Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபாயம்: எங்கள் வருங்கால சந்ததி தன் அடையாளத்தை காப்பற்றுமா ???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதை பற்றி எழுத வேணும் என பல நாள் ஏக்கம்.

ஒரு கறுப்பினத்தவருடன் கதைக்கும் பொது அவர் சொன்ன வார்த்தைகள் தான் என்னை இதை எழுத தூண்டியது. அவர் UKல் பிறந்தவர். அவரின் அடி அவருக்கே தெரியாது. அவர் தான் British Citizen என சொல்வதில் பெருமை கொள்கிறார். ஆனால் அவரை ஒரு பொது இடத்தில் மற்ற வெள்ளைகள் கீழ்தரமாக தான் பார்க்கினம்.

இங்கு லேபர் கவேர்மென்ட் இருந்த பொது, நிதி அமைசர் ஒரு சீன பெண். அவர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவராயினும், பார்த்தவுடம் அவரை ஒரு சீனத்தவர் என்றுதான் எல்லோரும் சொல்லுவர், வெள்ளைகள் உட்பட. அவரோ தான் ஆஸ்திரேலியன் என பெருமையுடன் சொல்லி கொழ்வார். ஆனால் அதை இங்குள்ள வெள்ளைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் முஸ்லிம்களின் நிலை கூட.

இந்த நிலை தான் வெளிநாடுகளில் உள்ள எங்கள் பிள்ளகளிக்கு வர போகுது என்பதை எந்தனை பேர் சிந்திக்கிறம்? இதற்கான வழிதான் என்ன?

Edited by M.P

தமிழருக்கு பிரச்சினை இல்லை... சேட்டைக் கழட்டிப்போட்டு நாங்கதான் அவுஸ்ரேலியாவின் ஆதிக்குடிகள் எண்டு சொல்லுறாதுதானே..?!  :o  :lol:

யாழ் அறிச்சசுவடியானது புதிதாக களத்தில் இணையும் உறுப்பினர்கள் தங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி, இங்கு நீங்கள் உங்களை பற்றிய சிறிய அறிமுகம், தங்களுக்கு யாழ் எப்படி அறிமுகம் இப்படியான தகவல்களை பதியலாம்,

பிற செய்திகள், கருத்தாடல்கள் இணைப்பதர்க்கென்று பிரத்தியோக பகுதிகள் உள்ளன, அங்கு உங்களால் செய்திகளை இணைக்க முடியவில்லையெனில் அது குறித்து நிர்வாக உறுப்பினர்களுக்கு தகவல் தந்து உதவிகளை பெறலாம்...  மேலே நீங்கள் பதிந்துள்ள தகவல்களை வாழும் புலம் எனும் பகுதியில் இணைக்கலாம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. என்னால் வேறு எந்த பகுதியிலும் ஒரு புதிய திரியை தொடங்கமுடியாத படியால்தான், இங்கு தொடங்குகிறேன். பிறகு யாழ் அமைப்பாளர்கள் உரிய பகுதிக்கு மாற்றி விடுவார்கள்.

நான் தெரியப்படுத்துகிறேன் அண்ணா, விரைவில் உங்களுக்கு அதற்க்கான அனுமதி வழங்குவார்கள்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம ஊருக்கு போக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எப்பொழுது புலம்பெயர் நாட்டில் எம் வேர்களையும் விளுதுகளையும் பரப்பிநோமோ அப்பவே உப்பிடியானவற்ரறுக்கும் தாயாராக வேண்டியதுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேரை அறுபதுக்கு சமன் இங்க வாறது என ஒரு டாக்டர் சொன்னார். அவர் முதல் பிள்ளைக்கு 12 வயது இருக்கும் போது ஆஸ்திரேலியா வந்தார் நாட்டுபிரச்சன்னையாலே. இப்ப பிள்ளை டாக்டர்க்கு படிக்குது. நான் கேட்டன் அவர் பிள்ளையிடம், இலங்கை போற விருப்பம் இருக்கா என? அது ஹோலிடய்க்குத்தான் என்டுது, அதுவும் அம்மா அப்பா போனால் சேர்ந்து போவம் என. அம்மா அப்பாபெர்மனெண்டா போனபிறகு எட்டியும் பார்காதுகள். எங்களுக்கு இலங்கை எப்படி தாய் நாடோ, அதே மாதிரி அதுகளுக்கு இது தாய் நாடு ஆகிபோட்டுது. டாக்டர்க்கும் மனிசிக்கும் இப்ப கவலை எல்லாம், யாரை, எந்த இனத்தை கூட்டிக்கொண்டு வரபோகுது எண்டு (கலியாணத்துக்கு)? இது பரவாயில்லை, இன்னொருவர் கவலை பட்டார் தன் மகன் போக்கு பிழையாய் இருககு, அவன் பெண்ணாக மாறுறான் போல கிடக்கு என்று. என்ன சனியன் பிடிச்ச நாடப்பா என கிடக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் பெரிய குழம்ப வேண்டிய விசயமா? அடையாளம் பற்றிய கவலை பெரிதாக இருந்தால் ஊருக்கு பெட்டியக் கட்ட வேண்டியான்! அதை ஏன் கவலை கொள்வோர் செய்வதில்லை என நீங்கள் ஆராய வெளிக்கிட்டால் தெளிவு பிறக்கும் (குழந்தைகளுக்கல்ல, பெற்றோருக்கு!) :rolleyes:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக பெரிய காரணம், நாட்டு பிரச்சனை. அது இப்ப முடிஞ்சுது. அடுத்தது பெற்றோர்கள் தாங்கள் இந்த வசதியான வாழ்கையை விட்டு போக விருப்பம் இல்லை. ஆனால் இந்த வசதியான வாழ்க்கையை விட தன் பிள்ளை, தன் பேரப்பிள்ளை தன் பக்கத்தில் இருப்பதில் இருக்கும் சந்தோசம் தான் முதியோர் ஆனபின் மிக பெரிய ஆறுதலை சந்தோசத்தை கொடுக்கும் என்பதை எங்களால் ஏன் உணர முடிவதிலை?

நாங்கள் ஏன் இவ்வளவு உயிரையும் இழந்து இந்த போராட்டத்தை நடத்தினாங்கள் என்றால் எங்களின் மண்ணையும் எங்களின் மொழியையும் காப்பாற்றதான். அதன்மேல் கொண்ட அதீத ஆசை. ஆனால் இப்ப வெளிநாட்டில் கிடைக்கும் சொற்ப ஆசைகளுக்காக, எம் மொழி, எம் உயர் கலாசாரம் என்பவற்றை எங்களுக்கு தெரியாமலே இழக்க தயாராகிவிட்டோம். எம் மண்; எத்தனை பேர் தன் மண் கிடைத்தால் அதில் போய் இருக்க விரும்புவினம்.

இந்த ஆங்கில கலாசாரத்தை விட சிங்களவனின் கலாசாரம் எவ்வளவோ சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மிக அண்மையில் ஒரு பெரிசுடன் மனந்திறந்து கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 45-46 வருடம் புலம்பெயர் நாட்டில் இருந்திருப்பார் என்று நினைக்கிறன். இந்தகாலகட்டத்தில் ஊருக்கு 2-3 போய்வந்ததாகவும் சொன்னார். போராட்டத்துக்கு முன்னின்று உதவியவர்கள் வரிசையில் ஒருவர் ஆனால் போராட்டத்தை அவ்வப்போது ஒளிவீச்சு கசட்டில் தான் அதிகம் பார்த்ததாகவும் வேண்டியபோது நிறுத்தவும் பின்னுக்கு முன்னுக்கு நகர்த்தவும் நிறுத்தி வைத்து அப்புறம் நேரம் கிடைக்கும் போது விட்ட இடத்தில் இருந்து பார்க்கவும் வசதி இருந்தது பற்றி சொல்லி சந்தோசப்பட்டார். வேறொருவர் போராட்டம் தொடங்கியபின் வந்து அகதி அந்தஸ்துடன் இருந்து பிரஜாஉரிமை பெற்றவர். செயற்பாட்டாளர். காலப்போக்கில் மனைவியின் புத்தகத்தை பாவித்து அரைவழியில் வந்துநின்ற மைத்துனியையும் நாட்டுக்குள் அழைத்து வந்திட்டார். இன்னொருவர் எடுத்த வீட்டுக்கடனை கட்ட முடியாமல் வீட்டை விட்டுட்டு சொந்த பந்தங்களை தேடி கனடா போய்ட்டார். இன்னும் சிலர் அரசாங்கத்தின் வங்குரோத்து பட்டியலில் இருந்தவை 10 வருசத்துக்கு காசை கண்ணிலை பார்கேலாது. வங்கி பக்கம் தலை வச்சும் படுகேலாது. நானும் ஏதோ சுமாரா காலத்தை ஓட்டிட்டன். எல்லாற்றை பிள்ளைகளும் படிச்சு முன்னுக்கு வந்து நல்ல வேலைகளிலை இருக்கினம். டாக்டர் எஞ்சினீர் எண்டு பலவகை. குறை சொல்ல ஒண்டும் இல்லை.

இதை வாசிக்க ஒரு சந்தூசம். நாம் எப்படி கஷ்ட பட்டாலும் எந்த வங்குரோத்துக்கு போனாலும் எங்கட பிள்ளைகளை படிப்பிச்சு நல்லா ஆக்கிடுவம். அது தான் எங்கட குறி. ஆனால் அதுகள் எங்களை வயதான காலத்தில் பாக்குங்க்களோ? அதை பற்றி என்ன நினைகிறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொன்னாலும் எனக்கு ஒரு குறை அடிமனதிலை இருந்து குத்திக்கொண்டுதான் இருக்கு. இதே சந்தர்ப்பம் வேறொரு இனத்துக்கு(தமிழினம் அல்லாத) கிடைத்திருந்தால் அவை இப்போதைக்கு சொந்தநாடு கிடைத்து எல்லாரும் அங்கை திரும்பி போய் சகலரும் நாட்டுக்காக உழைக்க தொடங்கியிருப்பினம். என்ன சொல்ல வருகிறேன் என்றது புரிஞ்சிருக்கும். நாங்கள் கிடைத்த மணியான சந்தர்ப்பத்தை சரியா பாவிக்காமை தவறவிட்டு உயிரையும் உடமைகளையும் காவுகுடுத்தது மட்டுமில்லை தமிழன் புலம்பெயர்ந்து கலாச்சாரம் அழிந்து(இன்னும் சில வருடங்களில்), சீரழிந்தது(இப்போதே காண கூடியதாயிருக்கு) high risk investment ஒண்டை செய்திட்டமோ எண்டு. அவனவன் பிழைச்சு போறதில்லை குறியா இருந்தவன் சொந்தம் பந்தங்கலோடை வாழுறான். இல்லையெண்டு எவரும் சொல்லேலாது. தமிழன் என்ன இருந்தாலும் ஒரு தனித்துவமான இனம் நான் சொல்ல தேவல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மிக பெரிய காரணம், நாட்டு பிரச்சனை. அது இப்ப முடிஞ்சுது. அடுத்தது பெற்றோர்கள் தாங்கள் இந்த வசதியான வாழ்கையை விட்டு போக விருப்பம் இல்லை. ஆனால் இந்த வசதியான வாழ்க்கையை விட தன் பிள்ளை, தன் பேரப்பிள்ளை தன் பக்கத்தில் இருப்பதில் இருக்கும் சந்தோசம் தான் முதியோர் ஆனபின் மிக பெரிய ஆறுதலை சந்தோசத்தை கொடுக்கும் என்பதை எங்களால் ஏன் உணர முடிவதிலை?

நாங்கள் ஏன் இவ்வளவு உயிரையும் இழந்து இந்த போராட்டத்தை நடத்தினாங்கள் என்றால் எங்களின் மண்ணையும் எங்களின் மொழியையும் காப்பாற்றதான். அதன்மேல் கொண்ட அதீத ஆசை. ஆனால் இப்ப வெளிநாட்டில் கிடைக்கும் சொற்ப ஆசைகளுக்காக, எம் மொழி, எம் உயர் கலாசாரம் என்பவற்றை எங்களுக்கு தெரியாமலே இழக்க தயாராகிவிட்டோம். எம் மண்; எத்தனை பேர் தன் மண் கிடைத்தால் அதில் போய் இருக்க விரும்புவினம்.

இந்த ஆங்கில கலாசாரத்தை விட சிங்களவனின் கலாசாரம் எவ்வளவோ சிறந்தது.

நீங்கள் எப்ப போறதா ஐடியா mp

நீங்கள் எப்ப போறதா ஐடியா mp

எங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உழைக்கத்தான் வந்தனான்

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க ஒரு சந்தூசம். நாம் எப்படி கஷ்ட பட்டாலும் எந்த வங்குரோத்துக்கு போனாலும் எங்கட பிள்ளைகளை படிப்பிச்சு நல்லா ஆக்கிடுவம். அது தான் எங்கட குறி. ஆனால் அதுகள் எங்களை வயதான காலத்தில் பாக்குங்க்களோ? அதை பற்றி என்ன நினைகிறியள்?

உங்களது திரியை திசை மாற்றவிரும்பவில்லை..

உங்களது மனதில் எழும் கேள்விகளை

சந்தேகங்களை இங்கு பதிவதும்

அதற்காக பலரது கருத்துக்களை கேட்பதையும் வரவேற்கின்றேன்...

நானும் பிரான்சுக்கு வரும் போது

5 வருடத்தில் வந்துவிடுவன் அம்மா என்று விட்டுத்தான் வெளியில வந்தனான்.

30 வருடம் ஓடிவிட்டது

பிள்ளைகள் பெரியவர்களாகிவிட்டார்கள்

இப்ப ஊரில் வாழணும் என்றது தான் எனது ஆசை...

ஒரு தீர்வு கிடைத்தால்

பயமற்ற வாழ்வு வந்தால்

என்னைப்போன்றவர்கள் நிச்சயம் போவார்கள்..

ஆனால் பிள்ளைகள்......???

மற்றும்படி

அடுத்த கேள்வி

எம்மை  எமது பிள்ளைகள் பார்ப்பார்களா??  என்பது..

அது சுயநலமானது

ஒன்றை எதிர்பார்த்து பிள்ளைகளை வளர்ப்பது கூடாது

நாம் செய்தோம் தானே என்று நீங்கள்  கேட்டால்

ஊரிலும் இன்றைய தலைமுறை 

எம் தலைமுறை போலில்லை...

இதற்கும் புலத்துக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை..

பிள்ளைகள்  எங்களை பார்க்கவேண்டும் என்று நாம் நினைப்பது  சுயநலம்- அது உண்மைதான்.
 
ஆனால் பிள்ளைகள் பெற்றோரை தாம் பார்க்கவேண்டும் என நினைப்பது ஒரு கலாசார அடையாளம். நான் சந்தித்த நிறைய பெற்றோர் சொன்னதெல்லாம் தங்களை அவர்கள் பராமரிக்கதேவையில்லை , அருகிலிருந்தால் அடிக்கடி சந்திதுகொள்வது  தொலைவிலென்றால் தொலைபேசியில். குறைந்தபட்சம்  முதுமையின் தனிமையை உணராமல் இருக்கவாவது பிள்ளைகளின் ஒரு அன்பின் வெளிப்பாடு அவர்களுக்கு அடிக்கடி தேவைபடுகின்றது.  பொருளாதார தேவைகளில் அவர்கள் பிள்ளைகளில் தங்கியில்லை.
 
மேற்குல சமுதாய கட்டமைப்பில் வளரும் பிள்ளை  எல்லா விதத்திலும் அந்த சமூகத்துக்கு ஏற்புடையதாகவே வளரும். வளரவும் வேணும். வார இறுதி தமிழ் பாடசாலைகள், கலை விழாக்கள், ஒன்று கூ டல்கள் அவர்களுக்கு ஒரு  மட்டுபடுத்தப்பட கலாசார அறிவை ஏற்படுத்தலாம்  அனால் அதை பின்பற்றுவதக்கான போதிய காரணங்களை ஏற்படுத்தா என நினைக்கிறேன். தமிழ் கதைத்தால் தமிழ் கலாச்சாரம்  பிள்ளைக்கு தெரிந்துவிடும் அதை தொடரும் என்று நம்புவதெல்லாம் எங்களை நாங்கள் ஏமாற்றும் ஒரு செயல்.
 
உங்கள் பணி ஓய்வுக்கு பின்னான வாழ்வை பிள்ளைகளை மையபடுத்தாமல் திட்டமிட்டு செயற்படுத்துங்கள்.ஏமாற்றம் இருக்காது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும். என்னை பற்றி கதைக்க விரும்பவில்லை.

நீங்கள் எப்ப போறதா ஐடியா mp

மன்னிக்கவேண்டும். என்னை பற்றி கதைக்க விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் போகப் போவதில்லை. எனக்கு தமிழ் கலாச்சாரத்தோடு அவ்வளவு ஒட்டுதல் இல்லை! தமிழ் கலாச்சாரம் என்று சொல்லப் படும் சில பழக்கங்களின் பிற்போக்குத் தனங்களை விட அமெரிக்க நடைமுறைகள் (கவனியுங்கள், அமெரிக்கக் கலாச்சாரம் அல்ல!, அப்படி ஒன்று இங்கே இல்லை!) தனி மனித சுதந்திரத்தை ஊக்குவிப்பதால் இங்கே சௌகரியமாக உணர்கிறேன்! மகளின் விருப்பம் அவர் 21 ஆகும் போது செய்யும் தெரிவு, அதற்கு நான் எதுவும் செய்ய இயலாது! :)

நீங்கள் வாழும் சூழல் அறிந்து அதற்கு உங்களை தயார்படுத்தி வைத்தல் என்பது மிக அவசியமானது. உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

எனினும் பெற்ற பிள்ளை இயலாத நேரத்தில் அருகில் இருக்காவிடின் அது போல் வேதனை ஏதும் இல்லை. இது இப்ப நடக்க தொடக்கி விட்டுது. நான் பார்த்த சில சம்பவங்கள் தான் என்னை இதை எழுத தூண்டியது. சில வயது வந்தவர்கள் தாங்கள் செத்து போனாலும் பரவாயில்லை என சொல்லும் போது இந்த சூழ்நிலை எங்களுக்கும் வெகு தூரம் இல்லை என நினைக்கும் போது தாங்க முடியவில்லை. இப்போது கிடைக்கும் சொற்ப வசதியான வாழ்க்கைக்காக, இங்கு வாழ்ந்து விட்டு மிக பெரிய ஒரு துன்பத்தை அனுபவிக்க போறம் வயது வந்தபின்.

வந்தேறு குடிகளால் உருவான அமெரிக்காவில் எப்படி தனிப்பட்ட கலாச்சாரம் இருக்கும்? :D

அந்த மண்ணுக்கு உரியவர்களான செவ்விந்தியரின் கலாச்சாரமும் தமிழர்களின் கலாச்சாரத்தை போன்றதே. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள்  எங்களை பார்க்கவேண்டும் என்று நாம் நினைப்பது  சுயநலம்- அது உண்மைதான்.
 
ஆனால் பிள்ளைகள் பெற்றோரை தாம் பார்க்கவேண்டும் என நினைப்பது ஒரு கலாசார அடையாளம். நான் சந்தித்த நிறைய பெற்றோர் சொன்னதெல்லாம் தங்களை அவர்கள் பராமரிக்கதேவையில்லை , அருகிலிருந்தால் அடிக்கடி சந்திதுகொள்வது  தொலைவிலென்றால் தொலைபேசியில். குறைந்தபட்சம்  முதுமையின் தனிமையை உணராமல் இருக்கவாவது பிள்ளைகளின் ஒரு அன்பின் வெளிப்பாடு அவர்களுக்கு அடிக்கடி தேவைபடுகின்றது.  பொருளாதார தேவைகளில் அவர்கள் பிள்ளைகளில் தங்கியில்லை.
 
மேற்குல சமுதாய கட்டமைப்பில் வளரும் பிள்ளை  எல்லா விதத்திலும் அந்த சமூகத்துக்கு ஏற்புடையதாகவே வளரும். வளரவும் வேணும். வார இறுதி தமிழ் பாடசாலைகள், கலை விழாக்கள், ஒன்று கூ டல்கள் அவர்களுக்கு ஒரு  மட்டுபடுத்தப்பட கலாசார அறிவை ஏற்படுத்தலாம்  அனால் அதை பின்பற்றுவதக்கான போதிய காரணங்களை ஏற்படுத்தா என நினைக்கிறேன். தமிழ் கதைத்தால் தமிழ் கலாச்சாரம்  பிள்ளைக்கு தெரிந்துவிடும் அதை தொடரும் என்று நம்புவதெல்லாம் எங்களை நாங்கள் ஏமாற்றும் ஒரு செயல்.
 
உங்கள் பணி ஓய்வுக்கு பின்னான வாழ்வை பிள்ளைகளை மையபடுத்தாமல் திட்டமிட்டு செயற்படுத்துங்கள்.ஏமாற்றம் இருக்காது.

சுய நலம்: இது கட்டாயம் எல்லோருக்கும் அளவாக இருக்க இருக்க வேண்டிய ஒன்று.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் அரசாங்கம் உங்களுக்கு Elderly Care இலவசமாக வழங்குகிறார்கள். அல்லது நீங்கள் உழைக்கும் போது அதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்கிறீர்கள் (Insurance). இது கூட சுயநலம் தான். உங்களுக்கு மாற்று வழி ஒன்று இருக்கிறது என தெரிந்தபடியால் தான் பிள்ளை உங்களை பார்க்கவேண்டும் என எதிர்பார்ப்பது உங்களுக்கு சுய நலமாக தெரியுது.

99% மேற்கத்திய கலாசாரத்தில் வாழும் ஒரு பிள்ளையிடம் எங்கள் கலாசாரத்தினை எதிர்பார்ப்பது எங்கள் முட்டாள்தனம். பிள்ளைக்கு எங்கள் கலாசாரத்தை ஊட்ட வேண்டும் என்றால் நாட்டுக்கு போறது தான் சிறந்த வழி. அல்லது பிள்ளையின் இளமைகாலைத்தில் ஒரு சில வருடங்கள் நாட்டுக்கு கொண்டுபோய் வளர்த்து போட்டு இங்கு கொண்டுவந்தால் ஓரளவு பரவாயில்லை என்பது என் அபிப்பிராயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் போகப் போவதில்லை. எனக்கு தமிழ் கலாச்சாரத்தோடு அவ்வளவு ஒட்டுதல் இல்லை! தமிழ் கலாச்சாரம் என்று சொல்லப் படும் சில பழக்கங்களின் பிற்போக்குத் தனங்களை விட அமெரிக்க நடைமுறைகள் (கவனியுங்கள், அமெரிக்கக் கலாச்சாரம் அல்ல!, அப்படி ஒன்று இங்கே இல்லை!) தனி மனித சுதந்திரத்தை ஊக்குவிப்பதால் இங்கே சௌகரியமாக உணர்கிறேன்! மகளின் விருப்பம் அவர் 21 ஆகும் போது செய்யும் தெரிவு, அதற்கு நான் எதுவும் செய்ய இயலாது! :)

பிள்ளையின் தெரிவு ஒரு Gay / Lesbian என இருந்தாலும் அதை ஏற்றுகொள்ளும் மன பக்குவத்தை ஏற்படுத்தி கொள்வது மேற்கத்தையநாட்டில் வாழும் எங்களுக்கு நல்லது. இப்படியான ஒரு சம்பவத்தை சில மாதங்கள்முன் கேள்விபட்டனான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாழும் சூழல் அறிந்து அதற்கு உங்களை தயார்படுத்தி வைத்தல் என்பது மிக அவசியமானது. உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

எனினும் பெற்ற பிள்ளை இயலாத நேரத்தில் அருகில் இருக்காவிடின் அது போல் வேதனை ஏதும் இல்லை. இது இப்ப நடக்க தொடக்கி விட்டுது. நான் பார்த்த சில சம்பவங்கள் தான் என்னை இதை எழுத தூண்டியது. சில வயது வந்தவர்கள் தாங்கள் செத்து போனாலும் பரவாயில்லை என சொல்லும் போது இந்த சூழ்நிலை எங்களுக்கும் வெகு தூரம் இல்லை என நினைக்கும் போது தாங்க முடியவில்லை. இப்போது கிடைக்கும் சொற்ப வசதியான வாழ்க்கைக்காக, இங்கு வாழ்ந்து விட்டு மிக பெரிய ஒரு துன்பத்தை அனுபவிக்க போறம் வயது வந்தபின்.

எம்.பி, உங்கள் பிரச்சினை இது தான்: கூழுக்கும் ஆசை, நனையாத மீசையும் வேண்டும்! உங்களுக்கு டொலரும் வேண்டும், தமிழ்க் குடும்பப் பாரம்பரியமும் வேண்டும்! இது இயலாத காரியம்.

நான் சொன்ன தமிழ்க் கலாச்சாரத்தின் பிடிக்காத பண்புகளில் இந்த பெற்றோரைப் பராமரிக்கப் பிள்ளை வேண்டும் என்ற எதிர் பார்ப்பும் ஒன்று. ஒரு குழந்தையை எதிர் காலத்தில் எங்களுக்குப் பாலும் கன்றும் தரும் பசு மாடு கணக்காக வளர்க்கும் வேலையை புலம் பெயர் நாடுகளில் செய்ய முடியாது. எங்கள் கடமை, குழந்தையை அதன் சொந்தக் காலில் நிற்க வைத்து விட்டு, பின்னணியில் நிற்க வேண்டியது தான்! அதற்காக அமெரிக்கர்கள் அவுஸ்திரேலியர்கள் எல்லாம் பெற்றோரை நடுதெரிவில் விட்டு விடுகிறார்கள் என்றும் அர்த்தம் இல்லை! குடும்பம், அன்பு பாசம் எல்லாம் எல்லை கடந்தவை!

பாலியல் தெரிவைப் பற்றி அறியாத வயதில் வழி காட்டலாம்! அறிவு வந்த பின்னர் அவர்களே அரசர்கள்! இங்கேயும் வந்து படிக்கிற படிப்பில் இருந்து எல்லாவற்றையும் தீத்தினால், குழந்தை 18 வயது வரை கூட உங்களுடன் இருக்காது! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.