Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

Featured Replies

ஆரோக்கியமான வாழ்வு . இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்! தட்டையான வயிற்றைப் பெற யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் இன்றைய காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுப் பொருட்களால்இ இளமையிலேயே பானை போன்று தொப்பை வர ஆரம்பித்துஇ திருமணம் என்று வரும் போது 'அங்கிள்' போன்று காட்சியளிக்க நேரிடுகிறது. வெந்நீருடன் தேன் சாப்பிட்டு எடையை குறைக்கலாம் வாருங்கள்! இப்படி கண்ட கண்ட உணவுப் பொருட்களால் வந்த தொப்பையை குறைக்க ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பதோடுஇ ஒருசில செயல்களை அன்றாடம் பின்பற்றி வந்தால்இ விரைவில் பானை போன்ற தொப்பையைக் குறைத்துவிடலாம். இங்கு இயற்கையான முறையில் தொப்பையைக் குறைக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எலுமிச்சை ஜூஸ் கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குவது மிகவும் அவசியமானதாகும். மிகவும் அழுத்தம் அடைந்த கல்லீரலால் கொழுப்புக்களை கரைக்க முடிவதில்லை. இதனால் கொழுப்புக்களானது வயிற்றுப் பகுதியில் சேர்ந்துவிடுகின்றது. ஆனால் எலுமிச்சை சாறு சுரப்பிக்களை அதிகப்படுத்தி கல்லீரலை சுத்தம் செய்து அதன் அன்றாட வேலைகளை செய்ய உதவுகின்றது. ஆகவே காலை எழுந்தவுடன் எலுமிச்சை ஒன்றை எடுத்து அதை வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை வெறும் வயிற்றில் தினசரி காலை அருந்த வேண்டும். குருதிநெல்லி பழச்சாறு (ஊசயnடிநசசல துரiஉந) குருதிநெல்லி அல்லது கிரேன்பெர்ரி என்று கூறப்படும் பழவகையில் அதிக அளவு மேலிக் அமிலம்இ சிட்ரிக் அமிலம் மற்றும் கூயினிக் அமிலம் ஆகியவை செரிமானத்திற்கு உதவுகின்றது. இவை கடுமையான கொழுப்புகளையும் கரைக்க உதவுகின்றது. கல்லீரலால் கரைக்க முடியாத கொழுப்புகளை கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்பையும் கறைத்து உடம்பை சீர் செய்கின்றது. குருதிநெல்லி சாறு நிணநீர் கழிவுகளை நீக்கி கொழுப்பை கரைக்கின்றது. அதிலும் இந்த சாற்றை சர்க்கரை கலக்காமல் அருந்தினால் பெரும் வித்தியாசத்தை காண முடியும். காலையில் சர்க்கரை இல்லாத குருதிநெல்லி பழச்சாற்றை எடுத்து தண்ணீரில் கலந்து அருந்தலாம். எத்தனை கப் வோண்டுமானலும் ஒரு நாளைக்கு அருந்தலாம். காலை உணவிற்கு முன் அல்லது மதிய உணவிற்கு முன் மற்றும் இரவு உணவிற்கு பின் என்று எந்த நேரமாக இருந்தாலும் நாம் அருந்த முடியும். இரண்டு தேக்கரண்டி சாற்றுடன் தண்ணீரை கலந்து ஏறக்குறைய ஒரு கப் தண்ணீரில் கலந்து அருந்தலாம். மீன் எண்ணெய் அல்லது மீன் மீன் எண்ணெயில் ஒமேகா-3 என்ற அமிலப்பொருள் உள்ளது. மேலும் இவற்றில் உள்ள ஈகோசாபென்டேனோயிக் அமிலம்இ டோக்கோசா ஹெக்சானோயிக் அமிலம் மற்றும் லினோலினிக் அமிலம் கொழுப்பை கரைக்க உதவுகின்றது. மீன் எண்ணெய் கிடைக்காவிட்டால்இ மீன்களை உட்கொண்டு பயனடையலாம். 6 கிராம் அல்லது ஒரு தேக்கரண்டி அளவு மீன் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். மத்திஇ சால்மன் போன்ற மீன் வகைகளில் ஒமேகா-3 அதிகமாக கிடைக்கும். இதை வாரத்திற்கு இரு முறையாவது உண்ண வேண்டும். டூனா மற்றும் ஹாலிபட் ஆகிய மீன்களிலும் இவை அதிகமாக கிடைக்கும். சியா விதைகள் ஒமேகா-3 மீன்களில் மட்டுமல்ல அதே அளவு சியா விதைகளிலும் கிடைக்கும். ஒரு வேளை நீங்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பவராக இருந்தால் இந்த விதையை பயன்படுத்தலாம். தாவர வகைகளில் அதிக அளவு ஒமேகா-3 உள்ளது என்றால் அது இந்த விதையில் தான். எதை உண்டாலும் இதில் உள்ள லினோலினிக் அமிலத்தை டி.எச்.ஏ மற்றும் இ.பி.ஏ வாக மாற்றபட வேண்டியது அவசியம். இதுமட்டுமல்லாமல் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்இ புரதச்சத்துஇ இரும்புச்சத்துஇ மற்றும் நார்ச்சத்தை அதிகமாக கொண்ட இந்த விதை வகை அதிக நேரத்திற்கு வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகின்றது. அஸிடக் டையட் என்ற புத்தகத்தில்இ 4-8 தேக்கரண்டி அதாவது 30-60 கிராம் அளவில் உள்ள சியா விதைகளை பகல் நேரத்தில் உண்டால்இ பெருமளவில் பசியை தவிர்த்து அதிகம் சாப்பிடுவதை குறைக்க உதவுகின்றது. எப்படியானாலும் ஒரு தேக்கரண்டி சியா விதைகளை ஒவ்வொரு நாளும் எடுத்து வருவது நல்லது. எப்படி இந்த சியா விதைகளை உண்பது? ஜுஸ்இ சாலட் மற்றும் தயிருடன் சியா விதைகளை சேர்த்து சாப்பிட முடியும். காலை உணவின் போதும் இதை ஒரு சேர்கையாக சேர்த்துக் கொள்ள முடியும். சியா விதைகளை சூப் மற்றும் இதர கறிவகைகளுடன் செய்யும் பொழுது கலந்து செய்யலாம். இது சமைக்கும் உணவு பொருளை மிகுதியாக காண்பிக்க உதவும். இஞ்சி கலந்த தேநீர் பொதுவாக இஞ்சி செரிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவை உடம்பில் உள்ள வெப்பத்தை அதிகப்படுத்தி கொழுப்பை கரைக்க உதவுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும். பொதுவாக தொப்பை வருவதற்கு அதிகமாக சாப்பிடுவதுஇ அதிக மன அழுத்தம் மற்றும் குறைந்த உடற்பயிற்சி ஆகியவை காரணமாகும். இஞ்சியினால் இந்த பிரச்சனையிலிருந்து உங்களை சுலபமாக விடுவிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் கார்டிசோல் என்ற சுரப்பியையும் கட்டுப்படுத்த உதவுகின்றது. கார்டிசோல் சுரப்பி உடலின் ஆற்றலை மேம்படுத்தி ஒன்றுதிரட்ட உதவுகின்றது. இதற்கு இஞ்சியும் அதிக அளவில் உதவி செய்து வயிற்றுக் கொழுப்பை குறைக்க உதவுகின்றது. இஞ்சி டீ செய்வதற்கு முதலில் இஞ்சியை கொதிக்கும் தண்ணீரில் கலந்து ஐந்து முதல் பத்து நிமிடம் வரை குறைந்த தீயில் வைக்கவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை இதில் கலந்து குடிக்கவும். அதிலும் தினமும் இரண்டு கப் இஞ்சி தேநீரை அருந்தினால் செரிமானத்தை தூண்டிஇ கார்டிசால் உற்பத்தியை குறைக்க உதவுகின்றது. பூண்டு இதயத்திற்கு மிகவும் பயன்தரக்கூடிய பூண்டுஇ சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. இவை நல்ல கொழுப்புச் சத்துக்களை சேர்க்க உதவாமல் டிரைகிளிசரைடுகளை குறைக்கவும் செய்கின்றது. உங்களுக்கு தெரியாதது ஒன்று உண்டு! இவை பெருமளவில் உடல் எடையை குறைக்க உதவும்! அடிப்போசைட்ஸ் என்பது அடிப்போஸ் தசையை உருவாக்க உதவுகின்றது. அதாவது கொழுப்பை ஒரு போர்வை போல் இவை உருவாக்க உதவுகின்றன. இவ்வாறு ப்ரீ-அடிப்போசைட்ஸ்களை அடிப்போஸ் சதையாக உருவாக்குவதை அடிப்போஜனிசிஸ் என்று கூறுவார்கள். பூண்டு இந்த உற்பத்தியை கட்டுப்படுத்தி கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. ஆகையால் உணவில் பூண்டை அதிகம் சோத்துக் கொள்வது நல்லது. ஆனால் சமைத்து சாப்பிடுவதை விட பச்சை பூண்டுக்களை அப்படியே சாப்பிடுவது மிகவும் நன்மையானதாகும். ........................................................................................................ஆரோக்கியவாழ்வு முகநூலில் இருந்து

Edited by காரணிகன்

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய சாப்பாட்டு நேரத்தில் கைக்கு அடக்கமான அளவு உணவும்.. மிகுதி பசி எடுக்கும் நேரத்தில்.. பழங்களும் சாப்பிட்டால்.. தொப்பை வராது. நமக்கு எல்லாம் தொப்பை வா வான்னாலும் வருகுதில்லை. :)

அதென்னமோ தெரியல்ல.. கலியாணம் ஆனவைக்கு அரிசி மூட்டை கணக்கா ஆவுது. ஏன்.. மனிசிமார் அந்தளவுக்கு அவிச்சுப் போடினமோ..??! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சியா விதைகள் ஐரோப்பியாவில் என்ன பெயரில் கிடைக்கின்றன விளக்கமும் படமும் வேண்டும்.

சியா விதைகள் ஐரோப்பியாவில் என்ன பெயரில் கிடைக்கின்றன விளக்கமும் படமும் வேண்டும்.

flex seeds

https://www.google.ca/search?q=flexx+seeds&es_sm=93&source=lnms&tbm=isch&sa=X&ei=z_yVVPGZFNOdygTe94GoAw&ved=0CAgQ_AUoAQ&biw=1680&bih=987#tbm=isch&q=flax+seeds&spell=1

இது ஒரு வகைக் கொள்ளு.  
இது நெஞ்செரிவு.அமிலம் சுரப்பது போன்ற வருத்தங்களுக்கும் உகந்தது  ( )இதை சும்மாயும் சாப்பிடலாம் (வாகனம் செலுத்தும் போது கூட)அல்லது காலை உணவில் கலந்து சாப்பிடலாம்.சோற்றுடன் அவியவைத்தும் சாப்பிடலாம்.ஆகவே விரும்பியவாரு வசதிக்கேற்ப உண்ணலாம்.இத்துடன் செலாரியையும் பழங்களையும் வெட்டிவைத்து உண்ணலாம்.செலாரி முலல் இரு நாட்களுக்கு கொஞ்சம் கஸ்டமாய் இருக்கும் பின்பு அதன் சுவை பழக்கத்து வந்து விடும்  
  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய சாப்பாட்டு நேரத்தில் கைக்கு அடக்கமான அளவு உணவும்.. மிகுதி பசி எடுக்கும் நேரத்தில்.. பழங்களும் சாப்பிட்டால்.. தொப்பை வராது. நமக்கு எல்லாம் தொப்பை வா வான்னாலும் வருகுதில்லை. :)

அதென்னமோ தெரியல்ல.. கலியாணம் ஆனவைக்கு அரிசி மூட்டை கணக்கா ஆவுது. ஏன்.. மனிசிமார் அந்தளவுக்கு அவிச்சுப் போடினமோ..??! :lol:

பிறவுண் பிரெட்டையும்,சலட்டையும் சாப்பிட்டுக் கொண்டு 100 வயது வரை வாழ்வதை விட விருப்பமானதை சாப்பிட்டுக் கொண்டு உடம்பை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்:D...இணைப்பிற்கு நன்றி காரணிகன்

  • கருத்துக்கள உறவுகள்

சியா விதைகள் ஐரோப்பியாவில் என்ன பெயரில் கிடைக்கின்றன விளக்கமும் படமும் வேண்டும்.

லண்டனில் சியா விதைகள் என்றே விற்கின்றனர். நான் மூன்று மாதகாலம் உண்டேன். என்னில் எந்த மாற்றமும் இல்லை. அதன்பின் விட்டுவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

Elugnajiru, கேட்டது இந்த விதைகள் என்றுதான் நினைக்கிறேன். ஒரு சித்தர் தான் எனக்கு இது பறிக கூறினார். ciea seeds என்று அங்கிலத்தில் சொல்வது. நீங்கள் போட்டது வேறு புளூ பேட்.

chia-seeds-photo.jpg?w=270&h=203

இதை நீரில் போட்டால் சிறிது நேரத்ஹில் காச கசா போல் நிறைந்துவரும்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

பிறவுண் பிரெட்டையும்,சலட்டையும் சாப்பிட்டுக் கொண்டு 100 வயது வரை வாழ்வதை விட விருப்பமானதை சாப்பிட்டுக் கொண்டு உடம்பை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் :D...இணைப்பிற்கு நன்றி காரணிகன்

பிறவுன் பிரட்டும்.. சலட்டும் சாப்பாடில்லையா..???! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் சியா விதைகள் என்றே விற்கின்றனர். நான் மூன்று மாதகாலம் உண்டேன். என்னில் எந்த மாற்றமும் இல்லை. அதன்பின் விட்டுவிட்டேன்

சுழல் கதிரையிலை இருந்துகொண்டு சிம்ரன் மாதிரி வரோணுமெண்டு நினைக்கிறது மாகா தப்பு... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுழல் கதிரையிலை இருந்துகொண்டு சிம்ரன் மாதிரி வரோணுமெண்டு நினைக்கிறது மாகா தப்பு... :D  :lol:

ஆசைப்படுவதில் என்ன தப்பு ???

காரணிகன்,

வேறு இணையத் தளங்களிலிருந்து ஆக்கங்களைப் பதியும்போது அவற்றிற்கான இணைப்பினைத் தர வேண்டும்.

http://tamil.boldsky.com/health/diet-fitness/2014/amazing-tips-reduce-belly-fat-naturally-006723.html

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எடை குறைவதற்கு சில நடவடிக்கைகள் பலன் தரும் என என் சொந்த அனுபவத்தின் ஊடாக கண்டுகொண்டுள்ளேன். :unsure:

1) கோதுமையில் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் (பாண், பீட்சா, ரொட்டி போன்றவை)

2) சோறு, புட்டு, இடியப்பம் போன்ற உணவுகளால் உடல் எடை அதிகரிக்கவில்லை. :D

3) நாள்தோறும் 3 க்குக் குறையாத 500மி.லீ. தண்ணீர் போத்தல்களை குடித்து முடிப்பேன்.

4) தினமும் தயிர் (யோகர்ட்) சாப்பிடுவேன்.

5) அவக்காடோ பழம் பலன் தந்தது என ஊகிக்கிறேன். (இதை இப்போது தொடர்வதில்லை. பஞ்சிதான் காரணம். :huh: )

6) கே.எஃப்.சி, பீட்சா போன்ற விரைவு உணவுகளை வாங்கிச் சாப்பிட்டால் தவறாமல் எடை அதிகரிக்கிறது. :blink:

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இதை கடைப்பிடித்து வருகிறேன். கிட்டத்தட்ட 10 இறாத்தல்கள் குறைந்துள்ளன. ஆனால் பட்டினி கிடக்கவில்லை. ஒவ்வொருநாள் காலையிலும் தவறாது எடையை சரிபார்த்துக் கொள்வேன். மேற்குறிப்பிடப்பட்ட தரவுகளை இந்த ஆராய்ச்சியின் மூலமே எடுத்துக்கொண்டேன். :D

நத்தார் விடுமுறை காலங்களில் இந்த விளையாட்டுகள் சரிவராது எதுவுமே ஜனவரி இரண்டுக்கு பின் தான் .  :D

  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் விடுமுறை காலங்களில் இந்த விளையாட்டுகள் சரிவராது எதுவுமே ஜனவரி இரண்டுக்கு பின் தான் .  :D

தைபிறந்தால்

வயிறுக்கு வலி  பிறக்கட்டும்.... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எடை குறைவதற்கு சில நடவடிக்கைகள் பலன் தரும் என என் சொந்த அனுபவத்தின் ஊடாக கண்டுகொண்டுள்ளேன். :unsure:

1) கோதுமையில் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் (பாண், பீட்சா, ரொட்டி போன்றவை)

2) சோறு, புட்டு, இடியப்பம் போன்ற உணவுகளால் உடல் எடை அதிகரிக்கவில்லை. :D

3) நாள்தோறும் 3 க்குக் குறையாத 500மி.லீ. தண்ணீர் போத்தல்களை குடித்து முடிப்பேன்.

4) தினமும் தயிர் (யோகர்ட்) சாப்பிடுவேன்.

5) அவக்காடோ பழம் பலன் தந்தது என ஊகிக்கிறேன். (இதை இப்போது தொடர்வதில்லை. பஞ்சிதான் காரணம். :huh: )

6) கே.எஃப்.சி, பீட்சா போன்ற விரைவு உணவுகளை வாங்கிச் சாப்பிட்டால் தவறாமல் எடை அதிகரிக்கிறது. :blink:

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக இதை கடைப்பிடித்து வருகிறேன். கிட்டத்தட்ட 10 இறாத்தல்கள் குறைந்துள்ளன. ஆனால் பட்டினி கிடக்கவில்லை. ஒவ்வொருநாள் காலையிலும் தவறாது எடையை சரிபார்த்துக் கொள்வேன். மேற்குறிப்பிடப்பட்ட தரவுகளை இந்த ஆராய்ச்சியின் மூலமே எடுத்துக்கொண்டேன். :D

விடுபட்டவை சில.. :D

7) காலையில் மட்டும் சீரியல் உணவுக்காக பால் எடுத்துக் கொள்வேன். (குதர்க்கமான கேள்விகளுக்கு பதில் வராது. :lol: )

8) ஓட் மீல் சீரியல் பாவித்து வருகிறேன்.

9) வீட்டில் தேனீர், கோப்பியை கைவிட்டுவிட்டேன். (வெளியூர் போகும்போது மட்டும் கோப்பி அருந்துவது வழமை.) பச்சை தேனீர் அருந்துவது வழமை. இதனால் சீனியை பெரும்பாலான நாட்களில் பாவிப்பதேயில்லை. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் பட்டியலில் விடுபட்டுப் போன உடற்பயிற்சியைப் பற்றி யாரும் பேசக் காணோம்! :D வாரத்தில் ஐந்து நாட்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் அதிக உணவினால் வரும் உடற்பருமன் குறையும். ஒரு மூன்று மாதம் தொடர்ந்து செய்தால் பின் வரும் நன்மைகள் மாற்றங்களை உணர்வீர்கள்:

1. உடற்பயிற்சிக்கு அடிமையாகி விடுவீர்கள், அதனால் தொடர்ந்து செய்வீர்கள் (இது உடற்பயிற்சியின் போது நமக்குள் சுரக்கும் எண்டோர்fபின் சுரப்பின் ஊக்க விளைவு!).

2. தண்ணீர் நிறையக் குடிப்பீர்கள் (இது உடற்பருமன் மாற்றத்தை விடப் பல பயன்களைத் தர வல்லது!)

3. பசிக்குச் சாப்பிடும் பழக்கம் வந்து விடும் (ருசிக்குச் சாப்பிடாமல்!)

4. ஒரு சில நாட்கள் அதிகமாக ருசிக்கு சாப்பிட்டு விட்டாலும் உடல் பருமனாகாமல் சமாளித்து விடும் (இது V16 எஞ்சின் போல உடல் கலோரிகளை எரித்து விடுவதால் வரும் விளைவு)

5. நீரிழிவு வரக்கூடிய ஆபத்துள்ளவர்களுக்கு அது வராமல் விடக் கூடும் (உடல் கலங்கள் குளூக்கோசை மள மளவெண்டு விழுங்குவதால் வரும் விளைவு!)

உடற்பயிற்சி என்பது பல்லாண்டு காலமாக பரீட்சிக்கப் பட்டு இன்று வரையில் வெல்லப் படாமல் இருக்கும் ஒரு எடை குறைப்பு நிவாரணி! நேரம் மட்டும் ஒதுக்கினால் சரி!

  • தொடங்கியவர்

காரணிகன்,

வேறு இணையத் தளங்களிலிருந்து ஆக்கங்களைப் பதியும்போது அவற்றிற்கான இணைப்பினைத் தர வேண்டும்.

http://tamil.boldsky.com/health/diet-fitness/2014/amazing-tips-reduce-belly-fat-naturally-006723.html

இணையவன் நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்திலிருச்து அதனை நான் எடுக்கவில்லை ஆரோக்கிய வாழ்வு முக நூலிலில் இருந்துதான் எடுத்தேன் ஆNhக்கிய வாழ்வு என்பதை தனியாக இடைவெளிவிட்டுத்தான் பதிவிட்டிருந்தேன் ஆனால் எல்லாம் இடைவெளியின்றி ஒன்றாகவே பதிவாகின்றது முக நூல் என்பதைமட்டும குறிப்பிட தவறிவிட்டேன் சுட்டிக்காட்டியமைக்ககு நன்றி இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சியும் ஞாபகத்தில் வந்து தொலைத்தது. :D ஆனாலும் கிழமைக்கு ஒருநாள் செய்வதால் அதைக் குறிப்பிடவில்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சியும் ஞாபகத்தில் வந்து தொலைத்தது. :D ஆனாலும் கிழமைக்கு ஒருநாள் செய்வதால் அதைக் குறிப்பிடவில்லை. :lol:

வாரத்திற்கு ஒரு நாள் போதாது! சமீப ஆய்வின் படி, வாரத்திற்கு மூன்று நாட்கள் கூடப் போதாது போல தெரியுது! Step it up! :D

  • கருத்துக்கள உறவுகள்

ginormous.jpg

உடற்பயிற்சியைப் பொறுத்தவரை அமெரிக்க இதய ஆய்வு மையத்தின் பரிந்துரைகள் விஞ்ஞான அடிப்படை கொண்டவை. இங்கே தரப்படுவது இதய ஆரோக்கியத்தைக் கூட்டுவதற்கான  பரிந்துரைகள். நான் அறிந்தவரை, உடல் எடை குறைக்க இதை விட அதிகம் செய்ய வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிகை நாட்களில் அல்லது இனிப்பு அதிகமாய் சாப்பிடும் நேரத்தில் சுடு தண்ணீரையும்,கிறீன் ரீயும் குடிச்சால் சரியாய்ப் போய் விடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாரத்திற்கு ஒரு நாள் போதாது! சமீப ஆய்வின் படி, வாரத்திற்கு மூன்று நாட்கள் கூடப் போதாது போல தெரியுது! Step it up! :D

டாக்குத்தர் ஐயா!  என்னைப்போல் 12மணித்தியாலம் இருக்காமல் ஓடிஆடி வேலைசெய்பவர்களுக்கும் உடற்பயிற்சி தேவையா?  :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.