Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுவெடிப்பில் 100ற்கு மேற்பட்ட படையினர் பலி ??

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.......

அடியேனுக்கு தெரிகிறது...... இந்தக் கிபிரும் சூரன் எடுத்த ஒரு அவதாரமெண்டு!!!!!! இப்படி கன சூரனின் மாறுபட்ட தலை வெட்டுக்கள் இனி இருக்கும்!!!!!... சூரன்போரல்லோ!!!!!!

ரோகரா....... :lol::lol::lol:

  • Replies 62
  • Views 15.2k
  • Created
  • Last Reply
அனுராதபுரத்தில் பயணிகள் பஸ்மீது தாக்குதல் நடத்தியதை விடுதலைப் புலிகள் மறுத்திருந்த போதும் விடுதலைப் புலிகளே அத்தாக்குதலை நடத்தியதாக கண்காணிப்புக்குழு கூறியது. குறித்த தாக்குதலில் தமிழூடங்களும் புலிகள் மறுத்ததை முக்கியம் கொடுத்து வெளியிட்ட போதும் புலிகளின் மீதான குற்றச்சாட்டை மாற்ற முடியவில்லை. கதிர்காமர் கொலை, கொழும்பில் பாகிஸ்தானிய உயர்தானியரின் வாகனத்தொடரணி மீதான தாக்குதல் என்று விடுதலைப் புலிகள் பகிரங்க மறுப்புத் தெரிவித்த தாக்குதல்களில் எல்லாம் புலிகள் சம்பந்தப்படுத்தப்பட்டதையும
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நான் மறுப்பதற்கில்லை: இ.இளந்திரையன்

[திங்கட்கிழமை, 16 ஒக்ரொபர் 2006, 19:05 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து நடத்துகின்ற போது போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் மீது இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகளை நான் மறுப்பதற்கில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

ஹபரணை தாக்குதல் தொடர்பாக இ.இளந்திரையனிடம் "புதினம்" செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

சிறிலங்கா இராணுவமானது தனது இலக்குகளை பல கிலோ மீற்றர்களுக்கு அப்பால் தெரிவு செய்கின்ற போது அந்த இலக்குகளில் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

சம்பூர், மூதூரில் தாக்குதல்களை உதாரணமாகக் கொள்ளலாம்.

இன்று திங்கட்கிழமை கூட மாலை 5.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் செறிவான தாக்குதலை பொதுமக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் தொடர்ச்சியான தாக்குதலை சிறிலங்கா இராணுவம் நடத்தியிருக்கிறது.

இப்படியான நிலையில் மக்களைப் பாதுகாக்க வேண்டியதும் வலுச்சமநிலையை பேண வேண்டியதுமான நிலை எங்களுக்கு உள்ளது.

ஆகவே போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நான் மறுப்பதற்கில்லை.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களுக்காக திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதியை தொடர்பு கொண்டிருக்கிறோம் என்றார் இ.இளந்திரையன்.

http://www.eelampage.com/?cn=29336

என்ன குறுக்காலை போவாருக்கு அசடு வழியுதோ?....இளந்திரையனே சொல்லீட்டார் பிறகென்ன.!

சரி ஒரு பேச்சுக்கு அரசாங்கம்தான் செய்தாலும் அவன் நேவிக்கே வைப்பான்...?...இதைவிட சனத்துக்கு வைச்சா இன்னும் அனுதாபம் கிடைக்குமே...!

எனி நேரடியாகவே ஒத்துக் கொள்ளலாம்...சர்வதேசம் எந்த முகத்தோட கண்டிக்கப்போறான்...?

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம், கடற்படை கொல்லப்படுவது புலிகளுக்கோ, தமிழர்களுக்கோ புதிதாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. கிபிர், டோரா என்று எல்லால் அடிக்கும். உலகநாடுகள் பின்பக்கத்தால் ஆயுத உதவிகளைத் தொடர்ந்து செய்யும். எனவே சிங்கள அரசபடைகள் இன்னும் அழிவைச் சந்தித்தால்தான் இராணுவ வலுச்சமநிலை மீண்டும் உறுதியாகும்.

பி.கு. ஈழவன் குறுக்ஸைக் கலைத்துக் கலைத்துத் தாக்குவது மாதிரித் தெரியுது.. :?:

விமான குண்டுவீச்சு நடக்கேக்கை கண்டிக்காத எவருக்கும் இதைக் கண்டிக்க உரிமையில்லை.

கண்காணிப்புக் குழுவுக்கு மாத்திரம் கொஞ்சம் excuse கொடுக்கலாம், அதுவும் மெல்லமாகத்தான் கண்டிக்க வேணும் கண்டியளோ. அது அவையின்ரை தொழில்தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முறை, இதை யார் செய்தால் என்ன, எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மூதூர் படுகொலைகளின் போது நான் திருமலையில் இருந்தேன். இவங்கள் செய்த அட்டூழியம்!!! கடலில் இருந்து கொண்டு எவ்வளவு அட்டகாசம் பண்ணினாங்க! எத்தனை கொலைகளை பண்ணினாங்க! இவங்கள் கொண்டுவந்த ஆயுதங்களே இவங்களுக்கு யமனாகின! சீனவெடி வெடிச்சமாதிரி ஒவ்வொரு பஸ்ஸா வெடிச்சுதாம்! இவங்களை கொல்ல புலிகளே தேவை இல்லை! அங்கே தம் உறவுகளை இழந்த எத்தனை பேர், இவனுகளைக் கொல்ல தயாராக இருந்தார்கள் தெரியுமா? செஞ்சோலைக் கடன் என்று ஒன்றும் இருக்கா இல்லையா?

அமரிக்கனும், சப்பானும் போய் வட கொரியாவில் வாய் சப்பட்டும்! எங்களைப் பயங்கரவாதிகளாக கருதும் இவனுகளுக்கு நாம் எதிரிக்கு இரத்ததானம் செய்தாலும், எம்மை அதே பட்டியலில்தான் வைத்திருப்பார்கள். இப்படி பயமுறுத்தி, பயமுறுத்தி எம்மை செல்லாக் காசாக்கி விடப்பார்க்கிறார்கள். தமிழீழத்தை இரண்டாக பிரிக்க முதலாவது சதி வெற்றி!

இனி யுத்தத்தை சிங்களவனுடைய படுக்கை அறைக்கு எடுத்து சென்றால்தான், இந்த சிங்கள அரசு அடங்கும்! வடகொரியாவின் அசட்டுத் தைரியம் எமக்கு ஓர் உதாரணம்

விழுந்த கிபீர் அவனுடைய மண்டைகளிலாவது விழுந்ததா? அட கிபீரே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்காணிப்புக்குழு சிங்கள அரசையொ அல்லது இராணுவத்தை கண்டித்தாலும் கண்டிக்கவிடாலும், புலிகளை என்றும் கண்டிக்க தவறியதில்லை! :evil: இதுதான் இவர்களின் நடுநிலமைப்போக்கு... :roll:

இராணுவம் ஆயுதத்தோட இருந்தா என்ன இல்லாட்டா என்ன அது இராணுவம் தான். வடகிழக்கில தமிழ்ச்சனம் என்ன ஆயுதம் வைச்சிருக்கிறதாலயா கொல்லுகிறான் படுபாவி. அது போலத்தான் இதுவும். நீ யுனிபோம் உடுத்தா என்ன உடுக்காட்டா என்ன அவன் ஆமிக்காரன் தான். அவன் அழியத் தான் வேண்டும். ஸ்கோர் நூரையும் தாண்டிவிட்டதாம். மகிந்தண்ணா ஏறின கீபிரே விழுந்தது.

ஈழத்திலிருந்து

ஐhனா

Janarthanan எழுதியது:

''மகிந்தண்ணா ஏறின கீபிரே விழுந்தது.''

வேறு ஒரு களத்தில் ஒரு சிங்களவர் பட்ட கவலை.....கீழே உள்ளது

...

....Mahinda`s bad luck for kfir...all these days there was no problem..mahinda sat on the kfir control then this happens...may be he changed some settings..obviously he has no idea of flying....

எல்லாரும் வெளிநாட்டிலை இருந்து கொண்டு நல்லா கதைக்கிறீயள் சென்ற ஏப்பிரல் மாதம் தம்பலகாமத்தில் 10 நேவி கிளைமோரில் செத்ததுக்குத்தான் திருமலையில் செட்டப் பண்ணி ஒரு இனக்கலவரம் உருவாகினது இப்ப 100க்கு மேலை என்ன நடக்குப்போகுதோ எண்டு இஞ்சை இருக்கிற எங்களுக்கு குலைப்பன் அடிக்குது இருந்தாலும் பயத்திலும் ஒரு சந்தோஷம் ...............எதுக்கெண்டு விளங்கும்தானே...........இதையார் செய்தது என்பது பிரச்சனையில்லை செய்தது அரசாங்கமாக இருந்தாலும் இந்த வகையிலையாவது ஒரு இனஒழிப்பு கும்பலை அழித்ததுக்கு நன்றி சொல்லவேணும்

பாக்கப்போனால் இந்த மாதம் ஒரு 1000க்குமேலை பாதுகாப்பு சேவையிலை இருந்து ஓய்வு எடுத்திருக்கினம்......................????

மோட்டு சிங்களவனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று எமது ஊடகங்களிற்கும் சில "உணர்வாளர்களிற்கும்" உண்டு. இக்பால் அத்தாஸ் கைய்யும் களவுமாக பிடிபட்ட வலிந்த தாக்குதலை 3 நாட்களிற்கு பின்னரும் விபரித்த விதம்:

"For many days from last week, Security Forces have been directing artillery and mortar fire from their defended localities that straddle the one time Entry-Exit point at Muhamalai towards Tiger guerrilla positions. By hindsight, it became clear this was to soften up guerrilla targets. I cannot comment on whether the Security Forces offensive was prompted by guerrilla build-ups and attacks."

ஆனால் நீங்கள் ஒரு குண்டு வெடிப்பை நடந்த 1 மணத்தியாலத்திற்குள் விபரிப்பதில் காட்டும் ஆராவாரமும் அங்கலாய்பும். :roll:

புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் சொன்னது வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் சிறீலங்கா இராணுவ நிலைகள் நியாயமான தாக்குதலுக்கு உட்படுத்த கூடியவை என்பதே அன்றி இந்த தாக்குதல் தம்மால் நடத்தப்பட்டது என்று அல்ல. அதே நேரம் சிறீலங்காவின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் சுட்டிக்காட்டப்பட்டது. முக்கியமாக தற்கொலைத்தாக்குதலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கண்ணை மூடிக் கொண்டு மறுப்பது புலிகளின் வழமையான பாணி என்று சர்வதேச ஊடகங்கள் அமைப்புகள் கூறுவது ஒரு வழமையாகி விட்டது. எனவே இதை சரியாக புலிகள் கையாழுகிறார்கள்.

முல்லைத்தீவு விமான தாக்குதல்களை BBC விபரித்தது rebels allege SLAF bomed an orphanage என்று. ஆனால் எமது ஊடகங்கள் தற்கொலைத்தாக்குதல் என்று சிறீலங்கா "குற்றம் சாட்டுகிறது" என்று கூட இல்லாமல் தலையங்கத்திலே "தற்கொலைத் தாக்குதலில்..." என்று விளாசுகிறார்கள். அதாவது சிறீலங்கா இராணுவ பேச்சாளர் சொல்லுவதை முழுமையாக நம்பி.

முகமாலை போர்களத்தில் மரபுவழிச்சமரில் தமது பலத்தை புலிகள் சிறீலங்கா இராணுவத்திற்கும் சர்வதேசத்திற்கும் சந்தேகங்களிற்கு இடம் இன்றி நிரூபித்துவிட்டார்கள். அதன் அரசியல் இராஜதந்திர தாக்கத்தை முழுமையாக கண்டு கொள்ளாமல் அறுவடை செய்யாமல் எந்தவொரு ஒரு கவனஈர்ப்பிலும் ஈடுபட வேண்டிய நிலையில் நிர்ப்பந்தத்தில் தற்பொழுது புலிகள் இல்லை. முக்கியமாக இணைத்தலமை நாடுகளின் பிரதிநிதிகள் விழுந்தடித்து வந்ததே வந்து கொண்டிருப்பதே முகமாலை சமரின் எதிரொலி. அந்த எதிரொலிகள் புலிகளிற்கு சாதகமான பலமான நிலையில் இருந்துதான் பார்க்கப்பட வேண்டியது. எனவே வேறு ஒரு "வரலாற்றில் காணமுடியாத" ஒரு தாக்குதலை இந்த காலகட்டத்தில் புலிகள் நடத்த தேவையில்லை. இப்படியான ஒரு தாக்குதல் மரபுவழி சமர்களில் தோல்விகளை கண்ட ஒரு பலவீனமான தரப்பு பாழிவாங்க செய்த தாக்குதல் போன்றது. உதாரணத்திற்கு ஈராக்கில் தற்காலத்தில் நடப்பது மற்றும் 1983 பெய்றூட்டில் நடந்தது போன்ற ஒற்றுமையை காட்டி பிரச்சாரம் செய்ய அனுதாபம் தேட செய்யப்பட்டிருக்கிறது.

சிறீலங்காவும் எதிர்பார்த்தது போன்று உலக முன்னணி ஊடகங்களில் விடையம் தலையங்கத்தை பிடித்துவிட்டது. அதில் சிலர் 20 வருட உள்நாட்டு யுத்தத்தில் நடந்த மோசமான தற்கொலைத்தாக்குதல் என்று வருணிக்கிறார்கள். சிறீலங்கா இதை cold blooded massacare என்று வருணிக்கிறது.

துள்ளி குதிக்கிறவை சேம்சைட் கோல் போடாமல் பாத்துக் கொள்ளுங்கோ. :!:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா எதுக்கு எடுத்தாலும் மோதிக்கொள்கிறீர்கள் :?: காலம் கனியும் போது நாம் கடுமையாக கருத்தாடலமோ.நன்பர்களே கொஞ்சம் சிந்திக்கலமே.நன்றி. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குறுக்ஸ்.

நல்லதொரு விளக்கம்.

தீபாவளி தொடங்கி விட்டது .........போல உள்ளது. பட்டாசும்வெடிக்கத் தொடங்கி விட்டது............................... கொண்டாடுவோம்....................... :lol::lol::lol: :!:

இராணுவம், கடற்படை கொல்லப்படுவது புலிகளுக்கோ, தமிழர்களுக்கோ புதிதாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. கிபிர், டோரா என்று எல்லால் அடிக்கும். உலகநாடுகள் பின்பக்கத்தால் ஆயுத உதவிகளைத் தொடர்ந்து செய்யும். எனவே சிங்கள அரசபடைகள் இன்னும் அழிவைச் சந்தித்தால்தான் இராணுவ வலுச்சமநிலை மீண்டும் உறுதியாகும்.

பி.கு. ஈழவன் குறுக்ஸைக் கலைத்துக் கலைத்துத் தாக்குவது மாதிரித் தெரியுது.. :?:

இல்லை கிருபன் சிலர் அடுத்தவனை மடையன் எண்டு நினைத்து கருத்து எழுதக்கூடாது என்ன யோசிக்காமலா இத்தாக்குதலை செய்திருப்பார்கள் இல்லையே ஏதோஒ இராணுவகாரணம் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீபாவளி தொடங்கி விட்டது .........போல உள்ளது. பட்டாசும்வெடிக்கத் தொடங்கி விட்டது............................... கொண்டாடுவோம்

ஓம் கொண்டாடுங்கள்... கருத்துக்களத்தில மட்டும் கொண்டாடுங்க கருத்தை செயல்ல செய்ய முயற்ச்சிக்காதீங்க

வெற்றி பெற்று தந்து விட்டு வீழ்ந்து விட்ட வீரர்களை நினைவிருக்கிறதா? மகிழுங்கள் மனதார! நினையுங்கள் மாவீரரை நெஞ்சார

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படை தொடரணி மீது பாரிய தாக்குதல்

இன்று பிற்பகல் 1.45 மணியளவில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள திகம்பத்தனை என்ற இடத்தில் வைத்து சிறிலங்கா கடற்படை தொடரணி மீது பாரிய குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 100இற்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டனர். 340 கடற்படையிருடன் கூடிய 24 பேருந்துகளில் 13 பேருந்துகள் இத் தாக்குதலில் சிக்கி சிதறின.

சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பு 102 கடற்படையினர் பலியாகி உள்ளதாகவும் 150இற்கு மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடற்படையினர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இருந்து வெளிவருகின்ற செய்திகளின்படி 150 கடற்படையினர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும், இதை விடுதலைப்புலிகளே நடத்தி இருக்க வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு கூறி உள்ளது.

இத் தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தாக்குதல் நடந்த திகம்பத்தனை என்ற பகுதி திருகோணமலை இராணுவ தளங்களுக்கு செல்லுகின்ற படையணிகளும், அங்கிருந்து வருகின்ற படையணிகளும் தரித்து நின்று இளைப்பாறி செல்லுகின்ற இடமாக உள்ளது. சம்பவம் நடந்த பொழுது திருகோணமலை கடற்படைத் தளத்தில் இருந்து விடுமுறையில் சென்றுகொண்டிருந்த ஒரு கடற்படைத் தொடரணியோடு திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு சென்றுகொண்டிருந்த கடற்படையினரின் ஒரு தொடரணியும் அங்கு நின்றுள்ளன. அப்பொழுதே குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு பாரவூர்த்தி இக் கடற்படைத் தொடரணிகள் மீது மோதியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்படையினரின் உடல்கள் பல மீற்றர்கள் தொலைவு வரை தூக்கி வீசப்பட்டுக் கிடப்பதாகவும் அச் செய்திகள் கூறுகின்றன.

navyblastly3.jpg

இத் தாக்குதல் தமிழீழத்திற்கு அப்பால் பொலநறுவை மாவட்டத்தையும் தாண்டி மாத்தளை மாவட்டத்தில் நடந்துள்ளதானது சிறிலங்கா அரசை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இத்தனை தூரத்தில் ஒரு பாரிய குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதானது, "யுத்தம் சிறிலங்கா முழுவதும் நடக்கும்" என்னும் எதிர்வுகூறலை உறுதிப்படுத்தி உள்ளது.

ஒரே தடவையில் மிக அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். இது சிறிலங்கா அரசு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்டோரையும் சேர்த்து கடந்த 10 நாட்களுக்குள் 450இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும், 900இற்கும் மேற்பட்ட படையினர் காயம் அடைந்தும் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று சிறிலங்காவின் இனவாத உச்ச நீதிமன்றம் வடக்கு கிழக்கு இணைப்பு சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்திருந்தது. இத் தீர்ப்பு வந்த நாளில் இந்தத் தாக்குதல் நடைபெற்று இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

-வெப்பிளம்

அவுஸ்திரேலியா பத்திரிகையான herald sun இல் இச்செய்தி வந்துல்ளது

http://www.news.com.au/heraldsun/story/0,2...170-663,00.html

  • கருத்துக்கள உறவுகள்

................... என்ன யோசிக்காமலா இத்தாக்குதலை செய்திருப்பார்கள் இல்லையே ஏதோஒ இராணுவகாரணம் இருக்கும்.

இராணுவக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அரசியல் காரணங்களையும் சிந்தித்து பதில் அளிப்பது தானே நல்லது. எதிரி, இவ்வாறு நடக்கின்றபோதும், ஆயுதம் தரிக்காத இராணுவத்தினர் என்று அழுத்தமாக உச்சரிக்கின்றான். குட்டு உடைபட்டது வேறு விடயம். ஆனால் அவன் அரசியல்ரீதியான சிந்தனையோடும் செய்கின்றான்.

எந்த விடயத்திலும், புலிகளின் பலத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் தான், வெற்றிகளை யார் செய்தார்கள் என்று உறுதி செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கியிருப்பதாகப்படுகின்ற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகமாலை தோல்வியிலிருந்து உலகத்தை திசைதிருப்ப நடந்த உள்வீட்டுச்சதியாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்க்களத்தில் நடக்கும் விவாதங்களை யாராவது பொருட்டாக மதிக்கிறார்களா என்று தெரியவில்லை.

அப்படி மதித்தால், இங்கு கடுமையான மட்டுறுத்தல் ஏற்பாட்டைச் செய்ய வேண்டியது கட்டாயம்.

ஆனால் என்னைப்பொறுத்தவரை, அதற்கான தேவையில்லையென்றே நினைக்கிறேன்.

செய்தியை வெளியிடும் முறைபற்றிய குறுக்கால போவானின் கருத்தோடு முற்றாக ஒத்துப்போகிறேன்.

இவர்களின் முந்திரிக்கொட்டைத் தன்மை பாதகங்களைக் கொண்டுவரும்.

ஏற்கனவே செய்தித்துறையால் சில சிக்கல்கள் வந்துள்ளன.

ஒரேயொரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

மூதூரில் தொண்டுநிறுவனத்தினர் மீதான தாக்குதலைச் செய்தது அரசபடைதான் என்று நிறுவுவதற்கு முன்னாள் கண்காணிப்பாளர் சொல்லிய ஆதாரம், அரசபடை தமது கட்டுப்பாட்டில்தான் மூதூர் இருப்பதாகச் சொல்லிய திகதிகள்.

உண்மையில் இந்த விசயத்தில் தெய்வாதீனமாகத் தப்பித்தோம் என்றுதான் நினைக்கிறேன்.

சகட்டு மேனிக்கு செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்த எங்கள் செய்தித்தளங்கள் அந்த விசயத்தில் மட்டும் சரியாக நடந்துகொண்டன.

இவர்களும் ஏட்டிக்குப்போட்டியாக தவறான செய்திகளைச் சொல்லியிருந்தால் - மூதூர் யார்கட்டுப்பாட்டில் என்ற விசயத்தில் புளுகியிருந்தால், நிலைமையே வேறு.

ஆனாலும் புலிகளின் அதிகாரபூர்வ தளமாக வெளிநாட்டுச் சக்திகளாற் கருதப்படும் - மேற்கோள் காட்டப்படும் குறிப்பிட்ட ஊடகமொன்று தான்தோன்றித்தனமான முறையில் செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிட்டுக்கொண்டிருப்பது தமிழ்த்தேசியப் போராட்டத்தின் மிகமுக்கிய பின்னடைவு. ஒருநாள் அவ்வூடகத்தால் மிகப்பெரும் சிக்கலை எதிர்கொள்வோம் என்ற பயம் எனக்குண்டு.

(இதற்கு இன்னுமோர் உதாரணம். யாழ்க்களத்தில் நல்லவன் வெளியிட்ட அக்பர் பற்றிய கட்டுரையை நிதர்சனம் போட்டு அதிலுள்ள தகவல்கள் எப்படி டி.பி.எஸ் ஜெயராச் வாயிலாக உலகம்முழுவதும் போனது என்று பார்த்தால் புரியும். நல்லவனின் கட்டுரையில் ஏதாவது தகவற்பிழைகள் இருந்திருந்தால் அவையும் உலகம் முழுவதும் இதேவழியில் சென்றிருக்கும். இது இந்த இடத்தில் முழுமையாகச் சம்பந்தப்படாததால் விட்டுவிடுகிறேன்)

இந்த ஹபரணைச் சம்பவத்திலும் எங்கள் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்திருக்க வேண்டும். எடுத்த வீச்சுக்கு தற்கொலைத்தாக்குதல் என்றும் - அதற்குள் சிறப்பாக "தற்கொடை" என்றும் சிலர் (தாக்குதல் நடத்தியவரை மரியாதை செய்யினமாம்) - எழுதுவது வீங்கின வேலை.

புலிகள் உரிமை கோருகிறார்களோ இல்லையோ என்பதல்ல இங்குப் பிரச்சினை.

அவர்கள் உரிமைகோரும் வரையாவது இந்த முந்திரிக்கொட்டைகளால் பொறுக்க முடியாதா?

கட்டுநாயக்கா தாக்குதலை உரிமைகோர எவ்வளவு நாள் சென்றது?

இதிலே குறுக்கால போவானை மடக்குவது மட்டும்தான் சிலருக்கப் பெரிய விசயமாப்படுது. அதைத்தாண்டி யோசிக்கிறதுக்கு முடியேல.

சரி, விவாதப்படி பார்த்தாற்கூட, இது தற்கொலைத்தாக்கதல் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? வெடிமருந்து வாகனம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவ்வளவுதான். இதற்குள் "மோதி" வெடித்தது, "இடித்து" வெடித்தது என்று தங்கள் கற்பனைகளைக் கட்டி செய்தி புனைந்திருக்கிறார்கள் எங்கள் செய்தியாளர்கள்.

ஓடிக்கொண்டு போனவருக்கு வாகனமோடத் தெரியாததாலதான் கொண்டுபோய் இடிச்சவர் எண்டு சொல்ல வருகினம்போல.

வாகனங்கள் தரித்துநின்ற இடத்தில் இதுவும் ஒரு வாகனம் சென்று வெடித்திருக்கிறது. வாகனத்தைச் செலுத்தியவர் சாவதற்கும் சாகாமல் விடுவதற்கும் 50:50 வீதம் சாத்தியமிருக்கு. வாகனத்தைத் தரித்துவிட்டு அவர் வெளியேறி வெடிக்க வைத்திருக்க சாத்தியமுண்டு. ஏனென்றால் எல்லாமே தரித்துநின்ற வாகனங்கள் மீதான தாக்குதல்தான்.

இதுதான் நடந்ததென்று இதுவரை எதுவும் தெரியாத நிலையில் சகட்டுமேனிக்கு தாம் நினைத்தபடி செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்களவனும் வெளிநாட்டுக்காரனும்தான் தற்கொலைத் தாக்குதல் எண்டு சொல்லிறான் எண்டால் இவையளும் அதைக் கொப்பி பண்ணிச் சொல்ல வேணுமோ என்ன?

நல்லவன், ஜங்கோண கட்டிடத்தில் இருக்கிறவையும் ஆத்தங்கரையில இருக்கிறவையும் வாசிப்பினம் போல கிடக்கு. இனி அளவா எழுதுங்கோ என்ன :wink:

இவோன், 15 லேலண்ட் பேரூந்துகளை எந்த குறிக்கோளும் இன்றி சாதாரண முறையில் தரிப்பிடத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட இடமுள்ள பிரதேசத்தில் எவ்வாறு நிறுத்தி வைத்திருப்பார்கள் என்று பார்த்தால் ஒரு வெடிகுண்டு பொருத்திய வாகனத்தால் முடிந்திருக்குமா? தரித்து நின்ற 15 பேரூந்துகளில் 13 போரூந்துகளிற்கு கடுமையான சேதம் அதில் பல முற்றாக அழிக்கப்பட்டிருக்கு என்றால் குண்டு பொருத்தப்பட்டிருந்த வாகனம் தரித்து நிண்டிருக்க முடியாது. அதுவும் ஒரு றவுண்டாவது ஓடி ஓடி வெடிச்சிருக்க வேணும். நிண்ட கடற்படையினர் எல்லாரும் நிராயுதபாணிகள் என்ற படியா ஓட விடாமல் சுட்டு நிப்பாட்டி இருக்கேலாது. அது தான் எங்கடை ஊடகங்கள் சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் சொல்லிறதை நம்பீனமாக்கும்.

எங்கட ஊடகங்கள் சொல்லுறது பிழை உங்களுக்கு கனக்க தெரியும் எண்டா நீங்களும் கிசுகிசு.கொம் கீச்சுகீச்சு.கொம் கிளுகிளு.கொம் என்று எத்தனை அட்டகாசமான பெயருகள் இருக்கு பதிஞ்சு போட்டு விளங்கப்படுத்தலாமே? நீங்களோ வேறுயாரோ ஒருக்கா செய்து காட்டினியள் எண்டா பிறகு எங்கடை ஊடகங்கள் கப் எண்டு பிடிச்சுடுவினம்.

எழுதுவது வீங்கின வேலை இல்லை தமிழரின் வீரியத்தை எழுதிக்காட்டத்தானே வேணும் அடுத்த சந்ததியினரை போராட்டத்தின் பாதை வழுவாமல் இருக்க கரிசனையோடு அது நடத்தப்படுது. அதுபோக நெடுகலும் lose பண்ணிற team இக்கு சனம் சப்போட் பண்ணாது அப்பப்ப சாகசம் செய்து சனத்தை சந்தோசப்படுத்த வேண்டும் என்று பல சிக்கல்கள் இருக்கு. :idea: :wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.