Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிநாட்டை அமைப்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல; சத்தியக்கடதாசி மூலம் அறிவிப்பு

Featured Replies

mavaifnf%20xj876543.jpg

தனி நாடு அமைக்கும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ தமிழரசுக் கட்சிக்கோ கிடையாது என உச்ச நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சத்தியக்கடதாசி மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
தனிநாடு ஒன்றை அமைக்கும் நோக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நிதியரசர்களான ரோஹினி மாரசிங்க, சந்திர ஏக்கநாயக்க ஆகியோர் இந்த மனுக்களை விசாரணை செய்தனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
அந்த மனுக்கு விளக்கமளிக்கும் வகையிலேயே, சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும், அதனை பல தடவைகள் பகிரங்கமாக அறிவித்துள்ளதாகவும் சத்தியக்கடதாசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
  • கருத்துக்கள உறவுகள்
தனிநாடு அமைக்கும் நோக்கம் இல்லை! – சத்தியக்கடதாசியை சமர்ப்பித்தார் மாவை. 
[Tuesday 2014-09-23 07:00]
mavai-senathiraja-150.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கோ, இலங்கையில் தனி நாடு ஒன்றை அமைக்கும் நோக்கம் கிடையாது என்று உச்ச நீதிமன்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சத்தியக்கடதாசி ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். தனிநாடு ஒன்றை அமைக்கும் நோக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் செயற்பட்டு வருவதாக குற்றம்சுமத்தப்பட்டு, அவற்றைத் தடை செய்யக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணையின் போதே, இந்த சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
   
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும், அதனை பல தடவைகள் பகிரங்கமாக அறிவித்துள்ளதாகவும் சத்தியக்கடதாசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுக்கு விளக்கமளிக்கும் வகையிலேயே, சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=117324&category=TamilNews&language=tamil
 
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத அதியுயர் அரசியல் மேதாவிகளைக் கொண்டது சிறீலங்கா அரசு. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற யேசுபிரானின் கொலையை விசாரிப்பதற்கு நீதிமன்றம் செல்ல முயலும் காலமிது. :lol:  :D   

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் காரணம் என நினைக்கிறேன். இப்படி சத்தியக் கடதாசி கொடுக்காவிட்டால் கட்சியையும் தடைசெய்து, அதன் தலைவரையும் பிடித்து உள்ளே தூக்கிப் போட்டுவிடுவார்கள். :o

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் அமைப்போம் ஆனால் தனிநாடு அமைக்க மோட்டோம் என்று சொல்லுகிறார்....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சரி

இறுதிக்குனியல்

இனி  எல்லாத்தீர்வையும் சிங்களம் வைக்கப்போகுது.. :(

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி உட்பட இலங்கையில் அரசியல் செய்த எல்லாரும் 6வது திருத்தத்துக்கு அமைய - தனிநாடு அமைக்க மாட்டோம் என்று சத்திய வாக்கு கூறியே அரசியல் கட்சியாக பதிந்து கொண்டார்கள்.

குதிரை கஜனும், அஞ்சா நெஞ்சன் கஜன் பொன்னரும் கூட இப்படி ஒரு உறுதிமொழி எடுத்த பின்னே எம்பி ஆகினர்.

மாவை இப்போ அரைப்பது பழைய மாவை ;)

ஒரு நிர்வாக அலகு வேண்டும் அதை நாம் திறம்பட செய்து காட்டி எம்மை வளர்த்த பின் நாம் பிரிவதா சேர்வதா என்று முடிவு எடுக்கலாம் இப்ப இருக்கும் நிலையில் நம் கையில் ஒன்றும் இல்லாமல் நேரடியா  நாடு தா என்றால் எவனும் எமக்கா பேச மாட்டான் ஆகவே எழும்ப முடியாமல் இருக்கும் எனக்கு இது ஒரு ஊன்று கோலா இருக்கும் நிமிர்த்து நிக்க ..

சமாதன காலத்தில் உலகம் கூறிய இடைக்கால நிர்வாக அலகை ஏற்று இருந்தால் கொஞ்சம் நாம் வளர்த்து இருக்கலாம் வாய் வீரம் பேசும் தேசியவாதிகளை வன்னி நம்பியதன் விளைவு இன்று எதுவும் இல்லாமல்  :(  :(

வாயால் வடைசுடும் காலம் முடிந்து போயிட்டு இனியாவது ஒரு ராஜதந்திர அரசியல் செய்வம் ..

மூணுவேளை சாப்பிட்டவன் பற்றி கவலை விடு ஒருவேளை சாப்பிடாதவனுக்கு ஏதாவது செய் இப்ப அதுதான் ஈழ நிலைமை .

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் நீங்கள் சொல்வது சரியே. ஆனால் இடைக்கால அரசை அரசுதான் குழப்பியது. புலிகள் அரசின் ராஜதந்த்ஹிர நகர்வுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தமக்கு தெரிந்த ஒரே வழியான ஆயுத வழிக்கு திரும்பினர். அரசு விரும்பியதும் இதையே.

இல்லை அண்ணா கருணா பிளவு கூட இதன் அடிப்படையில்தான் நடந்ததது பேச்சு குழுவில் வந்த கருணாவும் ...பாலசிங்கம் ஐயாவும் அதை ஏற்று கையொப்பம் இட தயாரா இருந்தனர் தாங்கள் அங்கு சென்று தலைவருடன் அதை பற்றி விளக்கினால் புரிந்து கொள்வார் என்று ஐயா சொன்னார் ஆனால் சுப  அதுக்கு சம்மதம் தெரிவிக்க வில்லை வன்னி சென்று மத்திய குழு கூடி முடிவு சொல்லும் என்று விட்டு வந்தார் ..

அதுவே கடைசியா கருணாவை சந்தேக பார்வைக்கு கொண்டுசென்றது என்பது வேறு கதை ஆனால் அதை ஏற்பதில் பெரும்பாலான ஆக்கள் விரும்பம் கொண்டே இருந்தனர் விட்டு கொடுத்தால் பலவீனம் என்று நினைத்து பேரம் பேசபட்டது என்பதுதான் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ

ஐயோ

எங்க கொண்டு   போய் தலையை  முட்ட......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாட்டை சிறீலங்காவின் சிங்கள மேலாதிக்க அரசியல் நீதி சட்டத்திட்டங்களுக்குள் அமைக்க முடியாதே தவிர... உலக அளவில் அப்படி என்றில்லை.

எத்தனையோ நாடுகள் பொதுசன வாக்கெடுப்பு மூலம் ஜனநாயக ரீதியில் மக்கள் விருப்புக்கு அமைய பிரிந்து போயுள்ளன. அத்தகைய ஒரு நிலை நோக்கி இலங்கைத் தீவை நகர்த்தி வர வேண்டிய பொறுப்பு.. சர்வதேசத்திடமும்.. சர்வதேசம் எங்கும் பரந்துள்ள தமிழர்களிடமும் உள்ளது. தாயக மக்களின் விருப்புகள் ஜனநாயக வழியில் வெளிப்படுத்தப்பட அந்தச் சந்தர்ப்பம் அமைக்கப்படுதல் அவசியம்..!

இங்கு சிலர்.. விடுதலைப்புலிகளின் தலைமை.. அரசியல் பீடம் எடுத்த முடிவுகள் சார்ந்து கதை அளக்கலாமே தவிர.. உண்மை நிலையை விளக்கவோ.. விளங்கிக் கொள்ளவோ.. யாராலும் முடியாது. காரணம் மிஞ்சி இருப்பதில் கூச்சல் போடுவது எல்லாம்.. வாலுகளும்.. துரோகிகளும்.. கேடிகளுமே தவிர.. வேறு யாரும் இல்லை..!

விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு வேறு. இன்றைய பிராந்திய.. களச் சூழல் என்பது வேறு. வேறுபட்ட சூழலுக்கு ஏற்ற வகையில்.. முடிவுகளை எடுக்க வேண்டியதும்.. தந்திரோபாயமாக காய் நகர்த்த வேண்டியதுமே சாதுரிய அரசியலாகும். அதற்காக அடிப்படை இலட்சியங்களை தாரை வார்த்தலாகாது. விட்டுக்கொடுப்புக்கள்.. பிரதான இலக்குகளை அடையும் வகைக்கு அமைதல் வேண்டுமே தவிர.. சோரம் போதலுக்காக இருக்கக் கூடாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

பூ என்றும் சொல்லலாம் புய்ப்பம் என்றும் சொல்லலாம் அண்ணே ...

பாலஸ்தீனம் ...நேபாளம் எல்லாம் அதுதான் நிலை குறிப்பிட்ட கால ஆயுத போராட்டம் பின்னர் ஜனநாயக இணைவு போராட்டம் நாங்கள் தொடர்ச்சியா ஆயுதம் வேணும் என்று நிக்கிறம் காரணம் வெளிநாட்டில் இருக்கவேணும் எல்லே ..

இதை சுட்டி காட்டினா துரோகி ..வாலு ..கேடி ...இப்படி பல சீன் போடுபவன் தல  :D  :icon_idea:

பூ என்றும் சொல்லலாம் புய்ப்பம் என்றும் சொல்லலாம் அண்ணே ...

பாலஸ்தீனம் ...நேபாளம் எல்லாம் அதுதான் நிலை குறிப்பிட்ட கால ஆயுத போராட்டம் பின்னர் ஜனநாயக இணைவு போராட்டம் நாங்கள் தொடர்ச்சியா ஆயுதம் வேணும் என்று நிக்கிறம் காரணம் வெளிநாட்டில் இருக்கவேணும் எல்லே ..

இதை சுட்டி காட்டினா துரோகி ..வாலு ..கேடி ...இப்படி பல சீன் போடுபவன் தல :D:icon_idea:

அஞ்சரன் 2009 ஆயுத போராட்ட தோல் விக்கு பிறகு ஆயுத போராட்டத்தை வரயுறுத்தி எவரும் இங்கு கருத்து எழுதியதை நான் வாசிக்கவில்லை. ஆயுத போராட்டத்தை யாரோ வலியுறுத்தியதாக உங்கள் கற்பனையில் அல்லது கனவில் கண்டீர்களா? அல்லது x என்ற ஒரு நபர் அவ்வாறு நினைத்தார் என்ற உங்கள் கற்பனைக்கு பதிலளித்துள்ளீர்களா? அஅல்லது அப்படி எழுதுவது தான் லேற்றஸ் பாஷன் என்பதால் யாரோ அப்படி நினைத்திருப்பார் என்று இல்லாத ஒரு நபருக்கு பதில் எழுதியுள்ளார்களா?

Edited by tulpen

தனி நாடு தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லாத ஒன்று. 
இலங்கையில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்துவதும் இன்றைய கால கட்டத்தில் கனவில் மட்டும்தான் நடக்கும்.
ஜனநாயக இணைவு மட்டுமே யதார்த்தபூர்வமானதும் சர்வதேசத்தின் ஆதரவை பெறக்கூடியதுமாகும். 13, 13+, சமஸ்டி பாதைதான் தமிழருக்கு சற்று விடிவைத் தரும். 

அஞ்சரன் 2009 ஆயுத போராட்ட தோல் விக்கு பிறகு ஆயுத போராட்டத்தை வரயுறுத்தி எவரும் இங்கு கருத்து எழுதியதை நான் வாசிக்கவில்லை. ஆயுத போராட்டத்தை யாரோ வலியுறுத்தியதாக உங்கள் கற்பனையில் அல்லது கனவில் கண்டீர்களா? அல்லது x என்ற ஒரு நபர் அவ்வாறு நினைத்தார் என்ற உங்கள் கற்பனைக்கு பதிலளித்துள்ளீர்களா? அஅல்லது அப்படி எழுதுவது தான் லேற்றஸ் பாஷன் என்பதால் யாரோ அப்படி நினைத்திருப்பார் என்று இல்லாத ஒரு நபருக்கு பதில் எழுதியுள்ளார்களா?

அவ்வாறு சொல்ல காரணம் எவர் என்ன தீர்வு பற்றி பேசினாலும் உடனம் அவர் துரோகி விலை போயிட்டார் சம்மந்தர் யாரு எங்களுக்கு சமஸ்டி கேட்க அப்படி இப்படி எல்லாத்துக்கும் எதிர் கருத்து சொல்லுறம் என்றால் என்ன காரணம் நாம் ஆயுத போராட்டத்தை தான் விரும்பிறம் என்பதே தானே ..

ஏதாவது ஒரு இடைக்கால தீர்வு வரட்டும் பின்னர் முன்னோக்கி போவது பற்றி பேசலாம் அதை விடுத்து என்ன சொன்னாலும் துரோகி கேடி வாலு என்றால் யாரு பேசுறது அங்குள்ள மக்களுக்கு இங்கின கீபோட்டில் புரட்சி நாடு பிடிக்கும் என்று இன்னும் ஒரு சாரார் நம்பிக்கொண்டு இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அப்படிச் சத்தியக் கடதாசி கொடுக்கலாம் என நினைக்கின்றேன். தனிநாட்டை உருவாக்கும் எந்த வழி முறையும் எனக்குத் தெரியாது. அதற்காக ஒன்றுமே கிழிக்கவும் இல்லை. அதற்காக ஆயுதம் தூக்கிப் போராடப் போவதுமில்லை. அப்படியிருக்கின்றபோது, ஏன் தேவையில்லாமல் சிங்கள அரசுக்கு வேலை வைப்பான்...

தம்பி இன்னும் உந்த கடுதாசியை குடுக்க இல்லையோ...??

நான் ஏற்கனவே குடுத்தாச்சுது... !! எங்கட சனத்தை சொந்த காணிகளிலை இருந்து துரத்தாமல் இருக்கிறதுகளை புடுங்காமல் விட்டாலே போதும் எண்டதுதான் மாற்று வேண்டுகோள்... !!

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைபுலிகளின் இரண்டு முக்கிய அரசியல் பிரமுகர்கள் உள்வீட்டில் என்ன நடந்தது ...
எதை விட்டு கொடுக்கவில்லை 
எப்போ ஆயுத போரை முன்னேடுத்தார்கள் என்று.
மனம் திறந்து அளவளாவுகிறார்கள் ................... தமிழ் ஈழ விடுதலை  போராட்ட வரலாறு  பற்றி அறிய விரும்புவோர்கள் வாசித்து நலம் பெறுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை சொல்லீற்ரார். சரியாதானிருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.