Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையணிக்கு தோல்வி மேல்த் தோல்வி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இரு மாத காலமாக நியுசிலாந்தில் விளையாடி வரும் இலங்கையணி , அந்த நாட்டிற்கெதிராக விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்ததோடு, அதன் பின்னர் நடந்த ஒரு நாள் விளையாட்டுத் தொடரிலும் 4-2 என்கிற வித்தியாசத்தில் தோற்றிருந்ததும் நினவிலிருக்கும்.

 

இலங்கையணியின் மிகமோசமான துடுப்பாட்டமும், பந்துவீச்சாளர்களின் இயலாமையுமே இந்தத் தோல்விகளுக்கான காரணமாக முன்வைக்கப்பட்டாலும் கூட, இலங்கையணி ஆடிய விதமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் நியுசிலாந்து அணி ஓவர் ஒன்றிற்கு 4 அல்லது 5ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும் கூட, இலங்கையணியின் குறிப்பிட்ட சில முன்னணி துடுப்பாட்டக் காரர்கள் வேண்டுமென்றே ஓவர் ஒன்றிற்கு 1 அல்லது 2 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத் தக்கது. நியுசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு இதற்கு ஒரு காரணமாக இருந்தபோதிலும் கூட, இலங்கையணியின் துடுப்பாட்டக்காரரின் சுருண்டுகொள்ளும் மனோபாவமே இதற்கான இன்னொரு காரணம் என்றும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இலங்கையணிக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் வீரர்களின் தரம்பற்றி பலரும் கேள்வி எழுப்பியிருப்பதுடன், உலகக் கிண்ணப் போட்டி இலங்கையணிக்கு மிகவும் கடுமையான சவாலாக இருக்கும் என்றும் எதிர்வு கூறியிருந்தனர்.

 

எதிர்பார்த்தைப் போலவே உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னோடியாக நடைபெற்ற பயிற்சிப் போட்டிகள் இரண்டிலும் படுதோல்வியடைந்திருந்தது இலங்கையணி. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், சர்வதேசத் தரத்தில் மிகவும் பின்தங்கிய அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் சிம்பாப்வே அணியுடனான போட்டியில் இலங்கையணி 7 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்ததுதான். இலங்கையணி எடுத்த 280 ஓட்டங்களை எந்தவிதச் சிரமமுமின்றி சிம்பாப்வே அணி வெறும் 45 ஓவர்களில் குவித்ததுடன், மலிங்க ஒரு ஓவருக்கு 8 ஓட்டங்களை அள்ளி வழங்கியிருந்தார்ளீதேபோல தென்னாபிரிக்காவுக்கெதிரான பயிற்சிப் போட்டியிலும் இலங்கையணியின் பந்துவீச்சாளர்களைத் துவசம் செய்த தென்னாபிரிக்க துடுப்பாட்டக் காரர்கள் வெறும் 22 ஓவர்களில் 188 ஓட்டங்களைக் குவித்தனர்.

 

உலகக் கிண்ணப் போட்டி நியுசிலாந்திலும் அவுஸ்த்திரேலியாவிலும் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், முதலாவது போட்டியில் நியுசிலாந்தணியும் இலங்கையணியும் விளையாடின.

 

மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்ட கிறைஸ்ட் சேர்ச்சின் காலைப் பொழுதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி நியுசிலாந்தணியை துடுப்பாட அழைத்தது.

 

தனது முதலாவது ஓவரிலிருந்து ஓவருக்கு 6 ஓட்டங்கள் என்கிற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்தணி, தனது 50 ஓவர்கள் முடிவில் 332 ஓட்டங்களைக் குவித்தது. அணித்தலைவர் மக்கலம், மற்றும் கோரி அன்டர்சன் ஆகியோரின் அசத்தலான அரைச் சதங்களுடனும் மற்றையவர்களின் சிறப்பான பங்களிப்புகளுடனும் நியுசிலாந்தணி இந்த ஓட்டங்களைக் குவித்தது.

 

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இலங்கையணியின் நட்சத்திரப் ஒபந்துவீச்சாளர் என்று பலராலும் கருதப்பட்ட மலிங்கவை நியுசிலாந்தணியின் துடுப்பாட்டக் காரர்கள் பாடசாலை மாணவர் ஒருவரைப் போல எடைபோட்டு விலாசித் தள்ளியதுதான். தனது ஓவர்களில் லெக் சைட்டிலும், புல் டொஸ்ஸுமாக அவர் போட்ட பந்துகள் எல்லைக் கோட்டை நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. போதாக்குறைக்கு அவர் போட்ட நோ போல் பந்துகூட அவரின் தலைக்கு மேலாக பறந்து 6 ஓட்டங்களைக் குவித்தது. தனது முதல் 4 ஓவர்களில் 42 ஓட்டங்களைக் கொடுத்த மலிங்கவை அணித்தலைவர் மத்தியூஸ் இடையில் நிறுத்திக்கொண்டார். இந்த 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினைத் தன்னும் அவர் கைப்பற்ற முடியவில்லை என்பதும், அவரது மூன்றாவது ஓவரில் 23 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. இவர் போட்டியின் இறுதிப் பகுதியில் திரும்பவும் பந்துவீசியபோதும் கூட இவரது மீதி 6 ஓவர்களில் இன்னும் 42 ஓட்டங்களை  நியுசிலாந்தணி குவித்தது. 

ஒரு நாள் மற்றும் 20 - 20 போட்டிகளில் விளையாட மட்டுமே தன்னால் முடியும் என்றும், டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாதென்றும் பிடிவாதமாக மறுத்து பெருமளவு பணத்திற்காக ஐ. பி. எல் போன்ற போட்டிகளில் விளையாடி வரும் மலிங்க, அண்மைக்காலமாக கால் உபாதை ஒன்றிற்காக ஓய்விலிருந்தார். உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவது சந்தேகமே என்று முன்னர் குறிப்பிட்டிருந்தாலும் கூட, அவர் இந்த தொடரில் ஆடி வருகிறார். அவர் பந்து வீசுவதைப் பார்த்து விமர்சித்த வர்ணனையாளர்கள், முன்னர் இருந்த லசித் மலிங்கவைக் காணவில்லை. ஏதோ உபாதையுடன் வயோதிபர் ஒருவர் பந்துவீடுவதைப் போல பந்து வீசுகிறார் என்று கூறியதுடன்ணவர் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதியானவர்தானா என்றும் கேள்வியெழுப்பினர்.

 

இவரைப் போலவே இலங்கையணியின் முண்ணனிப் பந்துவீசாளரான நுவான் குலசேக்கரவும் தனது 8 ஓவர்களில் 78 ஓட்டங்களிக் கொடுத்து உலக சாதனையொன்றை ஏற்படுத்தியிருக்கிறார். புல் யடொஸ்களாகவும், அகலப் பந்துகளாகவும் இவர் எறிந்து விளையாடிய பந்துகள் மைதானத்தின் எல்லைக் கோட்டை அடிக்கடி தொட்டுவிட்டு வந்தன. தனது பந்துவீச்சினால் தனது அணி பாதிக்கப்படுகிறதே என்கிற எந்தவிதமான சலனமும் இல்லாமல் சிரித்த முகத்தோடு அவர் தொடர்ந்தும் அடித்தாடக் கூடிய பந்துகளை வீசிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. 

 

 

இவரும், மலிங்கவும் மட்டுமே சேர்ந்து வாரி வழங்கிய ஓட்டங்களின் எண்ணிக்கை 18 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் மட்டும், . ஏனையவர்கள் 32 ஓவர்களில் 170 ஓட்டங்கள். 

 

இவை போதாதென்று இலங்கையணி களத்தடுப்பாளர்கள் இலகுவான 4 பிடிகளைக் கோட்டை விட்டதும் இன்னொரு சுவாரசியமான விடயம்.  இந்த ஒவ்வொரு கோட்டை விட்ட பிடிகளும் இலங்கையணிக்கு குறைந்தது 150 ஓட்டங்களை மேலதிகமாக எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின. இதில் முக்கியமாகச் சொல்லப்பட வேண்டிய விடயம் வில்லியம்சன் ஓட்டம் எதுவும் பெறாமலிருக்கும்போதும், 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும்  அவர் கொடுத்த இரு பிடிகளைக் கைவிட்டது இலங்கையணி, அவர் 57 ஓட்டங்களிக் குவித்தார். அதேபோல, கோரி அன்டர்சனின் இரு பிடிகளைக் கைவிட்ட இலங்கையணிக்கு அவர் 75 ஓட்டங்களைக் கொடுத்து உதவினார்.ஈதேபோல எல்லைக் கோட்டை நோக்கி ஓடும் பந்துகளை துரத்திய இலங்கை வீரர்கள், பந்து கோட்டை அடைந்தபின்னரே பின்னால் ஓடினார்கள், பொறுக்குவதற்கு !

 

இதில் கவனிக்க முடிந்த இன்னொரு முக்கிய விடயம், தனது ஓவர் ஒன்றிற்கு வெறும் 4.5 ஓட்டங்களை மட்டுமே கொடுத்த அணித்தலைவர் மத்தியூஸ் வெறும், 4 ஓவர்களுடன் தனது பந்துவீச்சை முடித்துக் கொண்டதும், ஹேரத் மற்றும் மெண்டிஸ் ஆகிய பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களைத் தடுக்கும் முகமாக பந்து வீசியபோதும் கூட, அவர்களை அதிகளவில் உபயோகப் படுத்தாமல் இருந்ததும்தான். இந்த பந்துவீச்சாளர்கள் இருவரும் சேர்ந்து மொத்தமகாக் 11 ஓவர்களில் வெறும் 42 ஓட்டங்களை மட்டுமே கொடுத்திருந்ததோடு, 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

 

அதேபோல இலங்கையணி துடுப்பெடுத்தாடும்போது, ஆரம்பத் துடுப்பாட்டக் காரர்களான திரிமானவும் டில்ஷானும் நிதானமாக விளையாடியபோதும், என்றுமே இலங்கையணிக்குப் பெருத்த பாரமாகவும், இளைய வீரர்கள் அணிக்கு வருவதை நந்திபோன்று தடுத்துக் கொண்டிருப்பவருமான மஹேல ஜயவர்த்தன எந்தவித ஓட்டங்களும் பெறாமல் ஆட்டமிழந்ததும், டெஸ்ட் போட்டியில் 100 பந்துகளுக்கு 15 ஓட்டங்களைப் பெற்றால் போதுமென்று ஆடும் திமுத் கருணாரட்ன வழமைபோல 21 பந்துகளுக்கு 14 ஓட்டங்களைப் பெற்று சந்தோஷமாக ஆட்டமிழந்து சென்றதும் குறுப்பிடத் தக்கது. 

 

அவ்வப்போது இலங்கையணிக்கு கை கொடுக்கும் சங்கக்கார 39 ஓட்டங்களுடனும், திரிமான 65 ஓட்டங்களுடனும், தில்ஷான் தடவித் தடவி 45 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றும் ஆட்டமிழந்ததுடன் இலங்கையணியின் உயிர்நாடி அறுத்தெறியப்பட்டது. வழமை போலவே அஞலோ மத்தியூஸ் எதற்காக மைதானத்திற்கு வந்தோம் என்கிற சிந்தனை ஏதுமில்லாமல் தனது பாணியில் போட்டிக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்னுமாப் போல ஆறுதலாக,  போட்டி ஒன்றில் 50 ஓட்டங்கள் எடுத்தால் போதும் என்கிற சுயநலத்துடன் ஆடிக் கொண்டிருந்தாலும் கூட, அதுவும் கை கூடாமல்ப் போக 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கையணி வெறும் 233 ஓட்டங்களுக்கு கொட்டுப்பட்டு 98 ஓட்டங்களால் படுதோல்வி கண்டது. 

 

38 வயதில் மூன்று துடுப்பாட்க் காரர்கள், 35 வயதில் இன்னும் 7 வீரர்கள் என்கிற நிலையில் ஆடிவரும் உலகின் மிகவும் வயதானவர்களின் அணியான இலங்கையணியின் பல வீரர்கள் கைகளிலும், கால்களில்ம் கட்டுக்களுடன் ஆடிவந்ததை அவ்வப்போது கமரா துல்லியமாகக் காட்டிக்கொண்டிருந்தது. 

 

இலங்கையணி ஏதாவது ஒரு போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், ஏதாச்சும் வயது முதிந்தவர்களின் உலகக் கிண்ணப் போட்டியென்று ஒன்றை வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் போலத் தெரிகிறது !

 

 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையணி ஏதாவது ஒரு போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், ஏதாச்சும் வயது முதிந்தவர்களின் உலகக் கிண்ணப் போட்டியென்று ஒன்றை வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் போலத் தெரிகிறது !
:D :D சிட்னியில் உள்ள" over 40" அணியுடன் விளையாடினால் சில சமயம் வெற்றி அடைய கூடும்
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் மென்டிஸ் என்பவர் வானுயர பிடி ஒன்றை பிடிக்க முயன்றபோது பந்து அவரது கையில் படாமலே அடிவயிற்றை தாக்கியது.. :huh: முதல் நாள் ஃபுல் மப்பு என நினைக்கிறேன்.. :D பந்தை கோட்டை விட்டதும் பத்தாது எண்டு இளித்துக்கொண்டு நின்றது வர்ணனையார்களையே குழப்பிவிட்டது.. ::o

  • கருத்துக்கள உறவுகள்

விபரணத்திற்கு நன்றி ரகு நாதன்
அப்படியே தொடர்ந்தும் அடி வாங்கட்டும் 

நல்ல சுவாரஸ்யமான கட்டுரை ரகு ,

அடி மேல அடி இலங்கை அணிக்கு .சங்கக்காராவே வில்லியம்சனின் காட்சை கோட்டைவிட்டார் .ஜீவன் மென்டிஸ் காட்சை விட்டுவிட்டு பல்லை காட்டியது நம்பமுடியாமல் இருந்தது .

விளையாட்டுவீரர்களின் fitness பற்றித்தான் பெரிய கேள்விக்குறி .

ஆனாலும் இவையெல்லாம் தாண்டி இலங்கை அணி இறுதி நாலிற்குள்? வரும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்று நல்லாய் விளையாடிய நியூசிலாந்து வீரர்களின் வயசு
 
McCullum 33 
Elliott 35
Ronchi 33
Vettori 36
 
வயசு போனதால் ஶ்ரீ லங்கா அணி சோபிக்கவில்லை என்ற வாதம் ஏற்றுக்கொள்ளகூடியது இல்லை. பயிற்சி ஆட்டத்தில் தென் ஆபிரிக்கா அணியும் நியூ சிலாந்திடம் படுதோல்வி அடைந்தது.
 
உலக கோப்பையில் எதுவும் நடக்கலாம். எந்த அணிகள் அரையிறுதி விளையாடும், எவை இறுதிப்போட்டியில் சந்திக்கும் என்பதெல்லாம் கடைசிவரை புதிராகவே காணப்படும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரஸ்யமான கட்டுரை ரகு ,

அடி மேல அடி இலங்கை அணிக்கு .சங்கக்காராவே வில்லியம்சனின் காட்சை கோட்டைவிட்டார் .ஜீவன் மென்டிஸ் காட்சை விட்டுவிட்டு பல்லை காட்டியது நம்பமுடியாமல் இருந்தது .

விளையாட்டுவீரர்களின் fitness பற்றித்தான் பெரிய கேள்விக்குறி .

ஆனாலும் இவையெல்லாம் தாண்டி இலங்கை அணி இறுதி நாலிற்குள்? வரும் .

நன்றி அர்ஜுன் அண்ணா,

 

எல்லாம் ஒரு ஆதங்கம்தான் !

10982476_854913187864712_108950107326598


மாட்ச் பார்க்க நேரே போன மச்சான் சுட்டது .அவர் நியுசிலாந்தில் தான் இருக்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

ரகு வர்ணணை நன்றாக இருந்தது.பாராட்டுக்கள்.

 

அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெல்லலாம்.

 

இன்று நல்லாய் விளையாடிய நியூசிலாந்து வீரர்களின் வயசு
 
McCullum 33 
Elliott 35
Ronchi 33
Vettori 36
 
வயசு போனதால் ஶ்ரீ லங்கா அணி சோபிக்கவில்லை என்ற வாதம் ஏற்றுக்கொள்ளகூடியது இல்லை. பயிற்சி ஆட்டத்தில் தென் ஆபிரிக்கா அணியும் நியூ சிலாந்திடம் படுதோல்வி அடைந்தது.
 
உலக கோப்பையில் எதுவும் நடக்கலாம். எந்த அணிகள் அரையிறுதி விளையாடும், எவை இறுதிப்போட்டியில் சந்திக்கும் என்பதெல்லாம் கடைசிவரை புதிராகவே காணப்படும்.

 

கிழவிக்கு வயதை சொன்னது சுருக்கென்று கோபம் வந்திட்டுது போல :D பின்னே இருக்காதா என்ன :icon_mrgreen: 

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள் ரகு...நன்றி...இலங்கை இப்படி சொதப்பும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை...எல்லாப் போட்டியிலும் தோற்கப் போகிறார்கள்.இவர்களை நம்பி போட்டியில் பங்கு பற்றிய ரதியும் தோற்க போறார் :o

பரவாயில்லை. மைத்திரி வந்ததும் சொறிலங்கன் அணி இலஙாகை அணியாயிட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வர்ணனை ரகுனாதன், எனக்கு இந்த விளையாட்டைப்பற்றி அதிகம் தெரியாது எனினும் கேள்விபட்டதன் அடிப்படையில் இந்த ஆட்டம் ஒரு உளவியல் சார்ந்த ஆட்டமெனவே நினைக்கிறேன்,அதனாலேயே நியூசிலாந்து அதிக ஓட்டங்களை குவித்து எதிரணியை உளவியல் ரீதியாக நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது, அத்துடன் நீங்கள் கூறியது போல நியூசிலாந்து ஆரம்பத்திலிருந்தே அடித்தாடியிருந்தால் பந்தினை சுவிங் செய்வதனை குலைக்கும் ஒரு முயற்சி என கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை தடுக்க ஒரு புறம் சுழற் பந்து வீச்சாளரை ஆரம்பம் முதலேயே உபயோகித்திருக்கலாம்,இந்த ஆட்டத்தினைப்பார்க்கவில்லை ஆனால் பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசாவிடில் களத்தடுப்பிற்காக பந்து வீசுவதை விடுத்து ஓட்டங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் களத்தடுப்பை உப்யோகித்திருக்கலாம்,மிக பெரிய இலக்கை துரத்தும் போது அணியின் ஒளுங்கில் தேவையான மாற்றம் செய்திருக்கலாம்.முடிந்தால் அணித்தலைவரையே மாற்றலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.