Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பேன்:அனந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அது தானே ஐ.நா விசாரணையை கோருகிறார்கள் தமிழ் மக்கள். அங்கு போர்க்குற்றங்கள் பற்றி பேசலாம்.
 
பீரிஸ் போர்க்குற்றங்கள் தாங்கள் செய்யவில்லையாம். :)  அதை பற்றி ஒரு வரியை இக்களத்தில் காணவில்லையே??
  • Replies 99
  • Views 5.8k
  • Created
  • Last Reply

பலருக்கு கருத்து சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை போலிருக்கு .

எவருக்கும் தாம் விரும்பிய கருத்தை சொல்ல உரிமையிருக்கு ஆனால் ஒரு அமைப்பில் இருக்கும் போது அங்கு ஜனநாயக முறையில் எடுக்கும் முடிவை மதிக்கவேண்டும் .கருத்து சுதந்திரம் என்று பெரும்பான்மை எடுக்கும் முடிவை எனக்கு விருப்பமில்லை என்று சொல்லமுடியாது .

ஒரே  அமைப்பில் இருக்கும் ஒருவர் தமிழர்களுக்கு தமிழ்ஈழம் தான் தீர்வு ,மற்றவர் சமஸ்டிதான் தீர்வு ,மற்றவர் மாகாணசபை,மற்றவர் எதுவும் தேவையில்லை என்று எல்லாம் ஆழுக்கு ஆள் விரும்பியபடி கதைக்க முடியாது .

 

ஐயா

என்ன சொல்லவருகின்றீர்கள்??

 

புலிகள் தான் தோன்றித்தனமாக நடந்தார்கள்

மாற்றுக்கருத்துக்களுக்கு செவிமடுக்கமறுத்தார்கள்

அதனால்தான் தோற்றோம் என்போர்

கூட்டமைப்புக்கு அது பொருந்தாது என்பது எவ்வாறு...??

ஒரு உறுப்பினருக்கு தனது நிலையைச்சொல்ல உரிமையில்லாது எவ்வாறு ஐனநாயகமாகும்???

இது எதேச்சதிகாரமில்லையா???

 

அண்ணோய்,

 

சனநாயகம் தேர்தல் மற்றும் வாக்கு போடுதலுக்கும் பார்க்க ஒரு பெரிய விடயம். 

இங்கே விரும்ப்பினவருக்கு வாக்களிப்பது வாக்களிக்காமல் விடுவது அதைப்பற்றி சொல்வது உரிமை சாந்தது.

அந்த உரிமையை நான் விமர்சிக்கவில்லை அனால் கூட்டமைப்பின் கட்சியின் முடிவெடுக்கும் தன்மையையும் அதன் பிரதிபளிப்பையும்மே சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உட்கட்சி ஜனநாயகம் என்று ஒன்று உள்ளது.. பொதுக்குழுவைக் கூட்டி (அப்படி ஒன்று இருந்தால்) தீர்மானம் நிறைவேற்றி அதை கட்சியின் முடிவாக அறிவிக்க வேண்டும். மாற்றுக் கருத்து உள்ள கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வைக்க ஒரு வெளி கிடைக்கும்.. அதை விட்டிட்டு இந்தியாவில் இருந்துபோட்டு வந்து முடிவை அறிவித்தால் மாற்று எண்ணம் உள்ள உறுப்பினர்கள் என்ன செய்யமுடியும்?? அவர்களும் தன்னிச்சையாக தங்கள் எண்ணங்களை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளவே செய்வார்கள்.. பிறகு குத்துதே குடையுதே என்றால் வேலைக்கு ஆகாது. :D

காசு சேர்க்கவெல்லோ வந்தவர். :icon_mrgreen:

இதை மூடி மறைத்து செய்யவில்லையே ,ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைசின் இணையதளத்திலும் வந்ததே .சம்பந்தர் ஐயா ,ஆனந்தி ,ரவிகரன் சிவாஜிலிங்கம் போன்றோருக்கும் கொடுத்தவர் .எவ்வளவு என்ற விபரம் எங்களிடம் உள்ளது .

நான் முன்வைக்கும் பல பதிவுகளுக்கு ஆதாரம் உள்ளது .மற்றவர்களைப்போல் ஊகத்தின் அடிப்படையில் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் அறிவிக்கும் மட்டும் அனந்தியும் ரவிகரனும் ஏன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தங்களின் உறுதியான முடிவை முதலே சொல்லியிருக்கலாமே! இவை மகிந்தருக்கு நல்லபிள்ளை வேடம் போட்டுக்காட்டுகினம். மகிந்த ஜனபதிதுமாட்ட ஜயவேவா!

  • தொடங்கியவர்

இதையே மக்களின் கருத்து கணிப்பாக ஏற்றுக்கொள்ளலாமா?

 நீங்கள் யாரும் நம்புவீர்களோ தெரியாது.கூட்டணிக்கு பணம் பற்றுவாடா பண்ணியது உண்மை.வெளி நாட்டிலிருந்து இவர்களுக்கு வழங்கிய பிரதியை இங்கு விரைவில் இணைக்கின்றேன்.அதையே தவறவிட்டவர்கள்.அதைவிட இவர்கள் அடுத்த வருடங்களில் கூட்டணியிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவார்கள் இதுதான் உண்மை

http://www.yarl.com/forum3/index.php?/topic/151241-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் அறிவிக்கும் மட்டும் அனந்தியும் ரவிகரனும் ஏன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தங்களின் உறுதியான முடிவை முதலே சொல்லியிருக்கலாமே! இவை மகிந்தருக்கு நல்லபிள்ளை வேடம் போட்டுக்காட்டுகினம். மகிந்த ஜனபதிதுமாட்ட ஜயவேவா!

அதை முன்னமே சொன்னால் கட்சி பொதுக்குழுவைக் கூட்டி ஜனநாயகத்தைப் பேணமுன்னம் அவசரப்பட்டுவிட்டார்கள் என்று குற்றம்சாட்டுவார்கள்.. பொறுத்துப் போனால் ஏன் முன்னமே சொல்லவில்லை என்று மாற்றி வாசிப்பீங்களா?? :D

இந்தியா சொன்னதை எழுதி வாசிக்கிறதாலதான் பிரச்சினைகள் வாறது.. :o

உட்கட்சி ஜனநாயகம் என்று ஒன்று உள்ளது.. பொதுக்குழுவைக் கூட்டி (அப்படி ஒன்று இருந்தால்) தீர்மானம் நிறைவேற்றி அதை கட்சியின் முடிவாக அறிவிக்க வேண்டும். மாற்றுக் கருத்து உள்ள கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வைக்க ஒரு வெளி கிடைக்கும்.. அதை விட்டிட்டு இந்தியாவில் இருந்துபோட்டு வந்து முடிவை அறிவித்தால் மாற்று எண்ணம் உள்ள உறுப்பினர்கள் என்ன செய்யமுடியும்?? அவர்களும் தன்னிச்சையாக தங்கள் எண்ணங்களை பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளவே செய்வார்கள்.. பிறகு குத்துதே குடையுதே என்றால் வேலைக்கு ஆகாது. :D

அரசியல் விளங்காதவர்கள் எழுதமுன்பு ஆராய்ந்து எழுதவேண்டும் ,சம்பந்தர் ஐயா இந்தியாவிலை இருந்தாலும் மாகாண ,மாவட்ட ,கிராமரீதியான கட்டமைப்புக்கள் வட -கிழக்கில் உள்ளது .சம்பந்தர் ஐயா இந்தியாவிலிருந்து வர முன்பு மாவையும் மற்றவர்களும் மக்களிடமும் ,கட்சி அங்கத்தவர்களிடமும் கருத்து கேட்கப்பட்டு அதன் அறிக்கை சம்பந்தர் ஐயாவிடம் கொடுக்கப்பட்டது .தனடிப்படையில் TNA யின் அரசியல் குழு கூடி முடிவெடுக்கப்பட்டது.

பரிசோதனை எலியை அரசியலுக்கு கொண்டுவந்தது பற்றி

வெளியிலை போற ஓணானை எடுத்து மடியிலை விட்டால் பிறகு குத்திக் குடையும் என்று மாவைக்கு சொன்ன போது கேட்கவில்லை ,இப்ப வருத்தப்படுகின்றார் .

ஜனநாயகம் முடிந்து இப்ப உட்கட்சிஜனநாயகம் தொடங்கியிருக்கு .,

உட்கட்சி ஜனநாயகம் என்றால் எம்மவருக்கு என்னவென்றே தெரியாது .தலைவர் சொல்வதற்கு இரு பக்கமும் மண்டையை ஆட்ட மட்டும் தான் எம்மவருக்கு தெரியும் .(கருணாநிதி ,ஜெயலலிதா ,செல்வா ,அமீர் ,சம்பந்தன் வரை அது தொடருது .இயக்கங்கள் நான் சொல்ல தேவையில்லை மற்ற பக்கம் தலையாட்டினால் தலையே இருக்காது ).

இப்படி ஒரு சொல்லை அனந்தியோ அல்லது ரவிகரனோ பாவிக்கவில்லை .இது எல்லாம் அவர்களுக்கு தெரியாது இப்படித்தான் நாட்டில அரசியல் போகுது .

விக்கி ,ஐங்கரநேசன் ,சிறிதரன் ,சிவாஜிலிங்கம் எல்லாம் இனிதான் வாயை திறப்பார்கள் போல .

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் அறிவிக்கும் மட்டும் அனந்தியும் ரவிகரனும் ஏன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தங்களின் உறுதியான முடிவை முதலே சொல்லியிருக்கலாமே! இவை மகிந்தருக்கு நல்லபிள்ளை வேடம் போட்டுக்காட்டுகினம். மகிந்த ஜனபதிதுமாட்ட ஜயவேவா!

 

அனந்தி கட்சி தலைவரின் முடிவை பார்த்து தனது முடிவை  தான் சரியானது.சம்பந்தர் உறுதியான முடிவு எடுப்பார் என எதிர்பார்த்து அவர் சறுக்கி விடவே தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.
 
அப்போ சம்பந்தர் ரனில்/சந்திரிக்கா/மைத்திரிக்கு நல்ல பிள்ளை வேடம் போட்டார் என எடுக்கலாமோ??

எனக்கென்னவோ சம்பந்தன் இப்போது உள்ள சூழ்நிலைக்கேற்றவாறு  சிறப்பாக செயல் படுவதாகத் தான் தெரிகிறது. மைத்திரிக்கு ஆதரவு என்பது உண்மையில் மகிந்தவை எதிர்ப்பதாக்த் தான் நான் பார்க்கிறேன். தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தமிழர்களை  கேட்க முடியாது என்பது மகிந்தவுக்கு  நன்கு தெரியும், மகிந்த அதிக பட்சம் தமிழர்களிடம் எதிர் பார்ப்பது தேர்தல் புறக்கணிப்பு தான் , ஆனந்தி மற்றும் ரவிகரனின் செயல்கள் மகிந்தவுக்கு துணை போவதாகவே அமையப் போகிறது .

 

அரசியல் அலசல் பகுதியில் இடம் பெற்ற ஒரு கட்டுரையில் வாசித்த்தை கீழே இணைத்துள்ளேன்

 

மைத்திரிக்கு ஆதரவளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
 
ஆட்சி மாற்றம். அதுவே எமக்குக் கிடைக்கக்கூடிய ஆகச்சிறந்த நன்மை. ஒரு சர்வாதிகாரியினதும் அதன் குடும்பத்தினதும் ஆட்சியிலிருந்து இலங்கை தப்பிக்கும். நாட்டில் மீண்டும் ஜனநாயகம் உருவாகும். ஜனநாயகத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் சம்பந்தம் கிடையாது. உதாரணத்துக்கு இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடு. ஸ்திரமான நாடா என்றால் இல்லை. சிங்கப்பூர் ஸ்திரத்தன்மையான நாடு. ஜனநாயக நாடா என்றால் இல்லை. சிங்கப்பூரின் ஒரேயொரு நல்லவிஷயம், ஆட்சியாளர்கள் சுயநலமிகளாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்றும் நினைப்பதுதான். ஆனால் இலங்கை போகும் போக்கில் ஜனநாயக விழுமியங்கள் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை. போலீஸ், இராணுவம், நீதி, தனி மனித சுதந்திரம், பத்திரிகைத்துறை என்று எல்லா இடங்களிலும் விஷம்போல இந்தச்செடி பரவிவிட்டது. இப்போது அறுக்காவிட்டால், இன்னமும் ஆறுவருடங்களில் நினைத்தே பார்க்கமுடியாத நிலை வரலாம்.
 
வடக்கு கிழக்கில் நடைபெறும் கட்டாய குடியேற்றம், இராணுவ ஆட்சி போன்றவற்றின் பரம்பல் குறையலாம். குறைந்தபட்சம் அதன் வேகம் குறையும். சந்திரிகா, ரணில் போன்றவர்கள் வலதுசாரி கொள்கைகளிலும், மேற்கத்திய சிந்தனைகளிலும் மிதமிஞ்சிய நம்பிக்கை கொண்டவர்கள். தமிழர்களை இவ்வளவு வெளிப்படையாக, யாருக்கும் பயப்படாமல் அடக்கியாள முயல்வார்களா என்பது சந்தேகமே. தமிழர்கள் ஓரளவுக்கேனும் மூச்சுவிடும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஓரளவுக்கு தமிழர்களாலேயே வடக்கு கிழக்கில் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் தற்போதுள்ள கெடுபிடிகள் குறையும். வெளிநாட்டு நிறுவனங்களின் பிரசன்னம் அதிகமாகும்.
 
மைத்திரி வென்றால், அது நாட்டை இராணுவ ஆட்சிக்கே இட்டுச்செல்லும். மகிந்தாவே இராணுவ ஆட்சியாளராக இருப்பார். ஏதாவது ஒரு காரணம் சொல்லலாம். புலிகள் கொடுத்த காசு. அமெரிக்க கொடுத்த காசு. அந்நிய சதி, ஏதாவது காரணம் சொல்லி, மைத்திரியை உள்ளே போட்டு மகிந்த ஆட்சியில் தொடர்ந்து இருக்கலாம். அப்படிப்போனால் நாட்டில் ஜனநாயகம் இல்லாமல்போகும். சீனா மீதான போக்கு அதிகரிக்கும். மேற்கத்திய மற்றும் இந்திய எதிர்ப்பு அதிகமாகும். தொலை நோக்கில் நாட்டின் இந்த ஸ்திரமற்றதன்மை தமிழர்களுக்கு நன்மையையே பயக்கும்.
 

துல்பன் ஜனநாயகம்பற்றிப் பேசுகிறீர்கள் எழிலன் தலைமையில் கட்டாய ஆள்சேர்ப்பு செய்கையில் அனந்தியின் ஜனநாயகம் எங்கே போனது? அதுபற்றிப் பேச அவ தயாரா? தேர்தலைப் புறக்கணிப்பதும் புறக்கணிக்கக் கோருவதும்தான் ஜனநாயகமா?

வெளிப்படைத்தன்மை என்பது கேலிக்கிடமானது.

 

நண்பா வாலி கட்டாய ஆட்சேர்ப்பு நடைபெற்றது ஆயுத போராட்ட காலத்தில். உலகில் ஆயுதஒரு வலிமையான அரசாங்கத்திற்கெதிராக ஆயுத போராட்டத்தை நடத்தும் போராட்டத்தை நடத்தும் இயக்கங்களில் பொதுவாகவே ஜனநாயகத்தின்படி  முடிவுகள் இருப்பதும் இல்லை அப்படி செய்வது யதார்த்தமும் அல்ல.  அவ்வாறான விடுதலை அமைப்புகளை அடக்குவதற்காக பலம் பொருந்திய அரசாங்கங்களே அவசரகாலசட்டம், பயங்கரவாத தடைசட்டம் என்று ஜனநாய விரோத சட்டங்களை உருவாக்கி அதை நடைமுறை படுத்தும்போது  போது உலக அங்கீகரமற்ற விடுதலை அமைப்புகள் ஜனநாயக, சர்வதேச விதிமுறைகளின் படி தமது போராட்டத்தை நடத்த முடியாது. அதற்காக விடுதலை புலிகள் மேற்கொண்ட எல்லா நடவடிக்கைகளும் சரியானவை என்று நான் வாதிடவில்லை. நிச்சயமாக  அவர்களின் பலமுடிவுகளில் உங்களை போல எனக்கும் முரண்பாடு உண்டு. கடுமையான யுத்த காலங்களில் கட்டாய ஆட்சேர்ப்பை அவர்கள் மேற்கொண்டது அதில் சர்வதேச விதிமுறைகளை கைக்கொள்ளாதது பொதுவான பார்வையில் தவறானது என்றாலும் ஒரு விடுதலை போராட்ட அமைப்பு என்ற ரீதியில் அவர்கள் பார்வையில் சரியாகபட்டது. ஒரு அவசர கால நிலையாகவே அதை அவர்கள் பார்த்தார்கள். அவர்களால் தற்போது கூட பல ஐரோப்பிய நாடுகளில்  நடைமுறையில் உள்ள சட்டரீதியான கட்டாய ஆட்சேர்ப்பை மேற்கொள்ள முடிந்திருக்கவில்லை. அதனால்  அவர்களால் அவ்வாறான சட்டரீதியான சர்வதேச விதிமுறைப்படியான  கட்டாய ஆட்சேர்ப்பை  செய்யமுடியவில்லை. யுத்த காலத்திற்கும் தற்போதைய காலத்திற்கும், சட்ட அங்கீகாரம் இல்லாத ஆயுத விடுதலை அமைப்புக்கும், சட்ட அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகம் அல்ல. உண்மை.உங்கள் கருத்து சரியானது. ஏற்றுகொள்ளுகிறேன். தற்போதைய நிலையில் மகிந்த கும்பல் தோற்கடிக்கப்பட்டு ஒரு அரசியல் மாற்றம் ஏற்படுவது அவசியம் என்றே நானும்  நினைக்கிறேன்.

 

தற்போதைய நிலையில் யுத்தம் முடிந்து 5 வருடகள் கடந்து விட்ட நிலையில் தமது கட்சிக்குள் கூட ஜனநாயகத்தை மேற்கொள்ள திராணியற்ற நிலையில் கூட்டமைப்பு உள்ளது.  கட்சியை செப்பனிட்டு சட்டவிதிகளை உருவாக்க அவர்களுக்கு போதிய அவகாசம் இருந்தது. அவர்கள் அதை செய்ய முடியவில்லை அல்லது விரும்பவில்லை. அவ்வாறு உட்கட்சி ஜனநாயக ரீதியில் சட்டவிதிகளை உருவாக்கியிருந்தால் சிவாஜிலிங்கத்தின் மீது எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்கலாம். கட்சி மேலிடத்தில் உள்ள ஒரு  சிலரின் சொந்த வசதிக்காக அவ்வாறாக  விதிமுறைகளுடன் கட்சியை செப்பனிடாமல் விட்டதனால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன முன்பு தமிழர் விடுதலை கூட்டணிக்குள்  இவ்வாறான உட்கட்சி ஜனநாயக செயற்பாடு இருந்த்து என்பதை மறுக்க முடியாது. பல முடிவுகள்  பொதுக்குழு  விவாதங்களின் பின்னர் எடுக்கபட்ட வரலாறும் உண்டு.   அக்கட்சிக்குள் இருந்து வந்த சம்பந்தருக்கு அது தெரியாமல் இல்லை. ஆனால் ஏதோ வெளியே சொல்ல முடியாத காரணத்தினால் அவரால் அதை செய்ய முடியவில்லை அல்லது அதில் அக்கறை எடுக்கவில்லை என்பதே உண்மை. ஒருவேளை உட்கட்சி ஜனநாயகத்தை ஏற்படுத்தினால் கட்சிகுள் புதிதாக முளைத்து தலையாளிகள் போல செயற்படும் ஒரு சிலரின் தனிபட்ட நலன் பாதிக்கபடும் என்பதாலும் அவர்களின் அழுத்தங்களால்  அதை ஏற்படுத்த முடியாமலும் இருக்கலாம். கட்சிக்குள் ஒழுங்கான சட்ட விதிகளை உருவாக்கினால் வெளிச்சக்திகளால் அவருக்கு கொடுக்கபடும் அழுத்தங்களை கூட ராஜதந்திர ரீதியில்  சமாளிக்க கூடிதாக இருக்கும்.

 

 அடுத்து சுவிசுக்கு என்று ஒரு ஜனநாயகம் இருக்கிறதா என்று வேறு  நண்பர் ஒருவர் இங்கு  கேள்வி எழுப்பினார். உண்மையில் ஜனநாயக விழுமியங்களை உயர்ந்த அளவில் பேணி பாதுகாக்கும் நாடு சுவிற்சர்லாந்து. இங்கு ஒரு கிராம சபை எடுக்கும் முடியவில் ஜனாதிபதி கூட தலையிட முடியாது. அவரவர் கிராமங்களின் வருமான வரி கிராமசபைகளால் அறவிடபட்டு அதில் குறிப்பிட்ட தொகை அந்த கிராம சபைக்கு உரியது. தங்கள் கிராம அபிவிருத்திகளை அவர்களே பார்த்து கொள்வார்கள். அந்த கிராமத்தில் ஒரு தொழிற்சாலை அல்லது பல்கடை அங்காடி வேண்டாம் என்று அந்த கிராம மக்கள் முடிவெடுத்துவிட்டால் எவராலும் அதை தடுக்க முடியாது.  அரசாங்கம் கொண்டுவரும்  புதிய சட்டமூலங்களுக்கு எதிராக  50000 பேர் கையொப்பம் இட்டு மனுகொடுத்தால் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர்தான் அது சட்டமாக்கபடலாம். இது தேசிய சட்டங்களுக்கும் பொருந்தும் மாநில, நகரசபை சட்டங்களுக்கும் பொருந்தும். Örtliche Democracy எனும் பிரதேசரீதியான ஜனநாயகம் மிகவும் உன்னத நிலையில் இங்கு பேணப்படுகிறது. அதனால் அமைச்சர்கள்கூட எதுவித பாதுகாப்பும் இன்றிகூட பொது போக்குவரத்து சாதனங்களை பாவித்து தமது கடமைகளுக்கு செல்லகூடிய நிலை இங்கு உள்ளது. தனது கட்சி எடுக்கும் முடிவில் தனக்கு திருப்தி இல்லை என்றால் அதை பகீரங்கமாக கூற கூடிய விதத்தில் உட்கட்சி ஜனநாயகம் இங்கு பேணப்படுகிறது. அது அவரது தனிப்பட்ட கருத்தாக கொள்ளபடும். தனது கட்சியின் ஒரு கொள்கை முடிவில் தனக்கு திருப்தி இல்லை என்று பகீரங்கமாக கூறிவிட்டு தொடர்ந்தும் அக்கட்சியில் முக்கிய பதவிகளில் இருக்கும் நிலை இங்கு உள்ளது. இவ்வாறு உன்னத ஜனநாயகம் பேணப்படும் சுவிற்சர்லாந்தில் கட்டாய இராணுவசேவை நடைமுறையில்  உண்டு. அது  அது தேவையா தொடர்பாக வாத பிரதிவாதங்களும் உண்டு. சர்வஜன வாக்கெடுப்புகூட நடைபெற்றது.  சுவிற்சர்லாந்தின்  ஜனநாயகம் பற்றி எழுதினால் இன்னம் பல எழுதலாம். ஆனால் அதற்கான தளம் அல்ல இது.  அதனால் நிறைவு செய்கிறேன்.

 

 

 

நன்றி

Edited by tulpen

மகிந்தவை ஆதரிப்பதால் கிடைக்ககூடிய தீமைகள்.

 

இன்னொரு ஆறு வருடங்கள். வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி. புத்த கோயில்கள். சிங்கள மயமாக்கல். 95ம் ஆண்டு பிறந்த தலைமுறைக்கு இன்னமும் ஆறுவருடங்களில் இருபத்தாறு வயதாகிவிடும். புத்தம் புதுத் தமிழ் தலைமுறை. நிஜமான நம் அடையாளங்கள் மேலும் தொலைந்துபோய், புதிய அடையாளங்கள் உருவாக்கப்பட்டு, அந்த அடையாளங்களிடையே வளரும் தலைமுறை. மிக இலகுவாக எம்மை தொலைத்துவிடுவோம். மகிந்த, கோத்தா போன்றவர்கள் இந்த விசயத்தில் கொண்டிருக்கும் உறுதியும் போடும் திட்டங்களும் மிரட்டுகின்றன. வீராவேசம் பேசி பயனில்லை. படித்தவர்கள் அதிகமாக நாட்டை விட்டு வெளியேறவே முயல்வர். கட்டமைப்பு முற்றாக குலைந்துவிடும். வசாவிளான் என்ற மொத்த ஊருமே இங்கே மெல்பேர்ணிலும், டோராண்டாவிலும் இருக்கிறது. நிஜமான வசாவிளானில் ஆர்மி இருக்கிறான். கமம் செய்கிறான். அடுத்ததாக அவன் குடும்பம் வந்து குடியேறும். கட்டாய குடியேற்றமாகவே இருக்கவேண்டியதில்லை. வெற்றுக்காணிகளும், வளங்களும், ஆளணித் தேவைகளும் இருந்தால், வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடுவதைப்போல தெற்கிலிருந்து மக்கள் வருவார்கள். தடுக்கமுடியாது.

 

ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வு என்று தீர்மானித்தால், அப்படியான ஒரு தீர்வுக்கு நாட்டில் அடிப்படை ஜனநாயகம் என்று ஒன்று இருக்கவேண்டும். மகிந்தவும் அவரின் குடும்பமும் நாட்டை சிரியா, வட கொரியா பாணி ஆட்சிமுறைக்கே இட்டுச்செல்கிறார்கள். மகிந்தவின் மகன் பக்கிங்காம் மாளிகையிலிருந்து குதிரை வாங்கி இலங்கையில் ஒட்டுகிறானாம். அவனிடம் தனியாக ஒரு ஹெலிகப்டரே இருக்கிறது. சர்வாதிகாரிகளே அசரும் வண்ணம் நாட்டின் ஆட்சி போய்க்கொண்டிருக்கிறது. இலங்கை நாட்டுக்கு ஜனநாயகம் மீளவும் வருவது அவசியமாகும். அந்த அவசியத்தை தமிழர்களும் நிராகரிக்கமுடியாது. ஜனநாயகம் இல்லாத நாட்டில் சுயநிர்ணய உரிமை, தேசியம் என்ற விஷயங்களை ஆயுதப்போராட்டம் இல்லாமல் பேசவே முடியாது. ஆயுதப்போராட்டம்? Forget it. இனியும் யாரும் எங்களுக்காக சாகவேண்டாம். நிறைய இழந்துவிட்டோம்.

 

வெகு சீக்கிரம் கூட்டமைப்பு உடையும். மகிந்தவால் கை வைக்கமுடியாத ஒரே கட்சி கூட்டமைப்புத்தான். அது கூட்டாக இருப்பதற்கும் ஒரே காரணம் மக்களின் ஒற்றுமையே ஒழிய கூட்டமைப்பின் ஒற்றுமை அல்ல. எப்போது மக்கள் மகிந்தவுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்று தெரியவருகிறதோ அடுத்தகணமே கூட்டமைப்பின் முக்கிய புள்ளிகள் பாய்ந்துவிடுவார்கள். தமிழனத்தில் கொஞ்சமேனும் மூக்குடைபட்டு நிற்கும் ஒற்றுமை அரசியல் சிதறிவிடும்.
 
 

அனந்தி அவர்களைப் போன்று ஓரிரண்டு பேர்களாவது எம்  உள்ளக் கிடங்கை மனம் திறந்து சொல்ல இருக்கின்றார்கள் என்று சிறிது நிம்மதி, ஆனால் இருக்குமிடம் சந்தேகப்படும்படி நடக்கின்றது.  மறு முறை வருவீர்களா எம் வாசல் தேடி??? வந்தால்...!?

 

 

வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார்.

 

 

2013 கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கியமான அம்சம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பதே.
 
ஒன்றையும் வாசிக்காமலே போட்டி போடப் போனவவோ ??
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்குள் எங்கே உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது.சம்பந்தர் எடுப்பதுதான் முடிவு.அவர் விரும்பினால் ஆனந்தசங்கரியை உள்ளே கொண்டு வருவார். கஜேந்திரகுமாரை வெளியே தள்ளுவார்.குறைந்த பட்சம் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவதற்கே அவர்களின் உட்கட்சி ஜனநாயகம் தடுக்கின்றது.அனந்தி தனது முடிவைத் தீர்க்கமாக வெளியிட்டிருக்கின்றார்.ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை விரும்பம் சம்பந்தர் ததேகூட்டமைப்பில் இருக்காது ஆளும்கட்சியில் சேர்ந்தால் நல்ல அமைச்சர்பதவி தருவார்கள்.அதை வைச்ச மக்களுக்க சேவை செய்யலாம். தீர்வுக்கும் அழுத்தம் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

2013 கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முக்கியமான அம்சம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பதே.

 

ஒன்றையும் வாசிக்காமலே போட்டி போடப் போனவவோ ??

தாயகம், தேசியம், மற்றும் சுயநிர்ணய உரிமையுடன் ஒரு நாடாக இருக்கலாம்தானே.. (உ+ம்: வேல்ஸ், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து)

தாயகம், தேசியம், மற்றும் சுயநிர்ணய உரிமையுடன் ஒரு நாடாக இருக்கலாம்தானே.. (உ+ம்: வேல்ஸ், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து)

 

 
அப்ப ஏன் புறக்கணிக்கிறாவாம். TNA உம் அப்படி ஒரு தீர்வைத் தானே முயற்சிக்கிறது. .
 
 
சனம் இவவ புறக்கணிக்கப் போகுது. 
  • தொடங்கியவர்

கூட்டமைப்புக்குள் எங்கே உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது.சம்பந்தர் எடுப்பதுதான் முடிவு.அவர் விரும்பினால் ஆனந்தசங்கரியை உள்ளே கொண்டு வருவார். கஜேந்திரகுமாரை வெளியே தள்ளுவார்.குறைந்த பட்சம் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவதற்கே அவர்களின் உட்கட்சி ஜனநாயகம் தடுக்கின்றது.அனந்தி தனது முடிவைத் தீர்க்கமாக வெளியிட்டிருக்கின்றார்.ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை விரும்பம் சம்பந்தர் ததேகூட்டமைப்பில் இருக்காது ஆளும்கட்சியில் சேர்ந்தால் நல்ல அமைச்சர்பதவி தருவார்கள்.அதை வைச்ச மக்களுக்க சேவை செய்யலாம். தீர்வுக்கும் அழுத்தம் கொடுக்கலாம்.

வெட்கம் ,மானம்,சூடு சொரணை இருந்தால் எவ்வளவு காலத்திற்கு இப்படி எழுதபோகிறீன்கள் அதுதானே டக்கியை அனுப்பியிருக்கிறீன்கள் ,திருகோணமலை மக்கள் இப்படி நக்குற பதவி எல்லாத்திட்கும் ஆசைப்படமாட்டார்கள்

,

மண்டையன்குழு சுரேஷ் ,TELO சிவாஜிலிங்கம் இவங்களெல்லாம் எத்தனைபேரை கொலை செய்தாங்கள் ,எதனை பேருடைய தாலியை அறுத்தாங்கள் இவங்கலேல்லாரையும் தலையிலை தூக்கிவைத்து கொண்டாடிக்கொண்டு சம்பந்தர் ஐயாவை விமர்சிக்க உங்கள் மனச்சாட்சி இடங்கொடுக்குதா ,

உங்களைப்போன்றவர்கள் நினைப்பது எப்பொழுதும் யாழ்ப்பாணத்தவர்கள் தான் தலைமைப்பதவிக்கு வரவேண்டும் மற்றவர்கள் எல்லோரும் உங்களுக்கு சேவகம் செய்யவேண்டும் ,உங்களைப்போன்ற ஒருசில அறிவிலிகளால் தமிழ் சமுதாயத்திற்கு இந்த கேடு .

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு வேண்டாமென்றால் கூட்டமைப்பே இருக்க முடியாது. 

 

தனிநாடு இப்போதைக்கு சாத்தியமில்லை அது சாத்தியப்படும் வரை மக்கள் இப்படியே காலத்தை களிக்கமுடியது. ஒரு தீர்வு வேண்டும் அது எமது மொழி கலை பண்பாடுகளை பாதுகாத்து வளர்க்கவேண்டும். 

 

இல்லையேல் எமது இனம் முற்றாக அளிக்காப்டும் அதற்கு பிறகு தனிநாடாது மணாங்கட்டியாவது.  

தாயகம், தேசியம், மற்றும் சுயநிர்ணய உரிமையுடன் ஒரு நாடாக இருக்கலாம்தானே.. (உ+ம்: வேல்ஸ், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து)

 

 

கஜேந்திரன் ,கஜேந்திரகுமார் ,ஆனந்தி ,சிவாஜிலிங்கம் ,ரவிகரன் எல்லோரும் பாராளுமன்றத்திலோ ,மாகணசபையிலோ சத்தியபிரமாணம் எடுக்கும் போது பிரிவினைக்கு எதிராகத்தான் சத்தியப்பிரமாணம் செய்கின்றார்கள் ,வெளிநாடு வந்து தமிழ் ஈழம் ,இரண்டு தேசம் என்று கதை அளந்தால் தான் போலித்தேசியவாதிகளிடமிருந்து டாலார் ,பவுணுகள் கிடைக்கும் இவர்கள்தான் அறியாமையிலும் தங்களுடைய பதவியை தக்கவைப்பதற்கு செயற்படுகின்றார்கள் என்றால் புலம்பெயர்ந்த புத்திஜீவிகள் பகுத்தறிவு எங்கை போனது ?

 
 
இவர்கள் எல்லோரும் ஐ நா மனித உரிமைப்பேரவையின் தீர்மானங்களை அனைத்துலக மக்கள் அவையுடன் சேர்ந்து எரித்தவர்கள் ,இப்ப சாட்சியங்களை கொடுங்க என்று அறிக்கை விடுகின்றாங்கள் ,வேடிக்கையாயில்லை இதுதானோ படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் ,இந்த கோமாளிக்கூட்டத்திற்கு பின்னால் ஒரு கூட்டம் ,ஐயோ ஐயோ

Edited by Gari

சரி இது சிங்கலதேசத்துக்குரிய தேர்தல் ,அப்ப நீங்கள் எந்ததேசத்தில் இருக்கின்றீங்க ,எந்த தேச பாஸ்போட்டை பாவிக்கின்றீங்க ,எங்க இருந்து சம்பளம் வாங்குகின்றீங்க ?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் வாக்குகள் இரண்டாகப் பிரிந்திருந்தும் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக உள்ள மாவட்டங்களில் எல்லாம் மகிந்தவிற்குத்தான் ஆதரவு அதிகமாக உள்ளது. எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிப்பது தமிழ், முஸ்லிம் வாக்குகள்தான்.

தமிழ் மக்கள் யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று வாக்களிக்கப் போவதில்லை. ஆனால் யார் வரக்கூடாது என்றுதான் வாக்களிக்கக் போகின்றார்கள். இது தெளிவாகத் தெரிந்தமையால்தான் மைத்திரி, சந்திரிக்கா, ரணில் கூட்டணி தமிழ்க் கூட்டமைப்போடு எதுவித ஒப்பந்தங்களையும் செய்யவில்லை. கூட்டமைப்பும் எவ்வித நிபந்தனையுமின்றி மைத்திரியை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர். இது கையாலாகாத்தனம் மட்டுமல்ல, தமிழ் மக்களின் பலத்தை வைத்து அரசியல் செய்யமுடியாத இழிவான நிலையாகும்.

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள், போராளிகளின் விடுதலை பற்றிக் கூட மூச்சுவிடாத தமிக்கூட்டமைப்புத் தலைவர்கள் எப்படி தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை உள்ளவர்கள் என்று சொல்லமுடியும்?

அரசியலில் பேரம் பேச வக்கற்ற சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்களின் மீதான விமர்சனத்தைப் பிரதேசவாதமாகக் காட்டி அவர்களைத் தூக்கிப் பிடிக்கும் தூணாக அல்லது முட்டுக்கொடுக்கும் தடியாக இருக்கும் Gari போன்றவர்களின் தலைமை விசுவாசத்தையும் கட்சி விசுவாசத்தையும் இங்கு காணமுடிகின்றது. ஆனால் இந்த விமர்சனங்கள் சம்பந்தர், சுமந்திரன் மேல் மட்டுமல்ல, கையாலாகாத மாவை மேலும்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.