Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமாம்- நடிகை குஷ்பு

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே.. காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்குத்தான் எதிரியே தவிர ஈழத் தமிழருக்கு அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

 திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு திடீரென டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதன் பின்னர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- ஈழத் தமிழருக்கு ஆதரவானது காங்: நடிகை குஷ்பு பின்னர் நேற்று சென்னை திரும்பிய குஷ்பு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார்.

அவருக்கு காங்கிரசார் குஷ்புவை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது: இந்தியாவை காப்பாற்ற காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்பதால் இந்த கட்சியில் இணைந்தேன். என்னைப் பொறுத்தவரையில் திசைமாறிப் போய் தாய் வீடு திரும்பியதைப் போல காங்கிரசில் இணைந்ததை உணர்கிறேன்.

சாதி, மதபேதமின்றி நாட்டுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். நாடு முழுவதும் தெருத்தெருவாக சென்று காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்வேன். பொதுவாக ஆசைக்காக அரசியலுக்கு வரக் கூடாது. கட்சிக்கு நாட்டுக்கு உழைப்பதற்காக அரசியலுக்கு வர வேண்டும். திமுகவில் இருந்து ஏன் வெளியேறினேன் என்று அப்போதும் சொல்லவில்லை. இன்றும் சொல்லமாட்டேன். நாளை கேட்டாலும் சொல்லமாட்டேன்.

 நான் பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. எனக்கு என்ன பதவி கொடுப்பது என்பதை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். கோடிக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களில் ஒருத்தியாக இருப்பேன். எனக்கு காங்கிரஸ் மீது முழு நம்பிக்கை இருப்பதாலேயே இணைந்தேன். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழருக்கு எதிரானதாக இருந்தது இல்லை. காங்கிரஸைப் பொறுத்தவரை அது தீவிரவாதிகளுக்கு எதிரான ஒரு கட்சி.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நிச்சயமாக ஒரு தீவிரவாத இயக்கம்தான். தீவிரவாதத்தை கடைசி மூச்சு உள்ளவரை எதிர்ப்போம். காங்கிரஸை ஈழத் தமிழருக்கு எதிரான கட்சியாக சிலர் சித்தரித்துள்ளனர். இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார். இந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோபண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
 
 http://www.pathivu.com/news/35705/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம்... ஒரு நடிகையின் கருத்துக்கு, ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகின்ரது? :o

அப்பப்ப இந்த மாதிரி காமெடி பண்ணுவ , கண்டுக்காதேங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமாம்- நடிகை குஷ்பு

இதைக்கண்டு பிடித்துச்சொல்லத்தான்

அக்கா காங்கிரசில் சேர்ந்தாவோ......

நடக்கட்டும்

நடக்கட்டும்

பாவம்

சுந்தர்.சீ.சீ........

இந்தியாவிலும் தேசிய  அளவில் புலிகள் தான் சோறு போடுகிறார்கள்....

எங்களுக்கு நடிகர் பிரபு பத்தியும் பேச தெரியுமே.
 
சும்மா நம்ம வாயைக் கிளறி ****** புண்ணாக்காம இருக்கோணுமுங்கோ...  :wub:

விடுதலைபுலிகளை தீவிரவாதிகள் என்று சொன்ன முதல் நடிகை ஜெயலலிதா ,,, இரண்டாவது நடிகை குஸ்பூ . :D 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைபுலிகளை தீவிரவாதிகள் என்று சொன்ன முதல் நடிகை ஜெயலலிதா ,,, இரண்டாவது நடிகை குஸ்பூ . :D[/size] [/size]

அத்துடன் பாரதீய ஜனதா.. :wub:

முழு உலகும் சொன்னதைத்தான் குஷ்புவும் சொல்லுகின்றார்.தெளிவான ஆள் போலகிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

முழு உலகும் சொன்னதைத்தான் குஷ்புவும் சொல்லுகின்றார்.தெளிவான ஆள் போலகிடக்கு .

அண்ணோய்,

நீங்க வேற, விசயம் புரியாம, ரீயூப் லைட் மாதிரி, குளறிக்கிட்டு....

அத, நீங்க சொல்லலாம், முழு உலகமும் சொல்லலாம். உலகம் முழுவதும் தீவிரவாதம் பரப்ப முயலும் மதம் ஒன்றை சார்ந்த இந்த நடிகை சொல்ல எப்படி முடியும்?

தீவிரவாதம் பிழை எண்டு, முதல்ல சிரியா போய், அவங்க கிட்ட சொல்லிட்டு வந்தா, நாங்க, காத குடுக்கிறம், இவ, பூ வைக்க...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்பு, பிறப்பால்... ஒரு முஸ்லீம்.
சினிமாவில் நடிக்க வந்த பின்.... பூவும், பொட்டும் சூடிக் கொண்டு இருப்பவர்.
இவருக்கு வயது ஏற, ஏற...... சினிமாவில் நடிக்க, யாரும் கூப்பிடாததால், பிழைப்புக்காக,

அப்போதைய காலகட்டத்தில், தமிழ்நாட்டு அரசான  அ.தி.மு.க. வின், "ஜெயா ரீவி"யில் தொழில் செய்ய இணைந்தார்.
 
பின் கருணாநிதி ஆட்சி வர, "சன் ரீவி" க்கு தாவி....

தி.மு.க.விலும் கட்சி அங்கத்தவராக சேர்ந்து.... கட்சிப் பணிகளை? ஆற்றி வந்தார்.
தி.மு.க.வில் இவரை, மேடையில்... ஒரு அலங்காரப் பொருளாக வைத்து கூட்டம்  சேர்க்க பயன்படுத்தினார்கள் என்ற கடுப்பிலும்,
இவரை அங்கு வளர விட்டால், ஸ்ராலின் முதலமைச்சர் ஆக முடியாமல், போய்விடுமே என்ற அச்சத்திலும், தி.மு.க.வில் உள்ள ஸ்ராலின் ஆதரவாளர்கள் உசாராக இருக்க,

அழகிரியுடன் ஒட்டிக் கொள்ள முயன்றார்.

அழகிரிக்கு, இருக்கிற பிரச்சினையையே.... சமாளிக்க திணறிக் கொண்டிருக்கும் போது....

இவரின், செயல்களை கவனிக்க நேரம் இல்லை.

ஆள்... பொறுத்திருந்து பார்த்தார்,  எவரும் தன்னை சீண்டாமல் இருக்கிறார்களே...

என்ற கவலையில், மீண்டும்...மனம் தளராமல்,
 
டெல்லிப் பக்கம், தன் பார்வையை செலுத்தினால்.....
காங்கிரஸ் கட்சி, அங்கு... ஈயடித்துக் கொண்டிருந்தது.

இதுதான்... சந்தர்ப்பம் என்று... அங்கு போய்,ஒட்டிக் கொண்டும்,

அவ்வப்போது.... "அரிப்பு"  எடுக்கும் போதெல்லாம், கட்சி மாறிக் கொண்டும்... இருக்கும் இவருக்கு,

ஈழத்து அரசியலைப் பற்றி, அரிச்சுவடியும் தெரியாத, இந்த -----க்கு என்ன அருகதை உள்ளது.

எங்கே... செந்தமிழன் சீமான்,

இந்த நா-, தமிழ் நாட்டுப் பக்கம் எட்டியும் பார்க்காமல்... அடித்து விரட்ட வேண்டும்.

இதுக்கெல்லாம் காரணம்,
இவவுக்கு... கோயில் கட்டி, கும்பிட்ட தமிழ்நாட்டு மக்களால் வந்த வினை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முழு உலகும் சொன்னதைத்தான் குஷ்புவும் சொல்லுகின்றார்.தெளிவான ஆள் போலகிடக்கு .

காங்கிரஸ் கட்சிதான் ஈழதமிழருக்கு ஆதரவான கட்சியாம்.
ஆள் உங்களைவிட உலக அரசியலில் தெளிவா இருக்கிறா ...... தெளிஞ்ச தண்ணிமாதிரி.
ஈழ தமிழ் மக்காள் ..... கண்ணை மூடிக்கொண்டு ஒரு கப் அடிக்க வேண்டியதுதான். 
  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ பார்ட்டிஎன்றால் பார்ட்டிதான் . :lol:

கருத்து உபயம், அர்ஜூன் அண்ணா.
நுணலும், தன் வாயால்,கெடும். :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எவரும் தன்னை சீண்டாமல் இருக்கிறார்களே...

என்ற கவலையில், மீண்டும்...மனம் தளராமல்,

எவரும் சீண்டாவிட்டால் மேடம் என்ன செய்வார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

எவரும் சீண்டாவிட்டால் மேடம் என்ன செய்வார்கள்!

டெல்லி வரை....

அகலக், கால்.... பதிப்பார்கள். :D  :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கேவலம்... ஒரு நடிகையின் கருத்துக்கு, ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கபடுகின்ரது? :o

27-kushboo-fb-600.jpg

என்ன... புங்கையூரான், சின்னப் பிள்ளை மாதிரி....

தமிழ் நாட்டில்,  நடிக்க வந்து.... முதலமைச்சனாவர்கள் அதிகம்.

இனியும்..... இந்தத் தவறை, தமிழக மக்கள் செய்ய.... விடப்படாது.

குஸ்பு போன்ற, காஞ்சோண்டிகளை, ஆரம்பத்திலயே...

இனம் கண்டு..... கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி...

தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் அடித்து, துரத்தி விட வேணும்.

இதை... இப்போ, கவனிக்காமல் விட்டால்.... நாளைக்கு,

குஸ்புவும், தமிழக முதல்வராக வந்து, அகில உலக தமிழரின் உயிரையும், குடித்து விடும்.

அந்தளவுக்கு... தமிழ்நாட்டு  நிலைமை, "வெரி, சீரியசாக... இருக்கு"

Edited by தமிழ் சிறி

குஷ்பு தனது அரசியலுக்கு அப்படி பேசியிருக்கின்றார் .

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் சிரியாவிற்கும் என்ன சம்பந்தம் நாதமுனி.உலகம் முழுக்க தீவிரவாதம் பரப்பும் மதம் ,நீங்கள் என்ன உலகத்திற்கே தீர்ப்பு சொல்லும் நாட்டாண்மையோ ? :icon_mrgreen:

நேற்று கனேடிய பாராளுமன்றத்தில் புலிகள் பயங்கரவாதிகள் என்று பேசியிருக்கின்றார்கள் ஒரு பயலும் எதிர்த்து வாய் திறக்கவில்லை ?  தெரியும் என்ன நடக்கும் என்று .வந்திடாங்கள் குஷ்புவை திட்டிக்கொண்டு . :o

குஷ்புவோடும் சீமானுடனும் நில்லுங்கள் இதுதான் புலிகள் விட்டு சென்ற அரசியல் . :icon_idea:

எனது எழுத்துகள் ஒருபோதும் புலிக்கும், உங்கள் புளட்டுக்கும் குடை பிடித்ததில்லை. தமிழுக்கு மட்டுமே....

துவக்கு தூக்கின உங்களிலும் பார்க்க, எனக்கு தமிழன் என்ற முறையில் சொல்ல உரிமை கூட இருக்கு. தீவிரவாதம் என்று வெளிகிட்டுப் போட்டு, பின்னர் குஸ்பு, புலியை மட்டும் தான் சொல்கிறார் என்று வக்காலத்து வாங்கும் உங்கள் நாட்டாமைத்தனம், பச்சோந்தித்திதனம்.

இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் சிரியா போனதும், திரும்பியவர்களில் மூவர் நேற்று கைது ஆனது தெரியாமல் கதைக்க வர வேண்டாம், நாட்டாமை. முதலில் உங்கள் குஸ்புவை அவர்களுக்கு அறிவு சொல்ல சொல்லுங்கள்.

உங்கள் தெய்வம் குஸ்புவுக்கு கனடாவில் கோவில் எழுப்புங்கள். வந்து கும்புடுகிறேன்.

சரியோ. பிழையோ, புளட்டோ, புலியோ, கண்ட, கண்ட ........ எல்லாம் தமிழன் பத்தி பேச, உங்களுக்கு உடன்பாடு என்றால்... என்னத்தை சொல்ல...

நாளைக்கு புளட்டும், ஒரு...... எண்டு சொன்னால், அதை எதிர்க்கும் தமிழ் உணர்வு எனக்கு உண்டு, கனடா நாட்டாமையரே...

நியானி: ஒரு சொல் தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொருத்தவரையில்....
"குஸ்பு" என்பவர், பொம்பிளை... சுப்பிரமணிய சாமி. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எனது எழுத்துகள் ஒருபோதும் புலிக்கும், உங்கள் புளட்டுக்கும் குடை பிடித்ததில்லை. தமிழுக்கு மட்டுமே....

துவக்கு தூக்கின உங்களிலும் பார்க்க, எனக்கு தமிழன் என்ற முறையில் சொல்ல உரிமை கூட இருக்கு. தீவிரவாதம் என்று வெளிகிட்டுப் போட்டு, பின்னர் குஸ்பு, புலியை மட்டும் தான் சொல்கிறார் என்று வக்காலத்து வாங்கும் உங்கள் நாட்டாமைத்தனம், பச்சோந்தித்திதனம்.

இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் சிரியா போனதும், திரும்பியவர்களில் மூவர் நேற்று கைது ஆனது தெரியாமல் கதைக்க வர வேண்டாம், நாட்டாமை. முதலில் உங்கள் குஸ்புவை அவர்களுக்கு அறிவு சொல்ல சொல்லுங்கள்.

உங்கள் தெய்வம் குஸ்புவுக்கு கனடாவில் கோவில் எழுப்புங்கள். வந்து கும்புடுகிறேன்.

சரியோ. பிழையோ, புளட்டோ, புலியோ, கண்ட, கண்ட ........ எல்லாம் தமிழன் பத்தி பேச, உங்களுக்கு உடன்பாடு என்றால்... என்னத்தை சொல்ல...

நாளைக்கு புளட்டும், ஒரு...... எண்டு சொன்னால், அதை எதிர்க்கும் தமிழ் உணர்வு எனக்கு உண்டு, கனடா நாட்டாமையரே...

நியானி: ஒரு சொல் தணிக்கை

கோபம்  வேண்டாம்

அதையே  அவர் விரும்புகின்றார்..... :( 

உங்களையே தட்டிவிட்டார் என்றால் நாம் எம்மாத்திரம்.....?? :( 

  • கருத்துக்கள உறவுகள்

இது மொழிபெயர்ப்புப் பிரச்சினை போலத் தெரிகின்றது. குஷ்பு புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கின்றேன். எத்தனையோ பேர் சொல்லிவிட்டார்கள். இப்ப இவரின் முறை.

பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. வன்முறையைக் கையில் எடுத்தவர்கள் தீவிரவாதிகள்தானே. எனவே புலிகள் தமிழீழக் கொள்கையில் தீவிரவாதிகளாகத்தான் இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

27-kushboo-fb-600.jpg

என்ன... புங்கையூரான், சின்னப் பிள்ளை மாதிரி....

தமிழ் நாட்டில்,  நடிக்க வந்து.... முதலமைச்சனாவர்கள் அதிகம்.

இனியும்..... இந்தத் தவறை, தமிழக மக்கள் செய்ய.... விடப்படாது.

குஸ்பு போன்ற, காஞ்சோண்டிகளை, ஆரம்பத்திலயே...

இனம் கண்டு..... கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி...

தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் அடித்து, துரத்தி விட வேணும்.

இதை... இப்போ, கவனிக்காமல் விட்டால்.... நாளைக்கு,

குஸ்புவும், தமிழக முதல்வராக வந்து, அகில உலக தமிழரின் உயிரையும், குடித்து விடும்.

அந்தளவுக்கு... தமிழ்நாட்டு  நிலைமை, "வெரி, சீரியசாக... இருக்கு"

ஆரிய மாயை... இந்தியா முழுவதும் ' வெள்ளை நிறம்' என்பதற்கும் 'அழகு' என்பதற்கும் வித்தியாசமான வரைவிலக்கணம் ஒன்றை.. மற்றைய இந்திய மக்களிடம், மிகவும் ஆழமாக எழுதி வைத்துள்ளது! வட இந்தியாவிலிருந்து,, தெற்கு நோக்கிய பயணத்தில்.. வெண்மை நிறம் மங்கிக்கொண்டே சென்று.. தென்னிந்தியாவில் முற்றுமே 'வெள்ளைத்தோல்' அற்றுப்போகின்றது!

எமது தெய்வங்கள் கூட.. எமது நிறம் கிடையாது!

இதுவே ஜெயலலிதா, குஷ்பு போன்றவர்களின் முதலீடாக அமைகின்றது!

பிரபாகரனும், நாங்களும் கண்டிச் சிங்களவர் போல.. வெள்ளைத்தோலுடன் இருந்திருந்தால்.. முள்ளிவாய்க்கால் நிச்சயம் தடுக்கப்பட்டிருக்கும்!

ஐரோப்பாவில் 'இபோலா' வருவதற்கும்... ஆபிரிக்காவில் இபோலா வருவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு!

அதற்குள்ளும் தென்னாபிரிக்காவில் வருவதற்கும்... மேற்காபிரிக்காவில் வருவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு!

இதை எமது தமிழக மக்கள் உணர்ந்து கொள்ளாதவரை.. குஷ்புக்கள், ஜெயலலிதாக்கள், எங்கள் மீது சவாரி விட்டுக்கொண்டே இருப்பார்கள்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது மொழிபெயர்ப்புப் பிரச்சினை போலத் தெரிகின்றது. குஷ்பு புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கின்றேன். எத்தனையோ பேர் சொல்லிவிட்டார்கள். இப்ப இவரின் முறை.

பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. வன்முறையைக் கையில் எடுத்தவர்கள் தீவிரவாதிகள்தானே. எனவே புலிகள் தமிழீழக் கொள்கையில் தீவிரவாதிகளாகத்தான் இருந்தார்கள்.

அப்படி... என்றால்,

மகாத்மா காந்தி பயங்கர வாதி,

சோனியா காந்தி தீவிர வாதியா?

நல்ல... கதையாய் இருக்கு.

Edited by தமிழ் சிறி

குஸ்பு ஒரு ------------- கீறிட்ட இடத்தை நிரப்பிப்போட்டு செய்ய வேண்டிய அலுவல்கள் நிறைய இருக்கு போய்ப்பாருங்கப்பா  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்புவுக்கு, செந்தமிழில்,
நல்ல... பேச்சுக் குடுப்பம் என்றால்,
புதிய களவிதி முறைகள்,  எம்மை கட்டிப் போடுகின்றது.
 
10801881_746520502070401_707385404544009

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.