Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பார்வை இசை வெளியீடு விழாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை.. உலகத்தமிழினத் தலைவராக ஏற்றுக் கொள்ளும் படி.. யாரும் இணையப் பிரச்சாரம் செய்யவில்லை. சீமானே அதைச் செய்யவும் இல்லை.

 

சீமான் தான் சார்ந்த தமிழகக் களத்தில்.. ஈழவிரோத சிந்தனைகளுக்கு எதிராக செயற்பட்டு ஈழத்தமிழர்களின் இன்னல்களை தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்லி அவர்களிடம்.. அக்கறையும் ஆதரவும் திரட்டி அதன் மூலம்.. தமிழக.. இந்திய அரசுகளுக்கு ஏதேனும் அழுத்தங்களைக் கொடுக்க முடியுமோ என்று தான் சிந்திக்கிறார்கள்.

 

எமது போராட்டம் ஆரம்பம் தொட்டு இறுதி வரை தமிழகத்தை சார்ந்திருந்தாலும்.. இடையில் நிகழ்ந்த சில சம்பவங்களால்.. தமிழீழமும் தமிழகமும் தூர விலகி நின்றமை கூட எதிரிகளுக்கு சாதகமானது.

 

இறுதிக்கட்டத்தில்.. விடுதலைப்புலிகள் கூட கருணாநிதியை.. ஜெயலலிதாவை பகைக்காத.. நட்புப்பாராட்டும் படி தான் நடந்து கொண்டார்கள். கார்கில் போரில் பகிரங்கமாக இந்திய ஆதரவு நிலை எடுத்தார்கள். இந்தியா நமது நட்பு நாடு என்றார்கள். ஆனால் இவை அறிக்கை அளவில் இருந்து கொண்டனவே தவிர மக்களிடத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரத்தவறி விட்டிருந்தன.

 

ஆனால்.. இன்று.. சீமான் போன்ற உணர்வாளர்களின் செயற்பாட்டால் நிலைமை மாறி உள்ளது. தமிழ் தேசிய உணர்வு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சினிமா தொடங்கி.. குக்கிராமம் வரை ஈழத்தமிழர் உணர்வு மீண்டும் ஊட்டப்பட்டு வருகிறது. எதை நாம் முள்ளிவாய்க்காலின் இறுதியில் தேடினோமா அது சிறுகச் சிறுக கட்டி வளர்க்கப்பட்டு வரும் வேளையில்.. அதனை சிதைக்க கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.. புலம்பெயர் தமிழர்களில்.. இனம்.. மொழி.. நிலம் பற்றிய எந்த அக்கறையும் அல்ல.. சில நாடோடிகள். அவர்களுக்கு சொந்த வாழ்க்கையும் வயிறும் தான் முக்கியம். அவர்களுக்காக யாரும் போராடப் போய் சாகவில்லை. அவர்களாகவே சாவினில் ஆதாயம் தேடிக்கொண்டார்கள். அவர்களை எல்லாம் கணக்கில் எடுத்தால்.. எமது இனம்.. ஒருபோதும் எந்த ஒரு விடிவையும் எட்ட முடியாது.

 

கிருபண்ணா போன்றவர்கள்..பெரிய பந்திகளை வாசிக்க ஆர்வமுள்ளவர்களே அன்றி அந்தப் பந்திகள்... மக்களிடத்தில் செயலுருப் பெறுவது பற்றி அவர்களுக்கு கிஞ்சித அக்கறையும் இல்லை. செயலும் இல்லை. செயற்பாடும் இல்லை.

 

ஆனால் சீமான் போன்ற தலைவர்கள் அப்படி அல்ல. இயன்றதை.. இயலக் கூடியதை.. செய்கிறார்கள். விமர்சனங்களை வரவேற்கிறார்கள். மாற்றுக்கருத்தை வைத்து பகையாளிகளை அவர்கள் தீர்மானிக்கவில்லை. மாறாக.. அதனை மாற்ற முனைகிறார்கள். இது சிலருக்கு தமிழர்கள் ஒன்றுபட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவே சீமான் மீதான வசவு. தமிழர்களைப் பொறுத்தவரை எதிரிகள் வெளியில் மட்டுமல்ல. உள்வீட்டுக்குள்ளேயே தாராளமாக உள்ளார்கள். அதனாலும் தான் இந்த இனம் விடிவின்றி கிடக்கின்றது இப்பூமியில்.

 

(உ+ம்: கிருபண்ணா இப்பவும் பெரியார் ராமசாமியை தலையில் கட்டி ஆடுவார். ஆனால் ஒரு காலத்தில் பெரியார் ராமசாமியை முன்னிலைப்படுத்திய சீமான் இன்று அவரை தமிழினத் தலைவராக முன்னிறுத்துவதில்லை. அவர் சமூகத்துக்கு உரைத்த நல்ல விடயங்களை மட்டுமே முன் வைக்கிறார். தேசிய தலைவரை தமிழினத் தலைவராக முன்வைக்கிறார். இந்த மாற்றம் தேசிய தலைவர் மீது வெறுப்பில் உள்ளவர்களும் சீமானை வெறுக்க செய்கிறது. இங்கு யாழில் பாருங்கள். யார் சீமானை அதிகம் வசை பாடுகிறார்கள் என்றால்.. முன்னாள் இன்னாள் ஒட்டுக்குழு ஆதரவாளர்கள் தான். ஒட்டுக்குழுக்களிடம் இருப்பது மாற்றுக் கருத்து அல்ல. அதனை கருத்தியலால் மாற்றி அமைக்க. அது காட்டிக்கொடுப்பு பிழைப்புவாதம். அதனை அவர்களின் வயிறு உள்ளவரை மாற்றி அமைக்கவே முடியாது.)

 

இந்த நிலையை மாற்ற நிறையக் கல்லெறிகளை சந்தித்தே தான் ஆக வேண்டும். தேசிய தலைவர் சந்திக்காத கல்லெறிகளா..??! ஒரு துரும்பைக் கூட.. போராட்டத்திற்கு இயற்றாத வெறுமைகள் கூட யாழில் தவளைகள் போல் எழுதலாம்.. கத்தலாம். அதனை எல்லாம் சீமானோ.. தமிழ் மக்கள் மீது அக்கறை உள்ள தலைவர்களோ செவிமடுக்கனுன்னு அவசியம் இல்லை..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • Replies 69
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

//சீமானை எமக்கு சாதமாக மாற்றுவது ஈழத் தமிழனுக்கு இருக்கும் ஓரே துருப்பு.// இதை நீங்கள் தானே எழுதுனீங்கள்.இதற்கு தான் என் பதிலை மேலே நான் எழுதினேன்...நீங்கள் தமிழ்சூரியன் மாதிரி அப்பாவி இல்லை. உங்களுக்குத் தெரியும் எது சரி,பிழை என்று அப்படி இருந்தும் 5% ஆன மாற்றுக்கருத்தாளாருக்காக,அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக உண்மையை மறைக்க வேண்டும் என்பதற்காக என்ன,என்னவெல்லாம் எழுதுகிறீர்கள்.இதனாலே தான் போராட்டம் அழிஞ்சது அதாவது புலிகள் என்ன பிழை செய்தாலும் ஒன்றும் கதைக்க கூடாது அப்படிக் கதைத்தால் எதிரிகளுக்கும்,மாற்று கருத்தளார்களுக்கும் வாய்ப்பாக போய் விடும் என்று அவர்கள் செய்த எல்லாவற்றிக்கும் ஆமாம் போட்டே அழித்து விட்டீர்கள்.மிச்சத்தை இப்ப தொடர்கிறீர்கள்.பழக்கம் விட்டுப் போகுமா என்ன?...எமது போராட்டத்தை முற்றாக அழிக்க எதிர்களோ,துரோகிகளோ தேவையில்லை உங்கள மாதிரி பக்க பாட்டு பாடுகின்ற ஆட்களே போதும்.உங்களை போல ஆட்கள் எப்போதும் பின் வரும் பாதகமான விளைவுகளை பற்றி யோசித்ததேயில்லை

இதற்குள் கூட சீமான் சாதகமாக இல்லை ............. நாம்தான் அதை செய்யவேண்டும் என்று ஒரு கருத்து இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா???
சீமான் சாதகமாக இருந்தால் அவரது வீட்டு முகவரி ...... வேலூர் சிறைதான்.
சீமான் வெளியில் இருக்கிறார் என்றாலே அதற்குள் இன்னொரு அர்த்தம் இருக்கிறது. சீமான் சாதகமாக இல்லை என்பதுதான் அது. 
இந்திய பார்பானிய ராவை மறந்துவிட்டே நீங்கள் தமிழ்நாட்டு அரசியல் பேசுகிறீர்கள். தமிழ் நாட்டு அரசியல் களத்தை கூட்டி பெருக்கவே ரா 27% வீதம்வரை செலவழிக்கிறது. 
இந்தியாவின் முதல் எதிரியே இஸ்லாம் தீவிரவாதிகள்தான். அப்படி இருந்தும் 27% எனபது சாதாரண ஒன்று அல்ல. 
எனக்கு உங்களுக்கு தெரியாமல் திரை மறைவில் நடக்கும் காட்சிகள்தான் அதிகம் என்பதுதான் அதன் பொருள். 
  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்படியா இப்படித்தான் கருணாநிதியும்,ஜெயலலிதாவும் நிறைய திரை,மறைவு காரணம் வைத்திருப்பார்கள்/சொல்லுவார்கள்

//சீமானை எமக்கு சாதமாக மாற்றுவது ஈழத் தமிழனுக்கு இருக்கும் ஓரே துருப்பு.// இதை நீங்கள் தானே எழுதுனீங்கள்.இதற்கு தான் என் பதிலை மேலே நான் எழுதினேன்...நீங்கள் தமிழ்சூரியன் மாதிரி அப்பாவி இல்லை.

என்ன கொடுமை  சரவணா....  கொடும்பாவி :lol:  ..........கொஞ்சம் ஆவது மானம் ரோசம் வெக்கம்,சூடு, சுரணை  இருக்கணும் ,அதன் பின் யார் அப்பாவி என்று தீர்மானிக்கனும் ...............நன்றி ரதி அக்கோய் உங்க ......... :D  :D

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணா போன்றவர்கள்..பெரிய பந்திகளை வாசிக்க ஆர்வமுள்ளவர்களே அன்றி அந்தப் பந்திகள்... மக்களிடத்தில் செயலுருப் பெறுவது பற்றி அவர்களுக்கு கிஞ்சித அக்கறையும் இல்லை. செயலும் இல்லை. செயற்பாடும் இல்லை.

உண்மைதான். செயல்வீரர்களாக இருப்பதற்கு இதய சுத்தியுடனும், நேர்மையுடனும், அரசியல் தெளிவுள்ள தூரநோக்குடனும், மக்களின் அபிலாசைகளைப் புரிந்து முழுநேரமாக உழைக்கும் மனவுறுதி வேண்டும். இவையெல்லாம் என்னிடம் இல்லை என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றேன்.

சீமான் கருத்தியல்போரை நடாத்தி மக்களை அரசியல் தெளிவுள்ளவர்களாக மாற்ற முனைவதாகச் சொல்லுகின்றார். அவர் தனது நோக்கில் வெல்லுவதை நான் கட்டாயம் இருந்து பார்ப்பேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்படியா இப்படித்தான் கருணாநிதியும்,ஜெயலலிதாவும் நிறைய திரை,மறைவு காரணம் வைத்திருப்பார்கள்/சொல்லுவார்கள்

100% உண்மையானது. அவர்கள் நிட்சட்யமாக வைத்திருந்தே ஆகவேண்டும்.
அவர்கள் தமிழ் நாட்டு முதல்வர்கள்......... அவர்கள் ஊடாகத்தான் ரா பயணித்திருக்கிறது.
 
எனது உடைவாள் வைகோ என்று முழங்கி வந்த கருணாநிதி. சி பி ஐ வந்து  போன மறுநாள் காலையே வைகோவை ஜென்ம எதிரி ஆக்கினர். விரும்பியோ விரும்பாமலோ அதுதான் அவருக்கு கிடைத்த தெரிவு. அல்லது அரசியலை துறப்பது. 

இந்திய அரசியலில் இதெல்லாம் சகசம், எமது விடியலை நாம்தான் தேடவேண்டும் அதை விட்டுவிட்டு மற்றவனிடம் குறைகாண்பதில் என்ன பலன் ?

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பார்வை.. தமிழக சினிமா வட்டாராத்தால் தயாரிக்கப்படும் ஒரு படம். அது மலையாளிகளோ.. ஹிந்தியர்களோ தயாரிக்கவில்லை. தமிழக சினிமா வட்டாரத்தில் இருக்கும் சீமான் போன்ற தலைவர்கள்.. வை.கோ.. நெடுமாறன் ஐயா போன்று ஒதுங்கி இருந்துவிட்டால்.. புலிப்பார்வை.. வெளிவராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மாறாக.. தனது செல்வாக்கை அங்கு பாவித்து மக்களின் விருப்பு வெறுப்புக்களை இனங்காட்டி.. படத்தில் தேவையான மாற்றங்களை செய்ய உள்ளிருந்து தான் செயற்பட வேண்டிய சூழல். இதே மலையாள சினிமாவாக இருந்தால்.. அல்லது பொலிவூட்.. ஹாலிவூட் சினிமாவாக இருந்தால்.. சீமானும் வெளியில் நின்று தான் கத்தி இருப்பார். ஆனால்.. தமிழக சினிமாவில்.. தான் அறிந்த சூழலில்.. இப்படியான ஒரு படம் தயாரிக்கப்படுவது குறித்து அறிந்தும் செயலற்று இருப்பதை விட அதனை நெருங்கி.. நெறிப்படுத்திப் பார்ப்பதே அழகு. நண்பர்களை பகைவர்களாக்குவது இலகு. நண்பர்களை தொடர்ந்து நண்பர்களாகப் பேணிக் கொள்வது தான் சாதுரியமான செயல் இன்று. எமக்கு நிறைய பகைவர்கள் உள்ளார்கள். நண்பர்கள் குறைவு. அதனை தமிழ் சினிமாவுக்குள்ளும் கொண்டு வந்தால்.. நிலை என்னாவது..???! லுங்குசாமி துரோகி.. சீமான் துரோகி... சத்தியராஜ் துரோகி.. பாரதிராஜா துரோகி.. மண்வண்ணன் துரோகி.. இப்படி கடந்த 5 ஆண்டுகளில் நாம் துரோகி ஆக்கிட்டவர்கள் தான் அதிகம். ஆனால் அதே 5 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் எல்லாம் தமிழீழ தேசிய தலைமையால் ஒன்றிணைக்கப்பட்டவர்களாக இருந்துள்ளார்கள். அப்போ எங்கே தவறு..????! தவறு அவர்களிடம் அல்ல. அவர்களின் அணுகுமுறைகளை புரிந்து கொள்ள முடியாத கோமாளிகள்.. இணையத்தையும்.. முகநூலையும் ஆக்கிரமித்துள்ளதன் விளைவே இது. இதனையும் சீமான்.. போன்ற தலைவர்கள் பெருந்தன்மையோடு விளங்கிக் கொண்டு தங்கள் அணுகுமுறைகளை புத்திசாலித்தனமாக சில ஊடகங்களின் கண்களுக்கு அப்பால் வைத்துச் செய்து கொள்வது தமிழினத்துக்கு நல்லது. இன்று சில இணைய ஊடகங்கள் தமிழின ஆதரவு என்ற போர்வையில்.. எதிரிக்காக தமிழர்களை பிளவுபடுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றன என்பதை அறிந்து செயற்படுதல் வேண்டும்..!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் சீருடையில் உள்ளதுபோல் சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த மேடையில் வைத்து அவர் ஒருநாளும் சீருடை அணிந்த போராளியாக இருக்கவில்லை என்கிறார் சீமான்..

படம் வெளிவரும்வரையில் அது எவ்வாறு அமையப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. தவறான காட்சிகள் படத்தில் இருந்தால் அதை எதிர்க்கும நிலைக்கு சீமான் வருவார்தானே.. இப்பவே ஏன் குத்தி முறியிறீங்கள்..?! :D

பாலச்சந்திரன் சீருடையில் உள்ளதுபோல் சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த மேடையில் வைத்து அவர் ஒருநாளும் சீருடை அணிந்த போராளியாக இருக்கவில்லை என்கிறார் சீமான்..

படம் வெளிவரும்வரையில் அது எவ்வாறு அமையப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. தவறான காட்சிகள் படத்தில் இருந்தால் அதை எதிர்க்கும நிலைக்கு சீமான் வருவார்தானே.. இப்பவே ஏன் குத்தி முறியிறீங்கள்..?! :D

ஐயோ நண்பா அவர்களின் உணர்வை மதியுங்கள் எம் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்தினால் கோமணம்   :lol: மன்னிக்கவும் கொடுக்கு கட்டிக்கொண்டு எதிர்க்கும் கூட்டம் அல்லவா இவர்கள் .விடுங்கள் குத்தி முறியட்டும் .அவர்களை இம்சைபடுத்த வேண்டாம் ............ :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நண்பா அவர்களின் உணர்வை மதியுங்கள் எம் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்தினால் கோமணம் :lol: மன்னிக்கவும் கொடுக்கு கட்டிக்கொண்டு எதிர்க்கும் கூட்டம் அல்லவா இவர்கள் .விடுங்கள் குத்தி முறியட்டும் .அவர்களை இம்சைபடுத்த வேண்டாம் ............ :D:D

இருநாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் இது நடந்தது. புதிதாக சேர்ந்த ஒரு பிரிட்டிஷ்காரரிடம் பேசிக்கொண்டிருந்தேன். எனது பூர்விகம் எது என்று கேட்டார். இன்றைய இலங்கையின் வடக்குப்பக்கம் என்றேன்.

முன்பும் தன்னுடன் வட இலங்கையர் ஒருவர் வேலை செய்ததாகச் சொன்னவர், ஒரு சுவாரசியமான சம்பவத்தையும் எடுத்துவிட்டார்.. :huh:

அந்த இலங்கையரைப்பார்த்து 'நீங்க புலியா' என்பதுமாதிரி கேட்டுள்ளார். :wub: அதுக்கு அந்த இலங்கையர் காச் மூச்சென்று கத்தியுள்ளார். விவரம் என்னவென்று பார்த்தால் அவர் வடக்கு முஸ்லீமாம். :o

அந்த பிரிட்டிஷ்காரரின் புரிதல் போன்றதுதான் தமிழகத்தின் நிலையும். :huh: (இப்ப நிலைமை கொஞ்சம் பரவாயில்லை) பிரவீன்காந்துக்கு புலிகள் பற்றி அதிகம் புரிதல் இருக்கும் என நம்ப இடமில்லை. இந்த நேரத்தில் சீமான் போன்றவர்கள் அங்கிருந்து நெறிப்படுத்துவது நல்லது.

என்ன ஒன்று.. நெறிப்படுத்திய பின்பு படம் வெளிவராது. :lol: அல்லது சீமானும் சேர்ந்து எதிர்க்கவேண்டி வரும். :blink:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

புலிபார்வை மீது...

 

சிறுவர் போராளிக் குற்றச்சாட்டு..

 

சீமான் வசவு..

 

சாதி வெறி...

 

தமிழீழ விடுதலைப் போராட்ட விரோத செய்தி..

 

இதனை எல்லாம் முன்னணியில் நின்று செய்பவர்கள் யார் என்று பார்த்தால்.. பக்கா துரோகிகள்.. என்பது தான் முக்கிய விடயமாக உள்ளது.

 

ஒருவேளை புலிப்பார்வை.. இவங்க பார்வைக்கு விரோதமாகப் போகுதோ என்று பயப்பிடுறாய்ங்களோண்னு.. தோனுது..! :icon_idea::rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்
4 பக்கங்கள் படத்தில் என்ன இருக்கிறது என்று படத்தை பார்க்காமலே சீமான் மீது சேறு அடித்து வைத்தவர்கள் தம்மை அதீத அறிவாளிகள் என்றும் தமக்கு தாமே பட்டம் அளிப்பு  விழாவும் செய்து பட்டம் பெற்றும் இருந்தனர்.
இப்போ சொந்த முகம் வெளியில் தெரிய வரும்போது ஓடி ஒழிந்தவர்கள். அவப்ப்போ மட்டும் வந்து மக்கள் சேவை செவ்வன செய்து போபவர்கள். 
இதற்குள் சாதி வெறியை லாபகமாக கொண்டுவருகிறார்கள்.
(ஆமா ..... ஆமா  நீங்கள்தான் தலை சிறந்த அறிவாளிகள் நாங்கள் இனி சாதியை  சொல்லித்தான் இந்த திரியில் அடிபட போகிறோம்)
இவர்கள் எல்லாம் தவறுதலாக இவற்றை செய்யவில்லை (ஒரு சில அறிவு பூங்காக்களை தவிர). எல்லாம் திரை மறைவில் ஏற்கனவே விலைபோய் இனத்தை விற்று பிழைப்பு பார்க்க எப்போதோ தொடங்கிய கூட்டம்தான். நாதாரி கூட்டத்திற்கு வக்கு இருந்தால் நேரு நேர் நின்று கேள்விகளுக்கு பதில் சொல்லி போக தெரியவேண்டும். இனத்தை விற்று பிழைக்கும் அடிமாடுகளிடம் அவற்றை நாம் ஒருபோதும் எதிர்பார்த்ததுமில்லை.
 
உயிரே படம் வந்தபோது நண்பர்கள் குழம்பிவிட்டார்கள் மணிரத்தினம் புலிகளுக்கு எதிராக படம் எடுத்து விட்டார் என்று, நான் தமிழ் படங்கள் பார்ப்பது குறைவு நேரம் இன்மை ஒரு காரணம். மணிரத்தினத்தின் புலி எதிர்ப்பை  பார்க்க படத்தை ஒரு நண்பரிடம் இருந்து வேண்டிவந்தது பார்த்தேன். அதில் ஏதும் புலி எதிர்ப்பு  இருப்பதாக  தெரியவில்லை. அவர்கள் சொல்கிறார்கள் மோனிஷா கொய்ராலா கரும்புலியாம் அவருக்கு காதல் வருவதாக  எடுத்தது  அருவேறுப்பனதாம். இவர்கள் அனாவசியமாக மணிரத்தினத்தின் கற்பனைக்குள்  போகிறார்கள்  மணிரத்தினத்தின் கற்பனை இவர்கள் கண்ணால்  காணும் கட்சியாக மட்டுமே இருக்கவேண்டும் அப்படி  என்று ஒரு முரண்பட்ட கோட்பாடை உருவாக்குகிறார்கள். 
 
மணிரத்தினம் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கும்போது அவர் தனக்கு தெரிந்த அறிந்த விடயங்களை  ஒரு நிழலாக வைத்தே உருவாக்க முடியும். (ஆனால் மக்களிடம் லாபகமாக நச்சை விதைக்க மீடியா  ஒரு (சினிமா) இலகுவான தேர்வாக பல அரசுகள் தெரிவு செய்து வைத்திருக்கிறார்கள். நான் கொலிவூட்  இருக்கும் அமெரிக்காவில் வசிக்கிறேன் அதை அறிவு உள்ளவர்கள் கண்ணூடாக பார்த்து வருகிறார்கள்)
 
தமிழ் சினிமாவை பொருத்தவரையில்...... யார் முதன் முதலில் வீரப்பன் என்ற பத்திரத்தை கற்பனையில் உருவாக்கினார்களோ. அதே கொப்பியைதான் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் புலிகள் என்று யாரை காட்டினாலும்  மாறி மாறி நான் சினிமா பார்க்க தொடங்கிய நாளில் இருந்து அடித்து வருகிறார்கள்.
 
தமிழ் சினிமாவில் எப்போதாவது யாரவது ஒருவரே ஒரு மாற்று பற்றி சிந்திக்கிறார். துரதிசடவசமாக அவை பெரும் தோல்வியை  சந்திக்கின்றன. அதுவே மாற்றி யோசிப்பதற்கு முற்று புள்ளி இடுகிறது.
அரைத்த மாவை அரைப்பது இலகுவானது தமிழ் ரசிகர் இடத்தில் வெற்றி பெறுகிறது பணம் வருகிறது.
 
இவற்றை சினிமாவிற்குள் இருந்துதான் நாம் மாற்றமுடியும்.
மக்கள்தான் மாற வேண்டும்.
 
(சீமானுக்கும் புலிபார்வைக்கும் இது வக்காலத்து இல்லை நிஜம் இப்படிதான் இருக்கிறது)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

 

 

இத்தனை போ் சொல்லுறாங்க ஊடகங்கள் முன்... ஆதரங்களோடு

 

படம் வரும் வரை காத்திருந்து இவா்களது வாக்குறுதிகள்... சாியா பிழையா என்பதை அறிந்து எதிா்காலத்தில் பயன்படுத்த முடியுமே அன்று தற்போது யாா் மீதும“ குற்றம் சொல்லுதல் சாியானதாகப்படவில்லை.

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறவுகள்
சீமானுக்கா குரல் கொடுக்கும் புலி தேசியவாதிகள் இந்த வீடியோ பதிவிற்கு என்ன பதில் தரபோகிரார்கள்????
 
சீமான் தமிழின விரோதி என்பதை அப்போதிருந்தே நாம் நாடி பிடித்து அறிந்து கடந்த 4 வருடமாக சொல்லிவர்கிறோம். இவர்கள் கண்ணை மூடி புலிகளை ஆதரித்து வந்த அதே பணியில் இப்போ சீமானை தலையில் தூக்கி ஆடுகிறார்கள்.
 
இந்த தமிழ் விரோத சினிமாவிற்கே சீமான் அதரவு கொடுத்த பின்பு அதுவும் மேடை ஏறி ......
இந்த லூசு ..... அலுகோசு ..... கூட்டம் என்ன சொல்லபோகிறது???
 
எல்லோருக்கும் மூளை தலையில்தான் இருக்கும். அடிப்படை மனிதனின் வடிவமைப்பு அப்படித்தான்.
உடல் முழுதும் மூளை இருந்தால் அது கோளாறு நல்ல ஆஸ்பத்த்ரியை நாடுங்கள் நலம் பெறுங்கள் என்று நாம் அன்போடு சொல்லும்போதெல்லாம். எமக்கு மூளை உடம்பு பூரா இருக்கு என்று பெருமை பேசும் புத்திசாலிகள் என்ன சொல்ல போகிறார்கள் ????
இல்லை  இல்லை இந்தப்படம் எம் தமிழீழ போராட்டத்தை,அதன் நியாயத்தை ,தர்மத்தை    உலகத்திற்கு எடுத்துச்சொல்வதேல்லாம் எங்களுக்கு அவசியமுமில்லை ,தேவையுமில்லை ............ பிரச்சனை சீமானை ஓட ஓட துரத்துவதே ............ :lol:
 
.[சீமான் எதிர்ப்பு  வாதிகளின் ஆதங்கத்தில் இருந்து ] :D  :D
 
  • கருத்துக்கள உறவுகள்

 

இத்தனை போ் சொல்லுறாங்க ஊடகங்கள் முன்... ஆதரங்களோடு

 

படம் வரும் வரை காத்திருந்து இவா்களது வாக்குறுதிகள்... சாியா பிழையா என்பதை அறிந்து எதிா்காலத்தில் பயன்படுத்த முடியுமே அன்று தற்போது யாா் மீதும“ குற்றம் சொல்லுதல் சாியானதாகப்படவில்லை.

நன்றி  ஐயா  பதிவுக்கு

 

இந்த திரியைப்பொறுத்தவரை

ஆரம்பத்திலிருந்தே அமைதியாக  இருந்தேன்

 

காரணம் ஒன்றுண்டு

யாரையும் பகைத்துக்கொள்ளும் நிலையில் நாமின்றில்லை

புதிதாக நண்பர்களைத்தேடாவிட்டாலும்

இருப்பவர்களை  இழக்காமலிருக்கணும்

இந்தப்பொறுப்பு  எம் எல்லோருக்குமுண்டு

 

ஆனால் இந்த திரி  ஏன் இந்தளவு எரிகிறது

பிரபாகரன்   மீதுள்ள  பாசத்தாலா?

பாலச்சந்திரன்  மீதான அனுதாபத்தாலா??

இல்லவே  இல்லை

பிரபாகரன் மீது பாசம் வைத்தவர்களை

பாலச்சந்திரனை  நேசிப்பவர்களை 

வசை  பாட ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து

தவமிருக்கும் எதுவித பொறுப்பமில்லாத கூட்டம்  மட்டுமே

இங்கு ஓநாய்களாக அழுகின்றன

 

புரிந்து கொண்டு

ஒதுங்கி  நடவுங்கள்

ஆயிரம் வேலைகள் காத்துக்கிடக்கின்றன.........

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ஐயா  பதிவுக்கு

 

 

தவமிருக்கும் எதுவித பொறுப்பமில்லாத கூட்டம்  மட்டுமே

இங்கு ஓநாய்களாக அழுகின்றன

 

 

நன்றி அண்ணா ,
credit card  பாவித்து facebookஇல் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்வோர் தான் அண்ணன் சீமானை எதிர்த்து ஆய்வு எழுதி தங்களின் பெயர கீழை போட்டு மகிழினம்  , எனக்கு சிரிப்பை தவிர வேர ஒன்றும் வர வில்லை  அந்த உறவு எழுதுவதை பார்த்து...........புலிபார்வை ஆடியோ வெளியிட்டு விழாவில் அண்ணன் சீமான் கலந்து கொள்ளாமல் தவிர்த்து இருக்க வேனும் , அதில் அண்ணன் சீமான் கலந்து கொண்ட படியால் என் போன்ற பல இளைஞர்களின் எதிர்ப்பை பார்க்க முடிந்தது........இதை சாட்டாய் வைத்து பல குழப்ப வாதிகளும் திராவிட கும்பள்களும் அண்ணன் சீமானை வசை பாடுவது கொஞ்சமும் நல்லாவே இல்லை...................
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.