Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி
news
ea24483661c7790be2f8631d973dfcf8.jpg
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையினை ஏற்கமாட்டேன் என எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
 
இலங்கையில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வழங்க வேண்டும் என தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
ஆயினும் தான் ஆட்சிக்கு வந்தால் அந்தக் கோரிக்கையினை நிராகரிப்பேன் என உறுதியளித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின்படி பெளத்த மதத்துக்கு அரசமைப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 
சுதந்திரமான தனிநாடு ஒன்றை உருவாக்கும் நோக்கில் தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டம் இலங்கை இராணுவத்தால் 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது.
 
அதன்பின்னர் பிரிவினைக் கோரிக்கையை  கைவிட்டுவிட்டதாகத்  தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்-  இவ்வாறு சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
03 டிசெம்பர் 2014, புதன் 8:55 மு.ப
  • Replies 69
  • Views 5.4k
  • Created
  • Last Reply

மைத்திரிக்கு இதல்லாம் டூ மச். கக்கூசு வாளியுடன் களி தின்ன தயாராவதை விட்டு விட்டு 
சும்மா வெட்டி பேச்செல்லாம் மைத்திரிக்கு எதற்கு.  :D  :D  :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வழங்க வேண்டும் என தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தமிழரையே ஏற்கமாட்டிங்கள் பிறகு எப்படி சமஸ்டி கோரிக்கையை ஏற்கபோறியள்

  • கருத்துக்கள உறவுகள்
அப்ப 13 இலாவது ஒரு ஆறு ஏழை கழித்துவிட்டு .......
ஒரு ஐஞ்சாறு தீர்வுத்திட்டம் என்றாலும்  தருவீங்களா ??
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனவாதம் கோலோச்சும் நாட்டின் தலைவராக வரத்துடிப்பவரிடம் - இது எதிர்பார்க்க கூடிய அணுகுமுறைதான்.

மைத்திரி இனவாதியா இல்லாயா என்பதற்கு அப்பால், இலங்கையின் மகாவம்ச மனோநிலை அரசியல், பண்டாரநாயக்க, ரணில் சந்திரிக்கா என்று எவரையும் தமிழர்க்கு நியாயமான தீர்வை தரவிடவில்லை. இதற்கு மைத்திரி மட்டும் விதிவிலக்காக அவர் ஒன்றும் யேசு கிறீஸ்து இல்லை.

மகிந்தவின் வெளியேற்றம் உண்மையில் தமிழர்க்கு சவால்களையே விட்டுச் செல்லும். பேரினவாதம் மறுபடியும் நரித்தனமாக காய் நகர்த்துகிறது. புலிகள் இருக்கும் வரை மகிந்த, கோத்த அபய அவர்களுக்கு ஒரு சொத்து (asset). இப்போ தேவை முடிந்ததும் அவர்களே ஒரு சுமை (liability). எனவே அவர்களை கழட்டிவிட - சகல பேரினவாத சக்திகளும் ஓரணிக்கு வந்துள்ன.

மைதிரி வெண்டதும் - ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப் படும் போது இப்போ இருக்கும் 13ம் சரத்தும் அற்றுப்போகும். சமஸ்டி இல்லை மாகாணசபையே கூட இல்லாமல் போகலாம்.

புலத்தில் இருந்து போதிய ஆதரவில்லாத நிலையில் (அவர்கள் கொடி பிடிப்பதில் பிசி), இந்தியாவின் அலட்சியத்துக்கு மத்தியில் மிகவும் பலவீனமான நிலையில் கூட்டமைப்பும் மக்களும் தமது போராட்டத்தை, உரிமைகளை பாதுகாக்க வேண்டி வரும்.

மகிந்த அகற்ற பட்டதும் மேற்குலகும் அதிகம் அலட்டிக் கொள்ளாது.

அதற்க்காக நாம் மகிந்தவை ஆதரிக்கவும் முடியாது.

கூட்டமைப்பு நிதானித்து செயல்படவேண்டும்.

மகிந்த சேனாதிபதி ஆனால் ........... தமிழர்களுக்கு நன்மை உண்டு என்பது என்னுடைய தனிபட்ட எண்ணம். 
சீனாவின் தொடர் தில்லுமுல்லால் கிந்தியா தனது வப்பாட்டி அரசியலை விட்டு விட்டு எதையாவது இந்தியாவிற்கு சாதகம் ஆனதை என்றாலும் சிந்திக்கும்.
 
இந்தியாவிற்கு சாதகமானது ..... தமிழருக்கும் சாதகமாக வாய்பிருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தரப்பும் தமிழர்களுக்கு உரிமைகளைக் கொடுக்காது என்பது உறுதியாகத் தெரிந்த நிலையில் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் கோசான்சே?

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தமது சொந்த விருப்பின் பேரில் வாக்களிக்கலாம் என்று கூட்டமைப்பு அறிவிக்க வேண்டும்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கூட்டமைப்பு ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கிறார். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

http://www.yarl.com/forum3/index.php?/topic/149850-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

மகிந்தவின் வெற்றியில்

கிட்ட நோக்கு - இப்போதுள்ள நிலையே தொடரும். ராணுவ ஆக்கிரமிப்பு, மாகாணசபை முடக்கம், காணி அபகரிப்பு, குடியேற்றம் ஏதும் மாறாது.

தூர நோக்கு - உருப்படியான தீர்வு ஏதும் கிடையாது. சமஸ்டி என்ற கதைக்கே இடமில்லை.

மைத்திரி வெற்றியில் -

கிட்ட நோக்கு - ரணில் சந்திரிகா மைத்திரி கூட்டு, விக்கியுடன் இணைந்து செயல்படவே விரும்பும். ஆக மேலே சொன்ன உடனடிப்பிரச்சினைகளில் ஒரு தளர்வு ஏற்படும். குடியேற்றம் தடைப்படாவிடினும் குறையும். எமக்கு ஆசுவாசப் பட ஒரு இடைவெளி கிடைக்கும். குறைந்த பட்சமாக 13 பிளஸ் ஐ நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்தியாவையும் கோர்த்து விட்டால் - கிட்ட நோக்கை அடைவது சிரமமில்லை

தூரநோக்கு - சர்வதேச நெருக்கல், சரியான முறையில் கொடுக்கப்படும் புல அழுத்தம், ராஜதந்திர நகர்வு மூலம் சமஸ்டி நோக்கி நகரவேண்டும். எமக்குத்தேவை காணி, பொலீஸ், கல்வி போன்ற விடயங்களில் சுயாட்சி அதிகாரம். ராணுவம் வெளிவிவகாரம் எல்லாம் அவர்களே வைத்துக் கொள்ளட்டும். இந்த அதிகாரங்களை நாம் கோர ஒரு ஒருங்கிணைந்த நகர்வு அவசியம். இதில் புலத்தின் பங்கு அளப்பரியது. தூர நோக்கை அடைய முகா சிரமப்பட வேண்டும்.

கூட்டமைப்பு இப்போ செய்ய வேண்டியது. உருவாகும் புதிய அரசியலமைப்பு 13க்கு கீழே போகாது எனும் உறுதி மொழியை மைத்திரி,ரணில், சந்திரிக்காவிடம் பப்ளிக்காக பெற்றுக்கொண்டு மைத்திரியை ஆதரிக்க வேண்டும். இதில் நிச்சயமாக இந்தியாவை கோர்த்து விட வேண்டும். மைத்திரி வாக்குறுதியை காற்றில் விடலாம். ஆனால் இப்போதைக்கு முடியுமானது இதுவே.

அடுத்து சிங்கள மக்களுக்கு சமஸ்டி என்பது தனிநாடில்லை எனும் செய்தியை எடுத்து செல்லும் வேலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதை கூட்டமைப்பு ஏன் செய்யத் தவறுகிறதோ தெரியவில்லை.

சமஸ்டி நோக்கிய பயணத்தில் பெரும் மூலோபாயங்களில் ஒன்றாக தெற்க்கில் நாம் செய்யும் வேலைத்திட்டங்கள் அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கூட்டமைப்பு ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கிறார். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

http://www.yarl.com/forum3/index.php?/topic/149850-மூன்றாவது-வேட்பாளரை-தமிழர்கள்/

http://www.yarl.com/forum3/index.php?/topic/148798-ஜனாதிபதித்-தேர்தலில்-தமிழர்கள/page-1#entry1057571

ஆனாலும் நான் ஒரு பத்தி எழுத்தாளன் இல்லை.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை ஆதரிக்கும் போது

எமது நியாயமான சமஸ்டி கோரிக்கையை ஏற்க மறுத்தாலும், 13 ஐ ஏற்றுக் கொள்வதாலும், ஒப்பீட்டளவில் மகிந்தவை விட நல்லாட்சி அமைப்பர் என்பதாலும், சிங்கள சகோத்கரரின் நன்மை கருதியும் இம்முடிவை எடுக்கிறோம் என்று அற்விக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பு இப்போ செய்ய வேண்டியது. உருவாகும் புதிய அரசியலமைப்பு 13க்கு கீழே போகாது எனும் உறுதி மொழியை மைத்திரி,ரணில், சந்திரிக்காவிடம் பப்ளிக்காக பெற்றுக்கொண்டு மைத்திரியை ஆதரிக்க வேண்டும்.

 உறுதி மொழியை எந்தக்கட்சியும் வழங்காது. சிங்கள மக்களின் வாக்கை இந்த உறுதி மொழியால் பெற முடியாது என சிங்கள கட்சிகளுக்கு நன்கே தெரியும்.

அடுத்து சிங்கள மக்களுக்கு சமஸ்டி என்பது தனிநாடில்லை எனும் செய்தியை எடுத்து செல்லும் வேலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதை கூட்டமைப்பு ஏன் செய்யத் தவறுகிறதோ தெரியவில்லை.

சமஸ்டி நோக்கிய பயணத்தில் பெரும் மூலோபாயங்களில் ஒன்றாக தெற்க்கில் நாம் செய்யும் வேலைத்திட்டங்கள் அமையும். 

கூட்டமைப்பை சிங்கள மக்கள் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. அதே போல் சிங்கள கம்யூனிஸ்டுக்களையும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துப்படி பின்னர் எழுதுகிறேன் .(வேலையில் நிற்பதால்)கோசானின் வெளிப்படையான கருத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?/topic/148798-ஜனாதிபதித்-தேர்தலில்-தமிழர்கள/page-1#entry1057571

ஆனாலும் நான் ஒரு பத்தி எழுத்தாளன் இல்லை.. :o:D

எழுத்தாளர் இரும்பொறையும் உங்களின் கருத்தை சொல்லி உள்ளார். ஆனால் நான்கு காரணங்கள் கூறி உள்ளார். சிங்கள. முஸ்லிம் மக்களின் இரண்டாம் வாக்கை அவர் கருத்தில் எடுக்கவில்லை. இதனால் தேர்தலை தமிழ் மக்களின் வாக்குகள் நிர்ணயிக்கும் என சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பொறை சொல்லும் வெளிநாட்டு மத்தியஸ்துடனான உடன்படிக்கை என்பது ஒன்றும் அத்துணை நகப்புக்குரிய விடயமல்ல.

சந்திரிக்கா திரும்பி வந்தது, ரணிலின் பங்கு, மைத்திரிக்கு திடீரென ஏற்பட்ட வீரம்/ஞானோதயம், இவையெல்லாம் மகிந்தவை விட பெரிய சக்தி ஒன்று விடயங்களை வழி நடத்துவதை தெளிவாக காட்டுகிறது. நான் அதை மேற்குலகு என்கிறேன் ( மேற்குலகு என்றால் பிரக்டிகலாக அமெரிக்காதான்). இதில் இதுவரை மகிந்தவை காத்த இந்தியப்பூதமும் இப்போ ஆட்சிமாற்றத்துக்கு வழிவிட்டு விட்டதாயே தெரிகிறது. சீன நீர்மூழ்கிகளின் வரவு - மகிந்த்ஹவின் இந்தியா மீதான கடைசி ஆயுதம். அதுவும் பலிகவில்லை என்பதே உண்மை.

இதில் எமக்குரிய தீர்வு பற்றியும் தீர்மனிகப்பட்டுளதா என்பது தெரியவில்லை ஆனால் சாத்தியம் இருக்கிறது. அப்படியாயின் கூட்டமைப்பு ஏலவே போட்டதிட்டத்தின் படிதான் மெளனம் காக்கிறதா என்றும் தெரியவில்லை.

ஆனால் சமஸ்டிக்கு மைத்திரியோ, ரணிலோ ஒத்து கொண்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் இன்னும் ஒரு பத்து வருடத்துக்கு காணி, போலீஸ், கல்வி அதிகாரங்களை கொண்ட மாகாண சபையை பெற்றபடி, படிப்படியாக சமஸ்டி நோக்கி நகருவதே நல்ல உத்தியாக இருக்கும்.

அரசமைப்பு மாற்றத்தில், போலீஸ் கமிசன் சுயாதீனமாக நிறுவப்படும் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் போலீஸ் அதிகாரத்தின் பொறுப்பு கூறும் அமைப்பாக இந்த கமிசன் மாறும். இது மத்திய அரசின் போலீஸ் அதிகாரத்தை பாரியளவில் குறைக்கும். இப்படி பட்ட நிலையில், ( தெற்கின் போலிஸ் கமிசனின் ஆளுகைக்கு உட்பட்ட) ஒரு மாகாண போலீசை, மாகாணசபைகளுக்கு வழங்க சந்தர்ப்பம் இருக்கிறது.

தனிதமிழ் வேட்பாளர்/ புறக்கணிப்பு என்பன - இவர்கள் சுமூக தீர்வுகுத்தயார் இல்லை எனும் தோற்றபாட்டை ஏற்படுத்துவதையும், மகிந்தவின் வெற்றியை இலகுவாக்குவதையும் தவிர வேறு எதையும் சாதிக்கும் என்று நான் கருதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் வாக்கு - ஒரு வேட்பாளரும் 51% பெறாதா நிலையில்.

1ம், 2ம் வேட்பாளரின் வாக்குகளை விடுத்து - 3ம், வேட்பாளருக்கு 1ம் வாக்கை போட்டவர்களின் 2ம் வாக்கு அடிப்படையிலே அடுத்த சுற்று தீர்மானிகப்படும்.

இந்நிலையில் 3ம் வேட்பாளராக ஒரு தமிழர் நிண்டால் - அவருக்கு விழும் வாக்குகள் அனைத்தும் தமிழருடயதாகவே இருக்கும் என்பது வெளிப்படை. சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் தமது வாக்கை தனியே மகிந்தவுக்கு மட்டும், அல்லது மைத்திரிக்கு மட்டும், அல்லது 1 மகிந்த 2 மைத்திரி அல்லது 1 மைத்திரி, 2 மகிந்த என்றே அளிப்பர். ஆகவே, மைத்திரி இரண்டாம் சுற்றில் வெல்ல தமிழரின் வாக்குகள் உதவும் எனும் இரும்பொறையின் கருத்து சரியானதே.

ஆனால் எல்லா தமிழர்களும் 1 வாக்கை தமிழ் வேட்பாளருக்கு போடும் போது - மகிந்த 1ம் சுற்றிலேயே 51% எடுக்கும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கும். ஆகவேதான் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது மகிந்தவுக்கே மிகச்சாதகமாய் அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரும்பொறை சொல்லும் வெளிநாட்டு மத்தியஸ்துடனான உடன்படிக்கை என்பது ஒன்றும் அத்துணை நகப்புக்குரிய விடயமல்ல.

சந்திரிக்கா திரும்பி வந்தது, ரணிலின் பங்கு, மைத்திரிக்கு திடீரென ஏற்பட்ட வீரம்/ஞானோதயம், இவையெல்லாம் மகிந்தவை விட பெரிய சக்தி ஒன்று விடயங்களை வழி நடத்துவதை தெளிவாக காட்டுகிறது. நான் அதை மேற்குலகு என்கிறேன் ( மேற்குலகு என்றால் பிரக்டிகலாக அமெரிக்காதான்). இதில் இதுவரை மகிந்தவை காத்த இந்தியப்பூதமும் இப்போ ஆட்சிமாற்றத்துக்கு வழிவிட்டு விட்டதாயே தெரிகிறது. சீன நீர்மூழ்கிகளின் வரவு - மகிந்த்ஹவின் இந்தியா மீதான கடைசி ஆயுதம். அதுவும் பலிகவில்லை என்பதே உண்மை.

இதில் எமக்குரிய தீர்வு பற்றியும் தீர்மனிகப்பட்டுளதா என்பது தெரியவில்லை ஆனால் சாத்தியம் இருக்கிறது. அப்படியாயின் கூட்டமைப்பு ஏலவே போட்டதிட்டத்தின் படிதான் மெளனம் காக்கிறதா என்றும் தெரியவில்லை.

ஆனால் சமஸ்டிக்கு மைத்திரியோ, ரணிலோ ஒத்து கொண்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் இன்னும் ஒரு பத்து வருடத்துக்கு காணி, போலீஸ், கல்வி அதிகாரங்களை கொண்ட மாகாண சபையை பெற்றபடி, படிப்படியாக சமஸ்டி நோக்கி நகருவதே நல்ல உத்தியாக இருக்கும்.

அரசமைப்பு மாற்றத்தில், போலீஸ் கமிசன் சுயாதீனமாக நிறுவப்படும் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் போலீஸ் அதிகாரத்தின் பொறுப்பு கூறும் அமைப்பாக இந்த கமிசன் மாறும். இது மத்திய அரசின் போலீஸ் அதிகாரத்தை பாரியளவில் குறைக்கும். இப்படி பட்ட நிலையில், ( தெற்கின் போலிஸ் கமிசனின் ஆளுகைக்கு உட்பட்ட) ஒரு மாகாண போலீசை, மாகாணசபைகளுக்கு வழங்க சந்தர்ப்பம் இருக்கிறது.

தனிதமிழ் வேட்பாளர்/ புறக்கணிப்பு என்பன - இவர்கள் சுமூக தீர்வுகுத்தயார் இல்லை எனும் தோற்றபாட்டை ஏற்படுத்துவதையும், மகிந்தவின் வெற்றியை இலகுவாக்குவதையும் தவிர வேறு எதையும் சாதிக்கும் என்று நான் கருதவில்லை.

இது நாம் தமிழர்கள் என்பதால் நல்ல எதிர்பார்ப்பு.
 
ஆனால்  இனி வரும் 10 வருடங்களுக்கு சிங்கள இனவாதத்தை பாஸ் (pause) பண்ணி வைத்திருந்தால்  மட்டுமே இது சாத்தியம்.
நாங்கள் நகர்ந்துகொண்டிருக்க அவர்கள் கை கட்டி நிற்க போவதில்லை.
அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக ஒப்பந்தம் ....
அம்பானியின் வாகனங்களுக்கு வரி விலக்கு என்று குறைந்த பட்சம் செய்தாலே. சிங்களவனுக்கு இந்தியா அமெரிக்கா போகிற பயன செலவு கூட மிச்சம். மற்றதை இந்த நிறுவனங்களே பார்த்து கொள்ளும். 
 
உலகில் இப்போது பாரிய மாற்றங்களின் பின்னால் என்ன நடக்கிறது என்பது மேல் உள்ள கருத்தில் கொஞ்சமும் கருத படவில்லை. 
வெள்ளை சேட்டுடன் நிற்கும் சம்மந்தரையும் ...... சால்வையுடன் நிற்கும் விக்கியாரையும் யாரும் கண்டுகொள்ள போவதில்லை.
அதற்காக புறம்தள்ள மாட்டார்கள் அவப்போ இங்கின வந்துபோகும்போது ...... ஒருக்கா போய் கை கொடுத்துவிட்டு போவார்கள். அதை போட்டோ எடுத்து அரசியல் கட்டுரை எழுதிகொண்டிருக்க 10 வருடம் போய்விடும். 
பின்பு சம்மந்தரும் விக்கியரும் மேலே போயிடுவினம். சிங்களவன் இப்பவே ஒரு தமிழனை விலைக்கு வேண்டி வைத்திருப்பான். 

 சுமந்திரன் சம்பந்தன் இருக்கும் வரை கூட்டமைப்பு உருப்படாது. மைத்திரி வெல்வதால் ஒரு நன்மை மகிந்தா & அவரின் பரிவாரங்கள் சர்வதேச விசாரணையில் சிக்க இடம் உண்டு. 

சு .சாமி இருக்கும் வரை ப ஜ க ஒன்றும் புதுசா செய்யபோவதில்லை. சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை இனி ஒன்றும் செய்யமுடியாது . இந்தியாவின் இயலாமை தான் இது. இனி ஒன்றும் செய்ய முடியாது. சிங்களவன் சீனாவின் நேசத்தை ஒருபோதும் எதிர்க்கபோவதில்லை இதனால் புதிய அரசாங்கமும் சீன்வுடன் ஒத்து போகவே விரும்பும் . மற்றது இலங்கை நினைத்தாலும் சீனாவை விட்டு விலக முடியாது அந்தளவுக்கு ஒப்பந்தகளும் மற்றது கடன் இவற்றை எவ்வாறு புதிய அரசாங்கம் ஈடு செய்யமுடியும் . அதனால் சீனாவின் ஆதிக்கம் எவராலும் நிறுத்த முடியாது . இந்திய இனி கொட்டாவி விடுவதை தவிர ஒன்றும் செய்ய முடியாது . அமெரிகாவிக்கும் இந்தநிலைமை தான் . 

புலிகளை எல்லாரும் சேர்ந்து அழிக்க நினைக்கும் பொது இதை உணர்ந்து இருக்கோணும் கடைசியி ல் வென்றது சீனாவின் தந்திரமே . இந்த நிலைமை அமெரிக்க மற்றும்  இந்தியாவுக்கு வரும் என்பதை அறியாதது அவர்களின் தப்பே . 
 
தமிழரை பொருத்தமட்டில் எவனுக்கும் ஆதரவை இப்ப தெரிவிக்க கூடாது . போகின்ற போக்கில் நிலைமையை அவதானித்து செயல் படவேண்டும் . முதலில் டக்கிலஸ் , கருணாவை  நீக்க வேண்டும் , யாரும் இனி அரசாங்கத்தில் இடம் கொடுக்க கூடாது இதனை கூட்டமைப்பு உறுதிபடுத்தவேண்டும் .

மகிந்தவின் வெற்றி உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்ட்டிக் கோரிக்கையைச் சிங்களவர்கள் புலிகள் பலமாக இருந்த காலத்திலேயே ஏற்கவில்லை. இப்போதா ஏற்கப்போகிறார்கள் ??

இவங்களை இன்னுமா நம்பீட்டு இருக்கு நம்ம சனம் ???

சரி இப்ப ஏற்று கொண்டார் என்றே வைத்துகொள்வோம்... அதை நிச்சயம் செய்யவா போறார்?

இப்பிடி எத்தினையை ஏற்றுக்கொண்டு பின்னர் கைவிட்டார்கள்? சந்திரிக்காவா கொக்கா? 

  • கருத்துக்கள உறவுகள்

. ஆனால் இன்னும் ஒரு பத்து வருடத்துக்கு காணி, போலீஸ், கல்வி அதிகாரங்களை கொண்ட மாகாண சபையை பெற்றபடி, படிப்படியாக சமஸ்டி நோக்கி நகருவதே நல்ல உத்தியாக இருக்கும்.

அரசமைப்பு மாற்றத்தில், போலீஸ் கமிசன் சுயாதீனமாக நிறுவப்படும் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் போலீஸ் அதிகாரத்தின் பொறுப்பு கூறும் அமைப்பாக இந்த கமிசன் மாறும். இது மத்திய அரசின் போலீஸ் அதிகாரத்தை பாரியளவில் குறைக்கும். இப்படி பட்ட நிலையில், ( தெற்கின் போலிஸ் கமிசனின் ஆளுகைக்கு உட்பட்ட) ஒரு மாகாண போலீசை, மாகாணசபைகளுக்கு வழங்க சந்தர்ப்பம் இருக்கிறது.

தனிதமிழ் வேட்பாளர்/ புறக்கணிப்பு என்பன - இவர்கள் சுமூக தீர்வுகுத்தயார் இல்லை எனும் தோற்றபாட்டை ஏற்படுத்துவதையும், மகிந்தவின் வெற்றியை இலகுவாக்குவதையும் தவிர வேறு எதையும் சாதிக்கும் என்று நான் கருதவில்லை.

சிங்களவனும் உங்களை மாதிரி கொஞ்சம் உசாராக எல்லோ சிந்திக்கிறான் .....உள்ளூராட்சி,மாவட்டம் ,மாகாணம்,சமஸ்டி என்று தமிழனுக்கு கொடுத்தால் இன்னும் 20 வருசத்தில தமிழன் தனிநாடா பிரிந்து சென்று விடுவான் ஆகவே மாகாணசபைக்கான 13 ம் இல்லை சமஸ்டியும் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.