Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவியேற்ற உடனேயே தமிழர்களை மறந்து போன புதிய ஜனாதிபதி! - பிரதமர் ரணிலிடம் மனோ கணேசன் காட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mano-ganesan-350-seithy-news.jpg

தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஆதரவைக் கோரிப் பெறுவது. தேர்தல் முடிந்ததும் தமிழர்களை உதாசீனம் செய்து உதறித் தள்ளுவது. - இதுதான் தென்னிலங்கை அரசுகளின் காலாகால பரவணிப் பழக்கம். அதை இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே செயலில் காட்டத் தொடங்கி விட்டீர்களே! - என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி வீழ்ந்தார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

இந்தச் சம்பவம் இன்றிரவு(09) இடம்பெற்றது. இன்று மாலை புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் ஆகியோர் பதவியேற்கும் நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வை ஒட்டி நேற்றிரவு இடம்பெற்ற உரையாடல் ஒன்றின் போதே புதிய பிரதமர் மீது இப்படிப் பாய்ந்து விழுந்தார் மனோ கணேசன்.

இன்று(09) மாலை பதவியேற்ற பின்னர் உரையாற்றிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வெற்றிக்கு உழைத்தவர்களைப் பெயர் குறிப்பிட்டு பட்டியலிட்டு நன்றி பாராட்டினார். ஆனால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களான சம்பந்தர், மனோ கணேசன், திகாம்பரம், போன்றவர்களின் பெயர்களையோ, கட்சிகளையோ குறிப்பிட்டு நன்றி கூறாமல் - வேண்டுமென்றே தவிர்ப்பவர் போல - தமது உரையை அவர் முடித்துக் கொண்டார்.

இதனால் சீற்றமடைந்த மனோ கணேசன் அது தொடர்பான தனது எரிச்சலை புதிய பிரதமரிடம் கொட்டித் தீர்த்தார். "ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, சந்திரிகா குமாரதுங்க, சம்பிக்க ரணவக்க, ஹக்கீம், ரிசாட் பதியுதீன் போன்றவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்ட புதிய ஜனாதிபதிக்கு ஏனோ சம்பந்தன், மனோ கணேசன், திகாம்பரம் போன்றோரின் பெயர்கள் மட்டும் தெரியவில்லை; அல்லது நினைவுக்கு வரவில்லை.

இவர்களில் சில தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஆரம்பத்தில் முன்வரவில்லை. அவர்களின் மக்கள் ஏற்கனவே மைத்திரிபாலவை ஆதரிக்க முன்வந்து விட்டமையால் வேறு வழியின்றி தமது ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றி கூறத் தெரிந்த புதிய ஜனாதிபதியின் கணிப்பில் தமிழர் தலைவர்கள் மட்டும் தட்டுப்படாமல் போய்விட்டார்கள்.

தேர்தலில் தோற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தம்மை வரவேற்பதாக ஹம்பாந்தோட்டை, மெதமுலன மக்கள் முன்னிலையில் இன்று உரையாற்றினார். "நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் தமக்கு வாக்களித்தனர் என்று அங்கு கூறிய அவர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களே தமக்கு வாக்களிக்காமல் விட்டு தோற்கடித்துள்ளனர் என்ற சாரப்பட உரையாற்றினார்.

இந்தத் தேர்தலில் தமக்கு தோல்வியையும், மைத்திரிபால சிறிசேனவுக்கு வெற்றியையும் தேடிக் கொடுத்தவர்கள் யார் என்பதை - இனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் வெளிப்படையாகக் கோடி காட்டிப் பேசியுள்ளார். ஆனால் அந்த மக்கள் மூலம் வெற்றியைப் பெற்றவருக்கு மட்டும் அதன் தாற்பரியம் விளங்கவில்லை; புரியவில்லை.

இந்தப் போக்கு புதுமையன்று. இப்படி நடப்பதுதான் தென்னிலங்கை அரசுத் தரப்புக்களின் பரவணிப் பழக்கம். தமிழர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டு அவர்களின் காலை வாரி விடுவது அவர்களின் போக்கு. அதனை - இத்தகைய வெற்றியை - தமது ஒற்றுமையான வாக்களிப்பு மூலம் உங்களுக்குப் பெற்றுத் தந்த தமிழர்களுக்கு பதவியேற்ற அன்றே - அதிகாரத்துக்கு வந்த உடனேயே - நீங்கள் காட்டுவீர்கள் என்று நாம் நம்பவில்லை." என்று சீறினார் மனோ கணேசன்.

அவரை சமாதானப்படுத்த முயன்ற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து நாளை சனிக்கிழமை மனோ கணேசனுடன் விரிவாக உரையாடி பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஒழுங்கைத் தாம் செய்வார் என்று உறுதியளித்தார் என்று அறிய வந்தது.

http://seithy.com/breifNews.php?newsID=124323&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

mano-ganesan-350-seithy-news.jpg

-----

இன்று(09) மாலை பதவியேற்ற பின்னர் உரையாற்றிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வெற்றிக்கு உழைத்தவர்களைப் பெயர் குறிப்பிட்டு பட்டியலிட்டு நன்றி பாராட்டினார். ஆனால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களான சம்பந்தர், மனோ கணேசன், திகாம்பரம், போன்றவர்களின் பெயர்களையோ, கட்சிகளையோ குறிப்பிட்டு நன்றி கூறாமல் - வேண்டுமென்றே தவிர்ப்பவர் போல - தமது உரையை அவர் முடித்துக் கொண்டார்.

இதனால் சீற்றமடைந்த மனோ கணேசன் அது தொடர்பான தனது எரிச்சலை புதிய பிரதமரிடம் கொட்டித் தீர்த்தார். "ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, சந்திரிகா குமாரதுங்க, சம்பிக்க ரணவக்க, ஹக்கீம், ரிசாட் பதியுதீன் போன்றவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்ட புதிய ஜனாதிபதிக்கு ஏனோ சம்பந்தன், மனோ கணேசன், திகாம்பரம் போன்றோரின் பெயர்கள் மட்டும் தெரியவில்லை; அல்லது நினைவுக்கு வரவில்லை.

-------

இதனைத்தானே......  ஆரம்பத்திலிருந்தே....  யாழ்களத்திலிருந்து சம்பந்தருக்கு, சொன்னோம்.

கேட்டீங்களா.....  புலம்பெயர் தமிழர், புலிவால் என்று சொன்னவர்கள் எல்லாம்... எங்கே?

உண்மையில்... மனோ கணேசன், அகில இலங்கை தமிழருக்கும் தலைமை தாங்கக் கூடிய.. பக்குவம் பெற்ற, துணிச்சல் மிக்க அரசியல்வாதி.

ஓட்டுப் போடாத சம்பந்தன், இவரிடம்... பிச்சை வாங்க வேண்டும்.

சம்பந்தனுக்கு.... உடம்பு சரியல்லை என்றால்....

சக்கர நாற்காலி வாங்கி அனுப்ப, புலம் பெயர் தமிழர் ரெடி.

அதை... வைத்து, தள்ளிக் கொண்டு போக....  கோசான், அர்ஜுன்.... போன்றவர்களும் ரெடி.

(கருணாநிதியும்.... முதுகு வலி, சக்கர நாற்காலி என்று தான்... அரசியல் செய்கிறார்)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வெளி வரத் தொடங்கிய நேரம் எங்களுக்குத் தான் வெற்றி என்ற தொனியில்  

பல தமிழ்த் தலைவர்கள்  பேட்டி கொடுத்ததை நினைக்க கவலையாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி இருப்பதால் இப்படி ரணிலிடம் கேட்க முடிகிறது. மகிந்த இருந்தால் ?

இதனால்தான் மனோவும் சம்பந்தனும் மைத்திரியை வர வைத்தனர்.

மகிந்த ஜனாதிபதியாய்... வந்த புதிதில்,

வடக்கு மாகாணத்தில்... அகதி முகாமில் வைத்து.. சாப்பாட்டுப் பார்சலால் எறிந்து தமது எதிரிப்பை காட்டியர்கள் எம் மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் காட்டுவார்கள், காட்டினார்கள். ஆனால் தலைவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் வேணுமெண்டால் பசிலிடம் கெஞ்சுங்கள் என்ற நிலைதான் இருந்தது.

இன்று மனோவால் ரணிலிடம் காட்டம் காட்ட முடிகிறது, ரணிலும் சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் இருந்து தொடங்க வேண்டும் எமது ராஜதந்த்ஹிர நகர்வு.

ஒரு கணக்குச் சொல்கிறேன் விளங்குதா என்று பாருங்கள்.

போர்க்குற்ற விசாரணை என்பது எமக்கு இருக்கும் பிரதான ஆயுதம். இனித்தான் இதை கூட்டமைப்பு கையில் எடுக்க வேண்டும். இனக்கொலை தீர்மானத்தையும் நிறைவேற்றலாம்.

மைத்திரியோ ரணிலோ மகிந்த/ ராணுவ தளபதிகளை விசாரணைக்கு அனுப்ப முடியாது. அப்படி அனுப்பினால் அது அரசியற் தற்கொலைக்குச் சமன்.

ஆனால் ஐநா விசாரணையில் பிடி நன்றாக இறுகி விட்டது. இந்நிலையில் விசாரணைகளை நீர்த்துப் போக செய்ய - தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இந்நிலையில் போர்க்குற்ற விசாரணயை ஒரு பேரம் பேசு பொருளாக பாவித்து நமக்குரிய உச்சபட்ச சுயாட்சியை அடைய நாம் முயலவேண்டும்.

இதன் முதல்படிதான் மைத்திரியின் ஏற்றமும் மகிந்தவின் இறக்கமும்.

கனவு காண எல்லாருக்கும் உரிமை உள்ளது தொடருங்கள் வேறை ?

சுய ஆட்சிக்கு இடமில்லை என்று MY3 கூறியதாக ஞாபகம் !!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பல்லக்கில் போவதற்காக..தமிழர்களின் உரிமையை தாரை வார்த்த கூட்டத்தை சிங்களவன்.. அவ்வளவு இலகுவாக எனி கணக்கில் எடுக்கமாட்டான். தமிழர்களை சிங்களவன் கணக்கில் எடுத்த காலம்..அது பிரபாகரனோட முடிந்துவிட்டது. எனி இன்னொரு பிரபாகரன் வந்தால் உண்டு. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா போர்க்குற்ற விசாரணையை.. யாரப்பா முன்னெடுக்கிறது. சம்பந்தன்.. சுமந்திரன்.. போர்க்குற்றம்.. இனப்படுகொலையை உச்சரிக்கவே மாட்டன் என்று சபதம் எடுத்திட்டார்கள். அங்கினை அனந்தி.. சசிதரன்.. கஜேந்திரன் என்று பேசுறது எல்லாம்.. வெளிநாட்டுப் புலிப்பினாமிகள் சொல்லிக் கொடுத்தது என்று சொல்லுறேள்.

புலம்பெயர் புலி பினாமிகள் தான் அங்கின ஏதோ தங்களால் இயன்ற ஆதாரங்களை சேகரித்துச்..செய்யுதுங்கள். அதுவும் உங்களுக்கு பிடிக்குதில்ல.

இப்ப என்னடான்னா.. போர்க்குற்ற விசாரணையை வைச்சு மைத்திரியை வளைச்சுப் போட ராச தந்திரம் வகுக்கப் போகினமாம்..????! நல்லா கதை விடுறேள். இதையே புலம்பெயர் ஆட்கள் சொன்னா.. புலிப் பினாமி. இப்ப நீங்க சுத்தி அடிச்சு அந்த பினாமி வட்டத்தை நோக்கி தானே வாறேள். அதுக்குள்ள எதுக்கு தேவை இல்லாத பிகு.

சம்பந்தனையும்.. சுமந்திரனையும்.. கூட்டிக்கிட்டு வாங்க. பிரபாகரனை... புலிகளை திட்டி சம்பந்தன் சிங்கள மக்களிடமோ.. சிங்கள தலைவர்களிடமோ நன்மதிப்பை பெற முடியாது. அதற்கு மைத்திரி சம்பந்தனை அடியோடு மறந்த இந்த நிகழ்வு சாட்சி. இதையே பிரபாகரனை பற்றி உண்மையைப் பேசி இருந்தால்.. தமிழ் மக்களாவது ஆறுதல் பட்டிருப்பார்கள். பாவம்.. சம்பந்தன் வகையறாக்கள். சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சும் பொன்சேகா தேர்தல் முடிய கழட்டிவிட்டிட்டு. இப்ப மைத்திரி..????! நம்ம பிழைப்பு இப்படியாப் போச்சே. :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் காட்டுவார்கள், காட்டினார்கள். ஆனால் தலைவர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் வேணுமெண்டால் பசிலிடம் கெஞ்சுங்கள் என்ற நிலைதான் இருந்தது.

இன்று மனோவால் ரணிலிடம் காட்டம் காட்ட முடிகிறது, ரணிலும் சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் இருந்து தொடங்க வேண்டும் எமது ராஜதந்த்ஹிர நகர்வு.

ஒரு கணக்குச் சொல்கிறேன் விளங்குதா என்று பாருங்கள்.

போர்க்குற்ற விசாரணை என்பது எமக்கு இருக்கும் பிரதான ஆயுதம். இனித்தான் இதை கூட்டமைப்பு கையில் எடுக்க வேண்டும். இனக்கொலை தீர்மானத்தையும் நிறைவேற்றலாம்.

மைத்திரியோ ரணிலோ மகிந்த/ ராணுவ தளபதிகளை விசாரணைக்கு அனுப்ப முடியாது. அப்படி அனுப்பினால் அது அரசியற் தற்கொலைக்குச் சமன்.

ஆனால் ஐநா விசாரணையில் பிடி நன்றாக இறுகி விட்டது. இந்நிலையில் விசாரணைகளை நீர்த்துப் போக செய்ய - தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இந்நிலையில் போர்க்குற்ற விசாரணயை ஒரு பேரம் பேசு பொருளாக பாவித்து நமக்குரிய உச்சபட்ச சுயாட்சியை அடைய நாம் முயலவேண்டும்.

இதன் முதல்படிதான் மைத்திரியின் ஏற்றமும் மகிந்தவின் இறக்கமும்.

சுமத்திரன் இருக்கும் மட்டும் இது  நடக்காத விடயம் பவிசுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு வந்தவர்களால் இது முடியவே முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், சம்பந்தன், சீவி மாவை இவர்களால் மட்டுமே இது முடியும்.

கிட்டத்தட்ட 3 மாததுக்கு முன்பே சொன்னேன். விடயங்கள் ஒரு நேர்கோட்டில் வருகிறன - இந்தியாவும் மேற்கும் மகிந்தரை கைகழுவி விட்டது, சீன நீர்மூழ்கிகள் வந்தது மகிந்தரின் கடை மிரட்டல் என்று.

இல்லவே இல்லை - மேற்குலகு என்று ஒன்றே இல்லை. இலங்கை பற்றி அவர்களுக்கு ஒரு பொது நிலைப்பாடில்லை. என்று சொன்னீர்கள்.

புலம் பெயர் அழுத்ததினால்தான் போர்க்குற்ற விசாரணை வந்தது என்பது உண்மையிலேயே ஒரு மாயை. இதை விட பல மடங்கு அழுத்தம் கொடுத்தும் எம்மால் 2009 அழிவை ஏன் தடுக்க முடியவில்லை. ஏனினில் அது அப்படித்தான் நடக்க வேண்டும் நெறி மேற்க்கு தீர்மானித்து விட்டது.

மகிந்த மேற்க்குக்கு இந்தியாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றதாலேயே அவருக்கு இவ்வளவும் நடந்தது.

மேற்க்கு மகிந்தவை வழிக்கு கொண்டுவர பாவித்த ஒரு ஆயுதம் போர்க்குற்ற விசாரணை. போரை முடிவுக்கு கொண்டுவர மகிந்த இந்தியா மேற்க்குக்கு கொடுத்த அதே உறுதி மொழியை இப்போ ரணிலும் மைத்திரியும் செய்தாக வேண்டும்.

தனிநாடு என்பது இப்போ இலங்கையை பொறுத்தவரை ஒரு தெரிவே இல்லை. சிங்களவர்களும், இந்த்ஹியர்களும், முஸ்லீம்களும், மேற்க்கும், தமிழர்களும் கூட இப்போ அதை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. பிரபா வோடு அந்த கோரிக்கையும் செத்து விட்டது. இது அங்கே இப்போ ஒரு வரலாறு. எல்லாளன் தனி அரசமைத்தான், சங்கிலியன் போத்துகீசரை எதிர்தான் என்பது போல பிரபா தனிநாடு கேட்டு முன்பு போராடினார் என்பதுதான் இப்போ அங்கே தமிழர் மனநிலை.

ஆனால் எம்மை நாமே ஆள வேண்டும், எமது நிலம் பறிபோக கூடாது, இனப்பரம்பல் மாறக்கூடாது, போலீஸ் அதிகாரம் வேண்டும், காணி அதிகாரம் வேண்டும் எனும் மக்களின் அபிலாசைகள் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் சொல்லுவதும் அதையே.

மைத்திரி ஒற்றையாட்சியை மாற்ற மாட்டேன் என்பது உண்மைதான். கேட்பதை எல்லாம் அவர் தங்க தட்டில் வைத்து தந்தால் அப்புறம் அவர் எல்லோ கூட்டமைப்பு இடத்தில் இருக்க வேண்டும்?

கூட்டமைப்பின் நோக்கு மூவகை பட வேண்டும்.

மிக கிட்டிய நோக்கு - வட ஆளுனர் மாற்றம், ராணுவ பிரசன்ன குறைப்பு, சிவில் நிர்வாகம் மீண்டும் சிவிலியன்களிடம், கெடுபிடிகளில் தளர்வு

இடக்கால நோக்கு - பொலீஸ் காணி அதிகாரம் சேர் மாகாண அரசு (13)

நீண்ட கால நோக்கு - வட-கிழக்கு இணைந்த மாகாண அரசுக்கு அதிகமான அதிகாரம் உடைய, ஆனால் பிரிந்து போகும் அதிகாரமற்ற நியானி அலகு. இதுக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு அவசியம் - இல்லையேல் வட கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியமாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

பல்லக்கில் போவதற்காக..தமிழர்களின் உரிமையை தாரை வார்த்த கூட்டத்தை சிங்களவன்.. அவ்வளவு இலகுவாக எனி கணக்கில் எடுக்கமாட்டான். தமிழர்களை சிங்களவன் கணக்கில் எடுத்த காலம்..அது பிரபாகரனோட முடிந்துவிட்டது. எனி இன்னொரு பிரபாகரன் வந்தால் உண்டு. :icon_idea::)

வந்த பிரபாகரனை வைது முடியேல இன்னாெரு பிரபாகரனா? வேண்டாம். எத்தனை பிரபாகரன் வந்தாலும் விட மாட்டாேம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், சம்பந்தன், சீவி மாவை இவர்களால் மட்டுமே இது முடியும்.

கிட்டத்தட்ட 3 மாததுக்கு முன்பே சொன்னேன். விடயங்கள் ஒரு நேர்கோட்டில் வருகிறன - இந்தியாவும் மேற்கும் மகிந்தரை கைகழுவி விட்டது, சீன நீர்மூழ்கிகள் வந்தது மகிந்தரின் கடை மிரட்டல் என்று.

இல்லவே இல்லை - மேற்குலகு என்று ஒன்றே இல்லை. இலங்கை பற்றி அவர்களுக்கு ஒரு பொது நிலைப்பாடில்லை. என்று சொன்னீர்கள்.

புலம் பெயர் அழுத்ததினால்தான் போர்க்குற்ற விசாரணை வந்தது என்பது உண்மையிலேயே ஒரு மாயை. இதை விட பல மடங்கு அழுத்தம் கொடுத்தும் எம்மால் 2009 அழிவை ஏன் தடுக்க முடியவில்லை. ஏனினில் அது அப்படித்தான் நடக்க வேண்டும் நெறி மேற்க்கு தீர்மானித்து விட்டது.

மகிந்த மேற்க்குக்கு இந்தியாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றதாலேயே அவருக்கு இவ்வளவும் நடந்தது.

மேற்க்கு மகிந்தவை வழிக்கு கொண்டுவர பாவித்த ஒரு ஆயுதம் போர்க்குற்ற விசாரணை. போரை முடிவுக்கு கொண்டுவர மகிந்த இந்தியா மேற்க்குக்கு கொடுத்த அதே உறுதி மொழியை இப்போ ரணிலும் மைத்திரியும் செய்தாக வேண்டும்.

தனிநாடு என்பது இப்போ இலங்கையை பொறுத்தவரை ஒரு தெரிவே இல்லை. சிங்களவர்களும், இந்த்ஹியர்களும், முஸ்லீம்களும், மேற்க்கும், தமிழர்களும் கூட இப்போ அதை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. பிரபா வோடு அந்த கோரிக்கையும் செத்து விட்டது. இது அங்கே இப்போ ஒரு வரலாறு. எல்லாளன் தனி அரசமைத்தான், சங்கிலியன் போத்துகீசரை எதிர்தான் என்பது போல பிரபா தனிநாடு கேட்டு முன்பு போராடினார் என்பதுதான் இப்போ அங்கே தமிழர் மனநிலை.

ஆனால் எம்மை நாமே ஆள வேண்டும், எமது நிலம் பறிபோக கூடாது, இனப்பரம்பல் மாறக்கூடாது, போலீஸ் அதிகாரம் வேண்டும், காணி அதிகாரம் வேண்டும் எனும் மக்களின் அபிலாசைகள் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் சொல்லுவதும் அதையே.

மைத்திரி ஒற்றையாட்சியை மாற்ற மாட்டேன் என்பது உண்மைதான். கேட்பதை எல்லாம் அவர் தங்க தட்டில் வைத்து தந்தால் அப்புறம் அவர் எல்லோ கூட்டமைப்பு இடத்தில் இருக்க வேண்டும்?

கூட்டமைப்பின் நோக்கு மூவகை பட வேண்டும்.

மிக கிட்டிய நோக்கு - வட ஆளுனர் மாற்றம், ராணுவ பிரசன்ன குறைப்பு, சிவில் நிர்வாகம் மீண்டும் சிவிலியன்களிடம், கெடுபிடிகளில் தளர்வு

இடக்கால நோக்கு - பொலீஸ் காணி அதிகாரம் சேர் மாகாண அரசு (13)

நீண்ட கால நோக்கு - வட-கிழக்கு இணைந்த மாகாண அரசுக்கு அதிகமான அதிகாரம் உடைய, ஆனால் பிரிந்து போகும் அதிகாரமற்ற நியானி அலகு. இதுக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு அவசியம் - இல்லையேல் வட கிழக்கு இணைப்பு ஒரு போதும் சாத்தியமாகாது.

அது என்ன வாக்கு என்று தெரிந்துகொள்ள முடியுமா ? 

  • கருத்துக்கள உறவுகள்

புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள், காத்திரமான அதிகாரப் பரவலாக்கம் கொண்ட தீர்வை வழங்குவதன் மூலம் இலங்கையை மேற்கு/இந்தியாவின் சுற்றுப் பாதையில் இருந்து விலகி சீனா சார்பு நிலை எடுக்காமல் பார்த்துக்கொள்வேன்.

இதுதான் அது. ஆதாரம் எல்லாம் கேளாதேயுங்கோ. நான் ஒன்றும் எட்வேட் ஸ்னோடன் ஓ அல்லது அசாஞ் சோ இல்லை.

உங்கள் கற்பனைகளுக்கும் புளுகுவதற்க்கும் யாழ்களம் கிடைத்தது எங்களின் துர்அதிஸ்ட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் மைத்திரியின் உரையை கேட்டேன்,

ரிச்சாத்தின் அ இ ம க, ஹக்கீம் இன் சிலமுக என்று தன்னொடு இணைந்த பெரிய கட்சிகளை அவை இணைந்த தேதிப்படி சொல்லி வருபவர், திரவிட ஜாதிக சங்விதானய (கூட்டமைப்பு) க்கும் நன்றி சொல்கிறார். கூட்டமைப்பு ஒரு கட்சியில்லை எனும் போது அதை சம்பந்தரின் கூட்டமைப்பு என்று சொல்லுவது முறையாகாது.

மனோவை மட்டுமில்லை இன்னும் 40 சிறிய கட்சிகளை சொல்ல நேரம் இல்லை என்கிறார்.

இதை மனோ பெரிது படுத்தியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

இது புலம்பெயர் மக்களின் சிங்களம் தெரியாமையை செய்தி ஊடகம் ஒன்று கீழ்தரமாக தன் பரப்புரைக்கு பயம்ப்டுத்துவதாகவே படுகிறது.

வாத்தியார் விளக்கம் ஓகேயா?

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி மண் படவில்லை அடுத்த முறை my3      திரவிட ஜாதிக சங்விதானய என சொல்லும்போது விசில் அடிக்க ரெடியாவம் .

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி கூட்டமைப்பை விட பரவாயில்லை என்று யோசிக்கும் தவறாசா வகையறாக்களுக்கு நாம் சொல்லுவதெல்லாம் பொய் புழுகு போல்தான் தெரியும்.

காமெடி என்னெண்டா புலிப்பினாமிகளும், டக்கியின் வவ்வாலுகளும் இப்ப ஒண்ணுக்க ஒண்ணாயீட்டாங்க :)

வடக்கு கிழக்கில்தான் இவ்விரு பகுதியையும் சீந்தவும் ஆளில்லை.

ஐநா போர்க்குற்ற விசாரணையை.. யாரப்பா முன்னெடுக்கிறது. சம்பந்தன்.. சுமந்திரன்.. போர்க்குற்றம்.. இனப்படுகொலையை உச்சரிக்கவே மாட்டன் என்று சபதம் எடுத்திட்டார்கள். அங்கினை அனந்தி.. சசிதரன்.. கஜேந்திரன் என்று பேசுறது எல்லாம்.. வெளிநாட்டுப் புலிப்பினாமிகள் சொல்லிக் கொடுத்தது என்று சொல்லுறேள்.-நெடுக்ஸ் .

இது என்ன கேள்வி .ஐ நா போர்க்குற்றவிசாரணையை ஐ நா தான் எடுக்குது .புலம்பெயர்ந்த சில அமைப்புகள் எதோ தாங்கள் தான் அதை எடுப்பது மாதிரி படம் காட்ட அதை நம்பி அதற்கு பின்னால் ஒரு கூட்டம் .இவர்களால் ஒரு சிறு அழுத்தத்தை உதவிகளை செய்ய முடியுமே அல்லாது வேறு எதையும் செய்யமுடியாது ,அதே போலத்தான் கூட்டமைப்பின் நிலைமையும் .

கூட்டமைப்பும் புலம் பெயர் அமைப்புகளும் விசாரணை தேவையில்லை என்றாலும் விசாரணை நடந்தே தீரும் .

ஆமாண்ணே. ஐநா போர்க்குற்ற விசாரணை சுயமா கிளம்பி புயலைக் கிளப்பிக்கிட்டு இருக்குது. இப்ப நீங்க வங்கக்கடலில் மீன்பிடிப்படகில்.. எப் எவ் மைக்கை வைச்சிருந்து தமிழீழம் மீட்டிங்கல்ல.. அப்படி.

இதில சுமந்திரன்... சம்பந்தன்.. நாங்க.. நீங்க என்ன செய்யக் கிடக்கு. பாப் கோனை வாங்கி சப்பிக்கிட்டு கிரிக்கெட் மட்ச் பார்த்தா விசாரணை சுமூகமா முடியும். 

உங்கட கருத்துக்கு ஒரு லைக்கு...!!! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

TNA யாழ்ப்பாண

முக்கிய அரசியல் வாதி ஒருவருடன் பேசும் போது அவர் சொன்னது

நான்: என்னண்ணே மக்களை ஒரு மாதிரி பெருவாரியா மைத்திரிக்கி வாக்கு போட வைச்சிட்டீங்க பிறகென்ன.....

அதுக்கு அவர்: அட போடா தம்பி

மக்கள் ஏற்க்கனவே பெருவாரியா மைத்திரிக்கி வாக்கு போட முடிவு பண்ணிட்டீனம்..... அதை நாங்க கடைசி நேரம் அறிக்கை விட்டு பயன்படுத்திக்கொண்டோம்

அம்புட்டுத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

யாரது சுரேஸ்தானே :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்க தமிழரசு கட்சியை சேர்ந்த ஒராள் தான்

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கா அந்த கட்சியிலேயும் யாரும் சேருவீனமே? நாங்கள் ராஜபக்சபின் எலும்பு நக்கிகள். இப்போ மேய்பான் அற்ற மந்தைகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.