Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.

Featured Replies

புலிகலூக்குள் நடக்காத உள்வீட்டுக் கொலைகளா ? நடக்காத காட்டிக் கொடுப்புக்களா ? கருணாவும் கேபியும் பிள்ளையானும் பாப்பாவும் யார் ? எல்லோருமே இந்த விடயத்தில் ஒன்றுதான், ஆனால் ஒரே வித்தியாசம் புலிகள் இறுதிவரை மக்களோடு நின்றார்கள். மற்றையவர்கள் நிற்கவில்லை அல்லது நிற்க அனுமதிக்கப்படவில்லை.

அவர்களை நிற்க அனுமதிக்க புலிகள் யார் அண்ணை... ???   ஆள் தொகையிலையும் ஆயுத பலத்திலையும் புலிகள்  மற்றய இயக்கங்களோடை ஒப்பிடும் பொழுது மற்றய இயக்கங்கள் ஏணி வைத்தாலும் எட்டாத  உயரத்திலை இருந்தார்கள்...  இல்லை எண்டா சொல்ல போகிறீர்கள்...   ?? 

இங்கை ஒரு அண்ணை புலிகள் மற்றவர்கள் மீது  பொறாமை படுகிறதாக சொல்லுறார்...   மிகப்பெரிய பலமான அமைப்பான Telo  புலிகள் தாக்கியபோது  ,பெருந்தன்மையும் மனிதாபிமானமும் கொண்ட மற்ற  பெரிய இயக்கங்களான  EPRLF  PLOTE  அமைப்புக்கள் என்ன செய்து கொண்டு இருந்தன... ??  அடுத்தது தாங்களாக இருக்கலாம் என்பது இந்த அரசியலும் அறிவும் இருந்ததாக சொல்லி கொள்ளும் அமைப்புக்கு தெரியாது எண்டா சொல்ல போகிறீர்கள்...  

ஏன்  உதவிக்கு போகவில்லை...??   காரணம் ஒண்டு தான்..  TELO   மீது இருந்த பொறாமை... அழிந்து போகட்டும்  அதுதான் அவர்களுக்கு தேவையாக இருந்தது ...   

Edited by தயா

  • Replies 200
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யார் மக்களிடம் கேட்டுச் செய்தீர்கள்? ஆயுதத்தோடு நீங்கள் நிண்டபடி, ஒப்புக்கு கூட ஒரு தேர்தலை அல்லது சர்வசன வாக்கெடுப்பை நடத்தாமல் - மக்கள் அப்படி நினைத்தார்கள் இப்படி நினைத்தார்கள் என்பது சுத்தப் பித்தலாட்டம். தலைமைகளை அழித்தது கூடப் போகட்டும். இனத்துக்காக போராடப் போன அப்பாவி போராளிகள் ஏன் கொண்டீர்கள்?

ஈபி வலுக்கட்டாயமாக பிடித்த டிஎன் ஏ பொடியளை ஏன் சுட்டீர்கள். வேறு வழியின்றி கருணா பக்கம் நிண்ட பொடியளை என்னத்துக்க்கு வெருகலில் நர வேட்டை ஆடினீர்கள்? ஆனந்த ராஜா, நீதிபதி ராமச்சந்த்ஹிரன் என்னும் பல இயக்க சார்பில்லோரை ஏன் போட்டீர்கள்?

கந்தன் கருணை, நவாலி டெலோ முகாம் கொலைகளுக்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள். கொலையாளி அருணாவை கப்டன் ஆக்கியதை தவிர?

சதாம் உசேன் காலத்தில் 100% வாக்குகளை பெற்று ஒவ்வொரு தேர்தலிலும் வெல்வார். அதுக்காக ஈராக்கிய மக்கள் அவர் பக்கம் நிண்டதாய் சொல்ல முடியுமா?

சகோதர கொலையை பொறுத்தவரை எல்லா இயக்கங்களும் ஒன்றே. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் புலி வாந்தி.அதுதான் புலி முற்றாக அழிந்துவிட்டது என்று நிம்மதியாய் இருந்தவர்களுக்கு இந்தத் தடை விலக்கு நிம்மதியைக் குலைத்து விட்டது. பலிகள் ஆயுதம் ஏந்தித்தித்தான வர வேண்டும் என்பதில்லை. புலிகளின் அரசியல் பிரிவை மீளவும் புதுப்பித்து ஜனநாயக வழியில் தேர்தலில் நின்று தங்கள் கொள்iகையை முன்னெடுக்க இப்போது சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.பலிகளுக்க்கான கட்சி ஒன்றும் சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தில் பதிவில் உள்ளது.

மீண்டும் புலி வாந்தி.அதுதான் புலி முற்றாக அழிந்துவிட்டது என்று நிம்மதியாய் இருந்தவர்களுக்கு இந்தத் தடை விலக்கு நிம்மதியைக் குலைத்து விட்டது. பலிகள் ஆயுதம் ஏந்தித்தித்தான வர வேண்டும் என்பதில்லை. புலிகளின் அரசியல் பிரிவை மீளவும் புதுப்பித்து ஜனநாயக வழியில் தேர்தலில் நின்று தங்கள் கொள்கையை முன்னெடுக்க இப்போது சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.புலிகளுக்க்கான கட்சி ஒன்றும் சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தில் பதிவில் உள்ளது.

84இல் நான் ஜேர்மனிக்கு வரும்போது.. எங்கும் புளொட்.. எதிலும் புளொட்... பணமும் அதற்குத்தான் குவிந்தது.

இந்தியாவில் அதற்குள் டம்மிங் ஆரம்பிச்சுதா... சந்ததியார் தீப்பொறி பத்திரிகையில் டம்மிங்கில் அகப்பட்டு பலியானோரைப் பட்டியலிட்டார்.

இறுதியில் அவரது மருமகனான சங்கிலியனின் துவக்கிற்கே இரையானார்.

அந்த சமயத்தில் உமாவுக்கு BMW கார் அனுப்ப ஜேர்மனியில் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்!

சந்ததியாரின் மறைவுடன் கொஞ்ச ஜேர்மன் புளொடாரங்களும் புதுப் பணக்காரங்களானாங்கள்.

காருக்கு சேர்த்த காசுக்கு பொறுப்பு நின்றவர் பிரபல நகைக்கடை முதலாளியானார்.

இதுகளை பார்த்திருந்த சிலர்.. 2009இல் அதையே செய்தார்கள்!!  :o  :lol:

அண்ணைக்கு இப்பவும் தமிழ் விளங்கவில்லை .இயக்க உள்முரண்பாடுகள் பற்றி யார் கதைத்தார் ,அதில்  புளொட்டை அடிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை .இயக்கங்களுக்கு இடையில் ஆனா பிரச்சனை என்பதுதான் நான் எழுதியது .

எல்லாரும் இங்கு அரை குறை போல இருக்கு . :lol:  

யார் மக்களிடம் கேட்டுச் செய்தீர்கள்? ஆயுதத்தோடு நீங்கள் நிண்டபடி, ஒப்புக்கு கூட ஒரு தேர்தலை அல்லது சர்வசன வாக்கெடுப்பை நடத்தாமல் - மக்கள் அப்படி நினைத்தார்கள் இப்படி நினைத்தார்கள் என்பது சுத்தப் பித்தலாட்டம். தலைமைகளை அழித்தது கூடப் போகட்டும். இனத்துக்காக போராடப் போன அப்பாவி போராளிகள் ஏன் கொண்டீர்கள்?

ஈபி வலுக்கட்டாயமாக பிடித்த டிஎன் ஏ பொடியளை ஏன் சுட்டீர்கள். வேறு வழியின்றி கருணா பக்கம் நிண்ட பொடியளை என்னத்துக்க்கு வெருகலில் நர வேட்டை ஆடினீர்கள்? ஆனந்த ராஜா, நீதிபதி ராமச்சந்த்ஹிரன் என்னும் பல இயக்க சார்பில்லோரை ஏன் போட்டீர்கள்?

கந்தன் கருணை, நவாலி டெலோ முகாம் கொலைகளுக்கு என்ன தண்டனை கொடுத்தீர்கள். மலையாளி அருணாவை கப்டன் ஆக்கியதை தவிர?

சதாம் உசேன் காலத்தில் 100% வாக்குகளை பெற்று ஒவ்வொரு தேர்தலிலும் வெல்வார். அதுக்காக ஈராக்கிய மக்கள் அவர் பக்கம் நிண்டதாய் சொல்ல முடியுமா?

சகோதர கொலையை பொறுத்தவரை எல்லா இயக்கங்களும் ஒன்றே. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

என்ன நாசமோ  தேர்தல் வைக்க வேணும் எண்டுறீயள் பிறகு சதாம் வெண்டது கூட செல்லாது எண்டுறீயள்...  என்ன நாளைக்கு லீவோ....??? 

அருணாவை மாவீரர் பட்டியலில் வைத்து இருக்கிறார்கள் எண்டதே நீங்கள் சொல்லிதான் சத்தியமாய் தெரியும் அண்ணை... !! 

தகவலுக்கு நண்றி... 

  • கருத்துக்கள உறவுகள்

ரி என் ஏ பொடியளை சுட்டது என்பது சுத்தப் பொய். மணியாரம் தோட்டத்தில் வைச்சு இந்தியப் படைகளின் தூண்டுதலின் பெயரில் முன்னேறி வந்த புலிகள் மீது தாக்குதல் தொடுத்து.. அரைகுறையாக பயிற்றுவிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்களை முன்னுக்கு தள்ளிவிட்டு ஈபி ஓடிப்போய் கொட்டடியில் பதுங்கிவிட்டது. இறுதியில் அந்தச் சண்டையில் அப்பாவி தமிழ்  பிள்ளைகள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டார்கள்.

பின்னர் புலிகளுடன் மோதல்களை தவிர்க்க புலிகளே ஊரூரா அறிவிப்புக்களைச் செய்தார்கள். சரணடைந்த எத்தனையோ ரி என் ஏ பிள்ளைகளை புலிகளே பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள்.

கருணாவின் துரோகம்... மிகக் குறைந்த இழப்போடு தான்.. அன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கருணா தனக்கு சிங்களப் படைகளின் ஆதரவு கிடைக்கும் என்ற நிலையில் தான் போராளிகளை எதிர்த்து சண்டை இடச் சொன்னார். ஆனால் அப்படி நடக்காத நிலையில்.. போராளிகள் தாமாகவே சரணடைந்தார்கள். கருணா துரோகத்தில்.. எத்தனை போராளிகள் களப்பலியானார்கள்..??!

கந்தன் கருணைப்படுகொலை என்பது.. அன்றைய பழிவாங்கல் படுகொலைகளின் தொடர்ச்சி. அதில் யாரும் சுத்தமில்லை..!

புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் காட்டிலும் மாற்று இயக்கங்கள்.. ஒட்டுக்குழுக்களாகிச் செய்த படுகொலைகள்.. ஏராளம். மண்டையன் குழுக்கள் வெட்டிப் போட்ட பிணங்கள் ஏராளம்..! அதை எவன் பேசுறீங்க..?????! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அர்யூன் அண்ணா புலிகள் அளவுக்கு மற்றய இயக்கங்கள் மீது வன்முறை பிரயோகிக்கா விடினும், இயக்கங்கள் ஆளாளுக்கு பொறாமை கொண்டதும், ஏட்டிக்கு போட்டியாக செயல்ப்பட்டதும்தான் காலப்போக்கில் பெரிதாகி சகோதர கொலைக் கலாச்சாரத்தில் வந்து முடிந்தது. இதில் டி ஆர் ஆர் ஓ கந்தசாமியை சித்ரவதை செய்து கொண்ட ஈரோஸ் உட்பட யாரும் விதிவிலக்கில்லை.

இதே போல ஒரு நிலையே இப்போ புலத்திலும் காணப்படுகிறது.

அவர்களை நிற்க அனுமதிக்க புலிகள் யார் அண்ணை... ???   ஆள் தொகையிலையும் ஆயுத பலத்திலையும் புலிகள்  மற்றய இயக்கங்களோடை ஒப்பிடும் பொழுது மற்றய இயக்கங்கள் ஏணி வைத்தாலும் எட்டாத  உயரத்திலை இருந்தார்கள்...  இல்லை எண்டா சொல்ல போகிறீர்கள்...   ?? 

இங்கை ஒரு அண்ணை புலிகள் மற்றவர்கள் மீது  பொறாமை படுகிறதாக சொல்லுறார்...   மிகப்பெரிய பலமான அமைப்பான Telo  புலிகள் தாக்கியபோது  ,பெருந்தன்மையும் மனிதாபிமானமும் கொண்ட மற்ற  பெரிய இயக்கங்களான  EPRLF  PLOTE  அமைப்புக்கள் என்ன செய்து கொண்டு இருந்தன... ??  அடுத்தது தாங்களாக இருக்கலாம் என்பது இந்த அரசியலும் அறிவும் இருந்ததாக சொல்லி கொள்ளும் அமைப்புக்கு தெரியாது எண்டா சொல்ல போகிறீர்கள்...  

ஏன்  உதவிக்கு போகவில்லை...??   காரணம் ஒண்டு தான்..  TELO   மீது இருந்த பொறாமை... அழிந்து போகட்டும்  அதுதான் அவர்களுக்கு தேவையாக இருந்தது ...   

பொறாமை ஒன்றும் இல்லை ,இயலாமை தான் காரணம் .டெலோவை புலிகள் அடிக்கும் போது செல்வம் அடைக்கலநாதன் ஓடிவந்தது உமாவிடம் தான்.நானும் அங்கு இருந்தேன்  .உமாவிடம் அப்போ இருந்தது சவுக்கு மரத்தில் செய்த துவக்குதான் அண்ணை .கடைசி பொபியையாவது காப்பாற்றி இந்தியா கொண்டுவந்தார்கள் .அதற்காத்தான் கிட்டு மெண்டிசை வன்மம் வைத்து போட்டார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணைக்கு தமிழ் தெரியாதோ . :icon_mrgreen:

தீர்வு வந்துவிட்டது என்று எந்த மடையன் சொன்னான் ,புலி கிண்டி விட்டு சென்ற கிடங்கை நிரவவே பல வருடங்கள் எடுக்கும் 

தண்டவாள சிலிப்பர் கட்டைகளை கழட்டியவர்களை விட்டு யாழ்தேவியை விட்டார்கள் என்று இப்போதைக்கு திருப்திபடுங்கள் .

நீங்கள் ஹைவேயில்  சென்று மக்களை நடந்து செல்லவிட்ட பாவம்தான் எங்களை இந்த நிலையில் விட்டது . :o

எங்களையெண்டு ஆரை சொல்ல வாறியள்???

  • கருத்துக்கள உறவுகள்

மண்டையன் குழுத்தலைவர்தான் இன்று உங்களின் தமிழ்த்தேசிய சிங்கம் - அவரைப் பற்றி நீங்கள் பேசுவதுதான் அழகு.

நெடுக்கர் உங்களுக்கு யாழ்ப்பாணத்தை தவிர வேறு எதுவும் தெரியாது என்பதை மீள நிறிவுகிறீர்.

திருமலையில் ஏராளமான டி என் ஏ பெடியள் கொல்லப்பட்டனர்.

கொட்டடியில் கூட வருவது கட்டயமாக பிடிக்கப் பட்ட பிள்ளைகள் எனத்தெரிந்துமே புலிகள் நர வேட்டை ஆடினர்.

யாராவது மட்டக்களப்பு ஆக்களிடம் நட்பாயிருந்தால் கேட்டுப்பாருங்கள், உண்மையில் வெருகலில் செத்த பிள்ளையள் எத்தனை என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

84இல் நான் ஜேர்மனிக்கு வரும்போது.. எங்கும் புளொட்.. எதிலும் புளொட்... பணமும் அதற்குத்தான் குவிந்தது.

இந்தியாவில் அதற்குள் டம்மிங் ஆரம்பிச்சுதா... சந்ததியார் தீப்பொறி பத்திரிகையில் டம்மிங்கில் அகப்பட்டு பலியானோரைப் பட்டியலிட்டார்.

இறுதியில் அவரது மருமகனான சங்கிலியனின் துவக்கிற்கே இரையானார்.

அந்த சமயத்தில் உமாவுக்கு BMW கார் அனுப்ப ஜேர்மனியில் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்!

சந்ததியாரின் மறைவுடன் கொஞ்ச ஜேர்மன் புளொடாரங்களும் புதுப் பணக்காரங்களானாங்கள்.

காருக்கு சேர்த்த காசுக்கு பொறுப்பு நின்றவர் பிரபல நகைக்கடை முதலாளியானார்.

இதுகளை பார்த்திருந்த சிலர்.. 2009இல் அதையே செய்தார்கள்!!  :o  :lol:

உவையின்ரை கதை சொல்ல வெளிக்கிட்டனெண்டால்........ கதை மட்டும் நூறு பக்கத்தை தாண்டும். அப்பவெல்லாம் சோசல் பிச்சையயே பறிச்செடுத்த நாதாரிகள். :(

அர்யூன் அண்ணா புலிகள் அளவுக்கு மற்றய இயக்கங்கள் மீது வன்முறை பிரயோகிக்கா விடினும், இயக்கங்கள் ஆளாளுக்கு பொறாமை கொண்டதும், ஏட்டிக்கு போட்டியாக செயல்ப்பட்டதும்தான் காலப்போக்கில் பெரிதாகி சகோதர கொலைக் கலாச்சாரத்தில் வந்து முடிந்தது. இதில் டி ஆர் ஆர் ஓ கந்தசாமியை சித்ரவதை செய்து கொண்ட ஈரோஸ் உட்பட யாரும் விதிவிலக்கில்லை.

இதே போல ஒரு நிலையே இப்போ புலத்திலும் காணப்படுகிறது.

மற்ற இயக்கங்களுகிடையில் முரண்பாடுகள் இருந்திருக்கலாம் புலிகள் மாதிரி அழித்து ஒழிக்க வேண்டும் என்ற குரூரம் இருக்கவில்லை .

யாராவது முடிந்தால் ஒரு உதாரணம் எழுதுங்கள் -புளொட் ,ஈபி,டெலோ இவர்கள் ஒன்றோடு ஒன்று சண்டை பிடித்த அல்லது கொலைசெய்த சம்பவங்களை . 

அண்ணைக்கு இப்பவும் தமிழ் விளங்கவில்லை .இயக்க உள்முரண்பாடுகள் பற்றி யார் கதைத்தார் ,அதில்  புளொட்டை அடிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை .இயக்கங்களுக்கு இடையில் ஆனா பிரச்சனை என்பதுதான் நான் எழுதியது .

எல்லாரும் இங்கு அரை குறை போல இருக்கு . :lol:  

ம்.. இயக்கங்களுக்கு இடையில் ஆன பிரச்சினை என்றால்... தொல்புரத்தில் (சுழிபுரம் கிராம சேவகர் பிரிவு) புலிக்கு நோட்டீஸ் ஒட்டின 6 அப்பாவி இளைஞர்களை பிடித்துக் கொண்டுபோய், சுட்டு.. திருவடிநிலை கடற்கரை மணலுக்குள் தாட்டு.. மறுநாள் அதுகளை நாய் இழுத்துக் கொண்டு திரிந்து.... அதோடைதான் புளொட் மட்டும் இருந்த சுழிபுரத்துள் புலி நுழைந்து காம்ப் போட்டது..!!

சொறிஞ்சுபோட்டு கத்திக் கதறுறதுக்கு இது ஒர் உதாரணம்!!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மண்டையன் குழுத்தலைவர்தான் இன்று உங்களின் தமிழ்த்தேசிய சிங்கம் - அவரைப் பற்றி நீங்கள் பேசுவதுதான் அழகு.

நெடுக்கர் உங்களுக்கு யாழ்ப்பாணத்தை தவிர வேறு எதுவும் தெரியாது என்பதை மீள நிறிவுகிறீர்.

திருமலையில் ஏராளமான டி என் ஏ பெடியள் கொல்லப்பட்டனர்.

கொட்டடியில் கூட வருவது கட்டயமாக பிடிக்கப் பட்ட பிள்ளைகள் எனத்தெரிந்துமே புலிகள் நர வேட்டை ஆடினர்.

யாராவது மட்டக்களப்பு ஆக்களிடம் நட்பாயிருந்தால் கேட்டுப்பாருங்கள், உண்மையில் வெருகலில் செத்த பிள்ளையள் எத்தனை என்று.

கண்முன்னாள் நடந்ததையே தவறாக விளக்கும் உங்களின் நிலையை தான் நாங்கள் தவறென்று சொல்ல முடியும். திருமலையில் 1000 ரி என் ஏ கொன்றது என்று சொன்னால் அதனை நம்ப எவனும் தயாரில்லை.

அன்றை நாட்களில் பெரிதும் பேசப்பட்டது மணியாரம் தோட்ட நிகழ்வுகள் தான். அதன் பின்னணி தான் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.

மானுட வரலாற்றில்.. உலகப் போர்கள் உள்ளடங்கள் இன்றைய ஐ எஸ் யுத்தம் வரை எல்லாரும் தான் நரபலி கொடுத்திட்டு இருக்கினம். சில பேர் நவீன தொழில்நுட்பங்களை பாவிச்சு நரபலி எடுக்கினம். சில பேர் வெறும் துப்பாக்கிகளை பாவிச்சு எடுக்கினம். இதில யார் உசத்தி என்பதல்ல பேச்சு. எல்லோரும் தான் நரபலி எடுக்கிறார்கள்.. எடுத்தார்கள். புலிகள் மட்டும் தான்.. அதற்கு தண்டிக்கப்படனும் என்ற நியதி கிடையாது.

அப்படி பார்த்தால்.. வகைதொகையின்றி நரபலி எடுக்கும்.. அமெரிக்காவில் இருந்து எல்லோரும் தண்டிக்கப்படனும். புலிகள் மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஒரு நீதி இருந்தது. அதன் கீழ் பார்க்கும் போது.. அவர்கள் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டு என்பது மறுக்கப்படக் கூடிய காரணங்களைக் கொண்டவை..! அமெரிக்கா குண்டு போட்டுக் கொன்றால்.. அது சட்டத்துக்கு உட்பட்டது.. புலிகள் குண்டு வைச்சால்.. அது சட்டத்துக்கு புறம்பானது. ஆனால்.. மானிட நீதியின் படி இரண்டுமே படுகொலை தான். குற்றம் தான். தண்டனைக்குரியது தான். அப்படி என்றால் அமெரிக்காவை யார் தண்டிப்பது. ரஷ்சியாவை யார் தண்டிப்பது..???! :icon_idea::lol:

உவையின்ரை கதை சொல்ல வெளிக்கிட்டனெண்டால்........ கதை மட்டும் நூறு பக்கத்தை தாண்டும். அப்பவெல்லாம் சோசல் பிச்சையயே பறிச்செடுத்த நாதாரிகள். :(

அதை நீங்கள் எழுத தேவையில்லை நாங்களே எழுதிவிட்டோம் தீப்பொறிகளாக ,புதியதோர் உலகமாக ,இதைவிட இணயங்களில் எத்தனயோ பதிவுகளாக ,ஏனெனில் புளோட்டுக்காகவோ அல்லது அதன் தலைமைக்காகவோ எவனும் போராட போகவில்லை இனதிற்காகத்தான் போனான் ,

ஆனால் புலிகள் அப்படியில்லை உண்மையை ஒப்புக்கொள்ள பரந்த அறிவும், மனமும் இல்லை .நீங்கள் சொல்லாவிட்டாலும் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் எல்லாம் தெரியும் .

பொறாமை ஒன்றும் இல்லை ,இயலாமை தான் காரணம் .டெலோவை புலிகள் அடிக்கும் போது செல்வம் அடைக்கலநாதன் ஓடிவந்தது உமாவிடம் தான்.நானும் அங்கு இருந்தேன்  .உமாவிடம் அப்போ இருந்தது சவுக்கு மரத்தில் செய்த துவக்குதான் அண்ணை .கடைசி பொபியையாவது காப்பாற்றி இந்தியா கொண்டுவந்தார்கள் .அதற்காத்தான் கிட்டு மெண்டிசை வன்மம் வைத்து போட்டார் .

விளங்குது... 

உங்களையே  காப்பாத்த முடியாத நீங்கள் எப்படி மற்றவர்களை காப்பாத்த முடியும்...  ??   

பிறகு எதுக்கு கையிலை ஆயுதம் எல்லாம் வைச்சு இருக்க வேணும் எண்டு அடம் பிடிச்சனீங்கள்....??    விலாசம் காட்டவோ...?? 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், வர வர வைகோ மாரி, அமெரிக்காவிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், ரஸ்யாவை நோக்கி ஒரு சவால் விடுகிறேன் எண்டு சவுண்டு கொஞ்சம் ஓவராய் விடுறீர்காணும்.

மற்றயவர் நரபலி எடுக்கிறதில்லை இங்கே அலசு பொருள். புலிகளும் மற்றய தமிழ் இயக்கங்களும் தமிழரையே நரபலி எடுத்தனரா? ஆம் அல்லது இல்லை. இதுதான் கதை.

அத விட்டு விட்டு நாயகன் கமல் மாரி அமெரிக்காவ நிறுத்தசொல் நான் நிறுத்துறேன்.

ரஸ்யாவ நிறுத்த சொல் நான் நிறுத்துறேன் எண்டு வயனம் பேசப்படாது.

Edited by goshan_che

புலிகள் ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்கு தேசிய தலைவர் பக்கத்தில் இருக்கனுன்னு அவசியம் இல்லை.

.........

இந்தத் தீர்ப்பை.. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.. கூடிய கவனத்துடன் ஆராயும். புலிகள் ஜனநாயக ரீதியில் செயற்படுவதை இட்டு நாடுகள் ஒன்றும் அதிருப்தி கொண்டிருக்கவில்லை. மீண்டும் ஆயுதப் போராட்டம் என்ற இலக்கை நோக்கி நகராத உத்தரவாதங்களோடு புலிகள்.. ஜனநாயக அரசியலை பலப்படுத்த மேற்குநாடுகள் கரிசணை காட்டியே வருகின்றன. இதனை நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளை அவுஸ்திரேலியா அழைத்துப் பேசி இருந்தமை மற்றும் நியூசிலாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று அழைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியமை.. நெதர்லாந்தில்.. இத்தாலியில் விடுதலைப் புலி செயற்பாட்டாளர்கள் மீதான வழக்குகளில் அவர்களுக்கு சாதகமாக அமைந்த தீர்ப்புக்கள் என்று பலவற்றை சுட்டிக்காட்டலாம்.

ஆக.. நுணுக்கமான சட்ட அணுகுமுறைகளுடன் கூடிய மேற்குலக ஜனநாயக வரையறைகளுக்குள் புலிகள் அமைப்பு செயற்பட உத்தரவாதம் அளித்தால்.. அவர்கள் மீதான தடைகளை சர்வதேச சமூகம் நீக்க முன்வரும். அதில் அவர்களுக்கு எந்த இடர்ப்பாடும் இருக்க வாய்ப்பில்லை. புலிகளின் தலைமை 2009 மே யில் அறிவித்த ஆயுதங்களின் மெளனிப்புக்குப் பின்னான சூழலை உலகம் அவதானித்தே வருகிறது. அந்த அறிவிப்பை புலிகளும் தமிழ் மக்களும் உறுதியாக பின்பற்றி வரும் சூழலையும்.. தமிழ் மக்கள் ஜனநாயக வழிமுறைகளில் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள நாட்டம் காட்டுவதையும்.. உலகம் கவனித்தே வருகிறது.

இவை விடுதலைப்புலிகள் ஒரு மக்கள் ஆதரவு பெற்ற மாபெரும் ஜனநாயக சக்தியாக வளர்க்கப்பட உதவும். அதனை சிறு குழுக்களும்.. ஒட்டுக்குழுக்களும்.. பணத்தாசை கோஷ்டிகளும் நாசம் பண்ணாமல் இருக்க.. மக்களும்.. பிற தாயக நலன்விரும்பி அமைப்புக்களும் கட்டுக்கோப்போடும்.. விவேகத்தோடும் செயற்படுவது அவசியம்.

---

இதை சொல்லூம் நெடுக்கால் போவான் தான் புலிகள் செய்த முழு கொலைகளையும் நியாயப்படுத்துகிறார்....

புலிகள் தமது நிலையை (கொலைக்கலாச்சாரத்தை) மாற்றவேண்டும் (இனி மாற்றவேண்டியஅவசியமேயில்லை ..அதை ஒத்துகொண்டால் போதும்) என்று தானே நாங்களும் சொல்லுகிறோம்?

தான் நினைத்தபடி கொலை செய்தபடியால் தான் Plote, Telo எப்படியோ..அதே மாதிரி தான் புலிகளும்...

ஆ..ஊ..என்றால் புலிகளை ஒப்பிட Plote, Telo தான் reference ஆ?

விளங்குது... 

உங்களையே  காப்பாத்த முடியாத நீங்கள் எப்படி மற்றவர்களை காப்பாத்த முடியும்...  ??   

பிறகு எதுக்கு கையிலை ஆயுதம் எல்லாம் வைச்சு இருக்க வேணும் எண்டு அடம் பிடிச்சனீங்கள்....??    விலாசம் காட்டவோ...?? 

உங்கட அறிவை கொஞ்சம் மெச்சத்தான் வேண்டும் . :icon_mrgreen:

டெலோ அந்த நேரம் சில தாக்குதல்கள் வேறு செய்து இருந்தது ,ஆனால் பிரச்சனை இந்த வடிவில் வரும் என்று யார் நினைத்தது .கையை கொடுத்து விட்டு கழுத்தில் கை வைக்கும் காதகனை கனவிலும் அவர்கள் நினைக்கவில்லை .

குட்டிமணியிடம் அடைக்கலம் தேடி வந்தபோது அவர்கள் அப்படி சிந்திக்கவில்லை ,உங்கள் கணக்கு படி அப்பவே போட்டிருக்கவேண்டும் . 

நீங்கள் சொல்லுறதை பார்த்தால்  கையிலை ஆயுதங்களோடை  TELO விலை இருந்த அப்பாவி பாப்பாக்களை புலிகள்  நரித்தனமாக கொலை செய்து விட்டார்கள்  எண்டுதானே சொல்ல வாறியள்....?? 

உங்களின் அறிவுக்கு TELO  என்ன செய்து இருந்தது எண்டதுகள் தெரிய வாய்ப்பே இல்லை...  ஏன் எண்டால் நீங்கள் அதை விட பாப்பாக்கள்...   சூப்பி போத்தலுகளோடை திரிஞ்சனீங்கள்... 

தயா அதில் சந்தேகமே இல்லை...நிறைய தப்பி ஓட இடம் தெரியாமல் இருந்த வன்னி டெலோ பெடியங்களை தான் tire போட்டு எரித்தது....

ஏன் tire போட்டு உயிரோடு எரித்தீர்கள் என்று சொல்லுவீரா?

என்ன ஒரு "flow" இல எரித்தீர்களா?

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி டயர் போட்டு எரிக்கப்பட்டவர்களில் என் தூரத்து உறவினரும் ஒருவர். டெலோக்கு உதவவேண்டும், நாட்டுக்கு எதாவது செய்யோணும் எண்டு ரெண்டு பிள்ளையளை மனுசியை விட்டு விட்டு, டெலோவுக்கு பிக்கப் ஓடினவர்.

சாவகச்சேரியில் வைத்து கைதுசெய்து, அருகில் இருந்த ஏதோ ஒரு தரவையில் ஏனையோருடன் சேர்த்து எரிக்கப்படார். உயிருடன்.

எரித்து விட்டு திரும்பி வந்த புலிகளுக்கு வாகனத்தை மறித்து, கைலாகு கொடுத்து, சோடா வாங்கி கொடுத்தார் சாவகச்சேரியில் கடை வைத்திருந்த ஒரு புலிஅபிமானி.

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற இயக்கங்களுகிடையில் முரண்பாடுகள் இருந்திருக்கலாம் புலிகள் மாதிரி அழித்து ஒழிக்க வேண்டும் என்ற குரூரம் இருக்கவில்லை .

யாராவது முடிந்தால் ஒரு உதாரணம் எழுதுங்கள் -புளொட் ,ஈபி,டெலோ இவர்கள் ஒன்றோடு ஒன்று சண்டை பிடித்த அல்லது கொலைசெய்த சம்பவங்களை . 

அது வல்லவர்களுக்கு உரியது .............
வலது குறைந்தவர்கள். தமக்கு உகந்த வேலையை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம். 
புலியோட சொறியாத கூட்டம் ஒன்றை (புலிகள் தாக்கும் முன்பு) அண்ணை பட்டியல் இட்டால். மற்ற விடயங்களை அதில் இருந்து பேசலாம்.
(டெலா ஓபராய் தேவன் இயக்கம் ஆரமிபிக்க முன்பே புலிகளுடன்  முரண்பட்டு  விட்டார். தாயக விடுதலை என்பது கொள்கை எனில் மெதுவாக ஒதுங்கி இருக்கலாம் என்பது எனது தனிபட்ட எண்ணம். அதில் என்ன நடந்தது என்பது உணமையிலேயே எனக்கு தெரியாது. அதை தவிர்த்து விடுங்கள் அல்லது அதில் புலிகள் மீது 100 வீத பிழையையும் நான் ஏற்றுகொள்கிறேன்) 

ஆனால் கடைசியில் பின்னால் இருந்து குத்தியவர்கள் இப்படி முடிவார்கள் என்று எதிர்பாத்ததுதான்.

இந்தத்திரியில் மீண்டும் பின் நோக்கி பதிவிடும் நிலைக்கு கருத்தாளர்கள் திசையை மாற்றி அமைத்து விட்டார்கள் என்பதற்காக திசை மாறக்கூடாது என்பதற்காக மீண்டும் பதிவிடுகிறேன்  :lol:
 
உண்மை நீதி சற்று தள்ளியே நிற்கும் .............ஆனால் இறுதியல் அதுதான் ஜெயிக்கும் .
கொடுமை ,அநீதி ,போன்ற இடர்களால் விலங்கிடப்பட்டு மீழவே முடியாது என்ற நிலையில் மீண்டும் ஒரு முறை நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது ,,,,,,,,,,,,இந்த நாள் மிக்க மகிழ்ச்சியான நாளாக ஒவ்வொரு தமிழனுக்கும் அமையட்டும் ,,,,,,,,,,,,,
 விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .
 
உலகில் நீதியை நிலை நிறுத்த பாடு படும் இந்த நீதித்துறையே பயங்கரவாதிகள் இல்லை என்று சொன்ன பின் விசமத்திற்கு   கருத்திடும் கொள்கை வாதிகளின் கருத்து என்னைப்போல  முட்டாள்களே :D  ஏற்க மறுக்கும் இவ்வேளையில்  புத்தி சாலிகள் உங்களை காறி  உமிழ்ந்து திட்ட்ராங்கப்பா :o  ............மாரித்தவைக்கை போல கத்தாமல் ஏதாவது செய்யுறதை செய்ய சொல்றாங்கப்பா ....... :icon_mrgreen:  :D

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.