Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிந்திய விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி மட்டக்களப்பில் நாளை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ் வகையான நிகழ்ச்சிகளை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை தாயக மக்கள் தீர்மானிக்கட்டும். அவர்களின் விடயங்களை தீர்மானிக்கும் உரிமையை  புலம்பெயர் தமிழ் மக்களுக்கு எவரும் கொடுக்கவும் இல்லை, கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இவ்வாறான நிகழ்ச்சிகள் தம் துயரங்களுக்கு வெள்ளையடித்து, அனைத்து உரிமைகளும் பெற்று, எப் பிரச்சனைகளும் இல்லாமல் தாம் அங்கு வாழ்கின்றனர் என்று வெளி உலகுக்கு காட்டிவிடும் என்று அபத்தமான அரசியல் செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. அப்படியே அவர்கள் நினைத்தால் அவர்களே இவ் வகையான நிகழ்வுகளை புறக்கணிப்பர்.  

புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு, தாயக மக்களின் மீது ஏவல் செய்ய முனையும் அரசியல் காலவாதியாகி பல நாட்களாகிவிட்டன. இது புரியாமல் ஒரு ஒதுக்குப் புறத்தில் நின்றுகொண்டு குய்யோ முய்யோ என்று கத்திக் கொண்டு நிற்கும் ஒரு சிலரால் எந்தவிதமான காத்திரமான அரசியலும் செய்ய முடியாது என்பதை காலம் பல முறை காட்டி விட்டது.

நன்றி

இது நான் ஒரு நடுநிலைவாதி  அல்லது நான் சரி பிழைகள் எந்தப்பக்கம் இருந்தாலும் பேசுவேன் என்ற ஒரு எண்ண பாட்டை உருவாக்க எழுத பட்ட ஒரு கருத்தாகவே நான் பார்கிறேன். 
 
கரணம் இதில் எந்த அலசலோ ஆய்வோ துளியளவும் இல்லை.
 
மக்கள் தீர்மானித்து உலகில் என்னதான் நடக்கிறது .........? ஒரு நிகழ்வை எப்படி மக்களால் தீர்மானிக்க முடியும்?
இன்று ஈராக்கில் 5 இற்கு மேற்பட்ட பெண்கள் ஆடைகளை களைந்துவிட்டு ஆடும் ஸ்ட்ரிப் கிளப்புகள் உள்ளன இவை ஈராக் மக்களின் தீர்மானத்திலா ... அங்கு இருக்கிறது ?
ஈராக் மக்களை ..... ஈராக் மக்களாக இருக்கவிடாமல் வைப்பதற்கே அவை அங்கு இருக்கின்றன. 
ஈராக்கின் மீது அக்கறை உடைய எவனும் அதற்காக எதிர் குரல் கொடுக்கத்தான் செய்வான். அவன் அதற்காக இராக்கில்தான் இருக்க வேண்டுமா? நல்லதை கெட்டதை சொல்வதற்கு அங்குதான் இருக்க வேண்டும் என்றால் .........????
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ???
 
ஒரு அரச பயங்கரவாதத்தின் இராணுவ பிடிக்குள் இருக்கும் மக்கள் ஒன்றை புறக்கணிப்பார்கள் என்பது மிகவும் அப்பட்டமானது. அவர்கள் மீது திணிக்கப்படும் .... எல்லா திணிப்பும் திட்டமிட்டு வல்லாதிக்க கரங்களால்  திணிக்கப்டும்போது ...... அதன் பிடிக்குள் இருக்கும் மக்கள் எப்படி புறக்கணிக்க முடியும்?
 
"புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு, தாயக மக்களின் மீது ஏவல் செய்ய முனையும் அரசியல் காலவாதியாகி பல நாட்களாகிவிட்டன."
இது மிகவும் அப்பட்டமான பொய் .... இன்று இந்திய ஸ்ரீலங்கா உளவுத்துறை முதற்கொண்டு இராணுவம் வரை  புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்தே திரிகிறார்கள். இன்று ஈழ மக்களின் இறுதி மூச்சாக சர்வதேச அரங்கில் இருக்கும் ஒரு  குரல் புலம்பெயர் தமிழர்கள் உடையதுதான். அல்லது பயங்கரவாத இராணுவத்தின் கரங்களுக்குள்  அகபாடது இருக்கும் ஒரு தமிழ் குரல் புலம்பெயர் தமிழர்கள் உடையதுதான். 
 
அரசியல் தளத்தில் குய்யோ முய்யோ என்று கத்தாத யாரும் இதுவரை வென்றதில்லை என்பதும் உண்மைதான். அரசியல் தளத்தில் தமிழர்களின் அனைத்து தரப்பும் தொடர்ந்தும் தோல்விகளை தழுவியே  வருகின்றன.
 
அதற்கு முக்கியகாரணம் ....
செயட்படுத்துபவர்கள் அல்ல சுயநலம் மிஞ்சிய மக்கள் கூட்டம்தான். குண்டடித்து ஏரியில் வீட்டிலும் ஏதாவது  பிடுங்கலாமா என்று புடுங்கி போனவன்தான் தமிழன்.
 
இந்த இசை நிகழ்ச்சி நடக்காது போனால் .............. நன்மை என்று தமிழர்களுக்கு நடக்க ஒன்றும் இல்லை.
நடந்தால் நிகழ்ச்சிக்கு வரும் தமிழக தமிழர்கள் சிலராவது கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம். தவிர நிகழ்சிக்கு  போகும் ரசிகர்களும் சில மணி நேரம் சந்தோசமாக இருக்கலாம்.
இதை புறக்கணித்து ஏதும் நடக்கும் என்று நான் நம்பவில்லை. 

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பதால் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைக்க சர்வதேசம் எங்களை போன்ற கிணத்து தவளை அல்ல. 1000 ரூ டிக்கட் வாங்கி சனம் களியாட்ட நிகழ்வு பார்க்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கை தரம் முன்னேறுகிறதென்றால் அது சந்தோசமே. போராட்ட கால மனநிலையிலிருந்து தாயக மக்கள் வெளியே வந்துவிட்டார்கள். நீங்கள் அதை ஏற்க மறுக்கிறீர்கள்.

யார் இவர்கள் ....
எங்கிட்டு இருக்கிறார்கள் ? என்று எழுதினால் வாசிக்கும் எமக்கும் சிலதை புரிய கூடியதாக இருக்கும். 
  • Replies 69
  • Views 4.2k
  • Created
  • Last Reply

எங்களுக்காக தமிழ்நாட்டு தமிழன் தன்னுடைய நாட்டில் போராட்டம் எல்லாம் செய்யனும் அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் கோழைகள்.....ஆனால் அவர்கள் வந்து ஈழத்தில் என்ன செய்யலாம்..செய்யகூடாது ஈழ மக்களின் வாய்ப்புகளை புடுங்குகிறார்கள்.. :)

இந்த சிந்தனை தான் தமிழ்நாட்டு தமிழரை பற்றி மற்ற மாநிலங்களும் வைத்திருகின்றன போலுள்ளது.......

தமிழ்நாட்டு தமிழனை சிங்களவர்கள் கூட இப்படி கேவல படுத்த மாட்டார்கள்.. :) (இப்போ சிங்களவன் பயப்படுறது தமிழாட்டுக்கு தான்.. :))

  • தொடங்கியவர்

naanthaan அண்ணா,

இங்கே தமிழக தமிழர்களை யார் குறை சொன்னது? அவர்களை அழைத்து நிகழ்வுகளை வைப்பவர்கள் எம்மவர்கள் தானே. விமர்சனமும் எம்மவர்கள் மேல் தான். தென்னிந்திய கலைஞர்களை பணம் கொடுத்து அழைக்க முடியுமானால் அதையே எம்மவர்களுக்கு பயன்படுத்தலாம் தானே. ஈழ மக்களின் கலை வளரனும் என்று நினைப்பதோ அல்லது மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் வரை இவ்வாறு பெரிய நிகழ்வுகள் வைப்பதை தவிர்த்தல் நல்லது என்று நினைப்பதிலோ எந்த தவறும் இல்லை.

அத்துடன் அரசியலும் இதுவும் ஒன்றல்ல. இவர்கள் இலங்கையில் நிகழ்ச்சி வைக்கும் செய்தி தெரிந்தால் ஈழத்தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் தமிழக மக்களே எதிர்ப்பு தெரிவிப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுத்தான் ரோட்டில் போகும் போது இந்த போஸ்டரை பார்த்தேன் மட்டு- கல்முனை வீதியில்

எதோ கட்டிட நித்திக்காக என எழுதப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்

நான் பல நிகழ்வுகளை புறக்கணித்து பல நாட்களாகிவிட்டது அதனால உதுக்குள்ள இறங்கி கச்சை கட்டி கொண்டு சண்டை போட இயலாது  . நடந்தாலும் ஒன்றுதான் நடக்கா விட்டாலும் ஒன்றுதான்.

இங்க கதைத்தால் அடுத்தவர் சந்தோசமாக இருப்பது உங்களுக்கு பிடிக்காது என்பார்கள்  இங்க அவரவர் சந்தோசம் முக்கியம் அதற்க்காக எதையும் செய்வார்கள் இங்குள்ளவர்கள்  அகையால் நடப்பதை புரிந்ந்து கொண்டு செயற்படுங்கள்  நண்பர்களே :unsure:

துளசி தங்கச்சி நீங்கள் சொல்லுவது விளங்கியும்..விளங்காமலும் இருக்கு

இப்போ எமது கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக கலை நிகழ்சிகள் செய்யலாமா? இல்லை என்றால் அதுவும் கூடாதா? (பிரச்னை முடியுமட்டும் பெரிதாகவும் ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் சொல்லுகிறீர்கள்)..

எங்களை கலைஞர்களை வைத்து நீங்களோ அல்லது இவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றோ நினைப்பவர்கள் லாபகரமாகவும் தரமான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினால் ஈழகலைஞர்களையும் மக்கள் ஆதரவளிப்பார்கள் தானே...

30-40வருடங்களுக்கு முன்னேயும் ஈழகலைஞர்களும் முன்னணியில் இருக்கும் போதும் இந்தியாவிலிருந்தும் கலைஞர்களையும் கொண்டுவந்தார்கள்....ஆகவே தங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று ஈழத்திலிருக்கும் கலைஞர்கள் தான் தங்களை முன்னிறுத்தவேண்டும்..அப்போது தான் மக்களுக்கும் அவர்களை தெரியும்/ஆதரவு அளிக்க முடியும்...மக்கள் தமக்கு பிடித்தமான நிகழ்சிகளுக்கு தானே போவார்கள்...பணம் கொடுப்பவர்கள் தரத்தை பார்த்து தானே கொடுப்பார்கள்...மக்கள் எம்கலைஞர்களுக்கு அவர்களின் நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கவில்லையென்றால் அதற்கு யார் பொறுப்பு?

எமது பிரச்சனை முடியுமட்டும் அங்கே மக்கள் சோகமாக இருக்கவேண்டும் என்று துணிந்து சொல்லுங்கள்...தமிழீழத்திலிருக்கும் முழு டிவி/ரேடியோக்களை தடை செய்ய சொல்லுங்கள்...அவை தான் தமிழக கலைஞர்களை ஊக்குவிக்கிறது...

Edited by naanthaan

இலாபம் சம்பாதிக்கும் நோக்கை விட்டிட்டு திறமையானவர்களை வெளிக்கொண்டுவருவர வேண்டும் என்று நினைப்பதே எம்மவர்களை முன்னேற்ற இடமளிக்கும்.

எம்மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர களம் அமைத்து கொடுக்கலாம். இசை, திரைப்பட துறை சார்ந்து பயிற்சிகளை வழங்குதல், கலைஞர்களிடையே பக்கச்சார்பற்ற போட்டிகள் வைத்து சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுக்கலாம்.

அதை நீங்கள் தான் செய்து காட்டவேண்டும்....அதற்க்கு உங்களிடம் ஏதாவது திட்டம் உள்ளதா??? அல்லது இப்படி செய்பவர்கள் நீங்கள் சொல்லுவது போல் லாபமில்லாமல் செய்யவேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா? அப்படி செய்வதற்கு பணம்??

திறமையானவர்கள் என்றால் தென்னிந்தியா போனால் அவர்கள் இன்னும் பெரிதாக வருவார்களே....

எல்லாரும் இலகுவாக யாருக்கும் அறிவுரை சொல்லலாம்... (இப்போ நீங்கள்/நாங்கள் செய்வது போல்..)

ஈழத்து கலைஞர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கு உள்ளது. ஆனால் அதற்கான திட்டம் இன்னும் என்னிடம் இல்லை. யாராவது இசை, திரைப்பட துறை சார்ந்த பயிற்சிகளை இலவசமாக வழங்குவதற்கான ஒழுங்குகள் செய்ய முன்வந்தால் அதற்கு நிதி உதவி செய்பவர்களில் நானும் ஒருத்தியாக இருக்க தயார்.

மிக நல்ல விடயம்...இப்போதில்லாவிட்டாலும் பிறகு ஆவது செய்வீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது...

ஈழத்திலும் யாரவது கலைஞர்கள் வித்தியாசமாக ஏதாவது செய்தால் (திறமையாக செய்தால்) மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.....சின்னமணி வில்லுப்பாட்டு மாதிரி (நாங்கள் நேராக கோயில் திருவிழாக்களில் பார்த்தது) இன்னும் இந்திய தொலைகாட்சிகளில் ஒரு சிறந்த வில்லுப்பாட்டு கண்டதில்லை....அந்தகாலங்களில் அவரின் வில்லுப்பாட்டு தான் முழுஇரவு நிகழ்சிகளில் உச்சமான நிகழ்ச்சி...அப்படி எம்மவர்களும் நேர்த்தியாக செய்தால் இப்போதுள்ள தமிழ் டிவி க்கள் வழியாக புகழ் பெறுவார்...அப்போ அவர்களை வைத்தும் இப்படி நிகழ்ச்சிகள் செய்ய எல்லாரும் முன் வருவர்...

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுத்தான் ரோட்டில் போகும் போது இந்த போஸ்டரை பார்த்தேன் மட்டு- கல்முனை வீதியில்

எதோ கட்டிட நித்திக்காக என எழுதப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்

நான் பல நிகழ்வுகளை புறக்கணித்து பல நாட்களாகிவிட்டது அதனால உதுக்குள்ள இறங்கி கச்சை கட்டி கொண்டு சண்டை போட இயலாது  . நடந்தாலும் ஒன்றுதான் நடக்கா விட்டாலும் ஒன்றுதான்.

இங்க கதைத்தால் அடுத்தவர் சந்தோசமாக இருப்பது உங்களுக்கு பிடிக்காது என்பார்கள்  இங்க அவரவர் சந்தோசம் முக்கியம் அதற்க்காக எதையும் செய்வார்கள் இங்குள்ளவர்கள்  அகையால் நடப்பதை புரிந்ந்து கொண்டு செயற்படுங்கள்  நண்பர்களே :unsure:

எதோ நாங்கள்தான் பெருத்த நடுநிலை வாதிகள் என்று கருத்து பதிபவர்கள் ......
அங்கிருந்து வரும் இந்த கருத்தை புரிவார்களா ???
 
ஒட்டுமொத்த மனிதருக்கும் நன்மை பயக்க கூடியது என்பது .... தனிபட்ட மனித வாழ்வை கொஞ்சம் கசப்பக்கிதான் இனிய வைக்கும். இந்த குறுகிய கல கசப்பை விரும்பாத சிலரும் ...... தமிழரை பொருத்தவரை பலரும் என்றுதான் எழுதவேண்டும் ....... தமக்கு எது இனிப்பனதோ அதைதான் செய்து கொண்டு இருப்பார்கள்.
அதனால் அதை மக்கள் தீர்மானமாக கருத முடியாது ..... அதுதான் சரி என்றும் வாதிட முடியாது.
 
பிளாஸ்டிக் பாவனை எவளவு மோசமானதாக எதிர்கால சந்ததிக்கு இருக்க போகிறது ... என்பது வெளிப்படையாக சுற்றும் முற்றும் காணக்கூடியதாக இருக்கிறது.
குறைந்த செலவில் கூடிய வருமானம் .............
பில்லியன் கணக்கில் பணம் சம்பாதிப்பவன் பணத்தை எறிந்து  அரசின் வாய்களை  கூட மூடி விடுகிறான்.
தமக்கு இலகுவாக இருப்பதால் ....... எதிர்கால சந்ததியின் பாதிப்பை சற்றும் எண்ணிக்கூட பார்க்காமல் மக்களால் பிளாஸ்டிக் பாவனை கூடி கொண்டே போகிறது.
 
இங்கிருக்கும் (போலி)நடுநிலை வாதிகளின் கருத்து படி பார்த்தால் .........
இதுக்காக இப்போது யாரும் குரல் கொடுக்க முடியாது. வேண்டுமானால் அடுத்த சந்ததியில் மறு பிறப்பு எடுத்துதான்  குரல் கொடுக்க வேண்டும். 
 
இன அழிப்பை செய்பவர்கள் இனத்தை பல வடிவில் திசை திருப்பி படிப்படியாகத்தான் செய்வார்கள். 
சிறிய இறாலை போட்டுதான் பெரிய மீனை பிடிக்க முடியும். 
(போலி) நடுநிலை வாதிகள் .............. தூண்டிலில் குத்தி இறாலை மீனுக்கு போடும் தந்திரகாரனின்  தற்காலிக நிகழ்வை வைத்து அவனுக்கு கவிதை எழுதுகிறார்கள் .............. மீனுக்கே உணவளிக்கிறான் ..... அது இது என்று. ஒடுமொத்தில் மீனை தனது இரை ஆக்குவதே அவனது இலக்கு. 
இதற்கும் இனி மீன்கள்தான் கருத்து வைக்க முடியும். 
  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல விடயம்...இப்போதில்லாவிட்டாலும் பிறகு ஆவது செய்வீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது...

ஈழத்திலும் யாரவது கலைஞர்கள் வித்தியாசமாக ஏதாவது செய்தால் (திறமையாக செய்தால்) மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.....சின்னமணி வில்லுப்பாட்டு மாதிரி (நாங்கள் நேராக கோயில் திருவிழாக்களில் பார்த்தது) இன்னும் இந்திய தொலைகாட்சிகளில் ஒரு சிறந்த வில்லுப்பாட்டு கண்டதில்லை....அந்தகாலங்களில் அவரின் வில்லுப்பாட்டு தான் முழுஇரவு நிகழ்சிகளில் உச்சமான நிகழ்ச்சி...அப்படி எம்மவர்களும் நேர்த்தியாக செய்தால் இப்போதுள்ள தமிழ் டிவி க்கள் வழியாக புகழ் பெறுவார்...அப்போ அவர்களை வைத்தும் இப்படி நிகழ்ச்சிகள் செய்ய எல்லாரும் முன் வருவர்...

உங்களுடைய ஆவல் நியாமானது ...........
தற்காலிக நுகர்வுலகில் எள்ளளவும் சாத்தியம் இல்லாதது.
 
விஜயின் படங்கள் என்ன நடிப்பு திறனால் மட்டுமா ஓடுகிறது ? திறமையானவர்கள் எங்கும் இருக்கலாம் .. விளமபரமும் ..... மெயின் மீடிய ஸ்ட்றேமின் (...................) வியாபர யுத்தியும்தான் ஒருவரை முன்னிலை படுத்துகிறது. தற்செயலாக ஒருவர் உள்ளிருந்தும் வரலாம் ..........
அதலால் .....காந்தி அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்றார் ............. அகிம்சை வழியில் போராடினால் எல்லோருக்கும் சுதந்திரம் கிடைக்கும் என்ற மோசடியகத்தான் இருக்கும்.
காந்தியையும் ...... நெல்சன் மண்டேலாவையும் மேற்குலகு தமக்கு விளம்பரமாகவே இறுதிவரை பாவித்தது.
 
சக்கரை இல்லாத ஊரில் இலுப்பை இலை சர்க்கரை என்பது போலதான் சின்னமணி வில்லுபாட்டு எமக்கு முன்பு இருந்தது. அன்றும் சிலுக்கு சிமிதாவும் ..... அனுராதாவும் வந்து போகும் வாய்ப்பு இருந்திருந்தால் சின்னமணி எங்காவது கிராம புறங்களில் வில்லிசைத்து விட்டு போயிருப்பார். 
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறவும், அரசியல் ரீதியில் என்றும் நாம் ஆதரவுக் கரம் கோரி நிற்கும்  எம் தொப்புள் கொடி உறவுகளின் நிலமான தமிழகத்தில் இருந்து வந்த கலைஞர்கள்  நன்கு திறமையை வெளிக்காட்டவும், கிழக்கு மக்கள் ஒரு சில மணி நேரங்களாவது மனம் மகிழவும் என் வாழ்த்துக்கள்.

இதே  திரியில் இவ்வாறு எழுதியுள்ளீர்கள்...

இவ் வகையான நிகழ்ச்சிகளை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை தாயக மக்கள் தீர்மானிக்கட்டும். அவர்களின் விடயங்களை தீர்மானிக்கும் உரிமையை  புலம்பெயர் தமிழ் மக்களுக்கு எவரும் கொடுக்கவும் இல்லை, கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இவ்வாறான நிகழ்ச்சிகள் தம் துயரங்களுக்கு வெள்ளையடித்து, அனைத்து உரிமைகளும் பெற்று, எப் பிரச்சனைகளும் இல்லாமல் தாம் அங்கு வாழ்கின்றனர் என்று வெளி உலகுக்கு காட்டிவிடும் என்று அபத்தமான அரசியல் செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. அப்படியே அவர்கள் நினைத்தால் அவர்களே இவ் வகையான நிகழ்வுகளை புறக்கணிப்பர்.  

புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு, தாயக மக்களின் மீது ஏவல் செய்ய முனையும் அரசியல் காலவாதியாகி பல நாட்களாகிவிட்டன. இது புரியாமல் ஒரு ஒதுக்குப் புறத்தில் நின்றுகொண்டு குய்யோ முய்யோ என்று கத்திக் கொண்டு நிற்கும் ஒரு சிலரால் எந்தவிதமான காத்திரமான அரசியலும் செய்ய முடியாது என்பதை காலம் பல முறை காட்டி விட்டது.

நன்றி

கீழே  இப்படியும் எழுதியுள்ளீர்கள்...

தமிழகத்துடன் உறவை வளர்க்கணும் என்றபடி

புலத்தை ஒதுக்குதல் தகுமோ??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

1902738_782447411818598_4641408262026927

1013086_782447425151930_2644644402751894

1654090_782447351818604_8554318393556324

  • கருத்துக்கள உறவுகள்

கனேடாவை சேர்ந்த எலிசபெத் மாலினி டி.இமானின் இசையில் பாடி உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சி நடாத்திய சுப்பர் சிங்கரிலும் பங்கு பற்றி இருந்தார். தமிழீழத்திலும் இருந்து பல மாலினிகள்  உருவாக வேண்டும்.

  • தொடங்கியவர்

நுணா அண்ணா, எமது மக்களில் ஒரு சிலருக்கு அங்கு வாய்ப்பு கிடைக்கிறது. எனவே அங்குள்ளவர்கள் இலங்கை வந்து இசை நிகழ்ச்சி வைப்பது தவறல்ல என்றால் நடிகை அசின் போன்று நடிகர் நடிகைகளும் இலங்கை வந்து போனால் அதையும் ஏற்க வேண்டும்.

asin120710_1.jpg

முன்னர் இலங்கைக்கு வந்து சென்ற பின் அசின் கொடுத்த பேட்டி இது.

Asin stands by Lanka

Indian actress Asin says she will not apologize for her visit to Sri Lanka merely because some actors in Tamil Nadu have demanded she do so.

The actress has been threatened with a boycott in Southern India for praising President Mahinda Rajapaksa who is credited with wiping out the separatist LTTE in a long drawn battle that ended with the death of LTTE leader Velupillai Prabhakaran.

"All Tamilians in Sri Lanka are happy with the government as it treats everyone equal and I am honoured to be his (President Mahinda Rajapaksa's) guest," Asin is reported to have said.

Apart from visiting several places with the Rajapaksa family, Asin had dined and danced with Shiranthi, Rajapaksa's wife when she hosted a party in Colombo.

Asin was in Sri Lanka, earlier this month, for the shooting of the Hindi film Ready that stars Salman Khan opposite her. Prominent Tamil actors like Radha Ravi and Sathya Raj were particularly vocal against Asin at a meeting of South Indian Film Artistes Association on Sunday.

The South Indian Film Chambers of Commerce, on the other hand, plans to consider demands to boycott Asin when it meets later this week.

"Though our association issued a diktat to its members not to visit Sri Lanka just before the IIFA awards function, Asin chose to go there for a shooting. She may be from Kerala but she acts in Tamil films and must respect Tamil sentiments," said Radha Ravi, general secretary, SIFAA.

While Ravi wants other actors to act only if she apologizes, SIFAA president Sharat Kumar said it was too early to take a strong stand.

"Asin is an actor. She is from our own fraternity. Our steps must be measured in this issue. We will examine the circumstances in which Asin made these remarks before we take the final decision."

Asin's fans associations in the US and Canada have boycotted her films, while Naam Tamilar, a pro Tamil organization, is planning to launch a mass protest in Chennai against Asin.

Asin told Mid Day that she was not going to heed to demands of individual actors like Radha Ravi and Satya Raj.

"I only visited a Tamil camp were some war injured are being treated. The president's wife Shiranthi wanted to join me and I could not say no to her," Asin said.

"I will abide by the decision taken by the chamber and will not apologize just because an actor has asked for it." (Mid Day)

http://www.dailymirror.lk/index.php/news/5401-asin-stands-by-lanka.html

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுத்தான் ரோட்டில் போகும் போது இந்த போஸ்டரை பார்த்தேன் மட்டு- கல்முனை வீதியில்

எதோ கட்டிட நித்திக்காக என எழுதப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்

நான் பல நிகழ்வுகளை புறக்கணித்து பல நாட்களாகிவிட்டது அதனால உதுக்குள்ள இறங்கி கச்சை கட்டி கொண்டு சண்டை போட இயலாது  . நடந்தாலும் ஒன்றுதான் நடக்கா விட்டாலும் ஒன்றுதான்.

இங்க கதைத்தால் அடுத்தவர் சந்தோசமாக இருப்பது உங்களுக்கு பிடிக்காது என்பார்கள்  இங்க அவரவர் சந்தோசம் முக்கியம் அதற்க்காக எதையும் செய்வார்கள் இங்குள்ளவர்கள்  அகையால் நடப்பதை புரிந்ந்து கொண்டு செயற்படுங்கள்  நண்பர்களே :unsure:

தாயகத்தில் இருந்தான இந்தக் கருத்துக்கு யாழில் யாரும் பச்சை குத்தல்ல. கனடாவில் இருந்தும்.. அவுஸில் இருந்தும்.. வரும் வக்காளத்துக்கு பச்சை குத்தும் அதி உன்னத மனோ நிலையில் தான் யாழ் சுப்பர் சிங்கர்..ரசிகர் கூட்டம் உள்ளது.

இதே ரசிகர் கூட்டம் இன்னொரு இடத்தில்.. இதே பாடகர்களை எனி இல்லை என்று ஒரு இழிவான தலைப்புப் போட்டும் புறணிபாடுக்கொண்டுள்ளது.

என்னத்தைச் சொல்லுறது.. முருங்கையில் ஏறினால்... பச்சை. மாமரத்தோடு ஒட்டினால்.. பிரவுன்.. என்று வாழ்ந்தே பழகிவிட்ட தமிழர்களிடம்.. சில விடயங்களை எதிர்பார்ப்பது கேவலமானது..! விட்டுத்தள்ளுங்க.. துளசி.

கூடவே நாலு சிங்களத்திகளையும் கூப்பிட்டு ஆட வைத்தால்.. கருணா அம்மான் தள்ளிக்கிட்டு போக வசதியா இருக்கும்..!! :D:icon_idea:

இதுவும் யாழில தான் போய்க்கிட்டு இருக்குது... என்னத்தை சொல்ல.. எதைப் பேச... :D:lol:சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை! 

Edited by nedukkalapoovan

இது நான் ஒரு நடுநிலைவாதி  அல்லது நான் சரி பிழைகள் எந்தப்பக்கம் இருந்தாலும் பேசுவேன் என்ற ஒரு எண்ண பாட்டை உருவாக்க எழுத பட்ட ஒரு கருத்தாகவே நான் பார்கிறேன். 
 
கரணம் இதில் எந்த அலசலோ ஆய்வோ துளியளவும் இல்லை.
 
மக்கள் தீர்மானித்து உலகில் என்னதான் நடக்கிறது .........? ஒரு நிகழ்வை எப்படி மக்களால் தீர்மானிக்க முடியும்?
இன்று ஈராக்கில் 5 இற்கு மேற்பட்ட பெண்கள் ஆடைகளை களைந்துவிட்டு ஆடும் ஸ்ட்ரிப் கிளப்புகள் உள்ளன இவை ஈராக் மக்களின் தீர்மானத்திலா ... அங்கு இருக்கிறது ?
ஈராக் மக்களை ..... ஈராக் மக்களாக இருக்கவிடாமல் வைப்பதற்கே அவை அங்கு இருக்கின்றன. 
ஈராக்கின் மீது அக்கறை உடைய எவனும் அதற்காக எதிர் குரல் கொடுக்கத்தான் செய்வான். அவன் அதற்காக இராக்கில்தான் இருக்க வேண்டுமா? நல்லதை கெட்டதை சொல்வதற்கு அங்குதான் இருக்க வேண்டும் என்றால் .........????
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ???
 
ஒரு அரச பயங்கரவாதத்தின் இராணுவ பிடிக்குள் இருக்கும் மக்கள் ஒன்றை புறக்கணிப்பார்கள் என்பது மிகவும் அப்பட்டமானது. அவர்கள் மீது திணிக்கப்படும் .... எல்லா திணிப்பும் திட்டமிட்டு வல்லாதிக்க கரங்களால்  திணிக்கப்டும்போது ...... அதன் பிடிக்குள் இருக்கும் மக்கள் எப்படி புறக்கணிக்க முடியும்?
 
"புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு, தாயக மக்களின் மீது ஏவல் செய்ய முனையும் அரசியல் காலவாதியாகி பல நாட்களாகிவிட்டன."
இது மிகவும் அப்பட்டமான பொய் .... இன்று இந்திய ஸ்ரீலங்கா உளவுத்துறை முதற்கொண்டு இராணுவம் வரை  புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்தே திரிகிறார்கள். இன்று ஈழ மக்களின் இறுதி மூச்சாக சர்வதேச அரங்கில் இருக்கும் ஒரு  குரல் புலம்பெயர் தமிழர்கள் உடையதுதான். அல்லது பயங்கரவாத இராணுவத்தின் கரங்களுக்குள்  அகபாடது இருக்கும் ஒரு தமிழ் குரல் புலம்பெயர் தமிழர்கள் உடையதுதான். 
 
முதலில் ஒருவர் எழுதியதை முழுமையாக வாசித்து தெளிவாக கருத்தை முன் வைக்க பழகுங்கள்.

என்னை நடுநிலைவாதியாக காட்டுவதற்காகவோ அல்லது 'இன்னென்ன'வாதியாகக் காட்டுவதற்காகவோ எழுதுகிறவன் அல்ல நான்.  உண்மைக்கு முன் நடுநிலை என்பது ஒருக்காலும் சரிவராது என்று நம்புகின்றவன் நான்.

ஈராக்கில் ஐந்து, பத்து ஸ்ரிப் கிளப்புகள் இருந்தால் அதனை அம் மக்கள் எதிர்க்கட்டும். இன்னொரு நாட்டில் இவ்வாறான கிளப்புகளுக்கு சென்று வருகின்ற ஒருவர் ஈராக்கில் இருக்கும் கிளப்புகளை எதிர்ப்பது தான் பிரச்சனைக்குரிய விடயமாக போகும். அதாவது புலம்பெயர் நாடுகளில் நிகழும் தமிழகத்து கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டோ அல்லது மெளனமான ஏற்றுக்கொண்டோ அல்லது அவை பற்றி நிறுவனமயப்படுத்தப்பட்ட விமர்சனம்  எதுவும் வைக்காமல் இருப்பவர் ஒருவர் அதனை எதிர்ப்பது போன்றது.

ஒரு அரச பயங்கரவாதத்தின் இராணுவ பிடிக்குள் இருக்கும் மக்கள் ஒன்றை புறக்கணிப்பார்கள் என்பது மிகவும் அப்பட்டமானது. அவர்கள் மீது திணிக்கப்படும் .... எல்லா திணிப்பும் திட்டமிட்டு வல்லாதிக்க கரங்களால்  திணிக்கப்டும்போது ...... அதன் பிடிக்குள் இருக்கும் மக்கள் எப்படி புறக்கணிக்க முடியும்?

நீங்கள் வருகின்ற ஒரு செய்தியும் வாசிக்காமல் வெற்றுக் கற்பனையில் கருத்தெழுதுபவர் என்பதை உங்களில் மேற்சொன்ன பதிலின் மூலம் உணர முடிகின்றது. இதே அரச பயங்கரவாதத்தின் பிடிக்குள் இருந்து கொண்டு தான் மக்கள் காணி பறிப்பு எதிராகவும், காணாமல் போனோரை கண்டு பிடித்து தரும் படியும், தமிழ் ஊடக சுதந்திரத்திற்காகவும் கடுமையாக போராடி வருகின்றார்கள். இவை மட்டுமன்றி இன்னும் பல விடயங்களுக்காக எதிர்த்து குரல் கொடுக்கின்றனர். அவர்களுக்கு எவற்றை எதிர்ப்பது, எவற்றிற்காக போராடுவது என்ற தெளிவு உஙகளை விட அதிகமாக இருக்கின்றது.

"புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு, தாயக மக்களின் மீது ஏவல் செய்ய முனையும் அரசியல் காலவாதியாகி பல நாட்களாகிவிட்டன."
இது மிகவும் அப்பட்டமான பொய் .... இன்று இந்திய ஸ்ரீலங்கா உளவுத்துறை முதற்கொண்டு இராணுவம் வரை  புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்தே திரிகிறார்கள். இன்று ஈழ மக்களின் இறுதி மூச்சாக சர்வதேச அரங்கில் இருக்கும் ஒரு  குரல் புலம்பெயர் தமிழர்கள் உடையதுதான். அல்லது பயங்கரவாத இராணுவத்தின் கரங்களுக்குள்  அகபாடது இருக்கும் ஒரு தமிழ் குரல் புலம்பெயர் தமிழர்கள் உடையதுதான்.

..அதாவது தாயக மக்கள் மீது புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு செய்யும் அரசியலில் ஏவல் அரசியலும் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்கள்? அவை இன்னும் காலாவதியாக வில்லை என்றும் சொல்கின்றீர்கள்?

இந்திய இலங்கை உளவுத்துறைகளால் கண்காணிக்கப்படும் புலம்பெயர் அமைப்புகள் இப்படியான துரோக முத்திரை குத்துவதிலும், அதை இதை புறக்கணி என்று புறக்கணிப்பு அரசியல் செய்யும் சில்லறை அமைப்புகளாக இல்லை. அவை காத்திரமான அரசியல் செய்யும் அமைப்புகளாக, சர்வதேசத்தில் இலங்கைக்கு நெருக்குதல் ஏற்படுத்தக் கூடிய அமைப்புகளாக இருக்கின்றன. சில்லரை அரசியலும், விசைப்பலகை அரசியலும் செய்து கொண்டு இருக்கும் எந்த அமைப்புகளை எந்த நாட்டு புலநாய்வு அமைப்புகளும் ஏறெடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அரசியலை புரிந்து கொள்ளும் அளவுக்கு உங்களுக்கு வாசிப்பும், தெளிவும் இருக்காது என நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்

உண்மை நெடுக்ஸ் அண்ணா, தாயகத்திலிருந்து முனிவர் அண்ணா போட்ட பதிவு இவ்வாறான நிகழ்வுகளை தான் புறக்கணித்து கன காலம் என்பது. ஆனால் அதை வாசித்தும் வாசிக்காத மாதிரி நிழலி அண்ணா போட்டிருக்கும் கருத்தை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் நிகழ்ச்சிகள் செய்தாலும் காசு கொடுத்து பார்ப்பதும் பார்க்காமல் விடுவதும் அந்த மக்களது விருப்பம்.காசு இருப்பவர்களும்,இப்படியான இசை நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பவர்களும் போய் பார்க்கப் போகிறார்கள்.நிகழ்சியை போய் பார்ப்பவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்களில்லை.ஊரில் என்ன நடக்குது என்று சர்வதேசத்திற்கு எங்களை விட நன்றாகத் தெரியும்.இப்படியான நிகழ்ச்சிகளை வைத்துத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.இதே நேரத்தில் அங்கு இருக்கும் மக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த நிகழ்ச்சிக்கு போகாமல் விட்டால் இனி மேல் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நடத்தாமல் விடப் போகிறார்கள்.ஏதோ அங்கு இருக்கும் எல்லோரையும் கட்டாயம் நிகழ்ச்சிக்கு போகுமாறு வற்புறுத்தின மாதிரி இருக்குது கொஞ்சப் பேரின்ட கதை அதே நேரம் இங்கு இருந்து கொண்டு போ என்டால் போகப் போறார்களா அல்லது போக வேண்டாம் என்டால் போகாமல் இருக்கப் போறார்களா என்ன?...அவர்கள் தங்களுக்கு எது தேவையோ/சரியோ அதன் படி தான் நடப்பார்கள்

நிழலி அண்ணா போட்டிருக்கும் கருத்தை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. :lol:

ரென்சன் மிக்க இந்த உலகில் நெருக்கடி மிகுந்த வாழ்க்கையில் உங்களை சிரிக்க வைத்தமையை என் பெரும் பேறாக கருதுகின்றேன் துளசி :)

  • தொடங்கியவர்

ரென்சன் மிக்க இந்த உலகில் நெருக்கடி மிகுந்த வாழ்க்கையில் உங்களை சிரிக்க வைத்தமையை என் பெரும் பேறாக கருதுகின்றேன் துளசி :)

நல்லது. :)

இவ்வாறான நிகழ்ச்சிகள் தம் துயரங்களுக்கு வெள்ளையடித்து, அனைத்து உரிமைகளும் பெற்று, எப் பிரச்சனைகளும் இல்லாமல் தாம் அங்கு வாழ்கின்றனர் என்று வெளி உலகுக்கு காட்டிவிடும் என்று அபத்தமான அரசியல் செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. அப்படியே அவர்கள் நினைத்தால் அவர்களே இவ் வகையான நிகழ்வுகளை புறக்கணிப்பர்.

தாயகத்திலுள்ள முனிவர் அண்ணா இவ்வாறான நிகழ்வுகளை தான் புறக்கணித்து கன காலம் என கூறியுள்ளார். எனவே அபத்தமான அரசியல் என்று நீங்கள் கூறியது பொய்த்து விட்டது. :)

நல்லது. :)

தாயகத்திலுள்ள முனிவர் அண்ணா இவ்வாறான நிகழ்வுகளை தான் புறக்கணித்து கன காலம் என கூறியுள்ளார். எனவே அபத்தமான அரசியல் என்று நீங்கள் கூறியது பொய்த்து விட்டது. :)

தனி மனித புறக்கணிப்பையும் அமைப்பு ரீதியிலான நிறுவனமயப்படுத்தப்பட்ட புறக்கணிப்பையும் ஒன்று என்று நினைக்கும் உங்கள் புரிதல் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இப்படியான நிகழ்வுக்கு நூற்றில் 5 வீதம் தான் போவர். அவர்களை நோக்கித் தான் இப்படியான நிகழ்வுகள். இவ்வாறான நிகழ்வுகள் என்றும் நடந்து கொண்டு தான் இருக்கும்.

பல முறை நான் குறிப்பிட்டுள்ளது போன்று, நான் இப்படியான எந்த நிகழ்வுக்கும் செல்வது இல்லை. நான் செல்லாமல் விடுவதால் அதுவே ஒரு சமூகத்தின் முடிவு என்று கருதுவதும் இல்லை, நிகழ்வுகளை எதிர்ப்பதும் இல்லை.

நன்றி

Edited by நிழலி
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

37 குறுப் ஆக பிரிந்து அடிபட்டு விட்டு, தாயகத்தில் இருக்கும் மக்களை சுப்பர் சிஙகர் பார்க்க வேண்டாமம்.

  • தொடங்கியவர்

தனி மனித புறக்கணிப்பையும் அமைப்பு ரீதியிலான நிறுவனமயப்படுத்தப்பட்ட புறக்கணிப்பையும் ஒன்று என்று நினைக்கும் உங்கள் புரிதல் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இப்படியான நிகழ்வுக்கு நூற்றில் 5 வீதம் தான் போவர். அவர்களை நோக்கித் தான் இப்படியான நிகழ்வுகள். இவ்வாறான நிகழ்வுகள் என்றும் நடந்து கொண்டு தான் இருக்கும்.

பல முறை நான் குறிப்பிட்டுள்ளது போன்று, நான் இப்படியான எந்த நிகழ்வுக்கும் செல்வது இல்லை. நான் செல்லாமல் விடுவதால் அதுவே ஒரு சமூகத்தின் முடிவு என்று கருதுவதும் இல்லை, நிகழ்வுகளை எதிர்ப்பதும் இல்லை.

நன்றி

உங்கள் முன்னைய கருத்துக்கு நீங்கள் தந்திருக்கும் தற்போதைய விளக்கம் செம கொமடி.

என்னமோ அங்குள்ள மக்கள் இப்படியான நிகழ்வுகளை புறக்கணிப்பதுமில்லை, புறக்கணிக்க விரும்புவதுமில்லை, இங்குள்ள ஒரு சிலர் தான் (இத்திரியில் அது என்னை சுட்டிக்காட்டுகிறது) ஒதுக்குப்புறத்திலிருந்து குய்யோ முய்யோ என்று கத்துகிறார்கள் என்ற ரீதியில் தானே எழுதியிருந்தீர்கள். தனிமனிதர்களின் கூட்டம் தான் மக்கள் என்பவர்கள். சில மக்கள் அங்கு நிகழ்வுக்கு சென்று வந்தால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள், இப்படியான நிகழ்வுகளை விரும்புகிறார்கள் என்று கூறும் உங்கள் போன்றோர் அதுவே தமது பாதிப்பிலிருந்து மீளமுடியாதவர்களோ அல்லது அப்படியான மக்களை நினைத்து இவ்வாறான நிகழ்வுகளை புறக்கணிப்பவர்களின் முடிவுகளை ஏன் ஏற்பதில்லை?

நானும் ஒரு தனிமனித பெண்ணாக தான் எனது கருத்தை முன்வைத்தேன். எந்த அமைப்போ நிறுவனமோ சார்ந்து அல்ல. அதில் கூட இந்நிகழ்வை புறக்கணியுங்கள் என்றோ, ஆதரவு கொடுங்கள் என்றோ எழுதியிருக்கவில்லை. யாருக்கும் துரோகி பட்டமும் கொடுத்திருக்கவில்லை. இந்நிகழ்வால் ஏற்படும் தீமை என எனக்கு தோன்றியதை எழுதியிருந்தேன். ஒரு தனிமனித கருத்துக்கு அபத்தமான அரசியல் என்று முத்திரை குத்த தெரிந்த உங்களுக்கு தாயகத்திலிருந்து வரும் ஒரு தனிமனித கருத்தை ஏற்க முடியவில்லை. உடனே அமைப்பு, நிறுவனப்படுத்தப்பட்ட புறக்கணிப்பு என்று கூறி நழுவப்பார்க்கிறீர்கள். தாயகத்தில் இவ்வாறான நிகழ்வுகளை புறக்கணிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான மக்கள் ஏதாவது அமைப்பிலிருந்து கொண்டு புறக்கணித்தால் தான் ஏற்பீர்களா?

நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதையே நாட்டு நடப்பு உண்மை போல் காட்டி வாதிடும் உங்களிடமிருந்து இலகுவில் உண்மை வந்து விடாது.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

துளசியின் வாதிடும் திறன் புல்லரிக்க வைக்கிறது....

அபரீத வளர்ச்சி

தொடருங்கள்... :icon_idea:

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.