Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செத்தான்டா சேகரு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செத்தான்டா சேகரு..!  smileys-confused-389931.gif

இன்று சேகருக்கு பிறந்தநாள்.. !

அவனை மகிழ்விக்க தீர்மானித்த மனைவி, நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு இரவு நடன நிகழ்சிக்கு அழைத்துச் சென்றாள்... :huh:

ஓட்டல் வாசலில் வரவேற்பவர்: "என்ன சேகர்..! எப்படி இருக்கிறீர்கள்...?"

மனைவி: "அவருக்கு எப்படி உங்களை தெரியும்...?"

சேகர்: "ம்.. அவரும் நானும் கோல்ஃப் விளையாடுவோம்..அதனால் பழக்கம்..."

மதுபானம் பரிமாறுபவர்:  "வழக்கமான மது வகைகள்தானே சேகர்...?"

மனைவி: "உண்மையை சொல்லுங்கள்.. இவருக்கு எப்படி உங்களை தெரியும்..?"

சேகர்:  "அவர் எங்கள் பெளவுலிங் விளையாட்டுக் குழுவில் ஒரு அங்கத்தவர்...!"

சேகர் இப்படி சமாளித்துக்கொண்டிருக்கும் போது அவனை நெருங்கிய நடன மாது,  "வழக்கமான குலுக்கல் டான்ஸா சேகர்..? வா..!" என அழைத்தாள்..

மிதமிஞ்சிய ஆத்திரத்தாலும், கோபத்தாலும் கொதித்த மனைவி, சேகரை தரதரவென வாசலுக்கு இழுத்து வந்து அவனை டாக்ஸியில் ஏற்றி அமர்ந்தாள்...

அடுத்து என்னவாயிற்று...? :o:huh::icon_idea:

....

....

....

....

....

....

....

....

....

....

அவர்களை ஏற்றிக்கொண்ட டாக்ஸி ஓட்டுனர்: "என்ன சேகர், இம்முறை ஒரு அட்டு ஃபிகரை கூட்டிட்டு வந்திருக்கே..? அதே ஓட்டலுக்கு போகட்டுமா..?" :unsure:

அந்த சேகருக்கு இன்று மரண ஊர்வலம்..! :(:mellow::icon_mrgreen:

-மின்னஞ்சலில் வந்ததை தமிழாக்கம் செய்து பதிந்துள்ளேன்.

  • Replies 101
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சேகரு மக்கு சேகரா இருக்கே
ஒரே நாளில் இத்தனை அதிர்ச்சிகளை மனைவிக்கு கொடுக்கலாமா? :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சேகருக்கும் , எனக்கும்  அர்தாஷ்டமச்சனி..., அவருக்கு பெண்ணில , எனக்கு பொருளில...!  :o  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... எனக்கு பொருளில...!  :o  :lol:

என்னதான் அந்த அதிசய "பொருள்"..? :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

------

அவர்களை ஏற்றிக்கொண்ட டாக்ஸி ஓட்டுனர்: "என்ன சேகர், இம்முறை ஒரு அட்டு ஃபிகரை கூட்டிட்டு வந்திருக்கே..? அதே ஓட்டலுக்கு போகட்டுமா..?" :unsure:

அந்த சேகருக்கு இன்று மரண ஊர்வலம்..! :(:mellow::icon_mrgreen:

இதற்குப் பிறகும், சேகர்.... சாகாமல் இருந்தால், சேகருக்கு.... ஆயுசு கெட்டி. :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேகர் ஒரு கஞ்சன்.

தனது மனைவியின் பிறந்த நாளன்று வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் போயிருந்தான்.

அதனால் மனைவி, "எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் தேவை. எனவே உடனடியாக காசோலை அனுப்புங்கள்..!" என்று போனில் அவனிடம் சொன்னாள்.

சேகர் தான் மகா கஞ்சனாச்சே..!

ஒரு காசோலை எழுதி, அதில் 'ஆயிரம் ரூபாய்' என்பதற்குப் பதில் 'ஆயிரம் முத்தங்கள்' என்று எழுதியனுப்பினான்.

இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து, "காசோலை கிடைத்ததா ?" என்ற கேட்டான்.

ம்…..கிடைத்தது.. . ஆனால், வங்கி காசாளர் தான் பாவம்.. அதை எனக்கு கொடுப்பதற்குள் மனுசன் ரொம்பவே திணறிப் போனார்..!" என்று சொன்னாள் மனைவி.

மயக்கமானான் சேகரு..!

-- புத்தகத்தில் படித்தது.

Edited by ராசவன்னியன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான கணவன், மனைவிக்கிடையே உரையாடல் இது..

mohankumar13112009_a.jpg

மனைவி : "நான் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்..? மறுமணம் செய்துகொள்வீர்களா..?"

கணவன் :  "ஓ.. ! இல்லவே இல்லை..!!  நான் எப்படி அதை நினைப்பேன்..?"

"ஏன் அப்படி சொல்கிறீர்கள்..? இன்பத்திலும் துன்பத்திலும் தோள்கொடுக்க உங்களுக்குகென துணையொன்று வேண்டும்.. ஆகையால் நீங்கள் மறுமணம் செய்துகொள்ளுங்கள்..!"

"ஆ.. ! என்ன அன்பான, இனிமையான மனைவி நீ..!! இறந்த பின்பும் என்னைப் பற்றி இவ்வளவு அக்கறையாக இருக்கிறாயே..?"

"ம்.. நான் இறந்தபின் இன்னொரு மறுமணம் செய்துகொள்வதாக சத்தியம் செய்யுங்கள்..!"

"சரி..சரி.. நீ இவ்வளவு தூரம் கேட்பதால், உனக்காக நான் மறுமணம் செய்துகொள்கிறேன்..!"

"அப்படி மறுமணம் புரிந்தால், இந்த வீட்டில்தான் அவளோடு வசிப்பீர்களா..?"

"ஆமாம்.. ஆனால் உன்னுடைய அறையை அவளுக்கு எப்பொழுதும் உபயோகிக்க கொடுக்கமாட்டேன்..!"

"என்னுடைய காரை அவளுக்கு ஓட்டக் கொடுப்பீர்களா..?"

"ச்சே..ச்சே..! அந்த காரை உன்னுடைய ஞாபகார்த்தமாக வைத்துக்கொள்வேன்.. அவளுக்கு புதுக் கார்தான் வாங்குவேன்..!"

"அவளுக்கு என்னுடைய நகைகளை கொடுப்பீர்கள்தானே..?"

"நோ..நோ..! அந்த நகைகளில் உன் நினைவுகள் புதைந்திருக்கும்.. வருபவள் அவளுக்கு பிடித்த நகைகளை வாங்குவாள்..!"

"அவள் என்னுடைய செருப்புகளையா அணிவாள்..?"

"இல்லவே இல்லை..! அவளுடைய கால் அளவு 5.. ! உன்னுடைய கால் அளவோ 7..!! "

....

....

அடுத்த நிமிடம் மயான அமைதி, நிசப்தம்...

திடீரென " ஐயோ..." ஓலம் !  :o:huh::(:lol:

-படித்ததை தமிழாக்கம் செய்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியர் சூரன் போன்று வரம் பெற்றவரோ. :rolleyes:  வெட்ட வெட்டத் தலை முளைக்கிறதே... :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியர் சூரன் போன்று வரம் பெற்றவரோ. :rolleyes:  வெட்ட வெட்டத் தலை முளைக்கிறதே... :o

இந்த வரிகளை உங்களிடம் நிச்சயம் எதிர்பார்த்தேன்... பிசகாமல் எழுதியும் உள்ளீர்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் கால் அளவு பார்த்துத்தான் சின்னவீடும் பிடிக்கவேணும் போல இருக்கு.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நிமிடம் மயான அமைதி, நிசப்தம்...

திடீரென " ஐயோ..." ஓலம் ! :o:huh::(:lol:

இப்ப அதே மனைவி  தனது காதலனிடம், அட அதற்குள் அவர் இறந்து ஒரு மாதமாகி விட்டது , அவருடைய  செருப்புகள் உங்களுக்கும்  அளவாய் இருக்கின்றன... இனி நீங்கள் அவருடைய பொருட்கள் எல்லாவற்றையும் அனுபவியுங்கள்...!!  :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவி  என்றால் இப்படி நினைத்திருப்பாள்.

வரட்டும்

வரட்டும்..

எனது இடத்துக்கு  வருவது தான்

நான்  உனக்கு கொடுக்கும் ஆகக்கூடிய தண்டனை.. :lol:  :D

இனிமேல் கால் அளவு பார்த்துத்தான் சின்னவீடும் பிடிக்கவேணும் போல இருக்கு.. :o:D

ஏதோ

இனித்தான்  ஆரம்பிக்கப்போறது போல கதை போகுது.. :icon_mrgreen:

அப்ப மச்சாள்மார் என்னவாம்.. :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நிமிடம் மயான அமைதி, நிசப்தம்...

திடீரென " ஐயோ..." ஓலம் ! :o:huh::(:lol:

இப்ப அதே மனைவி  தனது காதலனிடம், அட அதற்குள் அவர் இறந்து ஒரு மாதமாகி விட்டது , அவருடைய  செருப்புகள் உங்களுக்கும்  அளவாய் இருக்கின்றன... இனி நீங்கள் அவருடைய பொருட்கள் எல்லாவற்றையும் அனுபவியுங்கள்...!!  :lol::D

இதுக்கு பெயர்தான் 'குண்டக்க மண்டக்க நினைப்பு'. Good lateral thinking. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை படிக்கும் அன்பர்களுக்கு ஒரு ஆச்சரியமான உண்மையை கண்டிப்பாக சொல்லவேண்டும்..!. :)

உலகில் 75 சதவீதமான பெண்களின் பெயர்கள் A ல் முடிவதாகவும், 15 சதவீதமான பெண்களின் பெயர்கள் I ல் முடிவதாகவும் கண்டுபிடுத்துள்ளனராம்.

உதாரணத்திற்கு,

பத்மா - PadmA

மைதிலி - MaithilI

நீங்களும் உங்கள் மனைவி, துணைவி, இணவி மற்றும் உற்றாரின் பெயரை சோதித்திப் பாருங்கள், புரியும்! :icon_idea:

எனக்கு அந்த தேடலே தேவையற்றது

முழுப்பெயரே இருக்கே........ :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

75 % அல்ல 98 % அப்படித்தான். அதிகம் எல்லாப் பெண்களின் பெயரும்  "ஆ ஆ" , "ஈ  ஈ" என்றுதான் முடியுமமது அவர்களின் அனிச்சையான செயற் பாடுகளுடன் தொடர்வது....!

கடை வீதிக்குப் போனால் தெரியும். புடைவைக் கடைக்குள் போணால்  ஆ..ஆ..ஆ.. என நோக்குவார்கள்.

நகைக் கடைக்குள் நுழைந்தால் ,  ஈ ... ஈ... ஈ... என இளிப்பார்கள்.

வேண்டுமென்றால் அடுத்தமுறை சொப்பிங் போகும்போது  கவனித்துப் பார்க்கவும்.  :lol::)

ஐயாம் எஸ்கேப்...!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! எங்கள் உறவுகள் சிலர் மனிசியைக் கண்டாலே பயந்து நடுங்குவது பதிவிலும் தெரிகிறது, பின்னூட்டங்களிலும் தெரிகிறது. emoticon-anime-051.gif 

எனக்கு அந்தப் பயம் இல்லை. ஏனென்றால் என் பெயர் 'ஆ' என்றே முடிகிறது.barmy.gif

vil-effraye.gif   'ஆ' என்று பயத்தில், வலியால் அலறும் ( ஆச்சரியத்தால் அல்ல..!) நெடிலால், பெயரிலேயே பயத்தை வரித்துக்கொண்டவர் தாங்களன்றோ?  :lol::D

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

பயத்திலும் பலவகை உண்டா?? அறியத்தந்தமைக்கு நன்றிகள் ராசவன்னியரே !!  :blink:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயத்திலும் பலவகை உண்டா?? அறியத்தந்தமைக்கு நன்றிகள் ராசவன்னியரே !!  :blink:  :lol:

பயமா..???? :o:huh::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kungumam-dk-3221.jpg

சேகரு ஒரு பெண்ணை காதலித்தான்..

ஒருநாள் தன்னுடைய தாயிடம் மகிழ்ச்சியுடனும், சிறிது வெட்கத்துடனும் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவளையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் சொன்னான்.

தாயிடம், "அம்மா ஒரு வேடிக்கைகாக செய்வோம்.. நான் என் காதலியையும் சேர்த்து மூன்று பெண்களை நம் வீட்டிற்கு அழைத்து வருகிறேன்.. நீங்கள் அப்பெண்களில் எந்தப் பெண் என் காதலி? என சரியாக ஊகித்து அடையாளம் காட்ட வேண்டும்..!" என கேட்டுக்கொண்டான்.

தாயும் சம்மதிக்கவே, மறுநாள் மூன்று அழகான பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து வரவேற்பறையில் உட்காரவைத்துவிட்டு தாயை அழைத்தான். தாயும் அவர்களை வரவேற்று சில நேரம் மகிழ்ச்சியுடன் அளவளாவினாள்.

பின் தாயை தனியே அழைத்து," ம்.. இப்பொழுது சரியாக சொல்லுங்கள்.. நான் காதலிக்கும் பெண் யாரென் கண்டுபிடித்தீர்களா...?" என ஆவலுடன் கேட்டான்.

தாய் உடனே பதிலளித்தாள்.. " இரண்டு பெண்களுக்கும் நடுவில் உட்கார்ந்திருக்காளே, அவள்தான் நீ திருமணம் செய்யப்போகும் பெண்" என்றாள்..

சேகரு மிதமிஞ்சிய ஆச்சரியத்தால் கூவினான்.." எப்படியம்மா.., இவ்வளவு சரியாக ஊகித்து கண்டுபிடித்தீர்கள்..?"

தாய் நிதானமாக சொன்னாள்...

...

....

....

....

"எனக்கு அவளை பிடிக்கவில்லை"

                          |

                         V

சேகரு மூர்ச்சையானான்.

-படித்ததின் தமிழாக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக உள்ளது தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

75 % அல்ல 98 % அப்படித்தான். அதிகம் எல்லாப் பெண்களின் பெயரும்  "ஆ ஆ" , "ஈ  ஈ" என்றுதான் முடியுமமது அவர்களின் அனிச்சையான செயற் பாடுகளுடன் தொடர்வது....!

கடை வீதிக்குப் போனால் தெரியும். புடைவைக் கடைக்குள் போணால்  ஆ..ஆ..ஆ.. என நோக்குவார்கள்.

நகைக் கடைக்குள் நுழைந்தால் ,  ஈ ... ஈ... ஈ... என இளிப்பார்கள்.

வேண்டுமென்றால் அடுத்தமுறை சொப்பிங் போகும்போது  கவனித்துப் பார்க்கவும்.  :lol::)

ஐயாம் எஸ்கேப்...!!

உங்கள் அனுபவத்தை  வைத்து எல்லோரையும் ஒரே வண்டிலில் பூட்டுவது தவறு

:lol: :lol:

இந்த திரியை படிக்கும் அன்பர்களுக்கு ஒரு ஆச்சரியமான உண்மையை கண்டிப்பாக சொல்லவேண்டும்..!. :)

உலகில் 75 சதவீதமான பெண்களின் பெயர்கள் A ல் முடிவதாகவும், 15 சதவீதமான பெண்களின் பெயர்கள் I ல் முடிவதாகவும் கண்டுபிடுத்துள்ளனராம்.

உதாரணத்திற்கு,

பத்மா - PadmA

மைதிலி - MaithilI

நீங்களும் உங்கள் மனைவி, துணைவி, இணவி மற்றும் உற்றாரின் பெயரை சோதித்திப் பாருங்கள், புரியும்! :icon_idea:

உண்மைதான் அண்ணா :D

  • கருத்துக்கள உறவுகள்

சேகரின் தாய்க்கு இரண்டு பெண்களைப் பிடிக்காது போயிருந்தால் சேகரின் கதி என்ன....?? emoticon-misc-005.gif  :D  :lol:  

  • கருத்துக்கள உறவுகள்

சேகரின் தாய்க்கு இரண்டு பெண்களைப் பிடிக்காது போயிருந்தால் சேகரின் கதி என்ன....?? emoticon-misc-005.gif:D:lol:

வாழ்வுதான்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.