Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மச்சான் - தங்கச்சி ஊர்போய் வந்த சங்கதி தெரியுமோ..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பாத்துவிட்டும் துணிவாப் போகும் எங்கட சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹா .....ஹா செம ஜாலி 
வாங்கோ ....வாங்கோ வாங்கிறத்துக்கு வாங்கோ .....

அங்க அசைலம் அடிச்சுப்போட்டு இங்க வந்து பம்மாத்தா காட்டுறீங்கோ .....?

போய் ஊரில இருங்கோ எண்டவுடன் கிருமி கலக்குது ....ஆனா ஊரில ஏதோ பாலும் தேனும் ஓடிறதா வெளியில இருக்கிற மத்தவனிட்ட கதை விடுறது.... :D  :D 
 
  • கருத்துக்கள உறவுகள்

துரைசண்ணா இன்றும் 80களில் நிற்கிறார்

இழு இழு என்ற இழுக்கிறார்...

சொல்லவந்தவிடயம் ஒரு செக்கன்

விமானநிலையத்திலிருந்து கார் எடுக்க 5 நிமிடம்..... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையோடை கதையாய் கேள்வியோண்டு கேக்கிறன்........ வெளிநாடுகளிலை எடுத்த சிற்றிசனையும் திருப்பி பறிக்க சட்டங்கள் ஏதும் இருக்கே?  :rolleyes:

நல்ல கரு..ஆனால் படு மோசமான நடிப்பு/திரைகதை
அதுசரி immigrant விசாவில் உள்ளவர்களை வலுவான காரணங்கள் இல்லாமல் திருப்பி அனுப்ப முடியுமா? இது சும்மா பயம் காட்ட எடுத்த காணொளி போல உள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

கதையோடை கதையாய் கேள்வியோண்டு கேக்கிறன்........ வெளிநாடுகளிலை எடுத்த சிற்றிசனையும் திருப்பி பறிக்க சட்டங்கள் ஏதும் இருக்கே?  :rolleyes:

அவுஸ் சட்டபிரகாரம் பறிக்கலாம்/கடவுச் சீட்டுக்களை முடக்கி வைக்கலாம். நாட்டின் நலன்களுக்கு கெடுதல் விளைவிப்பவர்களையும், விளைவிப்பவர்களுக்கு துணை புரிபவர்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும், விசாரணை மற்றும் தடுப்புக்காவல் காரணங்களுக்காக நாடுகடத்த முடியும். அண்மையில் மத்திய கிழக்கு இஸ்லாமிய தீவிரவாதப் பிரச்சனை காரணமாக எழுபதுக்கு மேற்பட்ட அவுஸ் குடியுரிமை உடையவர்களின் கடவுச் சீட்டுக்களை ASIO மற்றும் DFAT கூட்டாக நிறுத்தியமையும் அவர்களில் 18 வயதுடைய ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக வந்த ஒருவர் திங்கள் சுட்டுக் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 2012 சிட்னி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிலரினது குடியுரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கின்றது.    

  • கருத்துக்கள உறவுகள்

கதையோடை கதையாய் கேள்வியோண்டு கேக்கிறன்........ வெளிநாடுகளிலை எடுத்த சிற்றிசனையும் திருப்பி பறிக்க சட்டங்கள் ஏதும் இருக்கே? :rolleyes:

கனடாவில் பறிக்கலாம். ஆனால் இங்கே பிறந்த பிள்ளைகளுக்கு அப்படிச் செய்யமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கதையோடை கதையாய் கேள்வியோண்டு கேக்கிறன்........ வெளிநாடுகளிலை எடுத்த சிற்றிசனையும் திருப்பி பறிக்க சட்டங்கள் ஏதும் இருக்கே?  :rolleyes:

பறிக்கலாமா

முடியாதா என்பதற்கு...

1- நீங்கள் அதை உங்களுக்கு தேவை என்பதாக நடந்து கொள்வதிலும்

2- அவனுக்கு நீங்கள் தேவையா என அவனது சுமை  சொல்வதிலும் தான் இது இருக்கு..

யாருடையதோ வீடு

அவனது சட்டம்

அவனது பாராளுமன்றம்..

நாம் என்ன முடிவெடுக்க... :(

கனடாவில் பறிக்கலாம். ஆனால் இங்கே பிறந்த பிள்ளைகளுக்கு அப்படிச் செய்யமுடியாது.

கனடாவில சும்மா எல்லாம் பறிக்க மாட்டார்கள். 2 காரணங்களுக்காக கனடிய பிரஜா உரிமை பறிக்கப்படலாம். ஒன்று பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல் மற்றயது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக வேறு ஒரு நாட்டு நீதிமன்றத்தில் நிரூபனமானால். இந்த இரண்டு காரணங்களுக்கு மட்டுமே கனடிய பிரஜா உரிமை பறிக்கப்படும். 

நான் "சும்மாவெல்லாம்" பறிக்கலாம் என்று சொல்லவில்லையே.. :D

மேலும் நீங்கள் சொன்னதுபோல அந்த இரண்டு காரணங்கள் மட்டுமல்ல. வேறு காரணங்களுக்காகவும் பறிக்கலாம்.

நான் "சும்மாவெல்லாம்" பறிக்கலாம் என்று சொல்லவில்லையே.. :D

மேலும் நீங்கள் சொன்னதுபோல அந்த இரண்டு காரணங்கள் மட்டுமல்ல. வேறு காரணங்களுக்காகவும் பறிக்கலாம்.

வேறு என்ன காரணங்கள் என்று சொல்ல முடியுமா? :wub:

வேறு என்ன காரணங்கள் என்று சொல்ல முடியுமா? :wub:

நிறைய (மாபியா மாதிரி) சுத்துமாத்து...ஆட்கடத்தல், கொடூரமான குற்றங்கள் (அடிதடியாக இருக்கலாம்) போன்றவற்றுக்கும்...மற்றது கனடிய சட்டங்களை அறவே மதிக்காமல் இருந்தும் அத்தோடு  நீங்கள் பிறந்த நாடு உங்களை திருப்பி ஏற்கும் என்றால் உங்கள் குடியுரிமையை பறித்து விட்டு அனுப்பப்படலாம் என்று நினைக்கிறேன்...ஆனால் உங்களை ஏற்க ஒரு நாடு இருக்கவேண்டும்...

(காரணம் இன்னொருனாட்டின் குடியுரிமை கிடைத்தால் இலங்கை பிரஜாவுரிமை போய்விடும்..)

மேலேகூறியவை சரியா பிழியா தெரியாது...செவிவழி கேள்வி.....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

வேறு என்ன காரணங்கள் என்று சொல்ல முடியுமா? :wub:

நான்தான் மேலே சிலவற்றை எழுதியுள்ளார்.. குடியுரிமை விண்ணப்பம் செய்தபோது வாசித்த ஞாபகம் உள்ளது. சிஐசி இணையத்தில் தேடினால் கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.cic.gc.ca/english/department/media/backgrounders/2011/2011-07-27.asp

இதன்படி முன்று காரணங்களை முக்கியமாக குறிப்பிடுகிறார்கள்..

1) தவறான பிரதிநிதித்துவம் (false representation)

2) ஏமாற்றல் (fraud)

3) தெரிந்துகொண்டே உண்மை ஏதுக்களை மறைத்தல் (knowingly concealing material circumstances)

இவை முன்றும்தான் அடிப்படை.. பயங்கரவாதம், கொலை கொள்ளை எல்லாவற்றையும் இந்த அடிப்படைகள் முலம் சமாளித்து வெளியே அனுப்பமுடியும்.

அதாவது பூர்வீக நாட்டிலேயே இவர் குழப்படியானவர். ஆனால் அதை மறைத்து (fraud), தன்னை நல்லவராகக் காட்டி (false representation) குடியுரிமை வாங்கிவிட்டார் என்று நிறுவினால் அவரின் குடியுரிமை பறிபோக வாய்ப்பு உள்ளது.

குடியுரிமை விண்ணப்பத்தில் பூர்வீக நாட்டிலோ வேறு நாட்டிலோஎந்தக் குற்ற அமைப்புடனும் தொடர்பு கொள்ளவில்லை; எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடில்லை என்றெல்லாம் கையெழுத்து வைத்துத்தான் குடியுரிமையை பெற்றுக்கொள்கிறார்கள்..

  • தொடங்கியவர்

அப்படிப் பார்த்தால்.. கனடாவில் செற்றிலான 90% நம்மவர்களின் பிரஜா உரிமையும் கான்சல் ஆகனும்.

ஊருக்குத் தெரியவே.. கள்ள பிறப்பு அத்தாட்சி பத்திரம்.. கள்ள பாஸ்போட்.. கள்ள வீடு உடைந்த படங்கள்.. கள்ள கதைகள்.. சிங்கள பொலிஸ்.. சிறை அதிகாரிகளிடம் காசு கொடுத்து வாங்கின கள்ளக் கடிதங்கள்.. இவை மூலம் அசைலம் அடிச்சவையும்.. குடும்ப இணைவில் ஈடுபட்டோரும்..குடியேறினவையும் தான் அதிகம். அவை எல்லாம் எப்படி.. இப்ப கனடா பிரஜைகளாக ஊர் போய் வருகினம்..?????!

கனடா மட்டுமல்ல.. ஐரோப்பிய.. அவுஸிலும் இதே விளையாட்டுத்தான்..!!! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் பார்த்தால்.. கனடாவில் செற்றிலான 90% நம்மவர்களின் பிரஜா உரிமையும் கான்சல் ஆகனும்.

நமக்குத் தெரியவே.. கள்ள பிறப்பு அத்தாட்சி பத்திரம்.. கள்ள பாஸ்போட்.. கள்ள வீடு உடைந்த படங்கள்.. கள்ள கதைகள்.. சிங்கள பொலிஸ்.. சிறை அதிகாரிகளிடம் காசு கொடுத்து வாங்கின கள்ளக் கடிதங்கள்.. இவை மூலம் அசைலம் அடிச்சவையும்.. குடும்ப இணைவில் ஈடுபட்டோரும்..குடியேறினவையும் தான் அதிகம். அவை எல்லாம் எப்படி.. இப்ப கனடா பிரஜைகளாக ஊர் போய் வருகினம்..?????!

கனடா மட்டுமல்ல.. ஐரோப்பிய.. அவுஸிலும் இதே விளையாட்டுத்தான்..!!! :D:lol:

நெடுக்ஸ்..

அநேகமாக எல்லாவற்றுக்கும் இங்கு சட்டம் (law) இருக்கிறது. :D ஆனால் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவதற்கு (enforcement) பணம் செலவாகும். ஆகவே பாதிப்புகள் அதிகம் இல்லாதவரையில் செயற்படுத்தமாட்டார்கள். :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..

அநேகமாக எல்லாவற்றுக்கும் இங்கு சட்டம் (law) இருக்கிறது. :D ஆனால் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவதற்கு (enforcement) பணம் செலவாகும். ஆகவே பாதிப்புகள் அதிகம் இல்லாதவரையில் செயற்படுத்தமாட்டார்கள். :wub:

அந்த காப்பில கடா வெட்டின ஆக்கள் தான் கனடா பிரஜைகளாக ஊருலாப் போய் வருகினமோ. இதில நடப்பு வேற.. கனேடியர்கள் என்று..! :lol::D

தகவலுக்கு நன்றி
ஆக மொத்தம் இந்த நாட்டு சட்டங்களை மதித்து நடந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. 2001/2002 காலங்களில் பல தமிழ் ஆயுதகுழுக்கள் நாடு கடத்தப்பட்டார்கள். ரோட்டில நின்டு கொடி பிடிக்கிற ஆக்கள் கொஞ்சம் கவனமா இருக்க வேணும்.  :icon_idea:
 
படிக்க வந்தன் எண்டிட்டு வெளிநாடுகளில வருட கனக்கா பெஞ்ச தேய்கிற ஆக்களுக்கு என்ன மாதிரி?  :wub:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூளைசாலிகளை மேற்கு எப்போதும் விசா கொடுத்து வாங்கிவிடுகிறார்கள்.கனடா கூட புள்ளி அடிப்படையில் ஆட்களை எடுக்கிறது.தற்போது டாக்டர் பட்டம் படிக்க வருபவர்கள் கனடாவில் நிரந்தரமாக இருக்க முடியும் என்று சொல்லி அவர்களையும் வாங்கிவிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரோட்டில கொடி பிடிக்கிறதுக்கு சிற்றி சனை பறிக்க முடியாது. தீவிரவாதத்திற்கு ஊக்கபடுத்தினால் பறிக்கலாம். அதுவும் கோட்டில் வாதாடலாம். தீவிரவாதத்திற்கு ஆதரவளித்தாலும் ( பணம் பொருள் கொடுத்தல்) பறிக்க முடியாது.

அவருடைய முதலாவது கேள்வியை வாசித்தவுடேனேயே எனக்கு தெரியும் இவர் எங்கு வந்து நிற்பார் என்று.
 
எப்படியாவது இந்த கொடியை வேண்டி வைத்துவிட வேண்டும் என்றுதான் துடியாய் துடிக்கிறார்கள்.
 
அப்போதே புரியவேண்டும் இது சாதரண கொடி இல்லை என்று.
அதை புரிய அந்த அளவிற்கு ............... இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.