Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

UK ல் சொந்த கடை / பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த என்ன தகுதி வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் இலங்கையில் இருக்கும் போது, என் உறவினன் ஒருவன் UK ல் பெட்ரோல் செட் மேனேஜர் ஆக இருக்கிறான் என கேக்கும்போது அவனை உடனே என் மனம் இலங்கையில் உள்ள ஒரு வங்கி மேனேஜர் உடன் ஒப்பிட்டு பார்த்து அவன் மீது ஒரு வகை பொறுமை கொள்கிறேன். நான் அப்போது ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு இருந்தேன். அவனுக்கு இரண்டு வயது தான் கூட. அவன் இலங்கையில் இருக்கும் போது படிப்பில் ஒரு மட்டமானவன் தான். எனக்கு வியப்பு. எப்படி இவனால் ஒரு மேனேஜர் ஆக முடிந்தது. இவன் தான் காதலித்த ஒரு பெண்ணை லவ் பண்ணி கலியாணம் கட்டியும் விட்டான். அவள் அவனை இலங்கையில் திரும்பியும் பார்க்கவில்லை. அவள் அவனை விட படிக்க கூடியவள். அவள் படித்து பல்கலைக்கழகம் போக அவன் ஏஜென்ட் மூலம் UK போட்டான். அங்க கிரேடுட் காட் போட்டு ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் வாங்கி அதுக்கு தானே மேனேஜர் பட்டம் சூட்டி நடாத்தி வந்தான். அவனுக்கு அந்த UK பெட்ரோல் மேனேஜர் பதவி, விசிறிய UK பவுண்டஸ் தான் அவளை காதலிக்க வைத்தது. இன்னொரு விடயம் என்னவென்றால் அவளுக்கு கம்பஸ் படிக்கும் போது இன்னொரு காதல் அவளுடன் படிக்கும் ஒருவனுடன் இருந்தது. அதுக்கு டாடா சொல்லிபோட்டு UK பறந்து போட்டாள். நானும் ஸ்டுடென்ட் விசா எடுத்து கடைசியாக UK வந்து சேந்தேன். வந்த பிறகு தான் விளங்கியது UK’ல் பெட்ரோல் ஸ்டேஷன் மேனேஜரை இலங்கை சங்க கடை மேனேஜர்க்கு கூட பக்கத்துல வைக்க முடியாது. சங்கக்கடைல ஸ்டாக் எடுக்க, பில் போட தெரிய வீணும். UK’ல் பெட்ரோல் கம்பெனி பெட்ரோல் அனுப்பும். கடை சாமான் முடிய பக்கத்தில உள்ள காஷ் அண்ட் கரி (Cash and carry) ல வேண்டி வந்து விக்கவேண்டும். மொத்ததில இலங்கையில் உள்ள ஒரு தெரு கடைக்காரனுக்கு தான் UK பெட்ரோல் கடைக்காரன் சமன். அன்பான பெண்களே! உங்களுக்கு வெளிநாடு போக வேணும், UK பவுண்டஸ் வேணும் என்று உண்மையை சொல்லிபோட்டு போங்கோ. தகப்பன் மார்களே! தாய் மார்களே! தனயன் தம்பி மார்களே! UK பெட்ரோல் கடை மேனேஜரை இலங்கை படிச்சவனுக்கு ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். இலங்கையில் படிக்காதன் தான் UK போய் கள்ள கிரெடிட் காட் போட்டு மேனேஜர் ஆக இருக்கிறான்.

Edited by M.P

  • Replies 175
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்ன பிரச்சினை??

 

பாவம்

ரொம்ப ஏமாந்து போனீர்களோ....??

 

படிப்பு

பணம்

வேலை

சொந்த முயற்சி....

 

எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக புரிந்து கொள்ளுங்கள்

ஒவ்வொன்றும் பெறுமதியானவை

ஆனால் ஒன்றோடொன்று கலந்தால்.....

கவனமாக இருங்கள்

 

பதிவுக்கு நன்றிகள்..

தொடர்ந்து எழுதுங்கள்

 

உங்கள் வேதனையை புரிந்துகொள்ளமுடியுது. அனேகமாக நீங்கள் 90 க்கு பிற்பட்ட காலங்களில்தான் உங்கள் பதின்ம பருவத்தை கடந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். உள்ளூர் பட்டபடிப்புக்கள் டாலரிடம்/பவுண்சிடம் போட்டி போடமுடியாமல் இழந்தவற்றை இப்பவும் மனதின் எங்கோ சுமந்தபடி உலவும் பலரில் நானும் ஒருவந்தான்.

யத்த கால  தாயக வாழ்வியலில், புலம் பெயர்ந்த சமூகமாற்றிய பொருளாதார பங்களிப்பு முதன்மையானது. நீங்கள் குறிப்பிடும் மனேஜர்மார்கள் தன் துணையின் குடும்பத்திற்கு செய்தவற்றை உள்ளூர் வருமானத்தில் உங்களால் செய்திருக்கமுடியுமா? யாருமே தம் முடிவுகளை நியாயபடுத்தவே அல்லது ஒரு போலி சமூக தராதரத்தை பேணவே முயல்வார்கள்.அந்த் வகையில் பெண் பெற்றோர்கள் உள்ளூர் பட்டதாரிகளையும், வெளிநாட்டு மாப்பிள்ளைகளையும் எதோ ஒரு வகையில் சமப்ப்டுத்திவிடுவார்கள்.

M.P. என்பவருக்கு பொறாமை கூடிவிட்டது. எவராலோ நன்றாகத்தான் பாதிக்கப்பட்டு.. அவற்றை இங்கே கொட்டவென்று அங்கத்தவராகி, 2வது கருத்திலேயே கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கிறார் குழவியாக! இன்னம் இருந்தால் அதையும் கொட்டி விடணை.. கொஞ்சத்தை மனசுக்கை வைச்சிருந்து கஸ்டப்படாமை!!  :o  :icon_idea:

வெளி நாட்டு மாப்பிள்ளைகள், உள்ளூரில் படித்தவனை பணம் இல்லையென்ற காரணதிற்காக ஒரு தோல்வியடைந்தவனாக பார்ப்பது பிழையானதுதான். உங்கள் பிரச்சனை அந்த வகையை சார்ந்ததா?

நீங்கள் உங்கள் குடும்பதிலுள்ள ஒருவருக்கு, சங்ககடை மனேஜருக்கா UK பெற்றோல் மனேஜருக்கா கட்டிக்குடுக்க முடிவெடுப்பீர்கள்? மனதை தொட்டு சொல்லுங்கோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படிப்பது பணம் ஈட்ட என்பதை மறந்து விடாதீர்கள். வேலை என்பது கூட நன்றாக படித்தால் நல்ல வேலை கிடைக்கும். இம் மூன்றும் ஒன்றாக பிணைந்தவை. படிப்பு என்பது பணம் இல்லாமல் கிடைக்கும். ஆனால் நன்றாக உழைப்பதுக்கு. சொந்த முயற்சி சற்று வித்தியாசமானது. நான் உட்பட அனேகமான ஆண்கள் படிப்பது பெண்களுக்கு கலர் காட்ட தான். ஆனால் அதை ஒரு ருமு கிரெடிட் கார்டு காரன் பரிசுகொண்டு போனால்இ படிப்புக்கு எங்கே மரியாதையை? கிரெடிட் கார்டு காரன் என்ன பிள்ளைக்கு ருமு ல் கார்டு அடிக்கவா பழககிறான்???? அவனுக்கு விழங்கியது அவளுக்கு விளங்கலியே? எல்லாம் UK பவுண்ட்ஸ்ன் மாயை?

எங்கட ஊரில் சுப்பர் கடை என்று ஒன்று இருந்தது. அவர் கார், மாடி வீடு என ஒகோ என வாழ்ந்தவர். ஊரிலுள்ள வாத்திமாருக்கு இருந்த மரியாதை அவருக்கு இருக்கவில்லை என்று தாத்தா சொன்னவர். சுப்பருக்கு ஊரில் அந்த நாளில் யாருமே பெண் கொடுக்கவில்லை. கஸ்டப்பட்டு வெளியூரில்தான் எடுத்தார். இது நடந்து ஒரு 50 - 60 வருசம் இருக்கும்.

சுப்பர் ஒரு 60 வருடம் கழித்து பிறந்திருந்தால், அவற்ற கதை வேறு. என்ன செய்வது சுப்பருக்கு அளந்தது அவ்வளவுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

M.P. என்பவருக்கு பொறாமை கூடிவிட்டது. எவராலோ நன்றாகத்தான் பாதிக்கப்பட்டு.. அவற்றை இங்கே கொட்டவென்று அங்கத்தவராகி, 2வது கருத்திலேயே கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கிறார் குழவியாக! இன்னம் இருந்தால் அதையும் கொட்டி விடணை.. கொஞ்சத்தை மனசுக்கை வைச்சிருந்து கஸ்டப்படாமை!!  :o  :icon_idea:

 

ஸ்டுடென்ட் விசாவில் UK வந்து, காசு கட்டி படித்து, முழு நேரமும் பெட்ரோல் செட்ல வேலை செய்து ஒன்றும் மிச்சமில்லை. இப்பதான் ஆஸ்திரேலியா வந்து நிம்மதியாய் ஒரு நல்ல வேலை கிடைச்சு இருக்கு படிச்சதுக்கு. சற்று நேரமும் கிடைக்குது யாழில் எழுத. இப்பதான் தமிழ் எழுத பழகிறேன். என் எடுத்து பிழைகளை மன்னிக்கவும். இங்க எங்கட ஆட்கள் UK மாதிரி ஒன்றும் களவு பண்ணி கடை போட்டு இல்லை. படிச்சவன் நல்லா இருக்கிறான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாட்டு மாப்பிள்ளைகள், உள்ளூரில் படித்தவனை பணம் இல்லையென்ற காரணதிற்காக ஒரு தோல்வியடைந்தவனாக பார்ப்பது பிழையானதுதான். உங்கள் பிரச்சனை அந்த வகையை சார்ந்ததா?

நீங்கள் உங்கள் குடும்பதிலுள்ள ஒருவருக்கு, சங்ககடை மனேஜருக்கா UK பெற்றோல் மனேஜருக்கா கட்டிக்குடுக்க முடிவெடுப்பீர்கள்? மனதை தொட்டு சொல்லுங்கோ!

 

மானம் கெட்ட UK கிரெடிட் கார்டு காரன் பெண்ணையும் பார்த்து, மச்சினிச்சிக்கும் சீதனம் கொடுத்து, மச்சானையும் UK கூபபிட்டு, பிள்ளை பெத்துக்கு மாமியையும் மாமாவையும் கூப்பிடால், எங்கட சனம் / எங்கடை பெண்கள் கூட அவனைதான் விரும்பும்.

மட்டை மன்னர்மார் தங்கள் பிள்ளைகளை  கட்டாயம் படிக்க வைப்பினம். இன்னுமொரு மட்டை இளவரசனுக்கு தங்களின் மகளை கட்டிகொடுக்கமாட்டினம். வடிவா பிளான் போட்டு மட்டை மன்னன் மகளை '' தோற்றவன்'' படித்த மகன் கட்டினால், எல்லா இடைவெளிகளும் நிரம்பிவிடும். யாவரும் சந்தோசமக இருக்கலாம்.

மானம் கெட்ட UK கிரெடிட் கார்டு காரன் பெண்ணையும் பார்த்து, மச்சினிச்சிக்கும் சீதனம் கொடுத்து, மச்சானையும் UK கூபபிட்டு, பிள்ளை பெத்துக்கு மாமியையும் மாமாவையும் கூப்பிடால், எங்கட சனம் / எங்கடை பெண்கள் கூட அவனைதான் விரும்பும்.

 

யதார்தம் புரிந்தால் சரி. சும்மா உணர்சிவசப்பட்க்கூடாது. உடம்புக்கு நல்லதல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யதார்தம் புரிந்தால் சரி. சும்மா உணர்சிவசப்பட்க்கூடாது. உடம்புக்கு நல்லதல்ல.

 

UK போகாமல் இருந்திருந்தால் பெட்ரோல் செட் காரன் ஏதோ பெரிய ஆழ்தான் என் நினைத்து வாழ்ந்து இருப்பேன். இது UK போய், எங்கட பொடியலிண்ட மானக்கேட்ட பிழைப்பையும் அதை நம்பி ஏமாந்து போன எங்கள் சீமட்டியளையும் பாத்து மனம் பொறுக்குது இல்லை

வணக்கம்,

 

புதிய உறவாக யாழில் இனைந்தமைக்கு முதலில் எம் நன்றி.

 

கருத்துகள் / பதிவுகள் எழுதும் முன் யாழ் கள விதிகளை ஒரு முறை பார்க்கவும். கருத்துக்கள விதிகளின் படி அவன் / இவன் / அவள் என்று ஒருமையில் எழுதுவதை முற்றாகத் தவிர்க்கவும். அத்துடன் ஒருவரின் படிப்பை தொழிலை வைத்து மட்டம்தட்டுவதும் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன் அரிச்சுவடியில் அறிமுக பதிவினைத் தவிர்த்து இத்தகைய பதிவுகளை இடுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

 

களத்தில் தொடர்ந்து இணைந்து இருக்க நாகரீகமானதும் ஆரோக்கியமானதுமான உரையாடல்கள் அவசியம்.

 

நன்றி,

 

நிர்வாகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதுவது கொத்து குண்டுகள் போடுவது (Cluster-bombs)போன்று உள்ளது -அல்லது யாருக்கோ உள்குத்தா ?

குறுக்கு வழியில் காசு பார்ப்பது ,எத்திப் பிழைப்பது,ஏமாற்றுவது எல்லாம் அறனுக்கு அப்பாற் பட்டது தான் அதற்காக அனைத்து

எரிபொருள் நிலைய முகவர்கள் எல்லோரையும் ஒரே தும்புத்தடி வைத்து கூட்டமுடியாது . நான் இந்தத் துறையை சேர்ந்தவன் அல்லன் எனினும் இந்த கொத்து குண்டு விளையாட்டை ஏனோ என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

MP அண்ணே... உங்களை வரவேற்கிறோம்.

 

உங்களின் மிச்சக் கருத்துக்களை களத்தின் உள்ளே வைத்தால் நன்றே அமையும். நிர்வாகம் அதுக்கு உதவலாமே..?!

 

மேலும்..

 

ஈழத்தில் இவ்வளவு அடக்குமுறைகளையும் தாங்கி.. கஸ்டப்பட்டு படிச்ச ஒருவன்.... வெளிநாட்டில் இருந்து பவிசு காட்டும் ஒருவர் மீது கொண்டுள்ள பார்வை.. இப்படித்தான் அநேகமாக இருக்கும். இதில்..பொறாமை என்று சொல்வதிலும்.. உங்களுக்கு கிடைக்க வேண்டியது.. அவனுக்கு கிடைக்க... உங்களது....தூர இருப்பதின் தோற்றமாகவே இதை நோக்க வேண்டும்.

 

நீங்கள் பெற்றோல் செட்டோட நிற்கிறேள்.. இன்னும் உள்ள இறங்கி விசாரிச்சிங்கன்னா தெரியும்.. இங்கிலாந்தில் உள்ள எம்மவர்கள் பலரின்.. மொத்த குடும்ப வருமானத்தில்..60% ம் பிரித்தானிய அரசால்  உதவித் தொகைகள் வடிவில்.. உழைப்பவனிடம் வறுகிக் கொடுக்கப்படுவதை. அதற்காக உழைப்பவன்.. பொறாமைப்படுவதில்லை. கோபத்தை.. ஆற்றாமையை வெளிப்படுத்துவதுண்டு. அதற்காக உழைக்காமல்.. ஓசியில் வாழ்பவர்கள்.. தங்களை திருத்திக் கொள்வார்கள் என்றில்லை. அவர்களுக்கு அது சுகம். :lol:

 

எங்கட சனம்...ஒட்டுமொத்தமா.... உழைச்சு முன்னேறிற சனம் என்றால்.. இப்ப தமிழீழம் அமைஞ்சு அது சிங்கப்பூரை விட உயர்ந்திருக்கும்.

 

எனிவே ஊருடன் கூடி வாழப் பழகிக்குங்க. வெளவாலுக்கு வாழ்க்கைப்பட்டால்.. கவுண்டு தான் கிடந்தாகனும்.  :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வேதனையை புரிந்துகொள்ளமுடியுது. அனேகமாக நீங்கள் 90 க்கு பிற்பட்ட காலங்களில்தான் உங்கள் பதின்ம பருவத்தை கடந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். உள்ளூர் பட்டபடிப்புக்கள் டாலரிடம்/பவுண்சிடம் போட்டி போடமுடியாமல் இழந்தவற்றை இப்பவும் மனதின் எங்கோ சுமந்தபடி உலவும் பலரில் நானும் ஒருவந்தான்.

யத்த கால  தாயக வாழ்வியலில், புலம் பெயர்ந்த சமூகமாற்றிய பொருளாதார பங்களிப்பு முதன்மையானது. நீங்கள் குறிப்பிடும் மனேஜர்மார்கள் தன் துணையின் குடும்பத்திற்கு செய்தவற்றை உள்ளூர் வருமானத்தில் உங்களால் செய்திருக்கமுடியுமா? யாருமே தம் முடிவுகளை நியாயபடுத்தவே அல்லது ஒரு போலி சமூக தராதரத்தை பேணவே முயல்வார்கள்.அந்த் வகையில் பெண் பெற்றோர்கள் உள்ளூர் பட்டதாரிகளையும், வெளிநாட்டு மாப்பிள்ளைகளையும் எதோ ஒரு வகையில் சமப்ப்டுத்திவிடுவார்கள்.

 

அதுதானே அண்ணே பார்க்கிறமில்ல.. அப்பாக்கு பிள்ளை என்ன படிக்குதுன்னே தெரியாத.. புலம்பெயர் வாழ்கையை. இதில.. துணைவிக்கு.. எல்லாம் போதுமா செய்யப்படுகுது என்று நீங்க நினைச்சுக்கிறீங்க... அல்லது காண்பிக்க விரும்புறீங்க. கோவில் கடா மாதிரி.. திருவிழாவுக்கு சோடிப்பது போல.. சாறியும்.. நகையும்.. நாலு பேர்த்டே பார்ட்டியும் அல்ல அண்ணே வாழ்க்கை. புலம்பெயர் மண்ணில்.. இதை விட்டா நீங்க அப்படி என்ன பெரிய வாழ்க்கையை வாழ்த்துக்கிட்டு இருக்கீங்கண்ணு சொல்லுவியளா..?! :D:icon_idea:

 

இங்க துணைவன்.. துணைவிக்குள் உள்ள அந்நியோன்னியத்தை விட.. ஊரில குடிசையில்.. அது அதிகம் உள்ளது. :icon_idea::)

 

வெள்ளைக்காரன் சும்மா கொடுத்தாலும் எங்கடையளூக்கு பொறுக்காது.. ஏனெண்டால் தங்களுக்குப் பக்கத்திலை வந்தீடுவினம் எண்ட பொறாமை.. தாங்கள் ஏன் வந்தவை.. என்னத்துக்கு இதுக்கை சக்கைப்பணியத் தேய்ச்சுக் கொண்டு இருக்கினமெண்டதை சிந்திக்கிறேலை...  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

60 குட்டியை போட்டு சைல்ட் பெனிபெட் எடுத்தாலும்.... எம்மவர்கள் மேற்கு நாட்டு வறுமைக் கோட்டில் தான் நிற்கிறார்கள். இங்கு சிலர்.. மேற்கு நாட்டில் தாங்கள் வசதியாக இருப்பதாக ஊருக்கு காட்டுகிறார்களே தவிர... உண்மையில் அவர்கள் வறுமைக் கோட்டில் இருப்பதால் தான் அரசு உதவித் தொகையை கேட்ட வேண்டிய நிர்ப்பந்தம். அல்லது கள்ள வழியில்.. அதனை பெற்றுக் கொள்கிறார்கள். வெள்ளைக்காரன்.. சும்மா இல்ல.. அவனின் உழைப்பை தான் வரியாக்கி.. உதவித் தொகையாக யாருக்கோ கொடுக்கிறான். அதனால் தான் மேற்கு நாடுகளில்.. வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருகிறது.

 

எம்மவர்கள்.. ஊரிலும் வெறுப்பை சம்பாதித்தப்படிதான்.. வெளிநாட்டிலும்.. அதே. காரணம்.. எம்மவர்களின் சோம்பேறித்தனமும்.. உழைக்காமல்.. படிக்காமல்.. கஸ்டப்படாமல்.. பவிசு காணனும் என்ற கள்ளப் புத்தி தான். அதற்கு தாயக சோகத்தில்.. அகதி அந்தஸ்து உதவி நிற்கிறது. இதற்கு வக்காளத்து வேறு. :lol::)

Edited by nedukkalapoovan

அரசு தொகையில் இருப்பவர்கள் புதிதாக வந்தவர்களும்... நோயாளிகளும்.. பிரசா உரிமை எடுத்துக் கொண்டு யூகேக்குள் நுழைபவர்களும்... இதுதான் தற்போதைய நிலைமை.

சிற்றிசன் எடுக்கும்போது அரச உதவிகளில் வாழ முடியாது.. எடுத்துவிட்டும் சுலபமாக அரச உதவிகளுக்கு செல்ல முடியாது. ஆனால் யூகேல பிரச்சினை இல்லையாம்.. சும்மா இங்கிலீசில படிப்பெண்டு சொல்லிக்கொண்டு சனம் அங்கைதான் ஓடுது!  :o

  • கருத்துக்கள உறவுகள்

யு கே யின் வறிய மக்களுக்கான இலகு உதவித் திட்டங்களை எம்மவர்கள் தவறான நோக்கங்களோடு பயன்படுத்துகிறார்கள். யு கேயில் உள்ளவர்களை காட்டிலும்.. பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் எம்மவர்கள் இந்த விடயத்தில் பலே கில்லாடிகள். அதிலும் சுவிஸ்காரர்... இரட்டை உதவித் தொகைகளை எடுக்கிறார்கள்.. இரண்டு அரசுகளையும் ஏய்த்து. :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் M .P

 

எரிபொருள் வங்கி முகாமையாளர் நல்ல தொழில் தானே
ஐரோப்பாவில் இருக்கும் வேலையில்லாப் பிரச்சனைக்குள்
கிடைக்கும் வேலையைத் தக்க வைப்பதே பெரும் பிரச்சனை.
நீங்கள் படிப்பு அதற்கான வேலை என்றால் அவர்கள் எங்கே செல்வது

  • கருத்துக்கள உறவுகள்

MP தம்பி,

முறையான பெற்றோல் செட் மனேஜரிட்ட மாட்டி வதை பட்டிருக்கிறார்.

ஒன்டு, இரண்டு அப்படி இப்படிதான். அதுக்காக எல்லாரும் அப்படி என்றாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

MP தம்பி,

முறையான பெற்றோல் செட் மனேஜரிட்ட மாட்டி வதை பட்டிருக்கிறார்.

ஒன்டு, இரண்டு அப்படி இப்படிதான். அதுக்காக எல்லாரும் அப்படி என்றாகாது.

 

அதற்கும் மேல......

முறையான பெற்றோல் செட் மனேஜரிட்ட பறி கொடுத்திருக்கிறார். :( 

MP யின் ஆளைத்தான் அவர் பெற்றோல் ஸ்டேசனை காட்டி மயக்கிவிட்டார் போலிருக்கு . :icon_mrgreen: அல்லது இவ்வளவு கோவம் வராது .

  • கருத்துக்கள உறவுகள்
நான் வேலை செய்த 3 பெட்ரோல் செட்டும் நல்ல மேனேஜர்களே.
ஒருவர் மொரட்டுவ பல்கழைகளக இன்சினீயர், இன்னோருவ யூ.கேயில் ‍‍‍‍PHD   செய்த சிவில் இன்சினீர், (சில்லறை கடை செய்தார்) 3வது BP-Marks & Spencers. மூவரும் தமிழர்கள்
 
எல்லேரும் தாங்கள் சுய முயற்சியால் முன்னேறி வந்தவர்கள். ஆனல் நான் வேலை செய்த  ACCA accounting firm  சொந்தக்காரர், 40 வருடம் யூ.கே யில் வசிப்பவர் மிகவும் உலோபி, கடைசிவரை தன்னுடைய வேலைகளுக்கு சுயநலமாக என்னை பயன்படுத்திக்கொண்டார்.
ஐந்து விரல்களும் ஒன்றல்ல.
 
எனவே இப்படி மற்றவரை பார்த்து பொச்செரிச்சல் படாமல், நாங்கள் முயற்சி செய்து முன்னேற வழியப்பாக்க வேண்டும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.