Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் தான்டா என்ர அரசியலை அழித்தீா்கள். மகிந்த ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mahinda_angry_face.jpgஎன்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீங்கள் தான்டா என்ர அரசியலை அழித்தீா்கள் என கோத்தபாயவிடமும் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

 

தோ்தலில் தோல்வியடைந்த பின்னா் தனது சொந்த இடத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்ச அங்கு வந்து தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடிவிட்டு அடுத்தநாள் காலையில் பிள்ளைகளுடனும் தனது சகோதரா்களுடனும் கோபதாண்டவம் ஆடியதாகத் தெரியவருகின்றது.

 

தனது 45 வருட அரசியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும், சகோதரா்களாலும் அழிந்துவிட்டது என மகி்ந்த கத்தியுள்ளார்.

 

என்னை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறாகள் என கோத்தபாய தனது அண்ணணுக்கு தொலைபேசியில் எடுத்து கூறிய போதே மகிந்த இவ்வாறு கத்தியுள்ளார்.

 

எனக்கு வாய்த்த சகோதரங்களும் அப்படி, பிள்ளைகளும் அப்படி, நான் என்ன செய்வது என மகிந்த துக்கத்தில் பிதற்றியதாக மகி்ந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய வட்டாரங்களால் செய்தி கசிந்துள்ளது.

 

http://www.tamil.com/2015/01/14/89835

என்னாது செய்தி கசிந்ததா?

இப்பிடி ஒரு செய்தி போடுறதால அப்பிடி என்னய்யா ஒரு சந்தோசம்?

எங்களை பார்த்தா அவ்வளவு கேவலமாவா தெரியுது?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான்டா என்ர அரசியலை அழித்தீா்கள். மகிந்த ராஜபக்ச

 

 

இதெல்லாம் சுத்தப்பொய்

 

மகிந்த அழிந்தது

மகிந்தவால் தான்..

 

முள்ளிவாய்க்கால் முடிந்தவுடன் கூட

தமிழருக்கு ஒரு தீர்வை வைத்திருந்தால்

இலங்கையின் தந்தை மகிந்தவாகியிருக்கும்

சிறீலங்கா

சிங்கப்பூராகியிருக்கும்...........

விசுகு
உண்மையான கருத்து. மே 19 இன் பின்னர் தமிழர்களிற்கு சர்வதேசத்துடன் இணைந்து தமிழர்களது எதிர்பார்ப்புக்கமைய ஏதாவது தீர்வை வழங்கி இருந்தால் வெற்றிப் போதையில் இருந்த பேரினவாதம் எதிர்த்திருக்காது. சர்வதேச உதவிகளும் புலம்பெயர் தமிழர்களது முதலீடுகளும் இலங்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கும். இன்று மறுபடியும் பேரினவாதத்தை வளர்த்து முருங்கை மரத்தில் ஏற்றிய பெருமை மகிந்தாவையே சேரும். மே 19 இன் பின்னர் மகிந்த விட்ட பெரிய பிழைகளில் இதுவே முதன்மையானது.
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். தமிழர்க்கு ஒரு நியாயமான தீர்வை கொடுத்து, ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்க முடியும். ஆனால் மனதில் ஊறிய இனவாதம் அதை செய்யவிடவில்லை.

நோபல் பரிசும் உலகளாவிய மதிப்பும் பெறக்கூடிய வாய்ப்பை உதறிவிட்டு. போர் குற்றவாளி எனும் சந்தேகத்துடன் மெதமுலானவில் பதுங்க வேண்டி வந்திராது.

பல பேர்கள் இப்ப மெல்ல எங்கட பக்கம் சாயினம் போலகிடக்கு . :o

இத்திரியில் சிங்கப்பூர் பற்றிய கருத்தாடல் வந்ததால் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் கியூ இன் இலங்கை பற்றிய ஒரு பார்வை. இவர் இலங்கைக்கு 1956 இல் வந்த போது 10 வருடங்களில் சிங்கப்பூரை இலங்கை மாதிரி மாற்றுவேன் என்றவர் (வாசித்த ஞாபகம் ஆதாரம் கிடைக்கவில்லை). இபபோ நாம் எங்கே சிங்கப்பூர் எங்கே? 
 
லீ குவான் கியூ இன் இலங்கை பற்றிய ஒரு பார்வைக்கு
 
கூகிள் மொழிபெயர்ப்பு முயற்சித்தேன். எனக்கு சுத்தமாக கூகிள் தமிழ் புரியவில்லை.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பல பேர்கள் இப்ப மெல்ல எங்கட பக்கம் சாயினம் போலகிடக்கு . :o

 

 

உங்களுக்கு ஒரு திரி ஒழுங்காப்போறது பொறுக்காதே..... :(  :(

எங்க பார்த்தாலும் வாந்தி....

 
தயவு செய்து யாராவது இதை மொழிபெயர்ப்பீர்களா. இது லீ குவான் கியூஇன் புத்தகத்தின் ஒரு பகுதி. சர்வதேசத்திற்கு எமது பிரச்சனைகள் தெரியாது என்பவர்களிற்கு இது பயன்படும். 

"பல பேர்கள் இப்ப மெல்ல எங்கட பக்கம் சாயினம் போலகிடக்கு .  :o"

 

இப்படி எழுதலாமா. Unity in diversity என்றவர் மண்டேலா. அவர் படத்தை வைத்திருக்கும் நீங்கள் மற்றவர்களை நோகடிக்கலாமா. சரி உங்கள் கருத்துக்ளுடன் மற்றவர்கள் ஒத்துப்போனால் அதனை வரவேற்று அனுசரித்துப்  போகாமல் நக்கலடிக்கலாமா. எமது பெரிய பிரச்சனையே ஒற்றுமையின்மை. உங்கள் மண்டெலா சொன்னார் மறப்போம் மன்னிப்போம் எதிர்காலம் ங்கள் கையில் என்று. என்னடா இவன் இரண்டாவது தடவையாக அர்ஜுனை தாக்குகின்றான் என்கிறீர்களா. அர்ஜுன் என்னதான் வாதம் பண்ணினாலும் அவரது கருத்துக்களில் தமிழ் மக்களின் நல்ல எதிர்காலம் பற்றிய கனவை காண்கின்றேன். அரவணைத்து செல்வோம். வெற்றி தமிழர்க்கே.

 

 யாழ்கள உறவுகளிற்காக

 

 

Michael Novak (1983)

 

 

Unity in diversity is the highest possible attainment of a civilization, a testimony to the most noble possibilities of the human race. This attainment is made possible through passionate concern for choice, in an atmosphere of social trust.

 

 

மூலம்: http://en.wikipedia.org/wiki/Unity_in_diversity

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

பல பேர்கள் இப்ப மெல்ல எங்கட பக்கம் சாயினம் போலகிடக்கு . :o

உங்களுக்கு பக்கம் வேற இருக்குதா .............?
பெரிய இடத்து ஆளை இருப்பீர்கள் போல் .
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். தமிழர்க்கு ஒரு நியாயமான தீர்வை கொடுத்து, ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்க முடியும். ஆனால் மனதில் ஊறிய இனவாதம் அதை செய்யவிடவில்லை.

நோபல் பரிசும் உலகளாவிய மதிப்பும் பெறக்கூடிய வாய்ப்பை உதறிவிட்டு. போர் குற்றவாளி எனும் சந்தேகத்துடன் மெதமுலானவில் பதுங்க வேண்டி வந்திராது.

 

கோசான் சே  பல இடங்களிலும் பிடிவாதம் பிடித்தாலும் சில இடங்களில் உண்மைக்குத் தலை சாய்க்கின்றார் என்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்தக்கருத்தும் அதற்குப் பொருந்தும். மகிந்த தனது

தமிழர் அழிப்பு மற்றும்  பேரினவாதம் ஆகிய செயற்பாட்டினால் தோல்வி அடைந்தார். வெற்றியின் மமதையில் நிற்கும் போது தலைகால் புரியாமல் ஆடியவர்.இப்போது தலை கீழாகத் தொங்குகின்றார் பேனரில்.

 

arjun

Posted Today, 04:17 PM

பல பேர்கள் இப்ப மெல்ல எங்கட பக்கம் சாயினம் போலகிடக்கு . :o

அர்ஜுன் அண்ணா

உங்கள் பக்கம் பலபேய்கள் சாய்வது உண்மையாமே

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா கோத்தபாயாவுடன் தொலைபேசியில் கதைத்து எப்படி ஊடகங்களுக்கு வந்தது. ஒன்று மகிந்தா தான் கத்தியதை மற்றவர்களுக்கு சொல்லியிருக்கவேண்டும் அல்லது கோத்தபாய மகிந்தா தொலைபேசியில் கத்தினர் என்று மற்றவர்களுக்கு சொல்லியிருக்கவேண்டும் அல்லது மகிந்தா கத்தியதை அருகில் இருந்து யாராவது கேட்டிருக்கவேண்டும் அல்லது இப்படி நடந்திருக்கும் என்று கற்பனையில் யாராவது கதைத்திருக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.