Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் இல்லை!

Featured Replies

ரஷ்யா உடைந்தபின் இந்தியாவிற்கு புதிய நெருக்கடிகள் உருவாகியது ,தங்களது சுய நலத்திற்காக இலங்கை அரசுடன் கூட்டு சேரும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் .அப்போது அவர்களுக்கு போராளிகள் தேவையில்லாமல் போய்விட்டார்கள் அழிக்க நினைத்தார்கள் .அந்த செயல்பாட்டின் மொத்த வடிவமே அமைதிப்படையாக இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்ததும் ,12 வீரர்களையும் சிறைப்பிடித்ததும் .
 
இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் ..........ஆனால் இறுதியில் எந்த தேவைக்காக இந்திய அரசின் உதவியை நாடி போராட்ட குழுக்களை உருவாக்கியவர்களை எல்லாம் இந்தியா நசுக்கி தனது பக்கம் இழுத்தது ,விடுதலைப்புலிகளை தவிர ........................இங்கே தான் விடுதலைப்புலிகளின்  தலைமையின் இராஜ தந்திரத்தை நாம் மட்டும் அல்ல உலகமே பார்த்து வியந்தது .இது ஆரம்ப வரலாறு .............அதன் பின் நடந்தவற்றை எழுத தேவை இல்லை என நினைக்கிறேன் .............நாமும் வரல்லுறு தெரிந்துதான் இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கிறோம் .நன்றி வணக்கம்  :)

அமைதிப்படை இலங்கை வந்தது 1987
சோவியத் யூனியன் உடைந்தது 1991
 
இந்த இனத்திற்கு உடனடி தேவை பக்கச்சார்ப்பற்ற தகுதி வாய்ந்த வரலாற்று ஆசிரியர்கள். ஆள் ஆளுக்கு வரலாறு எழுத வெளிக்கிட்டா இன்னும் 50 வருசத்தில பிரபாகரன் முருகனின் அவதாரம் என்டு கோயில்கள் கிளம்பினாலும் கிளம்பும். 
  • Replies 101
  • Views 5.8k
  • Created
  • Last Reply

எனக்கு புலிகளில் பிடித்ததே கடைசியில் தமக்கு என்று வரும்போது வெள்ளை கொடி பிடித்ததும் காலில் விழுந்து வணங்கியதும் .
ஆனால் சிங்களவன் மசியவில்லை .
ஆழ்ந்த அனுதாபங்கள் .

**********

நியானி: சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன
 
Edited by நியானி

எனக்கு புலிகளில் பிடித்ததே கடைசியில் தமக்கு என்று வரும்போது வெள்ளை கொடி பிடித்ததும் காலில் விழுந்து வணங்கியதும் .

ஆனால் சிங்களவன் மசியவில்லை .

ஆழ்ந்த அனுதாபங்கள் .

------------

நியானி: சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன

எனக்கு இவர் போன்றவர்களில் பிடித்தததே புலிகள் பற்றி பேசும்போது அவர்களின்  தியாகங்கள் அர்பணிப்புக்கள், ஒரு நிழல் அரசை நிர்வகித்த அவர்களின் பல் துறை திறமை, சுனாமி போன்ற பேரிடர் வந்தபோது அவர்களிடம்  உள்ள சிறிய வளங்களை வைத்து கொண்டே  ஒரு நாட்டின் அரசுக்கு சமமாக மீட்பு பணிகளில் மேற்கொண்ட அவர்களின் திறமை  போன்ற  நல்லவிடயங்களை முழுவதுமாகவே புறக்கணித்து அவர்களில் மீது  தனக்குள்ள வக்கிரத்தை மட்டும் கொட்டி தீர்க்கும் அற்ப மனிதர்களாக இவர்கள் இருப்பது தான். ஒரு விடயத்தின் நல்லதையும் தீயதையும் எடை போட்டு கூறுவது தான் விமர்சனம். தனக்கு உள்ள வக்கிரங்களை கொட்டி தீர்ப்பது விமர்சனம் அல்ல. யாழ் தளத்திற்கு வந்தால் புலியை திட்டி தீர்ப்பதை தமது நிரந்தர  தொழிலாக கொண்ட இவர்களை பற்றி யாழ் வாசகர்கள் அறிவார்கள்.

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

ஒரு பக்கத்தில் தியாகம் ,அர்பணிப்பு ,நிழல் அரசு .மறு பக்கத்தில் கொலை,கடத்தல் ,பிள்ளை பிடிப்பு .

ஏன் நீங்களும் நானும் அடிபடுவான் யு என் அறிக்கைகளை வாசியுங்கோ ,சர்வதேசம் புலிகளை எப்படி பார்த்தார்கள் என்று பாருங்கோ ,

அதை விட்டுவிட்டு நீங்கள் அவர்களுக்கு கோயிலை கட்டிவிட்டு எங்களையும் கும்பிட சொன்னால் நல்ல கதியாக இருக்கு ,குஷ்புவிற்கும் தான் கோயில் கட்டினார்கள் அப்ப போய் அவரையும் கும்பிடுங்கோ .

கோசான் மினக்கெட்டு பல விடயங்கள் எழுதுகின்றீர்கள் ,

புராண காலத்தில் இருந்து போராட்டம் நடத்தினார்கள் அவர்களுக்கே உலக ஒழுங்கு விளங்கவில்லை இவர்களுக்கு எப்படி விளங்கும் ,

சர்வதேசம் தனது நலனிற்கேப்பவே எதையும் பார்க்கும். இதை நீங்களே எழுதியுள்ளீர்கள். உலகின் எல்லா விடுதலை இயங்கங்களையும் சர்வதேசம் தனது நலனுக்கேற்ப தடை செய்வதம் பயங்கரவாத பட்டம் கொடுப்பதும் உலக இயல்பு. அதே இயங்கங்கள் தமது நலனிற்கு தேவை என்றவுடன் அவர்களை அரவணைத்தத்தும் இதே சர்வதேசம் தான்.  இந்த விடயமே உங்களுக்கு விளங்காமல் சர்வதேசம் எப்படி பாரத்தது என்று பாருங்கள் என்று கூறியுள்ளீர்கள்.

நாங்கள் எவருக்கும் கோவில் கட்டவில்லை. உங்களை போல விமர்சனம் என்ற சொல்லை விளங்காமல் வக்கிரங்களை கொட்டமாட்டோம். கோசானை மேற்கோள் காட்டவேண்டாம். அவர் விமர்சன கண்ணோட்டதுடன் புலிகளின் தவறுகளை மட்டும் விமர்சிப்பவர். உங்களை போல வக்கிரங்களை கொட்டுபவர் அல்ல.  அடுத்த கட்டப்போராட்டம் தொடர்பாக உலக ஒழுங்கு, சர்வதேசம் என்ற விடயங்களில் தவறான மதிப்பீட்டுடன் நடவடிக்கைகளை தொடர்ந்தது புலிகளில் வீழ்ச்சிக்கு காரணமாகியது என்பதே நிதர்சனம். கரணம் தப்பினால் மரணம் என்ற பாரிய றிஸ்குடன் தமது நடவடிக்கையை தொடர்ந்த புலிகளின் மதிப்பீடு கடந்த காலங்களில் பல தடவை  வெற்றியடைநதது என்ற ரீதியில் தொடந்தும் அதே ரீதியிலான  அவர்களின் மதிப்பீடு தவறாகிவிட்டது. இதை விட ஆயுத போராட்ட  விடுதலை இயக்கம் என்ற ரீதியில் அவர்களின் அர்பணிப்பு ,கடின  உழைப்பு எக்காலத்திலும் நினைவு கூற தக்கதே. இதுவும் ஒரு உலக ஒழுங்குதான். உலக வழமைதான்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிரச்சினை தலைப்பை விட்டு வெளியே போகுது.ஐதேக வும் சுதந்திரக்கட்சியும் மாறி மாறி ஆட்சியில் இருந்த பொழுதும் எந்தக் கட்சியும் தமிழருக்கு எந்தத் தீர்வையும் கொடுக்கவும் இல்லை .கொடுக்க முன்வரவும் இல்லை.கொடுக்க முற்பட்ட சந்தர்பங்களில் எல்லாம் தாளில் எழுதிய ஒப்பந்தங்களாக இருந்ததே ஒழிய நடைமுறையில் எந்த முன்னேற்றமும் இல்லை.இந்திய சிறிலங்கா ஒப்பந்தத்துக்கும் அதே கதைதான்.அதை நிறைவேற்றி வைக்கவேண்டிய இந்திய அரசு கூட அதைப் பொருட்படுத்தவில்லை.இவ்வளவு காலமும் புலிகள் விடவில்லை என்று சொன்னார்கள். யுத்தம் முடிந்து 5 வருடமாகி விட்டது.இந்திய அந்த ஒப்பந்தiத நிறை வேற்ற ஒரு துளியளவும் முயற்சிக்கவில்லை.அடுத்த ஆட்சிமாற்றத்தின் மூலமும் தமிழ்மக்களுக்கு எதுவும் கிடைக்கப் பொவதில்லை. அது சிங்கள மக்களுக்கு குடும்ப ஆட்சியிலிருந்து ஒரு விடுதலையைக் கொடுக்Fம். அவ்வளவுதான்.தமிழ் என்ற சொல்ல இடம்பெறாத அமெரிக்கத் தீர்மானத்தின் மூலமும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.போர்க் குற்றம் என்று வந்தாலும் அது இராணுவத்தில் இருந்த ஒU சில அதிகாரிகளைத தண்டிப்பதோடு முடிந்து விLம்.இந்த மைத்திரிghல இவ்வளவு நாளும் மகிந்தரின் அமைச்சரவையில் இருந்தவர்தான் தமிழினப்பLகொலை உச்சத்தில் இருந்த போது அதற்கு ஆதரவு அளித்தவர்தான்.இப்பொழுது நடக்கும் அரசியல் சிறலங்காவில் சினாவின் அதிக்கத்தை முடக்குவதற்காக நடப்பது.ஆனால் சிங்களம் உதவியைப் பெற்றுக்கொண்டு காரியம் முடிந்தவுடன் கழட்டிவிடும் இuhஜதந்திரத்தில் கை தேர்ந்தது.மேற்குநாடுகளையும் இந்தியாவையும் பாவித்து புலிகளை அழித்தபின் அவர்களைக் கைவிட்டு சீனாவுடன் சேர்ந்த விட்டது. இப்பொழது நடக்Fம் அரசியலும் அதுதான். சந்திரிகா மேற்குலததைப்பாவித்J இரகசியமாக மகிந்தiவின் பலத்தை உடைத்J சுதந்திரக்கட்சியைக் கைப்பற்றவதற்கு முயற்சிக்கின்றார்.அதுவே இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. ரணிலுக்கு எல்லாம் தெரிந்தாலும் பலவீனமான நpலையில் சந்திரிகாவுடன் ஒத்துப் போய் மகிந்தரை விழ்த்த நினைக்கிறார். Mனால் மைத்திரி ஜனாதிபதியாகி எல்போருக்கும் Mப்பு வைப்பார். இந்தப்பதவியை ஒழிக்க யாரவது Kன்வUவார்களா?அந்தப் பதவியை ஒழிப்பேன் என்று கூறி அட்சியைப் பிடித்த சந்திரிகா அதனை ஒழிக்கவில்லையே. அந்தப்பதவியைப் பாவித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்ததiதையே கiலத்தவரே அவர்தான்.

Edited by புலவர்

சர்வதேசம் தனது நலனிற்கேப்பவே எதையும் பார்க்கும். இதை நீங்களே எழுதியுள்ளீர்கள். உலகின் எல்லா விடுதலை இயங்கங்களையும் சர்வதேசம் தனது நலனுக்கேற்ப தடை செய்வதம் பயங்கரவாத பட்டம் கொடுப்பதும் உலக இயல்பு. அதே இயங்கங்கள் தமது நலனிற்கு தேவை என்றவுடன் அவர்களை அரவணைத்தத்தும் இதே சர்வதேசம் தான்.  இந்த விடயமே உங்களுக்கு விளங்காமல் சர்வதேசம் எப்படி பாரத்தது என்று பாருங்கள் என்று கூறியுள்ளீர்கள்.

நாங்கள் எவருக்கும் கோவில் கட்டவில்லை. உங்களை போல விமர்சனம் என்ற சொல்லை விளங்காமல் வக்கிரங்களை கொட்டமாட்டோம். கோசானை மேற்கோள் காட்டவேண்டாம். அவர் விமர்சன கண்ணோட்டதுடன் புலிகளின் தவறுகளை மட்டும் விமர்சிப்பவர். உங்களை போல வக்கிரங்களை கொட்டுபவர் அல்ல.  அடுத்த கட்டப்போராட்டம் தொடர்பாக உலக ஒழுங்கு, சர்வதேசம் என்ற விடயங்களில் தவறான மதிப்பீட்டுடன் நடவடிக்கைகளை தொடர்ந்தது புலிகளில் வீழ்ச்சிக்கு காரணமாகியது என்பதே நிதர்சனம். கரணம் தப்பினால் மரணம் என்ற பாரிய றிஸ்குடன் தமது நடவடிக்கையை தொடர்ந்த புலிகளின் மதிப்பீடு கடந்த காலங்களில் பல தடவை  வெற்றியடைநதது என்ற ரீதியில் தொடந்தும் அதே ரீதியிலான  அவர்களின் மதிப்பீடு தவறாகிவிட்டது. இதை விட ஆயுத போராட்ட  விடுதலை இயக்கம் என்ற ரீதியில் அவர்களின் அர்பணிப்பு ,கடின  உழைப்பு எக்காலத்திலும் நினைவு கூற தக்கதே. இதுவும் ஒரு உலக ஒழுங்குதான். உலக வழமைதான்.

இந்த விடயத்தில் புலிகள் தங்களது போராட்டத்தை மேற்குலகுடன் சமாந்தரமாக்க முயற்சித்தார்கள், ஆனால் மேற்குலகம் அப்போதிருந்த இந்திய கொள்கைவகுப்பாளர்களை மீறி நடக்க துணியவில்லை, புலிகள் போட்ட தப்பு கணக்கு என்ன்வென்றால் இந்தியா தந்து பாதுகாப்பையும் பொருட்படுத்தாம்ல் தங்களை அழிப்பதில் குறியாக இருக்கும் என்பதே,அதை விட2008 தொடக்கம் உலக பொருளாதார பொருளியல் கட்டமைப்பில் பாரிய மாறுதல்கள் நடந்தன இதெல்லம் சிறீலங்காவுக்கு சாதகமாக அமைந்தன ஆனால் நீண்ட கால அடிபடையில் இதே நிலை நீடிக்காது, அதை விடGORDON WEISS கூறியது என்னவென்றால் இறுதி யுத்தம் 6 மாதம் முன்போ அல்லது பின்போ நடந்து இருந்தால் புலிகள் தோற்று இருக்க மாட்டர்கள் என்பதே ஆகும்,

அமைதிப்படை இலங்கை வந்தது 1987
சோவியத் யூனியன் உடைந்தது 1991
 
இந்த இனத்திற்கு உடனடி தேவை பக்கச்சார்ப்பற்ற தகுதி வாய்ந்த வரலாற்று ஆசிரியர்கள். ஆள் ஆளுக்கு வரலாறு எழுத வெளிக்கிட்டா இன்னும் 50 வருசத்தில பிரபாகரன் முருகனின் அவதாரம் என்டு கோயில்கள் கிளம்பினாலும் கிளம்பும். 

உண்மையை மறைத்து  பொய் பொய் ஆக அனைத்தையும் மாற்றி எழுதும் பொய்யர்களே வரலாற்றை பொய்யாக எழுதும்போது ,சம காலத்தில் பார்க்கப்பட்ட உண்மைய்களை எழுதுவது எந்த இழுக்கும் இல்லை ,அதற்கு வரலாற்று ஆசிரியர் என்னும் பட்டமும் ,படிப்பும் தேவையில்லை உண்மை மட்டும் இருந்தால் போதும்  :icon_idea:

நான் எழுதிய ஆண்டில் தவறு இருந்தாலும்  சிறிலங்காவிற்குள்  கால்பதிக்கும் இந்தியாவின் தேவை நிறைவேற்றப்பட்டது என்பதே அதில் அடங்கியுள்ள உண்மை ..........இதை விட விரிவாக எழுதலாம் .ஆனால் தூங்குவது போல நடிக்கும் தமிழருக்கல்ல ...........ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு  புரிய வைப்பதில் தப்பில்லை .நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நிறுத்திக்கொள்கிறேன் .நன்றி வணக்கம்  :)

நீங்கள் முதலில் எழுதிய தகவலே முழு பிழை. ரஷ்யா உடைந்த பின் இந்தியாக்கு புதிய நெருக்கடிகள் தோன்றியது அதனால் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து போராளிகளை அழிக்க அமைதிப்படையாக வந்தார்கள் என்றீர்கள் இப்ப பிளேட்ட மாத்தி ஆண்டில் தான் தவறு இந்தியாவின் கால் பதிக்கும் தேவை நிறைவேற்றப்பட்டது தான் உண்மை என்கிறீர்கள். இந்தியா தொடர்பான உங்கள் புரிதலே முழு பிழையாக இருக்கு. வெளிநாட்டு காரனுக்கும் இப்படி எங்கள் வரலாறுகளை பிழையாக கொண்டு போய்விடுவீங்கள் என்டு தானே பயமா இருக்கு. 
 
விடுதலைப்புலிகளின் தலைமையின் இராஜ தந்திரத்தை உலகமே பார்த்து வியந்தது.. புஷ் மூக்கில விரல் வைத்தார்..பூட்டின் விழுந்து வணங்கினார் என்டு கடைசியில இத்தனை இழப்புகளோடும் சாதனைகளோடும் நடந்த எமது போராட்ட வரலாற்றை அம்புலி மாமா கதை ரேஞ்சிக்கு கொண்டு வராம விட்டீங்களென்டா காணும். 
  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

சுக ஏமாத்தியது,

யுன்பி ஏமாத்தியது

இந்தியா ஏமாத்தியது

சர்வதேசம் ஏமாத்தியது

போர் விசாரணையும் ஏமாத்தும்

மைத்திரியும் ஏமாற்றுவார்

அப்ப என்னதான் செய்யுறது?

செவ்வாய் கிரகத்தில் இருப்பவர்களிடம் ஆதரவு கேப்போமா?

அரசியல் என்பது "முடியுமானதின் கலை" art of the possible என்பார்கள். இவ்வளவு காலமும் இத்தனை பேரும் ஏமாற்றிப் போக நாம் ஏமாந்த சோணகிரிகளாய் இருந்தோம்.

இனியாவது கொஞ்சம் ராஜதந்திரம் செய்வோமே?

அல்லது கொடி பிடித்து விட்டு, கொத்தும் குவாட்டரும் வெட்டி விட்டு குப்புறப் படுப்போமா?

நீங்கள் முதலில் எழுதிய தகவலே முழு பிழை. ரஷ்யா உடைந்த பின் இந்தியாக்கு புதிய நெருக்கடிகள் தோன்றியது அதனால் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து போராளிகளை அழிக்க அமைதிப்படையாக வந்தார்கள் என்றீர்கள் இப்ப பிளேட்ட மாத்தி ஆண்டில் தான் தவறு இந்தியாவின் கால் பதிக்கும் தேவை நிறைவேற்றப்பட்டது தான் உண்மை என்கிறீர்கள். இந்தியா தொடர்பான உங்கள் புரிதலே முழு பிழையாக இருக்கு. வெளிநாட்டு காரனுக்கும் இப்படி எங்கள் வரலாறுகளை பிழையாக கொண்டு போய்விடுவீங்கள் என்டு தானே பயமா இருக்கு. 
 
விடுதலைப்புலிகளின் தலைமையின் இராஜ தந்திரத்தை உலகமே பார்த்து வியந்தது.. புஷ் மூக்கில விரல் வைத்தார்..பூட்டின் விழுந்து வணங்கினார் என்டு கடைசியில இத்தனை இழப்புகளோடும் சாதனைகளோடும் நடந்த எமது போராட்ட வரலாற்றை அம்புலி மாமா கதை ரேஞ்சிக்கு கொண்டு வராம விட்டீங்களென்டா காணும். 

அம்புலிமாமா கதைய சொல்லிக்கொண்டிருப்பவர்களே நீங்கதான் ....அதுக்குள்ளே வேற உங்கட வக்கிரக் கொள்கையை நியாயப்படுத்த துள்ளிக்குதிக்கிறீங்க .உங்களால இப்பிடி பொய்யை எழுத  மட்டும்தான் முடியும் .வேறு ஒன்றும் வெட்டி விழுத்த முடியாது என்று புரிந்து கொள்ளுங்கள் ..புரிந்து கொள்கிற நிலையில் நீங்க இல்லை என்றும் தெரியும்  :lol:  :D

Edited by தமிழ்சூரியன்

சர்வதேசம் தனது நலனிற்கேப்பவே எதையும் பார்க்கும். இதை நீங்களே எழுதியுள்ளீர்கள். உலகின் எல்லா விடுதலை இயங்கங்களையும் சர்வதேசம் தனது நலனுக்கேற்ப தடை செய்வதம் பயங்கரவாத பட்டம் கொடுப்பதும் உலக இயல்பு. அதே இயங்கங்கள் தமது நலனிற்கு தேவை என்றவுடன் அவர்களை அரவணைத்தத்தும் இதே சர்வதேசம் தான்.  இந்த விடயமே உங்களுக்கு விளங்காமல் சர்வதேசம் எப்படி பாரத்தது என்று பாருங்கள் என்று கூறியுள்ளீர்கள்.

நாங்கள் எவருக்கும் கோவில் கட்டவில்லை. உங்களை போல விமர்சனம் என்ற சொல்லை விளங்காமல் வக்கிரங்களை கொட்டமாட்டோம். கோசானை மேற்கோள் காட்டவேண்டாம். அவர் விமர்சன கண்ணோட்டதுடன் புலிகளின் தவறுகளை மட்டும் விமர்சிப்பவர். உங்களை போல வக்கிரங்களை கொட்டுபவர் அல்ல.  அடுத்த கட்டப்போராட்டம் தொடர்பாக உலக ஒழுங்கு, சர்வதேசம் என்ற விடயங்களில் தவறான மதிப்பீட்டுடன் நடவடிக்கைகளை தொடர்ந்தது புலிகளில் வீழ்ச்சிக்கு காரணமாகியது என்பதே நிதர்சனம். கரணம் தப்பினால் மரணம் என்ற பாரிய றிஸ்குடன் தமது நடவடிக்கையை தொடர்ந்த புலிகளின் மதிப்பீடு கடந்த காலங்களில் பல தடவை  வெற்றியடைநதது என்ற ரீதியில் தொடந்தும் அதே ரீதியிலான  அவர்களின் மதிப்பீடு தவறாகிவிட்டது. இதை விட ஆயுத போராட்ட  விடுதலை இயக்கம் என்ற ரீதியில் அவர்களின் அர்பணிப்பு ,கடின  உழைப்பு எக்காலத்திலும் நினைவு கூற தக்கதே. இதுவும் ஒரு உலக ஒழுங்குதான். உலக வழமைதான்.

கொலை கொலையாக செய்யும் போது கைதட்டி அதை வரவேற்றுவிட்டு வக்கிரம் பற்றி எல்லாம் எப்படி கதைகின்றீர்கள் ,எனது எழுத்தில் வக்கிரம் இருக்கலாம் உங்கள் செயல்கள் வக்கிரமானவை என்பதை மறந்துவிட்டீர்கள் .

புலிகளும் அவர்கள் எடுபிடிகளும் கடந்து வந்த பாதை சர்வதேசமும் தமிழ் உலகும் நன்கு அறியும் .ஏதோ சர்வதேசத்தின் தாளத்திற்கு புலிகள் ஆடவில்லை என்பதால் தான் இந்த அழிவு செய்த கொலைகளை நியாயப்படுத்த முடியாது 

சுந்தரம் ,ஒபரே தேவன் ,சிறி ,நாபா ,செல்வி ,அமீர் என்று கொலைபட்டியல் மிக மிக நீளம் .புலிகள் அழியும் வரை தாங்கள் செய்த இந்த கொலைகளுக்கு அவர்கள் மன்னிப்பு கேட்கவும் இல்லை இப்பவும் அவர்களுக்கு குடை பிடிக்கும் உங்களை போன்றவர்கள் அதை பிழை என்று சொல்லவுமில்லை .

புலிகள் பிள்ளைகளை பிடிக்கும் போதும் மக்களை படாத பாடு படுத்தும் போதும் 2009 வரை நான்றாக ஆடிப்பாடி கூத்தடிது விட்டு இப்ப வந்து மக்கள் நலம் பற்றி எல்லாம் எப்படி கதைக்கின்றீர்கள் என்று விளங்கவில்லை .

புலிகளில் இருந்தவர்கள் பலர் இப்போது தாங்கள் விட்ட பிழைகளை மனம் திறந்து கதைகின்றார்கள் மன்னிப்பும் கேட்கின்றார்கள் .ஓடி வந்து மூன்று நேரமும் முட்ட விழுங்கிவிட்டு கொடி பிடித்தவர்கள் என்றுமே மாறமாட்டார்கள் .

அம்புலிமாமா கதைய சொல்லிக்கொண்டிருப்பவர்களே நீங்கதான் ....அதுக்குள்ளே வேற உங்கட வக்கிரக் கொள்கையை நியாயப்படுத்த துள்ளிக்குதிக்கிறீங்க .உங்களால இப்பிடி பொய்யை எழுத  மட்டும்தான் முடியும் .வேறு ஒன்றும் வெட்டி விழுத்த முடியாது என்று புரிந்து கொள்ளுங்கள் ..புரிந்து கொள்கிற நிலையில் நீங்க இல்லை என்றும் தெரியும்  :lol:  :D

நான் என்ன அம்புலிமாமா கதை சொன்னேன்? எது வக்கிர கொள்கை? வேறு என்ன எழுதினேன்? நீங்கள் எழுதிய பொய்யை சுட்டிக்காட்டியதை விட?? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கத்தில் தியாகம் ,அர்பணிப்பு ,நிழல் அரசு .மறு பக்கத்தில் கொலை,கடத்தல் ,பிள்ளை பிடிப்பு .

ஏன் நீங்களும் நானும் அடிபடுவான் யு என் அறிக்கைகளை வாசியுங்கோ ,சர்வதேசம் புலிகளை எப்படி பார்த்தார்கள் என்று பாருங்கோ ,

அதை விட்டுவிட்டு நீங்கள் அவர்களுக்கு கோயிலை கட்டிவிட்டு எங்களையும் கும்பிட சொன்னால் நல்ல கதியாக இருக்கு ,குஷ்புவிற்கும் தான் கோயில் கட்டினார்கள் அப்ப போய் அவரையும் கும்பிடுங்கோ .

கோசான் மினக்கெட்டு பல விடயங்கள் எழுதுகின்றீர்கள் ,

புராண காலத்தில் இருந்து போராட்டம் நடத்தினார்கள் அவர்களுக்கே உலக ஒழுங்கு விளங்கவில்லை இவர்களுக்கு எப்படி விளங்கும் ,

ஐ.நா வின் செயற்பாடுகளில் ஒன்று பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவது. வன்னி மக்கள் ஐ.நாவை நிற்கும் படி கேட்டும் ஓடி வந்து கொழும்பில் வந்து அரசு கொடுத்த வைனை குடித்தது. தமிழ் மக்களின் நிலையில் ஒரு வெள்ளை இனம் இருந்து இருந்தால் 100 வீதம் அம்மக்களுடன் ஐ.நா நின்றிருக்கும்.
அதனையும் விட ஒரு மனிதாபிமானமுள்ள ஐ.நா உறுப்பினர் உண்மையை சொல்ல வெளிக்கிட அவரை கோத்தபாய கூப்பிட்டு பயமுறுத்தியதும் ஐ.நா அது அவ் உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து என தட்டிக்களித்ததும் பான் கி மூன் வன்னி அகதி முகாம்களை பார்த்து விட்டு அங்கு போர்க்குற்றங்கள் நடை பெறவில்லை என்பதும் ஐ.நாவின் செயற்பாட்டை எந்த ஒரு நாகரீகமான மனிதனையும் வெட்கி தலை குனிய வைக்கும். நீவ்ங்கள் சொல்லும் சர்வதேசத்துக்கு இந்த உதாரணம் போதும் என நினைக்கிறேன்.

கொலை கொலையாக செய்யும் போது கைதட்டி அதை வரவேற்றுவிட்டு வக்கிரம் பற்றி எல்லாம் எப்படி கதைகின்றீர்கள் ,எனது எழுத்தில் வக்கிரம் இருக்கலாம் உங்கள் செயல்கள் வக்கிரமானவை என்பதை மறந்துவிட்டீர்கள் .

புலிகளும் அவர்கள் எடுபிடிகளும் கடந்து வந்த பாதை சர்வதேசமும் தமிழ் உலகும் நன்கு அறியும் .ஏதோ சர்வதேசத்தின் தாளத்திற்கு புலிகள் ஆடவில்லை என்பதால் தான் இந்த அழிவு செய்த கொலைகளை நியாயப்படுத்த முடியாது 

சுந்தரம் ,ஒபரே தேவன் ,சிறி ,நாபா ,செல்வி ,அமீர் என்று கொலைபட்டியல் மிக மிக நீளம் .புலிகள் அழியும் வரை தாங்கள் செய்த இந்த கொலைகளுக்கு அவர்கள் மன்னிப்பு கேட்கவும் இல்லை இப்பவும் அவர்களுக்கு குடை பிடிக்கும் உங்களை போன்றவர்கள் அதை பிழை என்று சொல்லவுமில்லை .

புலிகள் பிள்ளைகளை பிடிக்கும் போதும் மக்களை படாத பாடு படுத்தும் போதும் 2009 வரை நான்றாக ஆடிப்பாடி கூத்தடிது விட்டு இப்ப வந்து மக்கள் நலம் பற்றி எல்லாம் எப்படி கதைக்கின்றீர்கள் என்று விளங்கவில்லை .

புலிகளில் இருந்தவர்கள் பலர் இப்போது தாங்கள் விட்ட பிழைகளை மனம் திறந்து கதைகின்றார்கள் மன்னிப்பும் கேட்கின்றார்கள் .ஓடி வந்து மூன்று நேரமும் முட்ட விழுங்கிவிட்டு கொடி பிடித்தவர்கள் என்றுமே மாறமாட்டார்கள் .

ஓடி வந்தவர்கள் ஓடி வந்தவர்கள் என்று  அடிக்கடி கதைக்கும் நீங்கள் கூட ஓடி வந்தவர் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். கொலை பட்டியல் பற்றி பேசும் உங்கள் ஓரத்த நாட்டு படுகொலைகளின் பட்டியல் கூட போட முடியாத அளவிற்கு நீளமானது. பட்டியல் போட முடியாதபடி அவர்களை டம்ப் பண்ணி விட்டதை வசதியாக மறந்து விட்டார்கள். பட்டியல் போடமுடியாத படி ட்ம்ப் பண்ணிவிட்டோம் என்ற தைரியம் தானே இப்போது பேச வைக்கிறது.  போராட வந்த இளைஞர்களை டம்ப் பண்ணியதற்கு எப்போதாவது மன்னிப்பு கேட்டீர்களா? புலிகளின் கொலை பற்றி பேச என்ன ஜோக்கிதை உள்ளது.  புலிகளுக்கு எதிரி என்றால்அவர்கள் செய்யும் எத்தனை அக்கிரமங்களையும் ஏற்றுகொள்ளும் மனப்பாங்கு கொண்டவர்கள் புலிகள்  பற்றி பேச அருகதை அற்றவர்கள். நீங்கள் மட்டும் முட்ட விழுங்காமல் பட்டினி கிடக்குறீர்களாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொடி ஒரு கொடிய ஆயுதம் கிடையாது.அது ஒரு அடையாளம்.நாங்கள் கொடி பிடிப்பது சர்வதேசத்துக்கு ஒரு பிரச்சனையே அல்ல.சிறிலங்காவுக்கும் புலி எதிர்ப்பு வாதிகளுக்கும் மட்டுமே அது பிரச்சனை.புலிகளைத் தடை செய்த நாடுகளில் கூட கொடி தடை சசெய்யப்படவில்லை.அவர்கள் அதனை தமிழர்களின் கொடியாகவும் பார்க்கிறார்கள்.கொடி பிடிப்பதனால்தான் சிறிலங்காவும், இந்தியாவும் ,சர்வதேசநாடுகளும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள வில்லை என்பது முட்டாள்தனம்.மைத்திரியை ஆதரிப்பது இராஜதந்திரம் என்றால் சென்ற முறை போர்க்குற்றவாளியான சிரத்தையுள்ளதாக ஆதரிக்க கூட்டமைப்பு சொல்லியும் பெர்துவான் தமிழ்மக்கள் வாக்களிப்பில் புறக்கணித்தார்கள்!!ஆக மொத்தம் யார் வென்றாலும் போர்க்குற்றவாளிகள் தப்புவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது 2010 ஜனாதிபதி தேர்தலை தமிழர் புறக்கணித்தனரா? போய் தேர்தல் திணைக்கள புள்ளி விபரத்தை பாருங்கள் உண்மை புரியும்.

பொன்ஸை பற்றிய முழுத்தெளிவும் இருந்தும் மக்கள் அவருக்கு வாக்குப் போட்டனர். காரணம் பொன்ஸ் நல்லவர் என்பதற்காக இல்லை. அங்கிருக்கும் மக்களுக்கு உங்களை விட அரசியல் எப்படிச் செய்யவேண்டும் என்று தெரியும், அதனால்.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வீதம் 20%இற்கும் குறைவு. இந்த வீத்த்தில் புலிகளஇன் காலத்திலும் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது..ஆனால்கடந்த மாகாண சபைத்தேர்தலில் 65% மேல் பழைய செய்திகளும் போய் பாருங்கள்

நியானி: ஒருமையில் விளித்தது திருத்தப்பட்டுள்ளது

Edited by நியானி

ஓடி வந்தவர்கள் ஓடி வந்தவர்கள் என்று  அடிக்கடி கதைக்கும் நீங்கள் கூட ஓடி வந்தவர் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். கொலை பட்டியல் பற்றி பேசும் உங்கள் ஓரத்த நாட்டு படுகொலைகளின் பட்டியல் கூட போட முடியாத அளவிற்கு நீளமானது. பட்டியல் போட முடியாதபடி அவர்களை டம்ப் பண்ணி விட்டதை வசதியாக மறந்து விட்டார்கள். பட்டியல் போடமுடியாத படி ட்ம்ப் பண்ணிவிட்டோம் என்ற தைரியம் தானே இப்போது பேச வைக்கிறது.  போராட வந்த இளைஞர்களை டம்ப் பண்ணியதற்கு எப்போதாவது மன்னிப்பு கேட்டீர்களா? புலிகளின் கொலை பற்றி பேச என்ன ஜோக்கிதை உள்ளது.  புலிகளுக்கு எதிரி என்றால்அவர்கள் செய்யும் எத்தனை அக்கிரமங்களையும் ஏற்றுகொள்ளும் மனப்பாங்கு கொண்டவர்கள் புலிகள்  பற்றி பேச அருகதை அற்றவர்கள். நீங்கள் மட்டும் முட்ட விழுங்காமல் பட்டினி கிடக்குறீர்களாக்கும்.

விடிய விடிய இராமர் கதை தான் ,

நாங்கள் செய்ததை பிழைகளை எங்கட ஆட்களே புத்தகமாக எழுதியதும் தீப்பொறி என்ற பத்திரிகையை தொடங்கியதும் எல்லோரும் அறிந்தது ,பின்னர் அவர்களை கூட கொன்றது புலிகள் தான்.இன்று வரை  தாங்கள் செய்த கொலைகளை தவறுகளை புலிகள் ஏற்று மன்னிப்பு கேட்க தயாராக இல்லை அதை இன்று சொல்லும் யோ கர்ணன் ,சாத்திரி ,தமிழ்க்கவி போன்றோரை துரோகிகள் ஆக்க முனைகின்றார்கள் .அதுதான் எங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் .  புலிகள் மாற்று இயக்கங்களை போடத்தொடங்கதான் போராட போன பலர் நாட்டைவிட்டு ஓடவேண்டிவந்தது .அவர்களையும் போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஒடிவந்தவர்களையும் ஒப்பிடவேண்டாம் .

ஓடிவந்து மூக்கு முட்ட வெட்டிக்கொண்டு வட்டிக்கு காசு கொடுக்கும்  தேசியம் பேசும் போலிகள் தாங்களும் ஏதோ போராளிகள் போல கதைப்பது வேடிக்கையிலும் வேடிக்கை .

  • கருத்துக்கள உறவுகள்

த சூ,

நீங்கள் எவ்வளவுதான் குத்தி முறிந்தாலும், ஆதாரம் இருக்கா என்று கேட்டு காமெடி பண்ணினாலும், நாம் சொல்லும் கருத்துகளை எல்லாம் ஊகம், காழ்ப்புணர்சி, (ஆனா நீங்க சொலுறது எல்லாம் வரலாறு) என்று புறம்தள்ளினாலும், உண்மை ஒன்றுதான்.

புலிகள் ஆயுதப்போரில் அளப்பரிய சாதனைகள் செய்தார்கள், நெக்குருகும் தியாகம் புரிந்தார்கள், போராட்டத்தை ஒர் எல்லை வரை நகர்த்தி வந்தார்கள் என்பதில் இரு கருத்தில்லை.

ஆனால் எல்லா பயணங்களுக்கும் ஒரு இயற்க்கை எல்லை உண்டு.

தனிநாடு கேட்ட அண்ணா ஒரு கட்டத்தில் தன் கோரிக்கையின் எல்லை உணர்ந்து - மாநில சுயாட்ட்சி கோரி - இறுதியில் இந்தி திணிப்பற்ற இந்தியன் யூனியனுக்குள் சுருங்கிப் போனார். கடந்த நூற்றாண்டின் மதிநுட்பம் மிகு தமிழ் தலைவர்களில் ஒருவர் - அவரால் ஏன் தனிநாட்டு கோரிக்கையை தொடர முடியவில்லை?

ஐஆர்ஏ - நமக்கு எல்லாம் பிதாமகர்கள் - போராட்டத்தில் - ஒரு கட்டத்தில் அவர்களும் ஆயுதப்போரை முடிவுக்கு கொண்டுவந்து தாம் விரும்பிய ஒன்றிணைந்த அயர்லாந்து கோரிக்கையை கைவிட்டார்கள்.

கஸ்மீரின் நஷனல் கான்பிரண்ஸ்சும் இப்படியே அப்ப்துல்லாவை தமிழ் நாட்டில் சிறைகூட வைத்திருந்தார்கள் - இன்று அவர்களும் கப்சிப்.

அதற்க்காக ஆயுத விடுதலையை நாடுகள் அடையவில்லை என்பதில்லை. வங்கம். கிழக்கு திமோர், சவுத் ஓசேசியா, கொசவோ என்று ஆயுதபோரின் மூலம் விடுதலை பெற்ற நாடுகளும் உள்ளன. ஆனால் இவற்றுக்கெல்லாம் குறைந்த பட்சம் இன்னொரு சிறு நாட்டின் ஆதரவாது இருந்தது.

இங்கே தீர்மானிக்கும் தரவு இதுதான். எமது தனிநாட்டுக் கோரிக்கையை இந்தியா முழு மூச்சாக எதிர்க்கிறது. இது இந்தியா உடைந்த்ஹாலொழிய மாறாது.

இந்தியாவை எதிர்த்து நம்மை ஆதரிக்க பாகிஸ்தான் சீனா போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளே தயார் இல்லை.

எந்த ஒரு நாடும் ஆதரவளிக்காமல், இந்தியாவின் பெரும் எதிர்ப்பை மீறி தமிழ் ஈழம் அமைப்பதென்பது - மிக, மிக, மிக சாத்தியமில்லாத விடயம்.

தனி நாடு காண இருக்கும் ஒரே வழி - தனி நாடு ஒன்றே தனக்கு உகந்தது என்று நினைக்கும் நிலைக்கு இந்தியாவை வரவிப்பது.

அதைச் செய்ய இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சிண்டு முடியவேண்டும்.

இந்த வழிக்கு நேர்மாறான வழியிலேயே 87-09 வரை புலிகள் பயணித்தார்கள். அவர்களின் செயல்பாட்டுகள் இலங்கை-இந்திய உறவை மேலும் மேலும் வலுவாக்கியது.

தனியே ஆயுத பலத்தை மட்டும் நம்பி இந்தியாவின் தென்கோடியில் அவர்கள் விரும்பாமல் ஒரு நாட்டை உருவாக்கி விடலாம் எண்டு பிரபா கொண்டது, என்றுமே நிறைவேறியிருக்க முடியாத திட்டம்.

இதனால்தான் சொல்கிறேன் புலிகள் எல்லாத்தையும் 0 ஆல் பெருக்கினார்கள் என்று.

குமரப்பா புலேந்திரன் விடயத்தில் இந்தியா தவறிழைத்தது உண்மைதான். ஆனால் அப்போ எல்லாம் காலம் கடந்த ஒரு நிலை.

எப்படி 2005 இல் புலிகள் ஒருபோதும் சரிப்பட்டு வரமாட்டார்கள், தம் வழிக்கு வரமாட்டார்கள் என மேற்குலகு நினைத்ததோ அப்படி ஒரு முடிவுக்கு 87 செப்டெம்பர் மாதமே இந்தியா வந்துவிட்டிருந்தது.

மாகாண சபை விவகார இழுத்தடிப்பு, திலீபனின் போராட்டம், ஒவ்வொருநாளும் மாணவர்கள் கோட்டைக்கு போய் ஆமிக்கு கல் எறியும் போராட்டம், தவிர புலனாய்வு தகவல்கள் எல்லாம் புலிகள் இந்தியாவுடன் போராட தயாராகி வருவதை இந்தியாவுக்கு உணர்த்திய அதே சமயம், தன்னை பற்றியும், தன் நாட்டை பற்றியும், தன் ராணுவம் பற்றியும் மிகை மதிப்பீட்டில் இருந்த ராஜீவ், தீச்சித் போன்ற தோரணை மிக்க அதிகாரிகள்சொல்கேட்டு புலிகளை 48 மணியில் நசுக்கி விடலாம் என்று ஏலவே முடிவு செய்து விட்டார்.

இப்படி ஒரு நிலையில்தான், ஒப்பந்த படி யாருக்கும் அறிவிக்காமல், ஆயுதங்களுடன் ( இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை) 12 புலிகளும் மாட்டுகிறார்கள்.

இவர்களை நேவி காங்கேசந்த்ஹுறைக்கு கொண்டு வந்து -பலாலி ஆமியிடம் கொடுக்கிறது. இலங்கை ஆமியை சுற்றி இந்திய ஆமி நிக்கிறது. தந்திரமாக காய் நகர்த்திய இலங்கை - தீச்சித்திடம் - 12 பேரும் திருமலை சிங்கள குடியேற்றவாசிகளை கொல்லப் போனவர்கள் என சொல்கிறது. இதை நம்ப்பியோ, அல்லது நம்பாமல் புலிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தோ - கொழும்புக்கு கொண்டு போவதை தடுக்க வேண்டாம் என்ற ஓடர் வருகிறது.

இந்தியா ராணுவ அதிகாரிகள் அதிர்ந்தார்கள் என்பது உண்மை. அழுதார்கள் என்பது கற்பனை ( கவலைப் படாதீர்கள் ஆதாரம் எல்லாம் கேக்க மாட்டேன்).

இதுதான் நடந்தது.

புலிகள் தனிநாட்டு கோரிக்கையை கைவிடாது இருந்தார்கள் என்று நீங்கள் திரும்ப திரும்ப பொய்யை எழுதினால்தான் உங்கள் கருத்தை தக்க வைக்க முடியும்.
 
உங்களால் உண்மை பேச முடியவில்லை என்பதுதான் தெளிந்த உண்மையாக இருக்கிறது.
 
புலிகள் மட்டும் களத்தில் நின்று கையசைததால் நடந்து இல்லை போராட்டம்.
சிங்களவனும் 1980 இல் இருந்து தந்திரோபாயமாக நகர்ந்துகொண்டே இருந்தான் ....
இந்தியாவும் அப்படியே நகர்ந்துகொண்டே இருந்தது.
அமெரிக்காவும் தெற்காசிய பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த அவ்வப்போது நகர்வுகளை செய்துகொண்டே இருந்தது.
இவற்றுக்குலால்தான் எமது போராட்டம் நடந்து கொண்டு இருந்தது.
 
1984-1985 பகுதியில் இந்திய பாகிஸ்தான் போர்தான் இலங்கையில் மறைமுகமாக நடக்க தொடங்கி இருந்தது. இதனால்தான் புலிகள் இந்தியாவை அதிகம் நம்பாமல் போனதற்கு முக்கிய காரணம். மாலைதீவுக்கு போராளிகளை அனுப்பி அவர்களை மாலைதீவில் வைத்து கொலை செய்து மிகுதிபேரை கைது செய்து. தமிழ் போராளிகளை வெறும் எள்ளுகீரை போலவே பாவிக்க தொடங்கி இருந்தது.
(நீங்கள் 1987 நேரத்தில் புலிகள் பொறுமையாக இந்தியாவின் செல்ல பிள்ளை ஆகி இருந்தால் பலத்தையும் சாதித்து இருக்கலாம் என்று எழுதினீர்கள். ஒரு உண்மையான அரசியல் சிந்தனைதான் ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நடந்த உண்மைகள் உங்களுக்கு ஞாபகத்தில் இல்லை. இந்தியா வெறும் கையுடன் வரவில்லை செல்ல பிள்ளைகளை கூட்டிக்கொண்டுதான் வந்தது. வருவதற்கு முன்பே இந்தியா திட்டங்களுடந்தான் வந்தது. முக்கி முறுகி தனது திட்டத்தை நிறைவேற்றிகொண்டுதான்  இருந்தது 1989 இந்திய இராணுவத்தை திருப்பி அழைக்குமாறு இலங்கை அரசு வைத்த கோரிக்கை. வி பி சிங் பிரதமர் ஆனதன்  விளைவாக  இந்திய இராணுவம் வெளியேறி போக. செல்ல பிள்ளைகளும் கூட கப்பல் ஏற வேண்டி வந்தது.) 
 
புலிகள் இப்படி செய்திருக்கலாம் ............ என்று நீங்கள் சொல்லுவதிலும் விட கூடுதலாக புலிகள் இறங்கிப்போன நேரங்கள் இடங்கள் இருக்கின்றது. சுற்றி வந்த  சுருக்குகள் கழுத்தை நெருங்கும்போது அது ஒன்றுதான் தெரிவாகவும் இருந்தது.
ஒரு இனவாத அரசு போரை தொடரவே விரும்பும் ....இது சிறு பிள்ளைக்கும் தெரியும் போர் தொடர்ந்தால்தான் அடுத்த இனத்தை வதையுண்டு சிதறடிக்கலாம்.
போரை தவிர்க்க புலிகள் கொடுத்த விலைகள் உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை. போர் தொடர்ந்தால் தாமும் மக்களும் அழிந்து விடுவோம் என்பது சிறு பிள்ளைக்கும்  தெரிந்தே இருந்தது.
பிரபாகரன் ஒரு சர்வாதிக்க தனமானவர் 
தமிழ் ஈழ கொள்கை கட்டி பிடித்திருந்தார் .
இப்படி நீங்கள் முழுமையாக நம்பி இருந்தால் உங்கள் கருத்துக்கள் அதன் தாக்கத்தை பிரதிபலித்தே இருக்கும். உங்களால் ஒரு உண்மையான விவாதத்தை தொடர முடியாது. அல்லது உங்களுக்கும் உண்மை தெரியும் ஆனால் இப்படி எழுதினால்தான்  உங்களுடைய வாதத்தை தக்க வைக்கும்  தந்திரோபாயம்  ஈடேறும்  அதனால் தொடர்கிறீர்கள்.
(அர்ஜுன் அவர்கள்போல் வெறும் அவதூறுகளை கொட்டாமல் எழுதுவது கொஞ்சம் பாராட்டுக்கு உரியது. அர்ஜுன் அவர்களும் பாவம் அவருக்கு நாட்டில் நடந்தது  எதுவும் தெரியாது என்பதை அவர் எழுதுவதை வாசித்தாலே தெரியும். யாரும் எழுதியதை வாசித்துவிட்டு விடுதலை போரை கூடியிருந்து செய்ததுபோல்  ஒரு மாஜலாம் காட்டி வருகிறார். அவரை அவரது எழுத்துக்களே அடையாளம் காட்டுவதை கூட அவரால் கண்டு கொள்ள முடியவில்லை.
தமிழ் படங்களில் வில்லனுக்கு வரும் அடியாட்கள் போல் இங்கு யாழ் களத்தில் தன்னை தானே அவமானபடுத்தி வருகிறார்) 
சிங்களவர்களுக்காக குரல் தரவல்ல சிலர் யாழ் களத்தில் இருக்கின்றார்கள் 
இவர்கள் குரல் கொடுப்பது சிங்களவர்களுக்கு தெரியுமா என்பதுதான் எனது கேள்வி  :D
  • கருத்துக்கள உறவுகள்

புலவர் இது உங்களுக்கு,

http://en.m.wikipedia.org/wiki/Sri_Lankan_presidential_election,_2010

யாழில் 25% வன்னி 40, மட்டில் 70 திருமலையிலும் அப்படியே.

தமிழர்கள் எவரும் போட்டியிடாத தமிழர்களை கொடுமை செய்த இருவர் போட்டியிட்ட தேர்தலில் இது நடந்தது. இதைப் போய் வடமாகாண சபையுடன் ஒப்பிட முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

விடிய விடிய இராமர் கதை தான் ,

நாங்கள் செய்ததை பிழைகளை எங்கட ஆட்களே புத்தகமாக எழுதியதும் தீப்பொறி என்ற பத்திரிகையை தொடங்கியதும் எல்லோரும் அறிந்தது ,பின்னர் அவர்களை கூட கொன்றது புலிகள் தான்.இன்று வரை  தாங்கள் செய்த கொலைகளை தவறுகளை புலிகள் ஏற்று மன்னிப்பு கேட்க தயாராக இல்லை அதை இன்று சொல்லும் யோ கர்ணன் ,சாத்திரி ,தமிழ்க்கவி போன்றோரை துரோகிகள் ஆக்க முனைகின்றார்கள் .அதுதான் எங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் .  புலிகள் மாற்று இயக்கங்களை போடத்தொடங்கதான் போராட போன பலர் நாட்டைவிட்டு ஓடவேண்டிவந்தது .அவர்களையும் போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஒடிவந்தவர்களையும் ஒப்பிடவேண்டாம் .

ஓடிவந்து மூக்கு முட்ட வெட்டிக்கொண்டு வட்டிக்கு காசு கொடுக்கும்  தேசியம் பேசும் போலிகள் தாங்களும் ஏதோ போராளிகள் போல கதைப்பது வேடிக்கையிலும் வேடிக்கை .

அண்ணை  குறைவிளங்கக்கூடாது

யாரு வட்டிக்கு கொடுத்தது

யாரு மூக்குமுட்ட சாப்பிட்டது

யாரு போராளிகள் போல கதைத்தது...

இப்படி எங்கோ எங்கோ ஒருவர் செய்ததை

புலிகள் எல்லோரும் செய்தார்கள் என ஒரே சாக்குக்குள் போட்டு

அதை தமிழருக்கு உதவ விழையும் அத்தனை பேருக்கும்  சூட்டி

காவித்திரிவதை இன்னும் எத்தனை நாள் செய்யப்போகின்றீர்கள்.....??

உங்கள் எழுத்தில் இருப்பவை அப்படியே நிர்வாணமாக தெரிகிறது

இன்னும் எத்தனை வருடத்துக்கு எதற்கும் உதவாக இந்த --------.........?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் எதோ கம்பன் கழக பட்டிமன்றத்தில் நாமெல்லோரும் பேசுவது போல, விவாதப் பாயிண்ட் அது இது என்று பண்ணும் காமெடிக்கு அளவே இல்லை.

நாம் பேசுவது எம்மினத்தின் இருப்பு பற்றியது இதைப் போய் குழாயடி சண்டை மாரி ஆக்கி எதோ விளையாட்டுப் போட்டி போல ஏட்டிக்கு போட்டியாக கருத்து எழுதுபவர்களை இக்னோர் பண்ணி ரொம்ப காலமாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
கருத்துக்களத்தில் ஒரு கருத்தை வைத்தால் .....
அது சரி  அல்லது அது பிழை என்று ஒருவர் சுட்டி காட்டும் தருணத்தில். அதை ஒப்பிகொள்ளுதல் அடிப்படை நாகரீகம்.
 
இனத்தின் இருப்பை யாழில்தான் உங்களால் தக்க வைக்க முடியும்.
இங்குதான் மகிந்தவும் மோடியும் பொழுது போக்கிக்கொண்டு இருக்கிறார்கள். உங்களால் காமெடிக்கு ஒரு அளவே இல்லை.
 
எமது இனத்தின் இருப்பிற்கு எமது எதிரிதான் பகையாளி. எமது எதிரி என்ன செய்தான் என்பதே தெரியாது.
புலிகள்  கைகட்டிகொண்டு தேவாரம் பாடியிருந்தால் இந்தியா கோவில் கட்டி தந்திருக்கும் என்று சடஞ்சுகொண்டு மட்டும்தான் இருக்க முடியும். 
 
அவனின் சொந்த நாட்டிலேயே கோவில்களை கொள்ளை அடிக்கத்தான் கட்டி வைத்திருக்கிறான்.
 
கம்பன் கழக பட்டிமன்றம் மாதிரி ......... கிளிபிள்ளை போல ஒரே விடயத்தை எல்லா திரியிலும் யார் எழுதிவாறார் என்று தெரியவில்லை.
 
இக்னோர் பண்ணுறம்  இங்காராம் பண்ணுறம் என்று பொய் எழுதி வருபவர்கள் ஒரு தருணத்தில் ஓட்டம் எடுக்கத்தான் வேண்டும்.
உண்மை எழுத துணிவு இருப்பவர்களுக்கு ................ கற்பனை இலக்கியம் வைத்து சடைய வேண்டிய தேவை இல்லை.
 
இங்கு யாழ் களத்திற்கு .............. மழைகாலம் வந்தால் ஈசல்கள் வந்துபோவது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன்பும் பல ஈசல்கள் வந்து மழைகாலம் முடிய ஓடிவிட்டது. உண்மை உலகில் வாழ முடியாது அவர்களால்.
 
நாங்கள் இங்குதான் எப்போதும் இருக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.