Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசுக்கு காலஅவகாசம்; பிரச்சினையைத் தீர்க்கத் தவறினால் போராட்டம்! - மாவை சேனாதிராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mavai-senathi-200-news.jpg

புதிய அரசுக்கு இப்போது காலஅவகாசத்தை வழங்கியுள்ளோம். அவர்களும் எமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாதுவிடின் தமிழரசுக் கட்சி மாநாட்டில் கூறியபடி ஜனநாயகப் போராட்டம் வெடிக்கும். அதற்கு நாம் எல்லோரும் தயாராகவே இருக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

   

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற 'தாயகம்' அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த தேசத்தில் குறிப்பாக தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் வாழுகின்ற இடங்களில் ஒரு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ராஜபக்‌ஷவின் சர்வாதிகாரம் தலைதூக்கியிருந்தது. தென்னிலங்கையில், நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்றும் குடும்ப ஆட்சிக்கும் அவர்களது ஊழல்களுக்கும் எதிராகவும் கிளர்தெழுந்தார்கள். தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் கூட இந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் தமது நிலம், மதம், பண்பாடு, ஜனநாயகம் என்பவற்றை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டனர்.

நாம் எமது உரிமைக்காக எத்தனை உயிர்களை கொடுத்தோம். எத்தனை போராட்டங்களை நடத்தினோம். இராணுவ மயமாக்கலை செய்த அந்த அரசாங்கம் எமது இன அடையாளங்களையே அழித்தது. தென்னிலங்கையில் இருந்து இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என குரல் வலுத்த போது நாங்களும் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டியிருந்தது. எமது நிலங்களை இராணுவத்தின் துணையுடன் பறித்து, அங்கு சிங்களவர்களையும் இராணுவ குடும்பங்களையும் குடியமர்த்தினார்கள். இதற்கு மஹிந்தவின் ஆட்சிதான் காரணமாக அமைந்தது.

அதுபோன்ற காரணங்களால் தான் நாம் ஆட்சிமாற்றத்தை விரும்பினோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் மக்களிடம் கருத்துக்களை கேட்ட போது இது ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் என கூறினார்கள். இது அப்பட்டமான பொய். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட ரீதியாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடமும் கட்சி உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டே தீர்மானமெடுத்தது. நாம் எதற்காக இதுவரை போராடினோமா அதை பெற வேண்டுமானால் எமது நிலம் எமது நிலமாக இருக்க வேண்டும். அதை அழித்தவனையே நாம் தோற்கடித்தோம்.

நாங்களும் தேசிய இனம். எங்களுக்கும் இறைமை இருக்கிறது. எங்களாலும் ஆட்சியாளரை தீர்மானிக்க முடியும் என்பதை ராஜபக்‌ஷவுக்கு காட்டியுள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்‌ஷவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கூறிய பின்னர் சிலர் பத்திரிகை மாநாடுகளை நடத்தி, இந்த தேர்தலை புறக்கணிக்கக் கோரினர். எம்மோடு இருந்தவர்கள்கூட விமர்சித்தார்கள். சிலர் வாக்காளிக்காது விட்டார்கள். ஆனால், அவர்களின் கருத்துக்கள் எடுபடவில்லை. இனியும் எடுபடாது.

அவர்களின் கருத்தை நம்பியிருந்தால் இன்று ராஜபக்‌ஷ ஆட்சியில் இருந்திருப்பார். நாங்கள் இந்த புதிய அரசையும் நம்பி நடக்கவில்லை. இந்த அரசுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. ஆனால் தற்போது எமது மக்களின் காணிப்பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, தீர்வுத் திட்டம் குறித்து பேசி வருகின்றோம். அவர்களும் சிலதை செய்கிறார்கள். செய்வதாக கூறுகிறார்கள். நாம் வவுனியாவில் நடந்த கட்சி மாநாட்டில் இந்த அரசு எமது பிரச்சினையை தீர்க்காது போனால் தைத்திங்களில் ஜனநாயக போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தோம். ஆனால் இன்று புதிய அரசு வந்துள்ளது. சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மீள்குடியேற்றுவதாக சொல்கிறார்கள். வடமாகாணசபையில் மாற்றம் வந்துள்ளது. காணிகளை மீள வழங்குவதாக கூறியுள்ளார்கள். இதனால் எமது பிரச்சினையை தீர்க்க காலம் தேவை. நாம் கால அவகாசம் வழங்கி எமது போராட்டத்தை பிற்போட்டுள்ளோம். எமக்கு தீர்வு கிடைக்காது போனால் எமது மக்களை தயார்படுத்தி கூறியபடி எமது ஜனநாயக போராட்டம் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=125272&category=TamilNews&language=tamil

இந்தாள் பிறகும் போராட்டமாம். நம்பி இந்தாளுக்கு பின்னால போகலாம். நமக்கு ஒரு பிரச்சனையும் வராது. ஏனென்னா இந்தாள் கடைசிவரை போராட்டத்தை ஆரம்பிக்காதே.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

கால அவகாசமும், போராட்டமும், கெடுவழங்குவதும் ரத்தமும், சதையும்போல் தமிழ் அரசியல்வாதிகளுடன் கூடப்பிறந்தது. 67வது வருட அனுபவம்.  :( 

அரசியலில இதெல்லாம் சகஜம் அப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

மனுசன் மாணவர் பேரவை அங்கதுவ காலத்திலிருந்து காலாஅவகாசம் கொடுத்துகொண்டிருக்கிறார்....இனியென்ன வயோதிபர் மடத்திலிருந்தும் கால அவகாசம் கொடுப்பார்.....

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக அடுத்த பொதுத்தேர்தல் முடியும் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும் 

கால அவகாசம் என்பது வலியவன் எளியவனுக்கு கொடுப்பது. 
எளியவன் வலியவனுக்கு எப்படி கால அவகாசம் கொடுப்பது. 
தூக்கு மேடை பஞ்சு மெத்தை துப்பாக்கி குண்டு விளையாடும் பந்து 
என்று சொன்ன கூட்டம் அல்லவா அது.  :D
தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழர்கள் ரணில் மைத்திரி அரசாங்கத்திற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பது காலத்தின் கட்டாயம். இந்தியாவும் மேற்கும் இதையே செய்யும் போது அவர்கள் தமிழர் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் திசையில் நகர்வார்கள்.
 
தேர்தல் ஒன்றைச் சந்திக்கப் போகும் இந்த அரசாங்கம் பலமான நிலையில் இல்லை. தமிழரின் வாக்குகளினாலேயே பதவிக்கு வந்தார்கள். சிங்கள இனவாத பூதத்தை சினக்க வைக்காமலும், சர்வதேசத்தை அனுசரித்த படியும், சிறுபான்மைகளின் நம்பிக்கைகளைத் தக்கவைத்தபடியும் பயணிக்க வேண்டிய சிக்கலான சூழ்நிலை அவர்களுக்கு உள்ளது. வரும் தேர்தல் சம்பந்தமாக அவர்களின் அணுகுமுறை இந்த திசையில் தான் இருக்கும். [ Short term objectives ] இந்த கால அவகாசத்தில் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.
 
 
 
  

 

தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழர்கள் ரணில் மைத்திரி அரசாங்கத்திற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பது காலத்தின் கட்டாயம். இந்தியாவும் மேற்கும் இதையே செய்யும் போது அவர்கள் தமிழர் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் திசையில் நகர்வார்கள்.
 
தேர்தல் ஒன்றைச் சந்திக்கப் போகும் இந்த அரசாங்கம் பலமான நிலையில் இல்லை. தமிழரின் வாக்குகளினாலேயே பதவிக்கு வந்தார்கள். சிங்கள இனவாத பூதத்தை சினக்க வைக்காமலும், சர்வதேசத்தை அனுசரித்த படியும், சிறுபான்மைகளின் நம்பிக்கைகளைத் தக்கவைத்தபடியும் பயணிக்க வேண்டிய சிக்கலான சூழ்நிலை அவர்களுக்கு உள்ளது. வரும் தேர்தல் சம்பந்தமாக அவர்களின் அணுகுமுறை இந்த திசையில் தான் இருக்கும். [ Short term objectives ] இந்த கால அவகாசத்தில் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

 

 

நிதர்சனமான கருத்து நன்றி.
 
எமது தற்போதைய நிலையில் இலங்கை அரசுடனும் சர்வதேசத்துடனும் சேர்ந்து பயணிப்பதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.