந்து பயிற்சி  பெற்று முதல் தடவையாக களத்திற்கு சென்றவர்கள். நான் மேலே எழுதியது முஸ்லிம்கள் வெளியேறிய காலபகுதி பற்றியது. 
ஆனையிறவு சண்டை நடந்தது 1991. 
 
நைனாதீவு 
காரைநகர் 
................................. உங்களின் கருத்து படி. நான் அடக்கமாக சொல்ல விரும்புவது. உங்களுக்கு அது பற்றி தெரிய வாய்ப்பில்லை  பொத்திக்கொண்டு இருக்கலாம் என்பதே. 

அனுமதியில்லாமல் இணைக்க விரும்பவில்லை ..............ஆனால் நீங்கள் சொல்வது போல செயல்பாட்டில் பூச்சியமாய் வாழ்ந்து கொண்டு எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கும் சந்தர்ப்பவாதிகளின் ஊளையிடும் காலம் இது ,,,,,,,,,,,வரலாறும் ,நிகழ்வும் உண்மையும் நேரடியாக பார்த்தவன் என்ற வகையில் .........
:icon_idea:

தமிழ் இரத்தம் உடம்பில் உள்ளவன் இனியும் எதையாவது வாசித்துதான். தனது எதிரி யார்? துரோகி யார்?
என்று அறிய வேண்டிய தேவை இருப்பதாக நான் எண்ணவில்லை.
பன்றிகளை அப்படியே அதன் பட்டுக்கே விட்டுவதே நல்லது என்று நான் நினைக்கிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டை வலிந்த தாக்குதலில் 90இல் மட்டும் 980 மட்டில் போராளிகள் மாண்டனர்.

இறந்த புலிகளின் கணக்கு இதைவிட சற்று கூடுதலாக இருக்கவேண்டும்.
ஓவருமுறை விமனாதக்குதல் பலாலியில் இருந்து ஆட்லறி செல் தாக்குதல் மக்கள் குடியிருப்பு நோக்கி நடக்கும்போதும். 10 தொடக்கம் 15 வரையிலான புலிகள் லங்கா புவத் செய்தில் இறந்து கொண்டு இருந்தார்கள்.
 
செய்தி தயாரித்தவர்கள் ஒன்று இரண்டு மாதங்களை தவற விட்டுவிட்டார்களோ ? என்னமோ.
  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகத்தில் இருந்து இந்தப் பதிவைதேவைகருதி இடுகிறேன். தமிழன் கார்த்தி with தோழர் கலை and 48 others 2 hrs · Edited · புலிப்பார்வை ஏன் தடை செய்யப்பட வேண்டும்? 1.முதல் காட்சி மேதகு தலைவர் சிங்கள மக்களை சுடுவது போல் உள்ளது (காரணத்தை கூறவில்லை) 2.மேதகு தலைவர் பிரபாகரன் ஒரு பெண்ணை கட்டி பிடித்து இருப்பது போல் உள்ளது.(பெண்ணியவாதி பற்றியன தவறான கருத்தை விதைப்பது) 3.பள்ளி மாணவன் ஆன பாலச்சந்திரனை சிறார் போராளி போன்று சித்தரித்து காட்டிய காட்சிகள். மற்றும் சிறுவர்களுக்கு கடுமையான பயிற்சியை தளபதிகள் கொடுப்பதை போல் உள்ளது. (விடுதலை புலிகள் இயக்கத்தை ஐந்து ஆண்டுகள் தடை செய்ததை சரிஎன்று காட்டுவதற்க்கு இந்திய -சிங்கள கூட்டு சதி) 4.விடுதலை புலிகள் இராசிவ் காந்தியை கொலை செய்தது மேதகு பிரபாகரன் சரி என்று கூறுவதை போல் உள்ளது (இராசிவ் கொலை பற்றி சன் தொலைகாட்சியில் தலைவர் கூறியதை பார்க்கவும்) 5.மேதகு தலைவர் வேடத்தில் நடித்துள்ளது யார்? பாரிவேந்தரின் மகன் மதன் புதியதலைமுறை தொலைகாட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பவர். (ஒழுக்கம் இல்லாதவர்) 6.பாரிவேந்தர் ஏன் பாலகனை வைத்து படம் எடுக்க வேண்டும்? தனது எஸ் ஆர் எம் (SRM EDUCATIONS) கல்வி வியபாரத்தை இலங்கை மண்ணில் நிறுவ சிங்கள அரசுக்கு உறுதுணையாக படம் எடுக்க வேண்டும். (இல்லை என்றால் கொள்ளை அடிக்க முடியாது) 7.நெடுமாறன் அய்யா இந்த படத்தில் பல காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். படத்தை பார்த்த மாணவர் பிரிட்டோ படத்தை வெளியிட முடியாது என்று கூறியுள்ளார். 8.பிரவீன் காந்த் -மலையாள மொழியை தாய்மொழியாக கொண்டவர் . (இனம் படத்தில் சந்தோஷ் சிவன் மலையாள மொழியை தாய்மொழியாக கொண்டவர்) 9.இரண்டாம் பகுதி முழுவதும் சிறுவர்களை போராளியாக காட்டி உள்ளார்கள். (தாய் .தந்தை உறவினர்களை பறிகொடுத்தவர்களை எளிதாக விடுதலைபுலிகள் ஆயுதம் ஏந்த விடமாட்டார்கள் தமிழர் இராணுவத்தில்) 10.இதை தடை செய்ய வேண்டும் என்று கூறிய மாணவர்களை கூலிப்படை வைத்து சத்தியம் திரையரங்கில் அடித்து உள்ளார்கள். 11.பொதுவாக இந்திய தணிக்கை துறை விடுதலை புலிகள் ஆதரவான படங்களை தடை செய்துள்ளது. புலிப்பார்வை அப்போ புலிகளுக்கு எதிரான படமாக உள்ளதா ஆதரித்து பேசியவர்கள் பற்றி நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் பகிரவும். (பகுதறிவு கொண்டு சிந்தித்த பின்பு) செய்திகளை கொடுத்தவர்களுக்கு நன்றி

இங்கு பழைய விடயங்களைப் பற்றி பேசி தமக்கும் மல்லுகட்டி கொள்ளும் உறவுளே

எப்போதோ நடந்த விடயங்களை விட்டுவிட்டு விடுங்கள். வட மாகாணசபையை இயங்கவிடாமல் ஒரு கூட்டுறவு சங்க கிளை போல் முடக்க இலங்கை அரசாங்கம் செய்துவரும் சூழ்ச்சிகள் தொடர்பாக பல செய்திகள் சமீபத்தில் வந்துள்ளன. முதலமைச்சரின் அலுவலக சுத்திகரிப்பு பணிகள் கூட பிரதம செயலாளரால் நிறுத்தபட உத்தரவிடபட்டதாகவும் செய்திகளை பார்த்தேன்.மேற்படி செய்திக்க் உண்மையெனில் கேவலம் தனது அலுவலக சுத்திகரிப்பு பணிகளுக்கு உத்தரவிட முடியாத நிலையிலா வடமாகணசபை முதலமைச்சர் உள்ளார்?

சமீபத்தில் ஊடகங்களில் வெளிவந்த இந்த செய்திகள் ஒரு விவாதத்துக்குரிய விடயங்களாக உங்களுக்கு படவில்லையா?  ஏனெனில்  இந்த செய்திகள் யாழில் இணைக்கப்படிருந்த போதிலும் அதற்கு காத்திரமான விமர்சனங்கள், விவாதங்கள் எதுவும் இதுவரை இடம் பெறவில்லை. ஏன்? அது குறித்து யாழ்கள உறவுகளுக்கு எந்த அக்களையும் இல்லையா?  சட்டபூர்வமாக ஜனநாயக அடிப்படையில் செயற்படும் முதலமைச்சரின் பணிகளை குறுக்கு வழியில் தடுக்கும் அதன் மூலம் தமிழ் மக்களின் தார்மீக இறைமைக்கு சவால் விடும் அரசின் செயற்பாடுகள் குறித்து சிறந்த காத்திரமான விவாதங்கள் மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது இவ்விடயம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க உதவுமல்லவா?

ஆகவே தயவு செய்து இது தொடர்பான திரிகளில் கூடிய கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான விமர்சனங்களை, கருத்துகளை வையுங்கள். கத்தி, சீமான், புலிப்பார்வை போன்ற தேவையற்ற திரிகளில் கருத்தெழுதி பழைய விடயங்களை கிளறி பொழுது போக்கும் தெருச்சண்டை களமாக யாழ்களத்தை ஆக்குவது என்று நீங்கள் முடிவு விட்டதாகவே எனக்கு படுகிறது.  அறிவாளிகள், அதிகம் தெரிந்தவர்கள் என்று அடிக்கடி தம்மை தாமே பீற்றிகொள்ளும் சில உறுப்பினர்கள்  கூட இங்கு தெருச்சண்டைக்காக  அலைவது போலவே தெரிகிறது. சினிமாவிற்கு போவதை விட கவுண்டன், செந்தில் நகைச்சுவை காட்சிகளை பார்த்து ரசிப்பதை விட யாழ்கள கருத்துகளத்தை வாசித்து ரசித்து பொழுது போக்கலாம் போல இருக்கிறது.

ஆகவே எம்மை மாற்றிகொள்வோம். உண்மையில் தமிழருக்கான அரசியல் தீர்வில் அக்கறை இருந்தால் வடமாகாண சபை தொடர்பான விவாதங்களில் சற்று அதிக கவனத்தை செலுத்துவோம்.  அல்லது அரசியல் சார்ந்த விடயங்களை விட்டு விட்டு  அறிவியல், பொதுஅறிவு, காதல், பாலியல்   விடயங்கள் மற்றும் நகைக்சுவை போன்றவற்றை பற்றி பேசி  கொஞ்சம் ஜாலியாக அரட்டை அடித்து சிரித்து மகிழ்வோம்.. மனதிற்க்காவது ஆறுதலாகவாவது இருக்கும். சிறந்த wellness ஆக இருக்கும்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒன்றுகூட சீமான் ஐயாவின் கண்ணில்படவில்லையா அல்லது லைக்காவின் அடுத்த படம் தனக்கு கிடைக்கும் என்ற கனவு கண்ணை மறைக்கின்றதா,இதற்கு அவர் பதில் சொல்லத்தேவையில்லை அவரின் அடிப்பொடிகள் பதில் சொன்னாலே போதும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்தவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள். அவர்களின் தியாகங்களை வைத்து சம்பாதித்தவர்களும் பல்லாயிரக்கணக்கானவர்கள்.

இப்போதெல்லாம் நாம் இனிமையாகப் பேசி நம் சிந்தனையை மழுங்கச் செய்யும் வியாபாரிகளை நம்பத் தொடங்கிவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒருவரின் கருத்தைப் பார்த்தால் சீமானுக்கு வாயிலை விரலை வைத்தால் கடிக்கத் தெரியாது போல் உள்ளது.சீமானுக்கு எமது போராட்டம் பற்றி ஒன்றுமே தெரியாமலா இவ்வளவு காலமும் கொஞ்சப் பேர் அவரை பின் பற்றிப் போனவர்கள்.தனக்கு கணக்கத் தெரியும் என்று காட்ட புலிகள்,போராட்டம்,முஸ்லீம்கள் என்று திரிக்கு சம்மந்தமில்லாமல் அதிகம் எழுதியுள்ளார்.அதை மு.புத்தகத்தில் போடக் கூட ஒருவர் ரெடி...இருந்து பாருங்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் கருணாநிதியைக் கூட சீமான் மிஞ்சி விடுவார்.

ஒரு கேவலமான படத்தை தேசிய உணவாளார் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார்.அவருக்கு வக்காலத்து வாங்கவும் ஒரு கூட்டம் ஆனால் அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தீவிர புலி ஆதரவாளர்களாம்.தூ வெட்கமாயில்லை.சீமான் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.எனக்குத் தேவையியுமில்லை,கவலையுமில்லை ஆனால் தேசியத்திற்கு வெட்டுறன்,பிடுங்கிறன் என தேசிய முகமூடி போட்டுக் கொண்டு நடிக்க வேண்டாம் என்று மட்டும் சொல்லுங்கள்.

சீமானுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கும் குட்டிப் பையன் போன்றோரைக் காணவில்லை.இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையோ

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

.எனக்குத் தேவையியுமில்லை,கவலையுமில்லை ஆனால் தேசியத்திற்கு வெட்டுறன்,பிடுங்கிறன் என தேசிய முகமூடி போட்டுக் கொண்டு நடிக்க வேண்டாம் என்று மட்டும் சொல்லுங்கள்.

நடிகனை நடிக்கவேண்டாம் என சொல்ல எங்களுக்கு உரிமையில்லை தானே ரதி :D எத்தனையோ ஆயுதம் ஏந்திய நடிகர்களை நாம் கண்டுவிட்டோம்....நாம் தெளிவாக இருந்தால் இதுகளைபற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை

பாருங்கப்பா எம் போராட்டத்திற்கு  எதிராக ஒரு படம் வந்துவிட்டது என்று குத்தி முறிகிராங்கப்பா :lol:  ............சபாஸ் மிக்க மகிழ்ச்சி 
 
இப்படியே எம் எம் போராட்டத்தை கொச்சைப்படுத்திய ,கொச்சைப்படுத்துகின்ற எத்தனை தடவைகள் நீங்களும் சேர்ந்து கொச்சைப்படுத்திநீங்க ..............இப்ப மட்டும் அய்யய்யோ எம் போராட்டத்தை கொச்சப்படிட்டாங்க என்று ஜனகராஜ்  ஸ்டைலில புலம்புரான்கப்பா . :rolleyes: .................புலம்புங்கள் புலம்புங்க .............நாங்க உங்களை கண்டிக்கவே மாட்டோம் என்னில் உங்க தலையாகிய நோக்கம் என்ன என்று எங்களுக்கு தெரியும் . :D  :D
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்தவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள். அவர்களின் தியாகங்களை வைத்து சம்பாதித்தவர்களும் பல்லாயிரக்கணக்கானவர்கள்.

இப்போதெல்லாம் நாம் இனிமையாகப் பேசி நம் சிந்தனையை மழுங்கச் செய்யும் வியாபாரிகளை நம்பத் தொடங்கிவிட்டோம்.

இனிமையாக பேசுகிறார் என்று தெரிந்தால் ..............
இனிமையாக பேசும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிடலாமே?
இனிமையாக பேசும் வேலையை அவர்கள் பார்ப்பார்கள் நாம் அடுத்த கட்டத்திற்கு நகர முடியுமில்லையா?
 
இனிமையாக பேசுவோரை நோக்கி நாம் நஞ்சுகளை கக்கி என்ன பயனை காணப்போகிறோம் ?
 
இதே திரியில் எந்த தயக்கமும் இன்றி நஞ்சை காக்குபவர்கள் 
 மக்களை கொலை வெறியாடி திரிந்த நாதாரி கூட்டங்களை ஒன்றிணைத்து தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று எந்த வெட்கமும் இல்லாது எழுதுகிறார்களே?
 
சீமான் தவறானவர் என்பதானால் இத்தனை நஞ்சை கக்க தெரிகிறது....
ஒட்டு குழு ஓணான் குழு என்றால் பம்மிகொண்டும் இருக்க தெரிகிறது.
 
சீமான் மீடியாக்கள் நடுவே நிற்பவர் தவறுகளை செய்யும்போது வெளிச்சத்திற்கு வந்துதான் ஆகும்.
இந்த நாதாரி கூட்டத்தை அவப்போது நாம் தான் வெளியில் பிடித்து காட்டவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் புலிப்பார்வை திரைப்படம் ஆணிவேர், எல்லாளன் திரைப்படங்களைப் போன்றது என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆனால் பாலச்சந்திரன் சிறுவர் போராளியாக இருந்ததில்லை என்று வேறு சொல்லுகின்றார். மிகவும் தெளிவாகத்தான் உள்ளார் என்று தெரிகின்றது.

சீமான் மீது நஞ்சு கக்குபவர்கள் என்று சொல்வதை விட அவரின் செயல்களில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒருவரின் கருத்தைப் பார்த்தால் சீமானுக்கு வாயிலை விரலை வைத்தால் கடிக்கத் தெரியாது போல் உள்ளது.சீமானுக்கு எமது போராட்டம் பற்றி ஒன்றுமே தெரியாமலா இவ்வளவு காலமும் கொஞ்சப் பேர் அவரை பின் பற்றிப் போனவர்கள்.தனக்கு கணக்கத் தெரியும் என்று காட்ட புலிகள்,போராட்டம்,முஸ்லீம்கள் என்று திரிக்கு சம்மந்தமில்லாமல் அதிகம் எழுதியுள்ளார்.அதை மு.புத்தகத்தில் போடக் கூட ஒருவர் ரெடி...இருந்து பாருங்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் கருணாநிதியைக் கூட சீமான் மிஞ்சி விடுவார்.

ஒரு கேவலமான படத்தை தேசிய உணவாளார் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார்.அவருக்கு வக்காலத்து வாங்கவும் ஒரு கூட்டம் ஆனால் அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தீவிர புலி ஆதரவாளர்களாம்.தூ வெட்கமாயில்லை.சீமான் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.எனக்குத் தேவையியுமில்லை,கவலையுமில்லை ஆனால் தேசியத்திற்கு வெட்டுறன்,பிடுங்கிறன் என தேசிய முகமூடி போட்டுக் கொண்டு நடிக்க வேண்டாம் என்று மட்டும் சொல்லுங்கள்.

சீமானுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கும் குட்டிப் பையன் போன்றோரைக் காணவில்லை.இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையோ

அக்கா வணக்கம்!
கனகாலம் காண கிடைக்கவில்லை விடுமுறை என்று எங்கேனும் சுற்றி திரிந்தீர்களா?
திரும்பி வந்தது மகிழ்ச்சி.
 
நான் மேலே எழுதியது வழமைபோல நீங்கள் எழுதியிருப்பதுபோல் உங்களுக்கு விளங்கி இருக்கு.
நீங்கள் என்ன செய்வீர்கள்? எப்படி சுரண்டினாலும் பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.
 
சீமான் ஒன்று தெரியாத பாப்பா அப்படி என்று வேறு நான் எழுதி இருக்கிறேனா? எழுதிய எனக்கே என்ன எழுதி இருக்கு என்று புரியவில்லை. அந்த அளவில் பானை நிறைந்து பொங்கி வழிகிறது.
 
நீங்கள் எழுதுவதால்தான் நாம் என்ன எழுதுகிறோம் என்பதையே புரிய முடிகிறது.
தொடர்ந்தும் பொங்குங்கள்.
அமிர்தமாக இருக்கிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் புலிப்பார்வை திரைப்படம் ஆணிவேர், எல்லாளன் திரைப்படங்களைப் போன்றது என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். ஆனால் பாலச்சந்திரன் சிறுவர் போராளியாக இருந்ததில்லை என்று வேறு சொல்லுகின்றார். மிகவும் தெளிவாகத்தான் உள்ளார் என்று தெரிகின்றது.

சீமான் மீது நஞ்சு கக்குபவர்கள் என்று சொல்வதை விட அவரின் செயல்களில் நம்பிக்கையற்றவர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நீங்கள் என்ன சீமானை ஆதரித்தா  எழுதுகிறீர்கள்? 
ஏன் உங்களைபோல அவர்களால் எழுதமுடியவில்லை? அவர்களால் முடியாது. 
அவர்களது நோக்கம் வேறு. அதைதான் நான் மேலேயே எழுதியுள்ளேன்.
 
மீடியாக்கள் நடுவே நின்றுகொண்டு ...... ஒரு தமிழ் விரோத படத்தை. தமிழருக்கு சார்பான படம் என்று எப்படி படம் காட்ட முடியும்?
அப்படி ஒரு தவறு செய்தால் அதற்கான விலையை சீமான் இல்லை ஏமானே என்றாலும் கொடுக்கத்தான் வேண்டும். 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சீமானை ஆதரித்தா  எழுதுகிறீர்கள்?

செந்தமிழன் சீமானை நான் ஒருபோதும் நம்பியது கிடையாது. ஆயுதப்போர் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஐந்து ஆண்டுகளில் தமிழர்கள் அரசியல் ரீதியாகச் சாதித்தது என்னவென்று பார்த்தால் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்கள் எவருமில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு.

இணையத்தில் புரட்சி செய்யும் ஈழத்தமிழர்களைப் பற்றி அண்மையில் படித்த கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.

ஈழத்தமிழர்கள் தமது பொறுப்புக்களில் இருந்து தப்பிக்க இணையம்தான் வடிகாலாக அமைந்துள்ளது. அவர்கள் எல்லோரிடமும் புரட்சி பற்றிய கனவுகள் உள்ளன. தமது சமூகத்தின் போராட்டத்திற்கான அவசியம் பற்றிய பிரக்ஞை உள்ளது. ஆனால் யதார்த்ததில் அதனை சாத்தியமாக்க முடியாமல் உள்ளது. தமது நாளாந்த கடமைகள் எல்லாவற்றையும் முடித்து, சாப்பிட்ட பின்னர் மிகச்சாவகாசமாக வந்து கணினியை திறந்து அவர்கள் புதியதோர் உலகத்திற்குள் புகுகிறார்கள். அன்று காலை விடிந்ததில் இருந்து கணினித்திரைக்குள் சற்றுமுன் புகுந்ததுவரையான காலப்பகுதியில் அவர்கள் வாழ்ந்ததற்கு நேரெதிரான உலகமது. இந்த உலகத்தில் அவர்களின் நியாயத்தராசிலிருந்து யாரும் தப்ப முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா வணக்கம்!

கனகாலம் காண கிடைக்கவில்லை விடுமுறை என்று எங்கேனும் சுற்றி திரிந்தீர்களா?

திரும்பி வந்தது மகிழ்ச்சி.

நான் மேலே எழுதியது வழமைபோல நீங்கள் எழுதியிருப்பதுபோல் உங்களுக்கு விளங்கி இருக்கு.

நீங்கள் என்ன செய்வீர்கள்? எப்படி சுரண்டினாலும் பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.

சீமான் ஒன்று தெரியாத பாப்பா அப்படி என்று வேறு நான் எழுதி இருக்கிறேனா? எழுதிய எனக்கே என்ன எழுதி இருக்கு என்று புரியவில்லை. அந்த அளவில் பானை நிறைந்து பொங்கி வழிகிறது.

நீங்கள் எழுதுவதால்தான் நாம் என்ன எழுதுகிறோம் என்பதையே புரிய முடிகிறது.

தொடர்ந்தும் பொங்குங்கள்.

அமிர்தமாக இருக்கிறது.

//சீமானை எமக்கு சாதமாக மாற்றுவது ஈழத் தமிழனுக்கு இருக்கும் ஓரே துருப்பு.// இதை நீங்கள் தானே எழுதுனீங்கள்.இதற்கு தான் என் பதிலை மேலே நான் எழுதினேன்...நீங்கள் தமிழ்சூரியன் மாதிரி அப்பாவி இல்லை. உங்களுக்குத் தெரியும் எது சரி,பிழை என்று அப்படி இருந்தும் 5% ஆன மாற்றுக்கருத்தாளாருக்காக,அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக உண்மையை மறைக்க வேண்டும் என்பதற்காக என்ன,என்னவெல்லாம் எழுதுகிறீர்கள்.இதனாலே தான் போராட்டம் அழிஞ்சது அதாவது புலிகள் என்ன பிழை செய்தாலும் ஒன்றும் கதைக்க கூடாது அப்படிக் கதைத்தால் எதிரிகளுக்கும்,மாற்று கருத்தளார்களுக்கும் வாய்ப்பாக போய் விடும் என்று அவர்கள் செய்த எல்லாவற்றிக்கும் ஆமாம் போட்டே அழித்து விட்டீர்கள்.மிச்சத்தை இப்ப தொடர்கிறீர்கள்.பழக்கம் விட்டுப் போகுமா என்ன?...எமது போராட்டத்தை முற்றாக அழிக்க எதிர்களோ,துரோகிகளோ தேவையில்லை உங்கள மாதிரி பக்க பாட்டு பாடுகின்ற ஆட்களே போதும்.உங்களை போல ஆட்கள் எப்போதும் பின் வரும் பாதகமான விளைவுகளை பற்றி யோசித்ததேயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமானை நான் ஒருபோதும் நம்பியது கிடையாது. ஆயுதப்போர் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஐந்து ஆண்டுகளில் தமிழர்கள் அரசியல் ரீதியாகச் சாதித்தது என்னவென்று பார்த்தால் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்கள் எவருமில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு.

இணையத்தில் புரட்சி செய்யும் ஈழத்தமிழர்களைப் பற்றி அண்மையில் படித்த கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.

ஈழத்தமிழர்கள் தமது பொறுப்புக்களில் இருந்து தப்பிக்க இணையம்தான் வடிகாலாக அமைந்துள்ளது. அவர்கள் எல்லோரிடமும் புரட்சி பற்றிய கனவுகள் உள்ளன. தமது சமூகத்தின் போராட்டத்திற்கான அவசியம் பற்றிய பிரக்ஞை உள்ளது. ஆனால் யதார்த்ததில் அதனை சாத்தியமாக்க முடியாமல் உள்ளது. தமது நாளாந்த கடமைகள் எல்லாவற்றையும் முடித்து, சாப்பிட்ட பின்னர் மிகச்சாவகாசமாக வந்து கணினியை திறந்து அவர்கள் புதியதோர் உலகத்திற்குள் புகுகிறார்கள். அன்று காலை விடிந்ததில் இருந்து கணினித்திரைக்குள் சற்றுமுன் புகுந்ததுவரையான காலப்பகுதியில் அவர்கள் வாழ்ந்ததற்கு நேரெதிரான உலகமது. இந்த உலகத்தில் அவர்களின் நியாயத்தராசிலிருந்து யாரும் தப்ப முடியாது.

மக்கள் நம்பும் படியாக இல்லை அப்படி என்று தலைவர்களும் நினைக்கலாம்.( just joke)
எமது எதிரிகள் துரோகிகளின் பலம் அவ்வாறு இருக்கிறது. உணமையான தமிழனால் ஓரளவிற்கே போக முடியும். இன்று காசாவில் இத்தனை சிறுவர்களையும் பெண்களையும் இலக்கு வைத்தே ஒருவனால் கொல்ல முடிகிறது. 
மக்கள் புரட்சிதான் 1970 இல் இருந்து இன்றுவரை சாத்தியமான ஒன்று. தமிழன் அதற்கு தயார் இல்லை.
குறுக்குவழியில் கடவுளை சந்தித்து லஞ்சம் கொடுத்தால் தனது  வீடு தப்பி விடும் என்று ஒரு தப்பான கணக்கோடு வாழ பழகி விட்டார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.