Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளே- இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளே- இலங்கை
news
 
bf01ff5af466f7277d59c50323cb46e4.jpg
இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்பதனை தம்மால் நிரூபிக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். அது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்கத் தயார்.
 
தமிழீ விடுதலைப் புலிகள் 171 அரசியல்வாதிகளை படுகொலை செய்துள்ளனர். 12 பேரூந்துகள் மீது குண்டுத் தாக்குதல், 21 கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி மக்களை கொலை செய்தல் உள்ளிட்ட 3000 ற்கும் மேற்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
 
குறிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச உள்ளிட்டவர்களை படுகொலை செய்தல்.
 
இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட படையதிகாரிகளை கொலை செய்தல் என பல்வேறு குற்றச் செயல்களுடன் புலிகளுக்கு தொடர்பு உண்டு என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளதாக தென்னிலங்கை பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தளர்த்துவது தொடர்பில் விடுத்த அறிவிப்பினைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
18 அக்டோபர் 2014, சனி 8:15 மு.ப

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

40 ஆயிரம் மக்களை கொன்றவர்களுக்கு  என்ன பெயர்?

  • கருத்துக்கள உறவுகள்
உலகின் தபோதைய அரிச்சந்திரர்கள் ...........
திருவாய் மலர்கிறார்கள் !
  • கருத்துக்கள உறவுகள்

சிராணி, பொன்னர் விவகாரங்களில் இவர்களது நீதித்துறை எவ்வளவு மட்டமானது என்பதை இவர்களே நிரூபித்துவிட்டார்கள். இவர்கள் என்னத்தை இனி நிரூபித்தாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இது கிணறு வெட்டப் போய் பூதம் கிளப்பிய கதை ஆகும் போல தெரியுது.

புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்று ஈயூ ஒரு சுயாதீன விசாரணை குழு அமைத்து ஆராய்ந்தால் புலிகளின் பழைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும். இந்த விசாரணை முடிவில் ஈயூ புலிகளை பயங்கரவாதிகள் எனசொல்ல வே வாய்ப்புகள் கூட.

அப்படி நடந்தால் அது இலங்கை மீதான ஐநா விசாரணையின் தாக்கத்தை குறைப்பதோடு இலங்கைக்கு ராஜதந்த்ஹிர ரீதியில் ஒரு பலமான ஆயுதமாயும் போகும்.

புலம் பெயர்ஸ்சுக்கு இது புரிய கொஞ்ச நாளெடுக்கும், அதுவரை, விசில்தான், கும்மாளம்தாம் கூத்துத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட ரீதியாக புலிகளின்மீது பழிகளைப் பறித்துவிடுவது ஏறக்குறைய இயலாத காரியம். அரசியல்ரீதியாகத்தான் அவர்கள்மீது குற்றம் சுமத்த முடியும்.

தற்போது குர்திய போராளிகளுக்கு ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் ஆயுதம், பயிற்சி கொடுக்கும் விடயத்தைக் கிளறினால் விடயம் சிக்கல் ஆகும். மெதுவாக உடலில் இருந்து கழண்டுபோகும் உண்ணிகள் மாதிரி இந்தத் தடைகளும் போகும்.

வெளிநாடுகளில் எவரும் என்ன கூத்தையும் ஆடட்டும் நாட்டில் இந்த நிலை தொடரவேண்டும் .

சிங்கள தமிழ் முஸ்லிம் பொது மக்களை   வகை தொகையாக அழித்த ஒரு அமைப்பு இனி நாட்டில் அடிவைக்க விடவே கூடாது .அது நடக்க போவதுமில்லை .

Edited by arjun

புலம் பெயர்ஸ்சுக்கு இது புரிய கொஞ்ச நாளெடுக்கும், அதுவரை, விசில்தான், கும்மாளம்தாம் கூத்துத்தான்.

அண்ணை நீங்கள் எல்லாம் வெட்டி புடுங்கி அடுக்கினதுகளோட ஒப்பிடும் போது  புலம் பெயந்தவை சரியான மட்டம் தான்...   இண்டைக்கும்  தமிழ் மக்களின் விடுதலைக்காக பாடு படும்  ஒரீரு உயிர்களிலை நீங்கள் முக்கியமானவர் தானே... !!

என்னதான் சொன்னாலும் மாற்று கருத்து மாணிக்கங்களை போல எங்களாலை முட்டையிலை எல்லாம் மயிர் புடுங்க முடியாதண்ணை... 

இது கிணறு வெட்டப் போய் பூதம் கிளப்பிய கதை ஆகும் போல தெரியுது.

புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்று ஈயூ ஒரு சுயாதீன விசாரணை குழு அமைத்து ஆராய்ந்தால் புலிகளின் பழைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும். இந்த விசாரணை முடிவில் ஈயூ புலிகளை பயங்கரவாதிகள் எனசொல்ல வே வாய்ப்புகள் கூட.

அப்படி நடந்தால் அது இலங்கை மீதான ஐநா விசாரணையின் தாக்கத்தை குறைப்பதோடு இலங்கைக்கு ராஜதந்த்ஹிர ரீதியில் ஒரு பலமான ஆயுதமாயும் போகும்.

புலம் பெயர்ஸ்சுக்கு இது புரிய கொஞ்ச நாளெடுக்கும், அதுவரை, விசில்தான், கும்மாளம்தாம் கூத்துத்தான்.

அப்படி ஒரு விசாரணையை எவரும் மேற்கொள்ளப்போவதில்லை கோசான்.ஐநா விசாரணை என்பது இரு பகுதியினருக்குமான விசாரணை தான் அது நீதியாக நடந்தால் அதி பயங்கரவாதிகளான  இலங்கை அரசாங்கத்தின் எல்லா வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறும்.  இலங்கை அரசு செய்த குற்றங்களை விட புலிகள் அதிக குற்றங்களை செய்யவில்லை. அப்போது  புலிகளின் குற்றங்களுக்காக அவர்களும் பயங்கரவாதிகள் என்று கூறினாலும்  பரவாயில்லை.தமிழ் மக்களுக்கு நீதியான அரசியல்தீர்வு கிடைக்கும். அதற்காகவே போராட்டம் நடைபெற்றது. ஒரு பாதக  பயங்கரவாத அரசிற்கெதிராக ஒரு பயங்கரவாத இயக்கம் போராட்டம் நடத்தியது என்று கூறலாம்.நீதியான  அரசியற்தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைத்தால் அது  போதும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இது கிணறு வெட்டப் போய் பூதம் கிளப்பிய கதை ஆகும் போல தெரியுது.

புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்று ஈயூ ஒரு சுயாதீன விசாரணை குழு அமைத்து ஆராய்ந்தால் புலிகளின் பழைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும். இந்த விசாரணை முடிவில் ஈயூ புலிகளை பயங்கரவாதிகள் எனசொல்ல வே வாய்ப்புகள் கூட.

அப்படி நடந்தால் அது இலங்கை மீதான ஐநா விசாரணையின் தாக்கத்தை குறைப்பதோடு இலங்கைக்கு ராஜதந்த்ஹிர ரீதியில் ஒரு பலமான ஆயுதமாயும் போகும்.

புலம் பெயர்ஸ்சுக்கு இது புரிய கொஞ்ச நாளெடுக்கும், அதுவரை, விசில்தான், கும்மாளம்தாம் கூத்துத்தான்.

ஐ.நா விசாரணை நடத்தட்டும் பார்க்கலாம். எதை வைத்து புலிகளை விசாரணை செய்ய மாட்டார்கள் என நினைக்கிறீர்கள்??  புலிகளின் தடையை மேற்கு நாடுகள் முற்றாக நீக்கினால் அதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள். அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பது தானே. ஒரு சில தவறுகளை புலிகள் விட்டிருந்தாலும் (யார் தான் தவறு இழைக்கவில்லை)  30 வருடங்களாக உயிரை கொடுத்து போராடியவர்களை குற்றவாளிகள் ஆக்குவதில் ஏன் இங்கு சிலர் அரும்பாடு படுகிறார்கள் என புரியவில்லை.
 
புலிகளை சாட்டி மீண்டும் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ சிலர் மீண்டும்  காசு சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் அந்நாட்டு அரசுகள் கவனத்தில் கொள்ளும்.

வெளிநாடுகளில் எவரும் என்ன கூத்தையும் ஆடட்டும் நாட்டில் இந்த நிலை தொடரவேண்டும் .

சிங்கள தமிழ் முஸ்லிம் பொது மக்களை   வகை தொகையாக அழித்த ஒரு அமைப்பு இனி நாட்டில் அடிவைக்க விடவே கூடாது .அது நடக்க போவதுமில்லை .

இதனை தமிழீழ மக்கள் தான் சொல்ல வேண்டும். புலம்ஸ் அவர்களுக்கு பாடம் எடுக்க தேவை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சரியான தருணம். சிங்கள பேரினவாத அரசபயங்கரவாதத்தை பட்டியலிட்டுக் காட்ட.

இவர்கள் செய்த இனக்கலவரங்கள்.. சிறைச்சாலை படுகொலைகள்.. தமிழ் கிராமங்கள் மீதான சிங்கள இராணுவ தாக்குதல்கள்.. திட்டமிட்ட இனப்படுகொலை இராணுவ முன்னெடுப்புக்கள்.. பள்ளிகள்.. சந்தைகள்.. கோவில்கள்.. தேவாலயங்கள்.. மீதான விமானக் குண்டு வீச்சு படுகொலைகள்.. தமிழ் அரசியல்வாதிகளை படுகொலை செய்தமை மற்றும் விசாரணைக்கு இடமில்லாமல் செய்தமை.. தொண்டர் அமைப்புக்களை சார்ந்தோரை.. மாணவர்களை படுகொலை செய்தமை.. புதைகுழிகள்.. காணாமல் போகடிக்கப்பட்டமை.. மற்றும் 2009 இல் செய்த போர்க்குற்ற நடவடிக்கைகள்.. இப்படி இன்னோரென்ன.. உள்ளன. அத்தோடு இராணுவ ஒட்டுக்குழுக்களை கொண்டான வதை முகாம்கள்.. பலியிடல்கள்.. அரசியல் படுகொலைகள்.. இவை எல்லாம் கிரமாமகாகப் பட்டியலிடப்பட்டு நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சனல் 4 காணொளிகள் ஐநா மூவர் விசாரணை அறிக்கை உட்பட பலவற்றை ஆதாரமாக்கவும் வேண்டும்.

எப்போது சிங்களம் எங்களை பயங்கரவாதி என்றுதோ அப்போதே நாமும்.. உலகின் முன் இவற்றிற்கான ஆதாரங்களை தூக்கிப் போட்டு நியாயம் கேட்க வேண்டும். அப்போதுதான் நீதி தராசின் முன்.. யார் மோசமான பயங்கரவாதி.. எதனால் இலங்கைத் தீவு வன்முறையில் மூழ்கியது என்ற உண்மை உலகை சென்றடையும். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியை உலகம் வழங்க முன்வரும்.

சிங்களத்தின் இந்தக் கூவலை எமக்கு சாதமாக பாவிக்கும் தருணம்.. இப்போது கனிந்துள்ள  வேளையில்.. 1952 இல் இருந்து ஆதாரங்களை திரட்டி.. நீதியின் முன் வைப்பதே இன்றைய தமிழர்களின் தேவை..!!! பின்னர் நீதி தீர்மானிக்கட்டும்..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அத்தி பூத்தாற்போல் நெடுக்கரிடம் இருந்தும் ஒரு பயனான கருத்து.

நீங்கள் சொல்லும் அவ்வளவற்றையும் செய்ய வேண்டும், புலிச்சாயத்தை தள்ளி வைத்து விட்டு.

இல்லையானால் புலிகளும் ஒண்டுதான் அரசும் ஒண்டுதான் எண்டு இந்த கதை முடிக்கப்படும்.

புலிகள் எமது நியாயமான கோரிக்கைகளை ஹைஜாக் பண்ணி வன்முறை ஆட்டம் போட்டார்கள், அதற்காக தமிழரின் பிரச்சினைகளை, நியாயமான கோரிக்கையை பிந்தள்ள கூடாது என்பதே எமது அணுகுமுறையாய் இருக்க வேண்டும்.

இதனால்தான் தமிழ்தேசிய நலனில் இருந்து புலிகளின் நலனை பிரித்து செயல்பட வேண்டி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தமிழ் மக்களிடம் இருந்து முதலில் புலிகளை பிரிக்கவேண்டும்.
(ஜெனநாயகம் காப்ற்ற பட வேண்டும் இல்லையா?)
பின்பு..........
.
.
.
.
என்ன நடந்த எமக்கு என்ன? அதுதான் எமது வேலை முடிஞ்சிருச்சே.

இங்கு சில பிரசங்கிகள் கூறுவது போல் தமிழ் தேச நலனில் இருந்து தனது நலனை வேறுபடுத்தி தனது நலனுக்கு பிரபாகரன் முன்னுரிமை கொடுத்திருந்தால் இன்று அரசியலில் பலமுள்ள நபராக  வாழ்ந்திருப்பார்.  அதற்கான பல சந்தர்பங்கள் ஆசைவார்த்தைகள் அவருக்கு காட்டபட்டது. அரசியல் ரீதியில் அவரின் அரசியல் முடிவுகளை அவரின்  அவரின் தவறுகளை  விமர்சிப்பது என்பது  வேறு.ஆனால்  தமிழ் மக்க்ளுக்காக ஒரு சிறு தியாகத்தை கூட  செய்ய தயாரில்லாத வக்கீல்கள் கூட்டத்திற்கு முழு  வக்காலத்து வாங்கிக்கொண்டு  தனது குடும்பத்தையே விடுதலைக்கு விலையாக கொடுத்த ஒரு விடுதலை வீரனின் தியாகத்தை கொச்சைபடுத்துவது என்பது வேறு.   இந்த வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ளாத சில  அதிக பிரசங்கிகள்.

Edited by trinco

ஐயா

இவர்கள்

தன்னை 

தன்னை  இனத்தையே அறியாதவர்கள்

பிரபாகரன் போன்ற  தலைவர்களை அறிந்து கொள்ளமுடியுமா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.