Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் கரி ஆனந்தசங்கரியை ஆதரித்து இரா. சம்பந்தன் அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

I just wonder the Gary in this forum and Gary ananthasangari are same ? if not my apology to Gary...

Sorry guys for writing in English as I don't know how to write in tamil font. A quick introduction, I'm from Australia and long term reader of Yaarl.

I just noticed that Thuyavan has already clarified about the member Gary and Gari Aanandasangari. I didn't read when I post my first comment.

I just wonder the Gary in this forum and Gary ananthasangari are same ?

இருவரும்  ஒருவரல்ல என  பலமுறை 

யாழ் உறவு Gary ( in this forum)  இங்கு எழுதியுள்ளார்

அவரது சில  எழுத்துக்கள் ஆனந்தசங்கரியின் நடவடிக்கைக்கு எதிராகவும் இங்கு எழுதப்பட்டன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135771&hl=

Edited by விசுகு

  • Replies 79
  • Views 5.3k
  • Created
  • Last Reply

இதில் ஹரி என்ற பெயரில் எழுதும் உறுப்பினருக்கும், ஹரி ஆனந்தசங்கரிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவர் அவரின் ஆதரவாளாக இருக்கலாம் என்பதே என் ஐயம். ஹரி ஆனந்தசங்கரி மீது இவரது நடவடிக்கைகள் தவறான பார்வையைக் கொண்டுவரக் காரணமாக அமைந்திருப்பதை இப்போதே உணர்கின்றேன். அவர் அது பற்றிய தெளிவைக் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிடின் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது பற்றி அறியத் தரப்படும்.... ஹரி ஆனந்தசங்கரிக்குத் தமிழில் தட்டச்சு செய்ய வராது என்பதை நான் அறிவேன். சில தகவல்களைத் தட்டச்சு செய்ய என் நண்பர்களே உதவியுள்ளனர் என்பதால் இந்த விடயம் பற்றிய தெளிவு உண்டு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143857&hl=

என்னுடைய கருத்துக்களையும் ,பதிவுகளையும் வைத்து ஹரி ஆனந்தசங்கரியையும் என்னையும் ஒன்றாக கருதுவார்களாயின் சம்பந்தப்பட்டவர்களின் அறிவு அந்தளவுதான் .நான் எங்கேயும் ஹரி ஆனந்தசங்கரியின் பெயரை துஸ்பிரயோகம் செய்ததில்லை .

ஹரி ஆனந்தசங்கரிக்கு என்னை நன்றாகத் தெரியும் .

நெடுக்கு யாழ் இணையத்தில் பலரையும் கண்டபடி கேள்விகேட்டு விமர்சிக்க முடியுமாயின் என்னாலையும் அதே பாணியில் திருப்பி பதிலடி கொடுக்கமுடியும் .நெடுக்கை பொறுத்தவரையில் யதார்த்தத்தை ஏற்கமறுக்கும் வெத்து வேட்டு .

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதற்கான விளக்கத்தைத் திருப்பிச் சொல்கின்றேன். விடுதலைப்புலிகள் போராடிய காலப்பகுதியில் எமக்கு என ஒரு பலம் இருந்தது. அவர்களின் ஆயுத பலம் எங்களின் அடையாளத்தை நிலை நிறுத்த உதவியது. ஆனால் அவர்களின் ஆயுத மௌனத்தின் பின்னர், தமிழர்களை எப்படி வேண்டுமனாலும் கொல்ல முடியும் என்ற ஒரு விடயத்தைச் சிங்கள அரசு எடுத்தது. இன்று வரை செயற்படுத்திக் கொண்டும் இருக்கின்றது. அதைத் தடுக்க யாராலும் முடியவில்லை. சமீபத்தில் புலிகள் எனக் குற்றம்சாட்டி தேவிகன் உற்பட்ட 3 பேரைச் சிங்கள அரசு சுட்டுக் கொன்றபோது எங்கே தமிழ் தேசியத்தைக் காக்கின்ற சக்தி உங்களிடம் இருக்கின்றது . யாரையும் உங்களால் காப்பாற்ற முடியவில்லை என்ற பழி விழாது இருப்பதற்காக அவர்களைச் சிங்கள உளவாளிகள் என்று கதையை முடித்து விட்டீர்கள். இது தான் இன்றைய நிலைமை. எவனை வேண்டுமானாலும், புலி எனக் குற்றம் சாட்டிக் கொன்றுவிடச் சிங்கள அரசால் முடியும். இந்த நிலைமையில் சம்பந்தர் போன்றவர்கள், செய்கின்ற அரசியல்தளம் என்பது அப்படித் தான் கொண்டு செல்ல முடியும். இதில் இருந்து தமிழீழத்தைக் கொண்டு செல்ல முடியும் என்றால் உங்களைப் போன்ற இளைஞர்கள் சம்பந்தரைத் துரத்தி விட்டுத் தாரளமாகத் தலைமை ஏற்கலாம். அன்று அமிர்தலிங்கம் போன்றவர்கள் இருந்தபோது தானே தேசியத்தலைவர் போராட்டத்தை ஆரம்பித்தார். அப்படியிருக்க நீங்கள் ஏன் சம்பந்தரை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்..... மற்றும்படி சொல்கின்ற அட்டவணைகள் எல்லாம் காலத்திற்குதவாது.

முன்வைக்கப்பட்ட வினாக்கள்.. ஹரி ஆனந்த சங்கரியின் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்தான விளக்கம் கோரல் சார்ந்தது.

நெடுக்காலபோவன்.. அரசியல் செய்வாரா செய்யமாடாரா செய்கிறாரா என்பது அல்ல.

எங்களைப் பொறுத்த வரை.. தமிழீழம் என்ற இலட்சியம் வெல்லப்பட முடியும். மந்திரத்தால் அல்ல.. தொடர் செயற்பாடுகளால். அதற்கான விளக்கமும் மேலே அளிக்கப்பட்டுள்ளது.

ஹரி ஆனந்தசங்கரியின் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்து தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் உள்ளதால் தான் மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதோடு.. இவருக்கு எதிராக வேட்பாளரை கொணரவும்.. முயற்சிக்கிறார்கள். அந்தச் சந்தேகங்களை நீங்க வேண்டியது.. உத்தரவாதம் அளிக்க வேண்டியது மக்கள் முன் வேட்பாளராக உள்ள ஹரி ஆனந்த சங்கரியின் ஜனநாயகக் கடமை. அதனை செய்ய மறுத்தால்.. மக்கள் அவருக்கு.. ஆனந்த சங்கரிக்கு வழங்கிய அதே தீர்ப்பை வழங்க பின்நிற்பார்கள் என்று நினைக்கவில்லை..! :icon_idea:

நெடுக்கு யாழ் இணையத்தில் பலரையும் கண்டபடி கேள்விகேட்டு விமர்சிக்க முடியுமாயின் என்னாலையும் அதே பாணியில் திருப்பி பதிலடி கொடுக்கமுடியும் .நெடுக்கை பொறுத்தவரையில் யதார்த்தத்தை ஏற்கமறுக்கும் வெத்து வேட்டு .

மண்ணாங்கட்டி யதார்த்தம். ஹரி ஆனந்த சங்கரிக்கு கூஜா தூக்குவது தான் தமிழ் மக்களுக்கு விடிவுன்னா... உங்கட யதார்த்தம் சொல்லுது. போங்கைய்யா.. உங்க உளுத்துப்போன அவியல்களை வேற எங்கனும் கொட்டுங்க..!

(நெடுக்காலபோவன் என்ற கள உறவை நோக்கி கருத்து வைக்கப்பட்டால்.. வரும் பதில் கருத்துக்கும் இப்படித்தான் இருக்கும். தலைப்புச் சார்ந்த விடயத்தோடு கருத்தை வைத்தால்.. கருத்து பவ்வியமாக இருக்கும். எங்களுக்கும் பதிலடிக்கு.. அதிரடி கொடுக்க நல்லா வரும்.) :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்வைக்கப்பட்ட வினாக்கள்.. ஹரி ஆனந்த சங்கரியின் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்தான விளக்கம் கோரல் சார்ந்தது.

நெடுக்காலபோவன்.. அரசியல் செய்வாரா செய்யமாடாரா செய்கிறாரா என்பது அல்ல.

எங்களைப் பொறுத்த வரை.. தமிழீழம் என்ற இலட்சியம் வெல்லப்பட முடியும். மந்திரத்தால் அல்ல.. தொடர் செயற்பாடுகளால். அதற்கான விளக்கமும் மேலே அளிக்கப்பட்டுள்ளது.

ஹரி ஆனந்தசங்கரியின் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்து தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் உள்ளதால் தான் மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதோடு.. இவருக்கு எதிராக வேட்பாளரை கொணரவும்.. முயற்சிக்கிறார்கள். அந்தச் சந்தேகங்களை நீங்க வேண்டியது.. உத்தரவாதம் அளிக்க வேண்டியது மக்கள் முன் வேட்பாளராக உள்ள ஹரி ஆனந்த சங்கரியின் ஜனநாயகக் கடமை. அதனை செய்ய மறுத்தால்.. மக்கள் அவருக்கு.. ஆனந்த சங்கரிக்கு வழங்கிய அதே தீர்ப்பை வழங்க பின்நிற்பார்கள் என்று நினைக்கவில்லை..! :icon_idea:

மண்ணாங்கட்டி யதார்த்தம். ஹரி ஆனந்த சங்கரிக்கு கூஜா தூக்குவது தான் தமிழ் மக்களுக்கு விடிவுன்னா... உங்கட யதார்த்தம் சொல்லுது. போங்கைய்யா.. உங்க உளுத்துப்போன அவியல்களை வேற எங்கனும் கொட்டுங்க..!

(நெடுக்காலபோவன் என்ற கள உறவை நோக்கி கருத்து வைக்கப்பட்டால்.. வரும் பதில் கருத்துக்கும் இப்படித்தான் இருக்கும். தலைப்புச் சார்ந்த விடயத்தோடு கருத்தை வைத்தால்.. கருத்து பவ்வியமாக இருக்கும். எங்களுக்கும் பதிலடிக்கு.. அதிரடி கொடுக்க நல்லா வரும்.) :lol::icon_idea:

இங்கு மக்களிடம் சந்தேகம் இல்லை. மாறாக ஒரு சில அமைப்புக்கள் தான் ஹாி மீதான விசமப்பிரச்சாரங்களை செய்து வருகின்றன. இது அமைப்புக்கள் சாா்ந்த பிரச்சினையே அன்றி மக்கள் சாா்ந்த பிரச்சினை அல்ல. மக்கள் கேள்வி கேட்கவில்லை. கனேடிய தமிழ் ஊடகங்கள் குறிப்பாக உலகத்தமிழா் பத்திாிகை தவிா்ந்த ஏனைய பத்திாிகைகள் இவைப்பற்றி எந்த விமா்சனத்தையும் வைக்கவில்லை.

இவரோடு போட்டியிட்ட இளைய தமிழ் மகன் ஹாிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகி ஹாிக்கு தனது ஆதரவைத் தொிவித்தாா்.  அப்படியான புாிந்துணா்வில் எமது சமூகம் சொல்லும் போது இடையில் இவா்கள் யாா்?

நாங்கள்  கனடாவில் கண்கூடக பாா்ப்பவற்றை வைத்தே இங்கு கருத்துச் சொல்லுகின்றோம். ஹாி பாராளுமன்றத்துக்கு தொிவாக  வேண்டும் என்பது எமது தனிப்பட்ட விருப்பல்ல.  சமூகத்தின் விருப்பு

ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட அமைப்பு சாராத வேறுயாராவது பதவிகளுக்கு போட்டியிடும் போது இவவாறான பரப்புரைகள் தொடா்கின்றது. அது ஏன்? மக்களின் பெயாில் இவா்கள் எமமை இழிவு படுத்துகின்றனா். இதை தான் நீங்களும் பிாித்தானியாவிலிருந்து கொண்டு மக்களின் சந்தேகங்கள் என்று கூறுகின்றீா்கள்? 

குறிப்பு - குறிப்பிட்ட ஒரு அமைப்புக்கு மக்கள் செல்வாக்கு குறைகிறதென்றால் அதற்குாிய காரணத்தை அந்த அமைப்பு பாா்க்க வேண்டும். மாறாக மற்றவா்கள் மீது விமா்சனம் செய்து அதை சாி செய்ய கூடாது. இதற்க்குள் இளையவா்களையும் இழுத்துவிட்டு அவா்களின் சக்தியை வீண்விரையம் செய்வது ஆரோக்கியமான விடயம் அல்ல. 

வெட்டி வீராப்புக்களையும்...மொட்டை கடிதங்களும் கனேடிய தமிழ் மக்களுக்கு ஹாிக்கு எதிராக மட்டுமல்ல ஒவ்வொரு தமிழ் அரசியல் பிரமுகருக்கும் எதிராக நடைபெறுகின்றது. அதை குறிப்பிட்ட அமைப்பே தொடா்ந்து செய்கிறது. இது ஒரு நோயாகி விட்டது அவா்களுக்கு. குறிப்பிட்ட அமைப்பில் முடிவுகளை எடுக்க கூடிய ஒருவா் லங்கா சிறியில் போராட்டத்தின் தோல்விக்கான நிலையை விளக்கியிருந்தமை வேடிக்கையாக இருந்தது. இந்த வியாபாாிகள் என்று தான் தம்மை பற்றிச் சிந்திக்காமல் எமது இனத்தின் எதிா்காலம் பற்றிச் சிந்திா்பாா்களோ தொியவில்லை.

முப்பது வருடங்களாக செய்தததைத்தான் அவர்கள் இப்பவும் செய்கின்றார்கள் .அப்போ அதற்கு விசில் போட்டவர்கள் தான்  பலர் .கடைசி இப்ப என்றாலும் விளங்க்கியதே புண்ணியம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பது வருடங்களாக செய்தததைத்தான் அவர்கள் இப்பவும் செய்கின்றார்கள் .அப்போ அதற்கு விசில் போட்டவர்கள் தான்  பலர் .கடைசி இப்ப என்றாலும் விளங்க்கியதே புண்ணியம் . :icon_mrgreen:

முப்பது வருட போராட்ட காலத்தில் பாலுக்கும் நீருக்கும் வேற்றுமை தொிந்ததால் அன்றும் இன்றும் எது சாியோ அதை எழுதுகிறாா்கள்... மாற்றங்கள் தேவையான நேரத்தில் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் ஆனால் மாறவே மாட்டோம் என்றால்.....

நெடுக்காலபோவானின் கருத்துத்தான் எனதும்.  உலகத்தமிழர் இயக்கத்தைப் பற்றி 2009இற்குப் பின்னர்தான் பலருக்குத் தெரிய வந்தது.  22009இற்குப் பின்னரும் சிலர் அவர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள்.  அவர்கள் மாறியதும் காலம் கடந்துதான்.  ஒரு சிலர், இப்போதுதான் தெளிந்திருக்கிறார்கள்.   ஹரி தனது கனேடிய அரசியல் பிரவேசத்திற்காகத் தமிழ் தேசியத்தைப் பயன்படுத்தும் ஒரு சுயநலவாதி.    ஹரியைப் பற்றியும் இவர்கள் காலம் கடந்துதான் புரிந்து கொள்வார்கள்.  விட்ட தவறையே மீண்டும் மீண்டும் செய்வதில் தமிழனுக்கு நிகர் எவரும் இல்லை.  

தந்தை வழியே மகனும் இருந்தால்( இலங்கை ராச விசுவாசம்), சுமந்திரன், சம்பந்தர் வழிகள் தமிழருக்கு இன்னும் பல தொல்லைகளைக்கொடுக்கும். எனவே தமிழர் எல்லாம் தமிழர்மேல் அன்புள்ளவர்கள் அல்ல, ஆறு கடக்கும் மட்டும் தான்(தேர்தல்) பின்னர் நீர் ஆரோ நான் யாரோ.. இதனை உணர்ந்து கனடா தமிழ்மக்கள் சிந்தித்து செயல் படவேண்டிய விடையம்.

This is a very good point. Unless Gary cares about tamil affairs sincerely, I see no different between his dad and him. In the past there were lot of report/news showed Gary was againt Eelam policy (I may be wrong). The only way Gary will get mass support, he needs to express his view in Eelam policy via media

Proof?

தமிழ் நண்டு கதை தான் ஞாபகத்திற்கு வருது. 
ஒரு குஜராத்தி வென்றாலும் வெல்லலாம் ஆனால் ஒரு தமிழன் வெல்லக்கூடாது. நல்ல பொலிசி
  • கருத்துக்கள உறவுகள்

Proof?

தமிழ் நண்டு கதை தான் ஞாபகத்திற்கு வருது.

ஒரு குஜராத்தி வென்றாலும் வெல்லலாம் ஆனால் ஒரு தமிழன் வெல்லக்கூடாது. நல்ல பொலிசி

I have already said, I may be wrong.

But he met rajapakse, didn't he?....this clearly shows he intention ( this news was in Yaarl)

Also, I didn't say that he should be defeated by that Gujarati... As long as Gary's intention is good, people may support him.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா அமைப்பிலும் இருந்து சிலரைத் துரத்தி அடித்தபின்னர், மற்றவர்களைப் பற்றிக் புறணி சொல்லத் தான் தோன்றும். இப்போது ஹரி பதவி பற்றி எதிர்வுகூறல் சொன்னபின்பு " பார்த்திங்களா நான் சொன்னது தான் நடக்குது" என்று பெருமைபாடுவதற்கே நேரம் சரி. தங்களை குடுகுடுப்புக் காரி என்ற நினைப்பில்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவானின் கருத்துத்தான் எனதும்.  உலகத்தமிழர் இயக்கத்தைப் பற்றி 2009இற்குப் பின்னர்தான் பலருக்குத் தெரிய வந்தது.  22009இற்குப் பின்னரும் சிலர் அவர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள்.  அவர்கள் மாறியதும் காலம் கடந்துதான்.  ஒரு சிலர், இப்போதுதான் தெளிந்திருக்கிறார்கள்.   ஹரி தனது கனேடிய அரசியல் பிரவேசத்திற்காகத் தமிழ் தேசியத்தைப் பயன்படுத்தும் ஒரு சுயநலவாதி.    ஹரியைப் பற்றியும் இவர்கள் காலம் கடந்துதான் புரிந்து கொள்வார்கள்.  விட்ட தவறையே மீண்டும் மீண்டும் செய்வதில் தமிழனுக்கு நிகர் எவரும் இல்லை.  

தாங்களும் தமிழா்களுக்குள் அடக்கம் என்பதை மறக்க வேண்டாம் தமிழச்சி..!

தவறுகள் விடுவது இயல்பு அதை திருத்துவது மனிதத்தன்மை.. இந்த கால கட்டத்தில் நிதானமான முடிவுகளே எமக்கு வேண்டும்.

Proof?

தமிழ் நண்டு கதை தான் ஞாபகத்திற்கு வருது. 
ஒரு குஜராத்தி வென்றாலும் வெல்லலாம் ஆனால் ஒரு தமிழன் வெல்லக்கூடாது. நல்ல பொலிசி

ஒரு பிலிப்பினோ வெல்லலாம். ஆனால், ஒரு தமிழன் வெல்லக்கூடாது.  செய்தியைச் சரியாக வாசியுங்கள் தெனாலி.  இந்த ஹரியும் லிபரல் கட்சியில் வேறொரு தொகுதியில் வேட்பாளர் தெரிவுக்காக போட்டியிட்ட தமிழரான தியோவுக்கெதிராக ஒரு பிலிப்பினோவுக்கு ஆதரவு கொடுத்து மூன்று மாதங்கள்கூட முடியவில்லை.   ஹரி செய்தால் மட்டும் அது ஈனத்தனம் இல்லையா?  

அதைவிட, ஹரியின் தொகுதியிலேயே போட்டியிட்ட இன்னொருவரும் ஒரு தமிழர்தான்.  அவர் சில நாட்களுக்கு முன்னர் போட்டியிலிருந்து தானாகவே தன்னை விலத்திக் கொண்டார்.  

தாங்களும் தமிழா்களுக்குள் அடக்கம் என்பதை மறக்க வேண்டாம் தமிழச்சி..!

தவறுகள் விடுவது இயல்பு அதை திருத்துவது மனிதத்தன்மை.. இந்த கால கட்டத்தில் நிதானமான முடிவுகளே எமக்கு வேண்டும்.

விட்ட பிழைகளையே மீண்டும் மீண்டும் விடுகிறோம் நிதர்சன்.  இந்த முடிவும் பிழையானது என்றுதான் நான் கூறுகிறேன்.  இதனை நீங்கள் 2018இல் தான் அறிந்து கொள்வீர்கள்.   ஒருவர் தன்னைக் கனேடிய அரசியலுக்குள் புகுத்துவதற்காக என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்திருக்கிறார்?   எத்தனை பேட்டிகள்? எத்தனை அறிக்கைகள்?  இவ்வளவு பில்டப் தேவைதானா?  உலகத்தமிழர் பயன்படுத்திய உத்தியையே அவரும் இப்போது பயன்படுத்துகிறார்.  இளையோரை உ.த. எப்படிப் பயன்படுத்தியதோ அப்படித்தானே ஹரியும் பயன்படுத்துகிறார்?  என்னைப் பொறுத்தவரை, இவருக்கும் உ.த.விற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  

எல்லா அமைப்பிலும் இருந்து சிலரைத் துரத்தி அடித்தபின்னர், மற்றவர்களைப் பற்றிக் புறணி சொல்லத் தான் தோன்றும். இப்போது ஹரி பதவி பற்றி எதிர்வுகூறல் சொன்னபின்பு " பார்த்திங்களா நான் சொன்னது தான் நடக்குது" என்று பெருமைபாடுவதற்கே நேரம் சரி. தங்களை குடுகுடுப்புக் காரி என்ற நினைப்பில்....

எதிர்வுகூறல் சரியாகிப் போய்விடும் என்ற பயத்தில் என்ன நடந்தது என்றே தெரியாமல் எழுதுபவர்களை என்னவென்று சொல்வது?  சில அமைப்புகளுக்குள்ளேயே நான் உள்நுழையவில்லை.  ஆனால், துரத்தியடித்ததாகக் கதை விடுகிறார்கள்.   அமைப்புகளின் இரகசியங்கள் வெளிவரக்கூடாது என்பதற்காக இப்படியான கொள்ளைக் காரர்களின் ஊதுகுழல்கள் காலம் பூராவும் பொய்ப் பிரச்சாராம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.  எத்தனை கொப்புகள் தாவினாலும் ஊதுகுழல்கள் ஊதுகுழல்களாகவே இருக்கும் என்பதற்கு இந்தக் கருத்தே சாட்சியம்.  முழுப் பூசணிக்காயையே சோற்றில் மறைக்க முயன்றவர்கள்தானே இந்த அமைப்புகள்.  இவர்களின் வீராவேசங்களின் வேசங்கள் அம்பலத்திற்கு வரும்போது மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.   2009இற்குப் பின்னர் உ.த.வின் வேசம் கலைந்தது.  2015இல் மற்ற அமைப்பின் வேசமும் கலையப் போகிறது.  அந்த அமைப்பின் வேசமும் கலைந்தபின்பு, இந்த ஊதுகுழல்கள் எங்கு போய் ஒளியப் போகிறார்களோ தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்ட பிழைகளையே மீண்டும் மீண்டும் விடுகிறோம் நிதர்சன்.  இந்த முடிவும் பிழையானது என்றுதான் நான் கூறுகிறேன்.  இதனை நீங்கள் 2018இல் தான் அறிந்து கொள்வீர்கள்.   ஒருவர் தன்னைக் கனேடிய அரசியலுக்குள் புகுத்துவதற்காக என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்திருக்கிறார்?   எத்தனை பேட்டிகள்? எத்தனை அறிக்கைகள்?  இவ்வளவு பில்டப் தேவைதானா?  உலகத்தமிழர் பயன்படுத்திய உத்தியையே அவரும் இப்போது பயன்படுத்துகிறார்.  இளையோரை உ.த. எப்படிப் பயன்படுத்தியதோ அப்படித்தானே ஹரியும் பயன்படுத்துகிறார்?  என்னைப் பொறுத்தவரை, இவருக்கும் உ.த.விற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  

தமிழச்சி... நீங்கள் எந்த அடிப்படையில் தவறான முடிவு என்று கூறுகின்றீா்கள்,? அப்பாக்கு தப்பா பிள்ளை என்று சொல்வதன் அடிப்படையா? கனேடிய தமிழா் அரசியல் பாா்வையி்ன் அடிப்படையிலா? ஹாி எதுகுமே இதுவரை தமிழ் சமூகத்துக்கு செய்யவில்லை என்பதாலா? 2009 ஆண்டுக்கு பின்னா் ஹாி மாறிவிட்டாா் என்று வாதிடப் போகின்றீா்களா? 

ஒன்று மட்டும் புாியவில்லை இந்த எதிா்புக்கு ஆதரம் என்ன... எதற்காக இந்த எதிா்ப்பு... அதை தெளிவு படுத்தினால் போதும்... கனேடிய தமிழ் அரசியல் தலமைகள் நேரடியாக ஊடகங்களுக்கு அறிக்கை விடுங்கள் நாங்கள் தவறாக ஆதரவு தொிவிக்கின்றோம் என்றால் அதை மாற்றிக் கொள்கின்றோம். 

இங்கு கருத்து எழுதுபவா்கள் உலகத்தமிழா் இயக்கத்துககும்... பத்திாிகைக்கு எதிரானவா்கள் அல்ல. என்பதையும் அவா்களது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளை விமா்சிக்கிறோம் என்பதையும் புாிந்து கொள்ளுங்கள்

I have already said, I may be wrong.

But he met rajapakse, didn't he?....this clearly shows he intention ( this news was in Yaarl)

Also, I didn't say that he should be defeated by that Gujarati... As long as Gary's intention is good, people may support him.

முதலாவது ஒரு தமிழ் கருத்துக்களத்தில் தமிழில் உரையாட முயற்சி செய்யுங்கள்
இரண்டாவது ஒரு பொதுத்தளத்தில் ஒருவரைப் பற்றி ஒரு குற்றச்சாட்டை வைக்கும்போது அது உண்மையா பொய்யா அதற்கு ஆதாரங்கள் இருக்கா என்று ஆராய்ந்த பின் வைய்யுங்கள்
"I may be wrong" "I think he met rajapakse" என்று உங்களுக்கே சரிவர தெரியாத விடயத்தை ஒரு மக்கள் மத்தியில் பணியாற்றும் ஒருவரை நோக்கி சொல்வது அழகல்ல

ஒரு பிலிப்பினோ வெல்லலாம். ஆனால், ஒரு தமிழன் வெல்லக்கூடாது.  செய்தியைச் சரியாக வாசியுங்கள் தெனாலி.  இந்த ஹரியும் லிபரல் கட்சியில் வேறொரு தொகுதியில் வேட்பாளர் தெரிவுக்காக போட்டியிட்ட தமிழரான தியோவுக்கெதிராக ஒரு பிலிப்பினோவுக்கு ஆதரவு கொடுத்து மூன்று மாதங்கள்கூட முடியவில்லை.   ஹரி செய்தால் மட்டும் அது ஈனத்தனம் இல்லையா?  

அதைவிட, ஹரியின் தொகுதியிலேயே போட்டியிட்ட இன்னொருவரும் ஒரு தமிழர்தான்.  அவர் சில நாட்களுக்கு முன்னர் போட்டியிலிருந்து தானாகவே தன்னை விலத்திக் கொண்டார்.  

விட்ட பிழைகளையே மீண்டும் மீண்டும் விடுகிறோம் நிதர்சன்.  இந்த முடிவும் பிழையானது என்றுதான் நான் கூறுகிறேன்.  இதனை நீங்கள் 2018இல் தான் அறிந்து கொள்வீர்கள்.   ஒருவர் தன்னைக் கனேடிய அரசியலுக்குள் புகுத்துவதற்காக என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்திருக்கிறார்?   எத்தனை பேட்டிகள்? எத்தனை அறிக்கைகள்?  இவ்வளவு பில்டப் தேவைதானா?  உலகத்தமிழர் பயன்படுத்திய உத்தியையே அவரும் இப்போது பயன்படுத்துகிறார்.  இளையோரை உ.த. எப்படிப் பயன்படுத்தியதோ அப்படித்தானே ஹரியும் பயன்படுத்துகிறார்?  என்னைப் பொறுத்தவரை, இவருக்கும் உ.த.விற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  

ஒருவர் தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால் பேட்டிகள் அறிக்கைகள் எல்லாம் அவசியம் தானே? அனைவரும் செய்யும்  canvassing and endorsements தானே இவரும் செய்தார். இதில் என்ன பிழை?? வேண்டா பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் ரேஞ்சில இருக்கு உங்கட குற்றச்சாட்டு. 
உண்மையிலயே உங்கட பிரச்சனை தான் என்ன? கரி அப்படி என்ன தமிழருக்கு துரோகம் செய்தார்? மக்கள் புலத்திலும் நாட்டிலும் மிக தெளிவாக உள்ளார்கள். உங்களைப்போன்ற சிலர் தான் என்னும் யதார்த்த உலகுக்கு வராமல் இருக்கிறீர்கள். 
  • கருத்துக்கள உறவுகள்
மக்கள் புலத்திலும் நாட்டிலும் மிக தெளிவாக உள்ளார்கள். உங்களைப்போன்ற சிலர் தான் என்னும் யதார்த்த உலகுக்கு வராமல் இருக்கிறீர்கள்.

தெனாலி அண்ணே..

மேலே இப்படி எழுதும் நீங்கள் தான்... அப்புறம் ஹரி ஆனந்தசங்கரிக்காக பக்கம் பக்கமாக எழுதுகிறீர்கள். தெளிவாக உள்ள மக்களை நோக்கி.. எதுக்கு இவ்வளவு எழுதனும்..??! ஏன் சம்பந்தன் அறிக்கை கொடுக்கனும்..???! ஏன் மாற்று வேட்பாளரை நிறுத்தினம்.. குஜராத்தியை நிறுத்தினம் என்று அலறி அடிக்கனும்..???! ஒரு சிலரின் மாற்றுக் கருத்துக்கள் மீது ஏன்.. இவ்வளவு ஆத்திரம்..??! மக்கள் தானே தெளிவா இருக்கினமே.. அப்புறம் எதுக்குப் பயப்பிடனும்..???!

ராதிகா சிற்சபேசன்.. தேர்தலில் நின்றப்போ.. சம்பந்தன் அறிக்கை விட்டவரா...???! ராதிகா தமிழீழம்.. தமிழ்தேசியம்.. இனப்படுகொலைக்கு எதிராக கருத்துச் சொன்னாரா..???! அதுமட்டுமன்றி.. அவர் தேர்தலின் முன்னும் பின்னும் தன் தொகுதி சார்ந்த எல்லா இன மக்களையும் கெளரவப்படுத்தி வருவதையும் அவதானிக்க முடிகிறது..! அதேவேளை இந்திய ஊடகம் ஒன்றுக்கு இந்திய விஜயத்தின் போது பேட்டி அளித்த ராதிகா.. தமிழர்களின் சிறுதொகுதி வாக்குகளால் மட்டும் தன் வெற்றி தீர்மானிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்...!!!! இதனையும் கவனத்தில் எடுக்கனும்..!!!

ஆனால்.. இவர்.. இன்னொரு சிறுபான்மை இன குஜராத்தி மீது எதிர்ப்பு வளர்க்கிறார். ஒரு வெள்ளை மீது வளர்த்தால் கூட பறுவாயில்லை.. அவங்க சமாளிச்சுக்குவாங்க. அதுவும் எப்படியான எதிர்ப்பு.. தமிழர்கள் நீங்கள் குஜராத்தியை ஆதரிப்பதா.. என்பது போலானது..??!

தமிழர் விடுதலைக் கூட்டணி.. ஒரு காலத்தில் செய்தது என்ன..??! தமிழீழமே எமது இலட்சியம்.. அந்த இலட்சியத்துக்கே உங்கள் வாக்கு..!!! அப்புறம் அதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தலுக்குப் பின்னான நிலை என்னானது..????! அதே தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த சங்கரி.. சம்பந்தன் போன்றவர்களின் நிலை என்னானது..???!

அண்ணே.. கன்வசிங் என்றால்.. வேட்பாளர் மக்களுக்கு உண்மையைப் பேசுறார் என்று அர்த்தமில்லை. சில கடந்த கால நிகழ்வுகள்.. இவர்கள் மீது சந்தேகங்களை மக்களிடத்தில் கொணருகிறது. தேர்தலை நோக்கி.. பதவியை நோக்கி மக்களை தாஜா பண்ணிச் செயற்படும் சிலர்.. அவை கிடைத்த பின் மக்களை தூக்கி குப்பையில் வீசிவிட்டு.. தங்களின் மக்கள் விரோத சித்தாந்தங்களை செயற்படுத்த முனைவது.. சங்கரியில் இருந்து ஹரி வரை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கனடா அரசியலோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத.. தமிழீழமே கொள்கையாகக் கொண்டிராத.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்கும்.. சம்பந்தன்.. இவருக்கு எதுக்கு வக்காளத்து அறிக்கை தரனும்..????????????????????????! (ஒருவேளை கனடாவில் அகதி அந்தஸ்த கிடைத்து பின்.. கனடிய பாஸ்போட் கிடைத்த பின.. தமிழர்களின் கொள்கையும் இதுவாகிவிட்டதோ...???! )

இந்த பல ஆயிரம் லொடர் கேள்வி.. மக்களை சிந்திக்கச் செய்யல்லைன்னா.. அப்புறம்.. மக்கள் தாங்கள் எடுக்கும் முடிவுக்கும் அதனால் விளைய இருக்கும் தீமைகளுக்கும் அவர்களே பொறுப்பாவர்..! அப்புறம் அந்த ஒரு சிலர் சொன்னார்களே என்று வருத்தப்பட்டு எந்தப் பயனும் இல்லை.!!!

தாம் கடந்து வந்த பாதையை சற்று நிதானமாகக் கவனிக்க மக்கள் பழகிக் கொள்ள வேண்டும். எவன் தமிழன்.. என்ற அடையாளத்தை முன்னிறுத்தி உங்கள் முன் வாக்குக் கேட்கிறானோ.. அவனிடத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம்.. அவதானம் அவசியம்..??! ஏனெனில்.. எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வீழ்த்தவும் பலவீனப்படுத்தவும்.. இதே தமிழர்கள் தான் அதிகம் உதவியுள்ளனர்.. எதிரிகளுக்கு..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஏன் பயப்பட வேண்டும். குஜராத் காரனைக் கண்டு அலறியடிக்க வேண்டும் என்கின்றார்.... இதற்குப் பலர் விளக்கம் கொடுத்து இருப்பினும் திருப்பிச் சொல்ல வைப்பார்..திரும்பவும்... விதி...

குஜராத்காரன்- ஆனந்தசங்கரி என்ற போட்டியிருப்பின் அதில் பிரச்சனையில்லை. ஆனால் ஹரியைத் தமிழ் தேசியம் என்ற பெயரைப் பாவித்து விழுத்த முயன்ற சிலரின் அயோக்கியத்தனத்தால் தான் இங்கு எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. முதலாவது, தந்தை தப்பு என்றால் மகனும் அப்படித் தான் இருப்பார் என்ற விவாதத்தை வைத்தார்கள். அது எவ்வளவு தூரம் நியாயம்? இண்டாவது ஐநாவில் இனப்படுகொலையை அவர் வலியுறுத்தவில்லை என்ற பிரச்சனையை அது நடந்து பல நாட்கள் கழித்து பிரச்சனையாக்கினார்கள். அதுவும் அவர் தேர்தலில் போட்டியிடப் போன்றார் என்பதை அறிவித்தபின்னர்.... இப்போது 3வதாக சிங்கள ஆதரவாளர் என்று சிலர் கலந்த கொண்ட நிகழ்வில் இவர் கலந்து கொண்டார் என்பது. அவர்கள் கலந்து கொண்டதற்கு இவர் எப்படிப் பொறுப்பாக முடியும்... இவை தான் நீங்கள் மயிர் புடுங்க வேண்டிய விடயங்கள்...

ஹரி தேனும்பாலும் தருவார் என்று யாரும் வாதிடவில்லை. ஆனால் முறையற்ற காரணங்களை வைத்து அவர் தங்களுக்கு இசைவாக நடக்கவில்லை என்பதற்காக விழுத்த முனைவது தான் அயோக்கியத்தனம் என்கின்றேன். இத்தனை காரணங்களை வைத்தாலும், அடிப்படைக் காரணம், அமைப்புரீதியான ஏட்டி போட்டி. அதை நேரே தீர்க்காமல் இப்படித் தமிழ்த் தேசியத்தை வைத்து விளையாடுவது தான் ஆபத்தான விடயம். அது தங்களுக்குப் பிடிக்காத எவர் மீதும் பாவிக்கும் நிலைமையை உருவாக்கி விடக் கூடாது... மற்றும்படி உலகத்தமிழர், தமிழ்க் காங்கிரஸ், நாடுகடந்த அமைப்பு ஆகிய 3க்கும் இடையில் மற்றவனை விழுத்தவும், அடுத்தவனை விட முன்னுக்கு வர வேண்டும் என்ற ஏட்டிப் போட்டி இருப்பதால் அனைவருக்கும் தெரிந்த விடயத்தை உங்களுக்காக நேரம் செலவளித்துச் சொல்ல வேண்டுமான வெறுப்பினையைத் தான் ஏற்படுத்துகின்றது...

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
குஜராத்காரன்- ஆனந்தசங்கரி என்ற போட்டியிருப்பின் அதில் பிரச்சனையில்லை. ஆனால் ஹரியைத் தமிழ் தேசியம் என்ற பெயரைப் பாவித்து விழுத்த முயன்ற சிலரின் அயோக்கியத்தனத்தால் தான் இங்கு எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. முதலாவது, தந்தை தப்பு என்றால் மகனும் அப்படித் தான் இருப்பார் என்ற விவாதத்தை வைத்தார்கள். அது எவ்வளவு தூரம் நியாயம்? இண்டாவது ஐநாவில் இனப்படுகொலையை அவர் வலியுறுத்தவில்லை என்ற பிரச்சனையை அது நடந்து பல நாட்கள் கழித்து பிரச்சனையாக்கினார்கள். அதுவும் அவர் தேர்தலில் போட்டியிடப் போன்றார் என்பதை அறிவித்தபின்னர்.... இப்போது 3வதாக சிங்கள ஆதரவாளர் என்று சிலர் கலந்த கொண்ட நிகழ்வில் இவர் கலந்து கொண்டார் என்பது. அவர்கள் கலந்து கொண்டதற்கு இவர் எப்படிப் பொறுப்பாக முடியும்... இவை தான் நீங்கள் மயிர் புடுங்க வேண்டிய விடயங்கள்...

வருகின்ற கருத்துக்களின் அடிப்படையில் நோக்குகின்ற போது.. தமிழ் தேசியத்தை வைத்து இவரை விழுத்த இவர் ஒன்றும் பெரிய தமிழீழ அல்லது தமிழ் மக்கள் விடுதலையை நேசிக்கும் ஒருவராக இல்லை. தமிழ் தேசியத்திற்கு இவரால் ஆபத்து நேரலாம் என்ற அடிப்படையில் தான் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் இவரை மக்கள் தேர்வு செய்வது ஆபத்தாக முடியலாம் என்பது தான் வாதமாக உள்ளதே தவிர.. தமிழ் தேசியம் கொண்டு இவரை வீழ்த்த நினைக்கின  என்பது சரியான பார்வையோ.. சரியான வியாக்கியானமோ அல்ல..!

மேலும்.. தமிழ் மக்கள் விரோதமான.. அல்லது விரும்பாத ஒரு விடயத்தை கவனித்து தவிர்க்க முடியாத ஒரு நபர்.. எப்படி.. தமிழ் மக்களின் நலன்களை தேர்தல் வெற்றிக்குப் பின் கவனித்து நகர்வார் என்ற கேள்வி எழும்புகிறது.. அதனை இவர் ஐநாவில்.. தமிழ் மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தாதது.. சிங்கள பேரினவாத அரசின் கூலிகளோடு சேர்ந்து.. செயற்பட்டது உட்பட்ட உதாரணங்களை முன் வைத்து.. கேள்வியாக்கிறார்கள். இவர் சும்மா தன் பாட்டிற்கு சுய சார்பு மக்கள் தொண்டன் என்று சொல்லிச் செயற்பட்ட வேளையில்.. இவற்றை பெரிசாக தூக்கிப் பிடிக்க வேண்டும் என்றில்லை.. ஆனால்.. இன்று மக்கள் பிரதிநிதி என்று கனடிய பாராளுமன்றத்தில்.. இவர் போய் குந்த.. இவருக்கு தகுதிகள் இருக்கா என்று மக்கள்.. மக்கள் சார்ப்பில் உள்ள அமைப்புக்கள் ஆராய வேண்டியது அவசியம். தவறான ஒருவருக்கு தவறான உதாரணங்களை முன்வைத்து.. அவரின் கடந்த கால தவறுகளை மறைத்து.. வாக்களிக்கக் கோருவது கூட ஜனநாயக விரோதமாகும்.

ஹரி ஆனந்தசங்கரி.. தான்.. தவறு செய்யவில்லை. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான விளக்கம் அளித்து.. நான் தமிழீழத்துக்கோ.. தமிழ் தேசிய கோட்பாட்டியலுக்கோ எதிரானவன் அல்ல. ஈழத்தில் தமிழ் மக்கள் மீது நடப்பது இனப்படுகொலை தான்.. இனச் சுத்திகரிப்புத்தான்.. அதனை நாங்கள் சர்வதேசத்திடம்.. குறிப்பாக கனடிய பாராளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.. இவற்றின் அடிப்படையில் தான் சர்வதேசம் போர்க்குற்ற விசாரணைகளையும் மையமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்க சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்பேன்.. இதனை மக்களுக்கு உறுதியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலைப்பாட்டில் இருந்து நான் எப்போதும் மாறமாட்டேன் என்று... சொல்லட்டும்.எழுத்து மூல அறிக்கை மூலம்.. மக்கள் முன் வைக்கட்டும். அதுக்கு அப்புறம்.. பார்ப்போமே.. எந்த அமைப்பு.. அல்லது மக்கள்..இவரை எதிர்க்குதுன்னு.. என்ன காரணத்தை முன் வைக்குதுன்னு..??!

அப்படி எதுவுமே செய்யத் தூண்டாமல்.. ஹரி ஆனந்த சங்கரி நல்லவர்... வல்லவர்.. 6 வருசம் தான் அப்பன் மடியில் கிடந்தவர்.. 7 வருசம் முதல் அவதார புருஷர்.. அவர் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களோடு நின்றாலும்.. தமிழ் மக்களுக்கு நல்லவர்.. என்று சொல்வது.. அவ்வளவு.. ஆணித்தரமான நம்பிக்கைக்குரிய வார்த்தை ஜாலங்களாக இல்லையே..!!!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

” விசாரணைக் கமிஷன்களால் மட்டும் மக்களுக்கு நீதி கிடைத்து விடப் போவதில்லை ” – ஜெனீவா ஐ.நா மனித உரிமைக் கழகத்தில் கரி ஆனந்தசங்கரி !!

GARY-AT-GENEVA.jpg

கடந்த செப்டம்பர் 13, 2013, வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் நிகழ்ந்த ஐ.நா மனித உரிமைக் கழகத்தின் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றினார் கரி ஆனந்தசங்கரி.

கரி ஆனந்தசங்கரியின் உரையிலிருந்து சில பகுதிகள் ,

சிறிலங்கா போர் தொடர்பான விவகாரங்களில் உண்மையையும் , நீதியையும் வெளிக்கொணர ஐ.நா எடுத்து வரும் முயற்சிகளையும் சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையையும் Lawyer’s Rights Watch Canada வரவேற்கிறது. போர் நடந்து முடிந்த பகுதிகளில் உண்மையை வெளிக்கொணர்வதன மூலமாக மட்டுமே அமைதிப் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க முடியும். இருப்பினும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் , அவர் தம் குடும்பங்களுக்கும் இது போன்ற உண்மையை கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களால் இதுவரையிலும் எந்த பலனும் ஏற்படவில்லை. உலகத்தின் பல பகுதிகளிலும் 1980 இலிருந்து ஏற்படுத்தப்பட்ட 40 விசாரணைக் கமிஷன்களில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் அரசியல் மயமாக்கப்பட்டே உள்ளன. மேலும் இது போன்ற விசாரணைக் கமிஷன்களுக்கு போதுமான நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. இது போன்ற விசாரணைக் கமிஷன்களில் சாட்சியம் கூறுவோருக்கும் போதுமான பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை,

பல நாடுகளில் போருக்குப் பின்னதான சூழ்நிலைகளில் வெறுமனே விசாரணைக் கமிஷன்களை அமைப்பதை விட உங்களின் நேரடித் தலையீடு மூலமே உண்மைகளை அறிந்து கொள்ள முடியும் என்பது  சமீபத்தில் ஐ.நா மனித உரிமைக் கழகத்தின் உயர் ஆணையாளர் சிறிலங்கா சென்று வந்ததன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு பல விடயங்களில் உண்மையான விசாரணையை நடத்தவில்லை என்பதும் மாப்ரும் தோல்வியையே சந்தித்துள்ளது என்பதையுமே உங்களின் முழுமையான அறிக்கைக்குப் பின்னர் அறிந்து கொள்ள  முடிகிறது. குறிப்பாக பாகுபாடு, சுதந்திரம். பாதிக்கப்பட்டவர்களை அணுகுதல் உள்ளிட்ட அடிப்படை விடயங்களில் கூட அரசால் அமைக்கப்பட்ட விசாரணை அமைப்பு சரியாகச் செயலாற்றவில்லை. அதுமட்டுமல்லாமல் அரசினால் அமைக்கப்பட்ட விசாரணை அமைப்புக்கள் வழங்கிய நல்லிணக்க  தீர்வுகளைக் கூட நடைமுறைப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் சிறிலங்க  அரசாங்கம் எடுக்கவில்லை.

போரின் பின்னர் காணமல் போன விடுதலைப் புலிகள் அரசியல் தலைமை சசிதரனின் மனைவி ஆனந்தி சில நாட்களுக்கு முன்னர் கீழ்க்காணும் உண்மைகளைக் கூறியுள்ளார்.

” போரின் சாட்சியங்களாக நாங்கள் உன்று உங்கள் முன்னர் நிற்கிறோம். காணமல் போன எங்கள் குடும்ப உறுப்பினர்களை கண்டறிய எத்தனையோ ஆர்ப்பாட்டங்களை நடத்தி விட்டோம். அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்னரும் கூட சாட்சியமளித்துளோம். ஆனால் இதுவரையிலும் ஒன்றுமே நடக்கவில்லை”.

http://ekuruvi.com/gary-anandasangarees-speech-on-friday-september-13-2013-in-geneva-at-unhrc/ekuruviTamilNews

இது போன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான சிறிலங்க மக்கள் தங்கள் கதைகளை சொல்ல காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடமிருந்து உண்மையைப் பெற்று , தொடர்ந்தும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவ வேண்டும் . என்னவே சுதந்திரமான சர்வதேச விசாரனையை மேற்கொண்டு உண்மையையும் , நீதியையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நீங்கள் பாடுபட வேண்டும் என ஜெனீவா மனித உரிமைக் கழகத்தில் பேசினார் கரி ஆனந்தசங்கரி.

DSC08630-L.jpg

Tagged: 2013 in Geneva at UNHRCGary AnandasangareeGary Anandasangaree’s speech on FridaySeptember 13கரி ஆனந்தசங்கரி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா.. இந்த விடயம் எனக்கும் நன்றாக நினைவில் உள்ளது. இங்கே.. எதிர்ப்பாளர்கள் பூடகமாகச் சொல்கிறார்களே தவிர ஆதாரம் எதையும் தரக் காணவில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு நல்லாத்தான் இருக்கு. ஆனால் செயலில், சிங்கக்கொடி புகழ், பின்கதவு ஆதரவுகளும் சரியாகப்படவில்லை. தமிழர்களுக்கு அனுபவபட்டுத்தான் பாடம் படிக்கவேண்டும் என்றால் யார்தான் தடுக்க முடியும்.

சம்பந்தர், விக்கியர், சுமந்திரன், உருதிரகுமார், ராதிகா, எல்லார் சீலையும் கிழிச்சு எறிஞ்சாக நம்ம விண்ணர்கள். தமிரர் அரசியலில இறன்கினா பீ வாலியால பூசை போடுறது நம்ம பாரம்பரியம்கோ.

கரியுக்கு கரி பூசி வரவேற்க வாருங்களே தமிழ் சிங்கங்களா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.