Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து வருடங்களுக்கு முன் பார்த்த யாழ்ப்பாணம் இன்று இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

AA-20141022-09.gif

இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு இரண்டு விடயங்கள் தெளிவாக தெரிகிறது.
அதற்காக மற்ற விடயங்கள் தெளிவில்லாதவை என்று சொல்ல வரவில்லை.
 
எனக்கு இரண்டு விடயங்கள் தெளிவாக விளங்குகிறது.
  • Replies 90
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு இரண்டு விடயங்கள் தெளிவாக தெரிகிறது.
அதற்காக மற்ற விடயங்கள் தெளிவில்லாதவை என்று சொல்ல வரவில்லை.
 
எனக்கு இரண்டு விடயங்கள் தெளிவாக விளங்குகிறது.

அதில் ஏதாவது பொசிட்டிவ்வாக இருக்கா? அல்லது எல்லாமே நெகட்டிவ்தானா?

  • கருத்துக்கள உறவுகள்

அதில் ஏதாவது பொசிட்டிவ்வாக இருக்கா? அல்லது எல்லாமே நெகட்டிவ்தானா?

எல்லாம் போசிடிவாதான் இருக்கு......
ஆனா மேலே இருக்கிற செய்திதான் குழப்புது. 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் போசிடிவாதான் இருக்கு......
ஆனா மேலே இருக்கிற செய்திதான் குழப்புது. 

மேலே இருக்கிற செய்தி, நெடுக்காலபோவான் எழுதியது பற்றி என்றால், அவருக்கு இது என்ன விவகாரம் என்றே தெரியாது. குத்துமதிப்பாக எழுதினார். அதுதான் சுருக்கமாக முடித்துவிட்டேன்.

இது விமானப் பணிப்பெண்களுக்கான பயிற்சி அல்ல, Airport Ops பயிற்சி. IATA (International Air Transport Association) தேர்வுக்கான பயிற்சி.  பயிற்சி மையம் (Agency Training Unit of IATA) ஜெனீவா எயார்போர்ட்டில் உள்ளது. சுவிஸ் சோதனை. சான்றிதழ் கொடுப்பதும் IATAதான். உலகிலுள்ள அனைத்து IATA உறுப்பினர் விமான நிறுவனங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயிற்சி.

யாழ். மானிப்பாயில், Angel International Schoolல்  நடக்கிறது. 1 அமெரிக்க, 1 அவுஸ்திரேலிய 1 கனேடிய 1 பிலிப்பீன்ஸ்ஆசிரியர்கள். 

Edited by sabesan36

வெரி இண்டரெஸ்டிங் . ஏன் அப்போ பணிப்பெண் (ஆண்) சீருடைகள் அணிந்து இருக்கிறார்கள்.
ஓப்ஸ் (ops) வேலைக்கு யார் சீருடை  போடுகிறார்??
 
உங்களுக்கு தெரிந்தால் எவளவு காலம் இந்த படிப்பு என்று அறிய தருவீர்களா??
நான் நினைக்கிறேன் இவர்கள் ஓப்ஸ் (ops) இல்லை ...(customer service agents). கஸ்டமர் சர்வீஸ் அஜெண்ட் கள் என்று.
 
ஏர்போர்ட் ஓப்ஸ் (airport ops) என்பது ....  விமானம் தரையிறங்கி ஓடுபாதை விட்டு விலகியபின்பு  Taxiway  வரும்போது இவர்கள்தான் பொறுப்பெடுப்பார்கள். போகவிருக்கும் கேட்டில் (Gate) என்ன நடக்கிறது போன்ற விடயங்கள் இவர்களுக்கு கீழேதான் அல்லது  இவர்கள் கட்டுபாடில்தான் இருக்கும். விமானிகளுடன் இவர்கள்தான் பின்பு தொடர்பில் இருப்பார்கள் ஏறுவதற்கு முன்பும் அப்படித்தான். மையின் டவர் (ATC or Air traffic control)   Taxiway  புகுந்தவுடன் தொடர்பை துண்டித்து விடுவார்கள். சிலவேளைகளில் மீண்டும் சில ஓடுபாதைகளை (Runway) கடக்க நேரிடும் அப்போது மட்டுமே மீண்டும் தொடர்பு கொள்வார்கள்.
 
இவர்கள் முன்னுக்கு வேலை செய்பவர்கள் என்று நினைக்கிறேன் ..... செக்கின்  டிகேடிங். (check in , Ticketing) 
ஓவரு விமான சேவை கம்ப்ட்டர் ப்ரோக்ராமும் வேறு வேறானவை. இவர்கள் எப்படி பொதுவாக படிக்க முடியும்  என்பது புரியவில்லை. அல்லது ஸ்ரீலங்கன் விமான சேவை புரோகிராமை படிக்கிறார்களா?? 
ஓப்ஸ் எனபது  airport operationனின் சுருக்கம்  தானே அதுதான் அப்படி சொல்கிறார்கள் என்று நினைக்கிறன். 
  • கருத்துக்கள உறவுகள்

AA-20141022-09.gif

சபேசன் 36, இணைத்த படத்தில்....
இரண்டு, மூன்று பேரைத் தவிர... மிச்ச ஆக்களில், பணிப் பெண்களுக்கான (Air Hostess), முக வெட்டு இல்லை.
இந்த மூஞ்சையுடன், விமானப் பணிப்பெண்கள் ஜுஸ் கொடுத்தால், எவன் விமானத்தில் ஏறுவான்.
 
மருதங்கேணி குறிப்பிட்ட மாதிரி... airport ops ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

யாழ்கள பெண்ணிய வாதிகள், வந்து....

அக்கா இல்லையா, தங்கச்சி இல்லையா, மச்சாள் இல்லையா...

என்று  தாக்குதலை  ஆரம்பிக்க முதல், நான்... தலை மறைவாவது நல்லது. :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெரி இண்டரெஸ்டிங் . ஏன் அப்போ பணிப்பெண் (ஆண்) சீருடைகள் அணிந்து இருக்கிறார்கள்.
ஓப்ஸ் (ops) வேலைக்கு யார் சீருடை  போடுகிறார்??
 
உங்களுக்கு தெரிந்தால் எவளவு காலம் இந்த படிப்பு என்று அறிய தருவீர்களா??
நான் நினைக்கிறேன் இவர்கள் ஓப்ஸ் (ops) இல்லை ...(customer service agents). கஸ்டமர் சர்வீஸ் அஜெண்ட் கள் என்று.
 
ஏர்போர்ட் ஓப்ஸ் (airport ops) என்பது ....  விமானம் தரையிறங்கி ஓடுபாதை விட்டு விலகியபின்பு  Taxiway  வரும்போது இவர்கள்தான் பொறுப்பெடுப்பார்கள். போகவிருக்கும் கேட்டில் (Gate) என்ன நடக்கிறது போன்ற விடயங்கள் இவர்களுக்கு கீழேதான் அல்லது  இவர்கள் கட்டுபாடில்தான் இருக்கும். விமானிகளுடன் இவர்கள்தான் பின்பு தொடர்பில் இருப்பார்கள் ஏறுவதற்கு முன்பும் அப்படித்தான். மையின் டவர் (ATC or Air traffic control)   Taxiway  புகுந்தவுடன் தொடர்பை துண்டித்து விடுவார்கள். சிலவேளைகளில் மீண்டும் சில ஓடுபாதைகளை (Runway) கடக்க நேரிடும் அப்போது மட்டுமே மீண்டும் தொடர்பு கொள்வார்கள்.
 
இவர்கள் முன்னுக்கு வேலை செய்பவர்கள் என்று நினைக்கிறேன் ..... செக்கின்  டிகேடிங். (check in , Ticketing) 
ஓவரு விமான சேவை கம்ப்ட்டர் ப்ரோக்ராமும் வேறு வேறானவை. இவர்கள் எப்படி பொதுவாக படிக்க முடியும்  என்பது புரியவில்லை. அல்லது ஸ்ரீலங்கன் விமான சேவை புரோகிராமை படிக்கிறார்களா?? 
ஓப்ஸ் எனபது  airport operationனின் சுருக்கம்  தானே அதுதான் அப்படி சொல்கிறார்கள் என்று நினைக்கிறன். 

அப்பாடா மருதங்கேணி... Finally a positive person..

நீங்கள் குறிப்பிடுவது, விமான நிலைய ஓப்ஸ் (Airport Authority Operation) வேலை. இது விமான நிறுவனங்கள் தமக்கு சொந்தமாக வைத்திருக்கும் OPS. இதற்கு யூனிபோர்ம் உண்டு. 

இந்த பயிற்சி பற்றிய முழு விபரங்களை கீழேயுள்ள லிங்கில் பார்க்கவும்-

http://www.iata.org/training/courses/Documents/apt-ops-2nd-toc.pdf

ஸ்ரீலங்கன் விமானசேவை புரோகிராம் அல்ல, சுவிஸ் பரீட்சை. அதற்கான பயிற்சி முறை Air Canada Training Centre-ல் எடுக்கப்பட்டது. ஒரு ஆசிரியர் எயார் கனடாவில் பணிபுரிபவர் என்பதால் அந்த ஏற்பாடு.  

இதே பயிற்சியை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கட்டுநாயகா விமான நிலையத்தில் வைத்து கொடுக்கிறது. 2-வதாக மானிப்பாயில் உள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயிற்சிக் கட்டணம் 3.5 லட்சம் ரூபா. மானிப்பாயில் வெளிநாட்டு ஆசிரியர்கள் அனைவரும் volunteer teachers ஆக 1 ஆண்டு இலங்கையில் தங்கி கல்வி கற்பிப்பதால், மாதம் ரூ.5000. 

மானிப்பாய் கல்வி மையத்தின் இணையத்தளத்தை கீழேயுள்ள இணையத்தளத்தில் பார்க்கவும்-

http://aviation.aismanipay.info/

யாழ்ப்பாணத்தில் யாரோ, எதையோ செய்கிறார்கள் என்று தெரிந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
தகவல்களுக்கு நன்றி !
நானும் முந்தி கொஞ்ச நாள் ஏர்போர்ட் ஆதொரிட்டி ஓப்ஸ் (airport ops)  ஆக வேலை செய்தேன் பெரிதாக பிடிக்கவில்லை விட்டு விட்டேன்.
இப்போதும் airlines இல் தான்   வேலை செய்கிறேன்.
 
சொந்த காரன்கள் யாரையாவது படிப்பித்தால் ... இப்படியே இங்கே இழுத்துவிடலாம் என்று நினைத்தேன்.
மீண்டும் தகவல்களுக்கு நன்றி !
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மானிப்பாயில், Angel International Schoolல்  நடக்கிறது. 1 அமெரிக்க, 1 அவுஸ்திரேலிய 1 கனேடிய 1 பிலிப்பீன்ஸ்ஆசிரியர்கள். 

ஓ ......நான் அங்கதான் படிச்சனான்..... :D

  • கருத்துக்கள உறவுகள்

AA-20141022-09.gif

மருதங்கேணி குறிப்பிட்ட மாதிரி... airport ops ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

இந்த வேலைக்கு இத்தனை எடுப்பா.  2006 - 2007 காலப்பகுதியில் லண்டன் கீத்துரோவில் இதனை ஒத்த வேலை செய்திருக்கிறோம். அதுக்காக ஒரு மண்ணாங்கட்டி பயிற்சி வகுப்புக்கும் சென்றதில்லை. 3 மணி நேர.. induction அவ்வளவும் தான். கொஞ்சம் சிமாட்டா ரெஸ் பண்ணிட்டு வரைச் சொல்லி இருந்தார்கள். பெரிசாக வேலை பிடிக்கல்ல. அது பெட்டையளுக்குத் தான் சரி. அறிவு அனுபவ வளர்ச்சிக்கு இடமில்ல. ஒரே வகையான செயலை திரும்ப திரும்ப தினமும் செய்து கொண்டிருக்க வேண்டும். ஒரு முன்னேற்றமும் கிடையாது. :):lol:

மத்திய கிழக்கு விமான (எமிரேட்) நிறுவனப் பணியாளர்கள் (பெண்கள்) அவர்களுக்குரிய உடை அணிந்தே பணி செய்தார்கள். அதேவேளை வேர்ஜின் அட்லான்ரிக்.. பணியாளர்கள் குட்டைப்பாவாடை (குட்டப்பாவாடையில் இரண்டு வகை உண்டு.. 1. முழங்காலுக்கு மேல்.. மற்றது முழங்காலுக்கு கீழ் வரை கொஞ்சம் நீண்டது... வேர்ஜின் வகை 1 அணியும்) அணிந்திருந்தார்கள். வேலைக்கு வரும் போது சாதாரண உடையில் வந்து.. கீத்துரோவில் அவர்களுக்குரிய ரெஸ்ஸிங் ரூமில் உடைமாற்றுவார்கள். அது எங்களது ஓய்வு அறைக்கு அருகில் இருந்தது. எங்கள் ஓய்வு அறையோடு கன்ரீனும் இருந்தது. அதனால் அங்கு வரும் அழகான பெண்களோடு கதைக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர்களின் ரெஸ்கோட் பற்றி எல்லாம் கதைக்கும் போது.. தொழில்நிறுவனங்கள் சொல்கின்றன.. செய்ய வேண்டி உள்ளது. மற்றும்படி.. இப்படியான உடைகள் அணிய வேண்டும் என்பது எங்கள் விருப்பல்ல என்று பலரும் சொன்னார். சில பெண்கள்.. இப்படி உடையணிவதால்.. நிறைய வாடிக்கையாளர்கள் ஜொள்ளுவிட்டுக் கொண்டு தங்களிடம் வர வாய்ப்புள்ளதாக குறிப்பாக ஆண் வாடிக்கையாளர்கள்.. நக்கல் வேற அடித்தார்கள்.

கீத்ரோவில்.. அன்றைய காலங்களில் யாராவது பணி புரிந்திருந்தால்.. இது தெரிந்திருக்கும்..! :icon_idea::)

மேலும் இப்படியான பயிற்சி வகுப்புக்களை எடுக்கிறம் என்று எம்மவரிடம் நிறைய காசு அறவிடப்படுகிறதோ என்ற விபரமும் அறியப்படுதல் வேண்டும். முன்னர் எல்லாம்.. ஹோட்டல் மனேச்மெண்ட்.. மற்றும் விமானப் பணி பயிற்சிகள் என்று வந்து உள்ளூர் மக்களின் அறியாமையை பயன்படுத்தி பகற்கொள்ளை அடித்தல்களும் நிகழ்ந்துள்ளன. வெள்ளைக்காரன் வந்து படிப்பிச்சால் அது.. பெரிய படிப்பு என்று நினைக்கும்.. அற்பத்தனமான சிந்தனையையில் இருந்தும் எம் மக்கள் விடுபட வேண்டும். வெள்ளையோ கறுப்போ.. பிரவுனோ.. சரியானவர்கள்.. சரியான தகமையோடு.. சரியான இடத்தில் வந்து கல்வி.. அல்லது தொழில்பயிற்சி அளிக்கிறார்களா.. பயிற்சியின் முடிவில்.. வழங்கப்படும் சான்றிதழுக்கு மதிப்பு அங்கீகாரம் உள்ளதா.. பயிற்சியை தொடர்ந்து வேலைக்கான பயிற்சிக்களம் அமைக்கப்பட்டுக் கொடுக்குமா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர.. வெள்ளையும் நம்மவர்களுடன் சேர்ந்து மக்களின் அறியாமையை பயன்படுத்தி.. ஊரைக் கொள்ளை அடிக்கிறது ஒன்றும் புதிய விடயம் அல்ல..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

&MaxW=640&imageVersion=default&AR-140309

qatarcabin.jpg

Shital+K+Upare5.jpg

Virgin-98852.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுக்கு நன்றி !
நானும் முந்தி கொஞ்ச நாள் ஏர்போர்ட் ஆதொரிட்டி ஓப்ஸ் (airport ops)  ஆக வேலை செய்தேன் பெரிதாக பிடிக்கவில்லை விட்டு விட்டேன்.
இப்போதும் airlines இல் தான்   வேலை செய்கிறேன்.
 
சொந்த காரன்கள் யாரையாவது படிப்பித்தால் ... இப்படியே இங்கே இழுத்துவிடலாம் என்று நினைத்தேன்.
மீண்டும் தகவல்களுக்கு நன்றி !

பரவாயில்லையே.. ID00 அல்லது ZED-ல் ஊருக்கு போகலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேலைக்கு இத்தனை எடுப்பா.  2006 - 2007 காலப்பகுதியில் லண்டன் கீத்துரோவில் இதனை ஒத்த வேலை செய்திருக்கிறோம். அதுக்காக ஒரு மண்ணாங்கட்டி பயிற்சி வகுப்புக்கும் சென்றதில்லை. 3 மணி நேர.. induction அவ்வளவும் தான். கொஞ்சம் சிமாட்டா ரெஸ் பண்ணிட்டு வரைச் சொல்லி இருந்தார்கள். பெரிசாக வேலை பிடிக்கல்ல. அது பெட்டையளுக்குத் தான் சரி. அறிவு அனுபவ வளர்ச்சிக்கு இடமில்ல. ஒரே வகையான செயலை திரும்ப திரும்ப தினமும் செய்து கொண்டிருக்க வேண்டும். ஒரு முன்னேற்றமும் கிடையாது. :):lol:

மத்திய கிழக்கு விமான (எமிரேட்) நிறுவனப் பணியாளர்கள் (பெண்கள்) அவர்களுக்குரிய உடை அணிந்தே பணி செய்தார்கள். அதேவேளை வேர்ஜின் அட்லான்ரிக்.. பணியாளர்கள் குட்டைப்பாவாடை (குட்டப்பாவாடையில் இரண்டு வகை உண்டு.. 1. முழங்காலுக்கு மேல்.. மற்றது முழங்காலுக்கு கீழ் வரை கொஞ்சம் நீண்டது... வேர்ஜின் வகை 1 அணியும்) அணிந்திருந்தார்கள். வேலைக்கு வரும் போது சாதாரண உடையில் வந்து.. கீத்துரோவில் அவர்களுக்குரிய ரெஸ்ஸிங் ரூமில் உடைமாற்றுவார்கள். அது எங்களது ஓய்வு அறைக்கு அருகில் இருந்தது. எங்கள் ஓய்வு அறையோடு கன்ரீனும் இருந்தது. அதனால் அங்கு வரும் அழகான பெண்களோடு கதைக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர்களின் ரெஸ்கோட் பற்றி எல்லாம் கதைக்கும் போது.. தொழில்நிறுவனங்கள் சொல்கின்றன.. செய்ய வேண்டி உள்ளது. மற்றும்படி.. இப்படியான உடைகள் அணிய வேண்டும் என்பது எங்கள் விருப்பல்ல என்று பலரும் சொன்னார். சில பெண்கள்.. இப்படி உடையணிவதால்.. நிறைய வாடிக்கையாளர்கள் ஜொள்ளுவிட்டுக் கொண்டு தங்களிடம் வர வாய்ப்புள்ளதாக குறிப்பாக ஆண் வாடிக்கையாளர்கள்.. நக்கல் வேற அடித்தார்கள்.

கீத்ரோவில்.. அன்றைய காலங்களில் யாராவது பணி புரிந்திருந்தால்.. இது தெரிந்திருக்கும்..! :icon_idea::)

மேலும் இப்படியான பயிற்சி வகுப்புக்களை எடுக்கிறம் என்று எம்மவரிடம் நிறைய காசு அறவிடப்படுகிறதோ என்ற விபரமும் அறியப்படுதல் வேண்டும். முன்னர் எல்லாம்.. ஹோட்டல் மனேச்மெண்ட்.. மற்றும் விமானப் பணி பயிற்சிகள் என்று வந்து உள்ளூர் மக்களின் அறியாமையை பயன்படுத்தி பகற்கொள்ளை அடித்தல்களும் நிகழ்ந்துள்ளன. வெள்ளைக்காரன் வந்து படிப்பிச்சால் அது.. பெரிய படிப்பு என்று நினைக்கும்.. அற்பத்தனமான சிந்தனையையில் இருந்தும் எம் மக்கள் விடுபட வேண்டும். வெள்ளையோ கறுப்போ.. பிரவுனோ.. சரியானவர்கள்.. சரியான தகமையோடு.. சரியான இடத்தில் வந்து கல்வி.. அல்லது தொழில்பயிற்சி அளிக்கிறார்களா.. பயிற்சியின் முடிவில்.. வழங்கப்படும் சான்றிதழுக்கு மதிப்பு அங்கீகாரம் உள்ளதா.. பயிற்சியை தொடர்ந்து வேலைக்கான பயிற்சிக்களம் அமைக்கப்பட்டுக் கொடுக்குமா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர.. வெள்ளையும் நம்மவர்களுடன் சேர்ந்து மக்களின் அறியாமையை பயன்படுத்தி.. ஊரைக் கொள்ளை அடிக்கிறது ஒன்றும் புதிய விடயம் அல்ல..!!! :icon_idea:

இப்படித்தான்  இந்த விடயததில் மட்டுமல்ல

எல்லாவிடயத்திலும் இவ்வாறே

தமிழரின் தலையில்  அரைக்கிறது சிங்களம்

அதற்கு  விளம்பரமும் போராடடமும்  நடாத்த ஒரு கூட்டம்

போதாதா....

உண்மையில் தமிழருக்கு ஏதாவது நன்மை செய்யணும் என சிங்களம் விரும்பினால்

மாகாணசபையை  இயங்கவிட்டிருக்கும்...

இதைக்கூட  புரிந்து கொள்ளாத எம்மவர்கள்............??

  • கருத்துக்கள உறவுகள்

நான் இறுதியாக யாழ்ப்பாணத்திற்குப் போனது 2002 இல். அதற்குப் பிறகு இலங்கைக்கே போக முடியவில்லை. அதனால் யாழ் எப்படி இருக்கிறதென்று நான் பேச முடியாது. ஆனால் 2002 இல் அங்கே சென்றபோது 80களில் இறுதியில் நான் வாழ்ந்த யாழுக்கும் 2002 இற்குமிடையே நிறையவே வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்தேன். அதில் முக்கியமானது மதுபாவனை.

எனக்குத் தெரிந்த காலத்திலிருந்து சாராயம் ஒரு ஆடம்பரப் பொருள். சாதாரண மக்களால் வாங்கப்பட முடியாத ஒரு பொருள்.இதனாலேயே பலர் எனது தகப்பனார் உற்பட கள்ளைக் குடித்து வந்தார்கள். 80 களில் இளைய வயதினர் மதுபானம் அருந்துவதை நான் கண்டதில்லை அல்லது அப்படியானவர்களுடன் பழக்கமில்லாததால், 2002 இல் பல இளைய வயதினர் மதுபானம் அருந்துவதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாகவே இருந்தது.

சிலவேளை தொடர்ச்சியான யுத்தத்திற்குள் இருந்தபடியினால் யாழ் சமூகம், மற்றைய சமூகங்கள் அடைந்த இயல்பான வளர்ச்சியை அடையவில்லை என்றே நினைக்கிறேன். அதாவது மதுபானம் மற்றும் ஏனைய ஆடம்பர விடயங்கள் போன்றவற்றை பொருளாதார காரணங்கள் நிமித்தம் அனுபவிக்கக் கூடிய சாத்தியம் இருக்கவில்லை. ஆனால், 1995 இல் சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கை மூலம் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட யாழ் சமூகம், கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் அந்த பத்தாண்டுக் கால வளர்ச்சியை சடுதியாகக் கண்ணுற்றபோது ஒரு சடுதியான மாற்றத்திற்கு தன்னை கொண்டுசென்றது என்றுதான் நான் நினைக்கிறேன்.

புலம்பெயர் நாடுகளிலும் இவ்வாறான பழக்க வழக்கங்கள் சாதாரணமாக இருந்தபோதும், சமூக அக்கறை என்பதும் கூடவே வந்துகொண்டிருக்கிறது. மதுபானத்தை அருந்தும் ஒருவர் வழியில் செல்லும் இன்னொருவருடன் தகறாறு செய்யும் போக்கை நாம் காண்பது மிக அரிது. அவர்களிருக்கும் சமூகம் அவர்கள் அவ்வாறு நடப்பதைத் தடுத்து விடுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் அப்படியான சமூக அக்கறையென்பதோ அல்லது சட்டங்களோ இருப்பதை நான் காணவில்லை. சிங்கள அரசுக்கு தமிழரின் சமூகச் சீர்கேடென்பது ஒரு பிரச்சினையாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை. இளைஞர்கள் எவ்வளவு தூரத்திற்கு இந்த புதிய ஆடம்பர விடயங்களில் ஈடுபடுகிரார்களோ, அவ்வளவு தூரத்திற்கு பிரிவினைவாதத்திலிருந்து விலகிவிடுவார்கள் என்று அது நினைக்கிறது. ஆகவே சமூகச் சீர்கேடுகள் பற்றி அரசு கவலைப் படாதபோது, அவை கட்டுப்படுத்துவது கஷ்ட்டமாகிவிடுகிறது.

இன்று யாழ்ப்பாணத்திலிருக்கும் அத்தனை ஆடம்பர விடயங்களும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கின்றன. ஆனால் அதை அனுபவிப்பவர்கள் காட்டும் சமூகத்தின் மீதான அக்கறையும், தனிமனித ஒழுக்கமும் இரு இடங்களிலும் நிறையவே வேறுபடுகின்றன.

இன்று யாழ்ப்பாணத்தில் நடப்பதை வேண்டுமென்றால் இந்தியாவிலோ அல்லது தமிழ்கத்திலோ நடப்பதற்கு ஒப்பிடலாம். புலம்பெயர் நாட்டில் வாலாட்ட முடியாது. ஒட்ட நறுக்கிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நேற்று முன் தினம்தான் அங்கிருந்து வந்தேன்.இங்கை மது பாவணை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.மது பாவணையை எங்கும் நியாயப்படுத்த முடியாது.அதை விட்டுப் பாத்தால் யாழ்ப்பாணம் 10 வருடத்துக்கு முன்பு இருந்த மாதிரி இப்பவும் இருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.மதுப்பாவணை முன்பும் இருந்ததுதான்.அப்ப கள்ழு வடிவில் இப்ப பியர் வடிவில்.நான் அங்கு திரிந்த வரைக்கும் ரோட்டில் போதையில் போத்தல்களுடன் இழைஞர்கள் மட்டுமில்லை முதியவர்களும் திரியவில்லை.ஆனால் மதுப்பாவணை உள்ளது.மற்றது கலாச்சாரம் என்டு பாத்தால் முன்பு பெண்கள் சைக்கிளில் டபுள் போகும் துள்ளினார்கள்.பின் சைக்கிள் ஓட்டும் போது துள்ளினார்கள்.இப்ப மோட்டார் சைக்கிளில் பறக்கிறார்கள்.படிப்பும் ஆக மோசம் இல்லை.ஆனால் வெளி நாட்டு மோகத்தால் படிப்பு வேலை என்பவற்றில் ஆர்வம் கொஞ்சம் குறைவு.இங்கிருந்து போறவர்கள் இங்குள்ள யதார்த்த தன்மையை சொல்ல வேண்டும்.தை அவர்கள் நம்புவது கேள்விக்குறி.இங்குள்ளவர்கள் அங்கு போய் நிரந்தரமாக வசித்தால் நிலமை மாறலாம்.இப்பவும் அங்குள்ள ஆண் பெண் பிள்ளைகுளுக்கு வெளிநாட்டில் துணை தேடுவதில் ஆர்வமாய் உள்ளார்கள்.மற்ற உழைப்புத்திறன் உள்ளவர்களும் நிறை இருக்கிறார்கள்.அதைல்லாம் இஙகை வெளிவராததுதான் ஏன் என்று தொியவில்லை.

வணக்கம், சுவைப்பிரியன்!

உங்கள் கேள்விக்கும் பதில் கூறுவதானால்... மிகப் பொருத்தமான பதில் ' கர்ணன்; படத்தில் ஒரு கட்டத்தில் வருகின்றது!

கர்ணன் பூஜை முடிந்து நிற்கையில்... ஒரு அந்தணர் ( இந்திரன்) தானம் கேட்டு வருகிறார்! அவரை வரவேற்கப் புறப்படும் கர்ணனை..சூரிய தேவன் எச்சரிக்கிறான்!

கர்ணனிடம் ' கவச குண்டலைங்களைத் தானமாகத் தரும்படி.. அந்தணர் யாசிக்கிறார்!

அப்போது.. ஒரு வசனம் சொல்லுவான் 'கர்ணன்: !

தள்ளாடும் தேகம்... ஆயினும் தள்ளாடாத 'நோக்கம்' !

அது தான் உங்கள் கேள்விக்கான பதில்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.