Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத முலாம் பூசி வட மாகாணசபையை கலைக்கவும் தயங்காது இலங்கை அரசு! - சென்னையில் விக்னேஸ்வரன் தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன்,

இல்லை எமக்குத்தேவை மக்களின் பாதுகாப்பு ( சீவி தனதுரையில் சொன்ன 7 வகைப்பாதுகாப்பு) . மற்றும் எம் உள்ளூர் விடயங்களில் முடிவெடுக்கும் உரிமை.

இதை அடைய சமஸ்டியே போதுமானது.

ஆனால் தனிநாடு என்பது ஓர் இலக்கு. அதை அடைந்தால் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றில்லை. சமஸ்டியிலும் இதே சுதந்திரத்தை அடைந்திருக்கலாம்.

புலிகளை பொறுத்தவரை தனிநாடு என்பதே விடுதலை என்று பொருள் கொண்டார்கள்.

International conflict resolution எனப்படும் சர்வதேச பிரச்சனை தீர்க்கும் விடயத்தில் positions (நிலை) interests (அனுகூலம்) என 2 விடயங்களை சிலாகிப்பர்.

ஒருவருக்கு சனி ஞாயிறில் கார் தேவை. மனைவிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை கார் தேவை.

1) மனவி தனக்கொரு கார் வேணும் என்கிற

2) கணவன் தனக்கொரு கார் வேணும் என்கிறார்.

இவை இரண்டும் positions.

இவர்களின் interest கிழமையின் வேறு பட்ட நாட்களில் காரின் பாவனை.

இருவரும் தமது positions இல் இருந்து இறங்கி வந்து ஒரே காரை வாங்கி பாவித்தால் இருவரின் interest உம் நிறைவேறும்.

இங்கே இலங்கையின் position ஒற்றை ஆட்சி. புலிகளின் position தனிநாடு. இலங்கையின் interest நாடு பிளவு படாமை.

தமிழர்களின் interest சம உரிமையுள்ள, சுயாட்சியுள்ள பாதுகாப்பான வாழ்க்கை.

இருவரும் தத்தமது position களில் இருந்தும் இறங்கி வந்து சமஸ்டியை ஏற்றால், இருவரது interest ம் அடையப்படும்.

ஆக தனிநாடு கண்டால் மட்டுமே தமிழர்கள் விடுதலை அடையலாம் என்பது ஒரு மாயை. சர்வதேச கண்காணிப்பில் உருவாகும் ஒரு சமஸ்டி தீர்விலும் இப்படி ஓர் விடுதலை அல்லது சுதந்திரம் சாத்தியமே.

இதை அடைய 2005 எமக்கு வாய்ப்புகள் பிரகாசமாய் இருந்தன. ஆனால் கடினமான ராஜதந்திர யுத்தம் ஒன்றுக்கு தயாராக வேண்டி இருந்தது. இதை உய்த்தறியும் இயலுமையும், ராஜதந்த்ஹிர போர் செய்யும் ஆத்ம தைரியமும் பாலசிங்கத்தாரிடம் இருந்தது. ஆனால் பிரபா தனி நாட்டை விட்டு இறங்க தயாரில்லை.

சமஸ்டி என்பது அவரை பொறுத்த மட்டில் ஒரு நாளும்தீர்வாகாது.

இந்நிலையில் அங்கே பேச ஒன்றும் இல்லை என்றானது. இதை மேற்கும் 2005 தேர்தல் புறக்கணிப்பின் பின் நன்குணர்ந்து கொண்டது.

இப்போதும் எமது விடுதலையை சனஸ்டி மூலம் அடைவதை பற்றி சிந்திக்கவே மேற்கு விரும்புகிறது.

நாம் தான் பிராபா ஏற்றி விட்ட கொப்பில் இருந்து இறங்க மறுக்கிறோம்.

ஆனால் கூட்டமைப்பும் சம்பந்தனும் சீவியும் சரியான பாதையிலேயே நடக்கிறனர்.

  • Replies 57
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இருவிடயங்களில் புலிகள் நடந்துகொண்டவிதம் புரியவில்லை.

முதலாவது, 1991 இல் ராஜீவ் மீண்டும் பிரதமராவார். அப்படி நந்தால் மீண்டும் இந்திய ராணுவம் இலங்கைக்கு வரும், ஆகவே அதைத் தடுப்பதென்றால், ராஜீவைக் கொல்வது சரியென்று சொன்னார்கள். ஆனால், எது நடக்கக் கூடாதென்று ஒன்றைச் செய்தார்களோ, அதுவே இறுதியில் நடந்தது. இந்தியா புலிகளை, ராஜீவின் கொலையை வைத்தே அழித்து முடித்தது.

இரண்டாவது, ரணிலைத் தோற்கடித்து மகிந்தவைக் கொண்டுவந்தது. ரணில் பேச்சுவார்த்தை , பேச்சுவார்த்தை என்று பேய்க்காட்டுறான். ஆகவே அவனை தோற்கடித்து, கடும்போக்கு மகிந்தவைக் கொண்டுவந்தால், யுத்தத்தை அவனே ஆரம்பிப்பான், பின்னார் நாம் முடித்துவைக்கலாம் என்கிற எண்ணம். தமிழர்களைப் பொறுத்தவரையில் ரணில், மகிந்த ஆகிய இருவருமே இனவாதிகள்தான். தமிழர்களுக்கென்று எந்தவிதமான உரிமைகளையும் மனதளவில்க் கூட கொடுக்க விரும்பாதவர்கள்தான். ஆனால், மகிந்த அதனை வெளிப்படையாகக் காட்டினான், ரணிலோ பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து சிறுகச் சிறுக புலிகளை மேற்குலகின் பொறிக்குள் கொண்டுவந்தான்.

இலங்கையில் யுத்ததை எப்படியாவது நிறுத்தி தமது வியாபார நலன்களைத் தக்கவைக்கவும், பிராந்தியத்தில் காலூன்றவும் காத்திருந்த மேற்குலகிற்கு புலிகள் ரணிலை வீழ்த்தியது கடுப்படைய வைத்திருக்கிறது. ஆகவே இந்தியாவுடன் சேர்ந்து ஆப்படித்தார்கள்.

ரணிலை கொண்டுவந்திருந்தால். ஈழம் கிடைத்திருக்காது. ஆனால் யுத்தமும் நடந்திருக்காது. மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். புலிகளும் தலமையும் காப்பாற்றப் பட்டிருக்கலாம். ஏதாவதொரு தீர்வை மக்களையும் காத்துக்கொண்டே பெற்றிருக்கலாம். இன்றூ எதுவுமே இல்லாமல்,  'இருந்ததும் போச்சுடா நொள்ளைக்கண்ணா' என்கிற நிலமை ஏற்பட்டிருக்காது.

ஆத்திரத்தில் ஒரு தனிமனிதர் எடுக்கும் ஒரு தூரநோக்கற்ற முடிவு ஒரு முழு இனத்தினதும் இருப்பையே கேள்விக்குறியாக்கி, சிறிது சிறிதாக அந்த இனத்தினை இல்லாமல் செய்வதற்கு எப்படிக் காரணமாகியதென்பதற்கு நாம் ஒரு உதாரணம்.

இதில் வேதனை என்னவென்றால், 40,000 போராளிகளையும், 150,000 பொதுமக்களையும், உலகத் தமிழினத்தின் முழு நம்பிக்கையாகவிருந்த விடுதலைப் போராட்டத்தையும் காவுகொடுத்து நட்டாற்றில் நிற்கும் இன்றைய கைய்யறு நிலையிலும், 'இந்த முடிவு வரவேண்டும் என்றுதான் தலைவர் போராடினார், எமது போராட்டத்தின் நியாயங்களை உலகின் கண்களுக்கு காட்டிச் சென்றார், இதுதான் தலைவரின் தீர்க்கதரிசனமான ராஜதந்திரம்' என்று புலத்தில் சிலர் பாடிக்கொண்டு திரிவதுதான். இந்த நியாயத்தை தமது பிள்ளைகளையும் , சகோதரங்களையும் போராட்டத்தில் பலிகொடுத்த சொந்தங்களிடம் சென்று சொல்லிப் பாருங்கள், அப்போது புரியும்.

அட கடவுளே, ஈழத்தில் நடப்பது இனக்கொலைதான் என்பதில் மேற்குலகிற்கு சந்தேகம் எப்போதாவது இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆக, அவர்களுக்குத் தெரிந்த ஒரு விடயத்தை மீண்டும் ஒருமுறை தெரிவிப்பதற்காக நாம் அனைத்தையும் இழந்திருக்கிறோம். இதில் பெருமை வேற வேண்டிக்கிடக்கு !

Edited by ragunathan

கோசான் சே  இன்று இசைப்பயிற்சி முடிந்து கொஞ்சம் முதல்தான் வீட்டிற்கு வந்தேன் . களைப்பு ஒருபுறம் மீண்டும் பேசுவோம் .சமஸ்டியின் மூலம் எதற்காக நாம் போராடத்தொடங்கிநோமோ அந்த விடயங்களை நிறைவு செய்யலாமா என்று ஆராய்வோம் .அதுவரை ஓய்வு .நன்றி வணக்கம்  :D

Edited by தமிழ்சூரியன்

ஆத்திரத்தில் ஒரு தனிமனிதர் எடுக்கும் ஒரு தூரநோக்கற்ற முடிவு ஒரு முழு இனத்தினதும் இருப்பையே கேள்விக்குறியாக்கி, சிறிது சிறிதாக அந்த இனத்தினை இல்லாமல் செய்வதற்கு எப்படிக் காரணமாகியதென்பதற்கு நாம் ஒரு உதாரணம்.

 .உங்கள் கருத்தின்படி தனி மனிதர் தேசியத்தலைவர் ஆத்திரத்தில் எடுத்த முடிவு மிகவும் நாணயமான ,நாகரீகமான இலங்கை அரசையும் , தார்மீக இந்தியாவையும் ,மனிதாபிமானம் கொண்ட சில வல்லரசுகளையும் கெட்டவர்கள் ஆக்கிவிட்டது ...............எங்க போய் தலையை முட்டுவதென்று தெரியல ..................... :D

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

பிரபாவின் பழிவாங்கும் குணம் மட்டும் இந்த இரு முடிவுகளுக்கு காரணமில்லை. அவரிடம் பழிவாங்கும் குணம் இருந்தது உண்மையே. அவரிடம் பழகி விலகியவர்களின் வாக்கு மூலம், இலங்கை படைகளின் body bags இலேயே அவர்களை திருப்பி அனுப்பியது இப்படி இதற்க்கு பல உதாரணங்கள் உண்டு.

ஆனால் இவ்விரு செயல்களுகும்,

விடுதலை =தனிநாடு எனும் கருத்தில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் ஒரு முக்கிய காரணி.

நாம் அடையவிரும்பும் விடுதலையை தனி நாடு தவிர வேறு ஒரு முறை மூலமும் அடைய முடியும் என்று அவரால் உய்தறிய இலயாமல் போயிட்டு.

கூடவே, அண்ணன் ஒரு சர்வஞானி, கடவுள் முருகனுக்கே நிகரானவர் (உங்களின் முன்னாள் யாழ் ஸ்டேட்ஸ்) ராஜ கோபுரம் (இப்பொதைய ஸ்ட்டேடஸ்) போன்ற துதிபாடல்களில்னால், தன்னை பற்றியும், தன் இயக்கம் பற்றியும் ஒரு வெல்ல முடியாதவர்கள் (invincible

) எனும் மிகை மதிப்பீடும் அவருக்கு இருந்திருக்கலாம்.

இதனால் அவர் இவ்விரு விடயங்களையும் செய்திருக்கலாம்.

If you want to pursue revenge, dig two graves ( பழிவாங்குவதாய் இருந்தால் இரு சவக்குழிகளை (ஒன்று உனக்கு) கிண்டு என்கிறது ஒரு சீனப்பழமொழி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கென்று ஒரு தீர்வு வருமாக இருந்தால் நிச்சயம் அது புலிகளால் அன்றி வேறு எவராலும் வரமுடியாது என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில் இருந்தவன் நான். 2009 மே வரைக்கும் அந்த நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால் மே 18 எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது. எனது ஒரே நம்பிக்கையாகவிருந்த புலிகளும் எமது போராட்டமும் அழிக்கப்பட்டது. இனிமேல் எழ முடியாதவாறு போராட்டம் ஏன் அழிக்கப்பட்டது என்பதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ராஜீவின் கொலைக்கான முடிவும், ரணிலைக் கொண்டுவரும் முடிவுமே எனக்கு அதற்கான காரணங்களாகப் பட்டது. அதனால்த்தான் தூரநோக்கற்ற முடிவு என்று எழுதினேன். அப்படியில்லை, இந்த முடிவுகளால் போராட்டம் அழியவில்லை, வேறு காரணங்கள் இருக்கென்று நீங்கள் சொன்னால் கேட்க விருப்பம்.

தலைவர் மேல் நான் கொண்ட மரியாதை எப்போதும் மாறாது. அதற்காக விமர்சிக்கக் கூடாதென்று சொன்னால் என்னதான் செய்வது ?

எங்கள் தலைவன் எப்போதுமே பிரபாகரந்தான். ஏனென்றால் அவரைப் போல இனியொருவர் வரப்போவதில்லை. முருகனுக்கெல்லாம் நிகரானவனா என்பது தெரியாது, ஆனால் அது பாடலின் வரி என்பதுமட்டும் தெரியும்.

தமிழர்களின் ராஜகோபுரமும் பிரபாகரந்தான். தமிழன் தலைநிமிர்ந்தது கூட அவனால்த்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலமூலத்தில் இந்தப்பேச்சை கேட்டேன். அருமையான பேச்சு. தமிழர் உரிமை என்பது ஆரவார உணர்ச்சி கோசமில்லை. நியாயமான மனித உரிமை அதை சுயநிர்ணய அடிப்படையில் சமஸ்டிய அலகாக்கும் ஒரு சட்டமாற்றத்தை இந்தியா வரவழைக்க வேண்டும் என்கிறார் சீவீ.

பிரபாகரன் கேட்டதற்கும் இவர் கேட்பதற்க்கும் 1000 வித்தியாசங்கள்.

ஒரு கருத்து களத்தில் கருத்தை பதிவதற்கு ஒரு அடிப்படை உண்டு.

"கருத்து" என்பதற்கும் "புலம்பல்" என்பதற்கும் உள்ள வித்தியாசம்.
 
புலம்பல் என்பது மேலே இருப்பதுபோல் சும்மா புலம்பி கொண்டே இருப்பது அதற்கு எந்த ஆதாரமும் இருக்க தேவை இல்லை.
கருத்து என்பது ஒரு மையத்தில் ஆதரபடுத்தபட வேண்டியது.
 
1000 வித்தியாசம் இருந்தால் குறைந்தது 999 வித்தியாசங்கள் ஆதரபடுத்த பட்டிருக்க வேண்டும். 3 க்கும் வக்கிலாத இடத்தில்  இப்படி ஒரு இலக்கத்தை போட்டுவிட்டு எப்படி வேண்டுமானாலும் புலம்பலாம். 

ஓஸ்லோ உடன்படிக்கையில் பாலசிங்கமும் இதை ஏற்போம் என்றே சொன்னார்.

அன்டன் பாலசிங்கம் அவர்கள்

இறுதிவரை விடுதலைபுலிகளின் அரசியல் ஆலோசகராகவே இருந்தார். விடுதலைபுலிகளின் அரசியல் கருத்தாகவே அவரது கருத்துக்கள் உலகில் இருந்தது.

அன்டன் பாலசிங்கம் அவர்கள் சொன்னால் அது விடுதலை புலிகளின் நிலைப்பாடு ஆகும். 
 
அப்படி இல்லாது இருந்திருந்தால் ................ அதை ஆதாரபடுத்த வேண்டும்.
ஊருக்கு மின்சாரம் வரமுன்பு  அங்கிருந்த புளி வேம்பு இத்தியெல்லாம் (மேலே இருக்கும் கருத்தை போல்) பேயும்  பிசாசும்தான் இருந்தது. பலர் பேயை நேரிலும் பார்த்திருந்தார்கள். எங்களுக்கும் ஒருக்கா காண்டுங்கோ  என்று கேட்டால் ............. ????

ரணிலை வெல்ல விட்டிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும்.

2087 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி யாழ்பாணத்தில் மழை பெய்யும்.

இதற்கும் மேலே இருக்கும் கருத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. (both are no valid arguments)

ஆனால் ரணில் வென்றால் தமது regime security பாதிக்கப்படும் என்று பயந்த புலிகள், சமஸ்டி அரசமைந்தால் தங்கள் தனிநாட்டு கோரிக்கை காலத்துக்கும் படுத்துவிடும் என்று பயந்த புலிகள் ரணிலை தோற்க்கடித்தனர்.

அதற்கு 20 வருடங்கள் முந்தியே புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டு. இந்திய அரசிடம் தமது ஆயுதங்களை கையளித்து இருந்தார்கள். 
1990 இல் தாம் தேர்தலுக்கு முகம் கொடுப்பதாகவும் அதை எதிர்கொண்டு இலங்கை பாராளமன்றம் வருவதாகவும்  பிரேமதாச அரசிற்கு உறுதிகொடுத்து. தமிழ் ஈழ விடுதலை புலிகள் மக்கள் முன்னணியை தோற்றுவித்தார்கள். 

அதன் பலனை இன்று எல்லோரும் அனுபவிக்கிறோம்.

தேர்தல் சமயத்தில் சீவியை ஆதரித்து நான் எழுதிய போது என்னை எலும்பு நக்கி என்றும் சீவீயை கொழும்பான், இதுவரைக்கும் அரசுக்கு சேவகம்செய்த எடுபிடி எண்டும் திட்டித்தீர்த ஆட்கள் எல்லாம், இப்போ சீவியின் விசிறிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் குள்ள நரிதான் ஒத்துக்கிறேன். ஆனால் எமது பலத்தை தக்க வைத்த படி அவருடன் டீல் பண்ண ஒரு அவகாசம் இருந்தது.

யாராலும் எதிர் காலத்தை சாத்திரம் பார்க்க முடியாது. ஆனால் ரணிலை தோற்க்கடிப்பது உலக நாடுகளை சினம் கொள்ளச்செய்யும் எனும் எதிர்வு கூறல் ஓரளவுக்கு விடயம் தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். தலைமையில் இருப்பவர்கள் தனியே காய் நகர்துவது மட்டுமில்லை, எதிர் கால விளைவுகளையும் கணித்தே காய் நகர்த்துவர். நடத்தி இருக்க வேண்டும்.

மகிந்த வோ, கோத்த வோ புலிகளின் அழிவுக்குக் காரணமில்லை. அவர்கள் கருவிகள். காரணம் - மேற்குலகின் "புலிகள் எவ்விலை கொடுத்தாவது" அழிக்கப்பட வேண்டியவர்கள் எனும் முடிவு.

அதாவது புலிகளை பிரச்சினையின் தீர்வின் ஒரு அங்கம் (part of the solution) எனும் நிலை மாறி பிரச்சினையின் அங்கம் (part of the problem) என்று மேற்க்கு நாடுகளை நினக்க வைத்தமை.

புலிகளின் சமாதான கால அரசியல் படுகொலைகள் மூலம் ஏலவே இப்படி சிந்திக்க தொடங்கிய மேற்குலகை ரணிலை தோற்கடித்த முடிவு இறுதி முடிவெடுக்க வைத்தது.

தேர்தல் புறக்கணிப்பை செய்யவேண்டாம் என்றும் you are on the last chance saloon என்றும் பாலசிங்கத்தாருக்கு சொல்லப்பட்டிருக்கு ஆனால் வன்னி தமது ஆயுத பலத்தின் மீது கொண்ட அதீத நம்பிக்கையாலும், இது ஈற்றில் சமஸ்டியில் முடிந்து, தனிநாடு காலத்துக்கும் படுத்துவிடும் என்ற பயத்தாலும் மகிந்தவை வர வைத்தனர்.

மேற்குலகு தான் சொன்ன படி

1) இலங்கையரசின் மக்கள் மீதான தாக்குதலை கண்டுக்காமல் விட்டது

2) ஆயுத வழங்கலை முடக்கியது

3) தேவைப்பட்ட தொழில் நுட்ப உதவிகளை வழங்கியது

4) இலங்கைக்கான ஆயுத வழங்கலை உறுதி செய்தது

5) இந்தியா மூலம் களத்தில் உதவியும் செய்தது

முடிவு - எல்லோருக்கும் தெரிந்ததே.

புலிகளின் அழிவின் முடிவில் சில விடயங்களை தமிழர்க்கு கொடுப்பதாக மேற்க்குக்கும் இந்தியாவுக்கும் இலங்கை உறுதி கொடுத்திருந்தது. அதில் இலங்கை தவறியதால் வரும் விளைவுகளே - போர்குற்ற விசாரணை போன்றவை.

யுத்த முடிவில் மகிந்த சொன்ன படி நடந்திருந்தால் இப்போ அவர்தான் மேற்க்கின் செல்லப்பிள்ளை. நோபல் பரிசு கூட கொடுத்திருப்பர்.

2005 இல் மேற்குலகை under estimate பண்ணி பிரபா விட்ட அதே தவறை இப்போ மகிந்தவும் விடுறார். அவரின் நிலை வர முன்சுதாகரித்து course correction செய்வாரா? இல்லை அவரைப்போலவே காணாமல் போவாரா? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

ரணிலை தோற்கடிக்க முன்னமே மேற்கு  உலகு அப்படி யோசிக்க தொடங்கியதாம்.
ரணிலை தோற்கடிக்காவிட்டாலும் அது நடந்திருக்கும். என்றும் சொல்கிறார்.
 
இப்ப என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. 
சர்வதேசம் ............. மேற்கு உலகு. இப்படி என்று யாரவது எழுதினாலே தெரிந்துகொள்ள வேண்டும் எதோ பேய்கதை  சொல்ல போகிறார்கள் என்று. சர்வதேசம் என்றால் அதில் சோமாலியா  ஆப்கனிஸ்தான் தொடங்கி  அஜர்பைஜான் வரை போகும்.
மேற்கு உலகு என்றால் கிழக்கத்திய நாடுகளுக்கு நேர் எதிரே இருக்கும் எல்லா நாடும் மேற்குலக நாடுகள்தான். இப்படி ஒரு கூட்டு உருவாகி ஏதாவது ஒரு முடிவு எடுத்ததாக உலகில் எந்த முடிவும் இல்லை.
விடுதலை புலிகளை அழிப்பது என்று எடுத்த பேய்கதை பிசாசு கதை முடிவை தவிர்த்து. 
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன்,

புலிகளை பலவீனப் படுத்தும் திட்டம் கன ஜரூராக நடந்திருக்கும். தமிழரை பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து ஏமாற்றும் வேலையும் நடந்திருக்கும்.

ஆனால் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்திராது. புலிகள் தாமே யுத்தத்தை தொடங்காத அல்லது ரணிலை கொல்லாத வரை. அப்படி செய்திருந்தால் ரணில் வெண்டிருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்திருக்கும்.

2005 இல் புலிகள் முன்பிருந்த தெரிவு 3.

1) ரணிலுடன் ராஜதந்திர யுத்தம் இதன் அதி உட்ச முடிவு சம்ஸ்டியாக இருக்கும். புலிகள் மற்றும் தனி நாட்டு கோரிக்கை அழிந்து போகும்.

2) ரணிலுடன் போர்

3) மகிந்தவுடன் போர்.

2 இலும் 3 இலும் புலிகளின் regime security மற்றும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு வாய்ப்புகள் கூட. இதில் மகிந்த காட்டான் ஈசியாக கையாளலாம் என்று நினைத்து 3 ஐ தேர்ந்தனர்.

ஓரளவுக்கு மேல் சனம் சாக மேற்கு நாடுகள் விடாது, தமிழகம் கொந்தளிக்கும் என்று தப்பு கணக்கு மேல் தப்பு கணக்குப் போட்டனர்.

மேற்குலகின் ஓர்மத்தை குறைத்தும், தமிழ்நாட்டின் உணர்வை கூட்டியும், புலம்பெயர்ந்தவரின் இயலுமையை கூட்டியும் எடை போட்டனர்.

புலிகள் ஒரு எடையும் போடாமல் இருந்திருந்தால் ..........? 
என்ன நடந்திருக்கும்???
 
ஜெசிக்குறு சிங்கள படைகளுக்கு வெற்றியை கொடுத்திருந்தால் ............. ஆய்வாளர் பெருமக்கள் என்ன எழுதி இருப்பார்கள் ?
 
இந்தியா 1987இல் புலிகளை முற்றாக அழித்திருந்தால்....?
 
புலிகள் என்ன கருமாந்திர மாஜஜால காயை நகர்த்தி தப்பினார்கள்???
 
புலிகள் எடைபோட்டத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உங்களை தவிர்த்து வேறு யாரவது இருக்கிறார்களா?? 
  • கருத்துக்கள உறவுகள்

சூரியன்,

இல்லை எமக்குத்தேவை மக்களின் பாதுகாப்பு ( சீவி தனதுரையில் சொன்ன 7 வகைப்பாதுகாப்பு) . மற்றும் எம் உள்ளூர் விடயங்களில் முடிவெடுக்கும் உரிமை.

இதை அடைய சமஸ்டியே போதுமானது.

ஆனால் தனிநாடு என்பது ஓர் இலக்கு. அதை அடைந்தால் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றில்லை. சமஸ்டியிலும் இதே சுதந்திரத்தை அடைந்திருக்கலாம்.

புலிகளை பொறுத்தவரை தனிநாடு என்பதே விடுதலை என்று பொருள் கொண்டார்கள்.

 அவர்கள் பொருள் கொண்ட்டார்கள் ..... அறம்  கொண்டார்கள் .... திணை கொண்டார்கள்.

என்று கற்பனை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.
எந்த பேச்சுவார்த்தையிலும் புலிகள் தமிழ் ஈழம் தமது முடிவு என்று கொள்ளவில்லை. ஜெனிவாவில் கூட சுவிஸ் நாடு போன்ற மொழி உரிமையுடன் கூடிய மாநில ஆட்சியை பரிந்துரைத்தார்கள். 
நேற்றுவரை என்ன நடந்தது  என்று தெரியாது இன்று வானில் இருந்து வந்தவன்தான். இதை சில வேளை நம்புவான். 
ஒன்றை எழுதினால் .......... அதை ஆதர படுத்த வேண்டும்.
சூரியன் முக்கோண வடிவமானது என்று எழுதுவதற்கும். மேலே இருப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

International conflict resolution எனப்படும் சர்வதேச பிரச்சனை தீர்க்கும் விடயத்தில் positions (நிலை) interests (அனுகூலம்) என 2 விடயங்களை சிலாகிப்பர்.

இப்படி சிலாகித்து தீர்த்து வைத்த இரண்டு பிரச்சனைகளை முதலில் எழுதுங்கள்.
அவர்கள் என்ன சிலகித்தர்கள் என்று பின்பு நாங்கள் எழுதுகிறோம். 

ஒருவருக்கு சனி ஞாயிறில் கார் தேவை. மனைவிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை கார் தேவை.

1) மனவி தனக்கொரு கார் வேணும் என்கிற

2) கணவன் தனக்கொரு கார் வேணும் என்கிறார்.

இவை இரண்டும் positions.

இவர்களின் interest கிழமையின் வேறு பட்ட நாட்களில் காரின் பாவனை.

இருவரும் தமது positions இல் இருந்து இறங்கி வந்து ஒரே காரை வாங்கி பாவித்தால் இருவரின் interest உம் நிறைவேறும்.

இங்கே இலங்கையின் position ஒற்றை ஆட்சி. புலிகளின் position தனிநாடு. இலங்கையின் interest நாடு பிளவு படாமை.

தமிழர்களின் interest சம உரிமையுள்ள, சுயாட்சியுள்ள பாதுகாப்பான வாழ்க்கை.

இருவரும் தத்தமது position களில் இருந்தும் இறங்கி வந்து சமஸ்டியை ஏற்றால், இருவரது interest ம் அடையப்படும்.

ஆக தனிநாடு கண்டால் மட்டுமே தமிழர்கள் விடுதலை அடையலாம் என்பது ஒரு மாயை. சர்வதேச கண்காணிப்பில் உருவாகும் ஒரு சமஸ்டி தீர்விலும் இப்படி ஓர் விடுதலை அல்லது சுதந்திரம் சாத்தியமே.

The Thimpu Declaration

Joint statement made by the Tamil Delegation on the concluding day 

of Phase I of the Thimpu talks on the 13th of July 1985

It is our considered view that any meaningful solution to the Tamil national question must be based on the following four cardinal principles:

- recognition of the Tamils of Ceylon as a nation

- recognition of the existence of an identified homeland for the Tamils in Ceylon

- recognition of the right of self determination of the Tamil nation

- recognition of the right to citizenship and the fundamental rights of all Tamils in Ceylon

Different countries have fashioned different systems of governments to ensure these principles. We have demanded and struggled for an independent Tamil state as the answer to this problem arising out of the denial of these basic rights of our people. The proposals put forward by the Sri Lankan government delegation as their solution to this problem is totally unacceptable. Therefore we have rejected them as stated by us in our statement of the 12th of July 1985. However, in view of our earnest desire for peace, we are prepared to give consideration to any set of proposals, in keeping with the above mentioned principles, that the Sri Lankan Government may place before us.

1985 இலேயே தமிழர் தரப்பும் புலிகளும் பேசிவந்த விடயங்களை.
2014 இல் என்றாலும் சிலருக்கு புரிந்திருக்கிறது. 
சந்தோசபடுவோம்!!!!!

இதை அடைய 2005 எமக்கு வாய்ப்புகள் பிரகாசமாய் இருந்தன. ஆனால் கடினமான ராஜதந்திர யுத்தம் ஒன்றுக்கு தயாராக வேண்டி இருந்தது. இதை உய்த்தறியும் இயலுமையும், ராஜதந்த்ஹிர போர் செய்யும் ஆத்ம தைரியமும் பாலசிங்கத்தாரிடம் இருந்தது. ஆனால் பிரபா தனி நாட்டை விட்டு இறங்க தயாரில்லை.

இப்படி என்று பிரபா அடிச்ச தந்தியை ஒரு காப்பி பேஸ்ட் பண்ணி போட்டால் நாமும் வாசிக்கலாம். 

சமஸ்டி என்பது அவரை பொறுத்த மட்டில் ஒரு நாளும்தீர்வாகாது.

இந்நிலையில் அங்கே பேச ஒன்றும் இல்லை என்றானது. இதை மேற்கும் 2005 தேர்தல் புறக்கணிப்பின் பின் நன்குணர்ந்து கொண்டது.

இப்போதும் எமது விடுதலையை சனஸ்டி மூலம் அடைவதை பற்றி சிந்திக்கவே மேற்கு விரும்புகிறது.

நாம் தான் பிராபா ஏற்றி விட்ட கொப்பில் இருந்து இறங்க மறுக்கிறோம்.

அதுக்கு தமிழ் மக்கள் என்ன செய்ய முடியும்?? 
கொப்பில் ஏறுவது தாவுவது ஏதும் பரம்பரை பிரச்சனையாக இருக்கலாம் இல்லையா??

ஆனால் கூட்டமைப்பும் சம்பந்தனும் சீவியும் சரியான பாதையிலேயே நடக்கிறனர்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இருவிடயங்களில் புலிகள் நடந்துகொண்டவிதம் புரியவில்லை.

முதலாவது, 1991 இல் ராஜீவ் மீண்டும் பிரதமராவார். அப்படி நந்தால் மீண்டும் இந்திய ராணுவம் இலங்கைக்கு வரும், ஆகவே அதைத் தடுப்பதென்றால், ராஜீவைக் கொல்வது சரியென்று சொன்னார்கள். ஆனால், எது நடக்கக் கூடாதென்று ஒன்றைச் செய்தார்களோ, அதுவே இறுதியில் நடந்தது. இந்தியா புலிகளை, ராஜீவின் கொலையை வைத்தே அழித்து முடித்தது.

ராஜீவின் கொலையின் பின்னால் இருக்கும் விடயங்கள் நாளும் நாளும் புத்தகமாகவும் கட்டுரையாகவும் பல இந்தியர்களால் எழுத பட்டு கொண்டு இருக்கிறது. 
ஒரு வேளை ராஜீவ் 1991 பிரதமர் ஆகி முள்ளி வாய்கால் 1992இல் நடந்திருந்தால் ....? நீங்கள் தடுத்திருப்பீர்களா??
தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தில் உங்களுக்கு தெரிந்த 3 விடயங்கள் மட்டும் நடக்கவில்லை. நாளும் பொழுதும்  24 மணிநேரமும் எதோ ஒன்றிற்கு முகம் கொடுத்தே போராளிகள் அதை 30 வருடம் தொடர்ந்தார்கள். எனக்கும் உங்களுக்கும் தெரியாதவைதான் இதில் அதிகம்.

இரண்டாவது, ரணிலைத் தோற்கடித்து மகிந்தவைக் கொண்டுவந்தது. ரணில் பேச்சுவார்த்தை , பேச்சுவார்த்தை என்று பேய்க்காட்டுறான். ஆகவே அவனை தோற்கடித்து, கடும்போக்கு மகிந்தவைக் கொண்டுவந்தால், யுத்தத்தை அவனே ஆரம்பிப்பான், பின்னார் நாம் முடித்துவைக்கலாம் என்கிற எண்ணம். தமிழர்களைப் பொறுத்தவரையில் ரணில், மகிந்த ஆகிய இருவருமே இனவாதிகள்தான். தமிழர்களுக்கென்று எந்தவிதமான உரிமைகளையும் மனதளவில்க் கூட கொடுக்க விரும்பாதவர்கள்தான். ஆனால், மகிந்த அதனை வெளிப்படையாகக் காட்டினான், ரணிலோ பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து சிறுகச் சிறுக புலிகளை மேற்குலகின் பொறிக்குள் கொண்டுவந்தான்.

நிகழ்ச்சி நிரல் புலிகளுக்கு 2003ஆம் ஆண்டே தெரியும் அப்பப்ப அதை கூறி கொண்டே வந்தார்கள். அப்போதெல்லாம் நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்று புரியவில்லை.
நிகழ்ச்சி நிரலில் ஒரு திடீர் மாற்றத்தை உண்டு பண்ணினால் நிகழ்ச்சி நிரலில் எதாவது மாறலாம் என்று அவர்கள் எண்ணி இருக்கலாம்.
குறைந்த பட்சம் போர் குற்ற விசாரணை என்றாலும் இப்போ இருக்கிறது. ரணில் வந்திருந்தால் முள்ளி வாய்க்காலில்  40-50 ஆயிரம் புலிகள் மட்டுமே இறந்திருப்பார்கள். 

(இதுவும் ஒரு ஊகம்தான் இதை நிருபிக்க முடியாது. போராளிகள் அவர்களுக்கு முன்னால் இருந்த பிரச்சனைகளுக்கு அவர்களால் கூடிய முடிவுகளை எட்டினார்கள் என்பதுதான் உண்மை. என்ன பிரச்சனை எனபதுதான் எனக்கும் உங்களுக்கும் தெரியாதது.)

இலங்கையில் யுத்ததை எப்படியாவது நிறுத்தி தமது வியாபார நலன்களைத் தக்கவைக்கவும், பிராந்தியத்தில் காலூன்றவும் காத்திருந்த மேற்குலகிற்கு புலிகள் ரணிலை வீழ்த்தியது கடுப்படைய வைத்திருக்கிறது. ஆகவே இந்தியாவுடன் சேர்ந்து ஆப்படித்தார்கள்.

இது உங்களின் ஊகம் மட்டுமே.
உண்மை இது அல்ல என்பதுதான் உணமையானது. 

ரணிலை கொண்டுவந்திருந்தால். ஈழம் கிடைத்திருக்காது. ஆனால் யுத்தமும் நடந்திருக்காது. மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். புலிகளும் தலமையும் காப்பாற்றப் பட்டிருக்கலாம். ஏதாவதொரு தீர்வை மக்களையும் காத்துக்கொண்டே பெற்றிருக்கலாம். இன்றூ எதுவுமே இல்லாமல்,  'இருந்ததும் போச்சுடா நொள்ளைக்கண்ணா' என்கிற நிலமை ஏற்பட்டிருக்காது.

ரணிலின் குறிப்பில் இருந்து தெரிந்து கொண்டீர்களா? அல்லது ஏதாவது எண் சாஸ்த்திரமா??

ஆத்திரத்தில் ஒரு தனிமனிதர் எடுக்கும் ஒரு தூரநோக்கற்ற முடிவு ஒரு முழு இனத்தினதும் இருப்பையே கேள்விக்குறியாக்கி, சிறிது சிறிதாக அந்த இனத்தினை இல்லாமல் செய்வதற்கு எப்படிக் காரணமாகியதென்பதற்கு நாம் ஒரு உதாரணம்.

என்ன முடிவு? சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவது என்று தந்தை செல்வா அவர்கள் எடுத்த முடிவா ??

இதில் வேதனை என்னவென்றால், 40,000 போராளிகளையும், 150,000 பொதுமக்களையும், உலகத் தமிழினத்தின் முழு நம்பிக்கையாகவிருந்த விடுதலைப் போராட்டத்தையும் காவுகொடுத்து நட்டாற்றில் நிற்கும் இன்றைய கைய்யறு நிலையிலும், 'இந்த முடிவு வரவேண்டும் என்றுதான் தலைவர் போராடினார், எமது போராட்டத்தின் நியாயங்களை உலகின் கண்களுக்கு காட்டிச் சென்றார், இதுதான் தலைவரின் தீர்க்கதரிசனமான ராஜதந்திரம்' என்று புலத்தில் சிலர் பாடிக்கொண்டு திரிவதுதான். இந்த நியாயத்தை தமது பிள்ளைகளையும் , சகோதரங்களையும் போராட்டத்தில் பலிகொடுத்த சொந்தங்களிடம் சென்று சொல்லிப் பாருங்கள், அப்போது புரியும்.

இப்படி பாடுகிறார்கள் என்று நீங்கள் ஒரு சிலர்தான் பாடி கொண்டு திரிகிறீர்கள்.

அட கடவுளே, ஈழத்தில் நடப்பது இனக்கொலைதான் என்பதில் மேற்குலகிற்கு சந்தேகம் எப்போதாவது இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆக, அவர்களுக்குத் தெரிந்த ஒரு விடயத்தை மீண்டும் ஒருமுறை தெரிவிப்பதற்காக நாம் அனைத்தையும் இழந்திருக்கிறோம். இதில் பெருமை வேற வேண்டிக்கிடக்கு !

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ignore option இருந்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
பேய்கதை பிசாசு கதை எழுதுபவர்களுக்கு அலாதியாய் இருக்கும்.
 
கருத்தாடல் செய்பவர்களுக்கு என்ன இருந்தால்  என்ன இல்லாவிட்டால் என்ன?
தமது கருத்தை எழுதி கொள்வார்கள். ஆதாரங்கள் ஊடாக.

திரு விக்கினேஸ்வரனின் சென்னை உரையை தொடர்பான கருத்தாடல் விடுலை புலிகளின் இராணுவ தோல்வி தொடர்பான கருத்தாடலாக மாற்றம் அடைந்து விட்டது. சுருக்கமாக சொன்னால் விடுதலை புலிகள் தமிழீழம் அமைப்பதில் உறுதியாக இருந்தது உண்மை. அவர்களது ஒவ்வொரு அசைவும் தமிழீழத்தை நோக்கியே இருந்தது என்பதுவும் உண்மைதான். ஆனால் அவர்களது ஒவ்வொரு அறிக்கைகளிலும் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை தராது. தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருப்பதே அவர்களது நோக்கம் என்பதாகவே இருந்ததது.  1987 ல் கைச்ச்சாத்திடபட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழ்மக்களுக்கான நீதியான தீர்வாகாது. அதில் உள்ள சரத்துக்கள் தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிபடுத்தபடவில்லை என்பதே விடுதலை புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. இன்று திரு விக்கினேஸ்வரனின் கூற்று அதை உறுதிபடுத்தி உள்ளது. ஆயுத போராட்டமோ அகிம்ஸை போராட்டமோ எதையும் ஸ்ரீலங்கா அரசு கணக்கிலெடுக்காது என்பதே இங்கு கவனிக்க படவேண்டிய உண்மை. 

தானே தமிழ் மக்களுக்காக எனக் கூறி ஏற்படுத்திய ஒப்பந்தம் இது. இதில் இந்திய அரசிற்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது. திரு விக்கினேஸ்வரனும் அதையே வலியுறுத்தினார்.  ஒப்பந்தம் உருவாக காலம் தொட்டு அதை பற்றி எப்போதும் பேசிவந்த இந்தியா, விடுதலை புலிகளை அழிக்க முழு இராணுவ உதவியும் செய்த இந்தியா புலிகள் அழிக்கபட்டவுடன் குறைந்த பட்சம் அதையாவது செய்திருக்க வேண்டும். அதற்காக சட்ட உரிமைகூட இந்தியாவிற்கு உண்டு. அதற்காக தமிழர் தரப்பில் போராடவேண்டிய அவசியம் கூட இல்லை. இந்த நிலையில் அவர்கள் அந்த ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்து ஒரு சிறிய முயற்சி கூட செய்யவில்லை. ஏனெனில் அவர்களை பொறுத்தவரை தமிழரின் போராடும் பலம் அழிக்கபட்டால் சரி. ( அவர்கள் புலிகளாக தான் இருந்திருக்க வேண்டுமென்பதில்லை என்பது கவனிக்கவேண்டிய விடயம்) இப்போது கூட திரு விக்கினேஸ்வரினின் இந்த முயற்சியை இந்திய அரசு கவனத்தில் கூட எடுக்காது என்பதே உண்மை.

Edited by tulpen

நீங்கள் சொல்வதுதான் உண்மை.
ஆனால் 
 
ஆவி கதை எழுதுபவர்கள் ............... வேறு மாதிரி சொல்கிறார்கள்.
இந்தியா ஈழம் சுட்டு தரும் எல்லோரும் அப்படியே பிச்சு சாப்பிடலாம் என்று.
  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன வேடிக்கை என்றால், இங்கு 4 பேர் பகிடிக்குக் கேள்வி கேட்க அவரும் ஏதோ அரசியல் விமர்சகர் போலப் பிச்சு உதறுகின்றார் என்றது தான்..

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன வேடிக்கை என்றால், இங்கு 4 பேர் பகிடிக்குக் கேள்வி கேட்க அவரும் ஏதோ அரசியல் விமர்சகர் போலப் பிச்சு உதறுகின்றார் என்றது தான்..

நல்லா home work செய்திட்டு வந்து நஞ்சேற்றுகிறார் ஆமா இந்த ஆத்திர அவசர கதைகளை மே 18 உடனேயே விட்டுருக்கலாமே? நடந்த விடயங்களை விட்டு நடக்க வேண்டிய விடயங்களை பற்றி கதைப்பவன் தான் அறிவாளி அதை விட்டு இந்த மதிக்கபடவேண்டிய போரளிகளையோ தலைவர்கள் மீதோ சேறடிப்பு ஒன்றே பிரதானமாய் கொண்டு கருத்துகளத்தில் சுழல்வதன் மர்மம் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. இப்ப கூட சீவி யை சந்திக்க மத்தியில் யாரும் தயாரில்லை என்பது கண்கூடு.

ஆனால் இது ஒரு நல்ல ஆரம்பம். எமது எல்லை மீறிய வன்முறையை சீவி நியாப்படுத்தாவிடினும், ஏன் ஆயுத கிளர்ச்சி வெடித்தது என்று நன்கு புரியவைத்தார்.

இது டெல்லியின் கொள்கை வகுப்பாளரை போக சேருமா? கொள்கை மாற்றம் வருமா? தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், human security, மக்கள் இறைமை அடிப்படயில் ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு உழைக்க நாம் தயார் என்று சீவீ கோடிட்டு காட்டியுள்ளார்.
ஜனநாயகம் என்பது முழு இலங்கையிலும் தேவை படுவதை காட்டியுள்ளார்.

இது வரை தமிழ் தலைவர்கள் எல்லாம் வரலாற்றின் அநியாயங்களை சொல்லி அழுதே போனார்கள். பிரபா ஒருவர் தான் இந்த அநியாயத்துக்கு தனி நாடு தீர்வு என்று அழுத்தம் திருத்த்கமாக சொன்னவர். ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை.

இப்போ அதே பாணியில் சமஸ்டியே தீர்வு என்று அழுத்தம் திருத்த மாக சீவி சொல்கிறார். பார்க்கலாம்.

புலிகளை தவிர்த்து இந்த விடயத்தை கதைக்க முடியாது துல்பென்ஸ். புலிகள் இந்த போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தியது போல் யாரும் செய்யவிலை.
அவர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தப் போராட்டம் ஒரிய பழங்குடி போராட்டம் போல 1000 இல் 1 ஆய்ப்போயிருக்கும். வரலாற்றில்
அவர்களுக்குரிய இடத்தை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் அவர்களும் சில இமாலயத்தவறுகள் விட்டார்கள். அதில் ஒன்றுதான் தனி நாட்டை விடாமல் கட்டிப்பிடித்தது.
இதை சொன்னால் எதோ பிரபாகரின் மச்சான் மாரி சில பேர் வரிந்து கொண்டு வந்து அவதூறு செய்வார்கள். இந்த மாதிரியானவர்களின் முட்டாள் தனமான, மொக்குப் புத்தி ஆலோசனைகள் இல்லாமல் இருந்திருந்தால், புலிகள் சில முடிவுகளை நிதானமாக எடுத்திருக்க கூடும்.

புலிகள் மீது அவர்கள் சாதித்தவை மீது எனக்கு ஒரு போதும் காழ்ப்புணர்வு இல்லை. ஆனால் சில விடயங்களை அவர்கள் வேறு மாதிரியாக கையாண்டிருந்தால் இப்போதய கையறு நிலை வந்திராது.

புலிகளை இந்த நிலைக்கு தள்ளி விட்டதில், யோகி, திருநாவுக்கரசு, இன்னும் சில மோட்டு ஆலோசகர்களின் (------) பங்கு ஆய்வுக்குரியது.

பிரபாவின் கைகளை கட்டியவர்களில் கேபி, கருணாவுக்கு நிகரான பங்கு இந்த ---------- இருக்கிறது.

Edited by நிழலி
சீண்டும் கருத்துகள் நீக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரை தமிழ் தலைவர்கள் எல்லாம் வரலாற்றின் அநியாயங்களை சொல்லி அழுதே போனார்கள். பிரபா ஒருவர் தான் இந்த அநியாயத்துக்கு தனி நாடு தீர்வு என்று அழுத்தம் திருத்த்கமாக சொன்னவர். ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை.

இப்போ அதே பாணியில் சமஸ்டியே தீர்வு என்று அழுத்தம் திருத்த மாக சீவி சொல்கிறார்.

Boss I can't understand you. Are you kidding us? In other reply, you mentioned that you could find 1000 differences between what Prabha did and what CVW talked there. Now you are saying both are same. Are you confused or want to confuse us?

I could find only one difference, that guy did something and explained everything in Tamil but this guy is doing something and explains in English.

இதைப் படித்துவிட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Volcano,

இசைக்கு கிச்சு கிச்சு மூட்டியது போதும் இப்ப நான் சொல்றத கேளுங்கள்.

Piraba and CV are both saying the same thing when they describe the history of Tamils in Sri Lanka. They both correctly point out that since independence SL has been run by majoritarianism as opposed to genuine democracy. However where they differ hugely and this is a difference of Himalayan proportions,is in advocating a solution to this lack of democracy crisis. Whilst Pirabaharan advocated dismemberment of the country as a solution, CV is advocating a reform on federal basis.

The gap between the two solutions is indeed unbridgeable. The two solutions are, poles apart.

சிவியும் பிரபாவும் ஒரே நோயை பற்றித்தான் கதைக்கிறார்கள். ஒரே பாணியில்தான் (manner) கதைக்கிறார்கள். ஆனால் இருவரும் முன்வைக்கும் மருந்து இரு துருவங்களை ஒப்ப எதிரெதிரானது.

இப்போ மறுபடியும் நான் மேலே எழுதியதை வாசித்துப் பாருங்கள் விளங்கக் கூடும்.

எங்களுக்கு விளங்காட்டி, மற்றவரைப் பார்த்து ஆர் யூ கன்பியூஸ்ட் எண்டு மட்டும் வக்கணையா கேட்போம் :)

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு விசயம் 1000 வித்தியாசம் என்று சொன்னது ஒரு figure of speech. தமிழில் சொலவாடை என்பார்கள். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதை குறிக்கும்.

இதை கூட புரிந்து கொள்ள முடியாமல் 3 இங்கே இருக்கு மீதி 997 எங்கே எண்டு கவுண்டர் ரேஞ்சுக்கு காமெடி பண்ணினா என்ன செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I'm clear sir, no more doubt. One disease with 2 different treatments. One was bad and other one is excellent. Hope patient will survive to have some learning experience to treat other people.

Any how in my opinion both of them are good doctors because they did diagnosed the disease correctly. Please give some credit to both.

Escape...

தமிழ் தமிழ் தமிழ்.... தமிழில் உரையாடவும் எரிமலை.

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. இப்ப கூட சீவி யை சந்திக்க மத்தியில் யாரும் தயாரில்லை என்பது கண்கூடு.

ஆனால் இது ஒரு நல்ல ஆரம்பம். எமது எல்லை மீறிய வன்முறையை சீவி நியாப்படுத்தாவிடினும், ஏன் ஆயுத கிளர்ச்சி வெடித்தது என்று நன்கு புரியவைத்தார்.

இது டெல்லியின் கொள்கை வகுப்பாளரை போக சேருமா? கொள்கை மாற்றம் வருமா? தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், human security, மக்கள் இறைமை அடிப்படயில் ஒன்று பட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வுக்கு உழைக்க நாம் தயார் என்று சீவீ கோடிட்டு காட்டியுள்ளார்.

ஜனநாயகம் என்பது முழு இலங்கையிலும் தேவை படுவதை காட்டியுள்ளார்.

இது வரை தமிழ் தலைவர்கள் எல்லாம் வரலாற்றின் அநியாயங்களை சொல்லி அழுதே போனார்கள். பிரபா ஒருவர் தான் இந்த அநியாயத்துக்கு தனி நாடு தீர்வு என்று அழுத்தம் திருத்த்கமாக சொன்னவர். ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை.

இப்போ அதே பாணியில் சமஸ்டியே தீர்வு என்று அழுத்தம் திருத்த மாக சீவி சொல்கிறார். பார்க்கலாம்.

புலிகளை தவிர்த்து இந்த விடயத்தை கதைக்க முடியாது துல்பென்ஸ். புலிகள் இந்த போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தியது போல் யாரும் செய்யவிலை.

அவர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தப் போராட்டம் ஒரிய பழங்குடி போராட்டம் போல 1000 இல் 1 ஆய்ப்போயிருக்கும். வரலாற்றில்

அவர்களுக்குரிய இடத்தை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் அவர்களும் சில இமாலயத்தவறுகள் விட்டார்கள். அதில் ஒன்றுதான் தனி நாட்டை விடாமல் கட்டிப்பிடித்தது.

இதை சொன்னால் எதோ பிரபாகரின் மச்சான் மாரி சில பேர் வரிந்து கொண்டு வந்து அவதூறு செய்வார்கள். இந்த மாதிரியானவர்களின் முட்டாள் தனமான, மொக்குப் புத்தி ஆலோசனைகள் இல்லாமல் இருந்திருந்தால், புலிகள் சில முடிவுகளை நிதானமாக எடுத்திருக்க கூடும்.

புலிகள் மீது அவர்கள் சாதித்தவை மீது எனக்கு ஒரு போதும் காழ்ப்புணர்வு இல்லை. ஆனால் சில விடயங்களை அவர்கள் வேறு மாதிரியாக கையாண்டிருந்தால் இப்போதய கையறு நிலை வந்திராது.

புலிகளை இந்த நிலைக்கு தள்ளி விட்டதில், யோகி, திருநாவுக்கரசு, இன்னும் சில மோட்டு ஆலோசகர்களின் (------) பங்கு ஆய்வுக்குரியது.

பிரபாவின் கைகளை கட்டியவர்களில் கேபி, கருணாவுக்கு நிகரான பங்கு இந்த ---------- இருக்கிறது.

திரும்ப திரும்ப மூக்கை நுழைக்க வேண்டியுள்ளது .....
 
தமிழ் எழுதி வசிக்க தெரிந்தவர்களுக்கே 30 வருடம் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஒரு மாயைக்குள் கிடக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சிங்கள இந்திய பாசிச பிரச்சாரங்களை எதிர்கொண்டு போராடிய புலிகளின் நிலை எப்படி இருந்திருக்கும்? 
இதை வைத்துதான் அரசியல் தளத்தில் என்ன நடந்தது என்பதை அறிய முடியும்.
இதே திரியிலேயே நான் திம்பு உடன்படிக்கையை போட்டிருக்கிறேன். 1985 இலேயே புலிகள் தனிநாட்டை விட்டு விட்டு  அரசியல் தீர்வு ஒன்றிற்கு தயார் என்றே சொல்லிவந்தார்கள். 1987இல் ஆயுத போராட்டத்தை கைவிட்டு  அகிம்சைவழி   போராட்டத்தை கூட செய்தார்கள்.
தமிழ் ஈழம் தான் தமிழர்களுக்கு ஒரேவழி   என்றுதான் சொல்லி வந்தார்கள்.
எமது எதிரி யார் என்பதுதான்? எமது தேவையை (போராட்டத்தை) நிர்ணயிக்கிறது.
சி. வி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதில் ஒன்றும் இல்லை ............. அந்த பேச்சால் ஏதும் ஆகுமா என்பதுதான்  தமிழர்களுக்கு தேவையானது. 
"பயங்கரவாத தடை போட்டு வட மாகாண சபைகூட கலைப்பார்கள்" 
இதைதான் புலிகளும் சொல்லிவந்தார்கள். வாக்கியங்கள் வேறு ... வடிவங்கள் வேறு. விடயம் என்பது ஒன்றுதான்.
ஆனால் அரசியல் தீர்வு ஒன்றுதான் விடுதலையை வழி வகுக்கும் இதில் நேர்மையுடன் செயலாற்ற கூடிய  மூன்றாம் தரப்பு ஒன்று வந்தால் அது சாத்தியம் என்று செயல்பட்டார்கள்.
 
திம்பு தொடங்கி ..... ஜெனிவா வரை புலிகள் வைத்த உடன்படிக்கை எழுத்துவடிவில் இருக்கிறது. தலைவர் பிரபாகரன்  கையெழுத்துடன் இணையத்தில் இருக்கிறது.
 
திரும்ப திரும்ப இவர்கள் ஆவி கதை சொல்லிவருகிறார்கள்.
பேய்கதைக்குள் போனால்தான் இவர்களது வாதத்தை தக்க வைக்க முடியும் என்பதுதான் இதில் உண்மை. அது எல்லோருக்கும் தெரியும்.
நடந்தவை எல்லாம் வெளிச்சமாகவே இருக்கிறது. 
 
(சிங் சாக்கா தட்டி வந்தவர் முதலாம் பக்கத்துடனேயே ஓடிவிட்டார். இன்னொரு திரி திறக்கும்போது  மீண்டும்  ஒரு பேய் கதையுடன் வருவார். உண்மை பேச துணிந்தால் கருத்துக்களுக்கு பதில் கொடுக்க  முடியும். அங்கிருந்தே ஓட்டம் எடுக்கும்போதே தெரிகிறது வண்டவாளம்)  

Edited by Maruthankerny

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.