Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிரட்டியதால் மட்டுமே உங்களை வரவேற்க வந்தோம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டியதால் மட்டுமே உங்களை வரவேற்க வந்தோம்!

தென் இலங்கை மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சிறீலங்கா ஜனாதிபதி அவர்களே,

கடந்த வாரம் நீங்கள் வடமாகணத்திற்கு வருகைந்தந்தீர்கள் அபிவிருத்தி என்ற பெயரிலே பல மாயஜால வித்தைகளைக்காட்டி ஆராவரம் செய்து சென்றீர்கள். ஆனால் உண்மை எதுவோ வடகிழக்கு மக்களின் உண்மைநிலை எது அவர்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதையெல்லாம் அபிவிருத்தி என்ற ஒரேவார்த்தைக்குள் உள்ளடக்கி மறுபுறத்தில் இன அழிப்பின் அடுத்த அத்தியாயத்திற்கான வேலைகளை முன் எடுத்துக்கொண்டிருப்பதை ஒட்டுமொத்த தமிழினமும் அறியும்.

கிணற்றுத்தவளைகளாக இருக்கும் அடிமட்டசிங்கள மக்களிற்கு புலிகள் என்ற பூச்சாண்டியையும் பயங்கரவாதம் என்ற மந்திரத்தையும் ஓதி ஓதி இத்தனைகாலம் ஆட்சிபீடத்தில் அமர்ந்துவிட்டீர்கள் இனியேனும் தமிழ்மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வினைப்பெற்றுக்கொடுக்கக்கூடாதா?? அப்படி என்ன பாவம் செய்துவிட்டனர் ஈழத்தமிழர்கள் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதானே? அதை சிங்களமக்கள் மட்டும் அனுபவிக்க அப்பாவித்தமிழர்கள் உங்கள் இனவெறி இராணுவத்தினால் அடக்கியாளப்படுவது எந்தவகையில் நியாயம்? நீங்கள் ஆட்சிக்குவந்த நாள்முதல் இத்தனைகாலமும் தமிழ்மக்களுக்கு எத்தகைய துன்பத்தினை கொடுத்துள்ளீர்கள் அதை ஒருபோதும் தமிழினம் மறக்கவோ மன்னிக்கவோமாட்டாது.

யாழ்தேவி வருகின்றாள் என்று ஒட்டுமொத்த தமிழினமும் மகிழ்ச்சியடைந்தது ஆனால் அதில் ஏறி வருவது யார் அதன் பயணத்தை தொடக்கிவைப்பது யார் என்று அறிந்ததும் வேதனைப்பட்டோம் தப்பித்தவறிக்கூட எம் பிள்ளைகளைக்கொன்ற நீங்கள் வரும் பாதையில் கூட பயணித்துவிடக்கூடாது என்று நினைத்தவேளை வீட்டுக்கு ஒருவரேனும் வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டோம் கிளிநொச்சியில் நீங்கள் வரும்போது உங்களை வரவேற்க வரவில்லை என்றால் காணிக்கானஅனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது என்றும் அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் எந்த சலுகைகளும் வழங்கப்படமாட்டது என்றும் யார் யாரெல்லாமோ எங்களை மிரட்டியதால் மட்டுமே உங்களை வரவேற்க வந்தோம். இதனை உலகமோ உங்கள் சிங்களதேசமோ அறிந்திருக்க வாய்ப்பில்லை காரணம் உண்மையினை வெளிப்படுத்தவேண்டிய ஊடகங்கள் எல்லாம் உங்கள் வருகையினை ஊதி ஊதி பெரிதாக்கி உங்களுக்கு புகழாரம் சூட்டிக்கொண்டதே தவிர அங்கே வாழ்கின்ற அப்பாவித்தமிழ்மக்களைப்பற்றியோ அவர்களின் மனநிலை பற்றியோ சிந்திக்கவில்லை.

நீங்கள் வருகின்றீர்கள் என்று ஆசைப்பட்டோ விருப்பப்பட்டோ உங்களை வரவேற்க அங்கே கூடி நிற்கவில்லை உங்கள் அடிவருடிகளும் உங்கள் சர்வாதிகார இராணுவமும் இணைந்து உழைத்த உழைப்பின் பயனே அவ்வளவு கூட்டம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த காசுக்காக நாய்களைவிடக்கேவலமாக வேலைசெய்து எங்களைத் திரட்டிவந்தார்கள். நாங்களாக வரவில்லை.

மதிப்புக்குரிய சிறீலங்கா ஜனாதிபதி அவர்களே,

முதலில் நீங்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

ஒன்றரை இலட்சம் மக்களைப்படுகொலை செய்த கொலையாளி நீங்கள் எங்கள் வீடுகளையும் கோவில்களையும் தரைமட்டமாக்கிய சர்வாதிகாரி நீங்கள் உங்கள் பாதம் எங்கள் மண்ணிலே படுவதே மகாபாவம் என்று நினைப்பவர்கள் நாங்கள். ஆனாலும் உங்களை வரவேற்க நிர்பந்திக்கப்பட்டோம் காரணம் ஆட்சியும் அதிகாரமும் உங்களிடத்தே உள்ளதால் எதைவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்துமுடிப்பீர்கள் மன்னிக்கமுடியாத மாபெரும் பாவத்தினையும் பழியினையும் செய்த உங்களை நீடூடி வாழ்க என்று வாழ்தினால் எங்கள் நாக்கு அழுகி வீழ்ந்துவிடாதா ஆனால் வடமாகாணம் முழுவதுமே உங்கள் புகைப்படமும். நீடூடிவாழ்க, வாழ்த்துமடலும் வீதிவீதியாக கட்டப்படிருக்கின்றதே அதைப்பார்க்கும் ஒவ்வொருநொடியும் தேகமெல்லாம் தீப்பிடித்து எரிகின்றது.

எம் இனவிடுதலைக்காக போராடிய வீரர்களை நினைப்பதற்குகூட தடைவிதித்துள்ளீர்கள் எங்கள் விடியலுக்காக போராடிய வீரர்களின் துயிலும் இல்லங்களை எல்லாம் ஆக்கிரமித்து அவர்களின் கல்லறைகளை எல்லாம் அடியோடு அழித்து உலகத்தில் யாருமே செய்யாத ஒரு இழிவான செயலை செய்துள்ளீர்கள் அகிம்சைரீதியாக போராடி வீழ்ந்த தீலிபனின் நினைவாலயத்தினைக்கூட நால்லூரான் வீதியில் இருந்து அகற்றிவிட்டீர்கள் ஆனால் எம் இன அழிப்பினை செய்த உங்கள் கொலைவெறி இராணுவத்திற்கு எத்தனையோ நினைவுச்சின்னங்கள் நினைவாலயங்கள் எல்லாம் எங்கள் மன்னிலே கட்டியுள்ளீர்களே அதைப்பார்க்கும்போதெல்லாம் நெஞ்சம் பதைக்கின்றதே இந்த வேதனைகளை வார்தைகளால் வர்ணிக்கமுடியாது.

எங்கள் மண்ணை ஆக்கிரமித்த உங்களை எங்கள் தேசத்தினை இரத்தவெள்ளமாக்கிய உங்களை வரவேற்க செங்கம்பளம் விரிக்கப்படுகின்றதே எங்களிற்கென்று ஒரு ஆட்சி அதிகாரம் இல்லை உங்கள் அதிகாரவர்க்கம் இன்னும் என்ன எல்லாம் செய்யப்போகின்றதோ இறைவனை பிரார்திக்கின்றோம் எங்களை காப்பாற்று இல்லை ஒட்டுமொத்தமாக அழித்துவிடு என்று.

புகைவண்டியினை கண்டுபிடித்தவன்கூட இவ்வளவு ஆராவாரமும் விளம்பரங்களும் செய்திருக்கமாட்டான் ஆனால் ஏதோ நீங்கள்தான் புகைவண்டியை கண்டுபிடித்ததைபோலவும் உங்கள்வீட்டுப்பணத்திலே வாங்கித்தருவதைப்போலவும் பாரிய செலவில் விளம்பரங்களைச்செய்தீர்கள் இதற்குமுன்னர் யாழ்ப்பாணமக்கள் புகைவண்டியை கண்டதில்லையா ??? எங்கள் இப்போதைய தேவை புகைவண்டி மட்டும்தானா?? ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கள் இலங்கையிலே உள்நாட்டுக்குள் விமானத்திலும் கப்பலிலும் பொரும்தொகை பணத்தினை செலவழித்து பயணம் செய்தவர்கள் வடமாகாணத்தமிழ்மக்கள் மட்டும்தான்.

ஒரேநாடு ஒரே மக்கள் என்று வார்த்தைகளால் வர்ணம் பூசும் நீங்கள் எங்களை இலங்கை நாட்டின் குடிமக்களாக நினைத்திருந்தால் இப்படி ஒரு இன அழிப்பினை செய்திருக்கமாட்டீர்கள் அன்று முள்ளிவாக்காலிலே உங்கள் கொலைவெறி இராணுவத்தின் முற்றுகைக்குள் நின்று உணவு உடை மருந்து நீர் என்று எதுவுமே இன்றி அந்த அப்பாவித்தமிழ்மக்கள் தவித்துக்கொண்டிருந்தபோது நீங்கள் அவர்களை உங்கள் நாட்டுமக்களாக நினைத்திருந்தால் அந்தகொடிய போரினை நிறுத்தி அந்த மக்களை காப்பற்றியிருப்பீர்கள் ஆனால் சிறிதும் இடைவெளியின்றி உங்களால் அனுப்பப்பட்டகொலைவெறி இராணுவம் எறிகணைகளையும் கொத்துக்குண்டுகளையும் வீசி கொன்றபோது அந்த அவலங்களை உலகம் அறிந்துவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு மண்ணோடு மண்ணாக அவர்கள் உடலங்களை எல்லாம் புதைத்துவிட்டு சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு எதிர்த்துக்கேள்வி கேட்கமுடியாத அளவு சர்வாதிகார ஆட்சியினை நடத்திக்கொண்டிருக்கும் உங்களை எங்கள் வீடுகளிற்கு எவ்வாறு வரவேற்போம்.

எங்கள் அனுமதியின்றி எங்கள் மண்ணில் காலடிவைத்ததே தவறு ஆனால் எங்கள் மண்ணிலே நின்றுகொண்டு எங்களை பயங்கரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் நீங்கள் மேடைக்கு மேடை கூவிக்கொண்டிருப்பதை நாங்கள் இன்னும் எத்தனைகாலம் கேட்டுக்கொண்டிருக்கப்போகின்றோம், இந்த நாடு பயங்கரவாததினால் பாதிக்கப்பட்டது நீங்கள் பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டீர்கள் பாடசாலைகள் கோவில்கள் எல்லாம் பயங்கரவாதத்தினால் அழிந்துபோனது என்றும் நான் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை சீர்செய்தேன் கோவில்களை புனரமைத்தேன் வீதிகளை புனரமைத்தேன் என்றெல்லாம் கூச்சலிடுகின்றீர்கள் உன்மையில் தமிழர்களின் நியாயமான விடுதலைப்போராட்டம் எந்தவிதத்தில் உங்கள் நாட்டினை சீரழித்தது?

பயங்கரவாதத்தினால் பாடசாலைகள் அழிந்துபோனது என்று கூறுகின்றீர்களே எந்த ஒரு பாடசாலைகளையோ கோவில்களையோ விடுதலைப்புலிகள் தாக்கினார்களா? சேதப்படுத்தினார்களா? பாடசாலைகள் வழிபாட்டுத்தலங்கள்மீது ஒருதடவையேனும் விடுதலைப்புலிகளின் விமானம் குண்டுவீசியதா எறிகணைகளை வீசியதா? அதையெல்லாம் செய்தது உங்கள் கொலைவெறி இராணுவம் எனவே பயங்கரவாதத்தினால் பாடசாலைகள் கோவில்கள் அழிக்கப்பட்டது என்று நீங்கள் இனியும் கூறுவீர்களேயானால் உங்களையும் உங்கள் கொலைவெறி இராணுவத்தினையும் பயங்கரவாதிகள் என்று நீங்களே ஏற்றுக்கொண்டதாகவே அமையும்.

மனிதகுலமே வெட்கப்படும் அளவிற்கு ஒரு இனப்படுகொலையினை செய்தீர்கள் எத்தனை சந்ததிகள் வந்தாலும் மறக்கமுடியாத அளவு வேதனைகளையும் வலிகளையும் எங்களிற்கு தந்தீர்கள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் கண்ணீர்விட்டுக்கதறி அழும்படி செய்தீர்கள் எத்தனையோ பிள்ளைகளை அனாதைகள் ஆக்கினீர்கள் எத்தனையோ பெண்களை விதவைகள் ஆக்கினீர்கள் எத்தனையோ தாய் தந்தையரின் பிள்ளைகளைக்கொன்று அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பினீர்கள் இதையெல்லாம் எங்களால் எப்படி மறக்கமுடியும் சிறிய எறும்பாக இருந்தாலும் மிதிபடும்போது கடிக்கத்தானே செய்யும்.

நாங்கள் தன்மானம் மிக்க தமிழர்கள் எங்களுக்கு உங்கள்மீதும் உங்கள் கொலைவெறி இராணுவத்தின் மீதும் ஏற்படும் கோபம் நியாயமானதுதானே ஆனால் மன்னிக்கமுடியாத அளவு பாவத்தை தமிழ்மக்களுக்கு செய்துவிட்ட நீங்கள் ஒரே வார்த்தையிலே எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம் என்று கூறுவதை எப்படி எங்கள் மனம் ஏற்றுக்கொள்ளும் இல்லாத ஒன்றுக்காகவா இவளவு இழப்புக்களையும் தியாகங்களையும் தமிழினம் சொய்தது.

பயங்கரவாதத்தினால் இந்த நாடு பாரிய இழப்புக்களை சந்தித்தது என்றீர்கள் தம்ழ்மக்களின் விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டகாலம் தொட்டு இன்றுவரைக்கும் தெற்கில் வாழும் எந்த ஒரு சிங்களக்குடிமகனின் வீடுகள் மீது குண்டுகள் வீழ்ந்ததுண்டா?? ஆனால் தினம் தினம் எங்கள் வீடுகள்மீது உங்கள் கொலைவெறி இராணுவம் குண்டுகளை வீசியதே இதற்கு ஆதாரங்கள் எத்தனையோ எங்கள் மண்ணிலே இருக்கின்றன மாளிகைபோல எங்கள் வீடுகளை இடித்தழித்துவிட்டு இன்று சிறு கூடுகளைக் கட்டித்தந்துவிட்டு வீடுகட்டித்தந்தேன் என்று பெருமித்துக்கொள்கின்றீர்களே நீங்கள் வீடுகட்டித்தருகின்றேன் என்று எங்கள் மக்களை கடனாளிகள் ஆக்கிவிட்டுள்ளீர்களே?

இதனை நீங்கள் அறிவீர்களா?

நீங்கள் இந்தியவீட்டுத்திட்டம் என்று 5இலட்சம் ரூபாவினை கொடுத்து வீடுகட்டிமுடிக்கவேண்டும். என்று நிபந்தனையும்விதித்துள்ளீர்கள் ஆனால் நீங்கள்கொடுக்கும் குறித்ததொகைக்குள் வீடுகட்டி முடித்துவிட முடியாது எனவே ஒட்டுமொத்தக்குடும்பங்களும் கடனாளிகளாகிவிட்டார்கள் ஆனால் நீங்களோ வீடுகொடுத்தேன் வீடுகொடுத்தேன் என்று கூவித்திரிகின்றீர்களே நீங்கள் உங்கள் வீட்டுப்பணத்திலா எமக்கு வீடுகட்டிக்கொடுக்கின்றீர்கள்? நாங்கள் இதுவரைக்கும் வீடு அற்ற அகதிகளாக வாழ்ந்தோமா? இல்லையே எங்கள் மாடமாளிகைகள் போல வீடுகளை எல்லாம் மண்ணோடு மண்ணாக்கியது உங்களின் கொலைவெறி இராணுவமே அன்றி விடுதலைப்புலிகள் அல்ல எனவே உங்களால் அழிக்கப்பட்ட வீடுகளைக்கட்டித்தரவேண்டியது உங்களுடய கட்டாயகடமை என்பதை இனியேனும் உணர்ந்துகொள்ளுங்கள்.

பயங்கரவாதத்தினால் எத்தனையோ மக்கள் கொல்லப்பட்டார்கள் கடத்தப்பட்டார்கள் என்றீர்களே அப்படியாயின் உங்கள் கொலைவெறி இராணுவத்தின் முற்றுகைக்குள் இருந்த மக்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள் எத்தனையோ தமிழிச்சிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்களே அது எவ்வாறு செம்மணிப்புதைகுழிகள் எல்லாம் உருவாகியது எவ்வாறு எங்களுக்காக போராடியவீரர்களை நீங்கள் பயங்கராவாதிகள் என்று கூறிக்கொண்டு எங்களைப்படுகொலை செய்த உங்கள் கொலைவெறி இராணுவத்தை பாதுகாப்புப்படையினர் என்று கூறிக்கொள்வது இன்னும் எத்தனைகாலம் சாத்தியமாகும் நீதியும் நியாயமும் நீண்டநாட்களுக்கு தூங்காது.

பிரிவினைவாதம் கேட்கின்றோம் என்றும் எமை பிரிவினைவாதிகள் என்றும் கூறிக்கொள்கின்றீர்களே நாங்கள் எப்போது உங்களோடு இணைந்திருந்தோம் அப்படி ஒரு நிகழ்வு வரலாற்றில் உண்டா??

எங்களைப்பிரிவினைவாதம் கேட்கின்றோம் என்று கூறும் நீங்கள் எதற்காக வடக்கையும் கிழக்கையும் பிரித்தீர்கள் அப்படியாயும் நீங்களும் பிரிவினைவாதி என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒரே நாடு ஒரே மக்கள் என்று பகடவித்தைகாட்டும் ஜனாதிபதி அவர்களே ஒரே நாட்டுக்குள் சிங்கள இனமாகிய நீங்கள் சிரித்துக்கொண்டிருக்கும்போது தமிழர்களாகிய நாங்கள் அழுதுகொண்டிருப்பது எதற்காக ஒரே நாடு ஒரே மக்கள் என்றால் எங்கள் தாய் தந்தைகள் சொந்தங்கள் இறந்துபோனது உங்களிற்கு எப்படி சந்தோசத்தைக்கொடுக்கும் நாங்கள் துக்கதினம் கொண்டாடும்போது நீங்கள் எப்படி வெற்றிவிழா கொண்டாடுவீர்கள்?? எல்லோருமே ஒரேநாட்டுமக்கள் என்றால் அது எப்படி சாத்தியப்படும்?

சிங்களமக்களின் மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே!!

பல்லாயிரம் தமிழ்மக்கள் தெரிந்தோ தெரியாமலோ உங்கள் கொலைவெறி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்களே இதுவரைக்கும் அதற்காக நீங்கள் தமிழ்மக்களாகிய எம்மிடம் மன்னிப்பு கேட்டதுண்டா?? எந்த மண்ணுக்காக போராடி வீழ்ந்தார்களோ அந்த மண்ணிலே வந்துநின்றுகொண்டு உங்கள் இன அழிப்பினை அபிவிருத்தி என்ற மாயையினால் மறைத்துவிடலாம் என்று கனவுகாணவேண்டாம். முதலில் அபிவிருத்தி என்றால் என்ன என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் அபிவிருத்தி என்பது சாதாரண ஏழை எழியமக்களைச்சென்றடையவேண்டுமே தவிர வசதிவாய்ப்புடைய மக்களையல்ல அடுக்குமாடிக்கட்டடங்களும் பளிங்குபோல வீதிகளும் விடுதலையினை பெற்றுத்தரப்போவதில்லை விடுதலை உனர்வினை இல்லாமல்ச்செய்துவிடப்போவதும் இல்லை.

வந்தீர்கள் வடக்கிற்கு அரச ஊழியர்களுக்கு உந்துருளிகளை குறைந்த விலையிலே கொடுத்தீர்கள் அதனால் ஏழை எழிய மக்களுற்கு என்ன லாபம் உன்மையிலே உங்களிற்கு இந்த மக்கள்மீது கரிசனை இருந்திருந்தால் வேலையில்லாமல் அலையும் இளைஞர்களுக்கு வேலைவாய்பு கொடுத்திருக்கலாம். அல்லது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த உந்துருளிகளை கொடுத்திருக்கலாம் காரணம் அவர்கள் எத்தனையோ வாகனங்களை உங்கள் கொலைவெறி இராணுவத்திடம் அனாதரவாக விட்டுச்சென்ரார்கள் அவர்களுக்கு இதுவரைக்கும் போதுமான நட்ட ஈடு உங்களால் கொடுக்கப்பட்டதில்லையே எந்த அரச ஊழியர்களிடம் உந்துருளி இல்லை ஆனால் அவர்களை உங்களிற்கு ஓட்டுப்போடும் இயந்திரங்களாக மாற்றவே இந்த சலுகைகள் என்பதை நாங்கள் அறிவோம்.

ஏழை எழிய மக்கள் உங்கள் வங்கிகளின் கடன் பெறுவதற்குக்கூட தகுதியற்றவர்களாக உங்கள் வங்கிகள் சட்டங்களை விதித்துள்ளது வாழ வழியின்றி தவிக்கும் மக்களிற்கு உங்கள் அபிவிருத்தியின் காற்றுக்கூட வீசவில்லை தாழ்த்தப்பட்டவன் தாழ்ந்துகொண்டே போகின்றான் ஒவ்வொரு குடிமகனும் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் போது இந்த நாடு எப்படி பொருளாதாரத்தால் உயர்ந்து முன்னேறிச்செல்லும் உங்கள் நாட்டிலே வாழும் மூத்தபிரஜைகளான வயோதிபர்களுக்கு உங்களால் கொடுக்கப்படும் மாதாந்த தொகை வெறும் 200ரூபா இதைவிட உங்கள் அபிவிருத்தி என்ற பூச்சாண்டியினை தெழிவுபடுத்த வேறு உதாரணம் தேவையில்லை .

எங்கு சென்றாலும் என்மக்கள் என் நாடு என்று உதட்டளவில் சொல்லிக்கொள்ளும் நீங்கள் உன்மையிலே எங்களை உங்கள் நாட்டின் மக்களாக ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த கொடியபோரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அவர்கள் மண்ணிலே நின்று ஒருநிமிடமேனும் அஞ்சலி செலுத்தியிருப்பீர்கள் குறைந்தபட்சம் எங்களை என்றாலும் அஞ்சலி செலுத்த அனுமதித்திருப்பீர்கள். ஆனால் செத்துப்போன எங்கள் சொந்தங்களுக்காக எங்களை அழுவதற்க்குக்கூட நீங்களோ உங்கள் கொலைவெறி இராணுவமோ அனுமதிப்பதில்லை ஏன் எங்களிற்கு இந்த நிலை எங்களைக்கொலை செய்து புதைத்த உங்களை எங்கள் தாய்தந்தையினை கொன்ற உங்களை எங்கள் கனவுகளை அழித்த உங்களை எப்படி எங்கள் மண்ணிலே காலடிவைக்க நாங்கள் அனுமதிப்போம் எப்படி உங்களை வாழ்க என்று வாழ்த்தி வரவேற்போம்?

ஆட்டிவைக்கும் அதிகாரவர்க்கமும் ஆயுததாரிகளும் எங்களை இன்னமும் எத்தனைகாலம்தான் ஆட்டிவைக்கப்போகின்றன? நீதியும் நியாயமும் இன்னும் எவளவுகாலம் விழித்துக்கொள்ளாது தாமதிக்கப்போகின்றது ஒன்றைமட்டும் நினைவிற்கொள்ளுங்கள் சிலரை சிலநேரம் ஏமாற்றலாம் பலரை பலநேரம் ஏமாற்றலாம் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றமுடியாது சந்திரசூரியம் மாறி உதித்தாலும் சத்தியம் ஒருபோதும் சாகாது.

உலகத்தை மட்டுமல்லாது உங்களையும் நீங்கள் நன்றாக ஏமாற்றிக்கொன்ண்டுள்ளீர்கள் என்பதனை புரிந்துகொள்ளும் காலம் நிச்சயமாக வரும் அப்போது உங்கள் கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டிருக்கும் நீங்கள் கொடுத்த காசிற்காக சமாதானத்தின் புறா என்று உங்களை புகழ்ந்து பாடிய ஒட்டுண்ணிகள் உங்கள் ஒருபக்கமும் நீங்கள் போட்ட எலும்புத்துண்டுகளிற்காக தமிழ்க்குடி கெடுத்த துரோகிகள் மறுபக்கமும் இரும்புக்கம்பிகளுக்குள் அடைக்கப்படும் காலம் வெகுவிரைவில் வரும். காலம் மாறிக்கொண்டிருக்கின்றது. எங்கள் கனவுகள் கலைந்துவிடாது. உங்கள் எண்ணம் எப்போதும் நிறைவேறாது. நிறைவேற்றுஅதிகாரம் கொண்ட ஜனாதிபதியே உங்கள் அதிகாரங்கள் இனி எத்தனைகாலம். இன்னொரு அதிகாரத்தினால் நீங்கள் அடைக்கப்படும் காலம் நிச்சயம் உதயமாகும்.

- ஆதித்தன்

10407525_378233892339627_673102291004156

https://www.facebook.com/tamilnationalpeoplesfront/posts/378233982339618:0

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் யாழ்தேவிக்கு கிடைத்த வரவேற்பின் லட்சணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த திரியில் யாழ்தேவிக்கு வரவேற்பு செய்த ஆட்கள் இத்திரியிலும் கருத்தை வைக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

குதிரை கஜன் கட்சியின் பேஸ்புக்கில் வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்?

முதல்வர் உட்பட லட்சோப லட்சம் யாழ் மக்கள் இவ்விழாவிற்கு போகவில்லை. பலர் வெளிப்படையாக புறக்கணித்தனர். பல உயர் அதிகாரிகள் உட்பட பலர் போகவில்லை, எல்லாரும் செத்தா போய்விட்டனர்.

போனவர்கள் பலர் விடுப்புபாக்க போனவர்கள் (ரெயிலையும் மகிந்தவையும்) சிலர் வீடு வேணும், வேலை வேணும் இன்ன சுயநலத்துக்காக டக்ளசுக்கு காக்கா பிடிக்கப் போயிருப்பினம். மிகச்சிலரே அரசு மேல் உள்ள அபிமானத்தில் போயிருப்பினம்.

இப்படி ஏதோ ஒரு சுயநலத்துக்காக போய்விட்டு பயத்தில் போனோம் என்று நல்ல சடையல்.

முதலில் இந்த பதிவு உண்மையா அல்லது குதிரை கஜன் தன் கற்பனை கழுதையை தட்டி விட்டு எழுதிதா என்றே தெரியாது இதுக்கு நாம் என்ன கருத்தை சொல்லி என்னத்த.

இது "ஊர்ப்புதினம்" ஆ? இது புதினமில்லை ஆதாரமற்ற புலம்பல். சகட்டு மேனிக்கு கத்தியை தீட்டும் நிர்வாகம் தம் விதிகளை தானே கடைப்பிடித்தால் நல்லது.

இதுதான் உங்களின் பிரச்சினை.அங்கே எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு, ஆனால் சும்மா பூதாகாரமாக 24/7 எல்லா மக்களும் துப்பாக்கி பிடியில்வாழ்வதை போல நீங்கள் ஓவர் படம் காட்டுகிறீர்கள். இதை கேட்டு விட்டு அங்கே போகும் யாருக்கும் நீங்கள் சொன்னது அம்புலிமாமா கதை என்பது யாழில் இறங்கி 10 நிடத்தில் தெரிந்து விடும்.

இதனால் மக்களின் உண்மையான பிரச்சினைகளை கூட அவர்கள் பொய்பிரச்சாரம் என்று புறம் தள்ளி விடுகிறனர்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதார பூர்வ முகப்புத்தக தளம். அவர்களின் கருத்து தான். உங்களுக்கு சார்ப்பில்லாத கருத்தெல்லாம் சடையலோ?? கருத்து எழுத தெரியாமல் தூசணம் எழுதுபவர்களை என்ன செய்யலாம்?

எவர் எதை சொன்னாலும் அதை நம்ம தலையாட்ட என்று  கோஷ்டிகள் இருக்கு .அதில்தான் அரசியல்வாதிகளின் பிழைப்பே இருக்கு ?

ஜெர்மனியில் வந்து லைக்கா அனுசரணையில் வைத்த மகாநாட்டில் கலந்துவிட்டு தமிழ் நாடு போய் லைக்காவிற்கு எதிராக அறிக்கை விடுகின்றார் திருமா ,அவருக்கு பின்னாலும் நாலு சனம் திரியுது . :(


மிரட்டுவதால்  தான் ரெயினிலும் ஏறுகின்றோம் என்று அடுத்த கட்டுரை வரும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே சொன்ன கருத்தில் தூசணம் எங்கே இருக்கு? ஒன்று உங்களுக்கு தூசணம் என்றால் என்னவென்று தெரியவில்லை அல்லது தமிழ் அறிவு கம்மி.

இது செய்திக்கான பகுதி -லெட்டர்பார்ட் கட்சியின் முகப்புத்தக ஸ்டேட்ஸ் அப்டேட் எல்லாம் செய்தியில்லை

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மிரட்டுவதால்  தான் ரெயினிலும் ஏறுகின்றோம் என்று அடுத்த கட்டுரை வரும் .  :icon_mrgreen:

 

 

 

புலிகள் இல்லை. ஆகவே ஆயுதத்துடன் யாரும் இல்லை. மக்கள் நிராயுதபாணிகளாக உள்ளனர். ஏன் லட்சக்கணக்கில் ஆயுதத்துடன் இருக்க வேண்டும்? ஒரு வேளை ஆயுதத்துடன் தான் இராணுவம் உபன்யாசம் செய்கிறார்களோ? உங்களின் தர்க்கம் எப்பவுமே உதைக்கிறதே !!! யேனுங்க? :icon_mrgreen:  :icon_mrgreen:

நான் மேலே சொன்ன கருத்தில் தூசணம் எங்கே இருக்கு? ஒன்று உங்களுக்கு தூசணம் என்றால் என்னவென்று தெரியவில்லை அல்லது தமிழ் அறிவு கம்மி.

இது செய்திக்கான பதிவு -லெட்டர்பார்ட் கட்டியின் முகப்புத்தக ஸ்டேட்ஸ் அப்டேட் எல்லாம் செய்தியில்லை

 

 

சகட்டு மேனிக்கு கத்தியை தீட்டும் நிர்வாகம் தம் விதிகளை தானே கடைப்பிடித்தால் நல்லது. 

 

 

 

 

கோடிட்ட வரி தமிழ் தானே? அதற்கு என்ன அர்த்தம். கொஞ்சம் விளக்க முடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

சகட்டு மேனிக்கு என்றால் எழுந்தமானமாக, கண்டபடி, முன்பின் யோசிக்காமல் என்று தமிழில் பொருள் கொள்வர்.

கத்தியை தீட்டுவது என்றால் நிர்வாகத்தின் மறுத்தூட்டல், வெட்டல் கொத்தல்.

சரிதான் "மேனி" என்றவுடன் உடல் பற்றி தூசணம் சொல்கிறேன் என்று நினைத்து விட்டீர்களாக்கும்.

கடவுளே மெல்லத் தமிழ் இனி.......

சகட்டுமேனி, கண்டமேனி எனும் பதங்களுக்கு விளக்கம் இங்கே

https://groups.google.com/forum/m/#!topic/mintamil/Ak-4JPZ1Nts

Edited by goshan_che

ஏதோ ஒவ்வொரு நாளும் குத்தி முறிந்து பிடுங்குப்பட்டு பொழுது போக்க ஏதோ ஒரு செய்தி கிடைத்து விடும் நம்ம தோஸ்துகளுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் இல்லாட்டி நீங்களும் இப்படி ஒற்றுமையை போதித்து நடுவுநிலைமை கருத்தெழுதி பொழுதை போக்க முடியாது துல்ஸ்.

:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகட்டு மேனிக்கு என்றால் எழுந்தமானமாக, கண்டபடி, முன்பின் யோசிக்காமல் என்று தமிழில் பொருள் கொள்வர்.

கத்தியை தீட்டுவது என்றால் நிர்வாகத்தின் மறுத்தூட்டல், வெட்டல் கொத்தல்.

சரிதான் "மேனி" என்றவுடன் உடல் பற்றி தூசணம் சொல்கிறேன் என்று நினைத்து விட்டீர்களாக்கும்.

கடவுளே மெல்லத் தமிழ் இனி.......

சகட்டுமேனி, கண்டமேனி எனும் பதங்களுக்கு விளக்கம் இங்கே

https://groups.google.com/forum/m/#!topic/mintamil/Ak-4JPZ1Nts

 

 

கண்டபடி மற்றவர்களின் கருத்தை வெட்டும் நிர்வாகம் எனும் பொருள்படும் படி சகட்டுமேனிக்கு என எழுதுனீர்கள். எனது கேள்வி தூசணத்தில் கருத்து எழுதுபவர்களின் கருத்துக்களை என்ன செய்யலாம் என்பதே?  அதற்கு சகட்டுமேனிக்கு விளக்கம் வேறு. எங்கை இருந்தையா வந்து இருக்கிறீங்கள். ஸப்பா>>>>. :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ சிலர் போனதால்தான் பெருன்பான்மை மக்கள் போகமால் இருக்க முடிந்தது.  போக விருப்பம் இலாது விடாலும் யாருமே போகமல் இருக்க கூடிய நிலை அங்கே இல்லை.
ஏன் அந்த நிலை இல்லை??
அப்படியொரு நிலையை எது உருவாக்குகிறது? என்பதை பற்றி சிந்திப்பது என்றால்......... மூளை இருந்தால் போதாது சிந்திக்கும் அல்லது செயற்படும் திறனும் இருக்கவேண்டும்.

1988 வடமாகான தேர்தல் நடந்த போது யாழ் நகர் பகுதி திருமலை நகரபகுதி மக்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு செல்லவில்லை. அனால் புற நகர் பகுதி மக்களால் அதை புறக்கணிக்க முடியாது இருந்தது வீட்டு வாசலிலேயே இந்திய இராணுவம் வந்து நின்ற நிலையில்தான் எல்லோரும் போய் வாக்கு பதிந்தோம். யாழ் மாவட்டத்தில் மக்கள் தமது எதிர்ப்பை காட்டி ஈரோஸை ஆதரித்து வாக்கு போட்டார்கள். கிழக்கில் வன்னியில் ஆயுதமுனையில் ஈப்பி எல்லா வாக்கு நிலையத்திலும் நின்றது தமக்கு ஏன் தேவை இல்லாத வேலை என்றுதான் மக்கள் வாக்கு போட்டார்கள். அதுவும் சரியாக எண்ணபடவில்லை. ஏற்கனவே தீட்டிய திட்டத்தின் படி முதல்வர் தெரிவானார்.

சாதாரண நிலைக்கும் ........ அசாதாரண நிலைக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் சாதாரண மனிதர்களுக்கு புரிய வாய்பிருக்கிறது. ஓரளவு மனநிலை பதிப்பில் இருந்தாலும் அது புரியாமல் போக நிறைய வாய்ப்பிருப்பதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்க நுணா காமெடி பண்ணிக்கிட்டு. பதிவுகளை வாசிப்பவர்களுக்கு புரியும், நீங்கள் முதலில் சொன்னதுக்கும் இப்போ சொல்வதற்க்கும் வித்யாசம். ஆனாலும் நீங்கள் மழுப்பலில் மன்னன் தான் - ஒத்துக்கிறேன். தூசணத்தில் எழுதியதை வெட்ட வேண்டாம் என்று நான் எங்கே சொன்னேன்?

அப்படி இருக்கையில் "தூசணத்தில் எழுதுபவரை என்ன செய்யலாம்?" என்று தலைப்புக்கும் எனக்கும் சம்பந்தமில்லாத ஒரு விவஸ்தை கெட்ட கேள்வியை என்னிடம் கேப்பானேன்?

தளத்தில் ஒரு பொறுப்பான நிலையில் (staff) இருக்கும் நீங்களே ஒரு facebook status update ஐ செய்திகள் பிரிவில் சேர்த்தது அப்பட்டமான விதிமீறல். இதை சுட்டிக்காட்டினா, இந்த தப்பை மறைக்க தேவையில்லாமல் தூசணம் அது இது என்று புகார் சொன்னவர் மீதே பழி போடுகிறீர்கள்.

இத்தோடு இந்த பதிவை நிறுத்துகிறேன். பதிவுகளை வாசிப்பவர்களுக்கு தெரியும் நியாயம் யார் பக்கம் என்பது.

உங்களின் புரிதல் குறைபாட்டிற்க்கான காரணத்தை உங்கள் கடைசி வசனம் மூலம் தெளிவாக விளக்கியதற்க்கு நன்றி ம. கேணி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தளத்தில் ஒரு பொறுப்பான நிலையில் (staff) இருக்கும் நீங்களே ஒரு facebook status update ஐ செய்திகள் பிரிவில் சேர்த்தது அப்பட்டமான விதிமீறல். இதை சுட்டிக்காட்டினா, இந்த தப்பை மறைக்க தேவையில்லாமல் தூசணம் அது இது என்று புகார் சொன்னவர் மீதே பழி போடுகிறீர்கள்.

 

 

 

விதியை காட்டவும் அப்பட்டமாக மீறி உள்ளேனா என பார்க்கலாம். அர்ஜுனும் பச்சை போட்டிருக்கிறார். அவருக்கு எழுத பயம். பின்னை இப்படி பச்சையை குத்துகிறார். இவர் தான் முன்பு  தான் பச்சையே குத்துவதில்லை என்றவர். அவர் ஒரு கொள்கைவாதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்த செய்தியை பாருங்கள். இதுவும் முகப்புத்தகத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது.இதுவும் களவிதி மீறலா??
 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்பதால் மட்டும் சொல்கிறேன். அந்த இணைப்பை கொடுத்தவரும் நீங்களே. ஆக மொத்தம் ரெண்டுதடவை நீங்கள் விதியை மீறியுள்ளீர்கள். இதில் ஒரு விதிமீறலை மற்றயதுக்கு உதாரணம் காட்டுகிறீர்கள் :)

செய்தி என்றால் மூலத்துடன் ஒரு செய்தி இணையத்தில் இருந்து வரவேண்டும். நாளைக்கே நான் வருத்தபட்டவயோதிபர் சங்க பேஸ்புக் ஸ்டேடஸ்சை போட்டால் அது செய்தியாகுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?fbid=702005769883567&set=a.345461838871297.84163.100002224509359&type=1&fref=nf

 

 

இதை நீங்கள் காணாததால் உங்களை குருடாக என்ணுகிறேன். :icon_mrgreen:


https://www.facebook.com/tamilnationalpeoplesfront/posts/378233982339618:0

 

 

மேற்கூறிய முகப்புத்தகம் நம்பிக்கை வாய்ந்த தமிழ் தேசிய மக்களின் செய்தியை தாங்கி வருவது.

  • கருத்துக்கள உறவுகள்

உதை[கட்டுரையை] எழுதியவர் எந்த புலம் பெயர் நாட்டில் இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

பொய்கள் முதலில் வந்து எட்டி எட்டிப் பார்க்கும் தன் தலையை முன்னே நிறுத்தும்.ஆனால் உண்மைகள் அப்படியல்ல பிந்தி வந்தாலும் நிலைத்து நிற்கும்.
காசு கொடுத்து வாக்குகள் வாங்குவதும் மக்கள் கூட்டத்தைச் சேர்ப்பதும் ஒட்டுக்குழுக்களுக்குக் கைவந்த கலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.