Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சு.சாமி ஈழத்தமிழர்களைப் பற்றி எவ்வளவு பேசி இருப்பார். அப்ப எல்லாம் பேசாமல் இருந்த அதிமுக வினர்.. இன்று அவர் வீட்டு மீது கல்வீச்சு. ஏதோ சுப்பு அடிவாங்கினால் சரி. :)

  • Replies 118
  • Views 14.6k
  • Created
  • Last Reply

ஜனநாயகம் உயிரோடு இருக்க சுதந்திரமான நீதித்துறையே காரணம்: ஜெ.வுக்கு எதிராக வாதாடிய வக்கீல் ஆச்சாரியா

 

 

பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடி முக்கியமான பல திருப்பங்களை வழக்கில் ஏற்படுத்தியவர் முன்னாள் அரசு வக்கீல் வி.எஸ்.ஆச்சாரியா. இவரை அரசு வக்கீலாக தொடர விடக் கூடாது என்பதற்காக, அதிமுகவின் தூண்டுதலால், அப்போதைய பாஜக தலைமையிலான கர்நாடக அரசு வெகுவாக முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

27-acharya34-600.jpg

 

இதன்பிறகு பவானிசிங் அரசு தரப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரோ குற்றவாளிகள் தரப்புக்கு சாதகமாக வாதிடுவதாக எதிர்க்கட்சிகளும், சில நேரம் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவுமே குற்றம் சாட்டினர்.

 

இந்நிலையில் ஆச்சாரியா இந்த தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: முதலில் நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவை பாராட்ட வேண்டும். ஒரு நேர்மையான, திறமையான நீதிபதியை இந்த வழக்கை விசாரிக்க நியமித்து ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலா சிறப்பான முடிவைஎடுத்தார். நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க சுதந்திரமான நீதித்துறைதான் காரணம். அதே நேரம், இந்த வழக்கில் ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்ய முடியும். இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.

 

 

http://tamil.oneindia.in/news/india/p-v-acharya-praises-indian-judiciary-211820.html

 

 

 


ஜெயலலிதா மீது நான் புகார் கொடுக்க, திமுக பெயர் வாங்கிவிட்டது: சு. சாமி

 

டெல்லி: நான் தான் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு குறித்து முதலில் புகார் அளித்தேன், ஆனால் திமுக அதற்கான பெயரை வாங்கிவிட்டது என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

 

27-jayalalithaa-should-meet-rajapaksa-su

 

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 18 ஆண்டுகளாக நடந்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிபதி குன்ஹா அறிவித்துள்ளார். மேலும் அவரின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது.

 

 

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில், சொத்துக்குவிப்பு குறித்து ஜெயலலிதா மீது நான் தான் முதல் ஆளாக புகார் அளித்தேன். ஆனால் தற்போது திமுக பெயரை வாங்கிவிட்டது. இந்த அளவு தான் தண்டனை கிடைத்துள்ளது என ஜெயலலிதா மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றார். இதற்கிடையே சென்னையில் உள்ள சுப்பிரமணியன் சாமியின் வீட்டை அதிமுகவினர் கல்வீசித் தாக்கியுள்ளனர்.

 

http://tamil.oneindia.in/news/india/i-filed-complaint-dmk-taking-credit-swamy-211821.html

 

Edited by பகலவன்

சென்னை நகரில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது -

சாலைகளில் வாகனங்களைநிறுத்தி அதிமுகவினர் ஆர்பாட்டம் -

அனைத்து வாகனங்களும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தம் -

அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிப்பு... அவசரம் அவசரமாக ஊழியர்கள் புறப்பட்டனர் -

ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்குத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் : தமிழிசை சவுந்திரராஜன்

 

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் என்றால் மக்கள் சாக தான் செய்வார்கள் என்று அன்று.....

ஊழல் செஞ்சா சிறைக்கு போக தான் வேணும் இன்று......

  • கருத்துக்கள உறவுகள்

ஏசி ரூமை  ரெடி பண்ணுங்கப்பா 

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் என்றால் மக்கள் சாக தான் செய்வார்கள் என்று அன்று.....

ஊழல் செஞ்சா சிறைக்கு போக தான் வேணும் இன்று......

 

அப்படி தெரிந்திருந்தும் தமிழக மக்கள் அவரைத்தான் பெரும் அதிகபெரும்பான்மையுடன் தெரிவு செய்தார்கள். இப்போ சட்டமா? ஐனநாயகமா வெல்லணும்?? :(

தீர்ப்பு எதிரொலி.. மதிய உணவை சாப்பிட மறுத்த ஜெயலலிதா.. அமைச்சர்களும் சாப்பிடவில்லை

 

 

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவதற்கு தாமதமானதால் முதல்வர் ஜெயலலிதா மதிய உணவை சாப்பிடவில்லை. அவர் சாப்பிடாததால் அமைச்சர்களும் உணவு சாப்பிடாமல் தவிர்த்து விட்டனர். இன்று காலையிலேயே கோர்ட்டுக்கு வந்து விட்டார் ஜெயலலிதா. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா உள்ளிட்டோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். மேலும் அமைச்சர்கள் ஓபன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவுடன் வந்திருந்தனர்.

 

தீர்ப்பு முதலில் முற்பகல் 11 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பிற்பகல் 1 மணிக்குத் தள்ளிப் போனது. அப்போதும் தீர்ப்பு வரவில்லை. மாறாக 3 மணிக்கு சற்று முன்புதான் தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு தாமதமானதாலும், முதல்வர் ஜெயலலிதா தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியதாகவும் அவர் மதிய உணவு சாப்பிடுவதும் தள்ளிப் போனது.

 

27-jayalalitha8245-600.jpg

 

 

உரிய நேரத்தில் அவர் உணவு சாப்பிடவில்லை. தனக்கு சாப்பாடு தேவை என்றும் அவர் கூறவில்லை. இதனால் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கூட உணவு சாப்பிடவில்லை. மேலும் தீர்ப்பை அறியக் காத்திருந்த அதிமுகவினர் பலரும் கூட சாப்பிடாமல் கோர்ட் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வெளியே காத்துக் கிடந்தனர்.

 http://tamil.oneindia.in/news/india/jaya-defers-lunch-211828.html


நல்ல நேரம்… ராகுகாலம்… எமகண்டம் பார்த்தும் ஜெ.வுக்கு எதிராக வந்த தீர்ப்பு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துச்சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். ஜெயல்லிதாவிற்கு பாதகமான தீர்ப்புதான் வரும் என்று ஏராளமான ஜோதிடர்கள் அறிவித்தனர். ஒருசிலர் சாதகமான தீர்ப்பு வரும் என்று கூறினார். எனினும் ஜெயலலிதாவின் ஜோதிட நம்பிக்கை பொய்த்துப்போனது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது.

 

சிம்மராசிக்கு பாதகம்

 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிம்ம ராசி, மிதுன லக்னம். அந்தவகையில், ஜெயலலிதாவின் ஜாதகம் வலிமையும் வல்லமையும் கொண்டதாக இருக்கிறது. இன்றைய கோச்சார நிலவரப்படி ராசிக்குரிய குரு 6, 8, 12-ஆம் இடத்துக்கு வருவது சிறப் பான அம்சம் கிடையாது. என்று ஜோதிட சிகாமணி டி.வி.ராஜாசெந்தில்குமார் தெரிவித்திருந்தார்.

 

பெரிய அளவில் பாதிப்பில்லை

 

சுமார் 17 ஆண்டுகளாக நடந்து வந்துள்ள இந்த வழக்கின் தீர்ப்பு, 12 ஆம் இடத்துக்கு குரு வந்துள்ள இந்த காலக்கட்டத்தில் வருகிறது என்பதை வைத்து கணிக்கும் போது சற்று யோசிக்க வைக்கிறது. அதனால், கிரக சூழல்களை ஆராய்ந்ததில் குறைவான பாதக முடிவுகளே வர வாய்ப்பிருக்கிறது. அதாவது, பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

 

குருபார்வை சரியில்லையே

 

ஜூன் 11 வரை 11 ஆம் இடத்தில் இருந்தார் குரு. எல்லாவிதமான நன் மைகளும் இந்த ஜாதகக்காரருக்கு அள்ளி அள்ளித் தந்தார். குறிப்பாக, நாடாளு மன்ற தேர்தலில் ஜெயலலிதா அதிக வெற்றிகளை குவிக்க காரணம் குரு 11-ஆம் இடத்தில் இருந்ததுதான். ஜூன் 13-லிருந்து குரு 12-ஆம் இடத்துக்கு வந்ததால்தான் பாதகம்'' என்று கூறியுள்ளார்.

 

பதவியிழப்பு, அவமானம்

 

சிம்ம ராசி, மக நட்சத்திரம் கொண்ட முதல்வர் ஜெயலலிதாவின் தசா புக்தி எப்படிப்பட்டதாக இருந்தாலும் கோச்சாரம் என்பது சிம்ம ராசிக்கு எதிர் மறையாகவே இருக்கிறது. சிம்ம ராசிக்கு 12-ல் குரு வந்துள்ளார். இது மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். புராணத்தில் ராவணனின் ராசிக்கு குரு 12-ல் வந்த போதுதான் ராவணன் பதவிகளை இழக்க நேர்ந்தது. முடிதுறந்தான் ராவணன். அவமானப்பட்டான் என்று "அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

 

சனியால் கெடுதல்

 

அதேபோலத்தான் 12-ல் உள்ள குரு, இந்த ராசிக்குரியவருக்கும் கெடுதலையும் அவமானத்தையும் ஏற்படுத்துவார். மேலும், சிம்ம ராசிக்கு கடந்த ஏழரை நாட்டு சனியில் எல்லாவிதமான யோகங் களையும் கொடுத்துவிட்டார். அடுத்து வரும் சனிப்பெயர்ச்சி, கொடுத்த யோகங்களுக்கு எதிர்மறையாகத்தான் கொடுப்பார். இந்த சனிப்பெயர்ச்சியானது 2014 டிசம்பரில் நடக்கவிருக்கிறது. அப்போது ராசிக்கு 4-ல் அமர்ந்து ஜென்ம நட்சத்திரத்தை சனி பார்க்கும் காலத்தில் மாபெரும் கெடுதலையே செய்வார் என்றும் கூறியுள்ளார். சனியின் இந்த ஆக்ரோஷம், சனிப் பெயர்ச்சி நடக்கும் டிசம்பருக்கு 3 மாதத்திற்கு முன்பாகவும் காட்டும் அல்லது சனிப் பெயர்ச்சி நடந்த பிறகும் காட்டலாம். ஆகவே, சுருங்கச் சொன்னால் சிம்ம ராசிக்கு 4-ல் வரும் சனியும் 12-ல் உள்ள குருவும் பதவியில் இருப் பவர்களை நீடிக்க விடமாட்டார்'' என்று கூறியுள்ளார் ஜோதிடர் சுப்ரமணியம்.

 

ஜெ.க்கு பின்னடைவு

 

"ஜோதிடர்களிடம் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகம் என்பது அவரது பிறந்த தேதி 24.2.1948 என்றும் பிறந்த நேரம் மாலை 5.30 என்றும் கூறுகிறது. இவருடைய ஜாதகத்தில் சக்கரயுகம் இருக்கிறது. அதனால் தான் அரசாளும் யோகம் இவருக்கு கிட்டியது. இவருக்கு ஜென்ம நட்சத்திரம் மகம். ராசி சிம்மம். நட்சத்திரமும், ராசியும் இவருக்கு சாதகமாக இருந்தாலும் கோச்சாரப்படி சற்று பின்னடைவே நடக்கும். டிசம்பருக்குள் தீர்ப்பு வந்தால் பாதகமாகும். அதற்கு மேல் எனில் சாதகமாகலாம் என்று ஜோதிட பண்டிட் எம்.ஏ. பெருமாள் கூறியிருந்தார்.

 

தண்டனை கிடைக்காது

 

சிம்ம ராசியில் உள்ள சனி டிசம்பருக்கு பிறகு விருச்சிகத்துக்கு தாவி விடுகிறார். அதனால் இப்போதைய கிரக சூழல்கள் படி ஜாதகக்காரருக்கு பாதகமாக இருந்தாலும் பெரிய அளவில் தண்டனைக் கிடைக்காது'' என்கிறார். பாதகமான சூழ்நிலை முதல்வர் ஜெயலலிதாவை பொறுத்த வரை தற்போது அவருக்கு குரு தசை நடக்கிறது. அவரது மிதுன லக்னத்தின்படி இந்த குருபகவான் பாதகாதிபதி ஆகிறார். அதாவது, மிகப்பெரிய துன்பத்தை தரக்கூடிய அமைப்பில் இருக்கிறார் என்று ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கூறியுள்ளார்.

 

 

ஏற்றங்கள் அதிகம்

 

அவருக்கு குரு தசை இன்னும் 13 வருடங்களுக்கு மேல் நடக்கவிருக்கிறது. அதன் மூலம் ஜெயலலிதா இன்னும் சில உன்னதங்களை எட்டுவார். இறுதிவரை சரிவில்லாத ராஜயோக ஜாதகம் அவருடையது. எந்த ஒரு ராஜயோகமும் தொடர்ச்சியாக இருப்பதில்லை எனும் விதிப்படி இடையில் சில தற்காலிக பின்னடைவுகள் அவருக்கு இருந்தாலும் தற்போதைய ஜோதிட நிலவரப்படி அவருக்கு இனி ஏற்றங்களே அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

கைவிட்ட ஜோதிட நம்பிக்கை

 

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கோவில்களில் யாகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. நல்லநேரம், ராகுகாலம், எமகண்டம் பார்த்துதான் அவர் நீதிமன்றத்திற்கே கிளம்பினார். ஆனால் அந்த நம்பிக்கைகள் எதுவுமே ஜெயலலிதாவிற்கு கை கொடுக்கவில்லை. 

http://tamil.oneindia.in/news/tamilnadu/jayalalithaa-assets-case-astrology-failed-save-jayalalithaa-211824.html

Edited by பகலவன்

ஜெயலலிதாவின் தீர்ப்பு! திமுக அலுவலகம் மீது கல்வீச்சு தமிழகத்தில் பதட்டம்!

kadai%20adaipu.JPGஜெயலலிதா மீதான வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,  கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில்  கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியல், கல் வீச்சு சம்பங்கள் நடந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை திமுக அலுவலகம் மீது  கல்வீச்சு சம்பவம் நடந்தது. போலீசார் திமுக அலுவலத்தில் இருந்தவர்களை வெளியேறு கூறினர். அடுத்தடுத்து மூன்று முறை கல்வீச்சு சம்பவம் நடந்தது.போக்குவத்து நிறுத்தப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/34153/57//d,article_full.aspx

18 ஆண்டுகள் இழுத்தடித்து கடுமையான நீதிபதியிடம் தானே மாட்டிக் கொண்ட ஜெ.

 

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளாக எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ இழுத்தடித்த ஜெயலலிதா, தம் மீதான தீர்ப்பு மிகக் கடுமை காட்டக் கூடிய ஒரு நீதிபதியிடம் சிக்கும் என்று அவரே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடப்பட்டு 18 ஆண்டுகளாகிவிட்டது.

 

27-cunha-300.jpg

 

ஆனால் எத்தனை வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்த வழக்கை இழுத்தடித்தது ஜெயலலிதா தரப்பு. ஒவ்வொருமுறையும் சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாற்றி மாற்றி வழக்குப் போட்டு இழுத்தடித்துப் பார்த்தார்.

 

அட தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட எத்தனையோ மனுக்களைத் தாக்கல் செய்துப் போட்டுவிட்டார். உச்சநீதிமன்றத்தில் நேற்றும் கூட ஒரு வழக்கைப் போட்டு தீர்ப்பை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பார்த்தது ஜெயலலிதா தரப்பு. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

 

இத்தனை போராட்டத்துக்கும் இழுத்தடிப்புக்கும் பயனில்லாமல் ஊழல் வழக்குகளில் மிகக் கடுமையான தீர்ப்பளிக்கக் கூடிய நீதிபதியிடம் போய் தானே சிக்கி, தற்போது குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருப்பதை ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

http://tamil.oneindia.in/news/tamilnadu/after-an-18-year-court-battle-judge-cunha-convicted-jaya-asset-case-211826.html


அதிமுகவினர் வன்முறை எதிரொலி- தமிழகத்துக்கான பஸ்களை கேரளாவும் ரத்து செய்தது

 

-ஜெயலலிதா, சசி, இளவரசி, சுதாகரனுக்கான தண்டனை விவரம் சிறிது நேரத்தில் அறிவிப்பு

 

Edited by பகலவன்

10421346_734571773280770_538008496746283

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நாங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை  :(

ஜெ. தீர்ப்பு எதிரொலி... சென்னையில் மாநகர பேருந்துகள் நிறுத்தம் -

பல இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடல்

-நெல்லை, நாகர்கோவிலில் ரயிலை மறித்து அதிமுகவினர் போராட்டம்

-தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை, இரவுக் காட்சிகள் ரத்து

 

இந்த விடயத்தில் நாங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை  :(

உங்க நடுநிலை கண்டு கண் வேர்க்குது அண்ணே  :D

 

புலிகளால் ஆபத்து ..

 

சும்மா இருந்த வைகோ போன்றோரை தூக்கி வருடமா போட்டின்ங்க ..

 

இவ்வளவு செய்தவர் இன்று தண்டனை பெறும்போது மகிழாமல் என்ன செய்வது சொல்லுங்க அண்ணே சொல்லுங்க ..

காலையிலேயே மிக சந்தோசமான செய்தி

 

அடுத்தது கருணாநிதி, ஸ்ராலின் மற்றும் கனிமொழி போன்றோரும் உள்ளுக்குள் போக வேண்டும்.

 

புதிய அரசியல் தலைமுறை அங்கு தோன்ற வேண்டும்.

சென்னையில் ஜெ.வின் போயஸ் தோட்டம் வீடு முன்பு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி!

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html

இத் தீர்ப்பில் மோடியின் பங்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்



சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறைப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறை வெடித்துள்ளது.

சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜெ.வுக்கு சிறை... தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறை.. பாதுகாக்க போலீஸ் இல்லை!

கருணாநிதி கொடும்பாவி எரிப்பு

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கருணாநிதியின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. கடைகளை அடைக்க்ச சொல்லி ஒரு கும்பல் வலியுறுத்தியதால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆலங்குள்தில் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சங்கரன்கோவிலில் 2 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.

மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிறிய அளவிலான வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதுக்கோட்டை - திமுக அலுவலகம் மீது கல்வீச்சு

புதுக்கோட்டையில் உள்ள திமுக அலுவலகம் மீது அதிமுகவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து 3 முறை கல்வீ்ச்சு சம்பவம் நடந்ததால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். தனியார் பேருந்துகள் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டு விட்டன. சாலைகளில் போக்குவரத்து குறைந்து பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ஜெ.வுக்கு சிறை... தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறை.. பாதுகாக்க போலீஸ் இல்லை!

மதுரையில் கல்வீச்சு - கடையடைப்பு - பஸ் போக்குவரத்து பாதிப்பு

மதுரையில் பல இடங்களில் கல்வீச்சுச் சம்பவங்கள் நடந்துள்ளன. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கட்சி அலுவலகத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளனர்.

கர்நாடக, கேரளப் பேருந்துகள் நிறுத்தம்

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வழியாக வரும் பேருந்துகளும், அதேபோல கர்நாடகத்தில்

இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

 

 

குற்றவாளி எனத் தீர்ப்பு - ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற அதிமுக முயற்சி

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப் பட்டதையடுத்து, அவரை ஜாமீனில் கொண்டுவருவதற்கான முயற்சியில் அதிமுகத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் குற்றவாளி என தீர்ப்பளித்தார் நீதிபதி குன்ஹா.

 

இதற்கிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா எப்படியும் விடுவிக்கப் பட்டு விடுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் அதிமுகவினர். சில இடங்களில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்கூட்டியே அதிமுகவினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

 

ஆனால், பிற்பகல் 2.30 மணிக்கு ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படுமோ என்ற தவிப்பு அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக பெங்களூரில் ஒன்று கூடி அவர்கள் ஆலோசித்துள்ளனர். அப்போது, ஜெயலலிதாவுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும் என்றும், மேலும் அவரை உடனடியாக ஜாமீனில் எடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.oneindia.in/news/tamilnadu/admk-tries-jayalalitha-bail-211832.html


ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை.


ஜெயலலிதாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க அரசு வழக்கறிஞர் கோரிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சராக உள்ள ஒருவரை

சிறையிலிட முடியுமா?

சட்டத்தில் ஓட்டைகள் இருக்குமே..?

செய்திகளை தொடர்ந்து இணைப்பவர்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்லதொரு மாற்றம் தமிழகத்திற்கு. இதைப் பயன்படுத்தி திமுக மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் சரி.. திராவிட அரசியல் அழிந்து தமிழ்தேசிய அரசியல் எழுச்சி பெறும் நாளே பொன் நாளாம்.. :D

விசுகு அண்ணா, லல்லுவுக்கு நடந்தது. இப்போ ஜெயலலிதாவுக்கு.

முதல்வர் மற்றும் எம்.எல்.எ பதவிகள் பறிபோய்விடும்.

நான்கு ஆண்டுகள் + ஆறு ஆண்டுகள் = 10 ஆண்டுகள் ஜெயலலிதா தேர்தலில் பங்குபற்ற முடியாது.

இப்போ 66 வயசு. இனி 76 வயசிலே தான் தேர்தலில் நிற்கமுடியும்.

கிட்டத்தட்ட அவவின் அரசியல் வாழ்க்கை சூனியம் தான்.

இப்போ அம்மாவுக்காக அழும் எத்தனையோ அதிமுகவினருக்கு உள்ளுக்குளே சந்தோசமாக இருக்கும்.

நம்ம நடிகர் விஜய் கூட சந்தோஷபடுவாரு.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்லதொரு மாற்றம் தமிழகத்திற்கு. இதைப் பயன்படுத்தி திமுக மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் சரி.. திராவிட அரசியல் அழிந்து தமிழ்தேசிய அரசியல் எழுச்சி பெறும் நாளே பொன் நாளாம்.. :D

 

அதே

அதையே  நானும் எதிர் பார்க்கின்றேன் ... :icon_idea:

விசுகு அண்ணா, லல்லுவுக்கு நடந்தது. இப்போ ஜெயலலிதாவுக்கு.

முதல்வர் மற்றும் எம்.எல்.எ பதவிகள் பறிபோய்விடும்.

நான்கு ஆண்டுகள் + ஆறு ஆண்டுகள் = 10 ஆண்டுகள் ஜெயலலிதா தேர்தலில் பங்குபற்ற முடியாது.

இப்போ 66 வயசு. இனி 76 வயசிலே தான் தேர்தலில் நிற்கமுடியும்.

கிட்டத்தட்ட அவவின் அரசியல் வாழ்க்கை சூனியம் தான்.

இப்போ அம்மாவுக்காக அழும் எத்தனையோ அதிமுகவினருக்கு உள்ளுக்குளே சந்தோசமாக இருக்கும்.

நம்ம நடிகர் விஜய் கூட சந்தோஷபடுவாரு.

 

 

நன்றி  பகலவன்

 

தமிழர்கள் கொண்டாடவேண்டிய ஒரு செய்தி

நான்  முதலிலேயே  எழுதியபடி

ஒரு ஒளி  தெரியுது

பார்க்கலாம்

10 வருடங்களுக்கு எந்தத் தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக என்ற கட்சியே இனி  இருக்காது.....

 

தமிழ் உணர்வாளர்களுக்கு  பெரும் வாய்ப்பு

ஒற்றுமையாக

குறிக்கோள் சார்ந்து நின்றால்

அடுத்த தேர்தல் எம்மதே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.