Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்த்திரேலியா சிட்னியில் ஐஸிஸ் பயங்கரவாதிகளால் பணயக் கைதிகள் சிறைப்பிடிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்த்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல உணவு விடுதியொன்றினுள் புகுந்துகொண்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் குழுவினர், அங்கேயிருந்த மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதுடன், வெளியிலிருந்து பொலிஸார் நடத்தவிருக்கும் எந்தவிதமான தாக்குதல்களையும் தடுப்பதற்காக பணயக்கைதிகளை கண்ணாடி யன்னல்களின் முன்னால் கைகளை உயர்த்தியபடி நிற்க வைத்திருக்கிறார்கள்.

 

யன்னல் ஒன்றின் முன்னால், "அல்லாவே ஒரே கடவுள், வெறொருவரில்லை" என்கிற இஸ்லாமிய அடிப்படைவாதப் பதாதையும் தொங்கவிடப்பட்டிருக்கிறது.

 

சிட்னியின் பிரபல சனநடமாட்டம் மிகுந்த மார்ட்டீன் பிளேஸ் எனும் பகுதியில் அமைந்திருந்த இந்த உணவகத்தினுள் காலை 10 மணிக்குச் சற்றுமுண்ணர் நுழைந்த பயங்கரவாதிகள் இந்த பணயக்கைத்திகளைப் பிடித்து வைத்திருக்கின்றனர்.

 

நகரின் பிரதான வீதிகள் அனைத்தும் மூடப்பட்டு, கனரக ஆயுதம் தரித்த பயங்கரவாத எதிர்ப்புப் போலிஸார் அந்த கட்டிடத்தை சூழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

 

மேலதிக தகவல்கள் தொடரும்.


http://www.abc.net.au/news/2014-12-15/hostages-sydney-cafe-martin-place-police-operation/5967232

 


https://au.news.yahoo.com/nsw/a/25772503/siege-situation-in-martin-place/


இந்த பயங்கரவாத நடவடிக்கையை தனி ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியே நடத்தியிருப்பதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இவனுடன் இன்னும் சிலரும் கூடவே வந்திருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணயக் கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அண்மையில்த்தான் அவுஸ்த்திரேலிய மத்திய திறைசேரியும், அமெரிக்க உயர்ஸ்த்தானிகராலயமும் அமைந்திருக்கின்றன.

 

பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்கொன்றை நோக்கி வந்துகொண்டிருந்த ஒற்றைப் பயங்கரவாதி, பொலீஸார் மற்றும் அதிகாரிகளின் நடமாட்டத்தினால், ஒளித்துக்கொள்ள ஒதுங்கிய இடமாகத்தான் இந்த உணவகம் தென்படுவதாகக் கருதுகிறார்கள். அதாவது, தனது இலக்கு மாற்றப்பட்டு, நோக்கம் தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே இந்தப் பயங்கரவாதி அப்பாவிகளைப் தனது பாதுகாப்பிற்காக பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறான் என்று நம்பப் படுகிறது.

 

இது இவ்வாறிருக்க, அவுஸ்த்திரேலியாவில் பொதுமக்கள் மீதான தாக்குதல் ஒன்றினை அண்மையில் திட்டமிட்டு வந்தான் என்கிற அடிப்படையில், ஆதாரங்களுடன் இன்னொரு இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதி இன்று அதிகாலை சிட்னியின் மேற்குப்புற பகுதியொன்றில் விசேட பொலீஸ் அதிரடி நடவடிக்கை ஒன்றின்மூலம் கைதுசெய்யப்பட்டான். அவன் கைதுசெய்யப்பட்டு ஒரு சில மணி நேரத்தில் இன்னொரு பயங்கரவாதை பணயக் கைதிகளைப் பிடித்துவைத்திருக்கிறான். ஆகவே இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் இந்த உணவகத்தில் பணிபுரியும் புறூனோ எனும் இளைஞன் 9:45 மணியளவில் உணவகத்திற்குச் செல்லும்போது உணவகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததை அவதானித்திருக்கிறார். அந்தக் கதவுகள் ஒருபோதுமே பூட்டப்பட்டதில்லை என்று கூறும் அவர், சந்தேகத்துடன் கண்ணாடியூடாக உள்ளே பார்த்தபோது வளக்கத்திற்க்கு மாறாக அனைவரும் மேசைகளில் அமர்ந்திருந்ததாகவும், தனி ஒருவன் மட்டும் உணவகத்தில் சுற்றிச் சுற்றி நடமாடிக்கொன்டிருந்ததாகவும் தெரிவிக்கிறார்.

 

தொப்பியும், நீண்ட தாடியும் கொண்டிருந்த அந்த ஒற்றை மனிதன் உள்ளிருந்தவர்களை நோக்கி ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததாகவும் கூறும் அவர், தான் வந்து சிறிது நேரத்திலேயே பொலிஸாரும் இடத்தைச் சுற்றி வளைத்ததாகவும், இதனால் அந்தப் பயங்கரவாதி மேசைகளில் அமர வைக்கப்பட்டிருந்த பணயக் கைதிகளை உடனேயே கண்ணாடி யன்னல்களில் முன்னால் போய் நிற்குமாறு மிரட்டி தான் கொண்டுவந்திருந்த இஸ்லாமிய அடிப்படைவாத கறுப்புக் கொடியையும் ஒரு கண்ணாடியின் முன்னால் பறக்க விட்டான் என்றும் தெரிவிக்கிறார். அதிஷ்ட்டவசமாக உள்ளே செல்லாமல் தப்பிய அந்த இளைஞரிடம், "நீங்கள் தப்பியது அதிஷ்ட்டம் அல்லவா" என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, "இல்லை, உலள்ளிருக்கும் அனைவரும் என்னுடைய நண்பர்கள், அங்கே அவர்களுக்கு என்ன நடக்கைன்றது என்று தெரியாமல் தவித்துக்கொன்டிருப்பதைக் காட்டிலும், அவர்களுடன் நானும் பிடிபட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனது நிர்வாக அதிகாரியைத் தொடர்புகொள்ள நான் எத்தனிக்கவில்லை, ஏனென்றால் நான் அவரைத் தொடர்புகொள்வதாலல் உள்ளே அகப்பட்டிருக்கும் அவரின் உயிருக்கு ஏதும் ஆபத்து வரலாம் என்று அஞ்சுகிறேன்" என்றும் கூறினார்.


சிட்னியில் நடந்துவரும் இஸ்க்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் பணயக் கைதி நாடகத்தால், சிட்னிக்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டிருக்கின்றன.

 

நகரின் பெரும்பாலான வீதிகள் மூடப்பட்டு, சம்பவம் நடந்துவரும் இடத்திற்கு அண்மையிலிருக்கும் பல காரியாலயங்களிருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையம் மூடப்பட்டது என்பது தவறான செய்தி  ரகுநாதன்

விமான நிலையம் இயங்குகிறது , ஒரு ரன் வே தற்காலிகமாக வேறு காரனகளினால் மூடப்பட்டு மீண்டும் இயங்குகிறது

 

Edited by ooravan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அவுசிலே தீவிரவாதம் மிகப்  பிரச்சனையாக உருவெடுக்கும் எனப் பலதடவைகள் யாழ்களத்திலே கூறியிருந்தேன். இன்று அது வெளி உலகின் கண்ணுக்கு வெளிப்படையாக வந்திருக்கிறது. இவர்களுக்கு சில ADF காரரே (Australian Defence Force) ஆயுதங்களை வித்திருக்கிறார்கள் என்பது திடுக்கிட வைக்கும் விடயமாகும். அவுஸின் புகழ்பெற்ற Sydney Opera House உம் மர்மப் பொதி காரணமாக மக்களை  அவசரமாக வெளியேற்றி இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையம் மூடப்பட்டது என்பது தவறான செய்தி  ரகுநாதன்

 

விமான நிலையம் பூட்டப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் சிட்னியை நோக்கி வரும் விமானங்கள் வேறு பாதைக்கு மாற்றப்பட்டதாக செய்தியொன்று சற்று முன்னர் வந்திருந்தது.

மட்டுப்படுத்தப்பட்ட விமானப் பறப்பு சமந்தமான செய்தியொன்று,

 

https://au.totaltravel.yahoo.com/news/a/25773178/restricted-flights-over-sydney/

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் அவர்கள் தாங்க  வைத்திருக்கும் வாசகம்

மன்னிக்கவும் படங்கள் இணைக்க முடியவில்லை

https://twitter.com/hashtag/Sydney?src=hash

Edited by ooravan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணயக் கைததிகள் நாடகம் அரங்கேறிய விதம்,

 

சிட்னி மார்ட்டீன் பிளேசில் அமைந்திருக்கும் "லின்ட்" உணவகத்தினுள் காலை 9:45 மணியளவில் 13 பொதுமக்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்படுகின்றனர்.

குறைந்தது ஆயுதம் தாங்கிய ஒரு பயங்கராவாதியாவது உள்ளேயிருக்கிறான், இன்னும் ஒருவர் அல்லது இருவர் அவன்கூட இருக்கலாம்.

பணயக் கைதிகள் பிடிக்கப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஒருவன் நீல நிற பைய்யுடன் உள்ளே நுழைவது பதியப்பட்டிருக்கிறது

சிறிது நேரத்தில் பணயக் கைதிகள் அனைவரும் இஸ்லாமிய அடைப்படைவாதப் பயங்கரவாதத்தின் அரேபிய மொழியிலான கறுப்புக் கொடியை தூக்கிப் பிடிக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்

பயங்கரவாத முறியடிப்புப் பிரிவு மற்றும் விசேட ராணுவப் படையணிகள் கட்டிடத்தை சுற்றி வளைத்துக்கொள்கின்றன, சுற்றியிருக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்தும், அமைச்சுப் பிரிவுகளிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்

அவுஸ்த்திரேலியாவின் அடையாளமான சிட்னி ஓப்பேரா ஹவுஸிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மர்மப் பொதியினை அடுத்து அந்தக் கட்டிடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்படுகின்றனர்.

தேசியப் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நிலமை மிகவும் கவலைக்கிடமானது என்று கூறியிருக்கும் பிரதமர், நாட்டு மக்களுக்கு விரைவில் உரையாற்றுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பகுதிக்கு மேலான விமானப் பறப்புகள் வேறு பாதைக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2rmmo2a.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலை செய்யும் அலுவலகம் சற்று தூரத்தில்  இருந்தாலும் யாரையும் வெளியே செல்ல கட்டட மேலதிகாரி அனுமதிக்கவில்லை , சிட்னி ஒபேரா  ஹவுஸ் இலிருந்தும் எல்லோரும் வெளியேற்ற பட்டு விட்டார்கள்

துப்பக்கிதாரியின் நிழற்படமொன்று  பதிவகியிருக்கிறது ,இந்த இணைப்பில் பார்க்கலாம்

 

https://twitter.com/hashtag/MartinPlaceSiege?src=hash

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

um07a.jpg

 

உள்ளேயிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாத மிருகம்


கட்டிடத்தைச் சுற்றி வளைத்திருக்கும் விசேட படையணி.

 

why92e.jpg


நடப்பதைப் பார்க்கக் கூடியிருக்கும் மக்கள் கூட்டம்,

 

2unvzfr.jpg


நடவடிக்கையில் ஈடுபடும் விசேட படையணி,

 

16j3jgl.jpg


சம்பவம் நடைபெறும் கட்டிடத்திற்கு மேலேயிருந்து பொதுமக்களை அகற்றும் போலீஸ்,

 

29mtw6a.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய தகவல்களின்படி  ரயில் சேவைகள் வழமைக்கு திரும்யிருந்தாலும்  தாமத நேர அட்டவணைப்படி இயங்குகின்றன ,ஆனால் மார்டின் PLACE ஸ்டேசனில் நிறுத்தம்  தவிர்க்கப்பட்டு உள்ளது ,

சிட்னி உயர் பாதுகாப்பு எச்சரிக்கை  விடப்பட்டுள்ளது , மேலும் பலர் இணைந்து தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்கிறார்கள் போல தோன்றுகிறது
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறிச்சோடிப் போயிருக்கும் ஓப்பெரா ஹவுஸும், மேலே சுற்றி வட்டமிடும் உலங்கு வானூர்தியும்,

 

ruthqb.jpg


அந்தப் பகுதியெங்கும் குவிந்திருக்கும் போலீஸ் வாகனங்கள்,

 

65ve37.png

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

bbc,cnn தொலைக்காட்சிகளில் நேரலையாக காண முடிகின்றது.

Edited by குமாரசாமி

உடனடி தகவல்களுக்கு நன்றி ரகுநாதன் அண்ணா மற்றும் ஊரவன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடம் சனல் 7 ஸ்டுடியோ விற்கு நேர் எதிரே இருந்தது , அவர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டாலும் அவர்களது கமெரா ஒன்றினை LIVE ஆக நிறுத்தி வெளியேறி இருந்தார்கள் .ஆரம்பத்தில் நேரடியாக  மிக அருகாமையில்  இருந்து ஒளிபரபிக்கொண்டிருந்தார்கள் ,அனால் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக போலிஸ் அதைனை நிறுத்த வைத்து விட்டனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியப் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு முண்டுகொடுத்துவரும் அவுஸ்திரேலியாவுக்கு இப்படி லைட்டா டோஸ் குடுத்தால்தான் கொஞ்சம் விளங்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

240DDFC100000578-2873855-Terrified_custo

 

240E3B1600000578-2873855-image-a-75_1418

  • கருத்துக்கள உறவுகள்

மூவர் தற்போது விடுவிக்கப் பட்டுளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மூவரும் தப்பி வந்ததாக ஒரு தகவல். இன்னும் 15 பேர் உள்ளே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

art.mahinda.rajapaksa.afp.gi.jpg

 

சிட்னி முற்றுகை கவலை அளிக்கிறது : தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் டிவிட் போட்ட ராஜபக்ச!

 

சிட்னி : சிட்னியில் உணவு விடுதிக்குள் தீவிரவாதிகளால் 13 பேர் பேர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப் பட்டிருப்பது கவலை அளிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்ட்டின் பிளேஸ் பகுதியில் உள்ள லின்ட் சாக்கலேட் கேஃப் என்ற ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து, அங்கிருந்த 13 பேரை சிறைப்பிடித்துள்ளனர். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி என சந்தேகிக்கப்படும் கொடியையும் அவர்கள் பறக்க விட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்திற்கு டுவிட்டர் வாயிலாக இந்தியப் பிரதமர் மோடி தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘சிட்னி பிணைக்கைதி நிலவரம் பற்றி ஆழ்த்த கவலை அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்கிறது' என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தை அவர் தாய் மொழியான சிங்களத்தில் மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அபாட் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிப்போம். தீவிரவாதிகளின் நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்றாலும் ஆஸ்திரேலியர்கள் பயமின்றி தங்களின் பணியை தொடருங்கள்' என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியப் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு முண்டுகொடுத்துவரும் அவுஸ்திரேலியாவுக்கு இப்படி லைட்டா டோஸ் குடுத்தால்தான் கொஞ்சம் விளங்கும்!

 

இஸ்லாமியப் பயங்கரவாதியின் இந்நடவடிக்கை காரணமாக இன்னும் சிறிலங்காவுக்கு ஆதரவாகத்தான் அவுஸ்திரெலியா அரசு செயல்படும். அதாவது சிறிலங்காவில் இருக்கும் பயங்கரவாத்தினை அழிக்க சிறிலங்காவுக்கு இன்னும் உதவி செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது 5 பேர் தப்பிவிட்டார்கள். கடைசியாக இரண்டு ஆசிய இளம் பெண்கள் தப்பி வந்துவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.